நீலப்பறவைக்கு சபாநாயகர் பதவியை, சிபார்சு செய்தது விசுகு அல்ல,சிறி அண்ணர் நீங்கள் வில்லுபாட்டு குழுவினர் மாதிரி நீலப்பறவை என்ன சொன்னாலும் ஆமா போடுகிறதா.என்றாலும் எனக்கிருக்கிற அரசியல் எதிரி நீங்கள் தான்
ஓ இதுவா! சும்மா பீலா காட்டத்தான். நாங்கள் இருவரும் சேர்ந்து ஸ்கைப்பில தண்ணியடிக்கிறனாங்கள் இது தெரியாமல் தப்பா புரிகிறீர்களே.
உதாரணத்திற்கு அரசியலில் பிள்ளையான் வேறு யோகேஸ்வரன் வேறு கோவிலில் குடும்ப பூசையென்றால் ஒன்றாகத்தான் நிற்கிறார்கள்.அப்படித்தான் நாங்கள்.. (மீண்டும் சரிபார்த்துகொள்கிறேன் சரியாகத்தான் எழுதியுள்ளேனா)
ஆனால் விசு அவர்கள் எனக்கு பதவி தந்து கவுக்க பார்கிறீர்கள்.எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை. நான் ஒரு கதிரையில் உட்கார்ந்து விட்டால் யாரையும் கேள்வி கேட்க முடியாது,
------
நமது யாழ் களமாளுமன்றத்தின் மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அவர்களே...
மைனஸ் 19 பாகையிலும்..., பாராளுமன்றத்தை அவசரமாக கூடிய பிரதமரின் செயல்திறனை பார்க்க புல்லரிக்குது.


















