1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் கரிபியன் கடலில் டொமினிக்கா தீவை முதல் தடவையாகக் கண்டார்.
1903:அமெரிக்காவின் தூண்டுதலோடு கொலம்பியாவிலிருந்து பனாமா தனிநாடாகப் பிரிந்தது.
1913: அமெரிக்காவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
1918: ரஷ்யாவிலிருந்து போலந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1957 : ஸ்புட்னிக்2 விண்கலம் மூலம் லைகா எனும் நாயை சோவியத் விண்வெளிக்கு அனுப்பியது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினம் இது.
1978:பிரிட்டனிடமிருந்து டொமினிக்கா சுதந்திரம் பெற்றது.
1982:ஆப்கானிஸ்தான் சுரங்க தீவிபத்தில் 2000 பேர் பலி.
1988 : மாலைதீவில் ஜனாதிபதி அப்துல் கையூமின் அரசாங்கத்தைக் கவிழ்க்க இலங்கை தமிழ் ஆயுதபாணிகள் முயற்சி. இச்சதிமுயற்சி இந்திய படைகளின் உதவியுடன்; முறியடிக்கப்பட்டது.
2007: பாகிஸ்தானில் ஜனாதிபதி பர்வேஸ் முஸாரவ் அரசியலமைப்பை இரத்துச்செய்து பிரதம நீதியரசரை நீக்கி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார்.
http://tamilmirror.l...290-----03.html
Edited by akootha, 04 November 2011 - 10:42 AM.













