Jump to content


Orumanam
Photo

சனிபெயர்ச்சி பலன்கள்


 • Please log in to reply
30 replies to this topic

#1 வீணா

வீணா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 790 posts
 • Gender:Female

Posted 27 September 2011 - 09:39 AM

நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் :D


நிகழும் சுபஸ்ரீ கர வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி ( 15,11. 2011) செவ்வாய்க் கிழமை அமரபட்ச சதுர்த்தி திதி நாள், நாழிகை 6, விநாடி 40, பின்பு பஞ்சமி திதி , திருவாதிரை நட்சத்திரம் நா. 10. வி.11க்கு ( காலை மணி 10, நிமி 15க்கு ) சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார்.
சனிபகவான் சிலகாலம் எவரையும் பிடிப்பது இயற்கை. அவரவர் பூர்வ புண்ணியத்துக்கேற்ப சந்தோஷம் அனுபவிப்பதுபோல சில தடைகளையும் அனுபவித்தே ஆகவேண்டும். முன்ஜென்ம பாவ புண்ணியங்கள் நமக்கு நாமே சேர்த்து வைத்துள்ள சொத்து. இன்னும் ஒரு படி மேலே போய், இதை நமக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் என்றும்கூட சொல்லலாம். அந்த நற்சாட்சிப் பத்திரத்தின்படி சனிபகவான் கண்டிக்கிறார்; தண்டிக்கிறார். நமக்கு விதிக்கப்பட்டவை எல்லாம் இன்னொருவர் கொடுத்ததா, என்ன? அது நமக்கு நாமே முன் ஜென்மத்தில் கொடுத்து வைத்தது. எனவே நம் வினைப்பயனுக்கு தகுந்தவண்ணமே விதிப்பயனும் அமையும் என்பதைப் புரிந்துகொண்டால், எந்தக் குழப்பமும் ஏற்படாது.
இந்த சனிப்பெயர்ச்சியில், விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது . ஏற்கெனவே, கன்னி ராசிக்கும், துலா ராசிக்கும் ஏழரைச் சனி நடந்துகொண்டிருக்கிறது. இது தவிர, மீன ராசிக்கு அஷ்டம சனியும், மேஷ ராசிக்கு கண்ட சனியும் ஆரம்பமாகப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் திருத் தலங்களுக்குச் சென்று, சனிபகவானுக்குரிய வழிபாடுகளையும் , பரிகாரங்களையும் முறையாகச் செய்தால், சுபயோகம் ஏற்படும்.


1. மேஷம்:
Posted Image

இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். நற்பலன்களைக் கொடுக்கவேண்டிய யோகம்தான் என்றாலும் குருவின் மாறுபட்ட நிலைகளால், நற்பலன்களை நீங்கள் முழுதுமாக அனுபவிக்க முடியாமல், இருந்தீர்கள். குருவின் நல்ல நிலைகள்கூட உங்களுக்கு சாதகமாக அமையவில்லை. குரு அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்ததால், உங்களால், எந்த நற்பலனையும் முழுதுமாக அடைய முடியாமல்தான் போனது. இப்போது, இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதை அவ்வளவு நல்லதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், ஒன்றை மட்டும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். உங்களூக்கு சனிப் பெயர்ச்சியால், பாதிப்புகள் நேரிடினும், அதனின்று மீள்வதற்கு கிரகங்கள் குறிப்பாக ராகு, கேதுக்கள் அனுசரணையாக செயல்படுவதால், சனியின் தாக்கம் தற்காலிகமாக இருக்குமேயல்லாது, பெரிதாக அமையாது. ராசிக்குரிய களத்திர வீட்டில், உச்ச நிலையில் பெயர்ந்த சனி, ராசிக்குரிய ஜீவன ஆதாயத்தை அளித்து மகிழ்வார். மிகுந்த பாதக விளைவுகளையும் கொடுத்து உங்களை அலைக்கழிக்கவும் செய்வார். மனைவியுடன் கருத்து வேற்றுமை, தொழில் பார்ட்னரால், சங்கடங்கள் ஏற்படும். தொழில் பார்ட்னரோடு தீராப்பகை ஏற்பட்டு பெருத்த பண நஷ்டத்தை ஏற்படுத்தும். வர்த்தக ஆதாயங்களில் இழப்பு, சொத்துக்களின் உரிமை பாதிப்பு , மனையாள் நோய் பாதிப்பு, மாரக கண்டங்கள் போன்ற நிலைகளில் சனி பிரச்சினைகளைத் தோற்றுவிப்பார். மொத்தத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டும். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் விட்டுக்கொடுத்துப் பழகவும். அக்கம்பக்கம் அனுசரணையாக இருந்துகொள்ளவும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்திலும் மன நலத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுடன் சண்டைகள், வாக்குவாதங்கள் வராமல் பார்த்துக்கொள்ளவும். திருமணம் செய்ய நினைப்பவர்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுவது நல்லது. ஆனால், குருபார்வை இருப்பதால், ஓரளவுக்கு நல்லது. குரு பார்வை மூலமாக தந்தை வழியில் சொத்துக்களினால், நன்மை ஏற்படலாம். தொழில் வகையில் கவனம் தேவை. தொழிலை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது. லாப வகையில் கவனமாக இருந்துகொள்ளவும். வீண்வம்புகள், வழக்குகள் வராமலும் , வாகனங்களால், சிறு விபத்துக்கள் வராமலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் விரயச் செலவுகள் ஏற்படும். பண வரவுகளும் ஏற்படும். உடனே எப்படியாவது சேமித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், வீணாகக் கரைந்துவிடும். பேச்சு வார்த்தைகளை தேவையோடு பேசவும். இல்லையேல், ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்ள நேரும். கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், நிலம், வீடு, வாகனம் வாங்குதல் முதலியவற்றிலும் கவனம் தேவை. உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் நலம் சிறக்கும்.
சனிபகவானின் கெட்ட பார்வைகளில் ஒன்று நேர்ப் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதால், உங்களிடமிருந்து சுறுசுறுப்பு மறைந்துவிடும். தாமதமாக முடிவெடுப்பீர்கள். அதிலும் குழப்பமான முடிவுகளையே எடுப்பீர்கள். வருமானம் செய்வதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
உங்களுக்கு சப்தமத்தில் வந்திருக்கும் சனி பகவான், உங்கள் ராசிக்கு 1,4,9-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். 1-ம் இடத்துப் பார்வையால், எப்போதும் நெஞ்சில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். வியாதியினால் துன்பப்படாமல் இருக்க போதுமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கைகளையும் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் தவறாது கடைப்பிடித்து வந்தால் மட்டுமே, நோய் நிவாரணங்களை அடைய முடியும். உடன் பிறந்தவர்களுக்காக தியாகம் செய்ய வேண்டியிருக்கும். பேசும் வார்த்தைகள் சரளமாக இருக்காது.
சனியின் 4-ம் இடத்துப் பார்வையினால், சில சுகங்களை இழக்க நேரும். பெற்றோர்கள் சொத்துக்களைப் பெறுவதில் தடை ஏற்படும். சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் தாயார் உடல்நிலை மோசமடையும். சொத்துக்கள் வாங்கினாலும் அதிலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரும். பேசும் வார்த்தைகளினால் பலவித பிரச்சினைகளை சந்திக்க நேரும்.
சனியின் 9-ம் இடத்துப் பார்வை தந்தையின் உடல்நலத்தைக் கேள்விக்குறியாக்கும். மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள், காரியத் தடைகள், பொது சேவையில் தெய்வ காரியங்களில் நிந்தனை ஏற்படுதல் ஆகியவை ஏற்படும். தொழில் பளு கூடி, பெரும்பாலோர் திணறவும், மற்றும் அயர்ச்சி, பின்னடைவு, தோல்வியில் துவளுதல் போன்றவை ஏற்படும். ஆனால், குருபகவானின் பார்வையால், கெடு பலன்கள் குறையலாம்; அல்லது நல்லதாகவேகூட நடக்கும்.
மேற்கூறிய கெடுபலன்கள் ஏகத்துக்கும் கலக்கமடைய வைத்திருந்தால், நீங்கள் அதிகமாக பயம் கொள்ளத் தேவையில்லை. குருவின் சஞ்சாரம் கை கொடுக்கும்.
இந்த இரண்டரை வருட சனி சஞ்சார காலத்தில் மூன்று முறை சனி வக்கிர கதியில் சஞ்சரிப்பார். அப்போது இரட்டிப்பு கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
சனியின் வக்கிர காலங்கள்:
1. 9.2.12.முதல் 24.6.12.வரையில் (4 மாதம் 15 நாட்கள்) மற்றும்
2. 16.2. 2013 முதல், 12. 7. 13. வரை(4 மாதம் 26 நாட்கள்)
3. 3.3.14 முதல் 24.7.14.வரை ( 4 மாதங்கள் 20 நாட்கள்)
இந்தக் காலங்களில் எல்லாவற்றிலுமே சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. சாண் ஏறினால் முழம் வழுக்கும். ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தால், ஐயாயிரம் ரூபாய்க்கு பின்னாலேயே செலவு வந்து சேரும். கவனமாகவும் பொறுமையாகவும் இருந்தால், எல்லாவற்றையும் சமாளிக்கலாம். உறவினருடன் ஏற்படும் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் வாக்குவாதங்கள் முற்றி பெரிய சீரியஸ் பிரச்சினை ஆகிவிடும். உங்களுடைய பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் தோன்றி மறையும். கடமைகளும் பொறுப்புகளும் அதிகமாகி திணற வைக்கும். அவ்வப்போது ஊக்கத்திலும் உடல் நலத்திலும் பின்னடைவு ஏற்படும்.
கெண்ட சனி வந்துவிட்டதே என்று நொந்து போன மேஷ ராசி நேயர்களுக்கு மிகவும் ஆறுதல் தரும் விதமாக, சில காலக் கட்டங்கள் அமைகின்றன.
முதற்காலக்கட்டமாக 8.11.12 முதல் 4.11.13 வரையிலான ஏறக்குறைய 1 வருட காலத்துக்கு பலவித ராஜ யோகங்கள் தோன்றி உங்களை மகிழ்ச்சியில் உறைய வைத்து இழந்த செல்வத்தை மீட்டுத் தரும். மிகப் பெருமளவில் வர்த்தக லாபத்தை அடைய முடியும். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை நீங்கும். நீங்கள் எத்தனைதான் பாசம் காட்டினும், உங்களுடன் பகை பாராட்டிய , உங்களை மிரட்டிய உற்றார்- உறவினர்கள் இப்போது உங்களுடன் பகை நீங்கி ஒற்றுமையுடன் இணங்கி வருவர். உங்களிடம் பணிந்து நடந்துகொள்வார்கள். வர்த்தகம், வியாபாரம். இன்ஷ்யூரன்ஸ் , காய்கறித்தொழில். குத்தகை போன்ற துறைகளில் ஈடுபடுபவர்கள் பெருத்த லாபமடைவார்கள். பணம் சரளமாய்ப் புரளும். தொழிற்சாலைகளில் பணி புரிவோரும், அலுவலகப் பணியாளர்களும், இடையூறுகளற்ற பணி உயர்வும், வருமான உயர்வும் அடைவர்.
இரண்டாவது கட்டமாக, 5.11.13. முதல் 2.11.14வரையான காலக்கட்டமும் யோகமாகவே இருக்கும். துலாத்தில் சனியும், சூரியனும், வக்கிர புதனும், ராகுவும் நிற்க, ராசிநாதன் செவ்வாய், ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்று விருச்சிகத்தில் நிற்கும் சுக்கிரனைப் பார்த்திடவும்,ராசிக்கு வீரிய தானத்தில் விரியயாதிபதி குரு நின்று, துலாத்தைப் பார்வையிட்டு சனி சர்ப்ப தோஷத்தை முறிக்கத் துவங்கும். இக்காலத்தில் சர்ப்பங்களின் அனுக்கிரகத்தாலும், குருவின் அருள்பார்வையாலும், பருத்தி புடவையாய்க் காய்த்தது போல உங்களுக்கு தொடர்ச்சியாய் ராஜயோகங்கள் நேரடியாகவும் மறைவுத் தானாதிபதிகளாலும் கிடைக்கப்பெற்று சனியின் பாதிப்பால், கஷ்டம்-நஷ்டம், இழப்பு, இழிவு சோகம் ஏதுமின்றி சனியின் இரும்புப் பிடிலிருந்து நழுவித் தப்பித்துக்கொள்வீர்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் மிகுந்து திரளான செல்வத்தைப் பெற்று கடன் உபாதைகள் , அவச் சொல்லிலிருந்து மீண்டு, நிமிர்ந்து செருக்குடன் திகழ்வீர்கள். சில கிரக மாறுதல்கள் தொடர்ந்து ராஜயோகத்தைஉங்களுக்கு வாரி வழங்கும். இதனால், பணியில் ஏற்றம் அடைவதோடு, வீடு வாசல், வாகனம் என்று செலவத்தைத் திரட்டுவீர்கள். நிரந்தர செல்வந்தராகவும் ஆவீர்கள். நினத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு செல்வத்தை அடைவீர்கள். பணியாளர்களுக்கு பணிஉயர்வு, ப்ரமோஷன் எல்லாம் கிடைக்கும். நாள்பட்ட, தடைப்பட்ட திருமணங்கள் கிடுகிடுவென நடந்தேறும். பிரச்சினைகள் எளிதில் நீங்கும். சக தொழிலாளர்கள், பார்ட்னரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். சுபகாரிய விஷேஷங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். மொத்தத்தில் மேஷ ராசிக்கரர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் பாதிப்புகள் நேரிடினும், அதனின்று மீள்வதற்கு கிரகங்கள் குறிப்பாக ராகு கேதுக்கள் அனுசரணையாக செயல்படுவதால், சனியின் தாக்கம் தற்காலிக பாதிப்பாக இருக்குமேயன்றி, பெரிதாக அமையாது.
பரிகாரம்:
சனிக்குரிய தெய்வங்களான
(1.)லட்சுமி தாயாரைஅவரவர் வசதிக்கேற்ப தொழுது பணிந்து எழுந்திட சனிப்பீடை- தோஷம் விலகி நிற்கும
.(2), திருப்பதியில் எழுந்தருளியுள்ள பத்மாவதித் தாயார்;
(3) அரசன் கோவிலிலுள்ள சுந்தர மகா லட்சுமி;
(4). அரியலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலிலுள்ள வீர நாராயணப் பெருமாள் கோவிலில் (குருவாலப்பர்கோவில்) எழுந்தருளியிருக்கும், மரகதவல்லித் தாயார்;
(5). மரகதாம்பாள் உடனாய வரமூர்தீஸ்வரர் கோவில்;
(6). அரியத் துறை( கவரப்பேட்டை) அல்லது சோளிங்கர் ஆஞ்சநேயர்,
(7). திருக்கச்சி பெருந்தேவித் தாயார் தேவராஜப் பெருமாள் ;
(8). கஷ்டம் நீக்கிய பைரவர் திருப்பாச்சேத்தி ,மானாமதுரைவட்டம்,ஈரோடு,
(9). கொடுமுடிநாயகி உடனாய கொடுமுடி ஈஸ்வரர் மற்றும் திருக்குறுங்குடி( நான்குநேரி)
(10). குறுங்குடிவல்லி தாயார் உடனாய நம்பிராஜ பெருமாளுக்கு கைங்கரியம் செய்யும் நிலையில் ஈசனான பக்கம் நின்றார், (11). அனிலேஸ்வரருக்கும் க்ஷேத்திர பாலரான கால பைரவருக்கும்
உரிய அர்ச்சனைகளை செய்து மகிழ்வித்திட சனிபீடை விலகும்.
இது மட்டுமின்றி, சனிக்கிழமைதோறும், சனீஸ்வரனுக்கு விளக்கு போடுதல், குச்சானூர், திருநள்ளாறு முதலிய சனீஸ்வர ஸ்தலங்களுக்கு சென்று வருதல் சனீஸ்வனுக்குரிய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்தல் முதலிய அனைத்து பரிகாரங்களையும் விடாது செய்து வந்தால், சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.http://www.moonramko...u53cvU.facebook

Edited by வீணா, 27 September 2011 - 10:28 AM.


ninaivu-illam

#2 வீணா

வீணா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 790 posts
 • Gender:Female

Posted 27 September 2011 - 09:44 AM

ரிஷபம்Posted Image
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் அதாவது துலா ராசியில் சஞ்சரிக்கப் போகிரார். இந்த ஆறாமிடத்து சனி பகவான் உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகிறார். பல ஆதாயங்கள் கிடைக்கும் நேரமிது.
இந்த சனிப் பெயர்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு தனது பார்வையால், 3, 8, 12 ஆகிய இடங்களைப் பார்வை செய்து அதற்குரிய பலன்களை வழங்குகிறார். இந்தக் காலத்தில் உங்களுடைய எதிரிகள் யாவரும் மறைவார்கள்; அல்லது சரணடைவார்கள். உங்களுடைய பழைய கடன்கள் யாவும் நல்ல முறையில் திரும்பிக் கிடைக்கும். உங்களுடைய புதிய கடன்கள் நல்ல முறையில் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கையில் பணம் சரளமாக புழக்கத்தில் இருக்கும்.
முதற்கண் ,உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதனால் நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமாகிவிடும். உங்கள் மனைவி, நண்பர்கள் வகை , மற்றும் கூட்டுத் தொழில் விரயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வம்பு வழக்குகள், கோர்ட், வழக்குகள் நல்ல தீர்வுக்கு வரும். குடும்பத்தில் நிலவி வந்த குதர்க்கமான நிலை மாறி, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறையும். நோய் நொடிகள் இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள். உறவினர்கள் பகை நீங்கி நெருங்கி வந்து இயல்பாகப் பழகுவார்கள்.
போட்டி, பொறாமை, மறைமுகமான எதிர்ப்பு, வம்பு, வழக்கு போன்றவற்றையெல்லாம் பலத்துடன் முறியடிப்பீர்கள். புதிய நண்பர்களிடமிருந்து நல்ல உதவிகள் கிட்டும். வறுமை, சிக்கல், சிரமம் போன்றவற்றை விரட்டியடித்துவிட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
சனி உழைப்புக் கிரகம். அது உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்கள் உழைப்பு வீண் போகாது. எல்லாவற்றிலும் நல்ல பலன் கிடைக்கும். வேலை கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பணி உயர்வு, விரும்பிய இட மாற்றம், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு முதலியவற்றை ஒருசேரக் கிடைக்கும் . புதிய தொழில் அல்லது வியாரம் செய்ய நினைப்பவர்களுக்கு அதற்கான யோகம் கூடி வரும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுடைய முயற்சிகளில் முன்னைவிட அதிகத் தெளிவும் உறுதியும் காணப்படும். ஆக்கபூர்வமான காரியங்களை எல்லாம் ஊக்கத்துடன் செய்து முடிப்பீர்கள். கடமைகளையும் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை படிப்படியாக உயரும். கடன்கள் கட்டுக்கடங்கும். வீடு, வாசல், தோட்டம், துரவு வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் வந்து சேரும். வாகன வசதியும் ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்கள் மதிப்பு உயரும். பலவகையிலும் திரண்ட செல்வத்தை அடைந்து உலகம் சுற்றும் வாலிபனாக சுகபோக ஆடம்பர வாழ்க்கையை அடைந்து நட்சத்திர ஓட்டல்களில் ஓய்வெடுத்துக்கொண்டும், சொர்கலோகத்தில் சஞ்சரிப்பதுபோல மகிழும் நேரமிது.
உங்கள் குழந்தைகள் நலனிலும் தந்தையின் உடல்நிலையிலும் கவனம் தேவை.
8.11.12. முதல் 4.11.2013 வரையிலான காலகட்டத்தில், குரு ரிஷபத்திற்கு பெயர்ந்து, சர்ப்பத்தின் பிடியில் சிக்கி, தோஷத்துக்கு ஆளாகினும், சர்ப்பங்கள் சுக்கிரனுக்கு கட்டுப்பட்டவர்களாவதால், நன்மைகளை மிகுந்து செய்யாவிடினும், அதிகமான கெடுபலன்களைத் தரார். இந்தக் காலக் கட்டத்தில் முழுமையான சர்ப்ப வளையத்துக்குள் சனி சிக்கி விடுவதால், கொஞ்சம் எச்சரிக்கை தேவை. இந்த காலக்கட்டத்தின் பிற்பகுதியில் வளரும் இளம் கலைஞர்கள் கலைத் துறையில் சாதனையாளராகத் திகழ்வார்கள். மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, சின்னத் திரையிலும் பிரகாசிப்பார்கள். பணம் காய்ச்சி மரமாக செல்வம் நிரம்பி வழியும். பொதுவாக அனைத்து தொழிலில் ஈடுபடுபவர்களும் ஜீவன மேன்மையை அடைவார்கள் . ராசிக்காரர்கள் கருமயோகத்தை தொடர்ந்து பெற்று மேன்மையடைவார்கள். எனினும் ஒரு சிலருக்கு வர்த்தகம், தொழில் மற்றும் பணியில் பிரச்சினைகள் தோன்றி, பெருத்த துயரை சந்திக்க நேரும். செய்யும் பணியில் குற்றங்குறைகள் தென்பட்டு மேலிடத்து அதிகாரிகளால், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அவமானத்திற்கும் ஆளாகக்கூடும். இதுவரை மனைவி மக்களுடன் மகிழ்ந்திருந்த நீங்கள் இப்போது, பெரிய குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும், ஆளாக நேரும். இந்தக் காலக்கட்ட பிற்பகுதியில், வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.
சனி பகவானின் சஞ்சார பலத்தால் அவருடைய பார்வை பலம் சக்தி வாய்ந்தது. துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் தம்முடைய 3,7,10 ஆகிய பார்வைகளால், உங்களுடைய அஷ்டம ஸ்தானம், விரய ஸ்தானம், தைரிய ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி பகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் அஷ்டம ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமாகிவிடும்.
சனி பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுடைய உழைப்பை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. உங்கள் உழைப்பு உங்களுக்கு நல்ல ஆதாயத்தைக் கொடுக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமான போக்கு காணப்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும்.
சனி பகவான் ஏழாம் பார்வையாக உங்களுடைய விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால், செலவுகள் கட்டுக்கடங்கி நிற்கும். அப்படியே செலவானாலும், அது பயனுள்ள செலவாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள், எலெக்ட் ரானிக் பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை வாங்குவீர்கள். பொன்னும் பொருளும் சேரும். வீடும் நிலமும் வாங்கக்கூடும்.
சனி பகவான் பத்தாம் பார்வையாக உங்கள் தைரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்கள் உள்ளத்தில் ஊக்கமும் உறுதியும் உண்டாகி உங்களை எழுச்சியுடன் இயங்க வைக்கும். முயற்சியின் வேகம் மும்முரப்படும். உழைக்கும் சக்தி உங்களை தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பதால், மேலும் மேலும் உழைத்து சாதனை புரிவீர்கள்.
வறுமையும் சிறுமையும் வாட்டங்களும் பறந்து போகும். வசதியும் வாய்ப்புகளும் பெருகி வாழ்க்கையில் வளம் மிகுந்து நிற்கும். சுப காரியச் சுபிட்சங்கள் அனைத்தும் எளிதாகக் கைகூடும். தள்ளிக்கொண்டே போகும் திருமணப் பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் ஏற்படும். புத்திர புத்திரிகளுக்கும் இனிமேல் அபிவிருத்தி உண்டு. போட்டிகளும் எதிர்ப்புகளும் முன்வரமுடியாமல் முடங்கிப் போகும். கடமைகளையும் காரியங்களையும் சீராகச் செய்து முடிக்க முடியும்.
சனி பகவான் கீழே குறிப்பிட்டுள்ள தருணங்களில் மூன்று முறை வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார். அந்தக் காலக் கட்டத்தின் சிறப்புப் பலன்கள் தரப்பட்டிருக்கின்றன.:
1. 9.2.12.முதல், 24.6.12வரையில் 4 மாதம், 15 நாட்கள்(சனி வக்கரம்) :
இந்தக் காலகட்டத்தில் தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. நிலம், வீடு, வாகனம் வாங்குவது, விற்பதை தள்ளீப் போடவும். காரியத் தடைகள் ஏற்படலாம். சுற்றத்தாரிடம் கவனமாக உறவாடவும். பயணங்களைத் தவிர்க்கவும் அல்லது தள்ளிப் போடவும்.
2. 16.2.2013 முதல் 12.7.13 வரையில் 4 மாதம் 26 நாட்கள்( சனி வக்கிரம்):
இந்தக் காலக் கட்டத்தில் நல்ல அற்புதமான பலன்களாக நிகழும். எதிரிகள் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். வசூலாகாத பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். புதிய கடன்கள் அனைத்தும் நன்மையைத் தரும். நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உடல் நலம் சிறப்படையும். பங்காளித் தகறாறுகள் நல்ல முறையில் தீர்வடையும்.
3. 3.3. 2014 முதல்,23.7.14 வரையிலான 4 மாதம் 20 நாட்கள்( சனி வக்கிரம் ):
இந்தக் காலத்தில் 19.6.2014 வரையில் வாக்கு வன்மை ஏற்படும். பணம் வரவு இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் உண்டாகும். கல்வி சிறப்படையும். குடும்பத்தில் கணவன் -மனைவிக்கிடையே அன்னியோன்னியம் ஏற்படும். செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் கூடும். சொல்வாக்கும் சிறப்படையும்.
இந்தக் காலத்தில் கடைசி 23.7. 14 வரையில் எதிலும் காரியத் தடைகள் ஏற்படும். முயற்சிகள் பலனடையாது. தோல்விகள் ஏற்படும். வேலைக்காரர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். சகோதரர்களிடம் வீண் சண்டைகள் வரும். தைர்யம், தன்னம்பிக்கை குறையும். பொன்னாபரணங்கள் வாங்குவதிலும் விரயம் ஏற்படும். உத்தியோகம், இடமாற்றம் போன்றவைகளால் வருத்தம் ஏற்படும்.
எந்த காரியத்தை எடுத்தாலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால், அமைதியோடு வாழலாம். இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு யோகமானதே. வக்கிர காலங்களைத் தவிர மீதி காலங்கள் சிறப்பான பலன்களையே தரும்.
பரிகாரம்:
1. காளிங்க நர்த்தனனை போற்றித் துதித்து வெண்ணெய், பால், தயிர் சாற்றி மகிழ்வித்திட நற்பலன் கூடும்.
2. தன்வந்திரி மகாமந்திர ஜப ஹோமம், மிருத்துஞ்ஜயஹோமம் போன்றவைகளை உரிய முறையில் வேத மந்திரங்களை ஓதும் மறையவர்களை வைத்து, உரிய பரிகாரங்களை செய்துகொள்ளவும்.
3. ஈரோட்டில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வணங்கி வரவும்.
இவை தவிர சனிபகவானுக்குரிய வழிபாடுகளை விடாமல் செய்து வரவும். பரிகார ஸ்தலங்காளான சனீஸ்வரன் ஆலயங்களைப் பற்றியெல்லாம் ஏற்கெனவே விரிவாகக் கூறியிருக்கிறோம். குச்சானூர், திருநள்ளாறு முதலிய ஸ்தலங்களுக்கு முடிந்தபோதெல்லாம் சென்று வாருங்கள். அனைத்திலும் சுபம் காணலாம். வாழ்க வளமுடன்.!


மிதுனம்


Posted Image
இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது ராசிக்கு ஐந்தாமிடத்தில் பிரவேசிக்கப் போகிறார். இவ்வாறு ராசி மாறி வரும் சனிபகவான், முன்போல கடுமையான பலன்களைக் கொடுக்க மாட்டார்.ஓரளவுக்கு நற்பலன்களையே கொடுப்பார். தற்போதுள்ள சனிப் பெயர்ச்சியில் உங்களுடைய பொருளாதார நிலையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லையென்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். நகை நட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்க முடியும். அது மட்டுமல்ல. வீடு மனை வாங்கவோ அல்லது சொந்தமாக வீடு கட்டவோ கூட முடியும். இருக்கும் இடத்தைப் பழுது பார்த்து வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளவும் முடியும்.
சுகஸ்தானமான நான்காம் இடத்திலிருந்து சனி இடம் பெயர்வதால், உங்களுடைய ஆரோக்கியத்தில் சொல்லத் தகுந்த அளவு முன்னேற்றம் உண்டாகும். அலுப்பு சலிப்பு அசௌகரியங்கள் நீங்கும். வேளாவேளைக்கு சாப்பிட முடியும். தளர்வடையாமல் தொடர்ந்து உழைக்க முடியும். நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமடையும்.
நான்காம் இடம் என்பது மாத்ரு ஸ்தானம் ஆனதால், அங்கிருந்து சனி விலகிவிட்டதால், உங்கள் தாயாரின் உடல்நிலையில் அபிவிருத்தி ஏற்படும். மருத்துவ செலவு குறையும் உங்கள் தந்தையார் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அவ்ருடைய வேலைச் சுமைகள் குறையும். தந்தையாரின் தொழில் மற்றும் சமூக அந்தஸ்து இவை உயரும். அவருடைய முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக இருந்து வந்த தடைகள் விலகும் .
உங்கள் தொழில் மற்றும் உத்தியோகத்தில் இதுவரை நீங்கள் வருமானத்துக்கும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது . அப்படிப்பட்ட அதிகப்படியான வேலைப்பளு இப்போது குறையும். இதுவரை இருந்து வந்த அதிகமான உழைப்பு சற்று குறையும். அங்கேயும் இங்கேயும் அலைமோதித் திரிதல், அலைந்து அலைந்து பயனற்றுப் போதல், எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்காமல் போதல், நெருங்கிப் பழகுபவர்களே நம்பிக்கை துரோகம் செய்தல் போன்றவை இனி நடைபெறாது. பல அவசியமான திருப்பங்களுக்கு அடைப்பாக இருந்த பல வழிகள் திறந்துகொள்ளும். கடுமையான உபத்திரவங்களும் காலதாமதங்களும் இனி குறையும்.
ஈனத்தானதிற்கும் பாக்கிய ஸ்தானத்திற்கும், காரகம் வகிக்கும் சனீஸ்வரர் , ராசிக்கு பஞ்சமத்தில், உச்ச நிலையில் துலாத்தில் பெயர்ச்சியாகி , ராசிக்குரிய களத்திர ஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் தன் குடும்ப வீட்டையும் பார்வையிடுகிறார். இதனால், ராசிநாதர்களின் பாக்கிய இனங்கள் பெருகி தனம் , கீர்த்தி, புகழ், பெருமை சந்தான விருத்தி, , புதிய சொத்துக்களை அடைந்து ஜீவன வகைகளை பெருக்கி, சுகமான வளமான வாழ்க்கையை அடையப் போகிறீர்கள். வர்த்தகர்கள், முதலீட்டு ஆதாயங்களை அடைவர். அரசு சலுகைகளையும், , மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பையும், நீதிமன்ற விவகாரங்களில் சாதகமான தீர்ப்பையும், எதிர்பார்க்கலாம். தன கீர்த்தியடைந்து வாழ்க்கை வளங்களைப் பெருக்கிக்கொள்ளும் நேரமிது. தன்னுடைய மகன், மகள் திருமணம் மற்றும், பன்னாட்டுக் கல்வி போன்றவற்றை திறம்பட நிறைவேற்றி வைத்து ராசிக்காரர்கள் இனிமை காண்பார்கள். இறையருளால், இழப்பு, நஷ்டம், கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு கரையேறி விடுவீர்கள்.
சனி பகவானின் சஞ்சார பலத்தைவிட அவருடைய பார்வை பலம் மிகவும் சக்தி வாய்ந்தது. துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவன், தன்னுடைய 3,7, 10 ஆகிய பார்வைகளால், உங்களுடைய களத்திர ஸ்தனம், லாப ஸ்தானம், குடும்ப ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இந்தப் பார்வைகள் கெட்ட பார்வைகள் என்பதால், உங்களுக்கு பார்வைகள் நற்பலன்களைத் தரப்போவதில்லை. சனி பகவானின் மூன்றாம் பார்வை, உங்களுடைய ஏழாமிடத்தை பார்வையிடுவதால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் / மனைவியின் உடல்நலம் பாதிக்கப்படும். வேலை காரணமாகச் சிலகாலம் பிரிந்திருக்க நேரலாம். திருமண வயதில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களுக்கு திருமணமாவதில் கால தமதம் ஏற்படலாம். அல்லது நிச்சயமான திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படலாம். சனி பகவானின் ஏழாம் பார்வை, பதினோராம் இடமான லாபஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய ஆதார வரவுகள் தாமதப்படும் அல்லது தடைப்படும். கைநிறைய ஆதாயம் கிடைக்கும் என்று காத்திருப்பீர்களானால், எதுவுமே கிடைக்காமல், உங்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். பதினோராம் இடம் மூத்த சகோதரர்களின் இடம் என்றும் குறிக்கப்படுவதால், அண்ணன், அக்கா போன்ற மூத்த சகோதரர்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். அவர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கவேண்டிய அன்பும் ஆதரவும் தற்காலிகமாகத் தடைப்படும். அவர்களால், வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும். சனி பகவானின் பத்தாம் பார்வை இரண்டாமிடமான குடும்பஸ்தானத்தில் பதிவதால், பண வரவு பாதிக்கப்படும். வரவேண்டிய பணம் நிறைய இருந்தாலும், கைக்கு வந்து சேரும் பணம் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காது. கொடுகல்- வாங்கலில் குளறுபடிகள், குறைபாடுகள், கோபதாபங்கள் போன்றவை இருக்கும். சில சமயங்களில் உங்கள் நாணயத்தைக் காப்பாற்ற முடியாமல் போகும். வேறு சில சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்திலும் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் தலை தூக்கும்.
இனி இந்த சனிப் பெயர்ச்சியில் மூன்றுமுறை நிகழப்போகும் சனி பகவானின் வக்கிர சஞ்சாரங்களைப் பார்ப்போம்:
( 1) 9.2.12 முதல், 24.6.12.வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:
இந்தக் காலத்தில் சனி முதல்முறையாக வக்கிர சஞ்சாரத்தை மேற்கொள்ளப் போகிறார். இப்போது வருமானம் சிறப்பாக இருக்கும். அதைப் பெருக்கிக்கொள்ளவும் நல்ல வாய்ப்புகள் உருவாகும். ஆனால், அதே சமயம் செலவுகள் கடுமையாக ஏற்படும். நீங்களும் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். ஆனால், உங்கள் முயற்சி தோல்வியடையும். நீங்கள் எந்தக் காரியத்தையும் விரும்பும் வகையில் செய்யமுடியாது. சில காரியங்கள் எதிர்பாராத வகையில் திசை மாறிப் போகும். வெளிவட்டாரத்தில் உங்களுக்குச் சாதகமான போக்கு காணப்படும். முக்கியமான மனிதர்களை அவசரமாக சந்தித்துப் பேச நினைப்பீர்கள். ஆனால் முடியாது. நாலைந்து முறை அலைந்த பிறகே அவர்களைச் சந்திக்க முடியும். அப்படியே சந்தித்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் உதவி தாமதமாகத்தான் கிட்டும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்பட்டாலும், எதிர்பார்க்கும் லாபம் கிட்டாது. உத்தியோகம் பார்ப்பவர்கள் கடினமாக உழைத்தாலும், மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க முடியாது. கலைஞர்களுக்கு புதிய தொடர்புகளால், வருமானம் பெருகும். ஆனால், அதைவிட அதிகமாகச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கிக்கொண்டே இருக்கும். குடும்பச் செலவைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். இந்தக் காலத்தில் நிலம், வீடு,வாகனம் முதலியவற்றை வாங்குவது, அல்லது விற்பதில் கவனம் தேவை. அந்த வேலைகளை தள்ளிப்போடுவது நல்லது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வயிற்றுப் பிரச்சினைகள், அஜீரணக் கோளாறுகள் தோன்றலாம். பிரயாணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.
(2) 16.2.13. முதல் 12.7.13.வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:
இந்தக் காலக் கட்டத்தில் சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிரமடைகிறார். இந்தக் காலத்தில் உங்கள் கைக்கு பணம் வந்த்தும் பறந்தோடிவிடும். செலவுகள் ஒருமடங்கிற்கு இரு மடங்காக வரும். வருமானம் ஒரு வழியில் அல்லது இரு வழியில் வருகிறது என்றாலும், செலவுகள் பல வழிகளில் வருகிறது. இந்தக் காரியத்திற்கு இன்றைக்கு இவ்வளவுதான் செலவழிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் செல்லுபடியாகாது. எதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையெல்லாம் உங்களால் ஊகிக்கவே முடியாது. இதில் ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால், எல்லா வகையான செலவுகளையும் சமாளிக்கும் அளவுக்கு எப்படியாவது வருமானம் வந்து விடும் என்பதுதான்.
இந்தக் காலத்தில் பொது சேவையில் கௌரவக் குறைவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். பூர்வீக சொத்துக்களில் கவனம் தேவை. உய்ர் அதிகாரிகளிடமும் உடன் பணி புரிபவர்களிடமும் மனஸ்தாபம் வராமல் பார்த்துக்கொள்ளவும். குழந்தைகள் வழியில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் கைக்கு வராமல், இழுபறியாக்கும்.
காலில் ஏதாவது இடர்ப்பாடுகள் தோன்றி மறையும். சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படும். கடுமையான உழைப்பு, அதிகப்படியான அலைச்சல், இவை உடலில் அழற்சியை ஏற்படுத்தும். இருக்கிற வீட்டை புதுப்பித்தல், புதிய மனை வாங்குதல், புது வீடு கட்டுதல், போன்றவற்றிற்கு உங்களால் பணம் புரட்ட முடியும். அதே சமயம் மறு பக்கம் கடன்களும் தொல்லை கொடுக்கும்.
(3). 3.3.2014 முதல்23.7.14. வரையில் 4 மாதம் 20 நாட்கள்:
இது மூன்றாவது முறையாக சனி வக்கிர சஞ்சாரம் செய்யும் காலமாகும். இந்தக் காலக் கட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், பொறுப்பு, கடமை ஆகியவற்றில், குறை, தவறு ஏற்படும். உங்களுடைய குறியும் இலக்கும் அடிக்கடி தவறிப் போகும். நல்லது கெட்டது புரியாத குழப்பம் ஏற்படும். சாண் ஏறினால், முழம் சறுக்கும். உங்களுடைய முன்னேற்றமும் முடக்கமாகும். அபிவிருத்திகளைக் காண்பது அரிதாகிப் போகும். நிலையில்லாத அலை மோதல்கள் இக்கட்டான விவகாரங்கள் போன்றவற்றால், வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும். கணிசமான தொகை ஒன்றை எதிர்பார்த்திருப்பீர்கள். அது கைக்கு வராது. தடங்கல்களும் குறுக்கிடுகளும் ஏற்படுவதால், வட்டிக்குக் கடன் வாங்கி சில அவசர செலவுகளை சமாளிக்க வேண்டி வரும். பற்றாக்குறைப் பிரச்சினை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். கடுமையான தட்டுப்பாடுகளும் அவசியமான தேவைகளும் கழுத்தை நெறிக்கும்போது, மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பணம், குடும்ப நிர்வாகம் சம்பந்தமாக கணவன் -மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பிள்ளைகளின் ஆசைகளையும் தேவைகளையும்கூட உங்களால் உடனுக்குடன் நிறைவேற்ற முடியாது. அவர்களால் மருத்துவச் செலவுகளும் மற்ற விரயங்களும் ஏற்படும். இந்தக் காலத்தில் உடல் நலனிலும் மன நலனிலும் கவனமாக இருக்கவேண்டும். கௌரவம், அந்தஸ்து, மரியாதை ஆகியவைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் நன்மை ஏற்படும். பண வரவுகள் நன்மையைத் தரும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்.
பரிகாரம்:

1. சனியின் குருவான பைரவருக்கு, அஷ்டமி திதியில் ஹோமம் மற்றும் பூஜைகளை மேற்கொண்டு, சாந்தி செய்துகொள்வது நல்லது.
2. குடும்பப் பெண்கள் அஷ்ட லட்சுமிகளும் கூடிய உருவப் படத்தை வைத்து, விளக்கேற்றி, காலை 6.00 மணியளவிலும், நவக்கிரக மாக்கோலமிட்டு, துளசி மற்றும் முல்லை, நந்தியாவட்டைசெண்பக பூக்களால், லக்ஷ்மி அஷ்டோத்ரத்தைப் பாராயணம் செய்து பால் பாயசம் நைவேத்தியம் செய்வது நல்லது.
3.இவை தவிர சனிபகவானுக்குரிய வழிபாட்டு ஸ்தலங்களான குச்சானூர், திருநள்ளாறு முதலிய தலங்களுக்குச் சென்று உரிய வழிபாடுகளை முறைப்படி செய்து வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.
4. சனிக்கிழமைதோறும், காக்கைக்கு அன்னமிடல், நவக்கிரக கோவிலுக்குச் சென்று சனீஸ்வரனுக்கு எள்ளுதீபம் ஏற்றுதல், முதலியவை தொல்லைகளையும் குழப்பங்களையும் தீர்க்கும் . வாழ்க வளமுடன்!

Edited by வீணா, 27 September 2011 - 05:14 PM.


#3 வீணா

வீணா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 790 posts
 • Gender:Female

Posted 27 September 2011 - 10:03 AM


Edited by வீணா, 27 September 2011 - 10:15 AM.


#4 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,898 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 September 2011 - 10:18 AM

இணைப்பிற்கு நன்றி வீணா.
பூர்வீகச் சொத்துக்களில் சிக்கல் உண்டாகும் என்று, எனது பலனில் போட்டிருப்பது உண்மையே....
என்னுடைய சீதன வீட்டிலும், காணியிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கண் வைத்துவிட்டது.
அதனை தடுக்க ஒவ்வொரு புரட்டாசிச்சனியும் விரதம் இருந்து, எள்ளெண்ணை எரிக்கின்றோம்.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#5 வீணா

வீணா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 790 posts
 • Gender:Female

Posted 27 September 2011 - 10:25 AM

மகரம்:


Posted Image
இதுவரை உமது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது உமது ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இதனை நீங்கள் வாழ்த்துக்கூறி வரவேற்க முடியாது. ஏனெனில் பத்தாமிடத்து சஞ்சாரம் உங்களுக்கு நல்லது செய்யப் போவதில்லை. பலவகைக் கஷ்டங்களைக் கொடுக்கப் போகிறார்.
உங்கள் பத்தாமிடமான துலாம் சனிக்கு உச்ச வீடு. உமது ராசிநாதனும் குடும்ப அதிபதியும் அவரே . அவர் பத்தில் உச்சம் அடைவது சசயோகம் ஆகும். தந்தை மூலம் நிதியுதவி பெற்று தொழில் புரிபவர்கள் ஏற்றம் அடைவர். உத்தியோக உயர்வு, பணியிட மாற்றம் முதலியவை கிட்டும். பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் நுட்ப பணியினர் மிகுந்த மேன்மை அடைவர். தூர தேசத்திலிருந்து நற்செய்திகள் வரும்.
மற்றபடி, சனி பகவான் பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானத்திற்கும் செயல்பாடுகளுக்கும் சிரமங்கள் உண்டாகும். சௌகரியங்கள் பாதிக்கப்படும். எந்த முயற்சிக்கும் உடனே வெற்றி கிடைத்துவிடாது. நீங்கள் வெகு தீவிரமாகப் பாடுபட்டு எடுக்கும் முயற்சிகளுக்கும் போராடித்தான் வெற்றி பெற முடியும். வேலை தேடுபவர்களுக்கு உடனே வேலை கிடைத்துவிடாது. ஏகப்பட்ட பாடுகளும் கஷ்டங்களும் பட்ட பிறகு கிடைக்கும் வேலையும் அவ்வளவு பிடித்தமான விதத்தில் இருக்காது. குறைந்த சம்பளத்தில் இப்படியொரு வேலைக்குப் போக வேண்டுமா என்று நொந்துகொண்டுதான் போக வேண்டும். உங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலையாகவும் இராது. எக்கச்சக்கமாகப் படித்துவிட்டு இந்த வேலைக்கா போகணும் என்று தோன்றும். வேலை கிடைக்காவிட்டால் போகட்டும். சுயதொழில் செய்யலாம் என்றாலோ சொந்தமாக வியாபாரம் செய்யலாம் என்றாலோ அதற்கும் வாய்ப்புகள் கூடிவருவது அரிதாக இருக்கும். அப்படியே கஷ்ட நஷ்டப்பட்டு தொடங்கிவிட்டாலும், தொடர்ந்து நடத்துவது என்பது பெரிய கஷ்ட காரியமாக இருக்கும். அந்த தொழில்/ வியாபாரம் மூலம் முன்னேறுவது என்பது பெரிய கேள்விக்குறி . ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும், பெரும் உபத்திரவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் எதைச் செய்தாலும் அதைத் தடுப்பதுதான் முதல் வேலை என்பது சனிபகவானின் விளையாட்டாகும். அது ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் கூட அதைத் தொடங்குவதும் நடத்துவதும் பெரிய மலையைப் புரட்டி எடுப்பது போலாகிவிடும். ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்குள் பல வேலைகள் வரிசையாக வந்து பெண்டிங்கில் நிற்கும். எதைச் செய்வது எதைச் செய்யாமல் விடுவது என்று தடுமாறிப்போய் நிற்பீர்கள். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற திருப்தி கிடைக்காது. வெகு பாடுபட்ட வேலைகள் எல்லாம் படு சொதப்பலாகிப் போய்விடும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. பல சமயங்களில் உங்கள் உழைப்பின் பலனை மற்றவர்கள் தட்டிச் சென்று விடுவார்கள். கடினமாக உழைத்து நிறைய பணம் வரும் என்று எதிர்பார்ப்பீர்கள். ஆனால், போட்ட முதல் கூடத் தேறாது.
சனிபகவானின் பார்வை பலன்கள்:
சனி பகவான் பத்தில் இருந்து தனது 3, 7, 10.-ம் பார்வையினால், உமது ராசிக்கு 12, 4, 7. ஆகிய வீடுகளைப் பார்வையிடுகிறார். தனது மூன்றாம் பார்வையினால், உமது ராசிக்கு 12-மிடத்தை பார்வயிடுவதால், அந்த விரய ஸ்தானத்துக்குரிய கெடு பலன்கள் மலிந்து காணப்படும். பண விரயம் இருக்கும். தினமும் ஒரு தண்டச் செலவு ஏற்படும். உங்களையும் மீறி நடக்கும் பண விரயத்தை உங்களால் தடுக்க முடியாது. வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள செலவு செய்ய நினைப்பீர்கள். அது முடியாமல் போகும். அவசியத்துக்கு செலவு செய்ய திட்டமிட்டால், அது அனாவசியத்துக்கு கரைந்துபோகும். வரவுக்கு மீறிய செலவுகள் வரும் யாருக்கோ எப்போதோ போட்ட ஜாமீன் கையெழுத்து இப்போது பிரச்சினை கொடுக்கும். சிலர் நீதிமன்றம் செல்ல நேரும். பணம் செலவு செய்து அதிலிருந்து விடுபட நேரும். பயணம் மூலம் பணி புரிபவர்கள் ஏற்றம் அடைவர். நீண்ட தூரப் பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணத்துக்கு திட்டம் போடுவீர்கள். ஆனால், அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஏதாவதொரு வகையில் தூக்கம் கெடும்.
சனி பகவான் தனது ஏழாம் பார்வையினால், உங்களது 4-வது வீட்டைப் பார்வை செய்வதால், கல்வியில் கூடுதல் கவனம் தேவை. வீடு கட்டும் பணியில் தகுந்த அனுமதி பெற்று தொடர்வது நன்று. வாகனம், கனரகப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நன்று. அக்கம்பக்கத்தை அனுசரித்துப் போவது நலம். இந்த சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் மாத்ரு-பந்து ஸ்தானத்தில் பதிவதால், உங்களால் நேராநேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது. ஆறிப்போன உணவு கிடைத்தாலே போதும் என்றாகிவிடும். நேரம் தவறி சாப்பிடுவதால், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். எதையும் செய்ய ஊக்கம் இல்லாதவர்களாக இருப்பீர்கள். உறவினர்களுடன் பகை ஏற்படலாம். அது தீராப் பகையாகவும் மாறும்.
சனி பகவானின் பத்தாம் பார்வை உங்களுடைய களத்திர ஸ்தானத்தில் பதிவதால், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும். சிறு பிரிவு ஏற்படவும் வாய்ப்புண்டு. மனைவிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். மருத்துவச் செலவுக்கென்று தனியாக ஒரு தொகையை ஒதுக்கவேண்டியிருக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் இழுத்துக்கொன்டே போகும். அப்படியே முடிவாகி திச்சயதார்த்தம் ஆனாலும், அதன்பின் திருமணம் நடைபெறக்கூடிய ஒவ்வொரு காரியமும் தடைப்படும். திருமணம் நடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். கூட்டுத் தொழிலில் சிறுசிறு மனஸ்தாபம் உண்டாக ஏதுவாகும். கவனமுடன் பரிசீலித்து நடந்துகொள்வது நல்லது.
இனி சனி பகவானின் வக்கிர சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். இந்த சனியின் இரண்டரை ஆண்டு சஞ்சாரத்தில் மூன்று முறை வக்கிர அதியில் சஞ்சரிக்கிறார்.
(1). 9.2.12. முதல் 24.6.12.வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:
இந்தக் காலத்தில் உங்களுக்கு பணத் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். எந்த திட்டமும் முன்கூட்டியே போட்டுவிட முடியாது. கைக்கு வருவது போல இருக்கும் பணம் சமயத்துக்கு வராது. எனவே உங்கள் பட்ஜெட் தடுமாறும். திட்டமிட்ட வேலையும் சரிவர நடைபெறாது. வருமானம் சம்பந்தமான அத்தனை காரியங்களும் தடைப்படும். அதுமட்டுமில்லாமல் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் ஏதாவது தடை வந்துகொண்டே இருக்கும். அந்த இடையூறை நீக்கிவிட்டு முன்னேறுவதில் ஏகப்பட்ட சறுக்கல்கள் இருக்கும். அவசரப்பட்டாலோ அல்லது ஆத்திரப்பட்டாலோ எதுவும் நடக்காது. அன்றாட வேலைகளைக்கூட கவனிக்க முடியாமல், மறதி, தயக்கம், அசதி, அவநம்பிக்கை என்று நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அவ்வப்போது ஏதாவது நோய் வாட்டிக்கொண்டே இருப்பதால், ஆரோக்கியமும் சரியாக இருக்காது. உத்தியோகத்திலிருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவால், கஷ்டப்படுவார்கள். தொழில், வியாபாரங்கள் நஷ்டத்தில்தான் இயங்கும். பெரிய லாபத்தை எதிர்பார்க்கமுடியாது. குடும்பத்தில் பற்றாக்குறை ஏற்படும்.
(2). 16.2.13.முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:
இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிரகதியில் இயங்குகிறார். இந்தக் காலத்தில் எப்போதும் முகத்தில் ஒருவித வாட்டம் குடிகொண்டிருக்கும். உடம்பிலும் ஒரு புத்துணர்ச்சியோ சுறுசுறுப்போ இல்லாமல், இருப்பீர்கள். ஊக்கமில்லாமலே எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்ய முடியாமல் தத்தளிப்பீர்கள். மகிழ்ச்சி குறைந்து, சோர்வுடனும் துக்கத்துடனும் காணப்படுவீர்கள். மறதி, அலுப்பு, சோம்பல், சுகமின்மை என்று எப்போதும் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர் போல் இருப்பீர்கள். முகம் பொலிவிழந்து நடமாடுவீர்கள். ஊட்டமும் குறைவாக இருக்கும். மனதில் ஏதேதோ கலக்கங்கள் நிறைந்திருக்கும். அதனால், உங்களால் தெளிவான எந்த முடிவுக்கும் வர முடியாது. உடனடியாக எடுக்க வேண்டிய முடிவுகளைக் கூட எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உங்களுடைய சிந்தனைகள் திசைமாறிச் செல்லும். உங்களுடைய பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். சில சமயம் கைநிறைய பணம் புழங்கும். சில சமயம் கையில் பத்து ரூபாய்கூட இருக்காது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், கையில் பணம் அதிகமாகப் புழங்கும்போது செலவு எதுவும் வராது. கையில் பத்து ரூபாய்கூட இல்லாதபோது தள்ளவே முடியாத செலவு வந்து படுத்திவிடும். கொடுக்கல்- வாங்கலில் குளறுபடிகளும் ,கடன் நெருக்கடிகளும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில புதிய நெருக்கடிகள் தோன்றும். தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடுவார்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவார்கள். உங்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். தாய்வழி உறவினர்களால் பிரச்சினை ஏற்படும். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சுபச் செலவு ஏற்படும்.
(3). 3.3.14. முதல் 23.7.14 வரையிலான 4 மாதம் 20 நாட்கள்;
இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிரமடைந்திருக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் காரணமில்லாமல் ஒருவித படபடப்புடன் காணப்படுவீர்கள். எதற்கெடுத்தாலும் மற்றவர்கள்மீது கோபப்பட்டு எரிந்து விழுவீர்கள். காரணமில்லாமல் மற்றவர்கள் மீது வெறுப்பும் எரிச்சலும் காட்டுவீர்கள். சில வெற்றிகள் பெற்றாலும் நீங்கள் சந்திக்கும் தோல்விகள் சில உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும். மனதில் குழப்பங்களும் கவலைகளும் தலைதூக்கும். உங்களுக்கு ஏற்படும் பணத்தேவைகளே அதற்குக் காரணமாகும். சில செலவுகளை எவ்வாறு சமாளிப்பது என்று தடுமாறிப் போவீர்கள். வாக்குவாதங்கள், வம்பு சண்டைகள் என்று வாழ்க்கை போர்க்களம் போலவே இருக்கும். பக்குவமாக எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் ஒதுங்கிப் போவது நல்லது. சிறு சிறு திட்டங்களில் கவனம் செலுத்தினால் அவற்றில் ஓரளவு வெற்றியும் கிட்டும். பெரிய திட்டங்களாகப் போட்டீர்கள் என்றால், அவற்றில் உங்களுக்கு வெற்றியே கிட்டாது. பெரிய திட்டங்களுக்கு இது உகந்த நேரமல்ல. ஆகைலால் அவற்றை மூட்டை கட்டி வைத்துவிடுங்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் மனைவியின் புலம்பல் பலமாக இருக்கும். தாய்வழி உறவினர்களில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். தாயார் வழியில் மருத்துவச் செலவு உண்டாகும்.
இப்படியாக இந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் முடிவடைந்தபின் சற்று முன்னேற்றம் தெரிகிறது. பொருளாதார நிலை அபிவிருத்தி அடையும். மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் குடிகொள்ளும். செய்யவேண்டிய வேலைகளை வேகமாகச் செய்து முடிப்பீர்கள். கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்து சென்ற நண்பர்கள் இப்போது திரும்பி வந்து நட்பு பாராட்டுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களின் நிலை மேன்மையடையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் படிப்பு சிறந்தோங்கும். திருமணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
பரிகாரம்:

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க.
2. ஆதித்ய ஹிருதயம்(அ) தசரதர் அருளிய தூரித்ரய தகன ஸ்தோத்திரம் பாராயணம் செய்க.
3. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாத்தவும். வன்னி இதழ்களால் அர்ச்சிக்கவும். எள்ளு தீபம் ஏற்றவும்.
4. மகாப்பிரதோஷம், சதுர்த்தி, சனிவார அஷ்டமி, பௌர்ணமி பைரவர் அம்பிகை வழிபாடு, விஷ்ணு- லட்சுமி பூஜைகள் காயத்ரி ஜபம், கலைமகள் வழிபாடு யாவும் உகந்தது.
5. சனீஸ்வர ஸ்தலங்களான முக்குருணி வினாயகர் மதுரை; தனி சனீஸ்வரர் பிரம்ம ஸ்தான அம்பிகை திருச்சி : உறையூர் வெக்காளியம்மன்; பைரவன்பட்டி பைரவர்; நந்தியின் திருமண வைபவ ஸ்தலமான திருமழப்பாடி , யோகராமர், விஷ்ணு துர்கை அமைந்த படவேட்டைவேலூர், வட ஆற்காடு மாவட்டம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது உத்தமம்.
6. சனீஸ்வரனின் புகழ்மிக்க ஸ்தலங்களான திருநள்ளாறு. குச்சானூர் ஆகிய இடங்களில் அமைந்த சனி பகவானையும் ஆற்காடு- ஆரணிக்கு அருகே ஏரிக்குப்பம் என்னும் கிராமத்தில் யந்திர ரூபத்தில் அமைந்த சனிஸ்வர பகவானையும் தரிசனம் செய்யவும்.
அனைத்து கஷ்டங்களும் நீங்கும் . வாழ்க வளமுடன்!


கும்பம்:


Posted Image
இந்த சனிப் பெயற்சி மூலம் உங்களுக்கு அஷ்டம சனியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதுவே பெரிய நன்மைதான். சனியின் அசுப பலன்கள் அமையாமல் இருந்தாலே பெரிய நன்மைதான். ” அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி” என்று ஒரு பழமொழி உண்டு. பணிச்சுமையும் குடும்பப் பொறுப்பும் கூடி உங்களை ஒரு வழியாக்கியது. தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திலிருந்து ஒன்பதாமிடத்திற்கு மாறப் போகிறார். ஒன்பதாமிடத்திற்கு பாக்கிய ஸ்தானம் என்றும் மகாலட்ஸ்மி ஸ்தானம் என்றும் பெயருண்டு. உமது ராசிநாதனான சனி பகவான் ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். இதனால், ஓரளவு யோகத்தையும் தரும். தங்க சனியாக இந்தத் தரணியில் ஒளி வீசப் போகிறீர்கள். அஷ்டம சனியில் இருந்துவந்த சில இடையூறுகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். உங்க முயற்சி, முதலீடு எதிர்பார்ப்பு இவற்றில் சற்று சாதகம் அமையக்கூடும். ராசிநாதன் ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். தந்தை மூலம் தனலாபம் கிட்டும். வீடுகட்ட கடன் கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் வாங்க இடமேற்படும்.புத்திர பாக்கியம் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையில் இருந்து வந்த கருத்துவேற்றுமை அகலும். சனி பகவானின் ஒன்பதாமிடத்து சஞ்சாரம் உங்களுக்கு அடிப்படையான பாதிப்பு எதுவும் ஏற்படாது. எனினும் கடினமான வேலைப்பளு, காரியச் சிரமங்கள் அதிகமான செலவினங்கள், அசௌகரியங்கள் போன்றவை ஏற்படும். நீங்கள் இதுவரை செய்துவந்த தான தருமங்கள், தடைப்படும். தைரியமும் தெம்பும் குறைந்தது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படும்.மனதில் அச்சம் குடிகொள்ளும் .மனபலவீனம் ஒருவித தளர்ச்சியை ஏற்படுத்தும். பொருளாதார நிலை மிகமிக சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாவிட்டாலும், தேவைக்கேற்ற பணம் எப்படியாவது கிடைத்துவிடும். வருமானம் அதிகமானால், செலவுகளும் அதிகமாவதால், உங்களுக்கு சேமிப்பு என்று எதுவும் தங்க வழியில்லை. ஆனால், வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துகள் வாங்க வழி ஏற்படும். சண்டை சச்சரவுகள் வராமலிருக்காது. ஆனால், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. விட்டுக்கொடுத்து பின்வாங்கிவிடுவீர்கள். வழக்கு, விவகாரங்கள் இழுபறியாகவே இருக்கும். நோய் நொடிகள் வந்தலும் உடனுக்குடன் குணமாகிவிடும். சிறு அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்; என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். சிறு விபத்துக்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு. கணவன்-மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அது வெளியே தெரியாது. உடன்பிறந்தவர்களால், செலவினங்களும் ஏற்படும். விரயங்களும் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தையில் மந்தமான போக்கு காணப்படும். சிலர் வெளிநாடு சென்று படிக்க நேரும். ஏதேனும் ஒரு நூதன கலையால் விளம்பரம் ஆவீர்கள். ஒன்பதாமிட்ம் என்பது லட்சுமியின் ஸ்தானமாகும். இதனால் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பயப்படக்கூடிய அளவு இருக்காது. தன்னுடைய முக்கியத் தேவைகளை தனக்கும் , தன் குடும்பத்திற்கும் வாரிசுகளுக்கும் பயன்படுத்திக்கொள்வீர்கள். அத்துடன் மனைவி., பிள்ளை பேரன் பேத்திகளுக்கு என்று பிற்காலத்துக்கு தேவையான திட்டங்களும் முதலீடுகளும் செய்வீர்கள். நல்ல வேலை, நல்ல அதிகாரி முதலாளி, தொழிலாளி ஒத்துழைப்பு என்று யாவும் சற்று சாதகமாக இருக்கும்.
சனி பகவானின் பார்வை பலன்களைப்பற்றிப் பார்ப்போம்:
சனி பகவான் தனது 3,7,10-ம் பார்வைகளால், உங்களுடைய லாப ஸ்தானம், தைரிய- பராக்கிரம ஸ்தானம், பகை- ரோக- கடன் ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுடைய லாப ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய வருமானம் பாதிப்படையக்கூடும். உங்கள் பொருளாதார நிலை எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். வருமானம் தொடர்பான செயல்களில் தடைகள், தடங்கல்கள், தாமதங்கள், இடையூறுகள் போன்றவை ஏற்படும். உழைப்புக் கிரகமான சனி உங்களுக்குப் பாதகமாக சஞ்சரிப்பதால், உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டாது. சில சமயங்களில் உங்கள் உழைப்பின் பயனைப் பிறர் தட்டிச் சென்று விடுவார்கள். இருப்பினும் உங்கள் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வந்து விடும்.
சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய – பராக்கிரம ஸ்தானத்தில் பதிவதால், மனதில் தைரியம் குறையும். எதையும் உங்களால் எதிர்க்க முடியாது. எதிர்க்க வேண்டிய மிக அவசியமான பிரச்சினைகளைக் கூட நீங்கள் சமாதாதானமாய்ப் போய்விடலாமா என்றுதான் யோசிப்பீர்களேயொழிய நியாயத்தை தட்டிக் கேட்கத் தயங்குவீர்கள். மனதில் தைரியம் குறையும். துணிச்சலாக செயல்படத் தயங்குவீர்கள். மனதில் நம்பிக்கை இல்லாமல் போய் அவநம்பிக்கை குடிகொள்ளும். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அதை வெற்றிகரமாக செய்யமுடியுமா என்ற சந்தேகம் வந்துவிடுவதால், அந்த விஷயத்தில் உங்களுக்குத் தோல்வியே கிடைக்கும். எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு வெற்றிகள் கிடைக்கும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஏற்றமான நிகழ்வுகள் நடைபெறும். தாயார் வழியில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தூர தேசத்திலிருந்து நற்செய்திகள் வரும். மனைவி வழியில் சுப நிகழ்ச்சியும் அதனால், கணிசமான செலவுகள் உண்டாகும். வீடு, மனை, பூமிபோன்றவற்றில் சீர்திருத்தம் செய்வீர்கள். உமது பெயரும் புகழும் ஓங்கும்.
சனி பகவானின் பத்தாம் பார்வை பகை- ரோக – கடன் ஸ்தானத்தில் பதிவதால், அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுதல், வாக்குவாதங்களின்போது தரக்குறைவாகப் பேசுதல், போன்றவை காரணமாக சிலரைப் பகைத்துக்கொள்ள நேரும். ஆரோக்கியம் சீராக இருக்காது. அடிக்கடி நோய் நொடிகள் ஏற்பட்டு உங்களை முடக்கிப் போடும். அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் . அதிக செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். பழைய கடன்களும் அவ்வப்போது தொல்லை கொடுக்கும். இது தவிர எதிரிகள் விலகுவர். உங்களுக்கு முன்னால், அவர்கள் மிகவும் பலவீனமடைந்து பின்வாங்குவர். கடன் தீரும். உங்களுடைய கவலைகள் சற்று குறையும். வீடுகட்ட, கார் வாங்க கடன் கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வருமானம் குறைவில்லாமல் இருக்கும்.
சனி பகவான் இந்த இரண்டரை வருட சஞ்சாரத்தில் மூன்று முறை வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.
(1). 9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் :
இப்போது சனி பகவான் வக்கிரமடைந்து சஞ்சரிக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் சில சிரமங்கள் ஏற்படும். தடைகளும் தாமதங்களும் ஏற்படும். அஷ்டம சனியின் பிடியிலிருந்து முழுவதுவதுமாக விலகிவிட்டோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாது. சனிபகவானின் சஞ்சாரம் உங்களுக்குப் பாதகமாக இருப்பதால், அவர் கொடுக்கும் தொல்லைகளை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். நோய் நொடிகள் என்று வந்துகொண்டிருக்கும். உரிய நேரத்தில் தக்க சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து விடுவீர்கள். உங்கள் வேலைகளை தொடர்ந்து கவனிப்பீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. ஆயினும் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணம் கிடைத்துவிடும். கொடுக்கல்- வாங்கலில் குளறுபடிகள் ஏற்படும். பழைய கடன்களைத் தீர்க்க புதிய கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் பிரச்சினைகள் தோன்றினாலும், ஓரளவுக்கு லாபம் கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடினமாக உழைத்து மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுவீர்கள். கடன் வசதியும் கிடைக்கும். கடன்கள் தடங்கலின்றிக் கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையே நல்ல உறவு நிலவும். பிள்ளையின் படிப்பு வகையில் அதிக செலவு ஏற்படும்.
(2). 16.2.13. முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:
இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரத்தில் இருக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் எதுவுமே நீங்கள் நினைப்பதுபோல் நடக்காது. நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும். நடப்பது வேறொன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எது சொன்னாலும் அது மற்றவர்களுக்கு தப்பாவே தெரியும். நீங்கள் சொல்லும் நல்ல யோசனைகூட வீணாகிப் போகும். தற்போது உங்களிடம் காணப்படும் கவனக் குறைவினால், செய்யும் காரியங்களில் அதிகமான குளறுபடிகள் காணப்படும். கைகால்களில் அடிபடுதல், முதுகுவலி கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பேற்படும். உங்களுடைய பொருளாதார நிலைமை சிறப்பாக இல்லையென்றாலும், நிதி நெருக்கடிகளை எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதில் சற்று தொய்வு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வீட்டுத் திருமணங்களில் குடுப்ம்பத்துடன் கலந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். உத்தியோகம் பார்ப்பவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படாது. கலைஞர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பு நிரந்தரமாக இருக்காது. ஒருநாள் இருக்கும் சந்தோஷம் அடுத்த நாள் இருக்காது. யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் காணாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி போயிருக்கும்.
(3). 3.3.14. முதல் 23.7.14. வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:
இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்த்க் காலக் கட்டத்தில் உங்களிடம் ஒரு நிலையற்ற போக்கு தென்படும். ஒரு நாள் சுறுசுறுப்பாக இருந்தால், இரண்டு நாட்கள் உம்மென்று உட்கார்ந்திருப்பீர்கள். ஒருநாள் உற்சாகம்; ஒரு நாள் கவலை என்று இருப்பீர்கள். நீங்கள் முடித்துவிடலாம் என்று லேசாக நினைத்த காரியங்கள் இழுத்துக்கொண்டே போகும். கடினமானது என்று நீங்கள் நினைக்கும் வேறு சில காரிய்ங்கள் சுலபமாக முடிவடையும். , ஒரு காரியத்தை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்; அதே சமயம் அடுத்த காரியயத்தை பாதியிலேயே நிறுத்திவிடுவீர்கள். ஒருநாள் கை நிறைய பணம் இருக்கும் இன்னொரு நாள் பத்துரூபாய்கூட இருக்காது. சின்னச் சின்ன செலவுக்குக்கூட தவிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அலட்சியம் காட்டாமல், முழு கவனம் காட்டினால்தான் லாபம் ஏற்படும் ; லாபம் இல்லையென்றாலும் நஷ்டத்திலிருந்தாவது தப்பிக்கலாம். ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்தவேண்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும் . அவைகளை தீர்க்கிறேன் பேர்வழி என்று இறங்கிவிட வேண்டாம். மனைவியோ குடும்பப் பெரியவர்கள் யாரோ தீர்த்துக்கொள்வார்கள். ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
இந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் இல்லாத காலங்களிலும் , மூன்றும் முடிந்த பிறகும், உங்களுக்கு சற்று ஆறுதலான காலமாக இருக்கும். நற்பயன்களாக நடக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்தும் பணம் வரும்; எதிர்பாராத் இடங்களிலிருந்தும் பணம் வரும். செலவுகளை சமாளிப்பதில் சிரமம் இருக்காது. நகை, நட்டு, விலை உயர்ந்த பொருட்கள், வசதிகளைப் பெருக்கும் சாதனங்கள், மின் பொருட்கள் முதலியவற்றை வாங்குவீர்கள். மனதில் குழப்பமின்றி தெளிவாக சிந்தித்து நல்ல முடிவாக எடுத்து வெற்றிக்கொடி நாட்டுவிர்கள். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் காணப்படும். அனைத்துவிதமான பலன்களும் நற்பலன்களாகவே இருக்கும்.
பரிகாரம்:
1. தத்தம் குலதெய்வங்கள், இஷ்ட தெய்வங்கள் மற்றும் குருமார்கள், சித்த புருஷர்கள் ஆகியோரை வணங்கவும்.
2. சனியின் குருவான பைரவ மூர்த்தி, ராம ஆஞ்சநேயர், அரசன்கோவில் சுந்தர மகாலட்சுமி, திருப்பட்டூர் புருஷோத்தம நாயகி; ஆகியோரை வழிபடவும்.
3. ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சித்த புருஷர்கள் , திருவக்கரை வக்கிர காளி ஆகியோரை வணங்கவும்.
4. பிரதோஷம், ஏகாதசி, அஷ்டமி, பைரவர், துர்க்கை பூஜைகள், நூல், தாமரை இவற்றின் திரியின் முலம் தீபம் ஏற்றுவது, லட்சுமி வழிபாடு யாவும் உகந்ததே.
5. குபேர கணபதி- பிள்ளையார்பட்டி; லிங்க வடிவில் உள்ள எந்திர சனீஸ்வரர் ஏரிக்குப்பம்; காயத்ரி விஷ்ணு துர்க்கையோடு உள்ள தனி ஸ்தலமான சிதம்பரம்; குபேரன் சங்கநிதி , பதுமநிதியோடு உள்ள சென்னை ரத்தின மங்களம் போன்ற இடங்களுக்குச் சென்று அர்ச்சனை ஆராதனைகள் செய்து வழிபாடுகளை மேற்கொள்ளவும்
6. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி கருங்குவளை சாற்றி ” ஓம் சனீஸ்வராய நமஹ ” என்று சொல்லி 9 முறை வலம் வந்து வணங்கவும்.
7. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு காராம் பசுவின் பாலினால், அபிஷேகம் செய்து ” ஓம் நம சிவாய நம ஓம் ” என்று சொல்லிக்கொண்டு 11 முறை வலம் வந்து வணங்கவும்.
8. தவறாமல் திருநள்ளாறு, குச்சானூர் முதலிய சனீஸ்வர ஸ்தலங்களுக்குச் சென்று வரவும்.
9. தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும்.
மீனம்

Posted Image
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருந்து வந்த சனி பகவான் இப்போது எட்டாமிடத்துக்கு அஷ்டம சனியாக வரப் போகிறார். ஏழாமிடத்தில் இருந்த சனி பகவான் பலவித சங்கடங்களைக் கொடுத்து வந்தார். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் சங்கடங்கள், உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு சக ஊழியர்களாலும் மேலதிகாரிகளாலும் சங்கடங்கள் என்று பலவித தொல்லைகளை அனுபவித்து வந்தீர்கள். இப்போது சனி பகவான் அஷ்டமத்து சனியாக சஞ்சரிக்கப் போகிறார். உங்க ராசிக்கு இயற்கையிலேயே அசுபர் சனீஸ்வரர். அப்படிப்பட்டவர் உங்க அஷ்டமத்தில் சஞ்சரிப்பது விபரீத யோகம் என்று கூறப்படும். இப்படிப்பட்ட சனிபகவான் உங்கள் ஆயுள் பலனைக் கூட்டுவார். கெட்டவர் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறும். தேவ குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு அசுர குருவில் ராசியில் அமைந்த சனீஸ்வரர் அசுப பலனைத் தரக்கூடும் தக்க வழிபாடுகளின் மூலம் எதிலும் ஜெயித்து வாழ முடியும். உங்கள் ராசிக்கு பனிரெண்டுக்குரிய சனி பகவான் 8ல் உச்சம் பெறுவதால், பாதிப்புகள் அதிகம் இருக்காது. ஆனாலும் அஷ்டம சனிக்கென்று சில பயமுறுத்தல்கள் இல்லாமல் இருக்காது. ஏழாம் இடத்தில் சஞ்சரித்த காலத்தில் கொடுத்த அதிருப்தியான பலன்களைவிட அதிக அளவில் அதிருப்தியான பலன்களைக் கொடுத்து உங்களைச் சஞ்சலப்படுத்துவார்.
சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சிலருக்கு உழைப்பதற்கே உருப்படியாக சந்தர்ப்பம் கிடைக்காது. வேலை தேடி அலைபவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்காது. அப்படியே வேலை கிடைத்தாலும் அது நல்ல ஊதியத்தைக் கொடுக்கும் வேலையாக இருக்காது. புதிதாக தொடங்க நினைத்தாலும் தாமதமும் தடையும் ஏற்படும். அப்படியே தொடங்கிவிட்டாலும், தொடக்கத்தில் மந்தமான போக்கே காணப்படும். முயற்சியின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும், தடையும் தடங்கலும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். ஏற்கெனவே சொந்தமாக தொழில் செய்துகொண்டிருப்பவர்கள் புதிய நெருக்கடிகளை சந்திப்பார்கள். கவனமாக இல்லாவிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி இருக்கும். தற்காலிக வேலை நிக்கம் செய்யப்படலாம் . விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படும். பணநெருக்கடி ஏற்படும். பெரிய செல்வந்தராக இருந்தாலும் இந்தக் காலக் கட்டத்தில் ‘ஐந்துக்கும் பத்துக்கும் ஆலாய்ப் பறப்பார்கள் ‘ என்பார்களே அதுபோல பணத்துக்கு நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க முடியாது. கொடுக்கல்-வாங்கலில் குளறுபடிகள் இருக்கும். கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு வாய்த் தகறாறு, அடிதடி என்று முடியும். குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். உடல் உபாதைகள் உண்டாகும். உரியவேளையில் செய்ய வேண்டியதை சரியாக செய்ய மாட்டீர்கள். மன பயம் இருக்கும். விரக்தி, விபரீத முடிவுகள் ,விரயங்கள், தடைகள் , தனக்கு எல்லாம் இருந்தும் எதையும் சாதிக்க முடியாதநிலை இப்படி சில இடையூறுகளுக்கு உள்ளாக நேரும். வெளிநாட்டு பயணம் கைகூடாது. அவ்வப்போது ஆரோக்கிய பாதிப்பு இருக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். நெருங்கிய உறவினரிடம் சுமுக நிலை குறையும். தன் பிள்ளை, பேரன்-பேத்திகள் இவர்களின் திருமண வைபவம் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு சந்தான பிராப்தி இவை எல்லாவற்றிலும் பூர்ண அம்சங்கள் இருக்காது.
இனி, சனி பகவானின் பார்வை பலன்களைப் பற்றிப் பார்க்கலாம். சனி பகவான் தன்னுடைய 3, 7, 10 இடத்துப் பார்வைகளால், உங்களுடைய ஜீவன- காரிய ஸ்தானம், தன-குடும்ப- வாக்கு ஸ்தானம் , பூர்வ புன்ணீய ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.
சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கலுடைய ஜீவன காரிய ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய வருமானத்திற்கு ஆதாரமான எதிலும் கடினமான உழைப்போ அல்லது பிரச்சினையோ அடிக்கடி ஏற்படும். ஒரு காரியத்தை செய்வதற்குள் நீங்கள் கசக்கிப் பிழியப்பட்டு விடுவீர்கள். சனி பகவான் உமது ராசிக்கு பத்தாம் வீட்டைப் பார்வை செய்வதால், தொழில்வளம் பெருகும். நேரடி கவனம் அவசியம். புதிய முதலீடு செய்ய கடன் கிடைக்கும். பழைய கடன் அடைபடும் .சிலர் தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவர். புத்திர பாக்கியம் ஏற்படும். மாமன் -மைத்துனர் வழியில் சுபச் செலவு ஏற்படும்.
சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய ராசிக்கு இரண்டாமிடத்தைப் பார்ப்பதால், வாக்கினால் ஜீவனம் புரிபவர்கள் அதிக லாபம் அடைவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணம் கையாளும் பணியில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், பணம் கையிழப்பு ஏற்படும்.
சனி பகவான் தனது ஏழாம் பார்வையினால், பணவரவுகளில் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார். நாணயம் பாதிக்கப்படும். குடும்பத்தில் வாக்குவாதங்கள், பிரிவினைகள், நிம்மதியின்மை போன்றவை ஏற்படும். பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையாது. வீண் வாக்குவாதம் செய்தல் தாறுமாறாகப் பேசுதல் போன்றவற்றால் பகை உண்டாகும்.
சனிபகவான் தன்னுடைய பத்தாம் பார்வையினால், உங்களுடைய பூர்வ- புண்ணிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். அவ்வப்போது மறதி, மந்தத்தன்மை, தாமதக்குணம், கவனக்குறைவு தவறான முடிவுகளை எடுத்தல், கோணல் மாணலாக சிந்தித்தல் போன்றவை ஏற்படும். இந்த நேரத்தில் தவறான முடிவுகளே உங்களுக்கு சரியான முடிவாகத் தெரியும். எது சரி, எது தப்பு என்று புரியாமல் தவிப்பீர்கள். பிரபலங்கள், பெரிய மனிதர்களின் தயவை நாடிச் சென்றாலும், அந்த முயற்சி சரிவர கைகூடாது. பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் தீரும். கணவன் (அ) மனைவி வழியில் அனுகூலம் கிட்டும். விரோதிகள் விலகிச் செல்வர். கோர்ட், கேஸ்களில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். நேரடி கவனம் செலுத்தினால், தொழிலில் அபிவிருத்தி கிட்டும். சுற்றத்தாரிடையே நிலவிய சங்கடம் விலகும். திருமணம், வளைகாப்பு முதலிய சுப நிகழ்வுகள் நிகழும்.
இந்த சனிபெயர்ச்சிக்குரிய இரண்டரை வருட கால கட்டத்தில் மூன்று முறை சனி வக்கிர சஞ்சாரம் செய்யவிருக்கிறார்.
அதற்குரிய பலன்களைப் பார்க்கலாம்.
(1).9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:
இப்போது சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் வம்பு சண்டைகள் தேடி வரும். ஒதுங்கிப் போய்விடுவது நல்லது. வாக்குவாதங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பதுபோல் விட்டுக்கொடுத்துப் போய் விடுங்கள். சமாதானவிரும்பியாக ஒரு தோற்றத்தைக் கொடுத்து பின்வாங்கிவிடுங்கள். கால் தவறிக் கீழே விழுதல், வாகனத்திலிருந்து கீழே விழுதல் போன்றவற்றால் ரத்தக் காயம் ஏற்படலாம். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. வரவேண்டிய பணம் மொத்தமாக வராமல், சிறிதுசிறிதாக வரும். அதனால் அதை உருப்படியாக செலவு பண்ண முடியாமல் போகும். கொடுக்கல்- வாங்கலில் மந்தமான போக்கு காணப்படும். வருமானம் தொடர்பான செலவுகளில் தடையும் தடங்கல்களும் ஏற்படும். எந்தக் காரியத்தையும் எளிதாக செய்து முடித்துவிட முடியாது. தீவிர முயற்சி தேவைப்படும். நேற்றுவரை உங்களுடன் இருந்தவர்கள் இன்று திடீரென உங்களைவிட்டு விலகிச் சென்று உங்களைப் பற்றித் தப்பாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் மந்தமான போக்கு நிலவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். வேலைப்பளு அதிகமாகக் காணப்படும். எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்காது. தொழிலாளர்கள் கிடைக்கவேண்டிய சம்பள உயர்வைக்கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கும்.. குடும்பத்தில் தாயார் அல்லது மனைவியால் பிரச்சினைகள் ஏற்படும். போதாக்குறைக்கு உறவினர்களும் வந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
(2). 16.2.13.முதல், 12.7.13.வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:
இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் செலவுகள் அதிகம் ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அளவில் குறைகள் ஏற்பட்டாலும் உங்கள் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படாது. உழைப்புக் கிரகமான சனிபகவான் பாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுடைய உழைப்பு எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காது. இந்த நேரத்தில் பாதிப் பலன் கிடைத்தாலும் சந்தோஷப்படுக்க வேண்டியதுதான். கொடுக்கல்- வாங்கலில் மனஸ்தாபம் ஏற்படும். இப்போது உங்களுடைய சிந்தனை சரியான பாதையில் செல்லாது. தவறான முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகள் சில விரயங்களை ஏற்படுத்தும். எதிலும் திட்டமிடாமல் செயல்படுவீர்கள். அதனால் வெற்றி பெறுவது அரிதாக இருக்கும். அதிகமாக அறிமுகமில்லாதவர்களிடமிருந்து நல்ல உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் பிஸியாக நடைபெறுவதாக தோன்றினாலும், லாபத்தைப் பார்க்க முடியாது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில், மேலதிகாரிகளிடமிருந்தும், சக ஊழியர்களிடமிருந்தும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். கலைஞர்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கடன் பிரச்சினைகள் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் மூலமாக சில நல்ல உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு.
(3). 3.3.13.முதல், 23.7.14. வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:
இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் பண வரவுகளில் தடைகளும் சறுக்கல்களும் ஏற்பட்டாலும் எப்படியாவது செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். நண்பர்களுடன் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்படும். பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. வாகனம் வாங்குதல், ஓட்டுதல், பழுது பார்த்தல் ஆகிய அனைத்திலும் குறைக்ளும் குளறுபடிகளும் ஏற்படும். ஆரோக்கியத்தில் குறைபாடுகள் வந்தாலும் அது உங்கள் செயல்பாடுகளைப் பாதிக்காது. நீண்ட தூரப் பயணங்கள், இடமாற்றங்கள் போன்றவை ஏற்படும். பொறுப்புகளின் சுமை அதிகமாகி உங்களைத் திணற வைக்கும். கடமைகளை சரிவர செய்ய முடியாது. தாமதமும் தேக்கமும் உண்டாகும். உங்களுடைய முக்கியத்துவம் குறையும். முன்னேற்றமும் தடைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் பார்ப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்க முடியாமல், கலங்கிப் போவார்கள். கடினமாக வேலைவாங்கி கசக்கிப் பிழிவார்கள். தாங்கமுடியாமல், கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் பற்றாக்குறைப் பிரச்சினை கணவ்ன்-மனைவிக்கிடையே பெரும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
இந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் நீங்கப்பெற்றபின் ஓரளவுக்கு நிலைமையில் முன்னேற்றம் தெரியும். உங்களிடம் குடிகொண்டிருந்த மந்தத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். உடம்பில் ஊக்கமும் ஊட்டமும் அதிகமாகும். எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். முடக்கநிலை மாறி முயற்சிகள் எடுக்க ஆரம்பிப்பீர்கள் . முட்டுக்கட்டைகள் நீங்கும். வசதிகளும் வாய்ப்புகளும் பெருகும். மதிப்பும் மரியாதையும் உயரும். பணவரவில் எந்தவித தடையோ தாமதமோ ஏற்படாமல் பொருளாதார நிலை மேம்படும். வற்றாத அருவி போல கைக்கு பணம் வந்துகொண்டே இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம், ப்ணி உயர்வு, சம்பள உய்ர்வு முதலியவை கிடைக்கும். திருமணப்பேச்சுவார்த்தைகள் தொடரும். திருமணமும் நிச்சயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பரிகாரம்:

1. குரு பிரதோஷம், சனிப் பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம் ஆகிய விஷேஷ தினங்களில் சிவாலயம் சென்று, அபிஷேக திரவியங்கள் முடிந்த அளவு வாங்கித் தரலாம். சிவ புராணம் படிக்கவும்.
2. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி வழிபட நன்று.
3 தசரதர் அருளிய தாரித்ரய தகன ஸ்தோத்திர தீபம் பாராயணம் செய்க.
4. வழிபாடுகளில் பிரதோஷம், குறிப்பாக வியாழன், சனியில் வரும் பிரதோஷம், இதே கிழமைகலில் வரும் தேய்பிறை அஷ்டமி, பைரவர், துர்க்கை, காளி வழிபாடு, ராகுகால சரபேஷ்வரர் வழிபாடு குபேர லட்சுமி பூஜை , காயத்ரி உபாசணை, பிரம்மா சரஸ்வதி வழிபாடு அல்லது மூவருமாக இணைந்த தாத்தாத்ரேயர் வழிபாடு, ஆஞ்சனேயர் உபாசனை, ஆறுமுகப் பெருமான் வழிபாடு யாவும் ஏற்றதே.
5. அஷ்ட கணபதி, மற்றும் சனீஸ்வரர் மகன் மாந்தி வழிபட்ட ஆலயம், நர்த்தன பள்ளியறை கொண்ட மணக்குழ வினாயகர், பாண்டி, எட்டு கைகளுடன் கூடிய துர்க்கை, எமகண்டீஸ்வரம் பிரம்மஸ்தான ஆஞ்சனேயர்., சுவாமிமலை முருகன் இதன் ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை, ஆராதனை , சனி, வியாழக் கிழமைகளில் வழிபடுதல் நலம்.
6. சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும் குச்சானூர் சனீஸ்வரர், ஆரணி ஏரிக்குப்பத்தில் எழுந்தளியுள்ள எந்திர வடிவிலான சனீஸ்வரர், கோளாறு நீக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் இவர்களைத் தரிசித்து தகுந்த பரிகாரங்களை செய்து வரவும்.
சுபம் உண்டாகும்.! வாழ்க வளமுடன்!

#6 வாதவூரான்

வாதவூரான்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,476 posts
 • Gender:Male
 • Location:London

Posted 27 September 2011 - 10:43 AM

இணைப்புக்கு நன்றி வீணா.எனக்கு எவ்வளவு எதிர்மறையா போட ஏலுமோ அவளவு போட்டிருக்கு.பாப்பம் எவளவு உண்மை எண்டு

#7 ஆரதி

ஆரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,393 posts
 • Gender:Female

Posted 27 September 2011 - 02:16 PM

இணைப்புக்கு மிக்க நன்றி வீணா :)

''வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்''


#8 வாத்தியார்

வாத்தியார்

  உதைபந்தாட்ட வீரன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,074 posts
 • Gender:Male

Posted 27 September 2011 - 04:40 PM

இடபத்திற்கும் கடகத்திற்கும் இடையில் மிதுனத்தைக் காணவில்லையே!!
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#9 வீணா

வீணா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 790 posts
 • Gender:Female

Posted 27 September 2011 - 05:16 PM

இடபத்திற்கும் கடகத்திற்கும் இடையில் மிதுனத்தைக் காணவில்லையே!!முதல் இணைக்க முடியவில்லை மிதுனம் மட்டும் இப்ப இணைச்சு இருக்கன் சரியா பாருங்க..

#10 வாத்தியார்

வாத்தியார்

  உதைபந்தாட்ட வீரன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,074 posts
 • Gender:Male

Posted 27 September 2011 - 05:36 PM

இணைப்பிற்கு நன்றி வீணா :)
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#11 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,898 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 September 2011 - 08:05 PM

இடபத்திற்கும் கடகத்திற்கும் இடையில் மிதுனத்தைக் காணவில்லையே!!


வாத்தியார் மிதுன ராசியா?
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#12 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 27 September 2011 - 08:07 PM

எனக்கு இனி மேல் அட்டமத்து சனியாம் ஆனால் இப்பவே தொடங்கிட்டுது ^_^
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#13 வாத்தியார்

வாத்தியார்

  உதைபந்தாட்ட வீரன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,074 posts
 • Gender:Male

Posted 27 September 2011 - 08:13 PM

வாத்தியார் மிதுன ராசியா?


மிதுனராசி தான் எப்போதும் நல்ல பலன்களைத் தருமாம் சிறி அண்ணா
அதனால் அதையே நானும் வாசித்து மனதைத் திருப்திப் படுத்தி கொள்கின்றேன். :)
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#14 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,695 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 27 September 2011 - 08:34 PM

இணைப்புக்கு மிக்க நன்றி
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#15 shanthy

shanthy

  முல்லைமண்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,238 posts
 • Gender:Female
 • Location:Germany

Posted 27 September 2011 - 09:39 PM

இணைப்பிற்கு நன்றி வீணா.
பூர்வீகச் சொத்துக்களில் சிக்கல் உண்டாகும் என்று, எனது பலனில் போட்டிருப்பது உண்மையே....
என்னுடைய சீதன வீட்டிலும், காணியிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கண் வைத்துவிட்டது.
அதனை தடுக்க ஒவ்வொரு புரட்டாசிச்சனியும் விரதம் இருந்து, எள்ளெண்ணை எரிக்கின்றோம்.


:D :D :D :D

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com /nesakkaram@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh

உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

http://www.nesakkaram.org

தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/

nesakkaram1.gifஎனது வலைப்பூ :- www.mullaimann.blogspot.com முல்லைமண் வலைப்பூ

 

Facebook :- https://www.facebook.com/rameshsanthi

Nesakkaram facebook :- https://www.facebook.com/pages/Nesakkaram-e-V/131188003615653?ref=hl

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -


#16 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,624 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 27 September 2011 - 10:10 PM

நமக்கு உயிருக்கு எல்லாம் ஆபத்து வரும் என்று போட்டிருக்காங்கப்பா. அது கூடப் பறுவாயில்லை.. தாய் கூடத் தேறாது என்றாப் போல எழுதிறாய்யா. ஏதோ.. இவையின்ர காதில.. சனியன் ஓதிவிட்ட கணக்கா எல்லோ இருக்குது கதை..! இன்னும் கொஞ்சம் என்றால்.. நாசாவிடம் சொல்லி.. சனிக்கிரகத்தின் மீது அறுகம் புல் வீசுவதே.. பரிகாரம் என்று எழுதினாலும் எழுதுவாங்க போல இருக்கே..!

தமிழனுக்கு பிறந்தது முதல் தான் சனியன்.. சிங்களவன் உருவத்தில நின்று ஆட்டுது.. இதில.. சாஸ்திரம்.. ராசிபலன்.. என்று.. இது வேற..! :lol: :icon_idea:

சிங்களவன்ர பயங்கரவாதப் பிரச்சாரத்தை விட மோசமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.. தன்னம்பிக்கையை தகர்க்கக் கூடியது.. இவ்வாறான எழுத்துக்கள். இவை குறித்து கவனமாக இருப்பது அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan, 27 September 2011 - 10:14 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#17 தப்பிலி

தப்பிலி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,336 posts
 • Gender:Male
 • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
 • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 27 September 2011 - 10:14 PM

நமக்கு உயிருக்கு எல்லாம் ஆபத்து வரும் என்று போட்டிருக்காங்கப்பா. அது கூடப் பறுவாயில்லை.. தாய் கூடத் தேறாது என்றாப் போல எழுதிறாய்யா. ஏதோ.. இவையின்ர காதில.. சனியன் ஓதிவிட்ட கணக்கா எல்லோ இருக்குது கதை..! இன்னும் கொஞ்சம் என்றால்.. நாசாவிடம் சொல்லி.. சனிக்கிரகத்தின் மீது அறுகம் புல் வீசுவதே.. பரிகாரம் என்று எழுதினாலும் எழுதுவாங்க போல இருக்கே..!

தமிழனுக்கு பிறந்தது முதல் தான் சனியன்.. சிங்களவன் உருவத்தில நின்று ஆட்டுது.. இதில.. சாஸ்திரம்.. ராசிபலன்.. என்று.. இது வேற..! :lol: :icon_idea:


தலைவரே
உங்கட ஜாதகத்தை இங்கு இணைத்து விடுங்களேன்.
வேறொன்றுமில்லை நிறைய பொருத்தங்கள் வந்திருக்குது. :lol:

#18 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,624 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 27 September 2011 - 10:18 PM


தலைவரே
உங்கட ஜாதகத்தை இங்கு இணைத்து விடுங்களேன்.
வேறொன்றுமில்லை நிறைய பொருத்தங்கள் வந்திருக்குது. :lol:


ஜாதகம் என்றால்.. அந்தக் கட்டம் கீறி.. ஏதோ வி.. ச.. பு.. வெ.. செ.. என்று தூசணம் எழுதி கணக்கா... எழுதி.. வைச்சிருப்பாய்ங்காளே.. அதுவா. நமக்கு அது கிடையாது..!

நான் நினைக்கல்ல.. எனக்குப் பொருத்தமானது இந்தப் பூவுலகில் இருக்க வாய்ப்பிருக்கென்று. :lol: :icon_idea:

Edited by nedukkalapoovan, 27 September 2011 - 10:19 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#19 குட்டி

குட்டி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,460 posts
 • Gender:Male

Posted 27 September 2011 - 10:35 PM

இது கொஞ்சம் கூட நியாயமா இல்லை <_<
பரிகாரப் பகுதியை வாசிக்க எனக்கு அவ்வளவா விளங்க இல்லை, ஆனால் ஒன்று மட்டும் புரியுது இதில பரிகாரம் பண்ண வெளிக்கிட்டால் எனக்கு வேலை போகும், அதுக்குப் பிறகு எவ்வளவு அலைஞ்சாலும் வேலை உருப்படியான வேலை கிடைக்காது, வேலை கிடைச்சாலும் நல்ல ஊதியமும் இல்லை என்று... :o :lol:
அது சரி தசரதர் யாரு? தசரதனா?? :blink:
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#20 யாயினி

யாயினி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,792 posts
 • Gender:Female

Posted 28 September 2011 - 02:47 AM

வேலை இல்லாத சாத்திரிமார் எழுதுவீனம் இதைப் போய் பார்த்து என்ன ஆகப்போகிறது... ரைம்வேஸ்ட் தான்.. :lol:

 

 யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]