Jump to content

ஈழமும் தமிழ் மன்னர்களும்


Recommended Posts

என் நேசத்துக்குரிய கள உறவுகளுக்கு :):):) எனது முதல்பதிவான சங்கிலி மன்னரின் வரலாற்றப் பதிவுக்குக் கிடைத்த பெருமளவிலான வரவேற்பும், முக்கியமாக ஜஸ்ரின், ஆண்டவர் ,இணையவன், போன்றோரது ஊக்குவிப்பாலும் இந்த பதிவான "ஈழமும் தமிழ் மன்னர்களும்" என்ற வரலாற்றுத் தொடரை ஆரம்பிக்கின்றேன். இந்தப்பதிவின் நோக்கம், இளயவர்கள், குறிப்பாக 80களுக்குப் பிறகு பிறந்த தலைமுறைக்கு, வரலாறுகள் சரியாகப் போய்ச்சேரவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.n,இந்தப் பதிவின் மூலம் அவர்களுக்கு தமிழ் இனத்தையும், அந்த இனத்தின் மொழியைபேசுகின்ற தமிழர்கள் யார்? எல்லோரும் கூறவதைப்போல நாம் ஒரு தேசிய இனம் இல்லாது ஒரு சிறகுழுமங்களா ? என்பதை தெளிவுபடுத்துவதாகும். பொதுவாக வரலாறு என்பது குளப்பமனது. அதில் பல வரலாற்றுப்பிறள்வுகளும் உண்டு. இயன்றவரையில் அவைகளைக் கருத்தில்க் கொண்டு நான் படித்த புத்தகங்களின் துணையோடும், தகவல் பெருங்களஞ்சியமான விக்கிபீடியாவின் தரவுகளையும் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.இதில் பிழைகள் இருந்தால் உரிமையுடன்

சுட்டிக்காட்டினால் திருத்திவிடுகின்றேன். இனி.......................................... :):)

Link to comment
Share on other sites

எமது தாயகபூமியை ஆண்ட மன்னர்களில் முதன்மையனவராக இவர் கருதப்படுகின்றார். இவர் ஒரு பேர்அரசராக இல்லாத ஒரு குறுநிலமன்னராக இருந்தாலும், இவரது ஆட்சி பரிபாலனமும், வீரம் என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் இனத்திற்கு இருந்தவர்., யாழ்ப்பாண இராச்சியத்தின் வன்னிப்பெரு நிலப்பரப்பின் வணங்காமுடி அரசர், அன்னிய படையெடுப்புகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர், இறுதியில் காட்டிக்கொடுப்புகளால் பலியான பண்டாரவன்னியன்.

இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் இணைந்த பகுதிதான் வன்னி நிலம் . வடக்கே கிளிநொச்சி, தெற்கே மதவாச்சி, கிழக்கு மேற்கு பகுதியில் கடலாகவும் உள்ள பிரதேசம் அது . அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் வன்னியின் தொன்மையை உணர்த்தியுள்ளன .

கி.மு.543-ஆம் ஆண்டு இந்திய நாட்டில் இருந்த மகத நாட்டு மன்னன் ஒருவன் , மிருக குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தெரியாமல் மரக்கலத்தில் சென்ற விஜயனும் அவனது கொடுங்கோல் ஆட்களும் இலங்கையின் இன்று புத்தளம் என்று அழைக்கப் படும் பகுதிக்கு அடுத்த தம்பப்பண்ணை என்ற இடத்தில் கரை சேர்ந்ததாக இலங்கையின் வரலாறு சொல்லும் நூலாக சிங்களர்களே ஒத்துக்கொள்ளும் மகாவம்சம் என்ற நூல் கூறுகிறது .

அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமழினத்தின் மூத்த குடிகளில் ஒன்றாக வரலாறு கூறும் நாகர் இன இளவரசி குவேனியைப பணிந்து நயந்து பின்னர் ஏமாற்றி மணந்தான் .அதோடு அதற்கு வடக்கே மாதோட்டம் என்ற பகுதியில் இருந்த தமிழ்க் குறுநில மன்னனோடு நட்பு கொண்டான் . அவன் மூலம் அன்று , தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களோடு நட்பு கொண்டு இலங்கை மன்னனாக தன்னை முடிசூட்டிக்கொண்டு முப்பதாண்டு காலம் ஆட்சி புரிந்ததாகக் கூறப் படுகிறது .

விஜயன் இலங்கைக்கு அகதியாய் வந்தபோது சிங்களம் என்றொரு இனமே அங்கிருக்கவில்லை. ஆனால் தமிழினத்தின் மூத்த குடிகள் இருந்தனர்.

உண்மையில் “சிங்களம்’ என்பதே மொழி, இனம், பண்பாடு சார்ந்த சொல் அல்ல. சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை என்று பொருள் . அக் காலத்தில் கடலோடி வாணிபம் செய்தோர் அத் தீவுப் பகுதியை அதிகம் தேடிப் போனதே அங்கு கறுவாப்பட்டை என்ற தாவரம் கிடைக்கும் என்பதற்காகத்தான். கறுவாப்பட்டை அதிகம் கிடைத்ததால் அந் நிலப்பரப்பு சிங்களத் துவீபம் என அழைக்கப் பட்டது . புவியியலாளர் டாலமி இலங்கையில் தமிழர் பூமியை தனியாக காட்டி தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக் குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த இனமுமோ அப்போது இருந்ததாக அவர் கூறவில்லை .இருந்ததற்கான சான்றும் இல்லை .

கி.மு.205-வாக்கில் வட தமிழகம் தொண்டை நாட்டில் இருந்து ஏலேலன் என்ற இளவரசன் பெரும் படையுடன் திரிகோண மலைக்கு வந்தடைந்து மொத்த இலங்கைக்கும் தன்னை அரசனாய் அறிவித்தான். நடுநிலை தவறாமல் நீதி, நியாயம் , அருள், ஆண்மை, அறிவுடன் இலங்கைத் தீவு முழுமைக்கும் நல்லாட்சி தந்த ஏலேலன்தான் இலங்கைத் தமிழ் மன்னன் எல்லாளன் என்று அழைக்கப் படுகிறான் .

பிரபாகரன் கூட தனது போராட்ட அடையாளமாய் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்மன்னன் ஏலேலனை நிறுத்தவில்லை . பின்னாளில் வெள்ளைகாரர்கள் ஆட்சியை எதிர்த்து போரிட்டு இன்று போலவே அன்றும் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வீரமரணம் தழுவிய வன்னி நில மன்னன் பண்டார வன்னியனைத்தான் தனது போராட்டத்தின் அடையாளமாகக் குறிப்பிட்டார் . இன்றும் பண்டார வன்னியனின் அடையாளங்கள் சிதைக்கப் பட அதுதான் முக்கியக் காரணம் .

ஏலேலன் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்ப் பேரரசன்.ஆனால் பண்டார வன்னியனோ பாரம்பரியமாய் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சிறு நிலப்பரப்பில் தன்மதிப்போடும், சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய தமிழ் குறுநில

மன்னன்

பண்டார வன்னியன் காலத்துக்கும் முன்பே , 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் அவர்களால் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள்தான் . டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவைக் கைப்பற்ற வந்த போதே தமிழர் ஆட்சி அங்கு நிலவியது என்பதை அவர்களின் சிலர் எழுதிய குறிப்பு ஏடுகளில் காணலாம்

1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் , "டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் புரிந்திருக் கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் வேறு எங்கும் அவர்கள் காணவில்லை" என்று குறிப்பிடுகிறார் .

இலங்கையின் வரலாற்றில் திருகோணமலையைக் கைப்பற்றவே பலரும் போரிட்டு மடிந்தது வழக்கம் . அதே காரணத்துக்காக பண்டார வன்னியன் வாழ்ந்த அதே காலத்தில் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் சண்டை நடந்தது . அந்த நேரத்தில் இருந்த சக்தி வாய்ந்த ஆங்கிலேயப் பிரதி நிதி ராபர்ட் நாக்ஸ் என்பவன் கண்டி மன்னனால் மூதூர் என்ற ஊரில் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட் எப்படியோ சிறையில் இருந்து தப்பி அனுராதபுரத்தை நோக்கி ஓடினான் . அனுராதபுரத்தை அடைந்தவுடன் அங்குள்ள மக்களையும் ஆட்சியையும் பார்த்து வியப்படைந்தான் .அங்கு ஆட்சி செய்த மன்னனும் தமிழ் மன்னன்தான் . அவன் பெயர் கைலாய வன்னியன் .

ராபர்ட் நாக்ஸ் தனது குறிப்பேட்டில் தான் வடக்காக தப்பிச்சென்ற போது வயல்வெளிகளை எருதுகள் உழுவதையும் அங்குள்ள மக்கள் சிங்கள மொழியை பேசவில்லை என்றும் அவர்களுக்கு சிங்கள மொழியே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளான் .

மேலும் அங்கு கயிலாய வன்னியன் ஆட்சிசெய்த நாட்டை கயிலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான் ராபர்ட் நாக்ஸ்.

டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னி மக்கள் இடைவிடாமல் போர் நடத்தி வந்தனர். அவர்களின் வழியில் வந்த மறக்க முடியாத மாவீரன்தான் பண்டார வன்னியன்.

வெள்ளையர்கள் முல்லைத்தீவில் அமைத்திருந்த கோட்டையை முற்றாக அழித்து நிர்மூலம் செய்தவன் பண்டார வன்னியன் .அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்

முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் பண்டார வன்னியன் . தனது சகோதரர்களை முக்கிய பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான் . தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும் தனது இறுதி சகோதரன் பெரிய மன்னன் என்ற பெயருடையவனை தளபதியாகவும் நியமித்திருந்தான் .

அதே நேரம் காக்கை வன்னியன் எனும் இன்னொரு மன்னன் வன்னியின் இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .

பண்டாரவன்னியனுக்கு நளாயினி என்ற சகோதரியும் உண்டு . நளாயினி தமது அவைப புலவர் மீது காதல் கொண்டிருந்தாள்.

மன்னன் காக்கை வன்னியன் நளாயினி மீது காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்து தரும்படி பலமுறை பண்டார வன்னியனுக்கு சேதி அனுப்பியிருந்தான் .ஆனால் பண்டாரவன்னியன் எதோ காரணத்தால் தயங்கி இருக்கிறான் .

இந் நிலையில் புலவரும் நளாயினியும் காதல் கொண்டுள்ளதை கண்ட காக்கை வன்னியன் கோபம் கொண்டு புலவருடன் போரிட்டான் . போரில் வென்றது புலவன் ,எனினும் பக்கத்து நாட்டு மன்னன் என்பதாலோ என்னவோ , மன்னனை உயிரோடு திருப்பி அனுப்பினான் அனுப்பினான் .

அதன்பின்புதான் புலவனும் அரச குலத்தில் வந்தவன் என்பது பண்டார வன்னியனுக்குத் தெரிந்திருகிறது . எனவே தனது சகோதரியின் காதலுக்கு சம்மதித்தான் பண்டார வன்னியன் .

விஷயம் அறிந்த காக்கை வன்னியன் பொருமினான் . பண்டாரவன்னியன் மீது வெளையர்கள் பல முறை படை எடுத்து தோல்வி அடைவதைப பார்த்த காக்கை வன்னியன் , தன் ஆசையின் தோல்விக்குப் பழி தீர்க்க வெள்ளையர்களுடன் சேர்ந்து சதி செய்து பண்டார வன்னியனை கொல்ல திட்டமிட்டான் .

நல்லவன் போல நடித்து பண்டார வன்னியனிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொண்டு சமயம் பார்த்து ஆங்கிலப் படைகளிடம் பண்டார வன்னியனை சிக்க வைத்தான்

பலமுறை படை எடுத்து வந்தும் வெல்ல முடியாத பண்டார வன்னியனை மூன்று ஓரத்தில் இருந்தும் படை எடுத்து வந்து தாக்கி வென்றனர் .

1803 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் கற்சிலைமடு என்ற இடத்தில் அங்கிலேய தளபதி ரிபேக் என்பவனால் பண்டார வன்னியன் கொல்லப்பட்டான் .

எனினும் அவனது வீரத்தை வியந்து அவனைக் கொன்ற அந்த ஆங்கிலேயத் தளபதி ரிபேக்கே பண்டார வன்னியனுக்கு சிலை ஒன்றும் நடுகல் சின்னமும் வைத்தான்

ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை .

முல்லைமணி என்பவர் மற்றும் அவர்களின் சக நண்பர்களின் முயற்சியின் விளைவாய் எத்தனையே ஆண்டுகளுக்குப் பிறகு 2002ம் ஆண்டு கற்சிலைமடுவில் பனை மரக் காட்டில் பண்டார வன்னியனுக்கு புதிய சிலை ஒன்றும் நிறுவப்பட்டது .

பண்டார வன்னியன் ஆண்ட நாட்டின் எல்லையாக இருந்த வற்றாப்பளையில் உப்பு நீரிலே விளக்கெரியும் கண்ணகி அம்மன் ஆலயம் ஒன்றும் இருந்தது .இப்போது அவை எல்லாம் என்ன ஆயின என்பதே தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல முயற்சி. இது இளையோருக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் போய்ச் சேர வேண்டியது. இவையெல்லாம் இளையோர் அல்லாத என் வயதினருக்குக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டார வன்னியனை பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி. அவரின் சமாதியையும், அந்த கல்தூண் பற்றிய படமும் எங்கோ கண்ட நினைவு...அவை இன்னமும் அழியாமல் உள்ளதா? :unsure:

படமிருந்தால் இணைக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

எனினும் அவனது வீரத்தை வியந்து அவனைக் கொன்ற அந்த ஆங்கிலேயத் தளபதி ரிபேக்கே பண்டார வன்னியனுக்கு சிலை ஒன்றும் நடுகல் சின்னமும் வைத்தான்

ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை .

முல்லைமணி என்பவர் மற்றும் அவர்களின் சக நண்பர்களின் முயற்சியின் விளைவாய் எத்தனையே ஆண்டுகளுக்குப் பிறகு 2002ம் ஆண்டு கற்சிலைமடுவில் பனை மரக் காட்டில் பண்டார வன்னியனுக்கு புதிய சிலை ஒன்றும் நிறுவப்பட்டது .

பண்டார வன்னியன் ஆண்ட நாட்டின் எல்லையாக இருந்த வற்றாப்பளையில் உப்பு நீரிலே விளக்கெரியும் கண்ணகி அம்மன் ஆலயம் ஒன்றும் இருந்தது .இப்போது அவை எல்லாம் என்ன ஆயின என்பதே தெரியவில்லை.

பண்டார வன்னியனை பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி. அவரின் சமாதியையும், அந்த கல்தூண் பற்றிய படமும் எங்கோ கண்ட நினைவு...அவை இன்னமும் அழியாமல் உள்ளதா? :unsure:

படமிருந்தால் இணைக்கவும்.

img157.jpgTu_22161.jpg%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2588++%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpgn1032465924_30300988_2387.jpg

பண்டாரவன்னியனின் நினைவுச் சின்னங்களை சென்ற ஆண்டளவில் சிங்கள இராணுவம் இடித்து விட்டது.

தமிழர்களின் வரலாற்று எச்சங்களை மிக வேகமாக அழித்துக் கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு சான்று.

இப்போ.... காணுமிடமெல்லாம் புத்தர் சிலை தான்....

Link to comment
Share on other sites

img157.jpgTu_22161.jpg%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2588++%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpgn1032465924_30300988_2387.jpg

பண்டாரவன்னியனின் நினைவுச் சின்னங்களை சென்ற ஆண்டளவில் சிங்கள இராணுவம் இடித்து விட்டது.

தமிழர்களின் வரலாற்று எச்சங்களை மிக வேகமாக அழித்துக் கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு சான்று.

இப்போ.... காணுமிடமெல்லாம் புத்தர் சிலை தான்....

நன்றிகள் சிறியர்

Link to comment
Share on other sites

இலங்கையின் யாழ்பாண , கண்டி , கோட்டே , இராச்சியங்களை ஓரேகுடையின் கீழ் கொண்டு வந்து, அனுராதபுரத்தை தனது இராசதானியின் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஒரேயொரு தமிழ் மன்னர். ஒரு அரசும் அதன் அரசரும் குடிமக்களிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தனது நடத்தையால் எமது இனத்தற்குக் காட்டியவர். நீதியைத் தனது கண்களாக பாவித்தவர், நீதிக்காகத் தனது மகனையே உயிர்க்கொடையாகத் தந்தவர். இவரும் இறுதியில் போர்விதிகளை மீறிய போர்முறையினால் துட்டகாமினி ( துட்டகெமுனு ) யினால் களப்பலியானார். அவர்தான் ஏலேலன் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்பட்ட மன்னர் எல்லாளன். இனி...................

மாமன்னர் எல்லாளன் ( ஏலேலன் )

எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆவான். இவன் "பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்" சேர்ந்தவன் என்று மகாவம்சம் கூறுகிறது.

ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை. ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் சிங்கள இனத்தின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.

கி.மு 177 ஆம் ஆண்டு சேனன், குத்திகன் ஆகிய தமிழ் மன்னர்களால் அனுராதபுர அரியணை சூரத்தீசன் எனப்படும் சிங்கள மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அரியணையை இழந்த சூரத்தீசன் தப்பி ஓடினான். அரியணையை கைப்பற்றிய சேனனும் குத்திகனும் நீதியான ஆட்சி நடத்தியதாக மகாவம்சம் கூறுகிறது. பெளத்த பிக்குகளும் அவனை ஆதரித்திருந்தனர். 22 வருடங்களின் முடிவில் கி.மு 155 ஆம் ஆண்டு சிங்கள இளவல் அசேலனின் சேனை அனுராதபுரத்தினை கைப்பற்றிக்கொண்டது. அசேலன் என்பவன் சூரத்தீசனின் தமையனான மகாசிவனின் ஒன்பதாவது மகன் ஆவான்.

எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின்நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது. எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் சயன அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.

எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திஸ்ஸவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.

பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.

ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.

மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். 'தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்' என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தான்.

எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக விகாரைமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரைமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.

கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டையொன்றிற்கு பொறுப்பாகவிருந்த தளகர்த்தன் ஒருவனுடன் தன் உடலழகை காட்டி தவறான உறவுக்கு அழைத்துச்சென்று துட்டகாமினியின் சேனைகள் அக்கோட்டையை தாக்குவதற்கு வழி சமைத்துக்கொடுக்கிறாள். இதை மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது. இவ்வாறு பெண்களின் ஆடவர்களுடனான தவறான உறவுகளும் மன்னர்கள் பல திருமணங்கள் செய்வதையும் நியாயப்படுத்தி கூறும் மகாவம்சம் பெளத்த மக்களை ஆரம்பகாலம் முதலே தவறாக வழிநடத்தியுள்ளதெனலாம்.

உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான். பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற தன் ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான். திருமணத்தின் பின் துட்டகாமினியைக்கருவில் கொண்டிருந்த போது தன் கணவனிடம் மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருந்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரிய தேன் அடை

எல்லாளனின் படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக்கழுவிய நீரை அருந்த வேண்டும்

அநுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலை கட்டி அணிய வேண்டும்

இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.

துட்டகாமினி காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு 'வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்' என்றான்.

இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்சேனயுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். நீண்ட நாள் தொடர்ந்த போர் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சலிப்படைந்த துட்டகாமினி இறுதியில் வயது முதிர்ந்த நிலையிலிருந்த 'கிழப்புலி' எல்லாளனை தனிச்சமருக்கு வரும்படி வஞ்சக அழைப்பை விடுத்தான். நிகழ்ந்த போரில் எல்லாளன் தோல்வியுற்று இறந்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் பாத்தேன்.பதிவுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

செண்பகப்பெருமாள் ( சப்புமால்குமாரய்யா )

யாழ்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத் தகுந்தவர். பிறப்பால் பௌத்தமதத்தவரானாலும், இடையில் இந்து மதத்திற்கு மாறி, இந்து சமயத்திற்கு பெருந்தொண்டாற்றியவர். நல்லூரைத் தலைநகரகக் கொண்டு நீதியான ஆட்சியைச் செய்து வந்தார். இவரே போத்துக்கேயரால் துவம்சம் செய்யப்பட்ட நல்லூர் முருகன் கோவிலை மீளக்கட்டி அழகு பார்த்தார். இவர் தான் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் சப்புமால்குமாரய என்றும், தமிழ் வரலாற்று ஆசிரியர்களால் அறியப்பட்ட செண்பகப்பெருமாள் என்ற மாமன்னன் ஆவார் இனி...................................

செண்பகப் பெருமாள் என்கின்ற சப்புமல் குமாரயா, ஆறாம் புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசை ஆண்டவன்.

ஆறாம் பராக்கிரமபாகு இலங்கையின் கோட்டே இராச்சியத்தை ஆண்ட காலத்தில், உடல் வலிவும், போர்த்திறனும் கொண்ட வீரனொருவன் மலையாள நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தான். இவனைத் தன் கீழ் சேவைக்கு அமர்த்திக்கொண்ட பராக்கிரமபாகு, இவன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக அரசகுலப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனே சப்புமால் குமாரயா என்ற சிங்களப் பெயரால் வழங்கப்பட்ட செண்பகப் பெருமாள் ஆவான். இவனே பிற்காலத்தில் சிறி சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

ஆறாம் பரக்கிரமபாகுவுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாதிருந்ததால் செண்பகப் பெருமாளும், அவனது தம்பியும் அரசனுடைய வளர்ப்புப் பிள்ளைகளாகவே வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களும் அரச குலத்தாருக்குரிய பலவிதமான கலைகளையும் கற்றுத் தேறியிருந்தனர். எனினும் பிற்காலத்தில் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஆண் பிள்ளையொன்று பிறந்தபோது, அப்பிள்ளையின் அரசுரிமைக்கு செண்பகப் பெருமாள் தடையாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்டதால் அவனை கோட்டே அரசிலிருந்து வெளியேற்ற அரசன் முடிவு செய்ததாக வரலாற்றாய்வாளர் சிலர் நம்புகிறார்கள்.

செண்பகப் பெருமாளை வெளியேற்றும் பணியைத் தந்திரமாக முடிக்க எண்ணி, யாழ்ப்பாண அரசின் கீழ் அமைந்திருந்த வன்னிச் சிற்றரசர்கள் மீது படையெடுக்குமாறு செண்பகப் பெருமாளை அரசன் பணித்ததாகக் கூறப்படுகின்றது. வீரனான செண்பகப் பெருமாள் வன்னியை வென்று மீண்டான். தொடர்ந்து யாழ்ப்பாண அரசனையும் வெல்லுமாறு அவன் பணிக்கப்பட, யாழ்ப்பாணத்துக்குப் படை நடத்திச் சென்ற அவன், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண்டிருந்த கனகசூரிய சிங்கையாரியனை வென்று கோட்டே திரும்பினான். பராக்கிரமபாகு, யாழ்ப்பாணத்தை ஆளும்படி சப்புமால் குமாரயாவை அனுப்பிவைத்தான்.

யாழ்ப்பாணத்தில் செண்பகப் பெருமாள்1450 ஆம் ஆண்டில் செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை ஆளத் தொடங்கினான். நல்லூரில் தலைநகரைக் கட்டியவன் இவனே என்று சிலர் கருதுகிறார்கள். சைவ சமயத்தைச் சேர்ந்தவனான இவனே, நல்லூர்க் கந்தன் ஆலயத்தை அமைத்தவன் என்றும் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இவனது ஆட்சி 17 ஆண்டு காலம் நீடித்தது.

1467ல், தனது பேரனான ஜெயவீரன் என்பவனுக்குக் கோட்டே அரசைக் கொடுத்துவிட்டுப் ஆறாம் பராக்கிரமபாகு காலமானான். இதனையறிந்த செண்பகப் பெருமாள் கோட்டேக்குச் சென்று ஜெயவீரனைத் தோற்கடித்து சிறி சங்கபோதி புவனேகபாகு என்னும் அரியணைப் பெயருடன் கோட்டே அரசனானான்.

கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.

செண்பகப் பெருமாளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கதை புத்தகள் படிப்பது என்றால், நல்ல விருப்பம் சிறு வயதில், அதிலும் வரலாற்று மன்னகளின் கதை என்றால் செல்லி வேலையில்லை. நான் படசாலையில் படிக்கும் போது எங்கட Library Teacher ஐ கண்டால் கன பேருக்கு பயம் (அவாவுக்கு பட்ட பெயரே காளி, Library Table முழுக்க அந்த ஆசிரியையின் பட்ட பெயர் கிறுக்கி இருக்கும்), ஆனால் எனக்கு நல்ல friend, அவவே நல்ல புத்தகங்கள் தேடி தருவா, அடிகடி Library Card முடிந்து மற்றியவர்களில் நானும் ஒருவன், பத்தாம் வகுப்பில் இருந்து இன்றுவரை பென்னியின் செல்வன் பல தடவை வாசித்துவிட்டேன், எனக்கு மிகவும் பிடித்த கதா பாத்திரம் வந்தியதேவன். நான் கதை புத்தகங்கள் வசிக்கும் போது, அவற்றுடன் ஒன்றிவிடுவேன்,

Komagan நன்றாக இருக்கிறது தொடருங்கள் உங்கள் பதிவுகளை

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண இராச்சியதின் குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவர்.தமிழுக்கும் அதன் வளர்சிக்குமான பணியில் இவரது பங்கு மகத்தானது. இவர் ஒரு கவிஞருமாவார்.இவரும் நல்லூரையே தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்துவந்தார்.

இனி...........................

சிங்கைபரராசேகரன்

சிங்கை பரராசசேகரன் சிறுவனாக இருந்த போது இவனது தந்தையாகிய கனகசூரிய சிங்கையாரியன் பகைவனான சப்புமால் குமாரயாக்கு அஞ்சி தொண்டை நாட்டில் இருக்கும் திருக்கோவலூர்க்கு இவனோடும், இவன் தம்பியோடும் மற்றும் பிற உறவினரோடும் தப்பிச் சென்று வாழ்ந்து வந்தான். திருக்கோவலூரில் வாழ்ந்த காலத்தில் கனகசூரிய சிங்கையாரியன் தனது மைந்தருக்கு தொண்டைமண்டலப் புலவன் ஒருவன் மூலம் தமிழ் கற்பித்தான் என்பர். 17 ஆண்டுகள் கழித்து கனகசூரிய சிங்கையாரியன் தனது மகன்களோடு சேர்ந்து படை திரட்டி வந்து, யாழ்ப்பாணத்தை மீட்டு மீண்டும் 1467 ஆம் ஆண்டு அரசன் ஆனான். 11 ஆண்டுகள் அரசுபுரிந்து இறந்த போது இளவரசன் ஆகிய சிங்கை பரராசசேகரன் அரசன் ஆனான்.

சப்புமால் குமாரயாவின் சிங்களப்படைகள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தகாலத்தில் தமிழரின் செல்வத்தை சூறையாடியும் மற்றும் போர்க்காலத்தில் கோவில்கள் கோட்டைகள் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றுக்கு பெரும் சேதம் விளைவித்தனர் என்பது, சப்புமால் குமாரயா தமிழரை வென்றதை, பௌத்த பிக்கு ஒருவரால் சிங்களத்தில் புகழ்த்து பாடப்பட்ட கோகிலா ஸந்தோஸய (குயில் விடுதூது) என்னும் நூல் கூறும். சிங்களத்தினால் யாழ்ப்பாண தமிழ் அரசுக்கு விளைவிக்கப்பட்ட சேதங்களை திருத்தி மிண்டும் போலிவுறச் செய்தவன் சிங்கை பரராசசேகரனே. இவன் அரசு கட்டிலேறிய கணத்தில் இருந்தே யாழ்ப்பாண அரசின் நலனை காப்பதில் மிக தீவிரமாக இருந்து வந்தான் என்பர். யாழ்ப்பாண அரசின் வருவாயை பெருக்கிக் கொள்ளும் பொருட்டு மாந்தை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை போன்ற துறைமுகங்களை புதுப்பித்து மீண்டும் பிற நாடுகளோடு வணிகம் இடம்பெற வழி வகுத்தான். கடல் வழி வணிகத்தையும் யாழ்ப்பாண அரசுக்கு பெரும் வருவாயிட்டித்தரும் மன்னார் முத்துக்குளிக்கும் கடல்ப் பரப்பையும், பாதுகாக்கும் வண்ணம் கடல்படையை மேல்கூறிய துறைமுகங்களில் நிறுத்திவைத்தான். மேலும் சிங்கள அரசுகளால் வரக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கும் வண்ணம் மிகுந்த முன்னெச்சரிக்கையொடு தரைப்படைகளை புத்தளம்,மாந்தை, திருகோணமலை மற்றும் வன்னி போன்ற இடங்களில் அரணமைத்து நிறுத்திவைத்தான். மிக குறுகியகாலத்தில் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் யாழ்ப்பாண அரசை கட்டியெழுப்பி சாதனை நிகழ்த்தியது மடடுமின்றி தமிழ்த் தொண்டாற்றி யாழ்ப்பாணத்தில் கல்வி வளர்ச்சி அடைவதுக்கு வித்திட்டதும் இவனே ஆகும்.

திருக்கோவலூரில் வாழ்ந்த காலத்தில் 14ஆண்டுகள் ஒரு புலவரிடம் தமிழ் கற்று இவனும் இவன் தம்பியாகிய சிங்கை செகராசசேகரனும் தமிழில் புலமை எய்தினர் என்பர். இவனும் இவன் தம்பியும் தமிழை வளர்க்கும் பொருட்டு முதல் யாழ்ப்பாண தமிழ் சங்கத்தை நிறுவினர். மேலும் பல பாடசாலைகளை உருவாக்கி கல்வியறிவை யாழ்ப்பாணத்தில் பரப்பினர். சப்புமால் குமாரயாவினால் அழிக்கப்பட்ட சரசுவதி மகாலயம் என்னும் நூலகத்தை புதுபித்துக் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நிறுவி இதற்கு வேண்டிய நூல்களை இராமேஸ்வரத்தில் இருந்து தமிழ் மற்றும் வடமொழியில் படியெடுக்கப்பட்ட பல ஆயிரம் அரிய நூல்கள் சரசுவதி மகாலயம் என்னும் புதிய நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டன. இந் நூலகம் கவி அரங்கேற்றிப் பரிசில் பெறும் பொருட்டு யாழ்ப்பாணம் வந்த புலவர் பெருமக்களுக்கு பெரிதும் உதவியது என்று கூறுவர். தமிழ்க் கடவுளாகிய முருகனைப் பாடிய அருணகிரிநாதர் யாழ்ப்பாணம் வந்தபோது பாடியதாக கூறப்படும் திருப்புகழ்கள் பல இங்கு வைக்கபட்டிருந்தன. சிங்கை பரராசசேகரனும் கவி பாடுவதில் மிகுந்த ஆற்றலுடையவனாக இருந்தான்.இவனும் சில ஆயிரம் தனி நிலைச் செய்யுள்களை பாடி உள்ளான், அவைகளும் இந் நூலகத்தில் வைக்கப்படிருந்தன. மிக மிக அரிய நூல்களை அதீதம் கொண்டிருந்த இந்த நூலகம் மிக துயரமான வகையில் 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் தாக்குதலில் அழிக்கப்பட்டது. இவனால் கூறப்பட்ட செய்யுள்கள் சில இக்காலத்தில் கிடைத்துள்ளன.

இவன் தனது தம்பியாகிய சிங்கை செகராசசேகரனோடு சேர்ந்து தமிழ்க் கல்விக்கு மட்டுமின்றி வேறு துறைகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டனர். குறிப்பாக மூலிகை மருத்துவ துறை வளரும் பொருட்டு, சிறந்த மூலிகை மருத்துவனான சிங்கை செகராசசேகரனோடு சேர்ந்தது யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் 45 ஏக்கர் நிலத்தில் மூலிகை மருத்துவ தோட்டத்தோடு கூடிய மூலிகை மருத்துவ நிலையம் ஒன்றை நிறுவினான்.

பிற்காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் குடியுள் நடந்தேறிய துயர நிகழ்ச்சிகளுக்கும் குழப்பங்களுக்கும் வழி வகுத்தது எனலாம். இவனுக்கு இரு மனைவிகளும் ஒரு ஆசை நாயகியும் இருந்தனர். மனைவிகளில் மூத்தவரும் பட்டத்துராணியுமாக இருந்தவர் இராஜலச்சுமி அம்மையார். இவர் சோழகுடியில் தோன்றியவர் என்பர். சோழப் பேரரசு 13ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்த பின் அக்குடியை சேர்ந்தவர்கள் சிலர் தமிழகத்தில் சில இடங்களில் குறுநில மன்னராய் திகழ்ந்தனர் என்பதை தமிழக வரலாறு கூறும். இது போன்ற ஒரு சோழ குறுநில அரசகுடியில், இராஜலச்சுமியம்மையார் இளவரசியாக பிறந்தார் போலும். இவருக்கு சிங்கவாகு, பண்டாரம் என இரு மைந்தர்கள் இருந்தனர்.

சிங்கை பரராசசேகரனின் இரண்டாவது மனைவியாகவும் இளையராணியாகவும் திகழ்ந்தவர் வள்ளியம்மையாராவர். இவர் யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த பிரபுத்துவ மரபாகிய பாண்டிமழவன் வழித் தோன்றிய அரசகேசரியின் மகளாவார். இந்த அரசகேசரியின் மகன் வழிப் பேரன் தான் தமிழில் இரகுவமிசம் பாடிய அரசகேசரி என்பர் சிலர். வள்ளியம்மைக்கு முறையே பரநிருபசிங்கன், காசி நயினார், பெரியபிள்ளை என்று மூன்று மகன்களும் மரகதவல்லி என்று ஒரு மகளும் இருந்தனர். இம் மரகதவல்லியின் மணவாளனே இரகுவமிசம் பாடிய அரசகேசரியாவார்.

கடலில் முத்துக்குளிக்கும் மணவர்களை மேற்பார்வை செய்ய சென்றபோது, சிங்கை பரராசசேகரன் 'மணவ குடியிற் மலர்ந்த மல்லிகை' என்று அழைக்கப்படும் மங்கத்தம்மாளின் அழகில் மயங்கி, அவள் மிது மையல் கொண்டு அவளை தனது ஆசை நாயகியாக்கிக்கொண்டான். இவர்களுக்கு பிறந்தவர்கள் சங்கிலியன் என்னும் மகனும் பரவையார் என்ற மகளுமாகும்.

சிங்கை பரராசசேகரன் தனது பிள்ளைகள் மிது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தமையால், சங்கிலியனின் தவறான போக்கை கண்டிக்கவில்லை என்பர்.மன்னன் மாசிமகம் கொண்டாட கும்பகோணம் சென்றபோது, அங்கு உள்ளூர் அரசன் ஒருவனை, சங்கிலியன் அவமதித்ததால் அவன் சினம் கொண்டு இவர்களை சிறையிலிட்டிருந்தான். தந்தையையும் தம்பியாகிய சங்கிலியனையும் படையுடன் சென்று மீட்டு வந்தான் பரநிருபசிங்கன். சிங்கை பரராசசேகரன் இதனால் மகிழுந்து மகனாகிய பரநிருபசிங்கனுக்கு ஏழூரதிபன் என்னும் பட்டத்தையும் ஏழு ஊர்களையும் நன்கொடையாக வழங்கினான். ஆனால் இப்பிரச்சனைக்கு பொறுப்பான சங்கிலியனைத் தண்டிக்கவில்லை, இதனால் சங்கிலியனின் போக்கில் மற்றம் எதுவும் ஏற்ப்படவில்லை, 1515 ஆம் ஆண்டளவில் முதலில் பட்டத்து இளவரசனாகிய சிங்கவாகுவின் உணவில் நஞ்சு கலந்து கொன்றான். இதன்பின் 1520 ஆம் ஆண்டளவில் சிறியதகப்பனாகிய சிங்கை செகராசசேகரனிடம் முலிகை மருத்துவம் கற்ற பரநிருபசிங்கன், கண்டி அரசியின் நோய் தீர்க்க கண்டி சென்றபோது, தனது மற்ற அண்ணனாகிய பண்டாரத்தை வெட்டிக் கொன்றுவிட்டு, தந்தை உயிருடன் இருக்கும் போதே யாழ்ப்பாண அரசின் முடியை கவர்ந்த சங்கிலியன், தானே சூடிக்கொண்டான். சங்கிலியனின் இக் கொடும் செயலால் துயரம் அடைந்த மன்னவன், உள்ளம் உடைந்தும், மதி பேதலித்தும் போன நிலையில் ஊமையாக சில காலம் வாழ்ந்து, உயிர் துறந்தான் என்பர்.

Link to comment
Share on other sites

எமது தாய் நிலம் அன்னியப் படைகளின் கோரப்பிடியில் இருந்தபொழுது ஒரு பொம்மை அரசராக யாழ்பாண இராச்சியத்தைப் பொறுப்பேற்று நடத்தி தனது குடிமக்களின் நலன்களை கணக்கில் எடுக்காது அன்னியர்களின் அடிவருடியாகவே இந்த மன்னரது அரசாட்சி அமைந்திருந்தது. இவரது ஆட்சி ஈழத்தின் கறைபடிந்ததாகும். போத்துகேயரின் அரவணைப்பிலே அரசாண்ட இவர்.........................................

எதிர்மன்னசிங்கம்

எதிர்மன்னசிங்கம் அல்லது எதிர்மன்னசிங்கன் என்பவன் 1591 க்கும் 1616 க்கும் இடையில் யாழ்ப்பாணத்தை ஆண்டவனாவான். இவன் பரராசசேகரன் என்னும் அரியணைப் பெயருடன் எட்டாம் பரராசசேகரன் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டவன். இவன், 1570 களில் யாழ்ப்பாணத்து அரசனாக இருந்த பெரியபிள்ளை என்பவனின் மகனாவான்.

எதிர்மன்னசிங்கத்தின் தந்தையான அரசன் பெரியபிள்ளை இறந்தபோது எதிர்மன்னசிங்கத்துக்குரிய வாரிசு உரிமையையும் தாண்டிப் புவிராஜ பண்டாரம் என்பவன் மன்னனானான். இதற்கான காரணம் தெரியவில்லை. போத்துக்கீசரைப் பகைத்துக் கொண்டதால் யாழ்ப்பாணம் மீது படையெடுத்த போத்துக்கீசர் புவிராஜ பண்டாரத்தைப் பிடித்துக் கொன்றனர். எதிர்மன்னசிங்கம், புவிராஜ பண்டாரத்துக்குச் சார்பாகப் போரிற் கலந்து கொண்ட போதும், கொல்லப்படும் தறுவாயில் போத்துக்கீசன் ஒருவனாற் காப்பாற்றப்பட்டான். இவன் பெரியபிள்ளையின் மகன் என்றும், பட்டத்துக்குரிய இளவரசன் என்பதையும் அறிந்த போத்துக்கீசத் தளபதியான அந்தரே பூர்த்தாடு, எதிர்மன்னசிங்கத்தை யாழ்ப்பாண அரசன் ஆக்கினான்.

கடுமையான போத்துக்கீச மேலாதிக்கத்தின் கீழ் நாட்டை ஆண்ட இவன் போத்துக்கீசரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் இடம் கொடுத்தான். தன்னுடன் பழகி வருகின்ற போத்துக்கீசர்களுக்குக் கொடைகளும் அளித்து அவர்களைப் பகையாது இருந்தான். எனினும், போத்துக்கீசக் கீழ் நிலை அதிகாரிகளினால் இவனுக்குப் பல தொல்லைகள் விளைந்ததுண்டு. கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாதிரிமார்கள் இவனுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்கள் நல்லூரில் தேவாலயம் கட்டுவதற்கு இவனே நிலமும் பணமும் அளித்துள்ளான். அத்துடன், இப்பாதிரிமார்களிற் சிலரும் பிற அதிகாரிகளும் செய்த முறை கேடான செயல்களையும் அவன் கண்டும் காணாதிருந்தான். இதனால், நாட்டில் அவனுக்கு எதிர்ப்பு வலுத்தது.

இதனால், எதிர்மன்னசிங்கத்தை நீக்கிவிட்டுத் தஞ்சாவூரிலுள்ள இளவரசன் ஒருவனை அரசனாக்கும் திட்டமொன்றும் உருவானது. இதை அறிந்த எதிர்மன்னசிங்கம், போத்துக்கீசரை அணுகி அவர்கள் துணையுடன் தன் பதவியைத் தக்க வைத்துக்கொண்டான்.

போத்துக்கீசரைப் பகைக்காது இருப்பதற்காகப் பல நடவடிக்கைகளை எதிர்மன்னசிங்கம் மேற்கொண்டபோதும், போத்துக்கீசருக்கு எதிராகக் கண்டியரசன் தென்னிந்தியாவில் இருந்து போர்வீரர்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இவன் உதவுகிறான் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. இந்துத் துறவிகளைப் போல வேடமிட்டு இவர்கள் யாழ்ப்பாணத்துக்கூடாகச் செல்கிறார்கள் எனப் போத்துக்கீசர் குற்றஞ்சாட்டினர். அவர்கள் உண்மையான துறவிகள் என்றும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை போகிறவர்கள் என்று விளக்கியும் போத்துக்கீசர் அதனை நம்பவில்லை. இதனால் எதிர்மன்னசிங்கம் 300 துறவிகளைப் பிடித்து அவர்களைக் கட்டாயமாகத் தோணிகளில் ஏற்றிக் கடலில் விட்டான்.

கத்தோலிக்கக் குருமார்கள் அரசனைக் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றுவதற்குப் பெரு முயற்சி செய்தனர். அவ்வப்போது இணங்குவது போல் காட்டிக்கொண்டபோதும், இதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் தட்டிக் கழித்து வந்தான். இதற்காகச் சங்கிலி குமாரனைக் குருமார்கள் குற்றம் சாட்டினர். இறுதியாக அரசன் மரணப் படுக்கையில் கிடந்தபோது அவனை மதமாற்றம் செய்ய எடுத்த முயற்சியையும் சங்கிலி குமாரன் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

எதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான். 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5091055_f260.jpgpandaravanniyan_5.jpg

பண்டாரவன்னியனின் உடைந்த நடுகல்லின் படத்தை முன்னைய பதிவில் இணைத்திருந்தேன். இப்போது அது, என்ன காரணத்தாலோ.... களத்தில் தெரியவில்லை, என்பதற்காக மீண்டும் இணைக்கின்றேன். கோமகன் தமிழ் மன்னர்களின் பதிவை ஆவலுடன் படித்து வருகின்றேன். சிறிய ஆதங்கம் தமிழ்மன்னர்களை அவன், இவன் என்று சொல்வது சங்கடமாக உள்ளது. அவர்கள் உயிருடன் இருந்தால்... தலையை கொய்து இருப்பார்கள். :D:lol:

Link to comment
Share on other sites

சிறியர் தமிழில் அவன் இவன் என்பது வீரத்தின் அடையாளம்.அதில் இழுக்கு இல்லை. இதன் நீங்கள் சங்க இலக்கியங்களில் பார்க்கலாம். அதே போல பாரதிதாசனின் பாடல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் தமிழில் அவன் இவன் என்பது வீரத்தின் அடையாளம்.அதில் இழுக்கு இல்லை. இதன் நீங்கள் சங்க இலக்கியங்களில் பார்க்கலாம். அதே போல பாரதிதாசனின் பாடல்கள்

ஓம், உண்மை தான் சாத்திரியார். நாம் சிவபெருமான், முருகன் போன்ற கடவுளிடமும் உரிமை பாராட்டி நீ, தா போன்ற சொற்களைப் பயன்கிடுத்திறோம் தானே. கோமகன் பயன் படுத்திய சொற்களில் தவறு இருப்பதாக இப்போது நான் உணரவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன் ,

தொகுப்பிற்கு நன்றி.

எல்லாளன் இந்தியாவிலிருந்து வந்த மன்னன் என்று மகாவம்சம் கூறுவதை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றில்லை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் வல்லமை பெற்ற நாக அரசுகள் காணப்பட்டுள்ளன.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கடற்கோள் வந்தபோது இலங்கைத் தீவை நாக மன்னன் அரசாண்டதாகக் கூறப்படுகின்றன . .

மகோதரன் - குலோதரன் கி மு 483 ற்கு முன்பு இலங்கைத் தீவின் வடபகுதியை நாகதீபத்திலிருந்து (நயினாதீவு) ஆட்சிசெய்தபோது ஏற்பட்ட பிணக்கைத் தீர்க்க புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாக மணிமேகலை கூறுகின்றது .

வரலாற்றை இப்படித் திருத்துங்கள்.

--------------------------

எல்லாளனது தந்தை ஈழசேனன் (சேனன் , குத்திகன் : கி.மு 177 - கி.மு 155 ) அரசாண்டபோது அசேலன் என்பவன் ஈழசேனனைக் கொன்று அனுராதபுரத்தைக் கைப்பற்றினான் . இளவரசன் எல்லாளன் இந்தியாவுக்குத் தப்பியோடினான். எல்லாளன் தென்னிந்தியாவிலிருந்து படை சேர்த்து கி மு 145 இல் மீண்டும் அனுராதபுரத்தைக் கைப்பற்றி அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு வடபகுதியை அரசாண்டான் (கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை ). வவுனிக்குளத்தைக் கட்டுவித்தான்.

--------------------------

நான் இங்கு கூறியதை பிழையென்று நிருபிக்க ஒரு ஆதாரமும் இல்லை. இதுவே எமது வரலாறு. மகாவம்சத்தின் புனைகதைகள் எமக்கு வேண்டாம்.

தொடர்ந்து எழுதுங்கள் . ஆய்வு செய்து எழுதுங்கள் . மகாவம்சம் பக்கச்சார்பானது. அதை முழுமையாக நம்பத்தேவையில்லை .

நன்றி .

ஆண்டவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன்,தம்பிக்கு வரலாறுகள்,சரித்திரங்கள் பிடிக்கும் போல எனக்கும்,அதுக்கும் எட்ட தூரம் <_<

Link to comment
Share on other sites

இறுதியாக யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்வரும் மன்னர்கள் தமது சிறப்பான நீதியான பரபாலனத்தின்மூலம் குறுகிய காலத்தில் தமது மக்களிடையே பிரபல்யமானார்கள். இந்த மன்னர்கள் குறுகிய காலத்தில் அரியணைக்கட்டில் ஏறினாலும், யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றில் இவர்கள் பதியப்படுவது தவிர்க்கமுடியாதது ஆகின்றது.

இனி............... ..........................................;;..... ........................,,,,,,,,,,,,,

புவிராஜ பண்டாரம்:

புவிராஜ பண்டாரம் 1580 களின் தொடக்கத்திலிருந்து 1591 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னனாவான். பெரிய பிள்ளை என்னும் அரசனுக்குப் பின் அரசு கட்டிலேறிய இவன், அக் காலத்தில் யாழ்ப்பாண அரசில் செல்வாக்குச் செலுத்திய போத்துக்கீசரினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கண்டி அரச மரபினரின் வரலாற்றோடு தொடர்புள்ள சில நிகழ்வுகள் மூலமே புவிராஜ பண்டாரம் முதன் முதலாக அறியப்படுகிறான். 1582 ஆம் ஆண்டையொட்டிய காலப்பகுதியில் சீதாவாக்கை அரசன், கண்டி மீது படையெடுக்கவே, கண்டி அரசன் குடும்பத்தோடு திருகோணமலைக்கு ஓடுகிறான். அங்கே அரசனும் அரசியும் இறக்க, அவர்களுடைய சிறுவயது மகளும், மருமகனான இளவரசன் யமசிங்கனும் யாழ்ப்பாணத்துக்கு வந்து புவிராஜ பண்டாரத்திடம் அடைக்கலம் புகுகின்றனர். இந்தச் சிறுமியே பிற்காலத்தில் கண்டியரசனான விமலதர்மசூரியனை மணந்து கண்டி அரசியான டோனா கத்தறீனா என்பவளாகும்.

போத்துக்கீசர் கைப்பற்றி வைத்திருந்த யாழ்ப்பாணத்துக்குச் சொந்தமான மன்னார்த் தீவில் இருந்து அவர்களைத் துரத்தி அவ்விடத்தை விடுவிப்பதில் புவிராஜ பண்டாரம் தீவிரமாக இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டுவாக்கில் பெரும் படையுடனும், ஆயுத தளவாடங்களுடனும் மன்னாரைத் தாக்கினான். இருந்தும், அக்காலத்து நவீன ஆயுதங்களைக் கையாள்வதில் யாழ்ப்பாணத்துப் படைகளுக்குப் போதிய பயிற்சி இல்லாததாலோ என்னவோ இம் முயற்சியில் புவிராஜ பண்டாரத்துக்கு வெற்றி கிட்டவில்லை. 1591 ஆம் ஆண்டில் மீண்டும் தென்னிந்தியக் கப்பல் தலைவனான கொட்டி மூசா மரிக்கார் என்பவனோடு சேர்ந்து கொண்டு மன்னாரைத் தாக்க முயற்சித்தும் மீண்டும் அவனுக்குத் தோல்வியே கிடைத்தது

புவிராஜ பண்டாரத்தைத் தண்டிக்க எண்ணிய போத்துக்கீசர் 1591 ஆம் ஆண்டில் அந்தரே பூர்த்தாடு என்பவன் தலைமையில் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தனர். நிகழ்ந்த போரில் நல்லூருட் புகுந்த போத்துக்கீசர் படை அரசனைப் பிடித்தனர். அரசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட அவன் தலை கொய்யப்பட்டு இறந்தான்.

மார்த்தாண்ட சிங்கையாரியன்:

யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவனான மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325 முதல் 1348 வரையான காலப்பகுதியை அண்டி யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் முடி சூட்டிக் கொண்டபோது நாட்டில் அமைதி நிலவியது எனினும் இடைக் காலத்தில், யாழ்ப்பாண அரசின் பெருநிலப் பகுதியின் பகுதிகளில் அதிகாரம் செலுத்திவந்த வன்னியர் கலகம் செய்யலாயினர். இக் கலகங்களை மார்த்தாண்டன் இலகுவாக அடக்கினான்.

நாட்டில் கல்வி, வேளாண்மை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவன் இரக்க குணம் கொண்டவனாக விளங்கினான். இவன் சுகவீனமுற்றுக் காலமானபோது நாட்டின் எல்லாத் தரப்பு மக்களும் இவனது இழப்புக்காக வருந்தினர்.

குலோத்துங்க சிங்கையாரியன்:

குலோத்துங்க சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச வம்சத்தின் மூன்றாவது அரசனாவான். இவன் கி.பி 1256 ஆம் ஆண்டு முதல் 1279 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகாலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் குலசேகர சிங்கையாரியனின் மகனும், கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் பேரனும் ஆவான்.

இவனும் தன் முன்னோரைப் போலவே வேளாண்மை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. தரிசு நிலங்களைத் திருத்தி வேளாண்மைக்கு ஏற்ற நிலங்களாக இவன் மாற்றியதாக இந் நூல் கூறுகிறது. இவனுடைய 23 ஆண்டு ஆட்சிக் காலம் அமைதிக் காலமாக விளங்கியதாகவும் கூறப்படுகின்றது.

குலசேகர சிங்கையாரியன்:

குலசேகர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் முதல்வனான கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் மகனாகிய இவன் கி.பி 1246 தொடக்கம் 1256 ஆம் ஆண்டுவரை பத்தாண்டு காலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான்.

இவன் தனது ஆட்சி முறைகளில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததான், நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்ததுடன் வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவித்தான். தனது மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்தான் .

கனகசூரிய சிங்கையாரியன்:

கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.

சப்புமால் குமாரயாவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்

Link to comment
Share on other sites

உங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள் கோமகன்.

இரண்டு விடயங்கள் மனதை நெருடுகின்றன.

1 - நீங்கள் எழுதுபவற்றை எவ்வாறு ஆவணப் படுத்தலாம் ? யாழில் எழுதுவது பார்வையாளர்களைச் சென்றடைந்தாலும் அது சரித்திரம் ஆகாது. புலம்பெயர்ந்த தமிழராகிய எமக்குள் மட்டும் வாசித்து புரிந்து கொண்டால் போதாது.

2 - மகாவம்சத்தை ஒதுக்கிவிட்டு தமிழரின் சரித்திரத்தை உலகறியச் செய்ய முடியாது. ஏனெனில் சிங்களவர் மகாவம்சத்தை முன்வைத்தே இலங்கையின் சரித்திரத்தை ஒவ்வொரு இலங்கைப் பிரஜை தொடக்கம் அகில உலகம் வரை பரப்புகின்றார்கள். மகாவம்சத்தின் ஒவ்வொரு சம்பவத்தினையும் சரியான சரித்திரச் சான்றுகளை வைத்து உலகின் முன் உடைத்தால் மட்டுமே தமிழர்களின் பூர்வீகத்தை உலகறியச் செய்யலாம்.

Link to comment
Share on other sites

கோமகன் ,

தொகுப்பிற்கு நன்றி.

எல்லாளன் இந்தியாவிலிருந்து வந்த மன்னன் என்று மகாவம்சம் கூறுவதை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றில்லை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் வல்லமை பெற்ற நாக அரசுகள் காணப்பட்டுள்ளன.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கடற்கோள் வந்தபோது இலங்கைத் தீவை நாக மன்னன் அரசாண்டதாகக் கூறப்படுகின்றன . .

மகோதரன் - குலோதரன் கி மு 483 ற்கு முன்பு இலங்கைத் தீவின் வடபகுதியை நாகதீபத்திலிருந்து (நயினாதீவு) ஆட்சிசெய்தபோது ஏற்பட்ட பிணக்கைத் தீர்க்க புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாக மணிமேகலை கூறுகின்றது .

வரலாற்றை இப்படித் திருத்துங்கள்.

--------------------------

எல்லாளனது தந்தை ஈழசேனன் (சேனன் , குத்திகன் : கி.மு 177 - கி.மு 155 ) அரசாண்டபோது அசேலன் என்பவன் ஈழசேனனைக் கொன்று அனுராதபுரத்தைக் கைப்பற்றினான் . இளவரசன் எல்லாளன் இந்தியாவுக்குத் தப்பியோடினான். எல்லாளன் தென்னிந்தியாவிலிருந்து படை சேர்த்து கி மு 145 இல் மீண்டும் அனுராதபுரத்தைக் கைப்பற்றி அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு வடபகுதியை அரசாண்டான் (கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை ). வவுனிக்குளத்தைக் கட்டுவித்தான்.

--------------------------

நான் இங்கு கூறியதை பிழையென்று நிருபிக்க ஒரு ஆதாரமும் இல்லை. இதுவே எமது வரலாறு. மகாவம்சத்தின் புனைகதைகள் எமக்கு வேண்டாம்.

தொடர்ந்து எழுதுங்கள் . ஆய்வு செய்து எழுதுங்கள் . மகாவம்சம் பக்கச்சார்பானது. அதை முழுமையாக நம்பத்தேவையில்லை .

நன்றி .

ஆண்டவன்

உங்கள் அறிவுரைகளுக்கு நன்றிகள் ஆண்டவர்.யழ்பாணவைபவமாலையும் விக்கிபீடியா தகவல்ப் பெருங்களஞ்சியத்தையும் ஆதாரமாக வைத்தே தொடருகின்றேன்.உங்கள் போன்றோரது அறவுரைகள் திருத்தங்கள் இந்தப் பதிவை மேலும் செம்மைப் படுத்தும் .நன்றிகள். :) :) :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னர்களில் எல்லோரையம் பின்னுக்குத் தள்ளி , இளய தலைமுறையனராகிய எம்முன்னே வரலாற்று சாட்சியா இருந்த ஒரு மன்னனைக் குறிப்பிட்டு இந்தத் தொடரை நிறைவிற்குக் கொண்டு வருகின்றேன். இந்தத் தொடரில் தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பதிந்த சகல கள உறவுகளுக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாகக் கள உறவு இணையவன் இது போன்ற பதிவுகள் ஆவணபப்டுத்தி சர்வதேசப்பரப்புரைக்கு உட்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மன்னனில் பலத்த விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், யாழ்ப்பாண இராச்சியத்திற்கான விடுதலைப்போரையும், ஈழ நாட்டை நேசிப்பவர்களாகவும் இருந்தால், இந்த மன்னனும் ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் வரிசையில் வரவேண்டியதில் மாற்ருக்கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது எனது பணிவான நம்பிக்கை. வராலாற்ரு ஆசிரியர்களால் இந்த மன்னன் மறைக்கப்பட்டாலும், இவனது வரலாறு பதியப்படவேண்டியது ஈழநாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு நாம்செய்கின்ற வரலாற்ருத் துரோகமாகும். இந்த மன்னன் யாழ்ப்பாணத்தையும் பின்பு கிளிநொச்சியையும் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியை அமைத்தான். இவனது அரசு தரைவழி , ஆகாயவழி , கடல் வழி , எனப் பலமான இராணுவக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது. பிரெஞ்சப்புரட்சியின் அடிநாதமான « சுதந்திரம் » « சமத்துவம் » « சகோதரத்துவம் » போல , « தனித்தமிழ்ஈழம் » « தமிழர் ஓர் தேசிய இனம் » « அவர்களுக்கு என்று ஓர் வரலாற்றுத் தாயகம் உண்டு » என்பதை இந்த மன்னன் உலகறியச் செய்தான் . இவனது ஆட்சிக்காலமே ஈழத்தமிழர்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இனத்திற்கும் பொற்காலமாக இருந்தது. இவனது வளர்ச்சி பொறுக்காத சிங்களம் போரியல் விதிகளுக்கு முரணாக ஏறத்தாள 25 நாடுகளின் உதவியுடன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டதில் நந்திக் கடலருகே தாங்கள் கொன்றதாக மார்தட்டுகின்றது . ஆனால் எப்படி அடோல்ப் கிட்லர் , நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ் , ஆகியோரது மரணங்கள் மர்மமாக இருந்ததோ ? அதேபோல் இந்தமன்னனது இறப்பும் மர்மமானதாகவே உள்ளது.

இனி………………

திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் :

275pxprabhakaran.jpg

வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி. பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.

தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது இலங்கை காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதை நேரடியாகக் கண்டார். குறிப்பாகப் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.

பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்லுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்ற பிராபகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.

பிரபாகரன் கூற்றுக்கள்

  • " இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."

  • " நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும். "

  • " ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."

  • " உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன். " என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.

  • " வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். "

  • " எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும். "

  • " செய் அல்லது செத்துமடி. "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கோமகன்..இளையவர்கள் இன்னமும் அறிந்து கொள்ளுவோம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.