தாராளமாக இன்று போய் நாளை வாருங்கள் மீண்டும் நாளை மறு தினமும் வாருங்கள் உங்ளிற்கான நாட்களை மனதில் வைத்தபடி. ....
![]()
"பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!
#61
Posted 09 July 2011 - 10:24 PM
Nellaiyaan@yahoo.com

#62
Posted 09 July 2011 - 11:46 PM
Nellaiyaan@yahoo.com
#63
Posted 10 July 2011 - 09:10 PM
... அந்த சிறுவர்களை பராமரிக்கும் இல்லம் வடமராட்சி பகுதில் உள்ளது. அதில் 59 சிறார்கள்: பராமரிப்பதாக இதுவரை கணக்கும் காட்டப்பட்டது. இங்கிருந்தும் தவணை தவறாமல் பணம் போய்ச் சேர்ந்தும் கொண்டிருந்தது. இப்போது அங்கு உள்ள சிறார்கள் 59 பேரின் பெயர், விபரங்கள், படங்களை அனுப்பும்படி கோரிக்கை விடப்பட்டபோது .... 25 சிறார்களின் விபரங்களே அங்கிருந்து வந்ததாம். எங்கே மீதமானவர்கள் என்றால்???? ... பல நொண்டிச்சாட்டுகள் மூதலில் கூறப்பட்டு ... இறுதியாக சிலரை பாதுகாப்பு கருதி அரசாங்கம் எங்கோ கொண்டு சென்று விட்டதோ? ஏதோ? கூறப்பட்டதாம்! ... அப்படியாயின் இதுவரை 59 சிறார்களுக்கு என்று அனுப்பிய பணங்கள் எங்கு போனது???? ... இறுதியாக அவ்வாலயம் சொல்லி விட்டதாம் "நீங்கள் விபரங்கள் தந்த 25 பேருக்குத்தான், இங்கிருந்து பணம் அனுப்ப முடியும் என்று"!!!!
... இப்படியான சில சம்பவங்களோடு ... ஆலயம் சில தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தேசித்திருக்கிறது!! உதாரணத்துக்கு ... இங்கிருந்து அங்கு பராமரிக்கப்படும் இல்லங்களுக்கு இன்ரநெற் இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து, ஸ்கைப் மூலம் எந்த நேரமும் எந்த பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கிறது. ... நல்ல விடயம்!
.... தொடரும் ...
Edited by Nellaiyan, 10 July 2011 - 09:41 PM.
Nellaiyaan@yahoo.com
#64
Posted 10 July 2011 - 10:12 PM
ஜயோ நெல்லியான் நீங்கள் குருகுலம் பற்றிய விடயத்தில் ஆதாரங்களை இணைப்பீர்கள். அதை வைத்து சாந்தியை ஒரு போடு போடலாமென்று பார்த்தால். குருகுலம் பற்றி விட்டுவிட்டு வடமராட்சி சிறார்கள் என்றுகொண்டு நிக்கிறீர்கள். அதை விட்டிட்டு ஈலிங் கோயில் நிருவாகத்திடம் கேட்டு ஆதாரங்களை விரைவில் இணையுங்கள் . பால் பண்ணை பற்றிய விபரங்களும் அவர்களிடம் உள்ளது.... இன்றைய தினம் இங்குள்ள ஓர் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் கதைத்தேன். அவர் அவ்வாலயத்தின் மூலம் அங்கு நடைபெறும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது அவ்வாலய மூலம் நடைபெறும் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளையும் மீளாய்வு செய்யும் பணியில் .. ஒரு சம்பவத்தை கூறினார் ...
... அந்த சிறுவர்களை பராமரிக்கும் இல்லம் வடமராட்சி பகுதில் உள்ளது. அதில் 59 சிறார்கள்: பராமரிப்பதாக இதுவரை கணக்கும் காட்டப்பட்டது. இங்கிருந்தும் தவணை தவறாமல் பணம் போய்ச் சேர்ந்தும் கொண்டிருந்தது. இப்போது அங்கு உள்ள சிறார்கள் 59 பேரின் பெயர், விபரங்கள், படங்களை அனுப்பும்படி கோரிக்கை விடப்பட்டபோது .... 25 சிறார்களின் விபரங்களே அங்கிருந்து வந்ததாம். எங்கே மீதமானவர்கள் என்றால்???? ... பல நொண்டிச்சாட்டுகள் மூதலில் கூறப்பட்டு ... இறுதியாக சிலரை பாதுகாப்பு கருதி அரசாங்கம் எங்கோ கொண்டு சென்று விட்டதோ? ஏதோ? கூறப்பட்டதாம்! ... அப்படியாயின் இதுவரை 59 சிறார்களுக்கு என்று அனுப்பிய பணங்கள் எங்கு போனது???? ... இறுதியாக அவ்வாலயம் சொல்லி விட்டதாம் "நீங்கள் விபரங்கள் தந்த 25 பேருக்குத்தான், இங்கிருந்து பணம் அனுப்ப முடியும் என்று"!!!!
... இப்படியான சில சம்பவங்களோடு ... ஆலயம் சில தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தேசித்திருக்கிறது!! உதாரணத்துக்கு ... இங்கிருந்து அங்கு பராமரிக்கப்படும் இல்லங்களுக்கு இன்ரநெற் இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து, ஸ்கைப் மூலம் எந்த நேரமும் எந்த பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கிறது. ... நல்ல விடயம்!
.... தொடரும் ...
#65
Posted 10 July 2011 - 10:55 PM
Edited by Nellaiyan, 10 July 2011 - 10:56 PM.
Nellaiyaan@yahoo.com
#66
Posted 10 July 2011 - 11:34 PM
மாறாக இவ்வமைப்பின் நிர்வாகிகள் ... இவ்வமைப்பை பயன்படுத்தி ... பலரது உரையாடல்களை அவர்களது அனுமதி அற்று ஒலிப்பதிவு செய்து, அதை மீண்டும் அவர்களது அனுமது அற்று இந்த யாழ்களத்திலேயே பிரசுரித்தும், மிரட்டியும் உள்ளார்கள்!!! இது இங்கிலாந்து, ஜேர்மனிய, பிரான்ஸ் உட்பட்ட ஐரோப்பிய யூனியன் அமைப்புகளின் சட்டவரை முறைகளின் பிரகாரம் கிறிமினல் குற்றமாகும்!!!! ... இது தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் ..................
Edited by Nellaiyan, 11 July 2011 - 10:17 PM.
Nellaiyaan@yahoo.com
#67
Posted 11 July 2011 - 06:13 AM
... ஆட்டைக் கடித்து, பின் மாட்டை ... இறுதியில் ...???????????????
http://www.yarl.com/forum3/index.php?showtopic=79645
Nellaiyaan@yahoo.com
#68
Posted 11 July 2011 - 03:32 PM
கத்தியும் கோடாரியோடும் நின்று கருத்துகளத்தை களமாக்குகிறீர்கள்?
30 வருடங்கள் ஒரு இனத்தையே வழிநடத்தி எத்தனையோ இன்னல்களுக்கும் முகம்கொடுத்து இந்த போராட்டத்தை வழிநடத்திய மகான்கள் மீது எத்தனை சேறுகளை அடித்தீர்கள்?
அப்போதெல்லாம் நாம் பணிவாகத்தான் கருத்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் எமது கருத்துகளை பதிந்துவந்தோம்.
கே.பி துரோகியாக இருக்கலாம் அதை மறுக்கவில்லை ஆனால் அதற்கான ஆதரங்கள் கையில் கிடைக்கும்வரை தயவு செய்து சேறடிக்காதீர்கள் அவர் ஒரு சூழ்நிலை கைதி அவர்களது நாடகத்திற்கு ஆடியே ஆகவேண்டும் என்று கூட எழுதினேன். எத்தனைகளையோ தீhத்துகொட்டினார்கள்.
வெளியில் இருந்து போரை நடத்துபவர்கள் எப்போதுமே சூழ்நிலை கைதிகளாகலாம் அதில் கவனம் எடுக்காதது எமது தவறும் கூட. அதற்கான வழிகளை தேடுவோம் என்ற போதெல்லாம்...................
"உண்மைகளை எழுதுகிறோம" என்று விண்ணாணம் பேசியபடி நீங்கள் அடித்த சேறுகள் ஏராளம்.
எந்த தன்னலமும் அற்று இந்த போராட்டத்தை சுமந்தவர்களுக்குதான் தெரியும் அதன் வலி. தயவு செய்து ஏன் அவர்களுடைய மனதுகளை புண்படுத்துகின்றீர்கள்? என்ற கேள்விகளுக்கு விடை இன்று வரை இல்லை?
பாதிரிகளாகவும்
பத்திரிகையாளராகவும்
காப்ளராகவும்
கடன்கொடுப்பாளராகவும்
இங்கே சுயவிளம்பரம் தேட தியாகிகளின் மீது சேறடிக்க திரிந்தவர்களிடம்.
நீதி நியாயம் இவைகளை எதிர்பார்பவர்கள்தான் ஏமாறபோகின்றவர்களே தவிர அவர்களுக்கு அவர்களுடைய எழுத்துக்களே சாடசியாக இருக்கின்றன.
இங்கே நான் இந்து மதத்தை விமர்சிக்கும்போது என்னை கேட்பார்கள் ஏன் கிறிஸ்தவ மதத்தை விமர்சிப்தில்லை என்று................ விமர்சிக்கவே கூடாது என்பது எனது நிலைபாடு இல்லை ஆனால் எனது வீட்டை கழுவ வேண்டிய நிலையில் இப்போது நான் ஏன் எனில் நான் ஒரு இந்து. ஆனால் லாவகமாக எனக்கு ஞானஸ்தானம் தந்து இந்து மத அழுக்குகளை பாதுகாப்பார்கள்.
இப்போது ஒரு சோமாலிய பெண்ணுக்கு மதம் இழைத்த கொடுமைகள் பற்றி ஒரு தலைப்பு இந்து மத கொடுமைகள் பற்றி ஏன் இந்து பெண்களால் எழுத முடியவில்லை? சாதியத்தின் பெயரால் இந்துமதம் இழைக்கும் கொடுமைகளை கூடவே இருந்து செய்தோமே என்ற குற்ற உணர்வா? ஆறியாமையில் இருக்கும்போது எல்லோரும்தான் தப்பு செய்தோம் இப்போது உலகை அறிகிறோம் ஒரு பரந்தபட்ச உரையாடலுக்கு வாருங்கள் எம்மை சுத்தம் செய்வோம்.
உங்களுடைய "உண்மைகள்" எத்தனையோ உழைப்புகளை நாசம் செய்கின்றன என்பதை இனியாவது கருத்தில் எடுங்கள். விடுதலை போராட்டம் என்பது ஏதோ விடுதி வாழ்க்கை போன்று இங்கே கருத்து பதிபவர்களை இனியாவது கண்டுகொள்ளுங்கள் அதன் விலைகளை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். புலிகளால் பாதிக்க படாத ஈழ தமிழனே இல்லை..................... ஏன் என்றால் போரை நடத்தியவர்கள் புலிகள்தான். இதை ஏன் போருக்குள்ளேயே இருந்துவந்த தமிழர்கள் திரும்ப திரும்ப வாந்தியெடுக்க வேண்டும்? உங்கள் வீட்டிலும் மரணம் எனது வீட்டிலும் மரணம் புலிகள் போராடியதால்தானே நடந்தது? இதை ஏன் கருத்து எழுதி கற்பிக்க வேண்டும்?
போராட்டம் எனக்கும் உங்களுக்கும் ஆக இருந்தபோது எனது பங்கும் உங்களது பங்கும் என்னவாக இருந்தது? அங்கயற்கன்னி வெடிமருந்து ஏற்றிய படகோடு இலக்கு நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த அதே கணம் நானும் நீங்களும் ஒரு வேளை கலவியின் உச்ச கட்டத்தில் இருந்திருக்கலாம். இன்று எல்லாம் முடிந்தாயிற்று என்று அங்கயற்கன்னிக்கு நீச்சல் பழக்க தொடங்கிவிட்டீர்கள்.
பிரபாகரன் என்ற தனிமனிதன் 17 வயதிலே வீட்டை விட்டு ஒடுகிறான் காரணம் அவனது மரணம் அவனை நோக்கி அவனது வீட்டு கதவை தட்ட சில மணி நேரங்களே இருந்தது. அந்த நொடியில் இருந்து அவன் மரணத்தோடுதான் உண்டு உறங்கி படுத்து பழகியே இந்த போரை சுமந்தான். 1985ம் ஆண்டே பிரபாகரனை சுடுவதற்கு றோ திட்டம் தீட்டுகிறது நான் சொல்லவில்லை முன்னாள் றோ வின் தலைவர் சொல்கிறார். அதே இந்தியவிடம் டெல்லி சென்று கிட்டதட்ட சிறை கைதிபோல் இருந்தார் மரணத்திலும் விட மாவீரர்களின் இலட்சியம் உயரியது என்ற ஒரே காரணம்தான். இந்திய காழ்வுபடை சுற்றி நிற்கவே ஆயுதங்களுடன் வந்து தீருவில் வெளியில் வந்து குமரப்பா புலேந்திரனின் சிதைகளுக்கு தீமூட்டி சென்றான். நானோ நீங்களோ நினைத்தோமா புலிகள் இருப்பார்கள் என்று? அவர்களுடைய இருப்பை எப்போதும் அவர்கள் உறுதிபடுத்தியதில்லை போராளிகளுக்கு அது தேவையுமில்லை அவர்களுடைய இலட்சிய இருப்பே அவர்களுக்கு தேவையானது. அது இருப்தும் இல்லாது போவதும் உங்களுடைய என்னுடைய கைகளில்தான் உண்டு போராட்டம் எனக்காகவும் உங்களுக்காவுமே நடத்தபட்டது.
புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.
நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.
- மோகன், நிழலி and பகலவன் like this
#69
Posted 11 July 2011 - 09:52 PM
... யாழில் மே 18இற்கு பின்னம், தொடர்ச்சியான ஓப்பாரிகள் .... கேட்பவர்கள், வாசித்தவர்கள் மனம் உருகாமல் இருக்க முடியாது!! ... அதற்கு மேல் இது எங்கள் தொலைபேசி இலக்கம் எந்நேரமானாலும் எடுங்கள் .. தயவுசெய்து உதவுங்கள் ... யார்தான் விழ மாட்டார்கள்? ... அதில் நானும் ஒருவன்! ... தொலைபேசி எடுத்தோ, மடல்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி உதவ வருகிறோம் என்றவுடன் ... உங்கள் பெயர், முகவரி, எல்லாவிபரங்களையும் தாருங்கள் ... கொடுத்தாயிற்று!! ... பின்பு தொலைபேசியில் அழைப்புகள் சிலதடவை!! ... எல்லாம் முடிந்து ... எங்கள் மனதில் சில சந்தேகங்கள்! கேட்டவுடன் ... நீ அவன்? நீ அப்படி செய்தனீ? உன் பெயர் முகவரிகள் இவைகள்? நீ கதைத்தவைகளை ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறோம்? அதனை வெளியிடுவோம்? உனக்கு 40 நாள் தவணை? .... என்ன உது??? ... உங்களுக்கு உதவ வந்து விபரங்கள் தர, ... கொட்டனை கொடுத்து, நாமே அடி வாங்கும் நிலைமை!!! ... யாருக்கய்யா கோபம் வராது???
... இங்கு பணம் இல்லை பிரட்சனை! ... பணமாயின் ... மே18 இற்கு முன்னம், தமிழ்த்தேசியம் என்று வந்ததொன்று இங்கு நான் உடபட என் நண்பர்கள் பலரிடம் 40000பவுண்ஸுகளை சுற்றிச் சென்றது! ... விட்டு விட்டோம் ... கொட்டன் கத்தி கொண்டா திரிந்தோம்??
இதற்குள் மருதங்கேணி வந்து சேறடிப்பது பற்றி ... உந்த சேறடிப்புகளுக்கு பல தடவை பதில் சொல்லியாயிற்று. உண்மையான சேறடிப்புகளை பார்க்க விரும்பின் ... பதிவு, ஈழமுரசு, சங்கதி, தாய்நிலம்... போன்றவற்றை முதலில் போய்ப் பாரும்! அதுவும் சர்வதேச பிரிவாம், தலைமைச் செயலகமாம், புனர்வாழ்வுக்களாம், நாடு கடந்த அரசாங்கமாம் என்று ஒன்றுக்கொன்று சேறடிப்புகள் இந்த நிமிடம் வரை! அதற்கு மேல் தெருவில் நின்று கொத்து வெட்டுக்கள், அடிபிடிகள் வேறு!! ... அங்கு நடப்பது எல்லாம் தலைவரின் பெயர் சொல்லி! முதலில் அங்கு சென்று பார்த்து விட்டு இங்கு வந்து எழுதும்!!! ...
... யாழுக்கு முழுக்கு முற்றாக போடும் காலம் வந்து விட்டது ... தனிப்பட்ட காரணங்களுக்காக அன்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக ... ஆனால் ... அதற்கு முன் சில விடயங்களை செய்து முடிக்க வேண்டும் ... அதுவரை யாழில் ...
Edited by Nellaiyan, 11 July 2011 - 10:15 PM.
- தப்பிலி likes this
Nellaiyaan@yahoo.com
#70
Posted 11 July 2011 - 10:20 PM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#71
Posted 12 July 2011 - 09:50 AM
எல்லாம் சுயநலம்.
இதைவிட சுருக்கமாக உண்மையை எழுத முடியாது!
#72
Posted 12 July 2011 - 10:16 AM
நெல்லையன், இது உங்கள் தனிப்பட்ட விருப்பு. இதை பகிரங்கமாக களத்தில் எழுத வேண்டியது அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.இன்றுடன் நான் இவ்வமைப்பு மூலம் செய்யும் உதவிகள் அனைத்தையும் நிறுத்துகிறேன்!!!
நன்றாக சொன்னீர்கள் மருதங்கேணி.புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.
நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.
அவர்களுக்கு இருந்த தைரியம், உறுதிப்பாட்டில், இலட்சத்தில் ஒரு பங்கு பலருக்கு(நான் உட்பட) இருந்திருந்தால் கூட கதையே வேறு.
#73
Posted 12 July 2011 - 10:41 AM
போராட்டம் எனக்கும் உங்களுக்கும் ஆக இருந்தபோது எனது பங்கும் உங்களது பங்கும் என்னவாக இருந்தது? அங்கயற்கன்னி வெடிமருந்து ஏற்றிய படகோடு இலக்கு நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த அதே கணம் நானும் நீங்களும் ஒரு வேளை கலவியின் உச்ச கட்டத்தில் இருந்திருக்கலாம்.
புலிகள் மீது விரலை நீட்டு முன்பு புலிகளை புதைகுழிகழில் புதைத்த என்னையும் உங்களையும் பற்றிய உண்மைகளை எழுதுங்கள். அதுதான் அடுத்த சந்ததிக்கு தேவையானது. ஏனெனில் போராட்டம் என்பது நேற்றுபோல் நாளை ஒரு போதும் அமையபோவதில்லை.
நாளைய சூழலும் போராட்ட வடிவமுமே அதை தீர்மானிக்கும்.
நன்றி ஐயா
நடந்தவை அனைத்தும் எனக்கும் உங்களுக்கும் எதிரிலேயே நடந்தன. அதை நாம் கண்ணால் பார்த்தோம். காதால் கேட்டோம். தீரவிசாரித்தும் புரிந்து கொண்டோம். அப்படியே அதனூடு பயணித்தோம். பயணிக்க வேண்டியதேவை இருந்தது. தேவையை சிங்களம் பெரிதாக்கிய படுத்தியபடியே இருந்தது.
தற்போது ஒன்றும் தெரியாது என்பதும் அப்படியா என்பதும் எம்மை தோல்வியிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சி மட்டுமே. அப்படி விடுவிப்பதால் சிங்களத்துக்கு சார்பான பாதையில் நாம் பயணிக்க தொடங்குகின்றோம் என்பதுடன் 35 வருட எமது பயணத்தையும் பங்களிப்பையும் விட்டு தூர விலகத்தொடங்குகின்றோம் என்பதையும்
மாவீரர் கல்லறைகள் போராளிகள் பொதுமக்கள் என விரியும் சிங்களத்தின் அழிப்புக்கள் தொடர்வதை கண்ணை மூடி அனுமதிப்பதும்
இதன் தொடர்ச்சி அது ஈழத்தில் தமிழர்களே இல்லாமல் செய்யும் (எம்மையும் சேர்த்து) இன அழிப்பின் உச்சத்திலேயே முடியப்போவதையும்மறந்து வருகின்றோம்.
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)




This topic is locked









