Jump to content

மாறன் சகோதரர்களின் சம்ராஜ்ஜியம் சரிகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார்.

இனி அவரிடம் பேசியதிலிருந்து...

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...?

‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின் கடன்களை அடைக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இலவசமாகவே ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தார்.

67 தேர்தலுக்குப் பிறகு தனது எம்.பி. பதவியை விட்டு அண்ணா விலகியதும், அந்த இடத்திற்கு மாறனை நியமிக்கும்படி கருணாநிதி நிர்ப்பந்தித்தார். அதன் காரணமாக அண்ணா மாறனுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.1990-ம் ஆண்டுவரைக்கும் மாறன் வெறும் எம்.பி.தான்.வி.பி.சிங் பதவியேற்ற போதுதான் மத்திய அமைச்சரானார்.அதன் பின்னர்தான் அவருடைய சொத்துக்கள் உயர ஆரம்பித்தது.ஸ்பெக்ட்ரம் ஊழலை தயாநிதிதான் வெளியே கொண்டு வந்தார். அவரே அதில் சிக்கிக் கொண்டார்.’’

அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதுதானே டி.வி.யை ஆரம்பித்தார்கள்?

‘‘உண்மைதான். வி.பி.சிங் உதவியாலும், சில தொழிலதிபர்களின் உதவியாலும் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டில் சன் டி.வி. ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதாதான் முதல்வராக இருந்தார்.அவர் நினைத்திருந்தால் டி.வி. தொடங்கப்படுவதைத் தடுத்திருக்க முடியும்.ஆனால்,அவர் அதைச் செய்யவில்லை.’’

தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் சிவசங்கரன் ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு நெருக்கமாகத் தானே இருந்தார்?

‘‘90-களில் இருந்தே எனக்கு சிவசங்கரனைத் தெரியும். 91-ம் ஆண்டு அவர், ‘தான் ஒரு தொலைக்காட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கு உதவ வேண்டும்’என்றும் கேட்டு என்னைச் சந்தித்தார்.போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எதிரில் நூறு ஏக்கரில் தனக்கு இடம் இருப்பதாகவும், அங்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப் போவதாகவும் கூட தெரிவித்தார். இதற்கு அனுமதி கிடைக்க உதவி கேட்டார்.நான் அவரை அமைச்சர் செல்வகணபதியிடம் போகச் சொன்னேன்.

மறுநாளே, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர் ராமசாமி உடையார் என்னைச் சந்தித்து, குறிப்பிட்ட நூறு ஏக்கர் இடம் தன்னுடையது என்றும், தன்னிடம் இருந்து முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜன், முரசொலி மாறன் ஆகியோர் மிரட்டி பறித்து விட்டனர்’ எனவும் தெரிவித்தார்.

இந்த நிலத்திற்குப் பக்கத்தில் மாறனுக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. எனவே, நூறு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து வளைக்க வேண்டும் என்று மாறன் திட்டம் தீட்டினார். தன் பெயரில் வாங்கினால் பிரச்னை வரும் என்பதால் பினாமி பெயரில் நிலத்தை மிரட்டி வாங்கியிருக்கிறார்.இந்த இடத்திற்குதான் அனுமதி வாங்க சிவசங்கரன் என்னை அணுகியிருந்தார்.

அடுத்ததாக, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை சிவசங்கரன் வாங்கினார். இதற்கும் முழு உதவி செய்தது முரசொலி மாறன்தான்.இதனால் கோபமடைந்த நாடார் சமுதாய மக்கள், தி.மு.க.விற்கு எதிராக தெருவுக்கு வந்து போராடினார்கள். காமராஜர் பிறந்தநாளில் நடந்த பேரணியில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஸ்டாலின் மீது, பேரணியில் கலந்து கொண்டவர்கள் செருப்புகளை வீசினர். கோபமடைந்த கருணாநிதி, ரவுடிகளை வைத்து பேரணிக்குள் புகுந்து அடித்தார். அந்தப் பேரணி நடிகர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.’’

ஆனால், அந்த மக்களின் கோரிக்கைப்படி, மெர்க்கண்டைல் வங்கி மீண்டும் நாடார் சமுதாய மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டதே?

‘‘ஆமாம். வேறுவழியில்லாததால் மாறன் அறிவுறுத்தல்படி, சிவசங்கரன் 150 கோடி ரூபாய்க்கு வங்கியை விற்றுவிட்டார். நாடார் மக்களை திருப்திப்படுத்த சரத்குமாரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கருணாநிதி. அதன்பின்தான் சிவசங்கரன் ஆர்.பி.ஜி., ஏர்செல் போன்ற நிறுவனங்களைத் தொடங்கினார்.’’

முரசொலி மாறனோடு நெருக்கமாக இருந்த சிவசங்கரன் தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன?

‘‘தேவேகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய் என அடுத்தடுத்த பிரதமர்கள் காலத்தில் மாறன் தொடந்து மத்திய அமைச்சராகவே இருந்தார்.இந்த காலகட்டங்களில் தன் குடும்பத்தை மட்டுமே அவர் பெருமளவு விரிவுபடுத்தினார். அவர் குடும்பத்தில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் புதிதாக முளைத்தன.

2004-ம் ஆண்டு கிட்னி பாதிப்பால் அவர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.மாறனின் தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த சிவசங்கரனை கலாநிதிக்கும், தயாநிதிக்கும் பிடிக்காமல் போனது. தயாநிதி அமைச்சரானதும்,தன் ஏர்செல் நிறுவனத்தை விரிவுபடுத்த சிவசங்கரன் முடிவு செய்தார்.முறைப்படி இதற்காக விண்ணப்பங்களை அவர் அனுப்பிக் கொண்டே இருந்தார்.ஆனால் அதற்கு அனுமதி கொடுப்பதில்லை என்கிற முடிவோடு இருந்தார் தயாநிதி மாறன்.

இந்தப் போராட்டத்தில் சிவசங்கரனை தொழிலில் இருந்தே வெளியேற்ற நினைக்கிறார்கள் மாறன் சகோதரர்கள். ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிம் என்கிற மலேஷிய நிறுவனத்துக்கு விற்கச் சொன்னார்கள். மிரட்டல் தாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனத்தை விற்றார் சிவசங்கரன்.’’

மேக்ஸிம் நிறுவனத்துக்கும் மாறன் சகோதரர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் ஏன் ஏர்செல்லை குறிப்பிட்ட நிறுவனத்திடம் விற்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்?

‘‘ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய அனந்தகிருஷ்ணன் என் நண்பர்தான். இந்த வழக்கு தொடர்பாக அரசு விசாரணை கமிஷன் அமைத்த பிறகு, அனந்த கிருஷ்ணனையே அழைத்து வந்து உண்மையைப் பேச வைப்பேன். இதற்குப் பின்னணியில்ரி.ஞி. சகோதரர்களின் (கலாநிதி, தயாநிதி) பங்கு, எவ்வளவு பணம் பரிமாறப்பட்டது என எல்லா விவரங்களும் ஆதாரத்தோடு என்னிடம் இருக்கிறது.’’

இந்த காலகட்டங்களில் சிவசங்கரனை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?

‘‘தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தபோது, 2005-ல் நான் டெல்லி சென்றிருந்தேன்.அங்கு ஹோட்டலில் சிவசங்கரனை தற்செயலாக சந்தித்தேன்.என் அறைக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. அது மாறனிடம் இருந்து வந்தது எனப் புரிந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து கிளம்பினார்.

தன் அப்பாவின் பணத்தை சிவசங்கரனிடம் இருந்து பறிக்கும் முயற்சியில்தான் அவருக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.சகோதரர்களின் நெருக்குதல் தாங்க முடியாமல் சிவசங்கரன் அமெரிக்கா போய்விட்டார்.அவர் மீதுள்ள கோபத்தை சிவசங்கரனின் ஸ்டெர்லிங் டவர்ஸ் நிறுவனத்தின் மீது காட்டியதில், ஊழியர்கள் ஆறுபேர் சிறைக்குப் போனார்கள்.’’

2ஜி வழக்கில் தயாநிதி மாறனுக்கு எப்படியெல்லாம் தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

‘‘இந்த அலைக்கற்றை ஊழலைத் தொடங்கி வைத்ததே தயாநிதிதான். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது,அவர் தலைகால் புரியாமல் ஆடினார். தமிழகத்தில் யாருக்கும் டி.வி.சேனல் தொடங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. அவர்கள் நினைத்தால் ஒரு டி.வி.யை ஆக்கவோ, அழிக்கவோ முடியும் என்கிற நிலைதான் இருந்தது.

2004-ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோதே அலைக்கற்றை ஊழலில் அவர் பெருமளவு கொள்ளையடித்து விட்டார்.அந்தப் பணம்தான் 2009 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

2 ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா ராஜினாமா செய்ததும், கபில்சிபல் அந்தத் துறை பொறுப்பை ஏற்கிறார். சிவராஜ்பட்டீல் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் அறிக்கை மூலம்தான் தயாநிதி மாறனின் வேடம் கலைகிறது. அலைக்கற்றை உரிமங்களை தன் விருப்பப்படி விற்பனை செய்யவும்,அதற்கான அதிகாரத்தை தான் ஒருவனே எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு அவரது கனவைத் தகர்த்தது.

2 ஜி உரிமத்துக்காக பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாநிதிக்கு பெருமளவு முன்பணம் கொடுத்திருந்தன. அதை அவர்கள் புதிய அமைச்சர் ராசாவிடம் தெரிவித்தபோது, ‘தயாவிடம் கொடுத்ததை அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள். எனக்கு புதிதாக தரவேண்டும்’ என்று கூறுகிறார் ராசா. இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த தயாநிதி, தன்னிடம் இருந்த ஆவணங்களை ஊடகங்கள் மூலம் வெளியிட வைத்து, ராசாவை சிறைக்கு அனுப்பினார். இப்போது அந்த ஆவணங்களே தயாவுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

அலைக்கற்றை வழங்கும் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் தயாவுக்கும் இடையே ஏராளமான தொழில் தொடர்புகள் உண்டு. அதில் ஒரு அம்சமாக சன் டி.வி.யின் பங்குகளை அதிக விலை கொடுத்து ரிலையன்ஸ் வாங்கியது. இதனால் மார்க்கெட்டில் சன் டி.வி.யின் பங்குகளுக்கு விலை கூடியது.இந்த லாபத்தை தாங்களே அனுபவிக்க நினைத்த மாறன் சகோதரர்கள், அதற்கு முன்னரே சன் டி.வி.யில் கருணாநிதிக்கு இருந்த பங்குகளை பிரித்துக் கொடுத்தனர்.’’

2 ஜி ஊழலுக்கு முக்கிய காரணம் தயாநிதி மாறன் என்று கூறுகிறீர்கள். இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

‘‘தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு உதவியாளராக இருந்தவர்தான் ஆ.ராசாவுக்கும் உதவியாளராக இருந்தார். தயாநிதி மாறனின் பணம் நெதர்லாந்து நாட்டுக்குப் போய், அங்கிருந்து திரும்பி இந்தியாவுக்கு வந்த கதையெல்லாம் இப்போது மெல்ல மெல்ல வெளியே வருகிறது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்புக்கு முழுக் காரணமும் தயாநிதி மாறன்தான்.அவர் அமைச்சரான பிறகு கலாநிதியுடன் சேர்ந்து தன் தொழிலை பெருமளவு விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 32 தொழில்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் வெளிநாடுகளிலும் பணத்தைச் சுருட்டி வருகிறார்கள்.

சுமங்கலி கேபிள் விஷன் மூலம் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டி வைத்திருக்கிறார்கள். 2005-ல் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தபோது,தங்கள் தாத்தா மூலம் கவர்னரிடம் பேசவைத்து தீர்மானத்தையே முடக்கினார்கள்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகியிருப்பதால்,இந்த கேபிள் டி.வி. மசோதா தூசுதட்டப்படுகிறது. சன் டி.வி.யோ எம்.எஸ்.ஓ. என்ற தகுதிகளைக் கைப்பற்ற ரகசியமாக திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து பெரும் சூழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இதற்காக பெருமளவு பணம் செலவு செய்யப்படுகிறது.

எம்.எஸ்.ஓ.க்களைக் கைப்பற்ற சாக்ஸ் என்ற சக்ஸேனாவை களமிறக்கியுள்ளார்கள். இவரின் மோசடிகள் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்திய எந்த மோசடியை விசாரிக்கத் தொடங்கினாலும்,அதற்குள்ளிருந்து ஏராளமான மோசடிகள் வெளிவருகின்றன.கருணாநிதி குடும்பத்தினரின் முகமூடியைக் கிழித்தெறிந்து, அவர்களின் அவலங்களை எல்லாம், மக்கள் முன் தோலுரித்துக் காட்டும் நாள் நெருங்கிவிட்டது’’ என்று மர்மமாக முடித்தார் நடராஜன்.

- குமுதம் ரிப்போட்டர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவையொட்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையின் நோக்கத்துடன் இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பி தீர்மானகரமான நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் தமிழ் கார்டியனிடம் பேசிய காலமர், இலங்கையின் போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது நீதி வழங்குவதற்கான உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்துவது உட்பட, நீதிக்கான தற்போதைய போராட்டத்தையும் சர்வதேச தலையீட்டின் முக்கியமான தேவையையும் எடுத்துரைத்தார்.     https://www.tamilguardian.com/content/exclusive-amnesty-international-chief-calls-sri-lanka-referral-un-security-council    
    • மாவீரர்களுக்கும் தலைவருக்கும் இறுதிப் போரில் இறந்த மக்களுக்கும் வீரவணக்கங்கள்.
    • Published By: DIGITAL DESK 7  19 MAY, 2024 | 10:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என்று பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. மே மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்த தகவல்களில் கூறப்பட்டன. இந்த தகவல்களுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதிலளிக்கையில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது என கேள்வியெழுப்பியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் கூறினார். இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சட்ட விதிகளின் பிரகாரம் 2024ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட சனிக்கிழமை ஒன்றில் நடாத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஒக்டோபர் மாதத்தில் முதல் வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவில் சாதகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கின்ற நிலையில், அந்த கட்சியின் மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினர் ஜனாதிபதி ரணிலை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சந்திப்பு பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடன் இடம்பெற்ற ஒன்றாகும். மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியும் பல அரசியல் கட்சிகளுடனும்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது. அத்துடன் அநுர பிரியதர்ஷன யாப்பா தலமையிலான புதிய அரசியல் கூட்டணியும் ரணில் விக்க்கிரமசிங்கவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/183926
    • வணக்கம். 🙏 வயசானாலும், குறும்பு போகவில்லை..🌷👍😜  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.