பொங்கலோ பொங்கல் என்றந் நாளில்
பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில்
இந்நாள்
பொங்கலா பொங்கல் வந்து போகட்டும்
எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே
வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம்
தாங்கும் நிலையில் தமிழர் உளரோ?
காய்கறி விலையோ கைக்குள் இல்லை
வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில்
வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில்
ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும்
அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும்
எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர்
எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம்
காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி
தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத்
தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள்
தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை
தமிழ்நாட் டலுவலர் ஒப்பத்தில் தமிழில்லை
தமிழ்நாட்டுக் கோவிலில் தழைக்கும் தமிழில்லை
தமிழன் தமிழ்ஆங்கிலம் கலந்து பேசலால்
தமிழன் பேச்சை "தமிங்கிலம்" என்றார்
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்
பிழைக்க வந்தோர்மொழிப் பிதற்றல் பெரிதுண்டு
குழைக்கும் குழந்தைநா அம்மை அப்பரை
"மம்மிடாடி" என்றே மயங்கி அழைக்கிறது
கும்மிருட்டில் தமிழர் வாழ்வைக் கொட்டுகின்றார்
கோட்டையில் கோலோச்சத் தமிழில்லை தமிழர்
நாட்டுக் கடைப்பெயரில் தமிழில்லை தமிழர்
வீட்டுஅடுப் பறைவரை வேற்றுமொழி ஆட்சி
மீட்டும் தமிழே வேண்டும் வேட்பினரே
வாட்டிப் பூட்டும் வன்தமிழர் ஆட்சி
நாட்டில் ஒளிபரப்பி நன்றாய்க் கொழுத்த
கதிர்தொலைக் காட்சி தமிழன் கண்டதாம்!
படித்துசுவைத்தவை ..........நன்றி வெப் துனியா
Edited by நிலாமதி, 13 January 2011 - 04:19 PM.























