மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது தங்கள் ஆதாரங்களை பார்க்கின்ற போது.....
சிவப்புபுள்ளி தடை செய்யப்பட்டு
பச்சைப்புள்ளிகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்
எனக்கு
கைகள் கட்டப்பட்டு
பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு
ஆயுதம் பாவிக்கக்கூடாது என்று எம்மினத்தை கட்டிவைத்துக்கொண்டு
சிறீலங்காவுக்கு ஆதரவையும் ஆயுதங்களையும் கொடுத்து எம்மை அழித்த சர்வதேசத்தின் நிலையைத்தான் தங்களது புள்ளிகளும் தரவுகளும் சொல்கின்றன.
ஒவ்வொருத்தரும் ஆளுக்கு பல பெயர்களில் வந்து குத்தும் பச்சையை எண்ணும் தாங்கள் நிர்வாகத்திடம் கேட்டு இத்திரிக்கு சிவப்பும் குத்தலாம் என்று திறந்து பார்த்துவிட்டு அதை ஒரு தரவாக பாவித்திருக்கவேண்டும்
எனக்கும் அமரர் வசம்பு அவர்களுக்கும் தனிப்பட எந்த தொடர்புமில்லை. விருப்பு வெறுப்புக்களுமில்லை. அதேகருத்து பரிமாறல் மட்டுமே. அதன் மூலமே அவரை நான் அறிந்து வைத்திருக்கின்றேன். அவர் எழுதியதை வைத்தே அவர் மீதான எனது கணிப்பு இருக்கும்.
ஏனெனில் எதை அவர் விதைத்தாரோ அதையே அறுவடை செய்யமுடியும்.
அதேநேரம் இந்த கருத்துக்களத்திலேயே இத்தனை விசத்தை விதைத்த ஒருவர் தனது குடும்பத்திலும் உற்றார் உறவினர் நண்பர்களிடமும் எதை விதைத்திருப்பார் என்பதே எனது தனிப்பட்ட பெறுமதியை அவருக்கு கொடுக்கும்.
நீங்கள் ஒருவர் இறந்துவிட்டால் எல்லாவற்றையும் மறக்கும் பக்குவமுள்ளவராக இருப்பது தங்களை நல்ல மனிதர் என்று வேண்டுமானால் சொல்ல உதவும். ஆனால் அது இறந்தவரை நினைவு கூற போதுமானது அல்ல.
நன்றி
குகதாசன் அண்ணா, இதில எழுதிற அநேகரிலும் நிச்சயமா எனக்கு வயசு குறைய. உண்மையச்சொன்னா எனக்கு 24 வயசு. 2006 மார்கழி மட்டும் தாயகத்தில இருந்து அங்கேயே உயர் தரமும் கற்று பின்னர் பட்டப் படிப்பின் நிமித்தம் புலம் பெயர வேண்டிய தேவை இருந்தது. தாயகத்திலே பல விசயங்களை கண்டு அனுபவித்த நான் என்னும் வகையில் எனது கருத்துக்கள் அமைகின்றன. இந்த திரியிலே, வசம்பு அவர்களின் கருத்துகளுடன் நான் ஒத்தப் போகிறேன் என எந்த இடத்திலும் கூறவில்லை. அவருக்கு இருக்கும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட உரிமை. கருத்துக்களுக்கு அப்பால் ஒரு சக மனிதன், கருத்தாளன் எனும் வகையிலேயே அவரை நோக்குகின்றேன். எனக்கு அவர் சாகுமட்டும் முகமும் தெரியாது, ஒருநாள் கூட அவர் தனிமடலில் என்னுடன் தொடர்பு கொண்டதும் கிடையாது. இறந்து போன ஒருவர் பற்றி இனிமேலும் நான் கருத்துக் கூற விரும்பவில்லை. அது மற்றயவர்களின் மனதை நிச்சயம் புண்படுத்தும். ஒருவரில் இருக்கும் நல்ல பக்கத்தை எம்மில் பலர் எப்பவுமே கண்டு கொள்வதில்லை.
Edited by Thumpalayan, 26 October 2010 - 12:19 AM.
















