Jump to content

மே 19ஐக் கடந்த தமிழத்தேசியம் சாத்தியம்.


Recommended Posts

மே 19, 2009ஐக் கடந்த நாட்களில் பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகப் பல மட்டங்களிலும் தெரிவது தமிழ்த்தேசியம் என்பது வெறுங் கற்பிதம் மட்டுமே என்பது. அதாவது தமிழன் என்ற தனித்துவம் மட்டுமே உண்டு தமிழர் என்ற பொதுமை கிடையாது என்பது. இந்தப் பார்வையை முற்றாக உதாசீனம் செய்வதற்கில்லை. ஆனால் வளர்;த்தால் குடுமி வழித்தால் மொட்டை என்று எதையும் நாம் பார்க்க முடியாது. அந்த வகையில் தமிழர் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சிலதைப் பகிர்ந்து கொள்வதற்கான பதிவிது.

இற்றைக்கு இருபது ஆண்டுகளிற்கு முன்னர் பதின்ம வயதுச் சிறுவனாக சிங்கப்பூர் வந்தேன். அகதி விண்ணப்பத்தைக் கனடாவில் கையளிப்பதற்குச் சிங்கப்பூரில் சில நாட்கள் நின்றே செல்ல முடியும் என்று எமது பயண முகவர் கூறியதை நாங்கள் சிரமமேதுமின்றி நம்பியிருந்தோம். இயக்கங்களின் பாசறைகளைப் போல பயண முகவர்களிற்கும் விடுதிகள் அடையாளங்களளோடு இருந்தன. எங்கள் விடுதிகளும் ஒருவகையில் பாசறைகளாகவே எங்களிற்குப் பட்டது. இலக்கு நோக்கிய பயணங்களில் சிரமங்கள் அர்த்தம் பெறுவது இயல்பு. எங்கள் விடுதியில் எங்களிற்கு முன்னரே பலர் வந்து காத்திருந்தார்கள். பிரச்சாரப் பிரிவு இராணுவப் பிரிவு மேலும் இன்ன பல பிரிவுகளாக முந்தயை இயக்கப் பாசறைகள் கண்டதைப் போல, கனடாக் காரர், லண்டன் காரர், ஜேர்மன் காரர், இதர நாட்டுக்காரர்கள் என்று எங்கள் விடுதியிலும் பிரிவுகள் இருந்தன. இயலுமான விரைவில் இடத்திற்குச் சென்று நம் அகதிக்கோரிக்கைகள் வெற்றிபெற்றுவிடவேண்டும் என்ற எண்ணம் எம் மனங்களுள் ஒரு தியான மந்திரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால், நாடுகளைத் தாண்டி நாங்கள் ஒரு பிணைப்பினை உணர்ந்தோம். முகவர் தரும் நாளாந்த பத்து டொலர்களிற்குள் சிக்கனப் படுத்திச் சேமித்து, மில்லியன்கள் தரமுடியாத மகிழ்வோடு சிங்கப்பூரைச் சுத்திப் பார்த்தோம். அளவளாவி மகிழ்தோம். பெற்றோரைப் பிரிந்த முளுச் சுதந்திரத்தை உணர்ந்தோம் ஆனால் பெற்றார் சார்ந்து உறுதிகள் மனதுள் பிறப்பதையும் உணர்ந்தோம். பலர் மலேசியா சென்று சென்று தங்கள் விசாக்களைப் புதுப்பித்துக் காத்திருந்தார்கள்.

நம்ப முடியாவண்ணம், வெறும் நான்கு நாட்களிற்குள் கனடாப் பயணம் தயார் என்றார் முகவர். கனடா செல்ல முன்னர் வேறும் தரிப்புக்கள் உண்டு என்று தெரிந்தபோதும், நான்கு நாட்களிற்குள் சிங்கப்பூரில் இருந்து கிளம்புவது ஒரு பாரிய வெற்றியாக அன்று கருதப்பட்டது. பயண நாளில் அதிகாலை ஐந்து மணிக்கே தயாராகி நிலம் வெளிக்கும் முன்னர் ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பத் தயாரானோம். அந்த விடுதியில் எம்மோடு பழகியவர்களில் ஒருவரை மட்டும் காணவில்லை. அவர் எங்கே என்று எவரிற்கும் தெரியவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்ள முடியவில்லையே என்ற கனத்த மனத்துடன் எமது விமானநிலையம் நோக்கிய பயண வாகனத்தில் நாம் ஏறச் சென்ற போது நாம் தேடியவர் மூச்சிரைக்க ஓடி வந்தார். கையில் ஒரு வெத்திலையும் அதில் விபூதி சந்தண குங்குமமும் இருந்தன. ஒவ்வொருவராய் பிரசாதம் தந்து வெற்றியாய்ப் எங்கள் பயணம் அமைவதற்காய்த் தான் அதிகாலை எங்கள் முன் எழுந்து கோவிலிற்கு நடந்து போய் அர்ச்சனை செய்து வந்ததாய்ச் சொன்னார். அவர், எங்களிற்கு பல கிளமைகள் முன்னரே சிங்கப்பூர் வந்து ஜேர்மனி செல்வதற்காகக் காத்திருந்தவர். அவரது பயணம் பற்றிய எந்தத் தகவலும் அவரிடம் இல்லை. இருந்தும், எங்களிற்காக அந்தத் தமிழர் தியானித்தார். இருபது ஆண்டுகள் கடந்தும் இன்றும் அம்முகம் என் மனதில். என்னைத் தெரிந்த அனைவரிற்கும் அவரைத் தெரியும். இச்சம்பவத்தைத் தெரியும்.

அண்மையில் சுவிற்சலாந்தின் சூறிச்சிற்கும் ஜேர்மனியின் ஸ்ரூற்காட் நகரிற்கும் எதிர்பாராக் குறும் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். சூறிச் புகையிரத நிலையத்தில் எதையோ வாங்க நினைத்தவன் சுற்றிப் பாhத்த இரு செகன்டுகளில் கண்ணில் கடை தெரியாத போது, வழமையான சோம்பேறித்தனத்தால், நேரம் அதிகம் இருந்தும் நானாக நடந்து தேடாது அருகில் நின்றவரை கடைபற்றி விசாரித்தேன். எனது வடஅமெரிக்க ஆணவத்தை நானுணர்ந்த ஒரு தருணமாக அது அமைந்தது. நான் விசாரித்தவர் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கையை விரித்தார், எனக்கு அது புதினமாய் இருந்தது. ஆங்கிலம் நாகாஸ்த்திரம் அல்ல என்ற கடுப்பில் நின்ற இடத்தில் செக்குமாடு போன்று சோம்பேறித்தனமாக கடையை ஒரு ஐந்து நிமிடம் கண்களால் துளாவிக்கொண்டிருந்தேன். யாரோ முதுகில் தட்டினார்கள். திரும்பியபோது, வணக்கம் என்ன தேடுறியள் என்றது தமி;ழ் முகம். ஏறத்தாள நாற்பது வயது மதிக்கலாம். கடை பற்றிச் சொன்னேன். தானே அழைத்துச் சென்று நான் தேடியதைப் பெற்றுத் தந்துவிட்டு வேலைக்கு மீளவேண்டு;ம் என்றார். நன்றியுணர்வோடு கனதூரமா வேலை என்றேன். இல்லை இதோ என்று அருகிருந்த உணவகத்தைக் காட்டினார். புரியாது நான் விழித்தபோது கூறினார். தான் வேலையில் நின்றதாயும் நான் விசாரித்தவன் ஆங்கிலம் தெரியாது என்று கூறியபோது நான் முளித்தபடி எதையோ தேடியதைத் தான் கவனித்ததாயும், நான் ஒரு தமிழர் தான் என்று தான் ஊகித்துக் கொண்டதால் தனது பணியிட முகாமையாளரிடம் பத்துநிமிட ஓய்வு கூறி எனக்கு உதவத் தான் வந்ததாயும் கூறினார்.

என்னால் நம்பமுடியவில்லை. நான் என்ன மாரடைப்பு மாத்திரையா தேடினேன். சோம்பேறித்தனத்தால் நேரம்போக்கச் சஞ்சிகை தேடிய நான் தமிழன் என்பதால், மொழி தெரியாத நான் தேடியதைப் பெற்றுத் தர ஒரு தமிழன் பத்துநிமிட ஓய்வு கூறி வந்தமை உண்மையில் உள்ளுக்குள் எதையோ செய்தது.

கனடாவில் சுப்பர்ஸ்ரார் யூனியர் என்று ஒரு நிகழ்வு தமிழ் தொலைக்காட்சியில் நடைபெறுகிறது. இது தொடர்பாக ஒரு விளம்பரப் பலகை நகரின் சில பகுதியில் பிரமாண்டமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. நானறிந்த, “யூ ஸ்ரில் ஸ்பீக் ரமில்?” பேர்வழிகளிற் சில, இந்நிகழ்வில் போட்டியிட்டுப் பாடும் மழலைகளின் திறமையை உணர்ச்சி வசப்பட்டு விபரித்ததையும் நிகழ்ச்சி தொடர்பான பிரமாண்டமான விளம்பரத்தைப் பற்றிப் பெருமையாய்ப்பேசியதும் தமிழர் என்ற பொதுமைக்கு ஆதரவாக இவ்வாதத்தில் முன்வைக்கப்படக்கூடியன.

எனக்குத் தெரிந்த ஒருவர். ஐம்பதுகளில் வயது அவரிற்கு. புலியைத் திட்டுவது இவரது இயல்பு. அதுவும் கிளிநொச்சி விழுந்த நாட்களில் கூட நொந்து போனவர்களைத் தேடித் தேடி தலைமை அழியத் தான் பிரார்த்திப்பதாய்க் கூறிய ஒரு மனிதர். எதேச்சையாய் ஒரு கடையில் அண்மையில் சந்திக்க நேர்ந்தது. சனம் அல்லல் படுவது பற்றிக் கூறினார். கனடாவிற்குக் கப்பலில் வந்த அகதிகள் பற்றிப் பரிவோடு பேசினார். பிறகு அனைத்திற்கும் முத்தாய்ப்பாய்த் தானறிந்த ஒரு செய்தி பற்றிப் பொருமிக் கொண்டு கூறினார். அதாவது, ஒரு ஈழத்தமிழ் பெண், அப்பெண் இதர நாடொன்றைச் சேர்ந்த தமிழர் ஒருவரை மணந்திருந்தாராம், அந்தத் தமிழர் அப்பெண்ணைப் பொருளாதார ரீதியில் பலமாக ஏமாத்தி இப்போது விவாகரத்து நடந்துவிட்டதாம். இச்செய்தி பற்றி அவர் இப்டிச் சொன்னார்: “எங்கட பிள்ளையை ஏமாத்திய அந்த ---ஐ ஏதாவது செய்யோணும் போலக் கிடக்கு”;. ஏனோ இந்தமனிதர் வாயால் “எங்கட பிள்ளை” என்ற வசனம் வந்தது குறிப்பிடும்படியாய் எனக்குப் பட்டது.

“ரமில்ஸ் எம்பாறஸ் மீ” பேர்வழி ஒன்று, அண்மையில் எரிபொருள் நிரப்பு நிலையயத்தில், எனது வாகனத்தின் பின் தனது போர்ஷ் கயானிற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தது. தனது மகவை தமிழ் வகுப்பிற்கு அழைத்துச் செல்வதாயும், அதனால் தான் அவசரப்படுவதாயும் தானாய்க் கூறியது. அப்போது எனக்குப் படவில்லை, வீடுசென்று கொண்டிருக்கும் போது தான் ஒரு மின் குமிழ் எனது மூழையில் ஒளிர்ந்தது. மேற்படி செய்தியினை மேற்படி நபர் என்னிடம் தமிழில் கூறியிருந்தார்.

சென்ஜோன்சில் படித்தமை உயர்வு என்றும், ஆனந்தராஜாவின் மரணம் மட்டுமே போராட்டம் ஒடுக்கப்படுவதற்குப் போதுமான காரணம் என்றும் கருதும் இன்னுமொருவர் அண்மையில் கூறினார் யாரோ தெரிந்தவர் வாயிலாக சில உதவிகளை ஊரில் தான் செய்துகொண்டிருக்கிறாராம் என்று.

“தீஸ் ப்புறோட்டஸ்ற்ஸ் அன்ட் த ஸ்ற்றகிள் பிசினஸ் ற்ரானிஷ் அவ பிறான்ட்” என்று பொருமித்தள்ளும் ஒருவர் வன்னியில் ஒரு பல்கலைக்கழகத்தை வடஅமெரிக்க வசதிகளுடன் தனது வாழ்நாளில் தான் நிறுவிவிடவேண்டும், எங்கள் மண் கல்வியில் கொடிகட்டவேண்டும் என்பது தனது பேரவா என்று சொன்னார். எதனால் வன்னியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்கத் தோன்றினும், அதற்கான விடையினை என்னால் ஊகிக்க முடியும் என்பதால் கேட்காது விட்டேன்.

வேறு எந்தக் காரணமும் இன்றி, ஈழத்தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இன்னுமொருவர் சார்பில் ஒரு பிணைப்பை, அல்லது அதிர்வை உணர்பவர்கள் பல மட்டங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். அதுவும் பெரும்பான்மை என்று கூறுமளவிற்கு நிறையவே இருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் என்பது கற்பிதம் எனபவர்கள் விடும் பெரும் தவறாக எனது பார்வையில் படுவது வரைவிலக்கணம் சார்ந்தது. அதாவது, சோழன் காலத்துப் பெருமையில் தொடங்கி பெரியாரிசம் வாயிலாக திராவிடர்களக வர்ணனைகள் மூலம் பலரும் பெற்றுக் கொண்டிருந்த “தமிழர்” என்றால் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதில் தான் பிரச்சினை இருப்பதாய் எனக்குப் படுகிறது.

அதாவது கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்தகுடி என்ற கற்பிதத்தில் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நாங்கள் மற்றையோரிலும் உயர்ந்தவர்களாகவும், பெருமைக்குரியவர்களாகவும் தனித்துவமானவர்களாகவும் தான் இருக்கவேண்டும் என்ற புரிதல் கேள்விக்குட்படுத்தப்படவேண்டியது. போகின்ற இடங்களில் நாங்கள் காண்கின்ற புதியன அப்புதிய தளங்களின் மக்களைப் போலவே எங்களிற்கும் பிடிப்பதை நாங்கள் உணர்கின்ற அதே வேளை நாங்கள் தனித்துவமானவர்கள் உயர்ந்தவர்கள் என்று திருப்பத்திருப்ப உரத்துக் கூற வேண்டிய தேவை ஒன்றும் எங்களிற்குள் ஏனோ தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. உண்மையில் இது ஒரு திணிக்கப்பட்ட தேவையாகவே எனக்குப் படுகின்றது.

தமிழர் என்பவர் மற்றைய அனைத்து மனிதர்களில் இருந்தும் முற்றிலும் தனித்துவமான மூத்த பெருங்குடி என்ற வாதம் விசித்திரமானது. உண்மையில் இந்த வாதத்தை அடிப்படைவரை ஆராய்ந்தால், அப்படியாயின் தமிழர் மனிதர் இல்லையா என்ற கேள்விக்குக் கூட அது வழி சமைக்கும்.

புலப்பெயர்வைப் பற்றிப் புகைந்து பாடுவது இலக்கியத்திற்கு அழகு என்ற ஒரு எழுதாவிதி ஏற்பட்டுள்ளதைப் போல, பலரும் உண்மையில் தாயகத்தைப் புகழ்ந்து புகலிடத்தை இகழ்ந்து பேசுவது ஒரு வழமையாகிவிட்டது. ஆனால், உண்மையில் எத்தனை புதிய சிந்தனைகள் விருப்பங்கள் வெறுப்புக்கள் இயல்புகள் புகலிடம் சார்ந்து தங்களிற்குள் உருவாகியுள்ளது, அவற்றைத் தாங்கள் எத்தனை தூரம் விரும்புகின்றோம் என்ற உண்மையை மறைத்துப் பலர் தாயகத்தைப் புகழ்வதைக் கட்டாயம் என்று கருதுகிறார்கள். ஊரிற்குச் சென்று விட்டு, இரு கிழமைகளிற்குள் எப்படா வீட்ட போவம் என்று ஏங்கி வந்த பலர், மிகப்பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வீட்டபோவம் என்றதும் அவர்கள் நினைவில் வரும் வீடு புலத்தில் இருப்பதை ஏற்றுக் கொள்வது பாவம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

எங்கட தமிழ்த் தேசியத்திற்கான அடிப்படை முதலில் அதைச் சிதைப்பதில் இருந்து தான் ஆரம்பிக்கமுடியும். இப்படிக்கூறுவது முரண்நகைபோன்று தோன்றினாலும் உண்மையில் இது முரணற்ற செய்தி. பேசப்படவேண்டி உள்ள ஒரு செய்தி.

முதலில் தமிழர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் இருந்து நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். செம்மொழி என்று கூறுவதன் வாயிலாகவோ அல்லது மற்றைய எல்லோரிற்கும் முன்னர் நாங்கள் வந்திட்டம் என்று சொல்லுவதாலயோ, அல்லது எங்கட பெறுமதிகளும் பண்பாடுகளும் மற்றைய எல்லாரை விடவும் வித்தியாசமானவை என்று சொல்லுவதாலாயோ தான் தமிழ்த் தேசியத்தைக் காப்பாத்தலாம் கட்டியெழுப்பலாம் என்ற சிந்தனைய முதலில் நாங்கள் மீள் பரிசீலனை செய்யவேண்டும். பெருமை என்பது காலம் சாhந்த தொன்மையால் தான் சாத்தியம் என்று கருதத் தேவையில்லை. மனிதனைக் காட்டிலும் டைனசோர் பெருமை மிக்கது என்று காலத்தை மட்டும் காரணம் காட்டி எவரும் சிந்திப்பதில்லை.

அடிப்படையில் நாங்கள் கோமோசேப்பியன் சேப்பியன் என்ற மனிதர்கள். மற்றையவர்கள் பற்றி நாங்கள் அறியாத விடயங்களை, நாங்கள் அறியவில்லை என்பதால் மட்டும் எங்களிற்கான தனித்துவ பண்புகள் அல்லது பெறுமதிகள் என்று நாம் நினைத்து விட முடியாது. அவ்வாறு நினைப்பதை முதலில் நாங்கள் நிறுத்தவேண்டும். எங்களது பாரம்பரியங்களாக நாங்கள் கருதிய பலவற்றை, எங்களில் இருந்து பல வகையில் தூரப்பட்ட இனங்களில் நாங்கள் காணும் சந்தர்ப்பங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. நாம் இதுவரை காணாத பல ஒற்றுமைகளையும் கூட எதிர்காலத்தில் நாம் இதர இனக்குழுமங்களில் காண நேரலாம். தேவை சார்ந்த ஒடுக்குமுறைகள் (சாதியம் மற்றும் பிரதேசவாதம் உள்ளடங்கலாக) போட்டிகள், பொறாமைகள், காலைவாரல்கள், சண்டைகள், சச்சரவுகள் போன்ற இகழப்படும் குணவியல்புகளாயினும் சரி புகழப்படும் குணவியல்புகளாயினும் சரி, எங்களை ஒத்த விடயங்கள் இதர இனங்களிலும் இருக்கவே செய்கின்றன. வடிவங்கள் மாறுபட்டுக் கிடக்கலாம், அல்லது புவியியல் சாhந்;து வெளிப்பாடுகள் மாறுபட்டுக் கிடக்கலாம் ஆனால் அடிப்படைகள் ஒரே வகையின. எங்கள் பிரச்சினைகளிற்கான தீர்வுகளை மற்றையவரின் தீர்வுகளில் இருந்தும் நாம் கற்றுக் கொள்ளலாம். அது அபச்சாரம் ஆகிவிடாது. மொத்தத்தில் நாங்கள் தற்போது ஒரு முக்கிய சந்தியில் நிற்கிறோம். எங்களைப் புடம்போட எங்களைப் பற்றி நாங்கள் அறிய இது உகந்த தருணம்.

எல்லாரையும் போன்றது தான் தமிழ்த்தேசியமும் என்றால் பிறகேன் அதை நாம் போற்ற வேண்டும் தக்க வைக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி சிலரிற்கு எழலாம். பில் கிளின்டன் சொன்னதைப் போல “இற் இஸ் த எக்கோனமி ஸ்ரூப்பிற்” என்பது இக்கேள்விக்குப் பொருத்தமாயிருக்கும். ஆனால் அதற்கு மேலும் சங்கதி உள்ளது. இனக் குழுமம் குழுமமாக இருப்பதன் பொருளாதார நலன்கள் பற்றி அனைவரிற்கும் தெரியும் என்பதால் அதைப் பற்றி இங்கு கூறத் தேவையில்லை. ஆனால், எங்களிற்குப் பிடித்த இசை எங்களிற்குப் பிடித்த கலை எங்களிற்குப் பிடித்த உணவு முதலியன தொடர்ந்தும் எங்களிற்குக் கிடைக்கவேண்டும் ஆயின், அதற்கும் நாங்கள் அவற்றைத் தொடர்;ந்தும் விரும்புவது அவசியம். அதற்கும் குழுமம் உதவும். மேலும், நாடுகளைக் கடந்து நேரங்களைக் கடந்து, தமிழன் என்பதால் மட்டும் இன்னுமொரு மனிதன் மீது எமக்குக் கவனம் குவிகிறது, பரிவு ஏற்படுகிறது என்றால் அது மனிதத்திற்கு ஏற்புடையது ஆரோக்கியமானது. இந்நிலை தொடர்வதற்கும் தமி;ழ் குழுமம் தொடர்வது அவசியம். மேலும், உலகின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திருப்பத்திருப்ப அனைவரும் கதைப்பதான இருத்தலியல் போட்டி இருந்து கொண்டே இருக்கும். இப்போட்டிக்கும் குழுமங்கள் தங்களிற்குள் ஒருவரை ஒருவர் கவனிப்பது நிச்சயம் ஆதாயமானது. எங்களிற்குச் சாரம் கட்டிச் சப்பாணி கொட்டியிருந்து கதையழந்தபடி கடலை தின்னப் பிடிக்கும் என்றால், அதே பிடிப்புடைய மேலும் பலர் இருப்பது நாங்கள் எங்களிற்குப் பிடித்ததை ஒளிக்காது வெளிப்படையாய்ச் செய்வதற்கு உதவும். இப்படிப்பல. அப்படி நாங்கள் விரும்புவதால் அதற்கான சந்தையினை அந்த விருப்பம் உருவாக்கிப் பொருளாதரத்தில் புது முனைகளிற்கு உதவும்.

மொத்தத்த்தி;ல் தமிழத் தேசியம் என்பது இது வரை மலைப்புக்களிலும், பிரமிப்புக்களிலும், எமது நாளாந்த வாழ்விற்கு அப்பாற்பட்டவைகளிலும், சில சமயம் எமக்குப் புரிய முடியாதனவைகளிலுமே கட்டியெழுப்பப்பட்டிருந்தது. அந்நிலை சிதைக்கப்பட்டே ஆகவேண்டும். சின்னச் சின்ன விடயங்களில் நாங்கள் மீளத் தொடங்கவேண்டும். எம்மோடு, எமது நாளாந்த வாழ்வோடு சார்ந்து அடிப்படைகளில் இருந்து எங்களை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும். அது எங்கள் அனைவரிற்கும் அனுகூலமானதாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

உள்ளடக்கம் விவாதத்திற்கு உரியது. ஆயினும் மிக அருமையான ஒரு கட்டுரை. சக தமிழனைக் காணும் பொழுது விலகிச் செல்லாமல் நெருங்கிச் செல்லத் தூண்டுகிறது

Link to comment
Share on other sites

ஒரு தமிழரைக் கண்டவுடன் தமிழர் என்ற காரணத்தினால் பரிவும் அக்கறையும் ஏற்படுகின்றது என்பது வழக்கம் ஆயினும் அது மொழி சார்ந்த பரிவா அல்லது இனம் சார்ந்த பரிவா?

அத்துடன் சாதி பிளவு, பிரதேச வாதம் என்பன வெறும் போட்டியின் அடிப்படையில் எழுவது என்பதை ஏற்க முடியவில்லை

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களின் பின் உரையாடுவதில் மகிழ்ச்சி சபேசன். நீங்கள் உடன்பட மறுக்கும் விடயங்களை முன்வையுங்கள். விவாதங்கள் நன்மையாகலாம்.

நிழலி,

“தேவைசார்ந்த ஒடுக்குமறைகள்” என்ற பதத்தை ஒருவேளை நான் தெளிவாக முன்வைக்கவில்லையோ என்று படுகிறது. சாதியம் மற்றும் பிரதேசவாதம் அடிப்படையில் எங்கனம் உருப்பெற்றிருக்கும் என்ற விசாரணையின் வெளிப்பாடவே அப்பதத்தை முன்வைத்தேன். அதாவது, சாதியம் பிரதேசவாதம் என்பன இன்று என்னென்ன காரணங்களிற்காக தக்கவைக்கப்படுகின்றன, மற்றும் எவ்வாறு அச்சிந்தனைகள் உருப்பெற்றன என்று பார்த்தால் தேவையும் ஆசையும் அங்கு தெரிவது வெளிப்படை. இம்முனையில் சுகனுடன் முன்னர் ஒரு பதிவில் அதிகம் பேசியதால் வாசகரை வெறுப்பேற்றக்கூடாது என்பதால் அதிகம் பேசவில்லை. மதங்கள் தான் சாதியத்தின் அடிப்படை என்று சொல்வோருண்டு. ஆனால் மதங்களும் மனிதனால் தானே உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கியவர்கள் ஏன் சாதிய சிந்தனையைச் செருகினார்கள் என்று ஆராய்ந்தால் அங்கும் தேவையும் ஆசையும் தெரிகின்றன. நான் ஆராய்ந்த வரை தேவை ஆசை என்பனவற்றைத் தாண்டி சாதியத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணம் என்று ஒன்றை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. நீங்கள் கண்டிருந்தால் அறியத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

இன்னுமொருவன், உங்கள் கட்டுரையை பார்த்தபோது முதல் அரைப்பகுதி, அடுத்த கால்ப்பகுதி, இறுதிக் கால்ப்பகுதி என மூன்று இடங்களில் முறிவுகளை காணமுடிகின்றது.

1. முதலாவது பகுதியில் நீங்கள் விபரிக்கின்ற விடயம் அனைத்து மனிதர்க்கும் பொதுவானது.

2. இரண்டாவது பகுதியில் மனிதர் எனும் விடயத்திற்கு வருகின்றீர்கள். ஆனால் முதல் அரைப்பகுதியில் விபரித்தவிடயம் அடுத்த கால்ப் பகுதியில் விபரிக்கப்படும் குறிப்பிட்ட இந்த மனிதர் சம்மந்தமானது என்பதை தெளிவாக இனம்காணவில்லை என்று நினைக்கின்றேன்.

3. இறுதிக் கால்ப்பகுதி முதல் அரைப்பகுதிக்கு ஆதரவு கொடுக்கின்றது, அதன் தொடர்ச்சியாகக்கூட வருகின்றது. ஆனால் அதற்கு முந்திய கால்ப்பகுதியில் இருந்து விலகிச்செல்கின்றது.

உங்கள் கட்டுரைபற்றிய முதலாவது அபிப்பிராயமாக இதையே என்னால் கூறமுடிகின்றது. பிறகு மீண்டும் சமயம் கிடைத்தால் தொடர்ந்து எனது கருத்தையும் கூறுகின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

நீங்கள் கடைசிப் பந்தியில் எழுதியதுதான் எனது தீர்வும்.

இமயத்தை கட்டிவிட்டோம் இனி அதன் மேல் எவெரெஸ்டை கட்டுவது தான் எஞ்சியிருக்கு என்கின்றார்கள்.ஆனால் அத்திவாரமே ஆடிவிட்டது.

Link to comment
Share on other sites

கரும்பு,

நீங்கள் கூறும் விதமாகவும் பார்க்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். இன்னுமொரு கோணத்தில் பார்த்தால், முதல் பந்தியில் கூறப்பட்ட விடயம் தான் கட்டுரையின் கருப்பொருள் அதாவது தமிழத்தேசியம் என்பது என்ன என்பது பற்றியது. தமிழத்தேசியம் கற்பிதமே என்று கூறுமளவிற்கு எத்தனை வேறுபட்ட பார்வைகள் தமிழ்த்தேசியம் தொடர்பில் எங்களிற்குள் உண்டென்பதைப் பேசுவதற்காகவே, இன்னோரன்ன சந்திப்புக்கள் அடுத்த பந்திகளில் உள்ளடக்கப்பட்டன--கடந்த இருபது ஆண்டுகளிற்குள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் நடந்த சந்திப்புக்கள் இவை. எனினும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதாக இவர்களிற்குள் இளையோடிய சக தமிழர் மீதான பரிவு இத்தொடர்பற்ற சந்திப்புக்களை இணைக்கும் எனத் தோன்றியது. இந்த வேற்றுமையில் ஒற்றுமை விடயத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து தமிழ்த்தேசியம் தொடர்பான வரைவிலக்கணம் நோக்கி நகர்வதால் நீங்கள் சொன்ன தொடர்பீனம் ஓருவேளை தோன்றலாம், ஆனால் தொடர்பிருப்பதாய் எனக்குப் பட்டதாலேயே அவ்வாறு எழுதினேன். சில சமயங்களில் நாங்கள் வாசிக்க விரும்பும் வடிவம் நாங்கள் எழுதுவனவற்றிலும் வருவது தவிர்க்கமுடியாததாகிப் போகின்றது. எனினும் நீங்கள் முன்வைத்த விமர்சனத்தை நிச்சயம் உள்வாங்கிக் கொள்கின்றேன். உங்கள் விவரமான விமர்சனத்திற்கு நன்றிகள்.

அர்யுன்,

வாசித்துக் கருத்துக் கூறியமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

வேறு எந்தக் காரணமும் இன்றி, ஈழத்தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இன்னுமொருவர் சார்பில் ஒரு பிணைப்பை, அல்லது அதிர்வை உணர்பவர்கள் பல மட்டங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். அதுவும் பெரும்பான்மை என்று கூறுமளவிற்கு நிறையவே இருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் என்பது கற்பிதம் எனபவர்கள் விடும் பெரும் தவறாக எனது பார்வையில் படுவது வரைவிலக்கணம் சார்ந்தது. அதாவது, சோழன் காலத்துப் பெருமையில் தொடங்கி பெரியாரிசம் வாயிலாக திராவிடர்களக வர்ணனைகள் மூலம் பலரும் பெற்றுக் கொண்டிருந்த “தமிழர்” என்றால் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதில் தான் பிரச்சினை இருப்பதாய் எனக்குப் படுகிறது.

உண்மையில் தமிழர் என்றால் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து எக்காலத்திலும் பேசப்படவிலை. சேரன் சோழன் பாண்டியன் என்றும் புலிக்கொடி மீன்கொடி வில்கொடி என்றும் அகநாநூறு புறநாறு எல்லாம் மேத்தா கவிதையில் கூறியது போன்று சோழன் பாண்டினை மிதித்ததையும் பாண்டியன் சேரனை உதைத்தயும் தான் பேசுகின்றது. இந்த அரசுகள் தமக்குள் காலகாலத்துக்கும் மல்லுக்கட்டி ஒருவன் இடத்தை ஒருவன் ஆக்கிரமித்து பெண்டுகளின் மூக்கறுத்து முலையறுத்து கிடந்தார்கள். தமிழனுக்குள் தமிழன் கடிபட்டதுதான் வரலாறு. பின்னாளில் திராவிட இயக்கம் காலத்தின் தேவையாக இருந்தபோதும் அவை தமிழ்த்தேசியம் என்ற அடிப்படைக்குள் தமது செயற்பாட்டை கொண்டிருக்கவில்லை.

போராட்ட காலத்தில் தமிழ்த்தேசியம் முதன்மைப்படுத்தியதும் இந்த பழம் பெருமைகளைத்தான். சோழனும் சேரனும் பாண்டியனும் வரவழைக்கப்பட்டனர் வணிகங்களுக்கு பெயராக வைக்கப்பட்டது. புறநாநூறும் அகநாநூறும் கரிகாலனும் சோழனும் என பாடல்கள் இசைக்கப்பட்டது. பண்டாரவன்னியனும் சங்கியனும் காணாமல் போனார்கள். இவர்கள் தமிழர்களாக தங்களது நிலத்திற்காக என்னுமொரு இனத்துடன் போராடியவர்கள். எமது தாயகத்தின் வரலாறுகள். இவர்களை மீள அடயாளப்படுத்துவதன் ஊடாக எமது இருப்பின் வலிமையை சிங்களத்திற்கும் உலகிற்கும் எடுத்துரைத்திருக்கமுடியும். ஆனால் அவற்றை செய்யவில்லை. இவைகள் முதன்மைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் கருத்துக்கள் பெருமளவானவர்களிடம் இருந்தபோதும் அவைகள் நிராகரிக்கப்பட்டு ஆழக்கடலில் சோழன் போனதும் இமயத்தில் கொடி எற்றினதும் முக்கியம் என்றார்கள். இறுதிக்கட்டத்தில் சுடலை ஞானம் போல் எல்லாளன் பெயர் இழுக்கப்பட்டது.

இவற்றைக் குறிப்பிட காரணம் தமிழர் என்றால் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை யார் வரையறுக்கின்றார்கள்? தமிழர்கள் உடை இது சாப்பாடு இது பேச்சுவழக்கு இது தமிழர்களுக்கான கலை பரதநாட்டியம் என காலைத் தூக்கிக்கொண்டு நிற்பது என்று தமிழர்களையும் தமிழ்த்தேசியத்தையும் வரையறைசெய்வது இதுவரைகாலம் மேட்டுக்குடிசிந்தனைமுறையே. பெரும்பான்மைத்தமிழனின் வாழ்வியல் யதார்த்தம் இந்தச் சிந்தனைமுறைக்குள் உட்படுவதில்லை.

நீங்கள் கூறுவது போன்று ஈழத்தமிழர் என்ற அதிர்வை பிணைப்பை உணர்வை ஏற்படுத்துபவர்கள் பலமட்டங்களில் இருக்கவே செய்கின்றார்கள். இதை வலிமைப்படுத்தவேண்டுமாயின் தமிழத்தேசியம் குறித்த மேட்டுக்குடி சிந்தனைமுறையை நிராகரிக்கவேண்டும். சோழன் சேரன் செங்குடுவன் திருக்குறள் கண்ணகி பரதநாட்டியம் என்பதைக்கொண்டு தமிழர் என்ற சிந்தனைமுறையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் கூட்டத்திடம் இருந்து விடுவித்துக்கொள்ளவேண்டும்.

அதாவது கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்தகுடி என்ற கற்பிதத்தில் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நாங்கள் மற்றையோரிலும் உயர்ந்தவர்களாகவும், பெருமைக்குரியவர்களாகவும் தனித்துவமானவர்களாகவும் தான் இருக்கவேண்டும் என்ற புரிதல் கேள்விக்குட்படுத்தப்படவேண்டியது. போகின்ற இடங்களில் நாங்கள் காண்கின்ற புதியன அப்புதிய தளங்களின் மக்களைப் போலவே எங்களிற்கும் பிடிப்பதை நாங்கள் உணர்கின்ற அதே வேளை நாங்கள் தனித்துவமானவர்கள் உயர்ந்தவர்கள் என்று திருப்பத்திருப்ப உரத்துக் கூற வேண்டிய தேவை ஒன்றும் எங்களிற்குள் ஏனோ தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. உண்மையில் இது ஒரு திணிக்கப்பட்ட தேவையாகவே எனக்குப் படுகின்றது.

தமிழர் என்பவர் மற்றைய அனைத்து மனிதர்களில் இருந்தும் முற்றிலும் தனித்துவமான மூத்த பெருங்குடி என்ற வாதம் விசித்திரமானது. உண்மையில் இந்த வாதத்தை அடிப்படைவரை ஆராய்ந்தால், அப்படியாயின் தமிழர் மனிதர் இல்லையா என்ற கேள்விக்குக் கூட அது வழி சமைக்கும்.

கவனிக்கப்படவேண்டியதும் இது குறித்து நிறைய பேசப்படவேண்டியதுமான கருத்து. இந்தக் கூற்றுக்கள் பெரும்பாலும் தமிழர்களுக்குள் சுழன்றுகொண்டிருப்பவை. தமிழர்கள் தமது தொன்மையை இவ்வாறு பிற இனங்களுக்குச் சொன்னதாக இல்லை. அந்தவகையில் இந்தக் கூற்றுக்களுக்கான தேவை தமிழர்களுக்குள் தமிழர்களை அடிமைப்படுத்துதல் குறித்தே தேவைப்படுகின்றது. மேலும் இவ்வாறான கூற்றுக்களின் அடிப்படை கடவுள் சார்ந்த மூடநம்பிக்கையுடனும் சம்மந்தப்பட்டது.

இந்த கல்லும் மண்ணும் தோன்றமுதல் நாங்கள் தோன்றிவிட்டோம் என்று ஒற்றைவரியில் திண்ணையில் இருந்த புளிச்சல் ஏவறை விட்டுக்கொண்டு வரலற்றை ஏழுதியாச்சு. காலகாலத்துக்கும் நாங்கள் இப்படியே சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்தார் நரிகள் பரிகளாயின என்றுகொண்டிருக்கின்றோம்.

மேலும்...

Link to comment
Share on other sites

கவனிக்கப்படவேண்டியதும் இது குறித்து நிறைய பேசப்படவேண்டியதுமான கருத்து. இந்தக் கூற்றுக்கள் பெரும்பாலும் தமிழர்களுக்குள் சுழன்றுகொண்டிருப்பவை. தமிழர்கள் தமது தொன்மையை இவ்வாறு பிற இனங்களுக்குச் சொன்னதாக இல்லை. அந்தவகையில் இந்தக் கூற்றுக்களுக்கான தேவை தமிழர்களுக்குள் தமிழர்களை அடிமைப்படுத்துதல் குறித்தே தேவைப்படுகின்றது. மேலும் இவ்வாறான கூற்றுக்களின் அடிப்படை கடவுள் சார்ந்த மூடநம்பிக்கையுடனும் சம்மந்தப்பட்டது.

இந்த கல்லும் மண்ணும் தோன்றமுதல் நாங்கள் தோன்றிவிட்டோம் என்று ஒற்றைவரியில் திண்ணையில் இருந்த புளிச்சல் ஏவறை விட்டுக்கொண்டு வரலற்றை ஏழுதியாச்சு. காலகாலத்துக்கும் நாங்கள் இப்படியே சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்தார் நரிகள் பரிகளாயின என்றுகொண்டிருக்கின்றோம்.

மேலும்...

கல் தோண்றி மன் தோண்ற முன் தோண்றியது என்பது எதுகைக்காக எழுதப்பட்டது... கல் எண்றால் கல்வி மன் எண்றால் மன்னர்கள்... அதாவது அரசியல் தோண்றமுன்னம்... !

இன்னும் விளக்கமாக சொன்னால் நாகரீக வளர்ச்சி அடையும் முன்னர் தோண்றிய மொழி... அதையும் விட விளக்கமாக சொன்னால் மனிதன் தொடர்பாடல்களை பேண ஆரபித்த காலங்களிலேயே தோண்றிய மொழி... (இதை மெகஞ்சதாரோ ஹரப்பா நகர்கள் இருந்த இடங்களில் கிடைக்கும் மண்சில்லைகளில் பொறிக்கப்பட்டு இருக்கும் தமிழ் பிராமி எழுத்துக்களும் ஆதாரபடுத்துகின்றன... )

ஒரு மொழியையும் மொழி சார்ந்தவர்களையும் விமர்ச்சிக்க முன்னம் அதை பற்றி தீர விசாரித்துக்கொள்ளுங்கள்...

Link to comment
Share on other sites

சுகன்,

கட்டுரையினை முளுமையாய் வாசித்து, விவாதத்தி;ற்கு வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கிரமமாக உங்கள் கருத்துக்களை வைத்ததற்கு முதற்கண் நன்றிகள்.

நான் உங்கள் கருத்தைப் புரிந்துகொண்டவரை, உங்கள் கருத்துக்கள் நீங்கள் மேற்கோள் காட்டிய எனது கருத்துக்களோடு உடன்படுவதாகவே உணருகின்றேன். நீங்கள் முன்வைக்கும் "தமிழர்" என்றால் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றி எப்போதும் பேசப்படவில்லை என்ற விடயம் தொடர்பில் பின்வருவதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழினத்தின் உயர்விற்கும் சிறப்பிற்கும் ஏற்புடைய விதத்தில் "தமிழர்" என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பேசப்படவில்லை என்பதை மறுக்கவில்லை. இந்தக் கட்டுரையின் ஆதங்கமும் முன்மொழிவும் அதைநோக்கியது தான். ஆனால் "தமிழர்" என்றால் எவ்வாறு இருக்கவேண்டும் என்று காலத்திற்குக் காலம் அவரவர் தத்தம் நலன்கள் சாhந்து பேசிக்கொண்டிருந்தார்கள் என்து மறுக்கமுடியாதது. சோழனில் தொடங்கிப் பேசப்பட்டதாக நான் குறிப்பிட்டது தமிழர் வீரம், தமிழர் விருந்தோம்பல், தமிழர் தொன்மை, தமிழர் மொழியின தன்னிகரின்மை, தமிழர் நெறிகள் என அவரவர் தங்கள் நலன் சார்ந்து ஏற்படுத்திய ஏற்படுத்திக்கொண்டிருக்கும் உரையாடல்கள் பற்றியன. திராவிடர்களம் பற்றிய ஆராய்ச்சித் தரத்தில் அமைந்த தரவுகள் என்னிடம் இல்லை. ஆனால், திராவிடர்களம் என்பதன் பெயரிலாவது மேடைப்பேச்சுக்களாகவோ அல்லது இதர வடிவங்களிலோ "தமிழர்" என்பது பற்றிய வர்ணனைகள் காலத்திற்குக் காலம் நடைபெறவில்லை என்றோ அக்கருத்துக்கள் எம்மவரில் தாக்கம் செலுத்தவில்லை என்றோ கூறிவிடமுடியாது என்றே நான் கருதுகின்றேன். திரும்பவும் கூறுவது அவசியம், "தமிழர்" என்றால் யார் என்பது பற்றிய பேச்சுக்கள் தூரநோக்கோடும் தெளிவோடும் தன்னலம் இன்றி இனத்தின் இருப்பிற்கும் உயர்விற்குமாகப் பேசப்பட்டதாக நான் இங்கு கூறவில்லை. ஆனால் அவரவர் அப்பப்போது தமிழர் என்றால் இது தான் அவர்களின் குணவியல்புகள் என்று பேசினார்கள் என்றே கூறுகி;ன்றேன். உங்கள் கருத்தை நான் புரிந்தவரை இதையே நீங்களும் கூறுவதாகவே எனக்குப் படுகிறது.

இனி இந்த மேட்டுக்குடி விடயம் சார்ந்தது. இதில் எனது கருத்து என்னவெனில், தமிழரும் மனிதர்கள், இதர இனக்குழுமங்களை ஒத்த பண்புகளே எங்களிடமும் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளுவோமே ஆனால், எங்களிற்குள்ளும் மேட்டுக்குடியின் பாத்திரம், அது இருக்கும் வகையில் ஏன் இருந்து வருகின்றது என்பதைப் புரிய முடியும். உலகின் வெற்றி பெற்ற சமுகங்களாக இன்று கருதப்படும் சமூகங்களிலும் இன்றுவரை இந்த இலீற்றிஸ்ற் எதிர் பொப்பியூலிஸ்ற் வாதமும் புடுங்குப் பாடுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மனிதன் உள்ளவரை அதிகாரம் மற்றும் அங்கீகாரம் நோக்கிய நகர்வுகள் இனங்களிற்கிடையேயும் இனங்களிற்குள்ளேயும் தலைகாட்டவே செய்யும். ஆனால் சிந்தனை மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் இப்புடுங்குப்பாடுகளை ஒரு வேளை சற்றுக் கோரம் குறைந்தனவாய் மாற்றலாம்.

மதம் என்பது மனிதன் உருவாக்கியது என்ற அடிப்படையில் அம்மனிதனின் தன்மைகள் அவன் உருவாக்கியனவற்றில் திணிக்கபட்டிருப்பது எதிர்பார்க்கக்கூடியது. இம்முனையில் நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை.

இறுதியாக ஒரு விடயம், நாங்கள் ஏற்கனவே பலமுறை பேசிக்கொண்டதைப் போல, அனைவரும் முற்றுமுழுதாய் சமத்துவம் என்ற சமூகக் கட்டமைப்புச் சாத்தியமற்றது. ஆனால் தத்தமது முயற்சிகளின் வாயிலாகவும், தத்தமது முன்னேற்றத்திற்காக அவரவர் சுதந்திரமாய் முயலக்கூடிய சூழலிற்காக குழுமங்கள் உழைப்பதன் வாயிலாகவும், ஒரே பகுதியினர் தான் எப்போதும் சமநிலைத்தராசின் தாழ்ந்தபகுதியில் இருக்கவேண்டும் என்ற நிலை மாற்றப்படக்கூடியது. இவ்விதத்தில், உங்கள் கருத்தோடு நான் உடன்படாத ஒரு விடயம் மேட்டுக்குடியினர் என்று பொதுமைப்படுத்தி நீங்கள் முன்வைக்கும் கோபம். பொதுமைப்படுத்தப்பட்ட கோபங்கள் சிந்தனைக்குத் தடையானவை என்பது எனது அபிப்பிராயம். எமது சிங்களக் கோபம் என்ற அனுபவத்திலும் இதற்கான ஆதாரங்கள் பெறக்கூடியவண்ணம் உள்ளன. மேட்டுக்குடி என்று தன்னைக் கருதும் ஒருவர் மேட்டுக்குடியில்லாதோர் என்று அவர் கருதுவோர் மீது பொதுமைப்பாடாகக் கொண்டிருக்கக் கூடிய அபிராயத்தை ஒத்ததே மேட்டுக்குடி அல்ல தான் என்று கருதும் ஒருவர் மேட்டுக்குடி என்று தான் கருதுவோர் மீது கொண்டிருக்கக் கூடிய பொதுமைப்பாடான அபிப்பிராயமும். இவை இரண்டுமே ஆரோக்கியமற்றவை. தமிழர் என்ற பதம் மீது அக்கறையுடையோர், தமிழரும் இதர குழுமங்களைப் போன்ற உள்ள வேறுபாடுகளுடனேயே இருக்க முடியும் என்பதை ஏற்று இவ்வேற்றுமைகளிற்குள் ஒற்றுமையாக அனைவரிற்கும் அனுகூலமானதான விடயங்கள் பற்றிச் சிந்திப்பது தமிழ்த்தேசியத்தின் வலிமைக்கு உதவும் என்பது எனது கருத்து. இதற்குத் தான் அனைவரிற்கும் பொதுவான சின்னச் சின்ன விடயங்களில் இருந்து நாம் ஆரம்பிப்பது அவசியமாகிறது. தமிழர் என்பதற்காக சகதமிழர் மீது ஒருவரிற்கு ஏற்படும் பரிவு அல்லது பிணைப்பு அல்லது அதிர்வு எங்கள் அனைவரிற்கும் இனிமையானதாகவே இருக்கின்றது. அத்தகைய சந்திப்புக்கள் பற்றி அறிவது எங்கள் அனைவரிற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் புரிதலைப் பற்றிக்கொண்டு, சின்னச்சின்ன விடயங்களில் தொடங்கி எங்களுக்கான பொது அவா எது, நாங்கள் எப்படி வாழ ஆசைப்படுகின்றோம் என்பனவற்றில் ஒரு பட்ச பொதுமை ஒன்றை நாங்கள் அடையாளப்படுத்தி அதை நோக்கி முனையலாம். நாங்கள் வளரவளர இந்த குறைந்தபட்ச பொதுமை என்பதும் வளர்ந்துகொண்டு செல்லும் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

"தமிழர்கள் உயர்ந்தவர்கள்" என்பதன் அடிப்படையில் தமிழ் தேசியம் கட்டியமைக்கப்படவில்லை.

தமிழர்கள் மற்ற இனங்களைப் போன்று சமமாக நடத்தப்பட வேண்டும் என்கின்ற போராட்டமே தமிழ் தேசியப் போராட்டமாக வடிவம் பெற்றது.

மற்ற இனங்களைப் போன்று நாமும் தனித்துவமான பண்பாட்டைக் கொண்டவர்கள் என்பதும் எமது நிலத்தை முன்னர் ஆண்டு கொண்டிருந்தவர்கள் என்பதும் இந்த போராட்டத்தில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டது.

இழிவானவர்களாகவும், அடக்கப்படக்கூடியவர்களாகவும் எம்மை பற்றி மற்றவர்களும், எம்மவர்களும் கருதி விடக் கூடாது என்பதன் சிந்தனையில் இது நடந்தது.

எந்த இடத்திலும் மற்ற இனங்களை விட உயர்ந்தவர்களாக நாம் எம்மைக் காட்டிக் கொண்டதாகவோ, கருதிக் கொண்டதாகவோ எனக்கு நினைவில்லை.

ஆயினும் உங்கள் கட்டுரை "தேசியம்" என்பதை அரசியல் வரவிலக்கணங்களுக்கு அப்பால் சென்று உணர்வு சார்ந்த அணுகுகின்றது.

"தேசியம்" என்பது ஒரு "உணர்வு" என்பதை இத்தனை அழகாக சொன்ன ஒரு கட்டுரையை நான் படித்தது இல்லை. உங்களுக்கு நன்றி.

"தேசியம்" என்பது முள்ளிவாய்க்காலில் அழிந்து போய்விடவில்லை, அது ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு ஒரு கடையைக் காட்டி விடுவதில் கூட இருக்கிறது என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது போன்று நாம் சிறு சிறு விடயங்களில் இருந்து ஆரம்பிப்போம். ஆனால் எதையும் சிதைக்க வேண்டியது இல்லை. நீங்கள் சொன்ன அளவிற்கு இனம் சார்ந்த உயர்குடி எண்ணம் எம்மிடம் இல்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

கல் தோண்றி மன் தோண்ற முன் தோண்றியது என்பது எதுகைக்காக எழுதப்பட்டது... கல் எண்றால் கல்வி மன் எண்றால் மன்னர்கள்... அதாவது அரசியல் தோண்றமுன்னம்... !

இன்னும் விளக்கமாக சொன்னால் நாகரீக வளர்ச்சி அடையும் முன்னர் தோண்றிய மொழி... அதையும் விட விளக்கமாக சொன்னால் மனிதன் தொடர்பாடல்களை பேண ஆரபித்த காலங்களிலேயே தோண்றிய மொழி... (இதை மெகஞ்சதாரோ ஹரப்பா நகர்கள் இருந்த இடங்களில் கிடைக்கும் மண்சில்லைகளில் பொறிக்கப்பட்டு இருக்கும் தமிழ் பிராமி எழுத்துக்களும் ஆதாரபடுத்துகின்றன... )

ஒரு மொழியையும் மொழி சார்ந்தவர்களையும் விமர்ச்சிக்க முன்னம் அதை பற்றி தீர விசாரித்துக்கொள்ளுங்கள்...

தமிழினத்தின் தொன்மையையும் பெருமையையும் உணர்த்தும் வகையில் புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூலில் ஜனாரிதனார் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்தப் பாடலில்

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றி மூத்தகுடி”

என்ற வரிகள் மிகவும் புகழ் பெற்றவை.

மனிதன் தொடக்க காலத்தில் மலையில் வாழ்ந்து வந்தான் ஏனென்றால் அங்கேதான் அவன் வேட்டையாடி உண்ணுவதற்கான விலங்குகளும், பறவைகளும் இருந்தன. இயற்கையில் விளையும் பழங்களும் கிழங்குகளும் தேனும் கிடைத்தன. இரவில் ஒண்டுவதற்கு இயற்கை தந்த வீடாக குகைகளும் இருந்தன.

மலையும் மலை சார்ந்த இடத்தையும் தமிழ் அகப் பொருள் இலக்கணம் குறிஞ்சி என்கிறது. மனிதன் பிறகு மலை வாழ்க்கையின் சிரமங்களை உணர்ந்து ஆடு மாடுகளை பழக்கிக் காட்டில் வசித்தான் தமிழ் அகப்பொருள் இலக்கணம் காட்டையும் காடு சார்ந்த இடத்தையும் முல்லை என்கிறது. காட்டு வாழ்க்கையில் பல சிரமங்களை அனுபவித்த மனிதன் (அப்துல் றசாக் வாத்தி) உணவுப் பயிர்களை விளைவித்து அறுவடை செய்யும் கலையைக் கற்றுக்கொண்டான். அப்போது அவன் வசித்த இடம் நதிகளோடும் சமவெளிப் பிரதேசமாகும். தமிழ் அகப் பொருள் இலக்கணம் வயலையும் வயல் சார்ந்த இடத்தையும் மருதம் என்கிறது. தமிழில் கல் என்ற சொல் மலையைக் குறிக்கும். சங்க இலக்கியத்தில் பெருங்கல்நாடான் என்று வருகிறது. இதற்கு மலை நாட்டைச் சேர்ந்தவன் என்று பொருள். கம்பன் கல்இயங்கு கருங்குர மங்கையர் என்கிறார். இதற்கும் மலையில் வாழ்கின்ற கரு நிறமுள்ள குளத்தியர் என்று பொருள். எனவே கல்தோன்றி என்றால் மலைதோன்றி என்று பொருள். அதாவது மலை வாழ்க்கையாகிய குறிஞ்சி வாழ்க்கைத் தோன்றி என்று பொருள் மண் சிறப்புப் பொருள்களில் விவசாய நிலத்தைக் குறிக்கும். எனவே மண்தோன்றாக் காலம் என்றால் வயல் தோன்றாக் காலம் என்று பொருள் அதாவது மனிதன் விவசாயத்தை அறியாத காலம் என்று பொருள் கல்தோன்றி மண் தோன்றாக் காலம் என்பது மனிதன் ஆடுமாடுகளை பழக்கி காட்டில் வாழ்ந்த முல்லை நில வாழ்க்கையை குறிக்கும். மனிதன் மலையில்தான் தோன்றி வாழ்ந்தான் என்றாலும் அவன் நாகரீகமடைந்து முல்லை வாழ்க்கை செய்தான். மலையில் வாழும் போது கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தி மனிதன் முல்லை நில வாழ்க்கையின் போதுதான் உலோகத்திலாலான ஆயுதங்களை பயன்படுத்தினான். இந்த உலோகம் கி.மு. 3000லிருந்து தொடங்குகிறது. எகிப்தியர்கள் கி.மு. 3000ல் இரும்பைப் பயன்படுத்தினர். இதே காலகட்டத்திலோ அல்லது அதற்கு சற்று முன்பே இந்தியர்கள் இரும்பை அறிந்திருந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் செய்யப்பட்ட இரும்பு வாள் உலகப் புகழ் பெற்றது. சேக்ஸ்பியர் இந்திய வாள் என்று சிறப்பித்துச் சொல்கிறார். இந்தியாவில் தோன்றிய மிகத் தொன்மையான இனம் தமிழினமே. எனவே இரும்பால் முதல் முதல் வாள் செய்த இனம் தமிழினமே என்பது ஐயத்துக்கு இடமின்றி நிரூபனமாகிறது. இதனைத்தான் ஐயனாரிதனார், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி என்கிறார். கல்தோன்றி மண்தோன்றாக் காலம் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அது முழப்பாடலை பார்க்கும் போது புலப்படும்

மூலம் http://idrees.lk/?p=464

இந்தக் கூற்றுக்கு ஏராளமான விளக்கங்களை சொல்ல முடியும். இதுபோல் ஆயிரமாயிரம் கூற்றுக்கள் அதற்கு ஆயிரமாயிரம் விதமான விளக்கங்கள். கருத்தின் நோக்கம் இவ்வாறான கூற்றுகள் குறித்த ஆராய்ச்சியோ விவாதமோ அல்ல. மாறாக அடிப்படையில் தொடர்பாடல்க் கருவியான மொழி எவ்வாறு சமூக ஏற்றதாழ்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தே.

கடந்த நூற்றாண்டுவரை மொழி பிழைப்பு அந்தஸ்த்து சம்மந்தப்பட்டது.

//திண்ணைப்பள்ளியில் தொடங்கிய மனப்பாடக்கல்வி பிறகு பெரிய வித்துவான்களிடம் பாடம் கேட்பது, யாப்புக் கட்டுவது, செய்யுள் இயற்றுவது, புரணங்கள் பிரபந்தங்கள் சிலேடைகள் சித்திரக்கவிகள் பதிகங்கள் இயற்றுவது என்று விரிவடைந்தது. சொந்தமாகச் செய்யுள் இயற்றும் திறன் பெற்ற பிறகு ஒருவர் வித்துவான் ஆகி பிழைப்பை தொடங்கிவிடுவார். ராஜ்கெளதமன் ஆய்வு நூலில் இருந்து 11//

மொழி என்கின்ற தொடர்பாடல் கருவி தமிழினத்துக்குள் ஒரு அடக்குமுறைக் கருவியாகவும் கடந்த நூற்றாண்டுவரை இருந்தே வந்துள்ளது. இன்று சமூகத்தின் அனைத்துத் தரப்பிரனருக்கும் பொதுவான ஒன்றாக எம்மால் நோக்கப்படும் இந்த கருவி அதற்கும் மோலான பிழைப்புவாதம் சம்மந்தப்பட்டது. மன்னர்களை அண்டிப்பிழைப்பவர்களும் அந்தஸ்து உள்ளவர்களும் உயர்குடிகளும் இந்தக் கருவியை தம்முடன் வைத்திருந்தனர். பெரும்பான்மை உழைக்கும் மக்களின் தொடர்பாடல் கருவியாக மொழி அந்தந்த வட்டாரவழக்கில் இருந்துவந்தது. அதற்கும் மேலாக அவர்கள் மொழியறிவு பெறுவது தடுக்கப்பட்டது.

மொழி மனிதர்களுக்கிடையிலான ஒரு தொடர்பாடல் கருவி. இந்த அடிப்படை உண்மையை கடந்து மொழி நீண்டகாலமாக அடிமைப்படுத்துதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இடைத்தரகர் என்கின்ற பூசாரிகளை வைத்து புரியாத பசையில் கடவுளுடன் உரையாடிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் பெருமளவில் இருக்கின்றது. மொழிகுறித்த மிகைப்படுத்தல்களுக்கும் மறைபொருள்களுக்கும் கூற்றுக்களுக்கு ஆளுக்காள் அறுபது விளக்கங்களும் மாயைகளில் இருந்து விடுபட்டு மொழியின் முக்கியத்துவம் என்ன அதன் அடிப்படை உண்மை என்ன அதன் பயன்பாடு என்ன என்றளவிலான நிதானம் அவசியமானது. உயிர் தமிழுக்கு என்ற மிகையான வீரவசனங்கள் எப்படி ஒரு தொடர்பாடல்க் கருவிக்கு பொருந்தும் என்றால் அதன் சுட்சுமம் அடக்குமுறை சம்மந்தப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம்.

Link to comment
Share on other sites

மூலம் http://idrees.lk/?p=464

இந்தக் கூற்றுக்கு ஏராளமான விளக்கங்களை சொல்ல முடியும். இதுபோல் ஆயிரமாயிரம் கூற்றுக்கள் அதற்கு ஆயிரமாயிரம் விதமான விளக்கங்கள். கருத்தின் நோக்கம் இவ்வாறான கூற்றுகள் குறித்த ஆராய்ச்சியோ விவாதமோ அல்ல. மாறாக அடிப்படையில் தொடர்பாடல்க் கருவியான மொழி எவ்வாறு சமூக ஏற்றதாழ்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தே.

கடந்த நூற்றாண்டுவரை மொழி பிழைப்பு அந்தஸ்த்து சம்மந்தப்பட்டது.

//திண்ணைப்பள்ளியில் தொடங்கிய மனப்பாடக்கல்வி பிறகு பெரிய வித்துவான்களிடம் பாடம் கேட்பது, யாப்புக் கட்டுவது, செய்யுள் இயற்றுவது, புரணங்கள் பிரபந்தங்கள் சிலேடைகள் சித்திரக்கவிகள் பதிகங்கள் இயற்றுவது என்று விரிவடைந்தது. சொந்தமாகச் செய்யுள் இயற்றும் திறன் பெற்ற பிறகு ஒருவர் வித்துவான் ஆகி பிழைப்பை தொடங்கிவிடுவார். ராஜ்கெளதமன் ஆய்வு நூலில் இருந்து 11//

மொழி என்கின்ற தொடர்பாடல் கருவி தமிழினத்துக்குள் ஒரு அடக்குமுறைக் கருவியாகவும் கடந்த நூற்றாண்டுவரை இருந்தே வந்துள்ளது. இன்று சமூகத்தின் அனைத்துத் தரப்பிரனருக்கும் பொதுவான ஒன்றாக எம்மால் நோக்கப்படும் இந்த கருவி அதற்கும் மோலான பிழைப்புவாதம் சம்மந்தப்பட்டது. மன்னர்களை அண்டிப்பிழைப்பவர்களும் அந்தஸ்து உள்ளவர்களும் உயர்குடிகளும் இந்தக் கருவியை தம்முடன் வைத்திருந்தனர். பெரும்பான்மை உழைக்கும் மக்களின் தொடர்பாடல் கருவியாக மொழி அந்தந்த வட்டாரவழக்கில் இருந்துவந்தது. அதற்கும் மேலாக அவர்கள் மொழியறிவு பெறுவது தடுக்கப்பட்டது.

மொழி மனிதர்களுக்கிடையிலான ஒரு தொடர்பாடல் கருவி. இந்த அடிப்படை உண்மையை கடந்து மொழி நீண்டகாலமாக அடிமைப்படுத்துதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இடைத்தரகர் என்கின்ற பூசாரிகளை வைத்து புரியாத பசையில் கடவுளுடன் உரையாடிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் பெருமளவில் இருக்கின்றது. மொழிகுறித்த மிகைப்படுத்தல்களுக்கும் மறைபொருள்களுக்கும் கூற்றுக்களுக்கு ஆளுக்காள் அறுபது விளக்கங்களும் மாயைகளில் இருந்து விடுபட்டு மொழியின் முக்கியத்துவம் என்ன அதன் அடிப்படை உண்மை என்ன அதன் பயன்பாடு என்ன என்றளவிலான நிதானம் அவசியமானது. உயிர் தமிழுக்கு என்ற மிகையான வீரவசனங்கள் எப்படி ஒரு தொடர்பாடல்க் கருவிக்கு பொருந்தும் என்றால் அதன் சுட்சுமம் அடக்குமுறை சம்மந்தப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம்.

நீங்கள் சொல்லும் விளக்கம் முதலில் குறிப்பிட்ட கல்லும் மண்ணும் தோண்ற முன்னம் என்பதுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறதே...??

மனிதனின் நாகரீக வளர்ச்சியின் தோற்றுவாய் தனித்து வேட்டையாடியவன் , நான்க்கு ஐந்து பேர் கொண்டசிறு குழுக்களாக வாழ ஆரம்பித்தமைதான்... குழுக்களாக வாழும் போதுதான் அவனுக்கு பரிபாசைகள் தேவையாயின.... அப்போதும் மனிதன் மனிதனாகவே வாழ்கிறான்... குழுக்களாக வாழ்ந்தவன் பல குழுக்களை அடங்கும் ஒரு கூட்டமாக வாழ ஆரம்பிக்கும் போது தான் அவனை வளி நடத்த தலைமை ஒண்று உருவாகின்றது... அங்கே தான் அரசியல் தோண்றுகின்றது...

இந்த அரசியல் தலைமைகள் தான் மனிதனை வகை வேறாக பிரித்து வகை வேறான வேலைகளை பிரித்து ஒவ்வொரு குழுக்களுக்கும் வழங்கி பேதங்களை உருவாக்குகிறது... சிலர் அதை நிர்வாக அலகுகள் எண்றும் மனிதனின் வளர்ச்சி எண்றும் சொல்வார்கள்... ஆனால் அங்கே இலகுவான வேலையோ கடினமான வேலையோ செய்து தலைமைக்கு உதவியவன் உயர்ந்தவனாகிறான், குறைவான வேலை செய்தவன் தாழ்ந்து போகிறான்...

இங்கே மொழி அந்த ஒட்டு மொத்த மக்கள் கூட்டங்களை அடையாளப்படுத்த வேண்டுமானால் பயன் பட்டு இருக்கலாம்... ஆனால் மக்களை வகை பிரித்தது அரசியலும், தலைமைகளின் தோற்றங்களுமே...

Link to comment
Share on other sites

தயா,

நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. அரசியல் அதுசார்ந்த தலைமைகளின் சீர்கேடுகள் தலமைத்துவத்திற்கானபோட்டி போட்டிக்காக ஒவ்வொருவரும் எடுத்தக்கொள்ளும் விடயங்கள் மக்களை கூறுபோடுகின்றது. சிலர் மொழிப்புலமையையும் பழம் பெருமைகளையும் ஏழைகள் எட்டமுடியாத உணவு ஆடை ஆபாரணம் சம்மந்தப்பட்ட கலை கலாச்சாரங்களையும் வைத்துக்கொண்டு இதுவே தமிழரின் அடயாளம் எனத் திணித்து இவற்றின் ஊடாக இனத்திற்கு தலமை தாங்க முற்படுகின்றனர். இங்கே இன்னுமொருவனின் கருத்தில் புலம்பெயர் தேசங்களில் எமக்குள் ஏற்றதாழ்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இணைப்பு ஏற்படுவதற்கான நம்பிக்கை குறித்து சொல்லப்படுகின்றது. இந்தக் கருத்தையே நான் எஞ்சியிருக்கும் நம்பிக்கையாக பார்க்கின்றேன். இவற்றை வலுப்படுத்தவேண்டுமாயின் மேற்சொன்ன போட்டிகள் போட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும் விடயங்கள் குறித்து விமர்சனங்கள் அவசியமாகின்றது.

பலதரப்பட்ட மக்களையும் வழிநடத்தக்கூடிய தலமையும் அதற்கான அமைப்பும் அமைப்பில் அதிகாரம் கருத்துக்கூறும் சுதந்திரம் என அனைத்தையும் பணமே தீர்மானிக்கின்றது. பணமுள்ளவரிடமே பரதநாட்டியம் சாத்தியப்படுகின்றது. இதர ஆடை ஆபரணம் கலாச்சாரம் விமர்சையான சடங்குகள் சாத்தியப்படுகின்றது. இவ்வாறான சாத்தியப்பாடுகளே தமிழருக்கான அடயாளமாகின்றது. கீழே கனேடிய காங்கிரசில் உறுப்பினராவதற்கான பண அறவீடு.

// We know a very large majority of the Tamil Canadians belong to what CTC stands for. In order to legitimize this, we need to have you complete the appropriate forms and officially become a member.

Please note that membership fees are renewed annually. Our membership fees are as follows:

Supporting Member $100.00

Sustaining Member $1000.00

Sponsor Member $5000.00 //

இந்த உறுப்பினர் பண அறவீடு குறித்து என்னிடம் எந்தக் கருத்தும் விமர்சனமும் இல்லை. அதை இங்கே முன்வைப்பது எனது நோக்கமும் இல்லை. நான் சொல்லவரும் விடயம் ஒன்றுதான். பணம் அந்தஸ்த்து மொழிகுறித்த மிகைப்படுத்தல்கள் மக்களுக்கான வழிநடத்தல்கள் அதிகார அடயாளப்போட்டிகளை கடந்து புலம்பெயர் தேசத்தில் நாம் இணையவேண்டும். தாய்நிலத்தை பிரிந்தபின்னர் நாம் ஒருவித அநாதைகள். இன்னுமொருவனின் கருத்துக்களில் தர்க்கரீதியான விடயங்களை கடந்து உணர்வுரீதியாக வேற்றின மக்கள் கூட்டத்துக்குள் ஒரு தமிழ்முகத்தை நாம் ஆத்மார்த்தமாக தேடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இணையமுடியாத அகநிலைப்போட்டிகள் இருக்கின்றது. புலத்தில் நூற்றுக்கணக்கான அன்றாட குடும்ப சடங்குகளில் கூட கல்வி தராதரம் பணம் அந்தஸ்த்து இன்னபிற விடயங்களை முன்வைத்து தெரிந்த முகங்களையே நிராகரிக்கின்றனர். சிலர் அழைத்தும் இந்தவிடயங்களையே பிரதானமாக்கி தாழ்வுச்சிக்கல்களுக்கு உட்பட்டு நிகழ்வுகளை தவிர்க்கின்றனர். இது குறித்து ஒரு புரிந்துணர்வு அவசியமாகின்றது. இந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் உறவுநிலை வலுப்படவேண்டும். ஒரு கூட்டுறவுக்கு அடிப்படையாக பணமோ மேற்கூறப்பட்ட பல்வேறு தகமைகளோ அன்றி அவற்றைக் கடந்த ஒரு பிணைப்பை உருவாக்குதல் அவசியமாகின்றது.

Link to comment
Share on other sites

இறுதியாக ஒரு விடயம், நாங்கள் ஏற்கனவே பலமுறை பேசிக்கொண்டதைப் போல, அனைவரும் முற்றுமுழுதாய் சமத்துவம் என்ற சமூகக் கட்டமைப்புச் சாத்தியமற்றது. ஆனால் தத்தமது முயற்சிகளின் வாயிலாகவும், தத்தமது முன்னேற்றத்திற்காக அவரவர் சுதந்திரமாய் முயலக்கூடிய சூழலிற்காக குழுமங்கள் உழைப்பதன் வாயிலாகவும், ஒரே பகுதியினர் தான் எப்போதும் சமநிலைத்தராசின் தாழ்ந்தபகுதியில் இருக்கவேண்டும் என்ற நிலை மாற்றப்படக்கூடியது. இவ்விதத்தில், உங்கள் கருத்தோடு நான் உடன்படாத ஒரு விடயம் மேட்டுக்குடியினர் என்று பொதுமைப்படுத்தி நீங்கள் முன்வைக்கும் கோபம். பொதுமைப்படுத்தப்பட்ட கோபங்கள் சிந்தனைக்குத் தடையானவை என்பது எனது அபிப்பிராயம். எமது சிங்களக் கோபம் என்ற அனுபவத்திலும் இதற்கான ஆதாரங்கள் பெறக்கூடியவண்ணம் உள்ளன. மேட்டுக்குடி என்று தன்னைக் கருதும் ஒருவர் மேட்டுக்குடியில்லாதோர் என்று அவர் கருதுவோர் மீது பொதுமைப்பாடாகக் கொண்டிருக்கக் கூடிய அபிராயத்தை ஒத்ததே மேட்டுக்குடி அல்ல தான் என்று கருதும் ஒருவர் மேட்டுக்குடி என்று தான் கருதுவோர் மீது கொண்டிருக்கக் கூடிய பொதுமைப்பாடான அபிப்பிராயமும். இவை இரண்டுமே ஆரோக்கியமற்றவை. தமிழர் என்ற பதம் மீது அக்கறையுடையோர், தமிழரும் இதர குழுமங்களைப் போன்ற உள்ள வேறுபாடுகளுடனேயே இருக்க முடியும் என்பதை ஏற்று இவ்வேற்றுமைகளிற்குள் ஒற்றுமையாக அனைவரிற்கும் அனுகூலமானதான விடயங்கள் பற்றிச் சிந்திப்பது தமிழ்த்தேசியத்தின் வலிமைக்கு உதவும் என்பது எனது கருத்து. இதற்குத் தான் அனைவரிற்கும் பொதுவான சின்னச் சின்ன விடயங்களில் இருந்து நாம் ஆரம்பிப்பது அவசியமாகிறது. தமிழர் என்பதற்காக சகதமிழர் மீது ஒருவரிற்கு ஏற்படும் பரிவு அல்லது பிணைப்பு அல்லது அதிர்வு எங்கள் அனைவரிற்கும் இனிமையானதாகவே இருக்கின்றது. அத்தகைய சந்திப்புக்கள் பற்றி அறிவது எங்கள் அனைவரிற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் புரிதலைப் பற்றிக்கொண்டு, சின்னச்சின்ன விடயங்களில் தொடங்கி எங்களுக்கான பொது அவா எது, நாங்கள் எப்படி வாழ ஆசைப்படுகின்றோம் என்பனவற்றில் ஒரு பட்ச பொதுமை ஒன்றை நாங்கள் அடையாளப்படுத்தி அதை நோக்கி முனையலாம். நாங்கள் வளரவளர இந்த குறைந்தபட்ச பொதுமை என்பதும் வளர்ந்துகொண்டு செல்லும் என்பது எனது கருத்து.

உங்கள் கருத்துக்ள் சிந்தனையை தூண்டுகின்றது. இந்தப் பொதுமைப்படுத்தல் ஒரு குழப்பமானநிலைதான் இருந்தும் இவற்றை முற்றாக தவிர்க்க முடியுமா என்பதில் சிக்கல்கள் இருக்கின்றது. மேட்டுக்குடித்தனம் என்பதின் உள்ளார்ந்த அர்த்தமாக நான் பொருளாதார மேம்பாட்டை மட்டும் முன்நிறுத்துவதில்லை மாறாக சாதியம் புத்திஜீவிதம் சமய ஆதிக்கம் பிரதேசவாத ஆதிக்கம் ஊடனா சிந்தனைமுறையை குறிக்கின்றேன். தனியே பொருளாதராம் என்றளவில் பார்த்தால் புலப்பெயர்வு கூட தாயகத்தில் வெளிநாட்டு உதவியற்ற பெருமளவு மக்களுடன் ஒப்பிடுகையில் ஒரு புதிய வர்க்க உயர்நிலையாகவே இருக்கின்றது. மேட்டுக்குடித்தனத்தை தீர்மானிப்பது பொருளாதராம் மட்டும்தான் என்றால் அது சரிசெய்யக் கூடியது மாறக்கூடியது பலவிதத்தில் அனுகூலமானது ஆனால் அவற்றைக் கடந்த ஒரு நிலை உயிர்வாழ்கின்றது என்பதே எனது கோணம். உங்கள் கருத்துக்களில் உள்ள நியாயங்களுடன் உடன்படுகின்றபோது இந்த பொதுமைமப்படுத்தல் குறித்த மாற்று சிந்தனைகளின் அவசியத்தையும் உணர்கின்றேன்.

Link to comment
Share on other sites

சபேசன்,

முதலில் கட்டுரை தொடர்பான உங்கள் கனிவான வார்த்தைகளிற்கு நன்றி.

நீங்கள் கூறுவதைப் போன்று எங்கள் போராட்டம் சமத்துவம் வேண்டியதே அன்றி மேலாத்திக்கம் கோரியது அல்ல என்பதில் எனக்கு முரண்பாடில்லை. நான் கூற வந்த விடயம் என்னவெனில்:

நானும் நீங்களும் எங்களைப்போன்று வேறும் பலரும் தமிழ்த்தேசியத்தை உணர்ந்து ஆதரித்தோம். எங்களிற்கு எங்கள் தேசியம் அர்த்பூர்வமாக நியாமானதாக உணர்வு சார்ந்து தெரிந்தது. நாங்கள் எங்கள் போராட்டத்தை ஆதரித்தோம். இது ஒரு கணிசமான வீதத்தினர். வேறு சிலர் எங்களைப் போன்று தமிழ்த்தேசியத்தை உணர்ந்தார்கள் ஆனால் புலிகள் அமைப்போடு ஏதோ ஒரு விதத்தில் விசனப்போக்கைக் கடைப்பிடித்தார்;கள். சந்தர்ப்பவாத வியாபாரிகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. கொள்கை சார்ந்து அல்லது மாற்றியக்க அனுபவம் சார்ந்து மக்களை உண்மையில நேசித்த ஒரு பகுதியினர்--இவர்களது புலிகள் மீதான கோபம் தாளியை உடைப்பதில் பங்கு செலுத்தியது என்றபோதும், தேசியம் என்ற உணர்வினை இவர்களும் ஏதோ ஒரு விதத்ததில் எப்போதோ உணர்ந்;தவர்கள். ஆனால் போராட்டத்திற்கும் தமக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதாக, தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று கேட்டுகும் வiகியில் தமிழத்தேசியம் என்ற பிணைப்பை சற்றும் உணராதவர்கள் என்றும் பலர் இருந்தார்க்ள. மே 19 வரை, தமிழ்த்தேசியம் என்பதை கிஞ்சித்தும் உணரமுடியாதவர்களாக இருந்தவர்கள் மிக்சொற்பமான விகிதத்தினர் என்ற ஒரு புரிதல் பல மட்டங்களிலும் இருந்தது. ஆனால், இந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் அவதானித்தவரை, தமிழ்த்தேசியப் போராட்டம் தற்போதைய நிலையினை எட்டியமை தொடர்பில் மனதார மகிழ்ச்சிப் படும் தமிழர்களின் வீதம் கணிசமானதாகவே தென் படுகிறது. இலைமறைகாயய் இருந்த தரவுகள், அல்லது நாங்கள் இருந்த மனநிலையில் எங்களிற்குத் தெரியத் தவறிய எங்கள் மக்கள் பற்றிய தரவுகள் இந்த ஒன்றரை ஆண்டுகளிற்குள் தெரியத் தொடங்கியுள்ளன. இதில் எச்சாரார் எத்தனை வீதமானவர்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்றாலும் மிகக்கணிசமான தொகையினர் தமிழ்த்தேசியம் என்பது பற்றி எந்த அதிர்வும் இன்றிக் காணப்படுவதாக எனக்குப் படுகிறது. அந்தப் புரிதல் சார்ந்து எழுந்து எனக்குத் தெரிந்த அளவிலான விசாரணை தான் இப்பபதிவு.

எங்களிற்குள் அதிர்வினை ஏற்படுத்திய இந்தத் தமிழ்த்தேசியப் பிணைப்பு ஏன் கணிசமான தொகை (சிலவேளைகளில் பார்த்தாhல் 50 வீதம் வரை கூட அதையும் தாண்டி இத்தொகை இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகின்றது) எங்கள் மக்கள் மீது அதத்கைய அதிர்வினை ஏற்படுத்தவில்லை என்று விசாரி;க்கையில் எனக்குத் தோன்றி முதற்படி எண்ணங்கள் தமிழ்த்தேசியத்தின அத்திவாரம் சார்ந்து வரைவிலக்கணம் சார்ந்து அமைந்ததால் தான் அவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். மொத்தத்தில் தமிழ்த்தேசியத்தின் அங்கங்களான மக்களில் மிகப்பெரும்பான்மையானோர் தமிழ்த்தேசியம் என்ற உணர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு என்ன அவசியம் என்ற தேடல் தான் இது. அதனால் தான் புலிகளோடு முரண்பட்ட, இதுவரை போராட்டத்தை விமர்சி;த்த அல்லது விலத்தியிருந்தவர்களில் வெளிப்பட்ட தமிழ் என்ற பொதுமை சார்ந்த வெளிப்பாடுகளையும் எனது சில சந்திப்புக்கள் வாயிலாக இப்பதிவில் பகிர்ந்திரு;தேன்.

நன்றி

Link to comment
Share on other sites

சுகன்,

"கல்தோன்றி மண்தோன்றா.." விடயத்தில் உங்களது நிதானமான ஆளமான கருத்தாடல் சிறப்பு. நீங்கள் கூறியதைப் போன்று, உண்மையில் எங்கள் இனம் தொன்மையானது தானா என்பது போன்றதான விசாரணைகளைத் தாண்டி, பழைய பெருமைகளை மனதிருத்தி ஆனால் அவற்றைத் தாண்டி, இன்றையைப் பற்றிய தேடல் தான் இங்கு கோரப்படுவது.

"உடல் மண்ணிற்கு உயிர் தமிழிற்கு" என்பன போன்ற கோசங்களின் சூட்சுமம் பற்றிய உங்கள் அவதானிப்போடு நான் முற்று முளுதாக உடன்படுகின்றேன். எனக்கு மிகவும் பிடித்த பிரெஞ்சு தேசத்துத் தத்துவவியலாளர்களில் ஒருவரான Michel Foucault இம்முனையில் மிக ஆளமான அருமையான பல கருத்துக்களை வைத்துச் சென்றுள்ளார்.

"வேற்றின மக்களிற்குள் தமிழ்முகத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நாம் தெரிந்த பல தமிழ் முகங்களை சாதியம் போன்ற காரணங்கள் காட்டி நிராகரித்துக்கொண்டும் இருக்கின்றோம்" என்ற உங்களின் கருத்து மறுக்கமுடியாத அதேநேரம் மிகவும் சக்திவாய்ந்த கருத்து. ஒரு வகையில் நம்பிக்கை இழந்து துவளச்செய்வதானது தான் இந்நடைமுறை. ஆனால் அதேநேரம் வேற்றின மக்களிற்குள் தமிழ்முகங்களை நாங்கள் தேடிக்கொண்டிருப்பமை நீங்கள் கூறியதைப் போன்று எனக்கும் மிகவும் நம்பிக்கை தருகின்றது.

பொதுமைப்படுத்தல் தொடர்பான எனது கருத்துத் தொடர்பில் மாற்றுச்சிந்தனை தேவைப்படுகின்றது என்ற உங்கள் கருத்துக் குறித்து... நிச்சயமாக . எங்களிற்கு ஏற்புடையதாய்ப்படுவதாலேயே நாங்கள் எங்கள் கருத்துக்களை வைக்கின்றோம். அதற்காக அவை பிரபஞ்ச உண்மைகள் என்றாகிவிடாது. நாங்கள் பார்க்கத் தவறுகின்ற முனைகள் காட்டப்படுகையில் எங்கள் பார்வைகள் மாறுவது நடந்தே தீரும். எனவே கட்டாயம் உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

எல்லாமே முடிந்துவிட்டது என இருக்க முடியாது.அடுத்த கட்டத்திற்கு போயே தீரவேண்டும்.போகும்.அதற்கு ஒரு கால இடைவெளி கட்டாயம் தேவை.அதுவரை

முடிந்தளவு ஆரோக்கியமான விவாதங்களுடன் வெறும் பேச்சு,எழுத்துகளுடன் முடிக்காமல் ஒரு கட்டைமைப்பையே உருவாக்கலாம். பிற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் தான் எம்மில் பெரும்பாலானவர்கள்.அவர்களால் உண்மையை ஜீரணிக்க முடிவதில்லை.ஒரு படித்த அடுத்த தலைமுறையாலேயே இது சாத்தியம் என நம்புகின்றேன்.

போன சனிக்கிழமை ஒரு குடும்ப ஒன்றுகூடலுக்கு போயிருந்தான்.5 வயதில் கனடா வந்து இப்போ டென்டிஸ்டாக வந்திருக்கும் எனது மருமகன் கேட்கின்றான் சிறிலங்கா போக பயமில்லையா? .ஆமிக்காரன் ஒண்டும் செய்யமாட்டானா?

ஏனெனில் இன்றும் எமது வார இறுதிகொண்டாட்டங்களின் போது நாடகம் சரி,நடனங்கள் சரி ,சிங்களவன் தமிழனின் இரத்ததை குடிப்பது போலவும் கடைசியில் வானத்தில் இருந்து வந்தது எமது வீரர்கள் தமிழர்களை மீட்டெடுப்பது போல் வியாபாரம் தொடர்கின்றது. இதே சிந்தனையில் தொடர்ந்தும் இருந்தோமானால்,அடுத்த தலைமுறக்கும் இதை ஊட்டி விட்டு செல்வோமானல் நாங்கள் அடைய நினைக்கும் இலக்கு பின் தள்ளிக் கொண்டே போகும்.உலகும் எங்களை ஒதுக்கி வைக்கவே விரும்பும்..

ஜ்யரின் பதிவுகளை வாசிக்கும் போது இன்றும் எனக்கு கண்ணீர் வரும்.எத்தனை கனவுகளுடன் எத்தனை எத்தனையோ விதமான மாறுபட்ட சிந்தனைகளுடன் எமது விடுதலை மட்டுமே தீர்வு என்று தொடங்கிய போராட்டம் எங்கு போய் முடிந்ததென்று .அந்தப் பிழைகளை இனி ஒருகாலமும்விட முடியாது.

நீங்கள் விவாதிக்கும் கருத்தாடல் பற்றி எனக்கு தெரிந்ததை இன்னொருமுறை எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியம் என்பது ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணையும் மக்கள் கூட்டத்தை இணைப்பது என்பதில் தொடங்கி அந்நிய நாடுகளில் அந்நியமான சக தமிழனுக்கு உதவும் உணர்வு ரீதியான செய்கைவரை பன்முகப்பட்டது. முன்பின் தெரியாத தமிழர்கள் இக்கட்டில் நிற்கும் இன்னொரு தமிழனுக்கு உதவுவது வெவ்வேறு வகையான காரணங்களுக்காக இருந்தாலும், அடிப்படையில் இப்படியான செய்கைகளை உந்துவதை ஏதோவகையில் தமிழ்த் தேசியத்துடன் சம்பந்தப்படுத்தலாம்.

எனினும் வசதி, வாய்ப்புக்கள் வரும்போது தமிழர்கள் தங்களுக்குள்ளேயே அடிபட்டுக்கொள்வதற்குப் பேர் போனவர்கள் (இது உலக வழக்கமாகத்தான் இருக்கின்றது). அதற்காக அடிபடுபவர்கள் எல்லாம் பின்னர் ஒன்றிணையமாட்டார்கள் என்பதில்லை.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது / மூன்றாவது தலைமுறை மேற்குநாடுகளில் நிலைகொண்டுவிட்டது. எனவே தமிழர்கள் என்ற ரீதியில் பிணைப்பை வைத்துக்கொள்ள பல்வேறு வழிகளில் நாம் ஒன்று சேர்ந்துகொள்கின்றோம். அதாவது தமிழ்த் தேசியம் ஏதாவது ஒருவடிவத்தில் தொடரத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியம் என்பது ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணையும் மக்கள் கூட்டத்தை இணைப்பது என்பதில் தொடங்கி அந்நிய நாடுகளில் அந்நியமான சக தமிழனுக்கு உதவும் உணர்வு ரீதியான செய்கைவரை பன்முகப்பட்டது. முன்பின் தெரியாத தமிழர்கள் இக்கட்டில் நிற்கும் இன்னொரு தமிழனுக்கு உதவுவது வெவ்வேறு வகையான காரணங்களுக்காக இருந்தாலும், அடிப்படையில் இப்படியான செய்கைகளை உந்துவதை ஏதோவகையில் தமிழ்த் தேசியத்துடன் சம்பந்தப்படுத்தலாம்.எனினும் வசதி, வாய்ப்புக்கள் வரும்போது தமிழர்கள் தங்களுக்குள்ளேயே அடிபட்டுக்கொள்வதற்குப் பேர் போனவர்கள் (இது உலக வழக்கமாகத்தான் இருக்கின்றது). அதற்காக அடிபடுபவர்கள் எல்லாம் பின்னர் ஒன்றிணையமாட்டார்கள் என்பதில்லை.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது / மூன்றாவது தலைமுறை மேற்குநாடுகளில் நிலைகொண்டுவிட்டது. எனவே தமிழர்கள் என்ற ரீதியில் பிணைப்பை வைத்துக்கொள்ள பல்வேறு வழிகளில் நாம் ஒன்று சேர்ந்துகொள்கின்றோம். அதாவது தமிழ்த் தேசியம் ஏதாவது ஒருவடிவத்தில் தொடரத்தான் செய்யும்.

எனது மகனை தமிழர்கள் மட்டுமே விளையாடும் கால் பந்தாட்ட கழகம் ஒன்றில் இணைத்துவிட்டேன்.

சில காலத்துக்கு பின் அவன் என்னிடம் சொன்னான்.

அப்பா

இதை நீங்கள் செய்திருக்காவிட்டால்

தமிழில் இத்தனை நண்பர்களையும் அவர்களுடன் பழகும் வாய்ப்பையும் நான் தொலைத்துவிட்டிருப்பேன் என்று.

உண்மைதான் அடுத்த தலைமுறை தம்மை இணைக்கும் நடவடிக்கைகளை நாம் ஏற்படுத்தவேண்டும்

Link to comment
Share on other sites

அர்யுன் கூறிய தமிழ்த்தேசியத்தின் பன்முகத்தன்மை புதிய சந்ததிகளிற்கு சரியாகச் சென்றடையவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேநேரம், வீட்டில் சக தமிழரை இகழந்தபடி குழந்தைக்குத் தமிழ்த்தேசியத்தில் பற்றுவரவைப்பது என்பது மிகச் சிரமானதாகவே இருக்கும். தமிழத்தேசியம் என்பது துண்டுதுண்டாகவன்றி முழுமையாக அணுகப்படவேண்டியது. அடிப்படைகளில் இருந்து அணுகப்படவேண்டியது. தமிழர் விட்ட தவறுகளைக் கூட வெறுமனே நாங்கள் இகழவேண்டும் என்பதில்லை. நல்ல பக்கங்களைப் பற்றியும் சிறப்புக்களைப் பற்றியும் கூட குழந்தைகளிற்கு எடுத்துக்கூறி தவறுகளையும் ஏன் எதனால் நடந்தன என அடிப்படைகள் சார்ந்து ஆராய்வது ஆரோக்கியமானது என்பது எனது அபிப்பிராயம். தவறுகள் நிகழாத இனங்கள் இல்லை. எங்கள் குழந்தைகள் எங்களவரை சந்தேகத்திற்குரியவராய், பயப்படவேண்டியவராய், விலக வேண்டியவராய் பார்க்காது (குழந்தைகளிற்கு நல்லதையும் கெட்டதையும் தற்காப்பையும் அனைத்து மனிதர்களின் குணவியல்புகள் சார்ந்தும் சொல்லிக்கொடுப்பது அவசியம். ஆனால் ஒட்டுமொத்தமான இனக்குழுமங்கள் அல்லது அதன் பகுதிகள் சார்ந்த கருத்துக்களில் கவனம் தேவை என்பது எனது கருத்து). புலிகள் விடயத்தில் கூட, கொள்கை நிலை முரண்பாடுகளிற்கு அப்பால், தவறுகளை மட்டும் அன்றி மொத்தமாக உண்மையாகக் கருத்தாடுவது நன்மை பயக்கும். இல்லாத பட்சத்தில் புலத்தில் ஊடகங்களில் கேள்விப்படுகின்ற அனைத்தும் உண்மையாகி எங்களவர் தொடர்பில் எங்கள் சந்ததிகள் பயப்படவும் சாத்தியம் உருவாகலாம்.

கிருபன்,

எமது மூன்று சந்ததிகள் புலத்தில் பதிந்து விட்டன என்பது உண்மை தான். ஆனால் பல சந்ததிகளாக ஓரு நாட்டில் வாழ்ந்து அதன் பின் பிறந்தவர்கள் கூட வேரைத் தேடுவதை புலத்தில் கண்டுகொண்டு தான் இருக்கிறோம். எனினும், எட்டாம் வகுப்பில் பொன்னியின் செல்வனை வாசித்ததன் பின்னர் "சோழ மன்னனின் பேரக்குழந்தை" என்ற பிரச்சார வாக்கியம் எங்களிற்குள் ஏற்படுத்தியது போன்ற சிலிர்ப்பு வேரைத் தேடும் மூன்றாம் சந்ததி தமிழ்க் குழந்தைக்கு ஏற்படும் என்று கூறுவதற்கில்லை. ஆனால் அந்த மூன்றாம் சந்ததிக் குழந்தைக்கு ஒரு வேளை தனது பூட்டனின் பாட்டனின் தந்தையின் (தாய்வழியும் தான்) ஞாபகங்கள் இருக்கலாம். அஞ்ஞாபகங்களில் பிணைந்த நமது தாயகம் அக்குழந்தைக்கு சிலிர்ப்பைக் கொடுக்கலாம். நாங்கள் கேட்டு வழர்ந்த வர்ணனைகள் மூன்றாம் சந்ததிக் குழந்தைக்கு அந்நியமாய் இருக்கலாம் ஆனால் நாளாந்த வாழ்வியல் நிச்சயம் புரியும் படி இருக்கும். நிச்சயம் வேரைத் தேடுவது ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரிற்கும் வரும்--குறைந்த பட்சம் ஒரு சில நூற்றாண்டிற்கேனும் அது தொடரும். அக்காலத்திற்குள் தமிழ்த்தேசியம் அனைத்துத் தமிழரிற்குமான பொதுமையாக பிணைப்பாக உணர்வாக அடிப்படைகள் சார்ந்து எவ்வாறு வளர்கிறது என்பதைப் பொறுத்துத் தான் அடுத்த சந்ததிகளின் அதனோடான பிணைப்பு நிர்ணயிக்கப்படும். நூற்றாண்டுகள் முன்னர் அழிந்துபோன நாகரிகங்கள் பற்றி இன்றைக்கும் ஆர்வமாய், அந்நாகரிகங்களோடு சம்பந்தமே இல்லாதவர்கள் கூடப் படிக்கிறார்கள் தேடுகிறார்கள் என்றால் சம்பந்தப்பட்ட தமிழர் தாயகத்தை நம்சந்ததிகள் அறிய விரும்புவது சிரமமின்றி நடக்கக் கூடியது. மேலும் தமிழ்த்தேசியம் என்பதன் வரையறைகள், தளங்கள், வடிவங்களில் கூட மாற்றங்கள் எதிர்பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் படவேண்டியது தான். ஏனெனில் இன்று ஒரு மில்லியன் தமிழர் புலம் பெயர்ந்து வாழ்கிறோம். ஏறத்தாள இப்பதிவில் கருத்துக் கூறிய அனைவரும் ஏற்றுக்கொண்டதைப் போல சக தமிழர்களின் தங்களிற்கிடையேயான பிணைப்பில் உணர்வில் இருந்து இத்தமிழ்த்தேசியம் மீள எழ முனைவது வினயமானது என்றே படுகின்றது.

விசுகு அவர்கள் கூறியதும் உண்மைதான். தமிழருடன் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்லி வளர்ப்பதும் நடப்பது தான். ஆனால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தமிழரின் சகதமிழர் பற்றிய பார்வையில்; மாற்றம் ஏற்படுகையில் இம்முனையிலும் மாற்றம் தானாய் ஏற்படும்.

மொத்தத்தில் எங்களிற்கு இப்போது தேவைப்படுவது அனைவரிற்கும் ஏற்புடைய, அனைவரிற்குள்ளும் ஒரு அதிர்வினை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு ஆரம்பப் புள்ளி. அப்புள்ளி, எமது சக தமிழர் நோக்கிய எமது அணுகு முறையில் ஆரம்பிக்கலாம் என்றே படுகின்றது.

Link to comment
Share on other sites

கனடாவில் மூன்றாவது தலை முறையாக வாழும் சீனக் கனேடியன் அண்மையில் பெரும்பான்மை இனத்தவர்களை பார்த்து கேட்ட பின்வரும் கேள்வி :

நான் எல்லாமே உங்களைப்போல, பெரும்பான்மை இனத்தவர்களை, செய்து வருகின்றேன். உதாரணத்துக்கு சீன மொழி கதைக்கவும் எழுதவும் தெரியாது. ஆனால் உங்களைப் போல் சீன சாப்பாடு சாப்பிடுவேன். உங்களைப்போல "ஐஸ் கொக்கி" விளையாடுவேன் பார்ப்பேன். உங்களைப்போல வெள்ளிக்கிழமைகளில் ஒரு ஹாலிவூட் திரைப் படம் பார்ப்பேன். பியரும் அடிப்பேன்.

இவ்வளவையும் உங்களைப்போலவே செய்யும் நான் உங்களில் ஒருவனா இல்லையா?

வெளியில் பொதுவாக எல்லாருமே எல்லோரையும் பெயரளவில் ஏற்பார்கள். ஆனால் உண்மையில் நாங்கள் கனேடியராக மாற விரும்பினாலும் அவர்கள் உண்மையாகவே ஏற்றுக்கொள்ளுவர்களா என்பதே கேள்வி. மேலும் பொருளாதார ரீதியில் புலம் பெயர் மக்கள் பலம் பெறுவதை "பெரும்பாலான சமூகம் " விரும்புவதில்லை.

ஆக மொத்தத்தில் நாம் எமக்குள் ஒற்றுமையாக பொருளாதார ரீதியில் பலம் பெறுவதுதன் மூலமே எமது சந்ததிக்கு ஒரு வலுவான தளத்தை உருவாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் வந்து ஒரு தமிழனுக்கு உதவுவது தான் ஒரு பிரச்சனையில் மாட்டுப் படாமல் இருந்தால் மட்டுமே...இன்னுமொருமன் மேலே முதல் எழுதிய இரு சந்தர்பத்திலும் அந்த தமிழர்கள் இன்னுமொருவனுக்கு உதவுவதால் ஒரு பாதிப்பும் இல்லை...இதனால் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்டால் கடைசி வரைக்கும் உதவ மாட்டார்கள்...நான் லண்டனில் இருந்து பிரான்சுக்கு முதல் முதல் பிரயாணம் புகையிரதத்தில் செய்து கொண்டு இருக்கும் போது என்னோடு சில சொந்தக்காரர்களும் வந்தார்கள் நாங்கள் புகையிரதத்தில் ஏறுவதற்கு எங்களைப் பார்த்து சிரித்தான் ஆனால் என்னோடு வந்த ஒருத்தரும் அவனைப் பார்த்து சிரிக்கவுமில்லை,கதைக்கவுமில்லை காரணம் சொன்னார்கள் அவனுக்கு விசா இருக்குமோ தெரியாது பிறகு பொலிஸ் எங்களையும் சேர்த்து பிடித்து விடும் என இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் என்னைத் தவிர பிரித்தானியா கடவுச் சீட்டு கொண்டவர்கள்...முள்ளி வாய்க்கால் பிரச்சனை நடந்த போதும் கூட தனிய வன்னியில் இருந்த மக்கள் தான் அதன் கஸ்டத்தை அனுபவித்தவர்கள் அதே நேரத்தித்தில் கொழும்பில்,யாழில் அல்லது மட்டக்களப்பில் இருந்த மக்கள் அந்த நேரத்தில் ஒரு யுத்தமே நடக்காத மாதிரி,தங்களுக்கும் அந்த யுத்தத்திற்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி தான் இருந்தார்கள்...தனிய அரசுக்கு எதிராக யுத்தத்தை நிறுத்த சொல்லி போராட்டம் நடத்தி இருக்க தேவையில்லை அப்படி நடத்தி இருந்தால் அவர்கள் உயிர்களுக்கு ஆபத்து ஆனால் அரசுக்கும்,புலிகளுக்கும் எதிராய் யுத்தத்தை நிறுத்த சொல்லி போராட்டம் நடத்தி இருக்கலாம்...அப்போது எல்லாம் ஏன் தமிழர்கள் என்ட‌ உணர்வு ஒருத்தருக்குமே வர‌வில்லை...வன்னி வீழ்ந்தவுட‌ன் இனி மேல் யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் போய் வர‌லாம் என சந்தோச‌ப்பட்ட ஆட்களே அதிகம் உள்ளார்கள்.

எனக்கு தெரியவில்லை இன்னுமொருவன் எழுதிய இத் தலைப்புக்கும் நான் எழுதியதிற்கும் சம்மந்தம் இருக்குதா தெரியவில்லை அப்படி இல்லா விட்டால் என்னை மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

ரதி எழுதிய கருத்துடன் ஒத்துப்போக வேண்டி இருக்கிறது. :icon_idea:

ஏழு வருடங்களுக்கு முன்பு நான் கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு என் துறையில் வேலை கிடைக்காது என்று ஏளனம் செய்தவர்களும், பயமுறுத்தியவர்களுமே அதிகம். ஓரிருவரே ஊக்கம் தரும்வகையில் கதைத்தார்கள். :) இப்போது யாரும் என்னிடம் வாய் திறப்பதில்லை..! :)

நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என்கிற எண்ணம் எனக்கு உண்டு. அதனால் கனடாவில் இதுவரை ஒரு ஜீவனை எனது துறைக்குள் கரையேற்றி விட்டிருக்கிறேன்..! :D

Link to comment
Share on other sites

ரதி எழுதிய கருத்துடன் ஒத்துப்போக வேண்டி இருக்கிறது. :icon_idea:

ஏழு வருடங்களுக்கு முன்பு நான் கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு என் துறையில் வேலை கிடைக்காது என்று ஏளனம் செய்தவர்களும், பயமுறுத்தியவர்களுமே அதிகம். ஓரிருவரே ஊக்கம் தரும்வகையில் கதைத்தார்கள். :) இப்போது யாரும் என்னிடம் வாய் திறப்பதில்லை..! :)

நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என்கிற எண்ணம் எனக்கு உண்டு. அதனால் கனடாவில் இதுவரை ஒரு ஜீவனை எனது துறைக்குள் கரையேற்றி விட்டிருக்கிறேன்..! :D

இதற்கான பல காரணங்களை அறிந்து அதற்கான மாற்று வழிகளை முன் வைக்க வேண்டும்.

நாட்டில் பலரும் படித்தல் தான் பல்கலைகழகம் போனால் தன் வாழ்வு என வாழ்ந்தவர்கள். இதனால் ஒர்ராகவே பள்ளியில் படித்தாலும் இரகசிமாக பிரத்தியேக படிப்புக்கு செல்வர்கள்.

இங்கே, "வாங்கோ" என அழைக்கின்றார்கள் படிக்க. வேலையும் பல துறைகளில் உள்ளது. அரச மானியங்கள் பல உள்ளன. இவற்றை எம்மவர் அறியும் போது எம்முள் உதவும் மனப்பான்மை அதிகரிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.