அம்பாறை வனப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிப்போராளிகளான இவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர்.
இவர்களில் லெப்.கேணல் பவமாறன் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல தாக்குதல்களை நடத்தி பல படையினரின் உயிரிழப்பிற்கும் அவய இழப்பிற்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை வனப்பகுதிக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திய இவர்கள் எதிர்பாராத விதமாக கிளைமோர் வெடித்ததினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.


Edited by மின்னல், 15 September 2010 - 10:01 AM.






















