Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமீபத்தில் நடந்த இலங்கை இந்திய மீனவர்கள் உடன்படிக்கையின் – உண்மை (கோர) முகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமீபத்தில் நடந்த இலங்கை இந்திய மீனவர்கள் உடன்படிக்கையின் – உண்மை (கோர) முகம்

இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் திரு எம் டி தயாளன் அவர்களும் மாநில பொது செயலாளர் ஆவின் பாபு அவர்களும் நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேவனிடம் அளித்த சிறப்பு நேர்காணல்

இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுகொள்ளப்பட்டு வரும் நிலையில் திடிரென்று இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று அதன் மூலம் சில ஒப்பந்தங்கள் கைசாத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சு வார்த்தையில் நடந்த உண்மை நிலை என்ன?

இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை என்றவுடன் உண்மையில் எங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்ததாகத்தான் நினைத்தோம் ஆனால் பிறகு இது குறிப்பிட்ட சங்கங்களுடன் தான் பேச்சுவார்த்தை என்று தெரிந்தவுடன் எங்களுக்கு சந்தேகம் வந்து கண்காணிக்க ஆரம்பிச்சோம். தமிழகம் வந்த இலங்கை மீனவர்கள் முதலில் ராமநாதபுரம் மாவட்ட மீனவ நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தபோவதாக அறிவித்தனர். நாங்களும் எங்கள் இந்திய மீனவ சங்க நிர்வாகிகளை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினோம் அங்கு நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்ய சொன்னோம்.அது போல் கூட்டத்தில் கலந்து கொண்ட எங்கள் சங்க நிர்வாகிகள் அங்கே தமிழக மீனவர்களின் கருத்துக்களை பதிவு செய்ய விடவில்லை. இலங்கை மீனவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் அதற்கு பதில் கூறுவதற்கான வாய்ப்பு தமிழக மீனவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. வந்திருந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் ரெட்டை மடி வலை, இழுவை வலை,தங்கூசி வலை , எல்லை தாண்டி வருகிறீர்கள், எங்கள் வலைகளை அறுத்து விடுகி றீர்கள், என்று எங்கள் மீது சரமாரியாக குற்ற சாற்றுகளை முன்வைத்தார்கள். இந்திய் மீனவர்கள்தான் குற்றவாளிகள் போல் ஓர் தோரனையை உருவாக்க முயல்வது தெரிந்தது . இது இந்திய இலங்கை அரசுகள் கூறும் எல்லை தாண்டி போகிறோம் என்ற பொய் குற்றசாட்டுகளை உறுதி படுத்தும் விதமாகவே இவர்களின் செயல் பாடுகள் அமைந்திருந்தன.

மறுநாள் ஊடகங்களில் வந்த செய்திகள் இதை உறுதிபடுத்தும் விதமாக இந்திய மீனவர்கள் மேல் கூறிய குற்ற சாட்டுகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன.அடுத்த கட்ட பேச்சு வார்த்தை எங்கு என்று பார்க்கும் பொழுது நாகப்பட்டினம் என்று தெரிந்தது.பிறகு நாகையை சேர்ந்த இந்திய மீனவர் சங்க நிர்வாகிகளை அங்கு கலந்து கொள்ள அறிவுறுத்தினோம். அங்கும் அதே நிலைமை. அடுத்த கட்ட கூட்டம் சென்னையில் என்று ஊடகத்தில் செய்தி வந்தவுடன் எங்கு நடக்கிறது என்று விசாரிக்கும் போது அது மர்மமாகவே இருந்தது.இரண்டு நாட்கள் கடுமையான முயற்சிக்கு பிறகு மீன்வள துறை DD அவர்களை கேட்கும் பொழுது எனக்கு இது பற்றி எந்த தகவலும் வரவில்லை நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் என்றார் பிறகு JD,AD என்று யாரை கேட்டாலும் ஒருவருக்கும் தெரியவில்லை மர்மமாகவே இருந்தது. பிறகு எனது ஊடக நண்பர்களிடம் உதவி கேட்கும் பொழுது, அவர்கள் நாளை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய இலங்கை மீனவர் உடன்படிக்கையை விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடை பெற இருக்கிறது என்ற தகவல் கிடைத்தது.பேச்சு வார்த்தையே நடைபெறாமலே அதற்குள் பத்திரிக்கையாளர் சந்திப்பா என்ற ஆதங்கத்துடன் சென்னையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகளுடன் அந்த கூட்டத்திற்கு சென்றோம். அங்கு மீனவ சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்றனர் .எனவே பத்திரிகையாளர் துணையுடன் நாங்களும் உள்ளே சென்றோம். அங்கே பத்திரிகையாளர் சந்திப்பில் இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்கள் மேல் சரமாரியான குற்றசாட்டுக்களை சுமத்தினர். நாங்கள் ஊடக நண்பர்கள் உதவியுடன் உங்கள் பாதிப்புகளை பற்றி மட்டுமே சொல்லி கொண்டிருக்கிறீர்களே தவிர எங்களுக்கு பேசுவதற்கு கூட வாய்ப்பு தரப்படவில்லை என்ற குற்ற சாட்டு உங்கள் மீது கூறப்படுகிறதே என்று கேட்டனர் அதற்கு அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை.அடுத்து எல்லை தாண்டி வருகிறோம் என்ற பெயரில் எங்கள் மீனவர்களை உங்கள் ராணுவம் சுட்டு கொல்கிறதே இதை நீங்கள் ஆதரிக்கீர்களா எதிர்க்கிறேர்களா என்று கேட்டதற்கு அவர்கள் அதை பற்றி பேச எங்களுக்கு அதிகாரம் இல்லை எங்கள் மீன்வளத் துறை உதவி இயக்குனர் அதிகாரிகள் வந்திருக்கின்றனர் அவர்கள்தான் பதில் கூற கூற வேண்டும் என்றனர்.அத்துடன் சந்திப்பை முடித்து கொண்டார்கள்.

மறுநாள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிந்து ,எங்கு என்பதை கடுமையான முயற்சிக்கு பிறகு கண்டறிந்து

சென்னையில் உள்ள சென் தோமையார் மலை என்பதை அறிந்து அங்கு நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றோம். அங்கு இது பாக்ஜலசந்தி மீனவர்கள் பிரச்சனை அவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி விட்டனர் . இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நான்கு சங்கங்களும் கிருத்துவ அமைப்பை சேர்ந்தவை.தென்னிந்திய மீனவர் சங்கங்களின் ஆலோசகர் விவேகானந்தன் தலைவர் அந்தோணி அகஸ்தியன் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூடமைப்பிக்கன பிரதிநிதி அருளானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் உள்நோக்கம் மீனவர்களின் ஒற்றுமையை குலைத்து இந்து ,கிருத்துவ மீனவர்களிடையே வன்மையை துண்டும் செயலாகத்தான் இந்த தமிழக அரசாங்கம் செயல் பட்டு கொண்டிருப்பதாக கருத வேண்டியுள்ளது. இரு நாட்டு அரசுகள் தரப்பில் தலா இரண்டு பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியிட்டுவிட்டு இலங்கை அரசு தரப்பில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் லால் டி சில்வா மற்றும் வானொலி அதிகாரி திலகரதினே ஆகியோர் கலந்து கொண்டனர் ஆனால் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர்கள் பெயர் வெளியிடப்படவில்லை .

இலங்கை இந்திய மீனவ பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசாங்க உள்ளீடு இல்லாம நடக்க சாத்தியமா?தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ் நாட்டிற்குள்ளேயே வந்து தமிழக மீனவர்களின் மேல் குற்றம் சொல்லும் விதமாக இவர்களின் செயல் பாடுகள் அமைந்திருக்கின்றன இதற்கு தமிழக அரசாங்கத்தின் உள்ளிடும் ஆதரவும் இருந்திருக்கும் என்று நம்புகிறீர்களா ?

கண்டிப்பாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் இதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லவில்லை ஆதார பூர்வமாக சொல்லுகிறேன்.இவர்கள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இங்கிருக்கும் தமிழக மீனவ சங்கத்தை சேர்ந்த ஒருவர் இலங்கைக்கு சென்றிருக்கின்றார்.அவர் தனியாக செல்லவில்லை தன்னுடன் பதினாறு பேரை கூட்டி சென்றிருகின்றார்.அவர் வேறு யாருமில்லை.தமிழ்நாடு மீனவ பேரவையின் தலைவர் திரு அன்பழகன் அவர்கள் அங்கே சென்ற அவர் அங்கிருக்கும் மீன் வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களை சந்தித்து இருக்கிறார் .அங்கே இருந்து வெளி வரும் டெய்லி நியூஸ் என்ற தினசரி பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கின்றார். அங்கே கொடுத்திருக்கின்ற பேட்டியில் விடுதலை புலிகள் மறைந்த இந்த ஒரு வருட காலத்தில் எந்த விதமான நட்டமும் கெடுதலும் தமிழக மீனவர்கள் அனுபவிக்க வில்லை, அவர்கள் மிக அமைதியாக நல்ல ஒரு சூழ்நிலையில் மீன்பிடி தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.இதன் நோக்கம் சிங்கள மீனவர்களை மட்டுமல்ல , தமிழீழ மீனவர்களை மட்டுமல்ல, இங்குள்ள மீனவ சங்கங்களையே இங்குள்ள மீனவர்களுக்கு எதிராக திருப்பி விடும் நோக்கத்திலேயே இந்திய, இலங்கை, தமிழக அரசாங்கங்கள் செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்று.ஏனென்றால் அவர் இலங்கைக்கு செல்லும் செய்தி தமிழ் நாட்டிலுள்ள எந்த ஒரு செய்தி தாள்களிலும் வரவில்லை.அவர் செல்ல போகிறார் என்றோ சென்றிருக்கிறார்

என்றோ அல்லது அந்த அரசிடம் பேசிவிட்டு வந்திருக்கிறார் என்றோ எந்த செய்தியும் இங்கு இல்லை. மேலும் தனியொரு நபர் அரசாங்கத்திற்கு தெரியாமல் இங்கிருந்து சென்று இலங்கை மீன் வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசி விட்டு வர முடியமா . அப்படி முடியும் என்றால், தன் நாட்டில் நடக்கும் இந்த செய்தியை கண்காணிக்க முடியாத இந்திய அரசு, எப்படி தமிழனையும் தமிழ் மீனவனையும் காப்பாற்றும் என்பது எங்களுக்கு ஒரு கேள்வி குறியாக இருக்கிறது ?

தினமணி நாளிதழில் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விசை படகு மீன் பிடி தொழிலாளர்களும் கட்டுப்படவேண்டும் என்பதே.அப்படி என்றால் அரசு ஊதுகுழலான இந்த நான்கு சங்கங்களும் தான் தமிழக மீனவர்கள இந்த நான்கு சங்கங்கள் எடுத்த முடிவுகளுக்கு மட்டும் தமிழக மீனவர்கள் கட்டுப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையைகருணாநிதி விளக்க வேண்டும் விளக்குவாரா?

தினமணி நாளிதழில் வந்த செய்தி ஆகஸ்டு -24

மீன் பிடிக்கும் பகுதிகள் தொடர்பான எல்லையை நிர்ணயித்து இந்திய இலங்கை மீனவர்களிடையே

சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள்ளதுதென்னிதிய மீனவர் சங்கத்தில் சம்மேளன ஆலோசகர் விவேகானந்தன் கூறியது.

எல்லை நிர்ணயம் : மன்னர் விரிகுடாவில் மன்னார் தீவின் வட கடல் பகுதியில் இலங்கையின் கரையோரத்திலிருந்து மூன்று கடல் மைல் அப்பால் உள்ள பகுதிகளை இந்திய மீனவர்கள் பயன்படுத்தலாம் அதாவது பாலைதீவு ரனைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு வெளிப்புறமாக மீன் பிடித் தொழிலில் ஈடுபடலாம் மேலும் மன்னார் தீவின் தென் கடல் பரப்பில் இலங்கை இந்திய எல்லையிலிருந்து 5 kadal மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடலாம் அதே போல் பாக் ஜலசந்தியில் யாழ்பாணம் வட பகுத்யில் இலங்கை இந்திய் எல்லையிலிருந்து தெற்காக ஐந்து கடல் மைல் அதாவது நெடுந் தீவுக்கு மேற்கில் இருந்து கிழக்கு எல்லை வரை இந்திய மீனவர்கள் மீன் பிடித்து கொள்ளலாம் ஆண்டுக்கு எழுபது நாள் இந்த எல்லைக்குள் ஆண்டுக்கு எழுவது நாட்கள் மட்டுமே மீன் பிடித் தொழிலில் ஈடுபடலாம் அதாவது வார நாட்களில் புதன் மற்றும் சனி கிழமைகளில் மாலை4 முதல் அதிகாலை 4 வரை மீன் பிடிக்கலாம் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பக்திக்குள் விசை படகு மூலம் மீன் பிடிப்பதை ஓர் ஆண்டுக்குள் முற்றிலுமாக நிறுத்தி கொள்ள வேண்டும் மேலும் இரட்டை மடி கொண்ட வலைகளை முற்றிலுமாக பயன் படுத்த கூடாது சிறு மீனவ தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்க படாத வகையில் படகுகள் எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும் நாட்டு படகுகள் மூலம் மேற்கொள்ளப்படும் தங்க ஊசி வலைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்தி கொள்ள வேண்டும் இரு நாட்டு குழு கூட்டத்தில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை படி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை மேற்பார்வையிட இந்திய இலங்கை கடற்படை அதிகாரிகள் மீனவ பிரதிநிதிகள் மற்றும் கடல் தொழல் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் மீன் பிடி தொழிலின் போது எதிபாராத வண்ணம் ஏற்படும் முரண்பாடுகளை இந்தியாவில் மீனவர்களுக்காக இயங்கி வரும் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான இயங்கி வரும் கூட்டமைப்பும் இலங்கையில் மீனவர்களின் நலனுக்காக இயங்கி வரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து நிவர்த்தி செய்யும் இந்த முடிவுகள் தொடர்பாக எழுகின்ற சிக்கல்களை மேற்கொண்டு கடை பிடிக்க வேண்டிய செய்திகளை குறித்தும் இலங்கையில் நடைபெறும் அடுத்த சுற்று பேச்சு வார்த்தையில் கழல்ந்துரையாடப்படும் இந்த முடிவுகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள அனைத்து விசை படகு மீன் பிடி தொழிலாளர்களுக்கும் பொதுவானதாகும்.

தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர் கட்சி)

http://meenakam.com/?p=6473

Edited by விடியல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.