முதலில் போட்டியில் வெற்றி பெற்ற கறுப்பி,இணையவன்,கந்தப்பு, அபிராம் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.அத்துடன் போட்டியில் பங்கு பற்றிய ஏனைய உறவுகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
இந்த போட்டி நடக்க காரணமாயிருந்த கரும்பு(முரளி)அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு போட்டி சிறப்பாக நடக்க உதவிய யாழ் நிர்வாகத்துக்கும்(எனக்கு தெரிந்து ஒரு போட்டிக்காக யாழின் முகப்பிலும் கருத்துக்களத்தின் ஒவ்வொரு பக்கதினிடையிலும் விளம்பரப்படுத்திய போட்டி இதுதான்)போட்டியில் வென்றவர்களுக்கு தமது சொந்த செலவில் பரிசினை வழங்கியவர்களுக்கும்(யாழ் களத்தில் ஒரு போட்டிக்காக பரிசு வழங்குவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்)நன்றி.
போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்த அரவிந்தனுக்கும் எனது நன்றி.
5ம் பரிசு பெற்ற மறுத்தானின் பரிசு தபால் மூலம் இன்று அனுப்பியுள்ளேன். வாரகிழமை அவருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.
எம்மவர் தயாரிப்பான 1999 திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய ஒலிவட்டு எனக்கு கிடைக்கப்பெற்றது.மீண்டும் நன்றி அரவிந்தன்.
இன்னொரு விளையாட்டு சம்பந்தமான ஒரு போட்டி யாழில் நடந்தால் அதிலும் சந்திப்போம்.வணக்கம்
Edited by மறுத்தான், 08 August 2010 - 02:44 AM.