Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 - பாகம் III


Recommended Posts

புதினம் தளத்தில் முன்னர் எழுதியிருந்த முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 என்ற கருத்தாய்வின் மூன்றாவது பாகத்தை இங்கே எழுதுகின்றார் தி. வழுதி.

எமது தாய்த் தளமான புதினம் தளத்தில் முன்னர் அவர் எழுதியிருந்த முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 என்ற கருத்தாய்வின் மூன்றாவது பாகத்தை இங்கே எழுதுகின்றார் தி. வழுதி.

உண்மை எப்போதும் இனிப்பானதாக இருந்துவிடாது; கசப்பானதாக இருப்பதெல்லாம் பொய்யாகவே இருந்துவிட வேண்டும் என்றும் இல்லை.

நடைமுறை யதார்த்தம் நாம் விரும்புகிற ஒன்றாக இருந்துவிடாத போதும் அதனைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் துணிவு வேண்டும்.

விரும்புகிற தகவல்களை மட்டுமே வடித்து உள்ளே எடுப்பதும், விரும்பாதவற்றைத் தடுத்து வெளியே தள்ளி மனதை மூடிக்கொள்வதும் அறிவைச் செப்பனிடுவதற்கு ஏற்ற வழிகள் அல்ல.

மூடப்பட்டுக் கிடக்கும் மனது, சிந்தனையையும் செயற்பாட்டையும் முடக்கிவிடும்.

ஒரு நல்ல மனதுக்கு அழகு - விருப்பு வெறுப்புக்களையும் உணர்ச்சிகளையும் ஓர் ஓரத்தி்ல் வைத்துவிட்டு - ஒரு மூன்றாவது மனிதர் போல வெளியில் இருந்து - திறந்த அறிவுடன் விடயங்களை நோக்குவது.

உண்மையும் நடைமுறை யதார்த்தமும் கசப்பானதாக - விரும்பத் தகாததாக இருந்துவிட்டால் கூட - அதனை ஏற்றுக்கொள்ளுவது தான் முன்னேறுவதற்கு வழி.

அப்போது தான் - எதிர்காலத்தையாவது இனிமை ஆக்குவதற்கு - நாம் விரும்புகின்ற ஒன்றாக அமைப்பதற்கு - இப்போது நாம் என்ன செய்யலாம் என்பது பற்றிச் சிந்திக்க முடியும்; செயற்பட முடியும்

இது - சாதாரண ஒரு தனி மனித வாழ்வுக்கும் பொருந்தும்; உன்னதமான ஒரு தேசிய இனத்தின் வரலாற்றுக்கும் பொருந்தும்.

* * * *

இப்போது தேர்தல் காலம்.

இலங்கைத் தீவிற்கு வெளியிலே ஈழத் தமிழர்கள் தொடர்பான பல தேர்தல்கள் நடந்து வருகின்றன.

இந்த தேர்தல்களில் எனக்கு எந்த அக்கறையும் கிடையாது; ஏனெனி்ல் - பல காரணங்களிற்காக இந்தத் தேர்தல்கள் ஈழத் தமிழரின் வாழ்விற்கு எந்த நற்பயனையும் தரப்போவதில்லை என்பது என் கருத்து.

"வட்டுக்கோட்டைத் தீர்மானம்" மீதும், நாடு தழுவிய 'தமிழர் பேரவை' என்ற அமைப்புக்கள் மீதும் நடாத்தப்படும் இந்த தேர்தல்கள் - தமிழரது சக்தியையும், வளத்தையும், நேரத்தையும், விடுதலை வேட்கையையும் விரயமாக்கும் செயல்.

நாங்களே எங்களுக்குள் - எங்களுக்கு வேண்டிய ஒரு முடிவை வரவைப்பதற்காக நடாத்தும் இந்தத் தேர்தல்களுக்கு அனைத்துலக மட்டத்தில் எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை; யாரை இலக்காக வைத்து இந்தத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றதோ, அவர்கள் இவற்றை ஒரு பொருட்டாகக் கருத்தில் எடுக்கப் போவதுமில்லை.

நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது இலங்கையில் நடக்கவிருக்கும் தேர்தலில்.

சிறிலங்காவின் "இறையாண்மை" [sovrengity] மற்றும் "நில ஒருமைப்பாடு" [Territorial Integrity] போன்றவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாத போதும் - அங்கு நடக்கின்ற தேர்தல் தான் அங்கு வாழும் மக்களின் வாழ்வில் தாக்கங்களை எற்படுத்தப்போகின்றது.

அந்தத் தேர்தலில் தான் எனக்கும் அக்கறை.

[படம்]

"பிரச்சனைக்காரர்"

சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலைப் பற்றிய பேச்சுக்கள் வரும் போது - 2005 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பற்றிய கதை அடிக்கடி அடிபடுகின்றது.

'2005 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது விடுதலைப் புலிகள் செய்த பெரும் தவறு; அதுவே அவர்களது அழிவுக்கும் தமிழர் சந்தித்த பேரழிவுக்கும் வழி கோலியது' என்கிறார்கள் அறிஞர்கள்.

ராஜபக்ச குழுவினரை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற தமிழர்களி்ன் கூட்டுணர்வுக்கும், பொன்சேகாவுக்குப் பின்னால் திரள தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள "கூட்டு முடிவு"க்கும் அதுவும் ஒரு காரணம்.

ஆனால் - ராஜபக்சவை ஆட்சி அமைக்க வைத்தது விடுதலைப் புலிகள் எடுத்த சரியான முடிவு தான் என்பது என் கருத்து.

ஆனால் - அவரை ஆட்சியில் அமர்த்துவதற்கு அவர்களிடம் இருந்த நோக்கமும், அதற்கான காரணங்களும், அவர் ஆட்சி அமைத்த பின்னான காலத்தை அவர்கள் கையாண்ட முறைகளும் தான் தவறானவை.

மீண்டும் போர் வெடிப்பதற்கான புறச்சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.

காரணம் - போர் நிறுத்த காலத்தில் திரட்டிய வளங்களின் அடிப்படையில் - சுய போர்ப் பலம் மீதான அதீத நம்பிக்கை அவர்களுக்கு வந்திருந்தது; அத்தோடு - எதிரியின் பலத்தையும் அவர்கள் குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள்.

இவற்றின் அடிப்படையில் - போரை வெடிக்க வைத்து சிறிலங்கா படைகளை அடித்துத் துரத்தி வெற்றி வாகை சூடலாம் என்பது அவர்களது நம்பிக்கை.

இந்த நோக்கத்தையும், நம்பிக்கையையும் வைத்து - போர் முழக்கம் கொட்டிய ஒரு சிங்களக் கடும் போக்குவாதியைப் பிரபாகரன் அப்போது ஆட்சியில் அமர்த்தினார்.

அதே வேளையில் - அனைத்துலக சமூகத்தின் பிரதான ஆட்டக்காரர்கள் மத்தியில் தம்மைப் பற்றி இருக்கும் கருத்து என்ன என்பதை அறியவும், மீண்டும் போர் வெடித்தால் இந்த வல்லரசுகள் எல்லாம் சேர்ந்து என்ன செய்யும் என்ற விடயத்தைக் கணிக்கவும் அவர் தவறிவிட்டார்.

அதே சமயத்தில் - என்றைக்கோ நடந்த ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பரிகாரம் தேடி இந்தியாவைச் சமாளிக்க பாலா அண்ணை எடுத்த முயற்சிகளுக்கும் அவர் ஒத்துழைக்காமல் விட்டுவிட்டார்.

இவை எல்லாம் சேர்ந்து தான் - விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சுய-அழிவுக்கும் [self-Destruction], தமிழினத்தின் பேரழிவுக்கும் வழிவகுத்தனவே அல்லாமல், ராஜபக்ச ஆட்சிக்கு வந்தது அல்ல.

உண்மையில் - ராஜபக்சவை ஆட்சியமைக்க விட்டது ஒரு சரியான முடிவு; மாறி வருகின்ற புவிசார் அரசியல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புப் புறநிலையில் அது ஒரு மிகச் சரியான முடிவு தான்.

ஆனால் - ராஜபக்ச ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்துக்கு உள்ளாகவே - சங்கத்தானை, கோண்டாவில், இருபாலை, பருத்தித்துறை என சிறிலங்கா படைகள் மீது தாக்குதல்களைத் தொடங்கி, பின்னர் - மாவிலாறில் சண்டையைத் தூண்டி, அதன் தொடர்ச்சியாக - யாழ்ப்பாணப் படையெடுப்பு ஒன்றை முயற்சித்தது தான் பிரபாகரன் செய்த தவறு.

2006 ஓகஸ்ட் 11 ஆம் திகதி நடந்த அந்த யாழ்ப்பாணப் படையெடுப்பின் நாசகாரத் தோல்வியில் தான் - விடுதலைப் புலிகள் இயக்கத்தினது அழிவின் கடைசிக் கட்டம் தொடங்கியது.

மாற்றீடாக - பிரபாகரன் செய்திருக்க வேண்டியது என்னவென்றால் - பொறுமை காத்திருக்க வேண்டும்.

1991-ற்குப் பின்பு - ராஜீ்வ் காந்தியின் "ஆவி" தம்மைத் துரத்தித் திரிந்த சூழலில், 2001 ஆம் ஆண்டுக்குப் பின்பு - "பயங்கரவாத" பட்டம் உரம் பெற்றிருந்த சூழலில் - ஒரு வேளை தாம் அழிக்கப்பட்டுவிட்டால் - பேரம் பேசும் வல்லமை பொருந்திய ஒரு தலைமையற்றுத் தமிழினம் நடுத்தெருவில் நிற்கும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

இப்போது - விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரே இழப்பு - அந்த இயக்கம் எடுத்த முடிவுகளின் சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் - அது ஏற்படுத்திவிட்டுப் போயுள்ள தலைமைத்துவ வெற்றிடம் தான்.

ராஜபக்ச ஒரு தீவிரவாதி; மார்க்சிய ஜே.வி.பி.யுடன் கைகோர்த்து இருந்தார்; இந்திய எதிர்ப்பாளர்; மேற்குலகோடு முரண்பட்டார்; எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவிற்குக் கடை விரித்தார்; ஈரானைத் தோழனாக்கினார் -- ஒட்டுமொத்தத்தில் தமிழர்களுக்கு ஏற்றவிதமான ஓர் ஆட்சியாளராக அவர் அரியணை ஏறினார்.

இவற்றை எல்லாம் விதையாகப் போட்டு ஓர் உருப்படியான அரசியல் விளைவை அறுவடையாக்கத் தவறியது தான் பிரபாகரன் செய்த தவறு; ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்தியது அல்ல.

[படம்]

பொம்மை இலக்கம் 1

இப்போது மீண்டும் தேர்தல் காலம்: அதே ராஜபக்சவும் போட்டியிடுகின்றார்.

சி்ங்களவர்களுக்குத் தமிழர்களைத் தேவை; பக்கத்திலிருக்கின்ற இந்தியாவுக்கும் தமிழர்களைத் தேவை.

சிங்களவர்களால் எமக்குக் கிடைக்கப்போவது எதுவுமில்லை; அதனால், அவர்களைப் பற்றி அக்கறைப்பட ஒன்றுமில்லை.

பக்கத்திலிருக்கின்ற இந்தியாவைத் தான் நாம் கருத்தில் எடுக்க வேண்டும்; தீமையோ நல்லதோ எதுவாய் இருந்தாலும் அங்கிருந்து தான் இனி வர வேண்டும்.

இந்தியாவைக் கருத்தில் எடுப்பது என்பது, தனியாக இந்தியாவை மட்டும் கருத்தி்ல் எடுத்தல் என்று அர்த்தம் அல்ல; அதன் பழைய பகையாளி சீனா, புதிய கூட்டாளி அமெரிக்கா, நிரந்தர எதிரி பாகிஸ்த்தான் என அதனோடு தொடர்பான எல்லோரையும் கருத்தில் எடுக்க வேண்டும்.

தேர்தலிலே பேய்க்கு வாக்களிப்பதா, பிசாசைத் தேர்ந்தெடுப்பதா, அல்லது வேறு ஒரு புண்ணியவானுக்கு வாக்களிப்பதா, அல்லது எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தேர்தல் நாளில் தமிழர்கள் எல்லோரும் வீட்டுக்குள் சுருண்டு படுப்பதா என எல்லாக் கேள்விகளுக்குமான விடை - அந்த இந்தியப் பூதத்தை நாம் எப்படிக் கையாளப் போகிறோம் என்பதில் தான் தங்கியுள்ளது.

இப்போது இந்தியா தான் உலகம். சீனப் பூதத்திற்கு ஈடுகொடுக்க மேற்குலகம் ஒன்றாய் திரண்டு இந்தியாவுக்கு முண்டு கொடுப்பதால் - ஆகக் குறைந்தது அடுத்த 30 வருட காலத்திற்கு இந்தியா தான் உலகம்.

தமிழர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் - எமது நலன்களும் இந்தியாவின் நலன்களும் சந்திக்கும் ஒரு மூலோபாயத் திடலை உருவாக்கி அங்கே இந்த உலக ஆட்டக் காரர்களை மோத வைத்துவிட்டு ஓரத்தில் நிற்க வேண்டும்.

அதாவது - இந்திய நலன்கள் காக்கப்பட்டாலே மேற்குலகி்ன் நலன்கள் காக்கப்படும் என்ற இன்றைய சூழலில் - தமிழரது நலன்கள் உறுதிசெய்யப்பட்டால் தான் இந்தியாவின் நலன்கள் காக்கப்படும் என்ற சூழலை உருவாக்க வேண்டும்.

அது என்னவெனில் - இந்தியாவுக்கும் மேற்கிற்கும் பிடிக்காத ஒருவரை ஆட்சியில் அமர்த்தி, தென்னாசியாவில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டுமெனில் அவர்கள் தமிழர்களைத் தேடி வந்து தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தும் ஒரு சூழலை உருவாக்குவது தான்.

தமிழரது மனித உரிமைகள் பற்றியும், தமிழரது அரசியல் வேட்கைகள் பற்றியும் உலகப் பெரும் நாடுகள் எல்லாவற்றுக்குமே தெரியும்; ஆனால், தமிழரைப் பற்றி அவர்கள் எவருக்கும் அக்கறையில்லை.

தமது நலன்களைக் காக்கத் தமிழர் பிரச்சனையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் தான் அவர்களது அக்கறை. அதனால் - தமது நலன்களிற்காக அவர்கள் எங்களி்ல் சார்ந்திருக்கும் சூழலை ஏற்படுத்துவதே எமது உரிமைகளைப் பெறுவதற்குமான வழி.

என்னைப் பொறுத்தவரையில் - ஒரு நீண்ட கால நோக்கில் - ராஜபக்ச ஆட்சிக்கு வருவது தான் தமிழர்களுக்கு நல்லது.

பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்க தமிழர் கூட்டமைப்பு எடுத்த முடிவு ஒருவகையில் நல்லது; அது சிங்களவர்களை ராஜபக்சவுக்குப் பின்னாலே திரட்டி, அவரை வெல்ல வைக்கும்.

* * * *

[படம்]

பொம்மை இலக்கம் 2

இந்து சமுத்திர மற்றும் தென்னாசியப் பிராந்தியம் தொடர்பான ஒரு உரையை மேற்குலகின் முக்கியமான பாதுகாப்புத்துறைக் கொள்கை வகுப்பாளர் ஒருவர் - ஒரு முதன்மை மேற்குலகத் தலைநகரில் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

அவர் சொன்னார் - "சிறிலங்கா அளவுக்கு உலகில் வேறு எந்த ஒரு நாடும் எமது கவனத்தை இப்போது ஈர்த்திருக்கவில்லை."

அவர் இந்த உரை நிகழ்த்திய போது தேர்தல் பற்றிய அறிவிப்பு இலங்கையில் வெளியாகி இருக்கவில்லை; அந்த அறிவிப்பு வெளியாகிய பின்னர் உலகின் கவனத்தை சிறிலங்கா மேலும் ஈர்த்துவிட்டது.

2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் - தமிழ் தேசியப் பிரச்சனை, ஒரு அனைத்துலக விளையாட்டுக் களமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதன்மையைப் பெற்றுவிட்டது.

பொன்சேகா வெல்வாரா, ராஜபக்ச வெல்வாரா என்பது எமக்கு ஒரு பொருட்டே அல்ல. ஜனவரி 27, 2009 அன்று இந்தியாவும், சீனாவும், அமெரிக்காவும் என்ன செய்யப் போகின்றன என்பதில் தான் எல்லாமே தங்கியுள்ளது.

இந்த நாடுகளின் சுய-நலன் சார்ந்த வேலைத் திட்டத்திற்குள் நாம் சிக்கிவிடக்கூடாது என்பது எமது விருப்பம் தான்; அனால், நாம் ஏற்கெனவே சிக்கியுள்ளோம். அதற்குள் சிக்காமல் எம்மால் எதுவும் செய்யவும் முடியாது. நாம் அதற்குள் சிக்கி உள்ளோம் என்ற விடயத்தை உதாசீனம் செய்துவிட்டும் நாம் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது.

அதை விடவும் சூட்சுமமானது என்னவென்றால் - இந்த வல்லரசுகளி்ன் தலையீடு தான் இப்போது எமது பலம்; அதனை நாமே கெடுத்து எமது பலவீனமாகவும் ஆக்கிவிடக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு.

தமிழர்களுக்கு ஏதாவது ஒரு நல்ல தீ்ர்வு கிடைக்கும் எனில் - அது இந்தப் பன்னாட்டுப் பரிமாணங்களூடாகத் தான் வர முடியும். இலங்கைத் தீவைச் சார்ந்து, அங்கே வாழும் மக்களைச் சார்ந்து, அவர்கள் அளிக்கும் வாக்குகளைச் சார்ந்து, ஆட்சியில் அவர்கள் அமர்த்தப் போகும் ஆளைச் சார்ந்தே இந்தப பன்னாட்டுப் பரிமாணங்கள் இருக்கப் போகின்றன.

சில விடயங்ளை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்:

முதலாவது:- மனித உரிமைகள் [Human Rights] பற்றியும், மனிதார்ந்த பிரச்சனைகள் [Humanitarian Crisis] பற்றியும் இந்த உலகில் திடீரெனக் கதைகள் அடிபடுகின்றன என்றால் - இந்தப் பெரிய வல்லரசுகளுக்கு அதனால் ஏதோ நன்மை இருக்கின்றது என்று அர்த்தம்.

மனித உரிமைகள் மறுக்கப்பட்ட, மனிதார்ந்த பிரச்சனைகளுக்குள் சிக்குண்டுள்ள மக்கள் மீது அவர்களுக்குத் திடீரென பாசம் முளைத்துவிட்டது என்பது அதன் அர்த்த்தம் அல்ல.

இரண்டாவது:- அனைத்துலக விவகாரங்களில் - நடக்கின்ற எந்த நிகழ்வையுமே எப்போதும் தனித்த ஒரு சம்பவமாகப் பார்க்காதீர்கள்: எல்லா நிகழ்வுகளுமே ஏதோ ஒரு வகையி்ல் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை.

பொன்சேகா மீதான அமெரிக்க அதிகாரிகளின் வினா-விடை ["Quiz"], கோத்தபாய போர்க்குற்றம் இழைத்தார் என அவர் கொடுத்த செவ்வி, அவரை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு, சிறிலங்காவுடன் இனி மென் அணுகுமுறை என அமெரிக்க செனற் வெளியுறவுக் குழு செய்த பரிந்துரை, பிலிப் அல்ஸ்ரனின் போர்க்குற்ற அறிக்கை, பான் கீ மூனின் மறுப்பு அறிக்கை, சுற்றுலாவுக்கு ஏற்றதென சிறிலங்காவுக்கு நியூயோர்க் ரைம்ஸ் கொடுத்த முதலிடம், டப்ளினில் நடைபெற்ற போர்குற்ற விசாரணை, ஜி. எஸ்.பி. பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை ஆறு மாதங்களுக்கு மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியது - இப்படியான எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பான தனித்தனி நிகழ்வுகள்.

ஆனால் - தமிழ் மக்களைச் சுற்றி நிகழும் இந்த நிகழ்வுகள் எதுவுமே, இனஅழிவுக்கு உள்ளாகி, இப்போது நியாயம் வேண்டி நிற்கும் அந்த மக்களின் நன்மையை நேக்கமாகக் கொண்டவை அல்ல; இவை எல்லாமே - பெரிய சக்திகள் தமது நலன் சார்ந்து அரக்கும் காய்களின் அடிப்படையில் நிகழ்ந்தவை; நிகழ்ந்து வருபவை.

2009 ஆம் ஆண்டின் பேரழிவுகளை விடவும் மிகப் பெரிய பரிதாபம் என்னவென்றால் - தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய அறியாமையில் தமிழினத்தில் பெரும் பகுதி இன்னமும் இருப்பது தான். தமது உண்மை நிலை என்ன என்பதை அறிவது தான் தமிழர்கள் முன்னால் இன்று உள்ள கடமை. அதில் தெளிவு இருந்தால் தான் இனி என்ன செய்ய முடியும் என்பதையும் தெளிவாகச் சிந்திக்க முடியும்.

21 ஆம் நூற்றாண்டின் வல்லரசுப் போட்டியில் - உலக உச்ச நாட்டுக்கான அளவு கோல் பொருளாதாரப் பலம்; போர்ப் பலம் அல்ல.

பொருளாதார மேன்மையை அடிப்படையாகக் கொண்ட இந்த வல்லரசுப் போட்டியின் உயிர் வழியான கப்பல் பாதைகளைத் தன்னூடு கொண்டுள்ளதால் - இந்து சமுத்திரம் இந்தப் போட்டியின் பிரதான ஆடு களமாக உள்ளது. இந்த ஆடு களத்தின் நடு மையத்தில் சிறிலங்கா இருப்பதால் - உலக வல்லரசுகளின் மூலோபாயக் குவி மையமாக [strategic Focal Point] இலங்கைத் தீவு ஆகிவிட்டது.

இலங்கைத் தீவில் வாழும் எந்த ஒரு மக்கள் இனத்தினது உரிமைகள் பற்றியும் இந்த வல்லரசு நாடுகளுக்கு எந்த அக்கறையும் எப்போதும் இருந்தது இல்லை; இருக்கப்போவதும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அங்கு அமைதியும், உறுதிப்பாடும் [stability] இருந்தால் போதுமானது. அப்போது தான் அவர்களது நலன்கள் காக்கப்படும். ஆகவே - அந்த அமைதியும் உறுதிப்பாடும் எப்படி உருவாக்கப்பட்டாலும் அவர்களுக்குப் பிரச்சனகள் இல்லை. அது ஒரு போர் மூலம் தான் உருவாக்கப்பட முடியும் எனில் அத்தகைய ஒரு போரையும் அவர்கள் செய்வார்கள்; செய்விப்பார்கள்; அதையே செய்வித்தார்கள்.

இலங்கைத் தீவில் அமைதியையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துவது தொடர்பில் இந்த வல்லரசு நாடுகளுக்குப் பல பிரச்சனைகள் இருந்தன: முதலாவது பிரச்சனை - தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கம்; அதிலும் குறிப்பான பெரும் பிரச்சனை பிரபாகரன் என்ற மனிதர்.

குழப்பக்காரர், நம்பகத்தன்மை அற்றவர், சமாதானம் பேசிக்கொண்டு போருக்குத் தூண்டுபவர் - என்றவாறாக இலங்கைத் தீவில் அமைதியையும் உறுதிப்பாட்டையும் பேணுவதற்கு அவர்களுக்கு அவர் ஒரு பிரச்சனைக்காரராக இருந்தார்.

அவரைக் கொல்ல வேண்டும் என்பதோ, அவரது இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதோ அவர்களுக்கு ஒரு தேவையாக இருக்கவில்லை; ஆனால், இலங்கைத் தீவில் அமைதியைப் பேணுவதற்கு ஏற்றவாறாக அவருடைய பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்குத் தாம் எடுக்கும் முயற்சிகளுக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்பதே அவர்களுடைய பிரச்சனை.

அடுத்த பக்கத்தில் - ராஜீவ் காந்தி கொலைக்குப் பழிவாங்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு; "பயங்கரவாத" நடவடிக்கைகளுக்கான ஒரு முன்னுதாரணத்தை அழிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு; சீனாவிற்கு எதிரான தனது மூலோபாயப் பங்காளியான [strategic Partner] இந்தியாவின் விருப்பிற்கு ஏற்ப இயங்க வேண்டிய தேவையும் அமெரிக்காவுக்கு; விடுதலைப் புலிகளை அழிக்க சிறிலங்காவுக்குத் துணை செய்தால் இலங்கைத் தீவில் வேரோடி இந்து சமுத்திரத்தில் விழுது பரப்பலாம் என்ற எண்ணம் சீனாவுக்கு.

வாய்ப்புத் தேடிக் காத்திருந்தார்கள் எல்லோரும்: ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்தி, சிங்களப் படைகளைச் சீண்டிப் பிரபாகரன் தொடக்கிய போர் - கடைசியில் அவரது விருப்பத்தை நிறைவேற்றாமல் - அவரை அழிக்க நினைத்தவர்களின் விருப்பங்களை ஈடேற்றி, அவர்களது நலன்கள் சார்ந்தே முடிவுற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதன் பின்னரான சிறிலங்காவைக் கையாள்வது தொடர்பில் இந்த வல்லரசுகள் தமது தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தபோது தான் - தேர்தல் பற்றிய அறிவிப்பைச் செய்தார் ராஜபக்ச.

திடீரெனப் பிறந்த இந்தப் புதிய சூழலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்ற இந்த வல்லரசுகள் இப்போது தமது புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளன.

பொன்சேகா போட்டியில் இறங்கியதன் பின்னணியிலோ, அல்லது இப்போது அவருக்குப் பின்னாலோ அமெரிக்காவின் ஆசீர்வாதம் இருக்கலாம். ஆனால் - அதற்காக, ராஜபக்ச மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறும் ஒரு சூழலை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அதனால், தான் நடுநிலைமை வகிப்பதாக அது சொல்லுகிறது; ஏனென்றால் - ராஜபக்ச மீணடும் ஆட்சியில் ஏறினால் அவரோடு ஒத்துப் போவதற்கும் ஒரு வழி தேவை.

இந்தியாவுக்கும் பொன்சேகா ஆட்சி ஏற வேண்டும் என்பதே ஆவல்; சீனாவோடு கை கோர்த்துவிட்ட ராஜபக்சவை அகற்ற வேண்டும். ஆனால், பொன்சேகாவும் நாளைக்கு சீனாவின் பங்காளி ஆகமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம். அல்லது - பொன்சேகா தோற்று ராஜபக்சவே மீண்டும் ஆட்சி ஏறிவிட்டால் என்ன செய்வது. அதனால் - பின்னாலே பொன்சேகாவுக்கு முண்டுகொடுத்தபடி, முன்னாலே நடு நிலமை என்கிறது இந்தியா.

இந்தத் தேர்தல் சில்லெடுப்புகளுக்குள் எல்லாம் தலையிடாமல் - மறுபக்கத்தில் - தனது காரியத்தில் கண்ணாயிருக்கின்றது சீனா. துறைமுகம் கட்டுதல், விமான நிலையம் அமைத்தல், நெடுஞ்சாலைகள் இடுதல், குறுந்தெருக்கள் போடுதல் என டொலர்களை மில்லியன்களிலும், சீனர்களை ஆயிரங்களிலும் கொட்டுகின்றது சீனா. யார் ஆட்சிக்கு வந்தாலும் பிடுங்கி எறியமுடியாத அளவுக்கு இலங்கைத்தீவி்ல் வேரூன்றுவதே சீனாவின் இலக்கு.

[படம்]

செல்லப்பிள்ளை

நாமறிந்த பொது விதி என்னவென்றால் - ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். இலங்கைத் தீவோ மூன்றாகிக் கிடக்கின்றது - கூத்தாடிகளுக்கோ திருவிழா.

ஜனவரி 27 ஆம் நாள் இலங்கையில் எப்படி விடிந்தாலும் அதற்கு ஏற்றவிதத்தில் தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள இந்த மூன்று பெரும் பிரிவுகளையும் வைத்துக் காய்களை அரக்கத் தொடங்கிவிட்டனர் அவர்கள்.

அண்மைக் கால நிகழ்வுகள் எல்லாம் அந்தக் காய் நகர்த்தல்கள் தான். இந்த நிகழ்வுகள் எல்லாம் தனித் தனிப் புள்ளிகள் போன்றவை. அவற்றை இணைத்து ஒர் அழகான இராஜதந்திரக் கோலத்தைப் போட முடியுமா என்று பாருங்கள்.

நடந்தது இது:

பசுபிக் பிராந்தியப் படைத் தளபதிகளின் மாநாடு ஒன்றுக்கு பொன்சேகாவுக்கு அமெரிக்கா அழைப்பு அனுப்பியது. அவர் பெட்டி படுக்கைகளை அடுக்கிய சமயத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை விடுத்த ஓர் அறிக்கையில் - வெள்ளைக் கொடிகளோடு சரணடைய வந்தவர்களைப் போர் தர்மங்களை மீறித் தாம் சுட்டுக் கொன்றதாக குருநாகலவில் பொன்சேகா ஆற்றிய ஓர் உரை குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது பசுபிக் படைத் தளபதிகள் மாநாட்டுக்கான அழைப்பு இரத்துச் செய்யப்பட்டது. இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட குற்றங்களில் அவருக்கு இருக்கக்கூடிய பங்கு காரணமாகவே அந்த அழைப்பு இரத்துச் செய்யப்பட்டதாக அப்போது கதைகள் அடிபட்டன. மாநாட்டுக்குச் செல்வதற்கு அழைப்பு மறுக்கப்பட்ட பொன்சேகா, அமெரிக்காவில் மகள் வீட்டுக்குப் போக அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்கா வந்த பொன்சேகாவை அதிகாரிகள் வினா-விடை செய்யவிருப்பதாகச் செய்திகள் வந்தன; ஆனால், வினாக்களுக்கு விடை அளிக்க முன்னதாகவே அமெரிக்காவிலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என்று சொல்லப்பட்டது.

கொழும்பில் வந்து இறங்கியவரை - தேசப் பற்று மிக்கவர், நாட்டை காட்டிக்கொடுக்காதவர், அமெரிக்க அச்சுறுத்தலுக்குப் பணியாதவர் என்று சிங்கள தேசம் போற்றியது. தம்மை ஆளும் அருகதை அவருக்கே உண்டு என்று புகழ்ந்தது. இந்தப் போற்றுதலுக்கும் புகழ்ச்சிக்கும் பின்னால் மேற்கின் கைப்பாவையான ஐ.தே.க. இருந்தது. அரசுத் தலைவர் தேர்தலில் இறங்கி ராஜபக்சவை எதிர்க்கும் எண்ணத்தை வெளியிட்டார் பொன்சேகா.

அதே நேரத்தில் - நாடு போகிற போக்கைப் பார்த்தால் பொன்சேகா மண்ணைக் கவ்வி, ராஜபக்சவே மீ்ண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை வந்துவிடுமோ என்ற சந்தேகம் இந்த வெளியாட்களுக்குத் திடீரென வந்துவிட்டது.

திடீரென - கோத்தபாய போர்க் குற்றம் இழைத்ததாகச் செவ்வி கொடுத்தார் பொன்சேகா. போர்க்குற்றக் காரணங்களுக்காக அமெரிக்க மாநாட்டுக்கு அழைப்பு மறுக்கப்பட்ட அவர், அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பின்பு, அதே போர் குற்றங்களை இன்னொருவர் மீது சாட்டினார். அவரது அந்தச் செவ்வியோடு போர்க் குற்றங்கள் பற்றிய கதைகள் திடீரென உலகில் அடிபடத்தொங்கின.

கைகளும் கண்களும் கட்டப்பட்டுத் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காணொலிப் பதிவு வெளியாகி, சர்ச்சையைக் கிளப்பி, தமிழர் பொங்கி எழுந்து, சிறிலங்கா அதைப் பொய்யானது என்று நிராகரித்து, எல்லாம் மெல்ல அடங்கிப் போய் நான்கு மாதங்களின் பின்னர் - திடீரென முளைத்த பிலிப் அல்ஸ்ரன் அது உண்மையானது தான் என்று அறிக்கை விட்டார்; நடுவிலே பாய்ந்த பான் கீ மூன் அது அல்ஸ்ரனின் சொந்தக் கருத்து என்றார்.

இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் - அல்ஸ்ரன் யாரை இலக்கு வைக்கிறார் என்பதுவோ, பான் கீ மூன் யாரைப் பாதுகாக்க முயல்கின்றார் என்பதுவோ அவர்களுக்கே இன்னும் முடிவாகவில்லை: ஜனவரி 27 ஆம் நாள் விடிவதற்காகக் காத்திருக்கின்றார்கள்.

போர் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, டப்ளினில் நீதிமன்றம் கூடி விசாரணைகள் எல்லாம் தடல்புடலாக நடக்கின்றன. ஆனால், குற்றவாளிக் கூண்டில் போருக்கு உத்தரவிட்டவரையா, அல்லது போரை நடத்தியவரையா நிறுத்துவது என்பதில் அவர்களுக்கே இன்னும் முடிவாகவில்லை: ஜனவரி 27 ஆம் நாள் விடிவதற்காகக் காத்திருக்கின்றார்கள்.

இது இப்படி இருக்க - முரண்பாடுகளைக் குறைத்து சிறிலங்காவுடன் இனிமேல் நல்லுறவை வளர்க்க வேண்டும் எனத் தனது அரசாங்கத்திற்கு அமெரிக்க செனற் வெளியறவுக் குழு பரிந்துரை செய்தது. இப்போது ஆட்சியில் இருப்பவருடன் நல்லுறவா, அல்லது புதிதாய் ஆட்சியில் ஏறுபவருடன் நல்லுறவா என்பது அவர்களுக்கே இன்னும் முடிவாகவில்லை: ஜனவரி 27 ஆம் நாள் விடிவதற்காகக் காத்திருக்கின்றார்கள்.

நடப்பது இது தான்:

போர் குற்றச்சாட்டுகள் பொதுவானவை; சிறிலங்காவின் ஆட்சியில் ஏறுபவரை வழிக்குக் கொண்டுவர எடுக்கப்படும் முயற்சி அது. குறிப்பிட்ட எவரையும் நோக்கி அவை முன்வைக்கப்படவில்லை. இங்கே வசதி என்னவென்றால் - ஆட்சியில் ஏறும் வாய்ப்பில் உள்ள இருவரையுமே போர் குற்றம் சாட்டக்கூடிய வசதி உள்ளது; ஏனெனில், இருவருமே போரின் பங்காளிகள். ராஜபக்சக்கள் மட்டுமே குற்றம் சாட்டப்படுவர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆட்சியில் ஏறிய பின்பு பொன்சேகா சீனாவுடனும் ஈரானுடனும் சல்லாபித்தால் - போர் குற்றச்சாட்டுகளை அவரை நோக்கியும் நீட்டலாம். அப்படியான ஒரு நகர்வின் மூலமாக - பொன்கோவை அலரி மாளிகையில் இருந்து அகற்றிவிட, அவர்களது செல்லப்பிள்ளை ரணில் விக்கிரமசிங்க தன்பாட்டில் அந்த இடத்திற்கு வந்துவிடுவார்.

சிறிலங்காவுடன் நல்லுறவு, அல்லது முரண்பாடுகளைக் குறைத்தல் என்பதுவும் பொதுவானது; அதுவும், சிறிலங்காவின் ஆட்சியில் ஏறுபவரை வழிக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சி. பொன்சேகா மட்டும் தான் என்று அல்ல, ராஜபக்சவே மீண்டும் ஆட்சியில் ஏறிவிட்டாலும் அவருடன் சமாளித்துப் போவதற்கான ஒரு வழி. அல்லது - ஆட்சி பீடம் ஏறிய பின்பு பொன்சேகா பிரச்சனை கொடுத்தால், போர்க் குற்றம் சாட்டி அவரை அகற்றிவிட்டு, ரணிலிடம் நாட்டை ஒப்படைப்பதற்கான ஒர் எற்பாடு. 2010 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச் சிறந்த 32 நாடுகளில் முதலாவது இடத்தை நியூயோர்க் ரைம்ஸ் சிறிலங்காவிற்கு கொடுத்ததும் இதன் ஒர் அங்கம் தான்.

இது எல்லாமே கண்டிப்பும் கருணையும் காட்டுவது போன்றதான - சமாந்தரமாக நகர்த்தப்படும் ஒரே நடவடிக்கையின் இரு முனைகள். போர் குற்றச் சாட்டுக்களையும் தயார்ப்படுத்தி வைத்துக்கொண்டு, அன்புக் கரங்ளையும் நீட்டுவது: ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை நிறுத்துவது; ஆனால் அது ஆறு மாதங்களுக்கு மட்டும் தான் என முன்கூட்டியே சொல்லிவிடுவது.

[படம்]

"தலைவர்கள்"

இங்கே - நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இதில் எந்த இடத்திலுமே தமிழர் நலன் சம்மந்தப்படவில்லை என்பது தான். தமது நலன்களைக் காப்பதற்காக அவர்கள் எமது பிரச்சனையைப் பயன்படுத்துகி்ன்றார்கள் -- அவ்வளவு தான். அவர்களது நலனைக் காப்பதன் ஊடாக எமது பிரச்சனையை நாம் எப்படித் தீர்க்கப் போகின்றோம் என்பதில் தான் எமது விவேகம் தங்கியுள்ளது.

தென்னாசியாவில் இந்தியாவே முதன்மை ஆட்டக்காரன். இந்தியாவுக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை; நடக்கவும் முடியாது; நடக்கவும் மாட்டாது.

இந்தியாவும் இங்கே தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் ஒன்று உண்டு: உலக ஒழுங்கு மாறி மாறி வந்த ஒவ்வொரு காலத்திலுமே ஆட்சியிலிருக்கும் சிங்களவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்களுடனேயே கைகோர்த்து இருந்தனர். தமிழர்கள் மட்டுமே இந்தியாவின் பக்கம் எப்போதும் இருந்தனர்.

சிங்களவர்கள் இந்தியாவுடன் கைகோர்த்த ஒரே ஒரு சந்தர்ப்பம் பிரபாகரனைக் கொல்லுவற்காகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்காகவும் நடத்தப்பட்ட போர் மட்டுமே. அது இரண்டுமே இப்போது நடந்து முடிந்துவிட்டது. நாளை ஆட்சியில் ஏறும் சிங்களவர் என்ன செய்வார் என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் - நான் மேலே எழுதியதைப் போல - எமக்கு நன்மையோ தீமையோ, அது இந்தியாவிலிருந்து தான் வர வேண்டும்.

2005 இல் - அப்போது தலைமைப் பொறுப்பில் இருந்த விடுதலைப் புலிகள் எடுத்த முடிவும், அந்த முடிவின் விளைவைக் கண்ட பின் அவர்கள் நடந்து கொண்ட முறைகளும் தமிழ் தேசிய இனத்திற்கு எதைக் கொண்டு வந்தது என்பது இப்போது வரலாறு.

2010 இல் - இப்போது தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவும், அந்த முடிவின் விளைவைக் கண்ட பின்பு அது நடந்துகொள்ளவுள்ள முறைகளுமே எமது இனத்தின் நாளைய வரலாறு.

வாழ்த்துக்கள்.

தி. வழுதி

http://www.puthinappalakai.com/view.php?20100122100353

குறிப்பு: இந்தியாவை சார வேண்டும் எனும் தொனி சரியானதாக தெரியவில்லை. மற்றும்படி அலச வேண்டிய மாற்றுக்கருத்து என்பது - எனது கருத்து

Link to comment
Share on other sites

---

புதினப்பலகையில் வெளிவந்த இந்தக் கட்டுரை மிக முக்கியமான பல விடயங்களை பேச முனைகிறது. பொதுவாக இவ்வாறான கட்டுரைகள் குறித்து விரிவான விவாதங்கள் நிகழும் கருத்துக்களம் இக்கட்டுரையைக் கண்டும் காணாததாக இருந்துவிட்டதா?

Link to comment
Share on other sites

///This post has been edited by இளைஞன்: Today, 06:48 PM

Reason for edit: ஏற்கனவே இணைக்கப்பட்ட கட்டுரை, மீளவும் இணைக்கப்பட்டதால் - குறித்த கட்டுரை நீக்கப்பட்டுள்ளது///

ஏற்கனவே இக்கட்டுரை இணைக்கப்பட்டுள்ளதை கவனிக்கத் தவறி விட்டேன். தவறை மன்னித்துக் கொள்க இளைஞன்.

Link to comment
Share on other sites

---

புதினப்பலகையில் வெளிவந்த இந்தக் கட்டுரை மிக முக்கியமான பல விடயங்களை பேச முனைகிறது. பொதுவாக இவ்வாறான கட்டுரைகள் குறித்து விரிவான விவாதங்கள் நிகழும் கருத்துக்களம் இக்கட்டுரையைக் கண்டும் காணாததாக இருந்துவிட்டதா?

கண்டும் காணாததாக இருந்துவிட்டதா???????????????

:):lol: :lol: :lol:

:lol: :lol: :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திற்கும் தலைவர்தான் காரணம் என்று நிறுவ முயற்சி எடுத்திருக்கிறார்.பிரபாகரன் பிரபாகரன் என்ற ஏக வசனத்தில் அழைப்பதே தமிழரால் மதிக்கப்பட்ட தலைவரை அவமதிக்கும் நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது.அதாவது அவரைத் தலைவராக கட்டுரையாளர் எக்காலத்திலும் உளமார ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.பாலா அண்ணையின் சொல்லை தலைவர் கேட்கவில்லை என்று சொல்வது பாலா அண்ணை இல்லையென்ற தைரியத்தில் எழுதப்பட்டுள்ளது.அதாவது அரசியலில் புலமைத்தவம் வாய்ந்த ஒருவரின் சொல்லைக் கேட்காததால் இவ்வளவு அழிவும் ஏற்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.தமிழ்மக்களுக்கு தலைமை தாங்க சரியான தலைவர் இவர் இல்லை என்ற கோணத்தில் எழுதப்பட்டுள்ளது.30 வருடங்களுக்கு மேலாக தன் சொல்லைக் கேட்காத ஒருவருக்கு பாலா அண்ணை எப்படி அரசியல் ஆலோசகராக இருந்தார்.அவரைத் தன் தலைவராக எப்படி ஏற்றுக் கொண்டார் என்று சாதாரண அரசியல் அறிவு அற்றவருக்கே சந்தேகம் வரும். இந்தக் கேள்வி வரும் என்று கட்டுரையாளருக்கு தெரிந்திருக்கவில்லை.இவரது ஒரே நோக்கம் தலைவர் மீது சேற்றை வாரி இறைப்பதே.ஒரு கட்டுரையை எழுதி ஒரு இணையத்தளத்தையே மூடச் செய்ததுதான் இவருடை தீர்க்கதரிசனம்.இப்பொழுது மீண்டும் ஒரு கட்டுரை மூலம் மீண்டும் சேறு பூச ஆரம்பித்திருக்கிறார்.எதற்கெடுத்தாலும் (நல்லதோ கெட்டதோ?) இந்தியாவை நம்ப வேண்டும் என்ற எழுதுகிறார். இந்தியாவை நம்பி நாங்கள் ஏமாந்தது போதாதா? ரோவுடன் சேர்ந்து இயங்குகிறாரா?என்று சந்தேகப்படவைக்கிறது. இந்தியாவோடை உறவு வைக்கிறதை விட சிறிலங்காவோட சேர்ந்து வாழலாம். (தலைவர் ஒவ்வொரு மாவீரர் நாளிலும் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார். இந்தியதா அதனைக் கருத்திற் கெடுக்கவில்லை என்பது வேறு விடயம்)..தமிழ்நாட்டு மீனவனை குருவி சுடுவது போல சிறிலங்கன் நேவி சுடுவதை ஓருநாளும் தட்டிக் கேட்காத இந்தியாவிடம் எங்களுக்கு விடுதலை வேண்டித் தாருங்கள் என்று கேட்பதைப் போல மடமை வேறு எதுவும் இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

புதினப்பலகையில் வெளிவந்த இந்தக் கட்டுரை மிக முக்கியமான பல விடயங்களை பேச முனைகிறது. பொதுவாக இவ்வாறான கட்டுரைகள் குறித்து விரிவான விவாதங்கள் நிகழும் கருத்துக்களம் இக்கட்டுரையைக் கண்டும் காணாததாக இருந்துவிட்டதா?

கண்டு கொண்டோம், கண்டுகொண்டோம்,

விவாதங்களை யாரும் தன்னிலிந்து தொடங்குவதாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திற்கும் தலைவர்தான் காரணம் என்று நிறுவ முயற்சி எடுத்திருக்கிறார்.பிரபாகரன் பிரபாகரன் என்ற ஏக வசனத்தில் அழைப்பதே தமிழரால் மதிக்கப்பட்ட தலைவரை அவமதிக்கும் நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது.

உண்மைதான்

என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை

அதேநேரம் இவரது முன்னைய இரண்டு பாகங்களிலும் இப்படி எழுதியதாக ஞாபகமில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கட்டுரைகளுக்கு பதில் எழுதாமல் பேசாமல் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவோடை உறவு வைக்கிறதை விட சிறிலங்காவோட சேர்ந்து வாழலாம்.

அது!!!

இந்தியாவோடு சார்ந்து இருந்தால் எமது பிரச்சனை ஒரு ஆப்கானிஸ்தானாக மாறும் என்பதில் ஐயம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசியா பிராந்தியத்தில் இந்தியாவும் ,சீனாவும் தான் பெரும் வல்லரசுஆக போட்டி போடுவதாக ஆய்வு கட்டுரை எழுதுகிறார்கள்....

ஆனால் இந்த பிராந்தியதை ஒரு இஸ்லாம் மதம் தழுவிய பிராந்தியமாக்க வேண்டும் என்ற வகையில் பல பிராந்திய நாடுகள் செயல் படுகின்றன....இதை எந்த ஆய்வாளரும் கருத்தில் கொண்டு கட்டுரை வடித்த மாதிரி தெரியவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளுதி அடிப்பது என்று முடிவு செய்துவிட்ட பின் இது என்ன................? என்னென்னவோ எல்லாம் வரும். எல்லாம் எதிர்பார்த்ததுதான். நான் முனபே எழுதினேன். எல்லோருக்கும் துரோகிபட்டம் கட்டிவிட நினைக்கிறார்கள் என்றார்கள். யாருக்கு யார் துரோகி? எனக்கு தனிபட்ட முறையில் புளுதி அடிப்பவர் எந்த துரோகமும் இழைக்கவில்லை. ஆனால் தமது வாழ்வையே தமிழுக்கும் அது வாழும் மண்ணுக்கும் தாரைவார்த்தவர்கள் மீது புளுதியை வாரி இறைப்பதன் மூலம். புதிய காளான்களாக இவர்கள் சமூகத்தில் முளைக்கின்றார்கள் என்பதையே முன்பும் சொன்னேன்.

அவர் சொன்னதுபோலவே.................. கசப்பென்பதால் பொய்யை என்னால் இனிப்பாக எழுத முடியவில்லை. இனியாவது எல்லோரையும் தோழமை கொள்வோம் என்று. பாம்பு என்றோ ஒரு நாள் கொத்தும்............. அதனுடைய அறிவு அப்படி. அதற்கு பாம்மை நான் சாடவில்லை கொஞ்சம் பாதுகாப்பாக எட்டிநிற்கபார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திற்கும் தலைவர்தான் காரணம் என்று நிறுவ முயற்சி எடுத்திருக்கிறார்.பிரபாகரன் பிரபாகரன் என்ற ஏக வசனத்தில் அழைப்பதே தமிழரால் மதிக்கப்பட்ட தலைவரை அவமதிக்கும் நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது.அதாவது அவரைத் தலைவராக கட்டுரையாளர் எக்காலத்திலும் உளமார ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.பாலா அண்ணையின் சொல்லை தலைவர் கேட்கவில்லை என்று சொல்வது பாலா அண்ணை இல்லையென்ற தைரியத்தில் எழுதப்பட்டுள்ளது.அதாவது அரசியலில் புலமைத்தவம் வாய்ந்த ஒருவரின் சொல்லைக் கேட்காததால் இவ்வளவு அழிவும் ஏற்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.தமிழ்மக்களுக்கு தலைமை தாங்க சரியான தலைவர் இவர் இல்லை என்ற கோணத்தில் எழுதப்பட்டுள்ளது.30 வருடங்களுக்கு மேலாக தன் சொல்லைக் கேட்காத ஒருவருக்கு பாலா அண்ணை எப்படி அரசியல் ஆலோசகராக இருந்தார்.அவரைத் தன் தலைவராக எப்படி ஏற்றுக் கொண்டார் என்று சாதாரண அரசியல் அறிவு அற்றவருக்கே சந்தேகம் வரும். இந்தக் கேள்வி வரும் என்று கட்டுரையாளருக்கு தெரிந்திருக்கவில்லை.இவரது ஒரே நோக்கம் தலைவர் மீது சேற்றை வாரி இறைப்பதே.ஒரு கட்டுரையை எழுதி ஒரு இணையத்தளத்தையே மூடச் செய்ததுதான் இவருடை தீர்க்கதரிசனம்.இப்பொழுது மீண்டும் ஒரு கட்டுரை மூலம் மீண்டும் சேறு பூச ஆரம்பித்திருக்கிறார்.எதற்கெடுத்தாலும் (நல்லதோ கெட்டதோ?) இந்தியாவை நம்ப வேண்டும் என்ற எழுதுகிறார். இந்தியாவை நம்பி நாங்கள் ஏமாந்தது போதாதா? ரோவுடன் சேர்ந்து இயங்குகிறாரா?என்று சந்தேகப்படவைக்கிறது. இந்தியாவோடை உறவு வைக்கிறதை விட சிறிலங்காவோட சேர்ந்து வாழலாம். (தலைவர் ஒவ்வொரு மாவீரர் நாளிலும் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார். இந்தியதா அதனைக் கருத்திற் கெடுக்கவில்லை என்பது வேறு விடயம்)..தமிழ்நாட்டு மீனவனை குருவி சுடுவது போல சிறிலங்கன் நேவி சுடுவதை ஓருநாளும் தட்டிக் கேட்காத இந்தியாவிடம் எங்களுக்கு விடுதலை வேண்டித் தாருங்கள் என்று கேட்பதைப் போல மடமை வேறு எதுவும் இருக்க முடியாது.

உண்மை தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொடரூந்து ஒன்றில் ஜேர்மன்காரர்,ஜூதரும் அவர்களுக்கு எதிராக ஒரு இளம்பெண்ணும் ஒரு மூதாட்டியியும் பயணம் செய்தனர் தொடரூந்து குகையினூடாக பயணித்த போது முத்தமிடும் சத்தமும் அதன் பின் பளார் என அறையும் சத்தமும் கேட்டது தொடரூந்து குகையினைத்தாண்டியது வெளிச்சம் தொடரூந்தினுள் பரவியது ஜேர்மன்காரரின் முகத்தில் 5 விரல்கள் கோலம் போட்டிருந்து,ஜேர்மன் காரர் நினைத்தார் இந்த நாசமா போன ஜூதன் செய்த வேலைக்கு எனக்கு அடித்துவிட்டால் அந்த இளம்பெண் என நினைத்தான்,அதே நேரம் மூதாட்டியோ அந்த இளம்பெண் ரெம்ப நல்லவள் என நினைத்தார்,ஆனால் இளம்பெண்ணோ என்னை என்று நினைத்து அந்த மூதாட்டியை முத்தமிட்டுவிட்டான் முட்டாள் ஜேர்மனியன் என்று நினைத்து மனதினுள் சிரித்தாள்,ஜூதனோ தனது கையில் தானே முத்தமிட்டுவிட்டு ஜேர்மனியனை அறைந்துவிட்டேன் என தன்னுடைய புத்திசாதுரியத்தை எண்ணி அற்ப சந்தோசப்பட்டான்.

எந்த இனமும் தனக்கு நிகழ்ந்த கொடுமைக்ளுக்கு எதிர் வினையாற்றும் சீக்கியர்கள் தமது முடியை ஒழுங்குபடுத்துவதில்லை தமது சபதம் முடியும்வரை என்று பல தல முறைகளா இருக்கிறார்கள்.

பன்னாடை நல்லதை விட்டுவிட்டு குப்பைகளை பிடித்துக்கொள்ளும் அதற்காக திரு வழுதி அவர்கள் பன்னாடை அல்ல குப்பை அவரது கருத்துகளை தூக்கிப்பிடிப்பவர்கள் பன்னாடைகள்.வெறும் ஊகங்களின் அடிப்படையில் கருத்துகளை தெரிவிப்பத்து தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதை அவர் நிறுத்த வேண்டும்

Link to comment
Share on other sites

இந்தத் தேர்தல் சில்லெடுப்புகளுக்குள் எல்லாம் தலையிடாமல் - மறுபக்கத்தில் - தனது காரியத்தில் கண்ணாயிருக்கின்றது சீனா. துறைமுகம் கட்டுதல், விமான நிலையம் அமைத்தல், நெடுஞ்சாலைகள் இடுதல், குறுந்தெருக்கள் போடுதல் என டொலர்களை மில்லியன்களிலும், சீனர்களை ஆயிரங்களிலும் கொட்டுகின்றது சீனா. யார் ஆட்சிக்கு வந்தாலும் பிடுங்கி எறியமுடியாத அளவுக்கு இலங்கைத்தீவி்ல் வேரூன்றுவதே சீனாவின் இலக்கு.

இவர்களை தான் தமிழர்கள் தமது பக்கம் வளைத்து கொள்ள வேண்டும்.இந்தியா எமக்கு செய்த துரோகத்துக்கான பரிசினையும் இவர்கள் மூலம் கொடுத்து விடலாம்.மேற்குலகத்தின் கனவையும் தகர்த்து விடலாம்.

கடந்த காலங்களில் எமக்கு ஒரு உற்ற நண்பன் அதாவது பலம் வாய்ந்த நண்பன் இல்லாமல் போனது தான் எல்லோரும் சேர்ந்து எம்மை அழிக்க வாய்ப்பு அளித்து விட்டோம். இனியாவது ஒரு புதிய நண்பனை உருவாக்குவோம்.இல்லையேல் தெற்காசியாவில் அரசியல் அனாதைகளாவோம்.சம்பந்தர் போன்றவர்களுக்கு இப்படியான தூர நோக்கு இருக்குமோ தெரியவில்லை.

வழுதி என்ன எழுதினாலும் ,அவர் யாராக இருந்தாலும் ஒவ்வொருவரும் ஏன் அவரின் கருத்துடன் ஒத்து போகவில்லை என எழுதினாலே அவரின் கட்டுரையின் கருத்துக்கள் சுக்கு நூறாகிவிடும்.

அறிவுடைய இனம் என மார்தட்டும் எம்மினம் மற்றவர்கள் எம்மினத்தை முட்டாள்கள் ஆக்காமல் விரைந்து செயற்படவேண்டும்.துரோகி துரோகி என்று கூவி அழைப்பதால் ஒன்றுமே நடந்து விடப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழுதியும் தலைவரில் பிழை கண்டுபிடிக்கின்றார், த.தே.கூத்தமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களும் தலைவர் கடந்த முறை தேர்தலை பகிஸ்கரிக்க சொன்னது கடும் பிழை என்று பகிரங்கமாக கூறுகின்றார். ஆனால் இங்கு வழுதிக்கு மட்டும் தூற்றுதலும் சம்பந்தருக்கு போற்றுதலும் ஏனாம்?

இருவருமே தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்களை முட்டாளக்க முனைந்து அதன் மூலம் தங்கள் இலாபங்களை கணக்கிடுகின்றனர். இருவருக்கும் எமக்கு பேரவலம் தந்த இந்தியா தான் பரம்பொருளாக தெரிகின்றது. இருவருக்கும் முன்னம் பெரும் தீர்க்கதரிசியாக தெரிந்த தலைவர் இன்று எல்லா தோல்விகளுக்கும் காரணமாகின்றார். புலிகள் வெல்லும் போது இறந்த தளபதிகளின் மீது சத்தியம் செய்து ஆக்ரோசித்த வழுதியும், வன்னி சென்று தலைவரைக் காண்பதே முழுநேர அரசியலாக கடந்த 7 வருடங்களாக செய்த சம்பந்தருக்கும் இன்று தலைவர் பெரும் குற்றம் செய்தவர் ஆகின்றார்

மக்களும் வரலாறும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

வழுதியும் தலைவரில் பிழை கண்டுபிடிக்கின்றார், த.தே.கூத்தமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களும் தலைவர் கடந்த முறை தேர்தலை பகிஸ்கரிக்க சொன்னது கடும் பிழை என்று பகிரங்கமாக கூறுகின்றார். ஆனால் இங்கு வழுதிக்கு மட்டும் தூற்றுதலும் சம்பந்தருக்கு போற்றுதலும் ஏனாம்?

இருவருமே தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்களை முட்டாளக்க முனைந்து அதன் மூலம் தங்கள் இலாபங்களை கணக்கிடுகின்றனர். இருவருக்கும் எமக்கு பேரவலம் தந்த இந்தியா தான் பரம்பொருளாக தெரிகின்றது. இருவருக்கும் முன்னம் பெரும் தீர்க்கதரிசியாக தெரிந்த தலைவர் இன்று எல்லா தோல்விகளுக்கும் காரணமாகின்றார். புலிகள் வெல்லும் போது இறந்த தளபதிகளின் மீது சத்தியம் செய்து ஆக்ரோசித்த வழுதியும், வன்னி சென்று தலைவரைக் காண்பதே முழுநேர அரசியலாக கடந்த 7 வருடங்களாக செய்த சம்பந்தருக்கும் இன்று தலைவர் பெரும் குற்றம் செய்தவர் ஆகின்றார்

மக்களும் வரலாறும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இப்ப உதுதான் நாகரீகம்... :)

Link to comment
Share on other sites

மக்களும் வரலாறும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.

பிழம்பு, மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. 98% எழுத படித்த மக்களை கொண்ட இலங்கை ஏன் இனவாதிகளாக வேண்டும். தமிழர்களை கொல்பவனுக்கு வாக்களிக்க வேண்டும்? ஊடகங்களால் மக்கள் திசை திருப்ப படுகிறார்கள்.சுயமாக சிந்தித்து சில வீதமான மக்களே வாக்களிக்கிறார்கள்.

மேலும் அற்ப சிறு தொகைக்காக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பாவம் அவர்களின் ஏழ்மை.

மிகுதி வாக்குகள் அரசபடைகளாலும், ஒட்டு குழுக்களாலும் கள்ள வாக்குகளாக அளிக்க படுகின்றன. எப்படி ஒரு ஜனநாயகமான தேர்த்தல் என்று சொல்ல முடியும்?

இராணுவத்தில் உள்ளவன் கூட தனது வாக்கு யாருக்கு அளித்தார் என தனது தளபதிக்கு காட்ட வேண்டிய நிலையில் அவர் கூட யாருக்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தப்படுக்கிறார் இல்லையா? இதுவும் சனநாயகத்தின் ஒரு பகுதியோ??

தமிழர்களின் வாக்குகளால் தான் தோற்கடிக்க படுவேனோ என சந்தேகிக்கும் மகிந்த பல லட்சம் தமிழ் மக்களின் வாக்காளர் அட்டைகள் வழங்காமல் தடுத்தது ஜனநாயகமா?

Link to comment
Share on other sites

பிழம்பு, மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. 98% எழுத படித்த மக்களை கொண்ட இலங்கை ஏன் இனவாதிகளாக வேண்டும். தமிழர்களை கொல்பவனுக்கு வாக்களிக்க வேண்டும்? ஊடகங்களால் மக்கள் திசை திருப்ப படுகிறார்கள்.சுயமாக சிந்தித்து சில வீதமான மக்களே வாக்களிக்கிறார்கள்.

மேலும் அற்ப சிறு தொகைக்காக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பாவம் அவர்களின் ஏழ்மை.

மிகுதி வாக்குகள் அரசபடைகளாலும், ஒட்டு குழுக்களாலும் கள்ள வாக்குகளாக அளிக்க படுகின்றன. எப்படி ஒரு ஜனநாயகமான தேர்த்தல் என்று சொல்ல முடியும்?

இராணுவத்தில் உள்ளவன் கூட தனது வாக்கு யாருக்கு அளித்தார் என தனது தளபதிக்கு காட்ட வேண்டிய நிலையில் அவர் கூட யாருக்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தப்படுக்கிறார் இல்லையா? இதுவும் சனநாயகத்தின் ஒரு பகுதியோ??

தமிழர்களின் வாக்குகளால் தான் தோற்கடிக்க படுவேனோ என சந்தேகிக்கும் மகிந்த பல லட்சம் தமிழ் மக்களின் வாக்காளர் அட்டைகள் வழங்காமல் தடுத்தது ஜனநாயகமா?

உந்த ஜனநாயக வியாதி இந்தியாவிலை இருந்துதான் தொத்தினது... இந்தியன் கொண்டு வந்த கோமாரி நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடிச்சவங்கள் உந்த தேர்தல் புலுடாக்களுக்கு ஒண்டையும் கண்டுபிடிக்க இல்லை...

இந்திய தேர்தல்களிலை எப்படி அரசியல் கட்ச்சிகள் நடந்து கொள்ளுமோ அப்படியே எல்லாம் இலங்கையிலையும் நடக்குது... கூட்டமைப்பு வேறை கூத்தடிக்குது...

தேர்தல் அண்டு வாக்குசாவடிகளை கைப்பற்றுவது, வோட்டு போட்ட பெட்டிகளை மாற்றுவது, எதிர் வேட்ப்பாளர் ஆதரவளர்களை மிரட்டி வாக்கு போட வெளியில் வராது செய்ய கலவரம் செய்வது எண்டு எல்லாம் நடக்கும்..

உந்த சொல்லித்தந்த சனநாயகத்துக்காகவே நாங்கள் இந்தியாவின் மயிரை புடுங்கவேணும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு, மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. 98% எழுத படித்த மக்களை கொண்ட இலங்கை ஏன் இனவாதிகளாக வேண்டும். தமிழர்களை கொல்பவனுக்கு வாக்களிக்க வேண்டும்? ஊடகங்களால் மக்கள் திசை திருப்ப படுகிறார்கள்.சுயமாக சிந்தித்து சில வீதமான மக்களே வாக்களிக்கிறார்கள்.

மேலும் அற்ப சிறு தொகைக்காக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பாவம் அவர்களின் ஏழ்மை.

மிகுதி வாக்குகள் அரசபடைகளாலும், ஒட்டு குழுக்களாலும் கள்ள வாக்குகளாக அளிக்க படுகின்றன. எப்படி ஒரு ஜனநாயகமான தேர்த்தல் என்று சொல்ல முடியும்?

இராணுவத்தில் உள்ளவன் கூட தனது வாக்கு யாருக்கு அளித்தார் என தனது தளபதிக்கு காட்ட வேண்டிய நிலையில் அவர் கூட யாருக்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தப்படுக்கிறார் இல்லையா? இதுவும் சனநாயகத்தின் ஒரு பகுதியோ??

தமிழர்களின் வாக்குகளால் தான் தோற்கடிக்க படுவேனோ என சந்தேகிக்கும் மகிந்த பல லட்சம் தமிழ் மக்களின் வாக்காளர் அட்டைகள் வழங்காமல் தடுத்தது ஜனநாயகமா?

நுணாவிலான்,

நான் எழுதியது மக்கள் தம்மை சாட்டி, தம் பேரால் அரசியல் செய்வதைப் பார்த்துகொண்டுதானிருக்கின்றனர் என்பதை. மக்கள் தவறாக சில முடிவுகளை எடுக்கலாம், ஆனால் மக்கள் தலைவர்கள் என்று சொல்பவர்களே மக்களை தவறான முடிவுக்குள் தள்ளப்படுவதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

ஒரு இனத்தின் அறிவுக்கும் அவர்களின் இனவாத/மதவாதத்திற்கும் சம்பந்தமில்லை. உலகின் அறிவுக்கூர்மை கொண்ட இனங்களில் ஒன்றான யூதர்கள்தான் மிக மோசமான யுத்த குற்றவாளிகளாகவும் ஆக்கிரம்பிப்பாளர்களாகவும் உள்ளனர்

Link to comment
Share on other sites

வழுதியின் கருத்து, ஒரு தனி மனிதனின் கருத்து அல்ல, புலத்தில் செயற்பட்ட ஒரு பகுதி மு- இ - நாள் அரசியற் செயற்பாட்டாளர்களின் கருத்தேயாகும். மே 19 இற்குப் பின் புலத்தில் ஏற்பட் அனைத்து வெளிப்படையான பிரிவினைக்கும் மையம் இந்த வகையான அரசியல் நிலைப்பாடே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான கட்டுரைகளுக்கு பதில் எழுதாமல் பேசாமல் இருக்க வேண்டும்.

அதைதான் இங்கே பலர் செய்தார்கள். :)

Link to comment
Share on other sites

உரிமை என்பது உயிரினும் மேலானது என்று சொல்லி சொல்லி வளர்த்த எங்கள் உலக தமிழின தலைவனை,ஏகவசனத்தில் அழைத்து கொச்சை படுத்த உமக்கு கிடைத்த மொழி தமிழ்.

அந்த தமிழ் தாய்க்கும் கூட பொறுக்காது உன் செயல்.

இப்படியானவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் " தமிழுலகில் என்றைக்கும் இனத்தின் மானசீக குரு தலைவனே"

Link to comment
Share on other sites

இக்கட்டுரையை நான் முதலில் இணைத்தேன் பின்னர் நீக்கப்பட்டு இருந்தது.... முதலில் நிர்வாகத்துக்கு ஒரு மட்டுறுத்துனர் போடவேண்டும் தேவையானதை நீக்குவதும் தேவையற்றதை விடுவதற்க்கும்......

***

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுப்புதான் அன்றி வெறொன்றும் இல்லை பராபரமே. சந்தர்ப்பம் இருந்தால் சிங்கத்திடம் ரெண்டு கேள்விகள் கேட்கலாம் என்ற நினைப்பில் தான் போனேன். அதுவும் தவிர கனடாவில் வசிக்கும் மனோரஞ்சன் எனப்படும் முன்னாள் ENTLF நபரை  (புலிநீக்க அரசியல் சூத்திரதாரிகளில் இவரும் ஒருவர்), இவரையும் நேர்ல பார்க்க சந்தர்ப்பம் இருந்த படியால் போனேன். அனுரகுமார  வழமையான அரசியல்வாதிபோல் சிங்களத்துக்கான அரசியலை பேசினார். தமிழருக்கு அரசியல் பிரச்சினை இருக்கா? அப்படி இருந்தால் கிலோ எத்தனை ருபாய் என்பது போலத்தான் அவரின் பேச்சு இருந்தது. சிங்களம் ஆராவாரமாய் கைதட்டியது. மனோரஞ்சன் அனுரகுமாராவை விட அழகான நேர்த்தியான சிங்கள மொழியில் அனுராவுக்கு புகழாரம் சூட்டி செம காமெடி பண்ணி இருந்தார்.  தமிழர்கள் சார்பில் கேட்கப்பட்ட இன்றைக்கும் தொடரும் அநீதிகள் தொடர்பான இரண்டு கேள்விகளுக்கும் சிங்கனிடம் பதில் இல்லை. வெறும் சடையில் தான் இருந்தது. ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையில் சகோதரத்துவ சக ஜீவன சுகவாழ்வு பற்றி சிங்கம் பேசப் பேச ... வந்திருந்த சிங்களம் அவரை ஆபத்பாந்தவராக கைநீட்டி, உச்சம்குளிர்ந்து  ஜயவேவா...ஜயவேவா கோசம் போட்டது. போங்கடா நீங்களும் உங்க அரசியலும் என்று விழா ஒருங்கிணைப்பாளரை  பார்த்து நக்கலாக சிரித்து, உருத்தும் படி சில விடயங்களை சொல்லிவிட்டு நான் பார்க்கிங் லாட் நோக்கி நடையை கட்டினேன்.  எதிரில் தெரிந்த எல்லா சிங்களவரும் எதிரியை போல தெரிந்தார்கள்!!!
    • ஓம் விக்னேஷ் வரைய நமக ஓம் விக்னேஷ் வரைய நமக சந்தன சேற்றின் மகிமை கண்டாயா சண்முக அண்ணன்  
    • ஈழத்து இசைப்பரப்பில் தவிர்க்க முடியாத ஆனால் ஆர்ப்பாட்டமில்லா ஆளுமை     பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன ஓரிரு நாட்களுக்குள்ளே அவர் மறைந்த நாள் வந்தது. நெஞ்சம் கனக்கிறது. "பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது" அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் காலத்தாலும் அழிக்க முடியாதது. அவை பற்றி விரைவில் பதிவிடுவேன். அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய இசைப் பணிகளில் சிலவற்றைத் தகவலுக்காக இங்கே பதிவிடுகிறேன். 1.இந்திய அமைதிப் படை ஆக்கிரமித்திருந்த 80களின் இறுதியில் சுய முயற்சியாக விடுதலைப் பாடல் தொகுப்பு. (இதன் தலைப்பு நினைவிலில்லை) 2. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த"ஓ.... மரணித்த வீரனே" பாடல் சில மாற்றங்களுடன் மீள் ஒளிப்பதிவு. 3.1994 இல் "பிஞ்சுமனம்" திரைப்படத்திற்கு இசையமைப்பு. இது தான் அவர் இசையமைத்த முதல் திரைப்படம். 4. 1995இல் கலைண்பாட்டுக் கழகம்- மகளிர் பிரிவு தயாரித்து வெளியிட்ட இவர் இசையமைத்த "நெருப்பு நிலவுகள்" இசைப் பாடல் தொகுப்பு. 5. 1995இல் "திசைகள் வெளிக்கும்" திரைப்படத்திறகு் இசையமைத்தமை. ஆம். அருமையான மனிதர். அமைதியில் உறங்கட்டும்...! "ஈழத்துத் திரைத்துறையின் அஞ்சலிகள்"   ---> Kesavarajan Navaratnam ()      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.