-
Tell a friend
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
ரிதிகம பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட அரிசியை பனகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்று கோழிகளுக்கு உணவளித்துள்ளார். மேற்படி அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் உயிரிழந்ததாக உரிமையாளர் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கோழிகளின் இறப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இறப்புக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை, எனவே உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், பரிசோதனை அறிக்கையை பெறவும் உத்தரவு பெறப்பட்டதாக பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301509 -
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:34 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாகும். இக்காலப்பகுதியில் மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதால், அவர்கள் கல்வி பொதுத்தராதர உயர்தரத்தை பயில்வதற்கான போக்குகள் குறைவடைவதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளவாறு முகாமைத்துவப்படுத்துவதற்கும் க.பொ.த உயர்தர பாடவிதானங்களை உள்ளடக்குவதற்காக ஆசிரியர்களுக்கு போதியளவு நேரத்தை ஒதுக்கி வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2024ஆம் ஆண்டில் சாதாரண பரிட்சை பூர்த்தியானதுடன் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக, அப்பரீட்சை முடிந்தவுடன் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183537 -
By ஏராளன் · பதியப்பட்டது
இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், தலைவலி மற்றும் சோர்வு. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். “வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன,” என்று அவர் கூறினார். “இந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோயாளர் தொகை இரட்டிப்பாகியுள்ளன. நோய் அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். https://thinakkural.lk/article/301578 -
By goshan_che · Posted
சவுக்கின் முன்னாள் மனைவி/பிள்ளையின் தாயின் கருத்து. -
By விளங்க நினைப்பவன் · Posted
ஓம் .அதில் அவர்கள் காட்டும் ஆர்வம்👍 நீங்கள் சொன்னது உண்மை தான். மேலே உள்ள மாட்டுக்கறி பாடல் என்ற வீடியோவில் மாட்டு கறியின் புகழை பாடுகிறார்கள் என்று நம்புகிறேன்.இப்படி இது போல் நல்ல உணவுகள் சாப்பிடுங்கோ என்று பாட்டு பாடி இருப்பார்களா. பாடலில் மாட்டுக்கறி வேறுலெவல் என்கிறார்கள். வேறுலெவல் என்றால் தமிழில் ஒப்புவமையற்றது தானே
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
-
- 5 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.