கருத்துக்களம்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர். - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர்.

#1 User is offline   jhansirany 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 284
  • Joined: 18-August 09
  • Gender:Female
  • Location:sky
  • Interests:learning new things, art, listening to music, and like nature.

Post icon  Posted 12 September 2009 - 07:02 PM

மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர்.
இதோ சிவரூபன் பேசுகிறார்:

“”ஐ.நா.சபையேஇ வல்லரசுகளேஇ உலகின் தலைவர்களேஇ ஊடகத்துறையினரேஇ எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

நான் எழுத்தாளனோஇ சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும்இ பிழிந்த தாகமும்இ பிரிவின் தவிப்பும்இ வெடிகுண்டுகளின் வெக்கையும்இ படு கொலைகளின் கொடூரமும்இ சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள்இ அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டுஇ கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டுஇ பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல்இ தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாதஇ உடல் சோர்ந்துஇ உளம் நலிந்துஇ உணர்வு செத்துஇ நா வறண்டுஇ இதய நாடிகள் ஒடுங்கிஇ வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவுஇ குடிநீர்இ அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசைஇ மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள் ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில்இ தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்தஇ “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்கஇ மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள்இ இந்திரா ரடார்இ செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும்இ ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்துஇ தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவாஇ கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண்இ பெண்இ பெரியோர்இ குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறுஇ கால் வேறுஇ உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில்இ வயிற்றில்இ காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவிஇ பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான்இ என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவிஇ பிள்ளைஇ தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாகஇ உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும்இ ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலைஇ கால்இ கைஇ உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகிஇ உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதாஇ அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும்இ கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய்இ தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின்இ நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும்இ விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம்இ “”தாய்இ தகப்பன்…” என்று ஆரம்பிக்கவேஇ “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்துஇ இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும்இ சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும்இ நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம்இ முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்கஇ போவோம் ஆமி வறான்இ எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோஇ ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்றுஇ ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயாஇ ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய்இ நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும்இ மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும்இ கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும்இ அடித்தும்இ வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவிஇ பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லைஇ தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன்இ “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன்இ “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோதுஇ சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும்இ “பசிக்குதுஇ ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும்இ தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காதஇ பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்றுஇ “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில்இ அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால்இ அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில்இ வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார் களோஇ என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (ஐஅஅபைசயவழைn) மற்றும் சுங்கம் (ஊரளவழஅள)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”இ “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”இ “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”இ “”எங்களுக்கு எல்லாம் தெரியும்இ பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்க
்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதா
் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1இ2இ3 (ழுpநசயவழைn ஊhநஉமஅயவந) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாதுஇ அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயி ரற்ற என் உடலோஇ சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய்இ புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமேஇ ஐ.நா.சபையேஇ தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)

{ தழிழ் செய்திகள்}
Choose proper time and act and place
Even the world you win with ease.(thirukkural)
0

Advert

#2 User is offline   jhansirany 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 284
  • Joined: 18-August 09
  • Gender:Female
  • Location:sky
  • Interests:learning new things, art, listening to music, and like nature.

Post icon  Posted 12 September 2009 - 10:23 PM

Bond007 இப்போ என்ன சொல்ல வர்றியள்?

உம்முடைய மனச் சாட்சியில் கைவைத்து சொல்லும்

1.சிங்களவன் நல்லவன் என்றால் போர் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன ஏன் அப்பாவி மக்களை அடைத்து வைத்துள்ளான்?

2.சிங்கள மீசை முளைக்காத சிறுவர்கள் போராடும் போது ஏன் எங்களின் புலிகள் போராடக் கூடாது?

3.சிங்களவன் தழிழருக்கு ஏன் தழிழர் கேக்கும் நிலத்தை குடுக்க கூடாது என்று நினைக்கிறான்?

4.தழிழருக்கு என்று ஒரு சொந்த நிலம் வேண்டும் அதற்காக நாங்கள் போராடினால் என்ன தப்பு?

5.புலிகள் வேறு மக்கள் வேறா?

6.புலிகளின் பெற்றோர் உறவினர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?

7.புலிகள் வேற்று வாசிகளா?

8.சண்டையில் தோற்றவர்களினால் மக்களுக்கு ஆபத்து கூடவா அல்லது வென்றவர்களால் ஆபத்து கூடவா?
{குண்டுகள் செல்கள்}

9.முப்பது வருடங்களுக்கு முன்பு தழிழர் சுகந்திரமாக வாழ்ந்தார்களா?

10.அமெரிக்காவில் கறுப்பு இனத்து ஒபாமா ஜனாதிபதியாக வந்தது போல் இலங்கையில் ஒரு தழிழன் ஜனாதிபதியாக முடியுமா?

11.வெள்ளைக் கொடியுடன் போனவர்களுக்கு சூடும் காட்டி கொடுத்தவர்களுக்கு கதிரை இது நியாயமா?

12.நீங்க பிறந்தது தழிழ் பிரதேசமா?

13. வெளிநாடுகளில் உள்ள எந்த இலங்கை தூதரகம்;எந்த சர்வதேச விளையாட்டுபோட்டிகளில் இலங்கை சார்பாக தழிழர் உள்ளார்கள்?

This post has been edited by jhansirany: 12 September 2009 - 10:38 PM

Choose proper time and act and place
Even the world you win with ease.(thirukkural)
0

#3 User is offline   jhansirany 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 284
  • Joined: 18-August 09
  • Gender:Female
  • Location:sky
  • Interests:learning new things, art, listening to music, and like nature.

Post icon  Posted 12 September 2009 - 10:43 PM

Quote

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நானும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே அறிமுகமானவர்கள். சாதாரண மிருகவைத்தியராக இந்தியாவுக்கு இலங்கைநெருக்கடியிலிருந்து தப்பி இந்தியாவில் தமிழகம் சென்ற என்னை தமிழர் நல மருத்துவ நிதியத்தின் செயலாளராக 84 இல் பிரேரித்ததன் மூலம் என்னை தமிழர் அரசியலில் ஞானஸ்த்தானம் செய்து வைத்தவர் டக்ளஸ் தேவானந்தா..


இது எங்கோ இடிக்குது

This post has been edited by jhansirany: 12 September 2009 - 10:44 PM

Choose proper time and act and place
Even the world you win with ease.(thirukkural)
0

#4 User is offline   Justin 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 800
  • Joined: 13-April 07
  • Location:USA

Post icon  Posted 12 September 2009 - 11:30 PM

என்னது? பாண்டு ஒரு மிருக வைத்தியரா? அவுஸ்திரேலியாவில இருக்கிற நடேசன் தான் பாண்டா?
"நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே நடுநிலைமை என்று ஒன்று இல்லை"
புதுவை இரத்தின துரை
0

#5 User is offline   Bond007 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 951
  • Joined: 08-November 04
  • Gender:Male
  • Location:London

Post icon  Posted 13 September 2009 - 07:41 AM

வாழ்க கருத்துச் சுதந்திரம்! முள்ளிவாய்கால் வரை சென்றும் நீங்கள் திருந்தவில்லை. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கல் இற்கு வழிசமையுங்கள்!
"எவனொருவன் காலத்திற்கேற்ப செயற்படுகிறானோ அவனே பயனடைவான், எவனது செயல்கள் காலத்திற்கு பொருந்தாதோ அவனது முயற்சிகள் பயன் தராது.”
அல்லலுறும் தாயக சொந்தங்களின் கல்வி - தொழில் - இருப்பிடம் இவற்றை நிவர்த்தி செய்ய அழுக்கொரு குடும்பத்தை தத்தெடுப்போம்!
0

#6 User is offline   Tamilnela 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 270
  • Joined: 17-January 09
  • Location:uk

Posted 14 September 2009 - 01:03 AM

View PostBond007, on Sep 13 2009, 08:41 AM, said:

வாழ்க கருத்துச் சுதந்திரம்! முள்ளிவாய்கால் வரை சென்றும் நீங்கள் திருந்தவில்லை. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கல் இற்கு வழிசமையுங்கள்!




ஒரு தமிழனாக அல்ல சாதாரண ஆறறிவு கொண்ட மனிதனாக இதை வாசிப்பவர்களின் இதயம் ஒரு முறை துடிப்பை நிறுத்தும்.
ஆனால் சில பிணந்தின்னிகள் ஈனப் பிறப்புக்கள் ஒழுக்கமில்லா பிறப்புப் பிறந்ததுகள் செத்து மடிவது தன் இனம் என்று கூட நினைக்க மறக்குதுகள்.உண்மையிலேயே இதுகள் தமிழர்கள் தானா???????

ஐயா என் இனத்தோரே இந்தியாவுக்கு எதிராக எழுதினால் முதல் வேலையாய் உடனே வெட்டி விடுகிறீர்களே.....
எனது இனத்தையும் அதனை காக்க இன்னுயிர் துறந்த மாவீரர்களையும் கேவலப்படுத்தும் இதுபொன்ற ஈனப் பிறப்புக்களை உணர்வோடு விளையாடுபவர்களை ஏன் இன்னும் இங்கே விட்டு வைத்துள்ளீர்கள்.

ஐயா சிவருபன்

என் தாயாய் என் தந்தையாய் என் தோழனாய் என் தலைவனாய் எல்லாவற்றிலும் மேலாய் என் உயிராய் என் உணர்வாய் இருக்கிற என் தலைவன் எம்முள்ளே இருக்கிறான்.

அவன் முக்காலமும் உணர்ந்தவன். அதனால் தான் அவன் தலைவன்.அவன் வார்த்தைகள் உயிருள்ளவை

தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது

நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்
வாழும் நாளில் எங்கள் தோழர் வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம்
மீண்டும் தோழர் நினைவில் துப்பாக்கிகளை அணைக்கின்றோம்.
0

#7 User is offline   jhansirany 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 284
  • Joined: 18-August 09
  • Gender:Female
  • Location:sky
  • Interests:learning new things, art, listening to music, and like nature.

Posted 14 September 2009 - 01:15 AM

Quote

QUOTE (Bond007 @ Sep 13 2009, 08:41 AM)

வாழ்க கருத்துச் சுதந்திரம்! முள்ளிவாய்கால் வரை சென்றும் நீங்கள் திருந்தவில்லை. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கல் இற்கு வழிசமையுங்கள்!

தம்பி பாண்டு நாங்கள் முள்ளிவாய்கால் போகல எங்கள கொண்டு போனது பேரினவாதம்

This post has been edited by jhansirany: 14 September 2009 - 01:51 AM

Choose proper time and act and place
Even the world you win with ease.(thirukkural)
0

#8 User is offline   Bond007 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 951
  • Joined: 08-November 04
  • Gender:Male
  • Location:London

Posted 15 September 2009 - 10:37 AM

முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள் - ரவி

வுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பத
தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு. இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது. 15000 பேருக்குமேல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் பற்றிய விபரம் தெரிய வரவில்லை எனவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. புலிகளின் உறுப்பினர்களிலிருந்து புலிக்கு சாப்பாடு கொடுத்தவர் வரை சுழியோடி தேடிப்பிடித்து அழிப்பதுதான் புலியழிப்பு என சொல்வதை நாம் கேட்டாகவேண்டியிருக்கிறது. இது இந்த இடைத்தங்கல் முகாமின் வாழ்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்குமெனின், இந்த மக்களின் துயரம் நீளவேசெய்யும்.

இப்போ வெள்ளம் இந்த முகாமை சிப்பிலியாட்டுகிறது. கடும் மழையில் கூடாரங்கள் குறுகிப் போயிருக்கின்றன. சுமார் 3 இலட்சம் மக்களின் கதி இன்னும் பரிதாபத்துக்கு உரியதாக மாறியிருக்கிறது. வெள்ளம் வடிந்து போய்விடும் போதுகூட நோய்களை விட்டுச் செல்லும் அபாயம் எதிர்காலத்துக்கு உரிய அவலமாகியிருக்கிறது. அவர்கள் ஆற்றாமையில் சுற்றிக் காவல் நின்ற இராணுவத்தினருக்கு கற்களால் எறிந்துமிருக்கிறார்கள். இவர்களின் சுதந்திரமான வெளியேறலுக்கு இந்த நிலையிலும்கூட தடைவிதிக்கும் அரச பயங்கரவாதிகளுக்கும் இவர்களை கேடயமாப் பாவித்து வெறியாட்டமாடிய புலிகளுக்கும் -மக்கள்மீதான கரிசனையில் அவர்கள் அபிலாசைகளில்-
வித்தியாசம்தான் என்ன?

இந்த வெள்ள அனர்த்தங்களுக்கு இலங்கை அரசு ஐநாவை குற்றஞ்சாட்டுகிறது. ஐநா மறுக்கிறது. ஓடிப்பித்து விளையாடுகிறார்கள். வெள்ளவடிகால் அமைப்புமுறைகளுக்குள்ளும் சுடாரத்தின் வலுவற்ற தன்மைகளுக்குள்ளாலும் அவர்கள் இந்த கண்ணாமுச்சி விளையாட்டை ஆடுகிறார்கள். உயிர்களோடு விளையாடுவதில் இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதை வன்னியுத்தத்தின்போது நிருபித்தவர்கள்- இந்த முகாமிலுள்ள மக்களின் வசதிகள் பற்றிய ஐநாவின் செல்லமான முறையீடுகளைக்கூட இலங்கை அரசு நிவர்த்திக்கவேயில்லை. உலகில் எரிந்துகொண்டிருக்கும் தற்போதைய பிரச்சினைகள் எதிலும் உருப்படியாய் அசைவியக்கம் செய்யாத மனிதர் பான்கீமூன். இவரின் இந்த ஸ்லோமோஷன் பற்றி நோர்வேயின் ஐநா தூதுவர் ஜுல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாக நோர்வேயின் தினசரிப் பத்திரிகையான ஆவ்தென்போஸ்டன் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இந்த இலட்சணத்தில் இந்த மக்களின் சுதந்திரமான வெளியேறலுக்கு ஐநா இலங்கை அரசை பணியவைக்கலாம் என எண்ணவா முடியும்.

தேர்தலுக்கு ஒருசில நாட்களின் முன் 3000 பேரை முகாமிலிருந்து மீட்டு எடுத்தார் டக்ளஸ். கூட்டமைப்புக்கான வாக்குச் சேகரிப்பில் இவ்வாறான நம்பிக்கைகளைக் கொடுத்து எதிர்கால முன்னறிவிப்பைச் செய்யும் ஒரு தேர்தல் நாடகமாக இது அரங்கேறியிருக்கிறது. தேசியக் கட்சியில் கரைந்து போனவர்களும் வெற்றிலைச் சின்னத்தில் அடகுபோனவர்களும் பெற்ற வாக்குளைவிட தமிழ்மக்களின் தனித்தன்மைகளுள் தாம் நிற்பதாகக் காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புளொட் என்பன எதிர்பாராதளவு வாக்குகளைப் பெற்றுள்ளது. இவர்களெல்லாம் தமக்கு தோல்வியைத் தந்திருக்கக்கூடிய வெற்றிலை நிழலுக்குள் இளைப்பாறாததுக்கு சந்தோசப்பட்டார்களே யொழிய
தனியடையாளங்களைப் பேணும் ஒரு கோட்பாட்டுக்காகவல்ல. எதிர்காலத்தில் எந்த அடிபணிவுகளையும் இவர்கள் நிகழ்த்தலாம். ஆனால் மக்கள் இனரீதியிலான ஒடுக்குமுறைகள் நிகழும்வரை தங்கள் தனியடையாளங்களை ஒவ்வொருவடிவிலும் தேடுவார்கள். இது இந்தத் தேர்தலிலும் அவர்கள் பூசிய புள்ளடியிலும் ஒட்டியிருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால் யாழ் மாநகரசபைத் தேர்தலில் 18 வீதமான மக்கள் வாக்களித்து அதில் அரைவாசிக்கும் குறைவான வீதத்தில் பெற்ற வாக்குகளில் வெற்றியை அறிவிக்கும் வெட்கக்கேடுதான். இந்த வெற்றியில் டக்ளஸ் ஏமாற்றமடைந்ததாக வந்த செய்திகள் ஒரு ஜனநாயகக் கண்ணோட்டத்திலா அல்லது தம்மை தமது சின்னத்தில் போட்டியிட விட்டிருந்தால் அதிக வாக்குகளைப் பெற்றிருக்க முடியும் என ராஜபக்சவுக்கு சுட்டவா என நாம் சந்தேகப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நேரத்திலேயே யாழில் நடந்த தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டார்கள். இப்போ 18 வீதம். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என ராஜபக்ச சொல்லிச் சில காலமாகிறது. இதை தேர்தலால் தேர்தல் சலுகைகளால் செய்யமுடியாது என்பதை மக்கள் இப்போ சொல்லியிருக்கிறார்கள். சராசரியாக 60 இலிருந்து 70 வீதம்வரை வாக்குகள் தேர்தல்களில் அளிக்கப்படுவது பொதுவாக இருக்கும். 18 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளும் ஒரு தேர்தலை மக்கள் ஆணையின் முடிவாக எடுப்பது கேலிக்கூத்தானது. இந்த வாக்களிப்பு வீழ்ச்சிக்கு காரணமானது எது என தேடும் அளவில் ஜனநாயகப் பண்பு இவர்களிடம் இருக்கவா போகிறது. அரசியல் நீரோட்டத்தின் இலட்சணம் மக்களின் தேர்தல் மீதான அக்கறையின்மையின் மூலம் அம்மணமாயிருக்கிறது. தேர்தல் பற்றிய ஊடகங்களின் சுதந்திரமான செய்தியிடலை அரசு தடைசெய்திருந்தமையையும் இதற்குள் பொருத்திக்கொள்ளலாம்.

வவுனியா முகாம்களின் தவிர்க்கமுடியாமை புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளிலோ புலிப்போராளிகளை கண்டறிவதிலோ மட்டும் தங்கியில்லை. சுமார் 3 இலட்சம் மக்களின் சமூக அசைவியக்கம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. குழந்தையின் பிறப்பிலிருந்து முதுமையின் மரணம் வரை அது தன் சமூக பண்பாட்டுத் தளங்களில் சமூகச் சிதைவை ஏற்படுத்துகிறது. உடல் உள ரீதியில் தனிமனிதர்களை அது சிதைக்கிறது. பாடசாலைக்கு பிரவேசிக்க வேண்டிய வயதெல்லையில் சுமார் 8000 சிறிசுகள் இந்த முகாமுக்குள் முகிழ்த்திருக்கிறார்கள் என தகவல் வருகிறது. இனவழிப்பின் நிகழ்வுப்போக்கில் வைத்து இது மதிப்பிடப்பட வேண்டியது.

அரச கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கின்ற மக்களின் தொகையைவிட கூடுதலானது... அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் இதனால் அங்கு நடைபெறுவது ஒரு இனவழிப்பு அல்ல என்றும் தடாலடியாய் கவனயீர்ப்புகளை நடத்தும் (சுசீந்திரன் போன்ற) புலம்பெயர் புத்திசீவிகள் சிலர்க்கு வகைதொகையின்றி ஒரு இனம் முழுமையையும் அழிப்பதுதான் இனவழிப்பு என்ற புரிதல் இருக்கிறதா என குழம்பவேண்டியிருக்கிறது. கொலம்பஸ்ஸினால் 5 நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழித்தொழிக்கப்பட்டு எஞ்சிப்போன செவ்விந்தியர்கள் இப்போதும் வாழ்கிறார்கள் என்பதால் அந்த வரலாற்றுக்கொடுமைமிகு செயல்களை இனவழிப்பு இல்லை என வாதிட முடியுமா என்ன?

இனவழிப்பு என்பது ஒரு நிகழ்வுப் போக்கு. காலம்காலமாக இனவழிப்பு பற்றிய வரைவிலக்கணப்படுத்தல்களை தத்துவவியலாளர்கள் மாற்றத்திற்கு உட்படுத்தி வருகின்றனர். இவர்களுள் போலந்து நாட்டவரான ராபேல் லெம்கின் என்பரால் இரண்டாம் உலகப்போரின் பின்னர் வரைவுசெய்யப்பட்ட இனப்படுகொலை பற்றிய கருத்தாக்கம் 1951 இல் சர்வதேச சட்டவிதிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது..

இனப்படுகொலை என்பது ஒரு இனத்தின் உடனடி அழிவை மட்டும் குறிப்பதில்லை. அது வௌ;வேறு நடவடிக்கைகளின் மூலம் ஒரு கூட்டுத் திட்டத்தின்கீழ் நடத்தப்படக்கூடியது. ஒரு இனக் குழுமங்களின் வாழ்வாதாரங்களின்மீது தாக்குதல் தொடுப்பதன்மூலம் அக் குழுமங்களின் இருப்பை இல்லாமல் செய்யும் நோக்கம் கொண்டது. இனவழிப்புக்கான திட்டங்களின் இலக்கு அரசியல் பொருளாதார நிறுவனங்களை சிதைப்பதன்மூலம் கலாச்சாரம், மொழி, தேசிய உணர்வு, மதம் என்பவற்றில் தாக்குதல் தொடுப்பதாகும். அத்தோடு இனக் குழுமங்களின் பொருளாராத வெளிப்பாடுகளின்மீதும் தனிமனித பாதுகாப்பு, சுதந்திரம், கௌரவம் என்பனமீதும் பேரழிவை ஏற்படுத்துவது மட்டுமன்றி இனக்குழும தனிமனிதர்களின் உயிர்வாழும் உரிமைக்கு நாசம் விளைவிப்பதுமாகும் என்கிறார் லெம்கின். இது சர்வதேச சட்டவிதிகளாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு இனம் மொழியின் பெயரால் மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டால் அந்த அடையாளங்களின் மீதுவைத்து அது எதிர்வினையாற்றுவது வரலாற்று நியதி. இது ஒடுக்கப்படும் இனத்துக்கு ஒரு கருவியாகிறது. இதைப் புரிந்துகொள்ள மறுத்து தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றக் கேட்பது, சிங்களமொழிப் பாடசாலைகளை திறக்க வேண்டும் என கோருவது என்பதெல்லாம் புதிய சிந்தனையாக புலுடாவாகிறது. இப்படிச் சொல்வது என்பது தனிமனிதர்கள் சிங்கள மொழியைப் படிப்பது அல்லது திருமணம் உள்ளிட்ட உறவுகளை வைத்துக்கொள்வதையோ தமிழ்ப் பகுதயிலுள்ள சிங்கள மக்களிற்கு இந்த அடிப்படை உரிமைகளை வழங்குவதையோ மறுப்பதாக மொழியாக்கம் செய்யத் தேவையில்லை. அதாவது பகைப்புலத்தில் சிங்கள மக்களின் பண்பாடு மொழி எதையுமே வைத்து நோக்கும் தவறை இழைத்துவிடக்கூடாது. இனவெறியாளர்களை எதிர்கொள்வது சிங்கள மக்களை எதிர்கொள்வது என்றவாறாக அரசு இன்றைய வெற்றிகளை திசைதிருப்பியிருக்கிறது. இதை முறியடிக்கும் அரசியல் புலிகளிடம் இருந்ததில்லை என்பதால் அரசுக்கு இது இலகுவில் சாத்தியமாகிறது.

அகதிகளைக் காட்டி இந்தியா உட்பட உலக நாடுகளிலெல்லாம் மடிப்பிச்சை கேட்டு அரசு நிதியுதவிகளைப் பெறுகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய முன்னாள் புலிப்பிரதேசங்களில் பாரிய இராணுவத்தளங்களை நிறுவும் வேலைகள் அரசுக்கு முதன்மையானதாக இருக்கிறது. அகதிகளை மீளக் குடியேற்று என்ற விடயத்துக்கு முன் அவர்களின் சுதந்திரமான வெளியேறலை அனுமதிக்கும் அடிப்படை மனித உரிமைகள் பற்றி பேசியாகவேண்டும். அடுத்துவரப்போகும் மழைக்கால அவலத்தை கணக்கிலெடுத்து மீள்குடியேற்றத்தைக் கோருகிறார் டக்ளஸ். நல்ல விசயம். அதற்குமுன் அவர்களின் சுதந்திரமான வெளியேறலை அனுமதி என இவர்கள் போன்றவர்களால் கேட்கமுடியாமலிருப்பது ஏன்?. அகதிகளை இப்படி முடக்கிவைத்து வதைப்பது இனவழிப்பின் ஒரு செயல்முறை எனப் புரிந்துகொண்டால் அவர்களின் சுதந்திரமான வெளியேற்றத்தை அனுமதிக்கப் போராடுவது அதற்கான நிர்ப்பந்தங்களை சகலமட்டத்திலும் உருவாக்குவது ஒரு அரசியல் பணியாகும்.

இன்று சிங்கள மக்கள் மத்தியில் இந்தப் பேரவலத்தை எடுத்துக்கூறும் குரல் வெளிக்கிளம்பத் தொடங்கியுள்ளன. அது பாராளுமன்றம்வரை ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. “இங்குள்ள அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒரு நாளாவது இந்த முகாமில் வாழமுடியுமா? அல்லது உங்கள் பிள்ளைகளைத் தன்னும் அங்குள்ள சேற்று நீரில் இறங்க விடுவீர்களா? நீங்கள் இங்கு உங்கள் மனைவிமாருடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் அங்கு மனைவி ஒரு முகாமில், கணவன் ஒரு முகாமில், பிள்ளை ஒரு முகாமில் என அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்குச் சென்ற உங்கள் குழந்தை வீடுவருவதற்கு ஒரு மணிநேரம் தாமதித்தால்கூட தவிக்கிறீர்கள். ஆனால் அங்கே தமது பிள்ளை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பதுகூடத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்க
்...” என்று பேசியிருக்கிறார் அனுரகுமார. ஐதே கட்சியைச் சேர்ந்த கரு ஜெயசூரிய, தாம் இந்த முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்படுவதை கேள்விகேட்டு குரலெழுப்புகிறார். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்கிறார். இதேவகைப்பட்ட குரல்களை எழுப்பும் மங்கள சமரவீர, “நாம் சர்வதேச சமூகத்தின் அங்கம் என்ற வகையில் சர்வதேச சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. நாகரீகமடைந்த சமூகம் என்ற வகையில் அதனைப் பின்பற்ற வேண்டியவர்களாக நாம் உள்ளோம் எனவே இதுகுறித்து கேள்விகேட்கும் உரிமை சர்வதேச சமூகத்துக்கு உண்டு” என்று குரலெழுப்பியிருக்கிறார் மங்கள. இவற்றை காதால் கேட்பவர்களாக இருக்கும் நிலையில்தான் டக்ளஸ் கருணா போன்றவர்கள் இருக்கிறார்கள்.

“யுத்தவெற்றி எனக் காட்டப்பட்டு எந்த தென்னிலங்கை மக்களுக்கு பால்சோறு கொடுக்கப்பட்டதோ அதே தென்னிலங்கை மக்கள் வன்னி மக்கள் படும் அவலத்தைக் கண்டு இந்த அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு தமது போராட்டம் முன்னெடுக்கப்படும்” என புதிய இடதுசாரி முன்னணி அறிவித்துள்ளது. இதைவிட பிரபல மனிதஉரிமைவாதியான நிமல்கா பெர்ணான்டோ வன்னி மக்களின் அவலம் குறித்து அவர்கள் போர்க்குற்றவாளிகள்போல் நடத்தப்படுகிறார்கள் என்று குரல் எழுப்பியுள்ளார். இவ்வாறான சுதந்திரமானகருத்துகளை தெரிவிப்பதில் அரச பயங்கரவாதத்தினால் ஆபத்துகளை எதிர்கொண்ட சிங்கள ஊடகவியலாளர்கள் மனித உரிமைவாதிகள் என சுமார் 70 பேர்வரை வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசுசார்ந்துதான் இவற்றையெல்லாம் வெல்ல முடியும் என்று செயற்படுகிறார்கள் சிலர். காலங்காலமாக அரசைச் சார்ந்து தமிழரசியல்வாதிகளும் மலையக அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஏன் இடதுசாரிகளும் கூட செயற்பட்டுத்தான் பார்த்தார்கள். அவர்கள் மக்களின் கோவணங்களை உருவி தாம் மட்டும் அதில் உயரப் பறந்த நவீன ஹரிப்போர்ட்டர்களாக மாறியதைத்தான் வரலாறு பதிந்துவைத்திருக்கிறது. அகதிகளை மீளக்குடியமர்த்துவது அரசுக்கு உலக நாடுகளின்மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து சாதிக்கப்படலாம் என்பவர் இன்னொரு வகையினர். தேசியவிடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் உதவிவழங்கிய சோசலிச சுவறுகள் கொண்ட நாடுகள் தொடக்கம் விடுதலைப் போராட்டங்களை பயங்கரவாதமாகச் சித்தரித்து ஒடுக்கிய நாடுகள்வரை இலங்கை அரசின் பக்கமே இருந்தன. போர்ப்பொறியுள் அகப்பட்ட மக்கள்மீது மனிதாபிமானத்தைக்கூட காட்டவில்லை. போர்நிறுத்தத்தை ஒரு பேச்சுக்காக உச்சரித்தன. பயங்கரவாத ஒழிப்பில் தோள்கொடுத்தார்கள் என்ற அவர்களின் நியாயப்பூழலை ஏற்றுக்கொண்டாலும், தற்போதைய இந்த வன்னிமக்களின் கைதிநிலையை பாராமுகமாக இருப்பது ஏன்?

இன்று பாராளுமன்றத்துள் ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வரும் வன்னி மக்களின் அவலம் குறித்த குரல்கள் அவர்களின் வாக்குமூலமல்ல. தமது பிழைப்புவாதத்துக்கு அவர்கள் மக்களிடம் மேலிடுகின்ற கருத்துநிலைகளிலிருந்துதான் விடயங்களை எடுத்துக்கொள்வார்கள், அல்லது அதை உருவாக்க முற்படுவார்கள். இதை மறுதலையாகச் சொன்னால் சிங்கள மக்களிடம் வன்னி மக்கள் சம்பந்தமான ஒரு
நெகிழ்ச்சி மனோபாவம் வளர்வதாக அல்லது வளர்க்கப்படுவதாக நாம் இதை எடுத்துக்கொள்ளலாம். எனவே கட்சி நலன்களுக்கு அப்பால் செயற்படக்கூடிய, இந்த அவலத்தை நேர்மையாக எடுத்துச் செல்லக்கூடிய சக்திகள் சிங்கள சமூகத்திலிருந்து முன்வரவும், அதுசார்ந்து நாம் செயற்பட வேண்டிய தேவையும் எம்முன் உள்ளது. அந்தக் குரல் பலப்படுத்தப்படுவதும் அதற்கான வேலைமுறைகளையும் நாம் கண்டடைய வேண்டும். (புகலிடத்திலுள்ள சிங்கள முற்போக்குச் சக்திகளுடனான உறவை ஏற்படுத்துவதன் மூலம்) புகலிட நாடுகளிலும்கூட இதற்கான சாத்தியம் உள்ளது. இதற்கு நாடுகடந்த தமிழீழப் பூச்சாண்டிகளும் தேசியத்தலைவரின் வெற்றிடத்தை நிரப்ப ஆள்தேடுவதும் உதவாது. சிங்கள மக்கள்மீது, முஸ்லிம் மக்கள்மீது ஏன் தமிழ்மக்கள்மீதுகூட நம்பிக்கை வைக்காத புலிகளின் அரசியலை நாம் இல்லாமல்செய்யவேண்டியுள்ளது. அதிலிருந்து விடுபடவேண்டியுள்ளது.

இன்று வன்னிமுகாம் 3 மாதங்களாக இயங்கித்தியங்குகிறது. வெள்ளத்தில் மிதக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட அமைச்சர்பட்டாளத்தைக் கொண்ட அமைச்சரவையின் ஊதாரித்தனமும் ஊளையிடல்களும் ஒருபுறமும், ராஜபக்சவிலிருந்து சரத்பொன்சேகாவரை ஆளாளுக்கு அரசியல்தீர்வு பற்றிய கருத்துகளை உதிர்ப்பதுமாக அவர்களின் வெற்றிக் களிப்பு இன்னும் முடிந்தபாடில்லை. தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது தர்க்கரீதியல் தேவையேயில்லை எனவும் நாமென்ன போரின்போது அணுகுண்டையா போட்டோம் எனவும் அமைச்சர் பாலித கோகண போகிற போக்கில் சொல்வதையும் பார்த்தால் வன்னி மக்களென்ன நாமும்தான் “தண்ணியில்” மிதக்கிறோம் என்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. போரில் வெற்றிபெற்ற நவமன்னனாக இனவாதத்தால் சித்தரிக்கப்படும் ராஜபக்சவின் எதிர்காலம் யுத்தசுமையில் அழுந்தப்போகின்ற... அந்நியசக்திகளின் தலையீட்டை பரிசாகப் பெற்றுக்கொண்டிருக்கின்ற... இலங்கை மக்களிடம்தான் உள்ளதேயொழிய புனைவுகளிடமல்ல.

- ரவி (23082009)
"எவனொருவன் காலத்திற்கேற்ப செயற்படுகிறானோ அவனே பயனடைவான், எவனது செயல்கள் காலத்திற்கு பொருந்தாதோ அவனது முயற்சிகள் பயன் தராது.”
அல்லலுறும் தாயக சொந்தங்களின் கல்வி - தொழில் - இருப்பிடம் இவற்றை நிவர்த்தி செய்ய அழுக்கொரு குடும்பத்தை தத்தெடுப்போம்!
0

#9 User is offline   jhansirany 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 284
  • Joined: 18-August 09
  • Gender:Female
  • Location:sky
  • Interests:learning new things, art, listening to music, and like nature.

Posted 15 September 2009 - 03:53 PM

Quote

ஒரு இனம் மொழியின் பெயரால் மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டால் அந்த அடையாளங்களின் மீதுவைத்து அது எதிர்வினையாற்றுவது வரலாற்று நியதி.



Bond007
இந்த கட்டுரையை பார்த்தால் உம் மனசிலும் இரக்கம் இருக்கிறது

This post has been edited by jhansirany: 15 September 2009 - 03:55 PM

Choose proper time and act and place
Even the world you win with ease.(thirukkural)
0

#10 User is offline   Bond007 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 951
  • Joined: 08-November 04
  • Gender:Male
  • Location:London

Posted 16 September 2009 - 03:13 PM

முள்ளிவாய்காலில் இறுதி நாட்களில் நின் பல தளபதிகள் வெகுவிரைவில் சிறீ லங்கா தொலைக்காட்சியில் வந்து ஏதோ கூறப்போயினமாம்! அதெல்லொம் இங்கை தணிக்கை செய்யயப்படும் என்பது மட்டும் நிச்சயம்!


http://video.dailymirror.lk/videos/108/a-n...r-for-ex-tigers

This post has been edited by Bond007: 16 September 2009 - 03:21 PM

"எவனொருவன் காலத்திற்கேற்ப செயற்படுகிறானோ அவனே பயனடைவான், எவனது செயல்கள் காலத்திற்கு பொருந்தாதோ அவனது முயற்சிகள் பயன் தராது.”
அல்லலுறும் தாயக சொந்தங்களின் கல்வி - தொழில் - இருப்பிடம் இவற்றை நிவர்த்தி செய்ய அழுக்கொரு குடும்பத்தை தத்தெடுப்போம்!
0

#11 User is offline   காட்டாறு 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 651
  • Joined: 03-December 07

Posted 17 September 2009 - 03:11 AM

View PostBond007, on Sep 16 2009, 04:13 PM, said:

முள்ளிவாய்காலில் இறுதி நாட்களில் நின் பல தளபதிகள் வெகுவிரைவில் சிறீ லங்கா தொலைக்காட்சியில் வந்து ஏதோ கூறப்போயினமாம்! அதெல்லொம் இங்கை தணிக்கை செய்யயப்படும் என்பது மட்டும் நிச்சயம்!


http://video.dailymirror.lk/videos/108/a-n...r-for-ex-tigers

சிறீலங்கா தொலைக்காட்சியில சொன்னா உண்மையாத்தான் இருக்கும். :icon_mrgreen:
உலகத் தமிழினமே எண்ணிப்பார். நீ உறங்கினால் வரலாற்றில் யாருன்னை மன்னிப்பார்?
0

#12 User is offline   jhansirany 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 284
  • Joined: 18-August 09
  • Gender:Female
  • Location:sky
  • Interests:learning new things, art, listening to music, and like nature.

Posted 18 September 2009 - 02:27 AM

Quote

முள்ளிவாய்காலில் இறுதி நாட்களில் நின் பல தளபதிகள் வெகுவிரைவில் சிறீ லங்கா தொலைக்காட்சியில் வந்து ஏதோ கூறப்போயினமாம்! அதெல்லொம் இங்கை தணிக்கை செய்யயப்படும் என்பது மட்டும் நிச்சயம்!


தளபதிகள் என்று யாரை சொல்கிறீர்கள் லங்கா தொலைக் காட்சியில் வர்ரதெண்டா அது க..... பாட்டியாத்தான் இருக்கும்
Choose proper time and act and place
Even the world you win with ease.(thirukkural)
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]