Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி..


Recommended Posts

அனைவரையும் மீண்டும் ஓர் நூல் விமர்சனத்தில் சந்திப்பது மகிழ்ச்சி,

அதிகம் யோசிக்கவேண்டாம்.. மேலுள்ள 'புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி..' என்கின்ற தலைப்பு 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' எனப்படும் பெயரில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்ட நாவலில் வருகின்ற என்னைக்கவர்ந்த ஓர் வசனத்தின் ஒரு பகுதி.

நான் கடந்தமாதம் வடலி வலைத்தளம் ஊடாக வாங்கிய மேற்குறிப்பிட்ட நாவல் நீண்டபயணம் செய்து அண்மையில் வீடுவந்து சேர்ந்தது. கடந்த இரண்டு நாட்களில் நாவலை முழுமையாக படித்து முடித்தேன். முதலில், இந்த நாவலின் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்களுக்கும், நாவலை வெளியிட்ட வடலி பதிப்பகத்திற்கும் எனது நன்றிகளும், பாராட்டுக்களும்.

இனி, கரையைத்தேடும் கட்டுமரங்கள் பற்றிய எனது எண்ணப்பகிர்வுகள் இங்கே விரிகின்றன:

IMG3376-1252385506.jpg

எனக்குள் ஏற்பட்ட அனுபவங்கள்:

நாவலை வாசித்துக்கொண்டு இருந்தபோது.. இடையிடையே நூலின் பின்மட்டையில் இருக்கின்ற பாலச்சந்திரன் அவர்களின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டேன். இதுவரை காலமும் அறிந்திராத ஓர் பாலச்சந்திரனை நான் அப்போது உணர்ந்துகொண்டேன், தரிசித்துக்கொண்டேன். இது சும்மா ஓர் கதை என்பதைவிட... வாழ்க்கை என்பதாகி.. எத்தனையோ பல சிந்தனைகளை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் எனக்குள் விதைத்துவிட்டு சென்று இருக்கின்றது. நாவலை வாசித்துக்கொண்டு சென்றபோது சில இடங்களில் உண்மையில் எனக்கு அழுகை வந்தது, ஆத்திரமும் வந்தது.

நாவலின் விசேடதன்மை:

கதாசிரியர் இரு இடங்களில் சிறுதவறு செய்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏன் என்றால் கமல், சிறீதேவி, எம்.ஜி.ஆர் பற்றிய விடயங்களை புகுத்தி.. ஏறக்குறைய இத்தனையாம் ஆண்டில் நடைபெற்ற கதை என்கின்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டார். அவை தவிர்க்கப்பட்டு இருந்தால்.. மறுபுறத்தில் இந்தக்கதை ஏறக்குறைய 1960 அல்லது அதற்கும் முற்பட்ட காலம் தொடக்கம் 1985வரை என்கின்ற நீண்டகாலப் பகுதியினுள் நடைபெற்று இருக்கக்கூடிய கதை என்று வாசிப்பவர்களால் உணரக்கூடியதாக இருக்கும் என்று சொல்லத்தோன்றுகின்றது. இங்கு நாவலில் நான் கண்டவிடேச தன்மையாக கூறக்கூடியது என்ன என்றால்.. இதுவரை எங்களுக்கு தெரிந்திராத ஓர் தாயகத்தை, தாயகத்து வாழ்க்கையை கதாசிரியர் கண்முன்கொண்டுவந்து காட்டி இருக்கின்றார்.

கதைக்கரு, சொல்லவருகின்ற செய்தி:

ஆடம்பரமான குளிர்பானங்களின் மோகத்தில் அலையக்கூடியவர்களுக்கு கதாசிரியர் தண்ணீர்மீது தாகம் உருவாகும்படி செய்து அதன் மகிமையை உணர்த்தி இருக்கின்றார். அதாவது, வாழ்க்கைக்கு தேவையானது எது? அன்பு? பண்பு? அழகு? இளமை? பணம்? படிப்பு? பதவி? நம்பிக்கை? .. வாழ்க்கை எதன் அடிப்படையில் வாழப்படுகின்றது? வாழ்தல் என்பது என்ன?... எல்லாவற்றுக்குமான விடைகளாக.. கதையின் கரு பின்னப்பட்டு இருக்கின்றது. இந்த நாவலை வெறும் நாவலாக பார்க்காது ஓர் ஆவணப்பதிவு என்றும் கூறலாமோ என்று நினைக்கின்றேன். ஏனெனில், இறந்தகால நிகழ்வுகளின் கால்தடங்களை கதாசிரியர் கடுகளவும் பிசையாது அப்படியே கதையில் அச்சேற்றி இருப்பது தெரிகின்றது.

IMG3376-1252385596.jpg

கதை சொல்லப்படும் பாங்கு:

கதையின் சுமார் 85% யதார்த்தமாக இருந்தது என்று சொல்லலாம். ஏதோ காரணத்துக்காகவோ அல்லது வழமையான தமிழ்சினிமாவின் தாக்கம் காரணமாகவோ என்னமோ சுமார் 15% பகுதி செயற்கைத்தனமாக இருந்தது என்றும் சொல்லித்தான் ஆகவேண்டும். சிலவேளைகளில் நாவல் என்றுவரும்போது.... தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் போல சில அம்சங்களை தவிர்க்கமுடியாத தன்மை, மற்றும், நாவலுக்கு உரித்தான குணங்களை, தனித்துவங்களை காட்டியாகவேண்டிய அழுத்தம் நாவலாசிரியர்களுக்கு ஏற்படுகின்றதோ என்னமோ..! ஆரம்பம் முதல் இறுதிவரை.. கதை சோர்வில்லாமல் சென்றது என்பதோடு மட்டும் அல்லாது கதை நிறைவடைந்தபின்னரும் பல விவாதங்களை, ஆராய்ச்சிகளை 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' எனது மனதினுள் விதைத்துவிட்டு சென்று இருக்கின்றது.

மொழித்திறன்:

இத்தனை விதம், விதமான சொற்களை இவர் எப்படி லாவகமாகவும், சாதூரியமாகவும் நாவலில் பிரயோகித்து இருக்கின்றார் என்று என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. நீண்டதோர் தாயகத்து சொற்களஞ்சியம் ஒன்றை நாவலில் காணமுடிகின்றது. எத்தனையோ வருடங்களின்பின் தாயகத்தில் நான் முன்பு இருந்தபோது பயன்படுத்திய ஏராளம் சொற்களை நாவலை படித்தபோது என்னால் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது. இந்த நாவல் ஓர் ஆவணப்பதிவாக கொள்ளப்படமுடியுமோ என்று நான் எண்ணுவதற்கு இங்குள்ள சொற்பதங்கள், சொற்கள் அல்லது கலைச்சொற்களும் பிரதான காரணம் எனக்கூறலாம்.

பேச்சுவழக்கு:

நாவல் உயிர்ப்பாக இருப்பதற்கு, இதை நான் வெறும் நாவல் என்று செயற்கைத்தனமாக பிரித்துப்பார்த்து உணரமுடியாதபடி இருப்பதற்கு கதையில் வரும் பாத்திரங்களின் பேச்சுவழக்கு முக்கிய பங்கை வகித்து இருக்கின்றது. பல பாத்திரங்கள் பேசும்போது ஒன்றைக்கூறி... இறுதியில்... 'அ' என்று முடிப்பார்கள். கதையில் இதை ஒவ்வொரு தடவையும் இரசிக்கக்கூடியதாக இருந்தது.

IMG3376-1252385556.jpg

நாவலின் பெறுமதி:

நான் வடலி வலைத்தளம் ஊடாக 17.90 அமெரிக்க டாலர்களுக்கு புத்தகத்தை பெற்று இருந்தேன். ஆனால்.. புத்தகத்தின் பெறுமதி அதைவிடப் பல்லாயிரம் மடங்குகள் பெரியது என்பதை இப்போது உணர்ந்துகொள்கின்றேன். எங்கள் மனித வாழ்வியலை திரும்பிப்பார்த்து சிந்திக்கவைக்கின்ற, தாயகத்திற்கு விடுமுறையில் சென்று வருகின்ற அனுபவத்தை தருகின்ற 'கரையைத் தேடும் கட்டு மரங்கள்' நாவலை நாவலாக பார்க்கமுடியவில்லை, வாழ்வாகவே உணர்கின்றேன்.

நூல் அமைப்பு:

நூல் வடிவமைப்பு, அச்சு, எழுத்துக்களின் ஒழுங்கமைப்பு என அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக இருக்கின்றன. நாற்பத்து மூன்று அத்தியாயங்கள் உள்ள இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் நேர்த்தியாக வகுக்கப்பட்டு உள்ளதோடு, கடல் அலைகளாக ஒன்றுடன் ஒன்று சீராக தொடர்புபட்டு செல்கின்றன. ISBN: 9788190840507

நாவலில் இருந்து:

உங்கள் பார்வைக்காக நாவலில் என்னைக் கவர்ந்த பலவற்றில் எழுந்தமானமாக பொறுக்கப்பட்ட சில நறுக்கல்கள்:

***

மாரியாம்பிள்ளை அட்டகாசமாக சிரித்தவாறே,

'நீங்கள் எல்லாரும்தான் ஏதேதோ கதைச்சீங்களே.. என்ரை நெத்தலி அப்பாவை விட்டிட்டு இருக்குமே..'

என்ற சின்னமகளை அருகில் இருத்தி, தானும் சாப்பிட்டு, மகளுக்கும் 'தீத்தி', இடையிடையே தன் மூத்தமகளின் சமையல் திறனையும் பாராட்டி, மூத்தவன் மனுவலைத் திட்டித்தீர்த்து, சாப்பிடுதலே ஒரு நீண்ட கிரியையாக, ஒருவாறு ஒப்பேறியது.

***

'அப்படியானால் ஏன் நீ என்னுடன் நெருங்கிப் பழகினனீ... நம்பிக்கையைத் தந்தனீ...?' என்று அவன் வெடித்து சிதறி வினாத்தொடுக்கவில்லை.

அப்படிக் கேட்டிருந்தாலும்... ' அண்ணை போலை நினைச்சு உங்களோட பழகினனான்.. நீங்கள் இப்படி நினைப்பீங்களெண்டு...'

இந்த ரீதியில் பதில் வருமென்று அவனுக்கு, அதிகம் படிக்காவிட்டாலும் தெரிந்தே இருந்தது.

***

காதல் என்பது புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி, பலசாலியை உருக்குலைத்து, இப்படியெல்லாம் 'ரசவாதவித்தை' இயற்றும் வல்லமை வாய்ந்ததுதானே!

***

பாலினால், வயதினால், சாதியினால், குலத்தினால், கோத்திரத்தினால், மதத்தினால், சுயநலத்தினால், அன்பினால், நட்பினால்.. உறவுகளினால் என இவ்வாறு பல்வேறு வகைகளில் தனியாகவும், சோடிகளாகவும், குழுக்களாகவும் நாங்கள் கட்டப்பட்டு கட்டுமரங்களாக இருக்கின்றோம். கரையைச் சென்றடைகின்ற கனவுகளோடு.. நன்றி! வணக்கம்! மீண்டும் சந்திப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி கலைஞன்,

உங்கள் விமர்சனத்தை இன்று பிற்பகல்தான் வாசித்தேன். நீண்ட விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் விமர்சனம் எனக்கு உடன்பாடா.னதே. சில சந்தோசங்களை மனம் எளிதில் நம்புவதில்லை. அதனால் பலமுறை உங்கள் விமர்சனத்தைப் படித்தேன்.

விமர்சனத்துக்கு மேலாக உங்கள்மனத்தின் மென்மையும், மேன்மையும் எனக்கு தெரிகிறது. நன்றி

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்.

Link to comment
Share on other sites

நன்றி ஐயா உங்கள் உணர்வுப் பகிர்வுக்கு..

சாவிகள் பல இருக்கலாம். ஆனால்.. தனிப்பட்ட ஒவ்வொரு பூட்டுக்களையும் திறப்பதற்கு.. குறிப்பிட்ட ஓர் சாவியால்தான் முடியும்.

சிலர் கதவுகளை பூட்டிவைத்திருக்கவே விரும்பலாம். சிலர் கதவுகளை திறந்துபார்ப்பதில் அக்கறை இல்லாதவர்களாக இருக்கலாம். சிலர் கதவுகள் திறக்கப்படுவதை எதிர்ப்பவர்களாக இருக்கலாம், அல்லது பயப்படுபவர்களாகக் கூட இருக்கலாம்.

எனக்கு என்னமோ.. எனக்குள் அடைக்கப்பட்டுள்ள பல கதவுகளில் ஒரு கதவை திறப்பதற்கு நீங்கள் உருவாக்கிய சாவியாகிய கடலைத்தேடும் கட்டுமரங்கள் உதவி இருக்கின்றது.

நீங்கள் உருவாக்கிய இந்த விஷேட சாவி மற்றவர்களுக்கு பயன்படுமா என்று எனக்கு தெரியாது. அவர்களினுள் அடைந்துபோயுள்ள... திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள பல கதவுகளின் ஏதாவது ஒரு பூட்டை திறப்பதற்கு உங்கள் சாவி பயன்படுமா என்று எனக்கு தெரியாது. ஆனால்.. எனக்குள் இருந்த ஓர் கதவு திறக்கப்பட்டு இருக்கிறது.

தலையிடியும், காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வார்கள். தனக்கு தனக்கு என்று வராதவரை எல்லாமே விமர்சனங்களாகவே இருக்கும்.

அடுத்தவன் வீட்டில் ஒருவிடயம் நடைபெறும்போது அது எங்களுக்கு ஓர் கதையாகவோ.. பகிடியாகவோ.. பார்த்துப் பரிதாபப்படும் ஓர் விடயமாகவோ இருக்கலாம். ஆனால்.. எங்கள் வீட்டினுள் அதேவிடயம் நுழைந்துவிட்டால்.. நாங்கள் உசாராகி விடுவோம் இல்லையா..?

இந்த நாவலிலும்.. அவ்வாறே.. நான் பொழுதுபோக்காக வெறும் கதையை பார்க்கவில்லை. வாழ்க்கையை பார்க்கின்றேன். எங்கள் மனித வாழ்வு பற்றிய எத்தனையோ பல எண்ணங்கள் சுழன்று அடித்துச் செல்கின்றன.

நாங்கள் மிகவும் செயற்கைத்தனமான ஓர் உலகத்திலே இருக்கின்றோம். எங்கள் ஒவ்வொரு அசைவுகளுமே போலியானதாக இருக்கின்றன. தன்தன் மனச்சாட்சி என்பதைவிட பிறர் அபிப்பிராயங்களிற்கு கீழ்ப்படிந்த செயல்களே வாழ்கையை வழிநடாத்துகின்றன. எங்களுக்காக வாழுகின்றோம் என்று பெயரளவில் சொன்னாலும்.. உண்மையில் வாழ்தல் என்பது மற்றவர்களை திருப்திப்படுத்தும் அடிப்படையிலேயே நடைபெறுகின்றது..

இவ்வாறான சூழலில்.. கரையைத்தேடும் கட்டுமரங்கள் எப்படி எங்கள் வாழ்வுடன் தொடர்புபட்டு செல்கின்றது என்பதை என்னால் இப்போது கூறமுடியாது. பிறிதொருபொழுது சமயம், சூழ்நிலை வாய்த்தால் கூறுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஐயா உங்கள் உணர்வுப் பகிர்வுக்கு..

சாவிகள் பல இருக்கலாம். ஆனால்.. தனிப்பட்ட ஒவ்வொரு பூட்டுக்களையும் திறப்பதற்கு.. குறிப்பிட்ட ஓர் சாவியால்தான் முடியும்.

சிலர் கதவுகளை பூட்டிவைத்திருக்கவே விரும்பலாம். சிலர் கதவுகளை திறந்துபார்ப்பதில் அக்கறை இல்லாதவர்களாக இருக்கலாம். சிலர் கதவுகள் திறக்கப்படுவதை எதிர்ப்பவர்களாக இருக்கலாம், அல்லது பயப்படுபவர்களாகக் கூட இருக்கலாம்.

எனக்கு என்னமோ.. எனக்குள் அடைக்கப்பட்டுள்ள பல கதவுகளில் ஒரு கதவை திறப்பதற்கு நீங்கள் உருவாக்கிய சாவியாகிய கடலைத்தேடும் கட்டுமரங்கள் உதவி இருக்கின்றது.

தம்பி கலைஞன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. எல்லோருடைய மளக்கதவுகளையும் தட்டுவதற்கு ஒரு எழுத்தாளன் ஆசைப்படலாம். அது பயன் அளிக்காமல் போகலாம். எங்கோ ஒரு மனக்கதவு திறப்பதற்கு காரணமாக அல்லது உதவியாக இருந்தாலே போதுமானது என்று நினைக்கிறேன். நாம் வாழ்ந்த ஒரு காலத்தை எழுத்தில் பதிவு செய்யும்போது மீண்டும் அக்காலத்தில் வாழும் அனுபவத்தைப்பெறுகிறோம். என்று முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதுவே என் நோக்கமும். கூட.

நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

நன்றி ஐயா. காலம் வசப்படுமாய் இருந்தால் தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாய் இருக்கின்றோம். வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க ஆர்வத்துடன் இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எனது தந்தையாரும் கரையை தேடும் கட்டுமரங்கள் நாவலை வாசித்து இருந்தார். அவரிடம் நாவல் எப்படி இருந்தது என்று கேட்டன்.

தனக்கு எழுத்துக்கள், வசனங்கள் பிடிக்கவில்லை என்று சொன்னார். இது எந்தக்காலத்தில நடந்த கதையாக நீங்கள் உணருகீறீங்கள் என்று கேட்டபோது 1930 சொச்சம் பழசுமாதிரி இருப்பதாக சொன்னார். அத்துடன் கதையில் கூறப்படும் விசயங்கள் இப்படி நடப்பது வழமைதான் என்றும் சொன்னார்.

இரண்டு தலைமுறைகளுக்கு இடையில் எனக்கும் எனது தந்தையாருக்கும் இடையில் உணர்வுகளில் நாவல் சம்மந்தமான விமர்சனத்தில் பாரிய வேறுபாடு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன்பிறகு நான் அவருக்கு கதை ஏன் எனக்கு பிடித்தது... மற்றும் நாவல் சம்மந்தமான பல விசயங்கள் பற்றி அவருடன் உரையாடினேன்.

Link to comment
Share on other sites

கலைஞன் தமிழ் கலைஞன் என்பவர் யார்? நீங்கள்தானா?

இதே விமர்சனம் தமிழ் கலைஞன் என்ற பெயரில் வேறொரு

இணையத்தளத்தில் கண்டேன் ஆதலால்தான் கேட்கிறேன்

Link to comment
Share on other sites

தமிழ் கலைஞன் எனும் பெயரில் அடியேன் முகநூலில் இருக்கின்றேன். சோழியன் மாமா அந்தப்பெயரில் தமிழமுதத்தில் இணைத்து இருந்தார். இன்று கரையைத் தேடும் கட்டுமரங்கள் வெளியீட்டுவிழா விளம்பரத்தை முகநூலில் கண்டேன். பார்க்காதவர்களிற்காக..

Link to comment
Share on other sites

தமிழ் கலைஞன் எனும் பெயரில் அடியேன் முகநூலில் இருக்கின்றேன். சோழியன் மாமா அந்தப்பெயரில் தமிழமுதத்தில் இணைத்து இருந்தார். இன்று கரையைத் தேடும் கட்டுமரங்கள் வெளியீட்டுவிழா விளம்பரத்தை முகநூலில் கண்டேன். பார்க்காதவர்களிற்காக..

கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றியும், அவரது நாவலான "கரையைத்தெடும் கட்டுமரங்கள்" பற்றியும் கரவைக்குரல் இவ்வாறுகூறுகிறது.

http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_27.html

Link to comment
Share on other sites

கரையைத் தேடும் கட்டுமரங்கள் புத்தக வெளியீட்டு விழா கனடாவில் நாளை சனிக்கிழமை மாலை 5.30இற்கு இடம்பெறுகின்றது என்று அறியமுடிகின்றது. யாழ் கள உறவுகளும் வெளியீட்டு விழாவில் கலந்து எங்கள் கலைஞருக்கு ஆதரவு கொடுக்கலாம்.

இடம்: Agincourt Community Centre

31,Glen Watford Drive,

Scarborough,Ontario

Midland & Sheppard(On Sheppard)

வடலி வெளியீட்டகத்தின் இதர வெளியீடுகளையும் நாளை அங்கு பெற்றுக்கொள்ளலாம் என்றும் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளை இந்த புத்தகம்தானே..?

kamal%20with%20my%20book.jpg

இந்த இணைப்பில் உள்ளது

http://1.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/SsM5...ith+my+book.jpg

Link to comment
Share on other sites

பிரதர், உங்கடை கேள்வி.. உது ஏதோ டபிள் மீனிங்கில கேட்பது போல இருக்கிது. கமலகாசன் அவர்கள் தெனாலி படத்தில் நடிக்கும்போது ஈழத்து தமிழில் கதைப்பதற்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் ஒலிப்பதிவுகள் மூலமே பயிற்சி பெற்றதாக அப்துல் ஹமீத் அவர்கள் நூல் முகவுரையில் குறிப்பிட்டு இருந்தார். எனவே கமலகாசன் கே.எஸ் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆச்சரியமேதும் இல்லையே.. நானும் அந்தபடத்தை இங்கு போடுகிற எண்ணத்திலேயே கேட்டேன். நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி,

எல்லோருக்கும் வணக்கம்.

எனது நாவலான " கரையைத்தேடும் கட்டுமரங்கள்" வெணியீட்டு விழா சென்ற வாரத்தில் நன்றாகவே நடந்தேறியது.

அதே நாள் இன்னும் மூன்று புத்தகவெளியீட்டு விழாக்கள் அண்மையிலேயே நடந்தன. பார்வையாளர்கள் திணறிப்போய்விட்டார்கள். வடலிவெளியீடுகள் (இளங்கவியின் கவிதைநூல் உட்பட)விற்பனைக்கு வைக்கப்பட்டன.

கள உறவு கவிஞனின்விமர்சனத்தைப்பற்றி என்னுரையில் குறிப்பிட்டேன்.. அவர்வந்தாரோ தெரியவில்லை. வல்வைசாகிறா வந்திருந்தார். அவர் கருத்தை அறிய விருப்பமாக இருக்கிறது.படங்கள் முடியுமானால் இணைக்கிறேன். நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலச்சந்திரன் அண்ணாவுக்கு

கனடாவில் உங்கள் புத்தக வெளியீட்டு விழா நடக்கப்போவதை நீங்கள் பல வாரங்களுக்கு முதல் யாழில் அறியத்தந்ததை தெரிந்திருந்தாலும் நீங்கள் எனது புத்தகமும் அங்கே கண்காட்சிக்கு வைக்கப்பட்டதைச் சொன்ன பிற்பாடுதான் எனக்குத் தெரியும் அண்ணா.... மிக்க சந்தோசம் அண்ணா...

உங்களுக்கு தனிமடல் போட்டுள்ளேன்.... நான் அங்கே வரமுடியாத காரணத்தையும் உங்களுக்குத் தெரிவித்துளேன்.... நீங்கள் எவ்வளவு பெரிய அத்துடன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்... ஆனால் எனக்கோ இதுதான் எனது முதல் கவிதைத் தொகுப்பு... உங்களது புத்தக வெளியீட்டு விழாவில் எனது புத்தகமும் வைக்கப்பட்டதுவே எனக்குப் பெருமைதானே அண்ணா.... தகவல் அறியத்தந்ததற்கு மிக்க நன்றிகள்....

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் வணக்கம்.

எனது நாவலான " கரையைத்தேடும் கட்டுமரங்கள்" வெணியீட்டு விழா சென்ற வாரத்தில் நன்றாகவே நடந்தேறியது.

அதே நாள் இன்னும் மூன்று புத்தகவெளியீட்டு விழாக்கள் அண்மையிலேயே நடந்தன. பார்வையாளர்கள் திணறிப்போய்விட்டார்கள். வடலிவெளியீடுகள் (இளங்கவியின் கவிதைநூல் உட்பட)விற்பனைக்கு வைக்கப்பட்டன. கள உறவு கவிஞனின்விமர்சனத்தைப்பற்றி என்னுரையில் குறிப்பிட்டேன்.. அவர்வந்தாரோ தெரியவில்லை. வல்வைசாகிறா வந்திருந்தார். அவர் கருத்தை அறிய விருப்பமாக இருக்கிறது.படங்கள் முடியுமானால் இணைக்கிறேன். நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

சகாரா அக்கா தான் நிகழ்வில் கலந்துகொண்டதாய் சொல்லி இருந்தா. சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் என்னால் வருகை தரமுடியவில்லை. சமயம் வரும்போது உங்களை சந்திக்கின்றேன். நிகழ்வின் காணொளி இருந்தால் இணைத்துவிடுங்கள். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிகழ்வின் காணொளி இருந்தால் இணைத்துவிடுங்கள். நன்றி!

கலைஞன்

சாதாரணமாக படங்களை இணைப்பதுகூட எனக்கு சிரமமாகவிருக்கிறது. உங்கள் ஈமெயிலுக்கு படங்களை அனுப்புகிறேன். இணைக்கமுடியுமா?

இளங்கவி.

உங்கள் ஈமெயிலுக்கு நன்றி. நேரடியாக பதில் அனுப்புகிறேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

post-7026-12555667774776_thumb.jpg

post-7026-12555673362104_thumb.jpg

Link to comment
Share on other sites

நன்றி ஐயா, உங்கள் படங்கள் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றன. நான் அவற்றை இங்கு இணைக்கின்றேன். அத்துடன், புகைப்படத் தொகுப்பு கரும்பு வலைத்தளத்திலும் இணைக்கப்பட்டு இருக்கின்றன. மேலதிக படங்களை அனுப்பி வைத்தால் அவற்றையும் இணைக்கலாம்.

படத்தில் உங்களுக்கு அருகில் மாலையுடன் நிற்கின்ற நீலநிற புடவை கட்டி இருக்கற அம்மாவை எங்கையோ கண்டமாதிரி இருக்கிது. :lol:

கரும்பில் படத்தொகுப்பு:http://karumpu.com/archives/380

கரும்பில் Slideshow: http://karumpu.com/archives/380?show=slide

digi-ks-karai-124.jpg

digi-ks-karai-115.jpg

digi-ks-karai-080.jpg

digi-ks-karai-077.jpg

digi-ks-karai-076.jpg

digi-ks-karai-074.jpg

digi-ks-karai-073.jpg

digi-ks-karai-070.jpg

மிகுதி:

digi-ks-karai-065.jpg

digi-ks-karai-062.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரையைத் தேடும் கட்டுமரங்கள்' புத்தக வெளியிடு மற்றும் படங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

படத்தில் இருப்பவர்களைத்தான் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகுதி:

கலைஞன்,

படங்களை அழகாக இணைத்திருக்கிறீர்கள். நன்றி. படத்தில் உள்ளவர்களின் விபரம் தரவில்லை. தருகிறேன். சேர்க்கமுடியுமானால் சேர்த்து விடுங்கள்.

மற்றது எனக்கு அருகில் நிற்கும் நீலப்புடவைகட்டிய அம்மா, திருமதி பாலச்சந்திரன்தான்.

நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரையைத் தேடும் கட்டுமரங்கள்' புத்தக வெளியிடு மற்றும் படங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

படத்தில் இருப்பவர்களைத்தான் தெரியவில்லை.

சகோதரி,

உதவிசெய்யத்தான் கலைஞன் இருக்கிறாரே. விபரம் தருவோம்.. நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

உங்கள் தகவல்களிற்கு நன்றி ஐயா. கரும்பு படத்தொகுப்பில் விபரங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு தனிப்படத்தையும் சொடுக்கும்போது அவற்றை பார்க்கலாம். உங்கள் தாயாரையும் படத்தில் கண்டது சந்தோசம்.

கறுப்பி, சகாரா அக்காவும் ஒரு படத்தில சின்னதாய் இருக்கறா. யாராவது முடியுமானால் கண்டுபிடிச்சு சொல்லுங்கோ.

விபரங்களுடன் புகைப்படதொகுப்பு: http://karumpu.com/archives/380

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் தகவல்களிற்கு நன்றி ஐயா. கரும்பு படத்தொகுப்பில் விபரங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு தனிப்படத்தையும் சொடுக்கும்போது அவற்றை பார்க்கலாம். உங்கள் தாயாரையும் படத்தில் கண்டது சந்தோசம்.

கறுப்பி, சகாரா அக்காவும் ஒரு படத்தில சின்னதாய் இருக்கறா. யாராவது முடியுமானால் கண்டுபிடிச்சு சொல்லுங்கோ.

விபரங்களுடன் புகைப்படதொகுப்பு: http://karumpu.com/archives/380

நன்றி கலைஞன்,

சிரமம் தந்துவிட்டேன் போலிருக்கிறது.வல்வை சகாராவை படத்தில் கண்டுபிடிப்பவர்க்கு பரிசு கொடுப்போமா?

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 03    "கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு. கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றியிருக்க முடியாது. ஆனால் இது தாம் மூத்த குடி என்பதையும் வீரக் குடி என்பதையும் வெளிக்காட்ட ஏற்படுத்திய சொல் வழக்காக இருக்கலாம் என்று நம்புகிறேன். என்றாலும் இது பண்டைய பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று. ஆமாம், ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள் தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வு மையத்தினர் [‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ / 'the Centre for Cellular and Molecular Biology / Hyderabad]. இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து  இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டு பிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர், பிபிசி [BBC] தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.   இந்தியாவின் பழமையான மக்கள் நெகிரிட்டோ (Negrito) க்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன் வந்த இனக் குழுக்களில் முதன்மையானவர்கள் அவர்கள் தான். அவர்கள் கேரளா மற்றும் அந்தமான் தீவுகளின் மலைப்பகுதிகளில் குடியேறினர். ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற சில பழங்குடியினர் [Kadar, Irula and Puliyan tribes] நெகிரிட்டோக்களுடன் அதிக அளவில் ஒத்திருக்கிறார்கள். அவை  ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அவற்றின் அண்டை தீவுகளுடன் தொடர்புடையவை. நெகிரிட்டோக்கள் கருப்பு (கருமையான) தோல், கம்பளி முடி, அகன்ற மற்றும் தட்டையான மூக்கு மற்றும் சற்று நீண்டு சென்ற தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பலாங்கொடை மனிதன் தெற்காசியாவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட மறுக்க முடியாத பழமையான ஹோமோ சேபியன்ஸ் புதை படிவமாகும். அவை குறைந்தது 28,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் அவை கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் இலங்கை தென் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதாவது மகாவம்ச விஜயன் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 25,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும்.     அதே போல, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை [Harvard University] சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் [David Reich] ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள்.   அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது எனவும், முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து [when agriculturists from the Zagros region of Iran] நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள் எனவும், இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது என்றும். இந்த விவசாய மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்றும் அடையாளம் காட்டி உள்ளார்கள்.    இரண்டாவது குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு 2000 மற்றும் 1000 க்கு இடையில், மத்திய ஆசிய ஆயர்களால் [மேய்ச்சல் தொழில் செய்பவர் / Steppe pastoralists] நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் [Kazakhstan] பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே என்கிறார்கள்.    எனவே ஆரியர்கள் இந்திய மண்ணில் கிறித்து பிறக்க 1500 ஆண்டுகளுக்கு முன் - இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்  - கால் வைத்தார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். ஆனால் சிந்து வெளியில் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்ட நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, அஃது ஆரியருக்கு முற்பட்ட ஒரு நாகரிகத்தின் அடிப்படையிலே அமைந்தது என்பது பொருந்தும். இதனாலும், மற்றும் சத்தி வழிபாடு, சிவன், லிங்க வழிபாடும் இன்னும் பல காரணங்களாலும்  உலகின் பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் சிந்து நாகரிகம் தமிழியம் (திராவிடம்) சார்ந்தென்று உறுதிப்பட மொழிந்துள்ளனர். மேலும் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறுகள் சுமேரிய நாகரிகத்துடன் ஒப்பிட வாய்ப்பளித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.    ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான இரண்டு  பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அவையை தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென் இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.    ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது. மொழியியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் திராவிட மொழி பண்டைய சமஸ்கிருதத்தை பாதித்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றனர், இது இந்தோ - ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் தோன்றும் ஏராளமான திராவிட கடன் வார்த்தைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிட மொழி [தொல் தமிழ்] குறைந்தது 4,500 ஆண்டுகள் பழமையானது, இது கிமு 2,500 க்கு முந்தையது, மேலும் இந்தோ - ஆரிய மொழிகளைப் பேசும் மக்கள் தோன்றுவதற்கு முன்பு இந்தியா முழுவதும் திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர் என்றும் மொழியியலாளர்கள் நம்புகிறார்கள்.   "குயிலோசைக் கேளாவிட்டால் செவி அழிவதில்லை மயில் நடனம் காணாவிட்டால் மலர் விழி துடிப்பதில்லை உயிர் தமிழ் நினைப்பு இன்றேல் உலகினில் வாழ்வே இல்லை"   என்று தமிழ் உயர்வைப் பாடி வைத்தான் ஒரு கவிஞன்.அவன் காதில் இந்த பெருமை விழட்டும். அவனோடு சேர்ந்து நாமும் மகிழ்வோம், ஆனால் அதே நேரத்தில் உண்மைகளை மேலும் மேலும் கொண்டுவர தொடர்ந்து முற்சிப்போம்.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:04 தொடரும்         
    • நீங்கள் தமிழில் இதை எழுதியிருந்தது நன்றாக ஞாபகமிருக்கின்றது. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க வைத்திருந்தது.
    • நல்லகாலம் கிடாய் (கடா) வெட்டி,  கடுக்கன் போடுற சடங்கு இன்னும் வரேல்லை!😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.