Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளின் பொருட்களைப் புறக்கணிப்போம். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பொருளாதார அச்சாணியை முறிப்போம்.

Featured Replies

உலகெங்கும் வேதனையே வாழ்வாகிப்போன என் உறவுகளே,

தாய் தமிழீழத்தில் ஒவ்வொரு நிமிடமும் செத்து மடியும் எம் உறவுகளை காக்க, நாம் விடுத்த வேண்டுகோளெல்லாம் உலக அரங்கில் "செவிடன் காதில் ஊதிய சங்காகவே" இருக்கிறது. சிங்களம் ஏதோ உலக வல்லரசு போல் சர்வதேச அரசியல் தமிழருக்கு "அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதை" சொல்கிறது.

நாம் புலம் பெயர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் பலர் பதுங்கி, ஒதுங்கி இருந்தாலும், சிலர் எதாவது செய்ய வேண்டுமென துடிக்கிறோம்.

மிகவும் இலகுவான ஒரு தியாகம், சிங்களத்தின் பொருட்களை புறக்கணிப்பது. கீழே உள்ள இணைப்பில் கனடாவில் சிங்களத்துக்கு முண்டு கொடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. நம்பினால் நம்புங்கள்! கனடாவில் இருந்து மட்டும் எங்கள் நாவுக்கு ருசி சேர்க்க நாங்கள் சிங்களத்தின் தமிழின அழிப்பு போருக்கு வருடம் தவறாமல் 111.3 மில்லியன் டாலர்கள் வழங்குகிறோம்.

http://www.ic.gc.ca/cgi-bin/sc_mrkti/cid/c...type=by_country

பிற நாடுகளில் வாழும் உறவுகளும் இது போல சிங்களத்தின் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்களை எம் மக்களுக்கு அடையாளம் காட்டும் செயற்பாடுகளை செய்யுங்கள்.

இந்த நிறுவனங்கள் எமக்கு பகை அல்ல. இவர்களை சரியான தகவல்களுடன் அணுகி, சிங்களத்துடன் உள்ள வியாபார நடவடிக்கையை நிறுத்துமாறு பணிவன்புடன் சொல்லலாம். நிறுத்தாத பட்சத்தில் அவர்களையும் நாம் புறக்கணிப்போம் என்று பண்புடன் சொல்லலாம்.

சிங்களத்துக்கு அதிக உதவி வழங்கும் நாடு ஜப்பான், நேரடியாகவே இந்த நாட்டின் பொருட்களை புறக்கணிக்கப்போவதாக ஊடகங்களுக்கு சொல்லுங்கள். இது மிகப் பெரிய விழிப்புணர்வை சர்வதேசத்துக்கு கொண்டு வரும். ஏனெனில் உலகெங்கும் எண்பது மில்லியன் தமிழர் வாழ்கிறோம். இது வியாபார நோக்கம் கொண்ட உலக அரசியலுக்கு அழுத்தமான செய்தியாக இருக்கும்.

எமது இனம் அழிவின் விளிம்பில் இருக்கும் போது, சிறு துரும்பையும் அவர்களின் அழிவை தடுக்க நாங்கள் பயன்படுத்த வேண்டும்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.ic.gc.ca/cgi-bin/sc_mrkti/cid/c...=&hfFileNm=

URUTHIRA BROTHERS LTD. Toronto Ontario M1R 3B6

http://indiagoldpages.ca/GPSearch.asp?BCit...g=Import/Export

Uruthira Bros Ltd. Tel: 416 412 4427

140 Milner Ave., Unit 14 Fax: 416 412 4428

Scarborough, ON M1S 3R3 Tamil Import/Export

முதலில எங்கட ஆக்கள் இறக்குமதி செய்கிறதை நிப்பாட்டடும்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.ic.gc.ca/cgi-bin/sc_mrkti/cid/c...=&hfFileNm=

URUTHIRA BROTHERS LTD. Toronto Ontario M1R 3B6

http://indiagoldpages.ca/GPSearch.asp?BCit...g=Import/Export

Uruthira Bros Ltd. Tel: 416 412 4427

140 Milner Ave., Unit 14 Fax: 416 412 4428

Scarborough, ON M1S 3R3 Tamil Import/Export

முதலில எங்கட ஆக்கள் இறக்குமதி செய்கிறதை நிப்பாட்டடும்

அது வரைக்கும் நீங்கள் வாங்குறத நிப்பாட்ட மாட்டீங்கள் எண்டு அர்த்தமா? அல்லது முதல் எங்கட ஆக்கள் நிப்பாட்டட்டும், பிறகு மற்ற ஆக்களக் கவனிப்பம் எண்டு அர்த்தமா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பணமே போதுமே வன்னியில் ஒவ்வொரு நாளும் குண்டு போட. பிறகேன் சிங்களவன் வன்னி மீது குண்டு போடுகிறான் என்று சொல்லுவான். technically நாங்கள் தான் குண்டு போட பணம் கொடுக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவற்றில் தமிழர்களின் நுகர்வில் தங்கியிருக்கும் சில நிறுவனங்கள்:

C E P E INTERNATIONAL -- கடலுணவு

CAAVERI ENTERPRISES - அரிசி மா, மிளகாய்த் தூள், ...........

OCEAN SEAFOOD COMPANY - கடலுணவு

T.K. RAM TRADING --- ????

URUTHIRA BROTHERS LTD - அரிசி மா, மிளகாய்த் தூள், ...........

  • தொடங்கியவர்

உறவுகளே, இந்த நிறுவனங்களும் பெரும்பாலானவை தமிழர்களால் நடத்தப்படும் நிறுவனங்களே.

இவர்களுடன் நேரடியாக சந்தித்து மாற்று வழிகளை சொல்லலாம்.

விலை சிறிது அதிகமாக இருந்தாலும், ஸ்ரீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யாத பொருட்களை நாம் வாங்கத் தயாராக உள்ளோம் என்பதை தெளிவு படுத்தலாம்.

தமிழ் அல்லாத Costco, Walmart போன்ற நிறுவனங்களுக்கு கடிதம் அல்லது தொலைபேசி மூலம் எமது அதிருப்தியை தெரிவிக்கலாம்.

இந்த list இல் இல்லாத Tetley, 3Roses போன்ற நிறுவனங்களையும் மறந்து விட வேண்டாம்.

அவசியம் ஜப்பான்க்கு ஒரு Email அனுப்புங்கள். தொடர்பு: (infocul@embjapan.ca,

access@japancg-toronto.org, infocul@conjapan.ab.ca,

general@consuljaponmontreal.org, general_enquiries@sony.ca)

Newspapers & News Agencies:

http://web-japan.org/links/mass/newspapers/general.html

Media Associations (good one)

http://web-japan.org/links/mass/media/newspapers.html

Broadcast Stations

http://web-japan.org/links/mass/broadcast/tv.html

Online News & Magazines

http://web-japan.org/links/mass/online/online.html

Political Parties:

http://web-japan.org/links/government/poli.../political.html

NGO & Volunteer Groups (need to select few Japan based ones):

http://web-japan.org/links/society/ngo/peace.html

ஒரு நண்பர் சொன்னது போல, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான், சீனாவுக்கு செய்த கொடுமைகள் அதிகம். ஜப்பான் தமிழின அழிப்பிற்கு துணை போகும் இந்த சேதியை சீனா நண்பர்களிடம் சொல்லி, அவர்களையும் எமக்காக குரல் கொடுக்க வைக்கலாம்.

நாம் என்ன கூத்து;போட்டு என்ன பலன்? ஒரு பொருளை நாம் வாங்க மறுத்தாலும் நம்மை வாங்க ஊக்கம் கொடுப்பதை இந்த தொலைக்காட்சிகள் நிறுத்தாது போல் உள்ளது. அதுவம் தாங்கள் 24 மணிநேரமும் தேசியத்திற்கு உழைக்கிறோம் என்று கூறும் ஒரு தொலைக்கட்சி இன்னமும் எயார் லங்கா விளம்பரத்தை மறைமுகமாக செய்து வருகின்றனர். இது அறியமையா அல்லது வியாபாரமா என்பது இன்மும் புரியவில்லை. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஈழ ஆதரவு போராடடத்தை வெறும் வோட்டுப்பெறுக்கி அரசியல் என்று நக்கலடிக்கும் இந்த தொலைக்கட்சி தனது அரசியல் ஞானத்iதை கேள்வி கேட்கும் நேரம் இது என்பதை புரிய வேண்டும். 24மணிநேரம் தேசியத்திற்காக உழைத்தாலும் ஒரு செக்கன் விளம்பரத்தால் அதன் தேசிய உழைப்பை குப்பைக் கூடைக்குள் போவது போலாகும். ஊடகம் என்பது ஒரு ஊடகமாக நடுநிலையாக இருக்கவேண்டும் என்ற தேவை இன்று தமிழ் தேசியத்திற்கு கிடையாது. காரணம் எம் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்க சர்வதேசமே கங்கணம் கட்டி நம் செய்திகளை இருட்டடிப்பு செய்வதுடன் சிறீ லங்கா அரசின் பரப்புரைகளையும் திரும்ப திரும்ப சொல்லி ஒரு பொய்யை உண்மையாக்கும் கைங்கரியத்தை செய்து வருகின்றனர். இந்த லட்சணத்தில் இந்த தமிழ் ஊடகங்கள் பத்திரிகை, தொலைக்காட்சிகள் அரசின் செய்திகளையும் சொல்லுகிறார்கள். கேட்டால் நடு நிலைமையாம்! இந்த ஊடகங்கள் திருந்தும் மட்டும் நாம் என்னதான் கத்தினாலும் அது மாரித் தவளை கத்தியது போல்தான். முதலில் ஊடகங்கள் தம் விளம்பரங்களை திருத்தட்டும். பின்னர் மற்றவர்களை விமர்சிக்க வரட்டும்!!!

இன்னுமொரு விடயம்!

பொன்னாங்காணி, வல்லாரை, கங்கூன், முருங்கையிலை, போன்ற மரக்கறிகளை வாங்க மறுக்க வேண்டும். காரணம் இந்த உடன் மரக்கறிகளை (மற்றும் சில உணவுகள்) எயர் லங்காவே இங்கு கொண்டு வருகிறது. இதனால் பெறும் வருமானம் எயர் லங்காவை மிகவும் இலாபகரமாக இயங்க வைக்கிறதாம்! இந்த கிரையில் உள்ள அதே சத்துகள் இங்கு விற்கப்படும் பல பச்சை இலை மரக்கறியில் கிடைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு விடயம்!

பொன்னாங்காணி, வல்லாரை, கங்கூன், முருங்கையிலை, போன்ற மரக்கறிகளை வாங்க மறுக்க வேண்டும். காரணம் இந்த உடன் மரக்கறிகளை (மற்றும் சில உணவுகள்) எயர் லங்காவே இங்கு கொண்டு வருகிறது. இதனால் பெறும் வருமானம் எயர் லங்காவை மிகவும் இலாபகரமாக இயங்க வைக்கிறதாம்! இந்த கிரையில் உள்ள அதே சத்துகள் இங்கு விற்கப்படும் பல பச்சை இலை மரக்கறியில் கிடைக்கிறது.

உண்மை, அது மட்டுமல்ல. இங்கே இருக்கும் இலை வகைகளில் ஈ.கோலை (E.coli) போன்ற நோய் தரும் நுண்ணுயிர்களும் இருக்காது. எடுத்துச் செல்லுங்கள் எங்கள் மக்களிடம் இவற்றை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.