Jump to content

சதாமை தூக்கிலிட்டீர்கள் மகிந்தவை ?-பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்


Recommended Posts

நேற்றைய தினம் (18.12.2008) பிரித்தானிய நாடாளுமன்றில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரளுமன்ற உறுப்பினர் இன அழிப்பில் ஈடுபட்டிருந்த முன் நாள் ஈராக்கிய அதிபர் சதாம் குசேனுக்கு மரண தண்டனை வழங்கிநீர்கள் தற்போது இலங்கையில் நடைபெறும் இன அழிப்பிற்கு யாருக்கு மரணதன்டனை வழங்கப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். 30 நிமிடம் நடைபெற்ற விவாதம்

காணொளில் பார்க்க.......

http://vimbamkal.blogspot.com/2008/12/blog-post.html

Link to comment
Share on other sites

இலங்கை பிரச்சினை குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் சூடான விவாதம்:

http://www.parliamentlive.tv/Main/VideoPla...?meetingId=3021

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்பிரச்சினை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெற்றுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும் ஜனநாயக உரிமை இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பில் ராமெல் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய எந்தவொரு ஜனநாயக உரிமையும் விடுதலைப் புலிகளுக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல், சிவிலியன்களை பலவந்தமாக போராட்டத்தில் ஈடுபடுத்தல், மாற்றுக் கொள்கையுடையோரை படுகொலை செய்தல், சிவிலியன்கள் சுதந்திரமாக இடம் நகர தடை ஏற்படுத்தல் என பல்வேறு சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மீறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தளர்த்தப்படுவதற்கான சாத்தியம் வெகு குறைவாகவே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டால் மட்டுமே விடுதலைப் புலிகள் மீதான தடையை தளர்த்துவது குறித்து கவனம் செலுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு பிரச்சினை இருப்பதனை ஒப்புக் கொள்வதாகவும், அனைத்து சமூகங்களினதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பயங்கரவாதத்தின் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெற்கில் சிவிலியன்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும், இதே அணுகுமுறையை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தொடரும் இன முறுகலை தீர்ப்பதற்கான நியாயமான பொறுப்பு இலங்கை அரசாங்கத்தையே சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறுபட்ட சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பேண அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும், உரிய அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது இன்றியமையாததெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இலங்கையர்களதும் உரிமைகள் பாதுகாக்கப்படக் கூடிய ஓர் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பரவலாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தனது விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

Mr Jeremy Corbyn for Islington, North (Labour)

இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் ஐக்கிய நாடுகளின் நிலையான மனித உரிமை கண்காணிப்பகம் ஒன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டும் எனவும் ஜெர்மி கொர்பைன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம் ஒன்றை அமைப்பதன் மூலம் நியாயமான முறையில் பிரச்சினைக்கு தீர்வு எட்ட முடியும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Mr. Lee Scott :(Ilford, North) (Con):

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கும் அனைத்து பாதைகளும் திறக்கப்பட வேண்டும் என லீ ஸ்கொட் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியில் பல்வேறு இடர்களை எதிர்நோக்கிவரும் தமிழ்ச் சிவிலியன்களுக்கு உணவு மற்றும் ஏனைய நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க பாதைகள் திறக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவிலியன்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Mr. Paul Burstow for Sutton and Cheam (Liberal Democrat)

இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து உரிய தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என பிரித்தானிய லிபர் ஜனநயாகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் போல் புருட்சோ தெரிவித்துள்ளார்.

சுயாதீனமானதும், உண்மையானதுமான செய்தி வெளியீடு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனேக சந்தர்ப்பங்களில் இலங்கைப் பிரச்சினை குறித்த உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் நிலவுவதகா அவர் குறிப்பிட்டுள்ளார்.

Susan Kramer for Richmond Park (Liberal Democrat)

வன்னியில் அப்பாவி தமிழ்ச் சிவிலியன்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு இடையூறுகள் குறித்து பிரித்தானிய வாழ் தமிழர்கள் ஆதாரபூர்வமான தகவல்களை எம்மிடம் கையளித்துள்ளனர் என லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சூசன் கார்மர் தெரிவித்துள்ளார்.

யுத்த முன்நகர்வுகளின் காரணமாக வன்னி மக்கள் பெரும் மனிதாபிமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Keith Vaz (Leicester, East) (Lab):

மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து குரல் கொடுக்கும் பிரித்தானிய தமிழ் மக்கள் பல்வேறு அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதன் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வெளியிடும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்ற போதிலும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமது சொந்த நாட்டு மைந்தர்கள் மீது க்ளஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து தமிழர் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கோர முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது: பிரித்தானிய அமைச்சர் பில் ராம்மெல்

[வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2008, 09:14 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்]

சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் பில் ராம்மெல் தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாத்தின் மீது பில் ராம்மெல் பேசியதாவது:

புனித வெள்ளி நாளையொட்டி ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வட அயர்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் நடைமுறைகளை பார்வையிடுமாறு இலங்கையின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தோம்.

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு அண்மையில் முன்வைத்துள்ள அதிகாரப் பகிர்வு பரிந்துரைகள் முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கையாகும்.

இருப்பினும், அனைத்து பிரதான அரசியல் கட்சிகளையும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் நடைமுறைகளில் இணைக்க வேண்டியதில் சிறிலங்கா அரசாங்கமானது மேலதிகமாக கவனம் செலுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை மறந்துவிடக் கூடாது.

பயங்கரவாத வழிகளைக் கைவிடுமாறு நாம் விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஜனநாயக நடைமுறைகளின் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அதே நேரத்தில் சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளானது இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தாது என்றார் அவர்.

-Puthinam.com-

Link to comment
Share on other sites

உலக அரசியல் மட்டத்தில் மாற்றங்கள் இன்னும் வரவில்லை..... வருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியல் மட்டத்தில் மாற்றங்கள் இன்னும் வரவில்லை..... வருமா?

சூறாவளி , உங்கள் கேள்விக்கு விடை தெரியாது ,

ஆனால் , நம்பிக்கையுடன் இன்னும் ஈழத்தமிழர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய எந்தவொரு ஜனநாயக உரிமையும் விடுதலைப் புலிகளுக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல், சிவிலியன்களை பலவந்தமாக போராட்டத்தில் ஈடுபடுத்தல், மாற்றுக் கொள்கையுடையோரை படுகொலை செய்தல், சிவிலியன்கள் சுதந்திரமாக இடம் நகர தடை ஏற்படுத்தல் என பல்வேறு சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மீறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள்தான் என்பதை சிங்கள அரசோ அல்ல அவற்றின் தாளங்களோதான் சொல்லிக் கொள்கின்ற உரிமையை வைத்திருக்கின்றார்களாம். சுயதேசிய பொருளாதார நலத்துக்காக எந்தப்பாவத்துக்கும் துணைபோகின்ற மேல்நாட்டரசியல் மக்களைப்பற்றி கவலைப்படுவார்களாம். புஸ்க்கு ஈராக்கியர்களில் வந்த கவலைபோல். கடைசியில் போறகாலத்தில் அவர் வாங்கைய அபிஷேகங்களையும் இவர்கள் மறக்காமல் வைத்திருந்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அரசபயங்கரவாதத்துக்கு தோள் கொடுத்துக் கொண்டே அதை எதிரித்து தன் சொந்தக்காலில் போராடும் அமைப்பிற்க்கு போராட்ட இலட்சணத்தை மீறாமல் போராடுமாறு கட்டளை இடுவா்கள்?

அப்படி அவர்கள் பயங்கரவாத இலட்சணத்தை பெறுவார்கள் என்றால் யார்காரணம் ஒட்டுமொத்தமாக இந்த அரசபயங்கரவாதத்டுக்கு பின்னால் நிற்க்கும் கூட்டம் அல்லவா? அவர்கள் இருப்பையே இல்லாமல் செய்யும் துன்பத்துக்கு பொறுப்பெடுப்பவர்கள் அந்த போராட்ட அமைப்பிற்க்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அருகதையைப் பெற முடியுமா?

ஒவ்வொரு போராட்ட அமைப்பையும் பயகரவாதமாக்குகின்ற போறுப்பு மேல்நாடுகளின் பொறுப்பற்ற, சொந்த அரசியல் இலாபம் கருதிய செயல்கள்தான் என்பதை உலகம் அறியாதா?

83 கலவரம் முடிந்த கையோடு இலங்கையுடன் ஆயுத வர்த்தகம் செய்யாத நாடுகள்தான் எது?

அதிகாரம் இருந்துவிட்டால் நாய்கூட தன் நிலையை மறந்துவிடுமாம்.

புத்தி சொல்வதர்க்கும் ஒரு யோக்கியம் வேண்டும் அதையாவது இவர்கள் மறக்காமல் இருந்தால் சரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி , உங்கள் கேள்விக்கு விடை தெரியாது ,

ஆனால் , நம்பிக்கையுடன் இன்னும் ஈழத்தமிழர் .

வேறுவழி???????????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.