எப்படியும் சில வேளைகளில் நாம் நமக்கு சொந்தமில்லாத கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். குறிப்பாக சில இன்டர்நெட் மையங்களில், பிறரின் அலுவலகங்களில், வீடுகளில், ஹோட்டல்களில் என எங்காவது உடனே மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக அங்குள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோம். அப்போது செய்யக் கூடாத மற்றும் பின்பற்ற வேண்டிய சில எச்சரிக்கை வழிமுறைகள் இங்கு தரப்படுகின்றன.
1. ஆன்லைன் பேங்கிங்: கட்டாயமாய்ச் செய்யக்கூடாத ஒரு செயல். ஏனென்றால் உங்களின் உழைப்பின் ஊதியம் சம்பந்தப்பட்டது இது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மற்ற கம்ப்யூட்டர்கள் வழியாக பரிமாற்றம் போன்ற வழிகளில் மேற்கொள்கையில் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை இழக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் டைப் செய்திடும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை உங்களை அறியாமல் திருடும் ஏதாவது ஒரு சாப்ட்வேர் அதில் இருக்கலாம். எனவே மற்ற கம்ப்யூட்டர்களை உங்கள் நிதி பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தவே கூடாது.
2. பைல்களை சேவ் செய்யாதீர்கள்: பொதுவான கம்ப்யூட்டர்களில் பணி செய்கையில் நீங்கள் உருவாக்கும் பைல்களை சேவ் செய்திட வேண்டாம். உங்களுக்கென உள்ள வெப் சர்வரில் இமெயில் மூலமாகச் சேமித்து வைத்துப் பின் வீட்டிற்கு வந்தவுடன் டவுண்லோட் செய்து கொள்ளலாம். அல்லது பென் டிரைவ் மற்றும் சிடிக்களில் காப்பி செய்து கொண்டு வரலாம். பொது கம்ப்யூட்டர்களில் காப்பி செய்தால் அழிக்க மறந்து போகலாம். அழித்துவிட்டாலும் சில ஸ்பெஷல் சாப்ட்வேர் மூலம் அதனை வேறு யாராவது பெற்று தவறாகப் பயன்படுத்தலாம்.
3.பொருட்களை வாங்க வேண்டாம்: ஆன் லைனில் பொருட்களை வாங்குவது பெருகி வருகிறது. இங்கும் முதலில் சொன்ன எச்சரிக்கை பொருந்தும். பொருள் வாங்கினால் நிச்சயம் நம் கிரெடிட் கார்ட் மற்றும் நம்முடைய பேங்க் அக்கவுண்ட் குறித்து தகவல்களைத் தர வேண்டியதிருக்கும். இவற்றை ஒரு பொது கம்ப்யூட்டரில் தருவது பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமமாகும்.
4. டெம்பரரி பைல்களை அழிக்கவும்: இன்டர்நெட் பிரவுசிங் செய்வதற்காக இன்டர்நெட் மையம் அல்லது நண்பரின் வீட்டிற்குச் செல்கிறீர்களா? பிரவுசிங் முடித்தவுடன் ஹிஸ்டரியிலிருந்து நீங்கள் பார்த்த தளங்களின் முகவரிகளை அழித்துவிடுங்கள். அப்போதுதான் யாரும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையோ எந்த எந்த தளம் சென்று வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள் என்பதனையோ தெரிந்து கொள்ள முடியாது.
5. ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள்: பொதுவான கம்ப்யூட்டர்களில் பணி முடித்தவுடன் அதனை ரீ ஸ்டார்ட் செய்திடுவது நல்லது. டெம்பரரி பைல்களை அழிக்கலாம். அடுத்து அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் நீங்கள் அமைத்துக் கொடுத்த சில பைல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம்.
4.A. ஐட்யூன்ஸ்க்குப் பதிலாக...
அண்மையில் ஐபாட் வாங்கிய நம் வாசகர் திண்டிவனம் செல்வராஜ் தான் ஐபாட் ஒன்றினை வாங்கியதாகவும் அதற்கான ஐட்யூன்ஸ் இணைப்பு பெற்றாலும் அது தனக்கு வசதியாக இல்லை என்றும் இதற்குப் பதிலாக வேறு சாப்ட்வேரே கிடையாதா?
இதனை மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா என ஆப்பிள் நிறுவனத்தின் மீது குற்றச் சாட்டுகள் பலவற்றைக் கூறி கடிதம் எழுதி இருக்கிறார். அவர் குறைகள் என்று கூறும் பல, குறைகளே இல்லை.
ஐ ட்யூன்ஸ் தொகுப்பை மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் போது அதன் அருமை தெரியும். விண்டோஸ் இயக்கத்தில் பயன்படுத்துகையில் நம்மைச் சிரமப்படுத்துவது போல சில விஷயங்கள் இருந்தாலும் அவை அப்படி அல்ல என்பதே என் கருத்து.
விண்டோஸ் இயக்கத்தில் நாம் மேக் புரோகிராம் ஒன்றை இயக்குகையில் நிச்சயம் ஒரு சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அதுவும் குறிப்பாக விஸ்டா சிஸ்டத்துடன் ஐட்யூன்ஸ் ஒத்துப் போகவே போகாது. சிலர் இது கம்ப்யூட்டரை கிராஷ் செய்திட வைக்கிறது என்றெல்லாம் எழுதி உள்ளனர். இன்னும் ஒரு வாசகர் ஐட்யூன்ஸ் மூலம் டவுண்லோட் செய்த ஒரு பாடலை ஐபாடிற்கு மாற்றுகையில் அதிக பிரச்னை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இன்றைய வாழ்க்கையில் டிஜிட்டல் மியூசிக் என்பது இன்றியமையாததாக மாறிவிட்ட பின் அதில் நமக்கு அதிக வசதிகளையும் எளிமையையும் தரும் சாதனத்தை நாடுவது நல்லதே. எனவே குறைகளை விட்டுவிட்டு ஐட்யூன்ஸ் சாப்ட்வேருக்குப் பதிலாக வேறு புரோகிராம்களைத் தேடியபோது கீழ்க்கண்டவை கிடைத்தன. அவற்றை அனைவருடனும் பங்கு கொள்ள இங்கு தருகிறேன்.
1) Foobar 2000 : இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மெண்ட் புரோகிராம். அனைத்து விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளிலும் சிறப்பாக இயங்குகிறது. பலவகை மியூசிக் பைல் பார்மட்டுகளைக் கையாள்கிறது. நம் வசதிக்கென அமைக்கும் வகையில் பல அம்சங்களை தருகிறது. இந்த புரோகிராமினை http://www.foobar2000.org என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
2) Songbird : பயர்பாக்ஸ் பிரவுசரின் துணையாக வந்துள்ள ஓர் அருமையான மியூசிக் புரோகிராம். ஐபாட் உட்பட அனைத்து மீடியா பிளேயர்களுடனும் இது இணைந்து இயங்குகிறது. இதற்கெனவும் புதிது புதிதாய்ப் பல ஆட்–ஆன் புரோகிராம்கள் எழுதப்பட்டு கிடைக்கின்றன. இது ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் என்பதால் இயக்குவதும் நமக்கு ஏற்றவகையில் மாற்றி அமைப்பதும் எளிதாகிறது. இதனை http://www.songbird nest.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம்.
3) YamiPod : இது ஒரு வித்தியாசமான புரோகிராம். இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதனை அப்படியே உங்கள் ஐபாடில் காப்பி செய்து பயன்படுத்தலாம். பின் இந்த புரோகிராம் மூலம் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரிலும் இதனை இயக்கலாம். உங்கள் பாடல்களை எடிட் செய்திடலாம்.
4.) Winamp: யாருக்கும் சொல்லத் தேவையில்லாத புரோகிராம் இது. கம்ப்யூட்டர் மலரில் இது குறித்து பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மிகவும் பிரபலமானதாக உள்ள இந்த மீடியா பிளேயர் ஐபாடுடன் நன்றாக இணைந்து செயல்படுவதுடன் பல கூடுதல் வசதிகளையும் தருகிறது. www.winamp.com என்ற முகவரியில் இதனைப் பெறலாம்.
5. Amarok: இது லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் மட்டுமே பயன்படும். ஆனால் ஐட்யூன்ஸ் புரோகிராமிற்குச் சரியான இணையான புரோகிராம் ஆகும். ஐபாட், ஸென்பிளேயர், நோமாட் பிளேயர், யு.எஸ்.பி. பிளேயர் ஆகிய பல வகையான மீடியா பிளேயர்களுடன் இணைந்து செயல்படும். ஆல்பம் கவர், விக்கிபீடியா இன்டக்ரேஷன், பலவகையான விசுவல் எபக்ட்ஸ் என இது தரும் கூடுதல் வசதிகளைப் பட்டியலிடலாம். http://amarok.kde.org என்ற தளத்திலிருந்து இதனைப் பெறலாம்.
6. Banshee: இதுவும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே இயங்கக் கூடியது. எனவே நீங்கள் லினக்ஸ் பயன்படுத்துபவர் என்றால் இதனை மிகவும் விரும்புவீர்கள். ஏனென்றால் இது தரும் வசதிகள் அதிகம். உங்களுக்குப் பிடித்த மியூசிக் ட்ரேக் எதனையும் உங்கள் இஷ்டப்படி வளைக்கலாம். சிஸ்டத்திலிருந்து சிடிக்கும் சிடியிலிருந்து சிஸ்டத்திற்கும் பகுதி பகுதியாகப் பிரித்து காப்பி செய்து மற்றவற்றுடன் இணைத்து எப்படி வேண்டுமானாலும் செயல்பட இந்த புரோகிராம் வழி தருகிறது.
எனவே வரையறை இன்றி மியூசிக் பைல்களை நீங்கள் கையாள விரும்பினால் இது உங்களுக்கேற்ற புரோகிராம் ஆகும். எனவே நீங்கள் உங்கள் ஐட்யூன்ஸ் தொகுப்புடன் சிக்கலைச் சந்தித்தால் மேலே சொன்ன ஏதாவது ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள்
http://www.dinamalar...malar4_1711.asp
Page 1 of 1

Sign In
Register
Help


MultiQuote