இங்கு களத்திலும், தனிமடல், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் messenger மூலம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
கருத்துக்களத்தில் நான் செலவு செய்யும் நேரம் மிக அதிகம் அத்துடன் பணம். இவ்வளவு நேரம், பணம் செலவு செய்து எந்தளவுக்கு பயன் எனப் பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவு. ஒரு குறிப்பிட்ட அளவு பயனான கருத்துக்களைத் தவிர அதிகமாக தூரநோக்கற்றதும், அரட்டையானதுமான கருத்துக்கள், அவைகளை மட்டுறுத்த வேண்டிய தேவைகள் போன்ற சூழலினாலேயே களத்தினை தொடர்ந்து நடாத்துவதா, விடுவதா என்ற ஒரு மனப் போரட்டம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நேற்று "யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?" என தெரிவித்திருந்தேன். எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.
மோகன் அண்ணா , பலரின் வேண்டுகோளுக்கு இணங்க , உங்கள் முடிவை மாற்றிக் கொண்டமைக்கு மிக்க நன்றி .
நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.
இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.
இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.
எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்
இப்படிக்கு
குமாரசாமி
சரி மோகன் அண்ணா, யாழை தொடர்ந்து நடாத்துவதில் பிரச்சனையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து வையுங்கள். உங்களின் சகோதரன் போல கேட்கிறேன். ஏனெனில் இத்தளம் பல தமிழ் நாட்டு நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது மட்டுமல்லாமல் அவர்களின் பங்களிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நன்றி வேலவன் போன்ற சகோதரர்களுக்கு.
மோகன் அண்ணா 10 வருடங்கள் உங்களின் பின்னால் பல இன்ப துன்பங்களிலும் பங்காற்றிய அக்காவுக்கு நன்றிகள் பல சொல்லி விடை பெறுகிறேன்.
நான் யாழ் களத்தில் யாருடனும் சண்டை போடவிரும்மவில்லை அதனால் எனது கருத்துக்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்க்காக எழுதப்படுவது
அதனால் என்னருமை முகம் தெரியாத சகோதரர்களிடம் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்றுக்கொள்கின்றேன் நன்றி
உங்கள் ஆக்கங்களை படையுங்கள் நான் வாசகனாக
குமாரசாமியண்ணை , நுணாவிலான் , முனிவர் நீங்களும் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் படி அன்பாக வேண்டுகின்றேன் .
இவ்வளவு பழகிவிட்டு எல்லோரும் ஒரு நாளில் , எங்களை உதறிவிட்டுப் போவது வேதனையாக உள்ளது . வாருங்கள் நண்பர்களே .