Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

Featured Replies

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

http://www.worldtamilnews.com/ - Kural vadivam ingee. Kavithai Kelungal (new)-20.10.2008

உங்களைச் கொஞ்சம்

உலகம் தேடும்

முத்தமிழ் சிவப்பாகும்

போர் மேகங்கள் சூழும்

உங்களுக்கும் வலிகள் புரியும்

இயந்திரப் பறவைகள் எதிரியாகும்

ஆமிக்காரன் இயமன் ஆவான்

உயிர் வெளியேறிய

உடல்களை காகம் கொத்தும்

விழிகளிலே குருதி கசியும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்

பலமுறை தீப்பிடிக்கும்

பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?

ஒரணியில் திரண்டு

ஒரே முடிவு எடுப்பீர்களா?

உங்கள் அரசியல் விளையாட்டில்

எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!

எந்த இனத்தவனும் உங்களை

மன்னிக்கமாட்டான்

சொந்த இனத்தவனைக்

நீங்கள் காத்திட மறந்துவிட்டால்

வாயிலே நுழைவதெல்லாம்

உங்கள் வயிற்றிலே செரிக்காது

சொந்த சகோதரன்

அங்கே பட்டினியில் சாகும்போது

இந்த தாகம் இந்தச் சோகம்

இந்த இன அழிப்பு

இந்த பேர் இழப்பு

எல்லாம் தமிழனுக்கே

வாய்த்த தலைவிதியா?

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி

நீ குளிப்பாய்

பெற்ற பிள்ளையை

படுக்கையில் நீ இழப்பாய்

நித்திரையில் நிம்மதியே இருக்காது

மரநிழலில் மனம் குமுறும்

நரம்புகள் வெடிக்கும்

நா வறண்டு போகும்

பெண்களின் ஆடைகள் தூக்கி

பேய்கள் வெறி தீர்க்கும்

ரத்த ஆறு வழிந்தோடும்

நடுவிலே நாய் நக்கும்

தலையில் செல்வந்து விழும்

தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே

பதுங்கு குழிகளில் வாழ

உங்களால் முடியுமா?

அகோரத்தின் உச்சத்தை

உணர்ந்தது உண்டா?

அழுது களைத்து மீண்டும்

எழுந்து நின்றது உண்டா?

உன்னைப் புதைக்கும் இடத்தில்

உயிர் வாழப் பழகியதுண்டா?

உலகம் எங்கும் சிதறி

தாயைப் பிரிந்து வாழும்

துயரத்தை அனுபவிக்க முடியுமா?

பனிக் குளிரில் பனியோடு

பனியாய்க் கரைந்து

உங்களால் உறைய முடியுமா?

சவப் பெட்டிக்குள் உறங்கி

நாடு விட்டு நாடு போய்

நரகத்தில் தொலையமுடியுமா?

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு

பகலில் வயிறு பசியாறும்

பாதி வயிற்றோடு நெருப்பு

இருளில் குளிர் காயும்

சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்

சிறைச்சாலைக்கும்

ஒரே ஒரு பொருள்தான்

எங்கள் யாழ்ப்பாணம்!

பாலைவனத்து ஒட்டகமாய்

பாம்புகளுக்கு நடுவில்

எங்கள் வாழ்க்கை ஓடும்

ஊரின் பெயரோ மட்டக்களப்பு!

தாய்மண் தேகத்தை சுவைத்து

ஆட்டுக்கறியாக பங்கு போடும்

நவீன மிருகஙக்ளை

யார் வேட்டையாடுவது?

ஆண்ட பரம்பரையின்

அடையாளத்தை அழிக்கமுடியுமா?

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்

ஆட்சி இழந்தாலும்

அனைத்துக் கட்சிகள்

கூட்டம் நடந்தாலும்

தமிழகம் முழுவதும்

கடைகள் மூடப்பட்டாலும்

திரையுலகமும் திரண்டு

பேரணியில் சென்றாலும்

இலக்கியத் தோப்பினில்

எரிமலை எழுந்தாலும்

தனித் தனியாக நீங்கள்

உண்ணாவிரதம் இருந்தாலும்

எப்போதும் உங்களை

நெஞ்சிலே சுமக்கின்றோம்

தணியாத தாகமாய்

விடுதலை கேட்கிறோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்

எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!

நீட்டியுள்ள நேசக்கரத்தை

உறுதியாய்ப் பற்றுகின்றோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே

Edited by Tamizhvaanam

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்துவின் 'காதலித்துப் பார்" என்ற கவிதையின் யதியில் 'ஈழத்தமிழனாய் வாழ்ந்துபார்" என்ற உங்கள் படைப்பு நெளிவு சுழிவு இன்றி பரவி உள்ளங்களை வியாபிக்கிறது. வாசிக்கத் தூண்டுகிறது. மெல்ல இழுத்து இதமாய் வருடி அழச் சொல்லிக் கொடுக்கிறது. தொடருங்கள். பாராட்டுகளும் நன்றியும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

Edited by valvaizagara

தமிழகத் தமிழரின் இதயத்தை தொடும் கவிதை. வாசிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை வாழ்த்துக்கள்

தமிழ் நாட்டு சஞ்சிகைகளிலும் முடிந்தால் இணைத்திவிடுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamizhvaanam

ஈழத் தமிழரின் வலிகளை வரிகளில் சொல்லி கண்களில் நீர் வழிய வைத்து விட்டீர்கள். தாய் நாட்டில் இவ்வளவு நடந்து கொண்டிருந்தாலும் ஒன்றுமே நடக்காதது போல இருக்கும் ஒவ்வொரு தமிழனின் கண்களையும் திறக்கும் படியான வரிகளைத் தந்ததற்கு வாழ்த்துக்கள்.

இளங்கவி

  • தொடங்கியவர்

அன்பு நண்பர்கள், வல்லைசகாரா, ஈசன், முனிவர் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகளும், அவர் எழுதுகின்ற வடிவங்களும் எனக்குப் பிடிக்கும். ஆகவேதான் அவருடைய காதலித்துப் பார் என்னும் கவிதை வடித்தினைப் பாவித்தேன். எங்களுடைய வலிகளை எந்தெந்த வடிவங்களில் எல்லாம் மக்களுக்குச் சொல்ல முடியுமோ அதையெல்லாம் முயற்சிக்கின்றேன்.

எங்கள் தாயகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற பேரவலத்தின் உச்சத்தை எந்த வடிவங்களில் எல்லாம் இந்த உலகிற்குச் சொல்ல முடியுமோ, அந்த வடிவங்களில் எல்லாம் பதிவு செய்து இந்த உலகை உலுக்க வேண்டும். தமிழினத்திற்கு விரைவான விடுதலை கிடைக்க, எங்கள் தொப்புள் கொடி உறவாக தமிழக உறவுகள் புறப்பட்டுவிட்டார்கள்.

அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியது புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு ஈழத் தமிழனின் கடமையாகும். என் உணர்வின் பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். தமிழ்நாட்டில் உள்ள இணையத்தளங்கள் பலவற்றில் இந்தக் கவிதை வெளிவந்துள்ளது. இது எனக்கும் மகிழ்வைத் தருகின்றது. தமிழக முதல்வர் கலைஞர் ஐயா அவர்களுக்கும் இக் கவிதையை அனுப்பி வைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக அருமையான வரிகள்.

இந்தக் கவிதையை குமுதத்துக்கோ, விகடனுக்கோ அனுப்பிவையுங்கள்.

எங்கள் உணர்வின் உறுதியை வலிகளின் நேரத்திலும் மறையாத தமிழ் வைராக்கியத்தை அழகாகக் கோர்வையாக்கி இருக்கின்றீர்கள்..

நல்ல கவிதை..

  • தொடங்கியவர்

அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம். உங்களுடைய கருத்துகள், பாராட்டுக்கள் அனைத்திற்கும் எனது நன்றிகள்.

இந்தக் கவிதை தமிழகத்தில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது. நான் அறிந்த வரையில் கிட்டத்தட்ட ஐந்து இணையத் தளங்கள் இக்கவிதையினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இயங்குகின்ற தமிழ்குரல் எனும் இணைய வானொலி என் கவிதையின் குரல் வடிவம் ஆக்கியுள்ளது. நீங்களும் கேட்டுப் பாருங்கள். இக் கவிதையினை முத்தமிழ் கூகிள் குழுமத்தில் இணைத்த சோழியான் அவர்கட்கு என் இதயபூர்வமான நன்றிகள். ஈழத் தமிழனின் வலிகள் இனி இந்த உலகினை அதிர வைக்கட்டும். தொடர்ந்து எழுதுவோம். கவிதையின் ஒலிவடித்தைக் கேட்பதற்கு தொடக்கத்தில் உள்ள கவிதையருகே செல்லுங்கள். கேட்டுக் கொண்டே மீண்டும் ஒருமுறை கவிதையைப் படிக்கலாம். இந்தக் கவிதையின் ஒலிவடிக் குரலுக்குச் சொந்தகாரர் அப்துல் ஐபார் அவர்கள். அவருக்கும் எம் ஈழத் தமிழர்கள் சார்பில் ஆயிரம் நன்றிகள்

Edited by Tamizhvaanam

வலைப்பூ உலகத்திற்கும் எடுத்து சென்றுள்ளோம்.....இது போல் பல ஆக்கங்கள் வர வேண்டும்...

தங்கள் எழுது்துக்களும் எண்ணங்களும் மேலும் பலம் சேர்க்க வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலியை எழுத உங்களால் முடிகிறது.

வலிகளை எழுத உங்களால் முடியவில்லை.

வாழ்த்துக்கள்.

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்

ஆட்சி இழந்தாலும்

அனைத்துக் கட்சிகள்

கூட்டம் நடந்தாலும்

தமிழகம் முழுவதும்

கடைகள் மூடப்பட்டாலும்

திரையுலகமும் திரண்டு

பேரணியில் சென்றாலும்

இலக்கியத் தோப்பினில்

எரிமலை எழுந்தாலும்

தனித் தனியாக நீங்கள்

உண்ணாவிரதம் இருந்தாலும்

எப்போதும் உங்களை

நெஞ்சிலே சுமக்கின்றோம்

தணியாத தாகமாய்

விடுதலை கேட்கிறோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்

எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!

நீட்டியுள்ள நேசக்கரத்தை

உறுதியாய்ப் பற்றுகின்றோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே

உணர்ச்சிபூர்வமான கவிதை.

உரியவர்கள் உணர்வார்கள் என நம்புவோம்.

  • தொடங்கியவர்

வாசகி உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்கின்றேன்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்

மண் மணம் வீசும் மல்லிகை வாசத்திற்கு எனது நன்றிகள்.

தமிழ்சினிமா இணையத்தளமும் எனது கவிதையை தங்கள் தளத்தில் இணைத்துள்ளது.

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...ber/201008d.asp

Edited by Tamizhvaanam

வலியை எழுத உங்களால் முடிகிறது.

வலிகளை எழுத உங்களால் முடியவில்லை.

வாழ்த்துக்கள்.

'வலியை எழுத உங்களால் முடிகிறது.

வழிகளை எழுத உங்களால் முடியவில்லை.' என்கிறாரா?

நோர்வே தமிழனிடம் ஒரு கேள்வி! :)

'தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!'

இந்த பகுதியில் உள்ள முதலாவதுது வரி சரியா? அப்படித்தான் எல்லா தளங்களிலும் உள்ளது. ஆனால் எனக்குத்தான் தென் பொருள் புலப்படவில்லை. ஆகவே, கீழ்க் கண்டவாறு சிறு திருத்தம் செய்தேன்.. பொருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் எது சரி என்பதை எழுதியவர்தான் சொல்லணும்.

'தட்டிவீட்டு வேலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!'

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'வலியை எழுத உங்களால் முடிகிறது.

வழிகளை எழுத உங்களால் முடியவில்லை.' என்கிறாரா?

இப்பிடி உசுபேத்தி உசுப்பேத்தியே சோலியை முடிச்சிடுவீங்க போல. :)

  • தொடங்கியவர்

சோழியான் அண்ணா, உங்களுக்கு ஒரு குழப்பமும் வேண்டாம். நான் எழுதியிருப்பது சரியானதே.

நோர்வே தமிழனிடம் ஒரு கேள்வி! :)

'தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!'

தலையில் செல் வந்து விழும்

தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும். :blink:

இந்த பகுதியில் உள்ள முதலாவது வரி சரி அப்படித்தான் எல்லா தளங்களிலும் உள்ளது.

Edited by Tamizhvaanam

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

PaaraddukkaL thamz, unnudaiya kavithai Aananthavikadanil pirasarakiyuLathu

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்வானம்! சில நாட்களுக்கு முன் நான் ஒரு நன்பர் வீட்டில் இருந்தபொழுது ஐ.பி.சியில் அப்துல்ஜபாரின் உரை போய்க்கொண்டிருந்தது. இறுதியில் அவர் இப் பாடலைக் கூறிமுடித்தார். நன்றாயிருக்கிறதேயென நினைத்தேன். இங்குதான் அதன் நதிமூலம் அறிந்தேன். தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்......தமிழ்வானம் நன்றிகள்,.........

வலிகள் உன்னையும் வல்லவனாக்கும்

வாழ்க்கையும் உன்னைத் தேடி நோக்கும்

உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கும்

உதவாதவன் என்ற சொல்லைப் போக்கு.

வீழ்வது மட்டும் வாழ்க்கையில்லை

மீள்வதும் எமக்கு உரிமைதானே.

சாவதைக் கண்டு பதைபதைத்தால்

வாழ்வதற்கேது உரிமை நமக்கு

சோர்வது எல்லோரின் உணர்வுதான்

சேர்த்;திடாதே உந்தன் உணர்வில்தான்.

காலங்கள் மாற்றத்தின் ஒழுக்கு

கலங்காதே வாழ்க்கை நம்மிடமே,

வலியைப் பொறு

வாழப் பழகு

வாழ்ந்துபார் நீயும்

ஈழத்மிழனாய்.

  • தொடங்கியவர்

அன்புள்ள, ஜெயபாலன் அண்ணா, சுவி, புத்தன் மற்றும் இறைவனுக்கும் எனது நன்றிகள். நான் என்ன காரணத்திற்காக இக் கவிதையினை எழுதினேனோ அதற்கான பலன் தமிழ்நாடு எங்கும் கிடைத்திருப்பது மகிழ்வாக இருக்கின்றது.

நான் தொடர்ச்சியாக எம் மக்களினுடைய வாழ்க்கை தொடர்பான வலிகளின் தேடல்களை நோக்கிப் பயனித்துக் கொண்டிருப்பதால் உடனடியாக இங்கே உங்களுடைய பதிவுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

இறைவன்:

வலிகள் தாங்கும் வலிமை வளர்ப்போம்

வெடிகள் கேட்கும் பூமியை வெல்வோம்

Edited by Tamizhvaanam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு நல்ல சேதி..

தோழரில் இந்தக்கவிதை இவ்வார ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. கேள்வியும் நானே பதிலும் நானே என்ற பகுதியில் ஈழம்? என்ற கேள்விக்கு பதிலாக இந்தக்கவிதை இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன் தோழரே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.