வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?.
#1
Posted 07 August 2008 - 05:14 PM
திங்கள், 04 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்த வராங்களில் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. இதன்மூலம் மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் கிராமம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் முழுமையாக படைகளால் விழுங்கப்பட்டு விட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெப்.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்பிட்டிருக்கின்றார். இதனை அடுத்து முல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியான மாந்தை கிழக்கு பிரதேசச் செயலகப்பிரிவுக்குட்பட்ட பனங்காமம், நட்டாங்கண்டல், ஒட்டங்குளம், கரும்புள்ளியான், பாண்டியன்குளம், செல்வபுரம், கிடாய்ப்பிடித்தகுளம் (வவுனிக்குளத்தின் வால்கட்டுப்பகுதி), சிவபுரம், பாலிநகர், பட்டுப்பூச்சி, கொல்லவிளாங்குளத்தின் சில பகுதிகள், ஆகியன படையினர் வசம் சென்றிருக்கி;றது. உண்மையி;ல் இப்பிரதேசங்களின் வீழ்ச்சி யாருடைய யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்? என்பதை சரத்பென்சேகா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனக்கூறலாம்.
கடந்த 24ஆம் திகதி இராணுவத்தின் 57வது டிவிசன் கட்டளைத்தளபதி மேஜர். ஜென்ரல் ஜெகத் டயஸ் தலைமையில் டிவிசன் 57-1 வது படையணி வவுனிக்குளத்தின் அணைக்கட்டுப் பகுதியினை இரகசிய நகர்வின் மூலம் கைப்பற்றியதை அடுத்து அப்பிரதேசத்தின் பிரதான நகரான மல்லாவியை நெருங்கிவிட்டோம் என அரசதரப்பு மார்பு தட்ட. சிங்கள ஊடகங்கள் இதனை முக்கியத்துவப் படுத்தி தலைப்புச் செய்தியாக்கின.
உண்மையில் இந்தப்பிரதேசத்தின் இராணுவ நடவடிக்கை என்பது இராணுவ, அரசியல், பொருளாதார முப்பரிமான இலக்குக் கொண்டதாக அமைகின்றது. கிட்டத்தட்ட கடந்த இருவருடங்களாக வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் வன்னியின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான கட்டுக்கரைக் குளமும, அதன் வயல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து தற்போது. வன்னியின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கமான வவுனிக்குளப் பகுதியும் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டதனால் வன்னி மக்களின் வாழ்வாதாரமான பரந்த நெல்வயல் நிலங்கள் முடக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வன்னியின் குளத்தர வரிசைகளில் பெரிய குளங்களான முறையே 1வது இரணைமடு, 4வது முத்தையன்கட்டு, 5வது தண்ணிமுறிப்பு, என்பனவே எஞ்சியிருக்கின்றன. எனவே ஐந்தில் இரண்டை விழுங்கியதன் மூலம் வன்னி மக்களை மண்டியிடச் செய்ய அரசு எத்தணிக்கின்றது. அத்தோடு மன்னார் மாவட்டத்தின் முழுப்பகுதியையும் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலம் புலிகளை மன்னார்ப் பிரதேசத்திலிருந்து வெகு தூரத்திற்குப் பின்தள்ளி மன்னார்க் கடற்ப்பரப்பின் எண்ணை வளத்தினை பிராந்திய ஏகாதிபத்தியங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து தமிழீழத்தின் மிகப்பெரிய தேசிய வளமான மன்னார் எண்ணை வளத்தினை விற்று பெறுகின்ற பணத்தைக் கொண்டு தமிழ்த் தேசியத்தை அழித்து தமிழினத்தை அடிமை கொள்ளப் பார்க்கின்றது.
அடுத்து வவுனிக்குளப் பிரதேசத்தின் மீதான இராணுவப் பிரசன்னம் என்பது புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரு மாவட்;டங்களில் இராணுவம் மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லை மாவட்டத்தின் இரண்டு பிரதேசச் செயலகங்களான துணுக்காய், மாந்தை கிழக்கு (நட்டாங்கண்டல்), ஆகியவற்றை கைப்பற்றுவதன் மூலம் முல்லை மாவட்டத்தின் ஏறக்குறைய அரைவாசிப் பகுதியை (ஏ9 வீதிக்கு மேற்குப் பக்கம்) அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவந்து விட்டதாகவும் அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின் நுழை வாயிலில் நிற்பதாகவும் காட்டி அரசியல் இலாபம் தேட அரசு முற்படுகின்றது. இதற்கிடையில் பனங்காமம் வன்னி மன்னர்களின் பழைய தலைநகரம் இதனைக் கைப்பற்றியதை சிங்கள ஊடகங்கள் மறந்து விட்டது ஏனோ தெரியவில்லை.
இனி இப்பிரதேசத்தினுடைய புவியியல், இராணுவச் சாதகத்தன்மை பற்றி நோக்குவோமாயின் தற்போது இராணுவம் நிலைகொண்டுள்ள பிரதேசமானது. பறங்கியாறு, பாலியாறு, உப்பனாறு ஆகிய மூன்று ஆற்றுப் பள்ளத்தாக்குச் சமவெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இராணுவத்தின் மன்னார்ப் படைநடவடிக்கை பறங்கியாற்றின் தெற்குப் பிரதேசத்தினை கைப்பற்றுவதை நோக்காகக் கொண்டு அவ்வாற்றுப் பிரதேசத்தின் காடுகளினூடாக நகர்ந்ததனால் பெருமளவு பிரதேசம் சண்டைகளின்றியே இராணுவ வசமானது. ஆனால் அடுத்த கட்டமாக மல்லாவி நோக்கிய நகர்வென்பது பாலியாற்றின் இருமருங்கிலுமுள்ள பரந்து விரிந்த வயல் நிலங்களினூடாகவே மேற்கொள்ள வேண்டிய நிலையில் அதாவது நட்டாங்கண்டலினூடாக பாண்டியன் குளத்தை அடைந்து அதிலிருந்து சிவபுரத்தை பாலியாறும் உப்பனாறும் சந்திக்கும் பற்றைக்காட்டுப் பிரதேசத்தினூடாக இரகசியமாக நகர்ந்து சிவபுரம் சிவன் கோயிலுக்கு அண்மையில் உள்ள வவுனிக்குளத்தின் வான்கட்டுப்;பிரதேசத்தில் (மேலதிக நீர் வெளியேறும் பகுதி) நிலைகொண்டிருந்த புலிகளின் சிறிய அணியின் மீது திடீர்த் தாக்குதலை மேற்கொண்டு அப்பிரதேசத்ததை கைப்பற்றியதன் மூலம் வவுனிக்குளத்தின் அணைக்கட்டுப்பகுதி முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது. மற்றொரு அணி பாண்டியன் குளத்திலிருந்து பாலியாற்றைத் கடந்து பாலிநகரின் வயல் வெளிப்பகுதிக்குப் பின்னுள்ள பற்றைக்காடுகளால் நகர்ந்து பாலிநகரைக் கைப்பற்றியிருக்கின்றது. இதன்போது புலிகளின் சில உடலங்களையும் அவர்கள் கைப்பற்றியிருக்கின்றார்கள்.
இச்சண்டையை அடுத்து விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்பரண் வரிசையை பின்னோக்கி நகர்த்தியிருக்கிறார்கள். இனிவரும் சண்டைகள் பெரும்பாலும் பாலியாற்றில் இருமருங்கிலும் நிகழப் போகின்றது. பாலியாறு என்பது. ஓமந்தைப் பிரதேசத்திலிருந்து தொடங்கி வெள்ளாங்குளம் கடற்பரப்பில் (மூன்றாம் பிட்டிக்கும் வெள்ளாங்குளத்திற்கும் இடையில் ) கடலுடன் கலக்கின்றது. இதற்குக் குறுக்கே தமிழ் மன்னனான எல்லாள மன்னனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் சிறிய அணையைக் கட்டி ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. அழிவடைந்த நிலையில் இருந்த அந்நீர்த்தேக்கத்தினை 1950 களில் விரிவு படுத்தி வவுனிக்குளம் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. இதனால் பாலியாற்றின் நீர் முழுவதும் வவுனிக்குளத்தினால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிற
ு. எனவே வவுனிக்குளக்கட்டின் மேற்குப் புறப் பாலியாற்றில் நீர் பெரிதாக இருப்பதில்லை. இதனைக் கருத்திற் கொண்டு விடுதலைப்புலிகள் வெள்ளாங்குளத்திலிருந்து வவுனிக்குளம் வரை பாலியாற்றுக்குச் சமாந்தரமாக தமது முன்னரங்க நிலைகளை நிறுவியிருக்கின்றனர்.
இம்முன்னரங்க நிலைகளின் முன்புறம் முழுவதும் பெரும் பாலும் வயல் வெளிகளையும் சதுப்பு நிலங்களையும் கொண்டிருப்பதனால் இலகுவாகக் கண்காணிக்க முடியும். இதைக்கருத்தில் கொண்ட படையினர் பூநகரி நோக்கிய படை நடவடிக்கை எனக் கூறிக் கொண்டு மேன் மேலும் வன்னியின் கிழக்குப் புறமாக காடுகளுக்கூடாக நகர முற்படுவதனால் வன்னியில் மேலும் அகலக்கால் விரிக்கின்றனர். இதன் வெளிப்பாடாகவே வவுனிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இறுக்கமான முன்னரங்க நிலைகளைத் தண்டி. பற்றைக்காடுகளினூடாக பாலியாற்றைக் கடந்து வவுனிக்குளத்தைக் கைப்பற்றியிருக்கின்றன.
அடுத்த நகர்வு சில சமயங்களில் மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்து மாங்குளம் பகுதியில் மாங்குளம் துணுக்காய் வீதியை ஊடறுப்பதாகக் கூட அமையலாம் அத்துடன் வவுனியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை என்பது பாலமோட்டையுடன் ஸ்தம்பித்து நிற்கிறது. பாலமோட்டையில் புலிகள் பலமாக இருப்பதனால் அவர்களுக்கான விநியோகப் பாதையாகிய மாங்குளம் துணுக்காய் வீதியில் வன்னிவிளாங்குளத்தில் ஆரம்பித்து பாலப்பாணி, மூன்று முறிப்பூடாக பாலமோட்டை செல்லும் வீதியை கைப்பற்றுவதாகக் கூட அமையலாம். எனினும் வவுனிக்குளத்தின் நீர்பிடிப்புப் பகுதியின் வடபுறம் நகர்வதென்பது இராணுவத்தைப் பெறுத்தவரை சிக்கலுக்குரியதாகவே இருக்கும்.
துணுக்காய், மல்லாவி, வவுனிக்குளம் ஆகிய பகுதிகளை நோக்கிய நகர்வில, துணுக்காய் நோக்கிய நகர்வானது துணுக்காய் - பனங்காமம் வீதியில் பாலியாற்றை குறுக்கறுக்கும் கறுத்தப் பாலத்தின் தென்புறத்தில் உள்ள ஒட்டங்குளத்தில் இராணுவம் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே பாண்டியன் குளத்திலிருந்து மல்லாவிக்கான நகர்வு மல்லாவி - பாண்டியன் குளம் விதியில் பாலியாற்றுக்குத் தெற்கே உள்ள கரும்புள்ளியானிலும், வவுனிக்குளத்திலிருந்து மல்லாவிக்கான நகர்வினை சிவபுரம், பாலிநகருடான மல்லாவி வீதியில் பட்டுப்பூச்சிச் சந்திக்கு அண்மையில் உள்ள கறுப்பிகுளம் பகுதியில் வுவுனிக்குள முதலாம் கால்வாயை தடுப்பரணாகக் கொண்டு புலிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இருப்பினும் இம்முனைகளிலிருந்து மல்லாவி, துணுக்காய் நகரப்பகுதி 2 தொடக்கம் 3 மைல்களுக்கு இடைப்பட்ட தூரத்திலேயே அமைந்துள்ளது. எனினும் இந்த இந்த மூன்று முனைகளின் முன்னரங்கள் வயல் வெளிப்பிரதேசங்களாக இருப்பதனால் சண்டைகள் நீண்டு செல்வதற்கான வாய்ப்புக்களே உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு சில வேளைகளில் மல்லாவி, துணுக்காய்ப் பகுதியை முற்றுகையிடும் தந்திரோபாயத்தினை இராணுவம் மேற்கொள்ளலாம். அது எவ்வாறாயின் மங்குளம் - துணுக்காய் வீதி மல்லாவிக்குக் கிழக்கே சென்று அனிஞ்சியன் குளத்தைக் கடந்து இரண்டு மைல்களுக்கப்பால் உள்ள ஒட்டறுத்த குளத்தில் வடகிழக்கு நோக்கித் திரும்பி வடகாட்டினூடாக வன்னிவிளாங்குளத்துடன் இணைத்து மாங்குளம் வரை செல்கின்றது. ஒட்டறுத்தகுளத்தையும் அதனையடுத்த வடகாட்டுப் பகுதியையும் ஊடறுத்துக் கைப்பற்றி மல்லாவியின் பின்புறமாக வல்வளைப்புச் செய்வதன் மூலம் மல்லாவிப் பகுதியில் இருந்து புலிகளைப் பின்வாங்கச் செய்ய எத்தணிக்கலாம். அல்லது வவுனிக்குளத்திலிருந்து கொல்லவிளாங்குளம் ஊடாக ஆறாம்கட்டை, வன்னிவிளாங்குளம் வீதியினூடாக நகர்ந்து வன்னிவிளாங்குளப் பகுதியில் மாங்குளம் துணுக்காய் விதியை குறுக்கறுப்பதன் மூலம் மல்லாவிக்கான வழங்கல் பாதையைத் தடைசெய்வதோடு மாங்குளம் நோக்கிய நகர்வினை மேற்கொண்டு புலிகளின் தாக்குதல் வியூகங்களை சிக்கலுக்குரியதாக்கி குழப்ப நிலையை ஏற்படுத்தி மேன்மேலும் நிலங்களை ஆக்கிரமிக்க முனையலாம்.
மேற்குறிப்பிட்ட மிகக் கடினமான படைநடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டால் பாலமோட்டை மூன்றுமுறிப்பு வீதி செயலிழந்து விடும். பாலமோட்டைக் களமுனைக்கான விநியோகம் தடைப்பட்டால் பாலமோட்டையிலிருந்து புலிகளைப் பின்வாங்கச் செய்து ஏ9 வீதியின் மேற்குப் புறமான மேலும் ஆயிரம் சதுரமைல் பரப்பை கைப்பற்றுவதோடு ஏககாலத்தில் மணலாற்றிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கியும், வவுனிக்குளத்திலிருந்து மாங்குளம் ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கியும் நகர்வதன் மூலம் வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு பிரதேசச் செயலகங்களுக்கட்பட்ட பிரதேசங்களை மக்களுடன் வல்வளைப்புச் செய்ய இராணுவம் முயல்கின்றது. படிப்படியாக வன்னிமக்களை இராணுவ வலயத்துள் உள்வாங்கி விடுதலைப் புலிகளைத் தனிமைப் படுத்தி அழித்தொழிக்கும் முதற்கட்டமாக இதனைக் கருதலாம். எனவே இவ்வாறான இராணுவ வியூகங்களை எவ்வாறு முறியடிப்பதென்பதை புலிகள் தலமை நன்கே உணர்ந்திருக்கும்.
பொதுவாக ஒர் அரசு அமைய வேண்டுமானால் அதற்கு முக்கிமாக மூன்று அம்சங்கள் இன்றியமையாதது. அவையாவன நிலம், மக்கள, இறமை, இதில் ஒன்று இல்லாவிடின் அரசு அமைய முடியாது. ஆகவே தமிழீழத் தனியரசென்பது அமைய வேண்டுமானால் தனக்குரிய வரையறுக்கப்பட்ட நிலம், குறித்த மக்கள் தொகை, அம்மக்களை ஒழுங்காக வழிப்படுத்துகின்ற கட்டளையிடுகின்ற இறமை, இருக்க வேண்டும். இம்மூன்றும் வடக்கில் இருந்தும் சர்வதேச அங்கிகாரம் இல்லாமலே தமிழீழம் என்கின்ற அரசு இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகவே தழிழீழத் தனியரசின் தோற்றத்தை தடுப்பதற்காகவே சிங்கள தேசம் நிலத்தையும், மக்களையும், படிப்படியாக விழுங்குவதன் மூலம் தழிழீழ தேசத்தின் இறமையை அழிக்க முற்படுகின்றது. இதனை நன்குணர்ந்தே விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்கின்ற பின்வாங்கலோடு மக்களும் பின்னகர்கின்றனர். மக்கள் புலிகள் பிரதேசத்தில் இருக்கும் வரை இலங்கை இராணுவத்தால் மட்டுமல்ல உலகின் எந்த இராணுவ சக்தியாலும் புலிகளை வெல்ல முடியாது.
அடுத்து வடபோர்முனையான முகமாலை, நாகர்கோவில் முன்னரங்கப் பகுதி புலிகளின் இறுக்கமான கிடுக்குப் பிடிக்குள் சிக்குண்டிருப்பதனால் அப்பகுதியில் இராணுவத்தின் எந்தவொரு நகர்வும் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. மற்றும் மணலாற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையானது முல்லைத்தீவைக் குறிவைத்ததாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டாலும் அது புலிகளைத் திசை திருப்பும் நடவடிக்கையாகவே கருதவேண்டும். தமிழீழத்தின் இதயபூமி எனக் குறிப்பிடப்படும் மணலாற்றுப் பகுதியின் பிடியை ஒரு போதும் புலிகள் இழக்க விரும்ப மாட்டார்கள் அங்கு இராணுவ முன்னேற்றம் என்பது உண்மையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் ஏதும் இல்லை. இராணுவம் குறிப்பிடும், வண்போ தளத்தை அண்மித்த முன்னகம், மைக்கல், சுகந்தன், கமல் ஆகிய புலிகளின் முகாம்களை இராணுவம் கைப்பற்றியதாக குறிப்பிட்டாலும் உண்மையில் அவை 1989.இன் பிற்பகுதிக்குப் பின்னர் கைவிடப்பட்ட முகாம்களே. மாவீரர் நாட்களில் மாத்திரம் அங்கு விதைக்கப்பட்டிருக்கின்ற சில மாவீரர்களின் நினைவாலயங்களுக்க அஞ்சலி செலுத்துவதற்காகவே புலிகள் செல்லதுண்டு. இத்தகைய முகாம்களை கைப்பற்றிவிட்டு மார்பு தட்டிக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
மன்னார்ப படைநடவடிக்கை என்பது முற்றுப் பெறும் நிலையில் வெள்ளாங்குளம் பகுதியில் பாலியாற்றைக் கடந்து இராணுவம் முன்னகருமேயானால் அது கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லையைச் சென்றடைந்து விடும். கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியான பூநகரிப் பிரதேசத்தின் தென் எல்லைகளான முழங்காவில், கரியாலை நாகபடுவான், நாச்சிக்குடா, தேவன்பிட்டி ஆகிய பிரதேசங்கள் மீது செறிவான ஆட்லறித் தாக்குதல்களையும் கடலிலிருந்து டேறாப்பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொள்வதனால் அடுத்த இலக்கு முழங்காவில் என ஊகிக்கலாம். எனினும் முழங்காவிலுக்கான நகர்வு என்பது ஏ32 வீதியை மையப்படுத்தியே மேற்கொள்ள வேண்டும். அல்லது வெள்ளாங்குளம் - துணுக்காய் வீதியில். கல்விளானுக்கும் வெள்ளாங்குளத்திற்கும் இடைப்பட்ட பெருங்காடுகளினூடேயே இரகசியமாக நகர்ந்து வெள்ளாங்குளத்தின் வட புறத்தில் நான்கு மைல் தொலைவில் உள்ள முழங்காவில் ஏரிப்பகுதியைச் சென்றடைய வேண்டும். இந்நகர்வு என்பது இதுவரை காலமும் நிகழ்ந்த இரகசிய நகர்வுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் வெள்ளாங்குளத்திற்குத் தெற்கே பாலியாற்றுக்குச் சமாந்தரமாக பாலியாற்றுச் சமவெளியை முன்னரங்கப் பிரதேசமாகக் கொண்டு புலிகள் அமைத்திருக்கின்ற பாதுகாப்பு வியூகம் இலகுவில் உடைத்தெறியக் கூடியதொன்றல்ல மேலும் கடற்கரைச் சதுப்பு நிலங்களிலிருந்து விலகி கிழக்குப் புறமான காட்டுப் பகுதியினூடாக நகர்வதற்கு ஏற்கனவே படைகள் முற்பட்டு அடிவாங்கியது நினைவிருக்கலாம். இப்பகுதிகளில் (கல்விளான், தெகிழமாவி;ல், சிவநகர்) புலிகள் பலமாக நிலை கொண்டிருப்பதனால் பலமான காட்டுச்சண்டை மூழும் என்பது திண்ணம்.
எது எப்படியிருப்பினும் குடாநாட்டுக்கான தரைவழிப்பாதை (ஏ32) திறப்பு என்பது முடிவுறும் கட்டத்தை அடைந்து விட்டது என சொல்லுவது சாலப் பொருத்தமானது. இதனையே சரத்பொன்சேகா “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” எனச் சொல்லியிருக்கின்றார் போலும். இவ்வளவு காலமும் எவ்;விதமான வலிந்த தாக்குதலை மேற்கொள்ளாமல் தந்திரோபாயப் பின்வாங்கல்களைச் செய்துவந்த தேசியத்தலமை. பின்வாங்கல்களின் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாகவே தெரிகிறது. மேலும் பின்வாங்கல்களைச் செய்வதேயானால் புலிகளின் மேற்குக் கடற்பகுதியின் வழங்கல் நடவடிக்கையை இழப்பதோடு மேற்குக் கடலில் கடற்புலிகளின் ஆதிக்கம் முற்று முழுதாக இழக்க வேண்டிய நிலையேற்படும் ஏனெனில் நாச்சிக்குடா, வலைப்பாடு ஆகிய இரண்டு முக்கிய கடற்புலித் தளங்களை புலிகள் இழக்க நேரிடும். ஏற்கனவே மேற்குக் கடற்பகுதியில் விடத்தல்தீவு, இலுப்பக்கடவை ஆகியவற்றை விட்டு பின்னகர முடிவெடுத்த புலிகள் எஞ்சிய சிறந்த தளங்களை இழப்பார்களானால் இவற்றின் இழப்பு விடுதலைப் போராட்டத்தினை மேலும் ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்லும். இதனை எந்தச் சந்தர்ப்பத்திலும் புலிகள் அனுமதிக்க மாட்டார்கள்.
கடந்த கால இராணுவ நடவடிக்கை மூலம் ஏ32 வீதியில் 23 மைல் தூரம் அதாவது மன்னாரிலிருந்து இலுப்பக்கடவைக்குச் சற்று வடக்கு வரையான பகுதியையே கைப்பற்ற முடிந்திருக்கின்றது. இந்த இடத்திலிருந்து பூநகரி வாடியடியை (பூநகரியில் உள்ள ஒல்லாந்தர் கோட்டை வரை) அடைவதற்கு இரானுவம் தற்போது நிற்கும் முன்னரங்கப் பகுதியிலிருந்து 31 மைல் தூரம் முன்னேற வேண்டும். மேலும் ஆறு மைல் தூரம் முன்னகர்ந்தால் தான் சங்குப்பிட்டி கடற்கரையை அடைய முடியும் (31+6=37) சங்குப்பிட்டி தான் ஏ32 வீதியின் அந்தம். எனவே தற்போது நகர்ந்த 23 மைல் தூரத்தில் இரு இடங்களில் மாத்திரமே புலிகள் வழிமறிப்புச் சமரைச் செய்திருந்தனர் ஆனால் இனிக் கடக்கப் வேண்டிய 37 மைல்களும் அவ்வாறானதாக இருக்கப் போவதில்லை.
மேலும் பூநகரி நோக்கிய நகர்வு என்பது கடற்கரையை அண்மித்த நகர்வாக அமையாமல் கடற்கரை சதுப்பு நிலங்களிலிருந்து விலகி சில மைல்கள் கிழக்குப் புறமாக வெள்ளாங்குளத்திலிருந்து கல்விளான் வரையான ஏறக்குறைய பத்து மைல் அகலம் கொண்டதும் ஏ32 வீதிக்குச் சமாந்தரமாக பூநகரி வரை பரந்து கிடக்கும் காட்டுப் பிரதேசங்களினூடாக நகர்ந்து இடைக்கிடை சடுதியாக மேற்குப் புறமாக எல் வடிவில் நகர்வதன் மூலம் பெட்டி வடிவில் ஏ32 வீதியை கைப்பற்றும் தந்திரோபாயத்தினையே இராணுவம் மேற்கொள்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு இராணுவத்தின் காட்டுப்புற இரகசிய நகர்வினை முறியடிக்கும் வகையில் கல்விளான், தெகிழமாவில், வெள்ளாங்குளம் ஆகியவற்றை உள்ளடக்கிய அடர் காட்டுப் பகுதியில் தமது படையணிகளை வலுவாக நிலை நிறுத்தியுள்ளனர்.மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லையை அண்மிக்காத வகையில் கடுமையன பாதுகாப்பு முன்னேற்பாடுகளைப் புலிகள் செய்திருப்பதாகத் தெரிகிறது. இதனாலேயே கடந்த வாரம் கல்விளானில்; பாலியாற்றை கடந்து முன்னேற முயன்று பலத்த அடிவாங்கியது தெரிந்ததே
விடுதலைப் புலிகளின் தந்திரோபாயப் பின்வாங்கல்கல்களையும் சார்க் மநாட்டுக்கான சமரோய்வு அறிவித்தலையும் புலிகளின் பலவீனமாகக் கூறும் அரசின் கருத்தை எந்த இராணுவச் சிந்தனையாளனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். “ஒரு சண்டையில் ஒரு படைப்பிரிவு வெற்றியடைகின்றதா? அல்லது தோல்வியடைகின்றதா? என்பது முக்கியமல்ல. அது தனது ஆயுத, ஆளணி வளங்களை சிறப்பாகப் பாதுகாப்பதே முக்கியமானது. இதனை பிரான்சியப் பேரரசன் மாவீரன் நெப்போலியன் கடைப்பிடித்திருந்தால் வோட்டலூவ் யுத்தத்தின் பின் பிரான்சியப் பேரரசு வீழ்ச்சியடைந்திருக்காது. இவ்வாறான வரலாற்று இராணுவத் தவறை புலிகளின் தலமை விடமாட்டாது காரணம் வரலாறுகளை வழிகாட்டியாக வரித்துக் கொண்டு முன்னுதாரணமாக வளர்ந்தவர்கள் புலிகள். எனவேதான் கடந்த காலச் சண்டைகள் யாவற்றிலும் இயலுமானவரை போரிட்டு ஆயுத ஆளணி இழப்புக்களைத் தவிர்த்து பின்னகர்ந்திருக்கிறார்கள். எனவே புலிகள் போரிடும் ஆற்றல் சற்றேனும் குறையாமல் பலமாகவே இருக்கின்றார்கள். இதையறியாமல் படைத்தரப்பு புலிகள் பலமிழந்து விட்டனர். அவர்களால் மரபுவழித் தாக்குதல்களை அல்ல தற்காப்புத் தாக்குதல்களைக் கூட செய்யமுடியாது என கூறிவருகின்றனர் அத்துடன் இவ்வருட மாவீரர் தினத்தைக் கொண்டாட வன்னியில் யாரும் இருக்க மாட்டார்கன் எனக் படைத்தளபதி கூறுவது நகைப்புக்கிடமானது.
தந்திரோபாயப் பின்வாங்கல் பற்றி வரலாற்றுப் பக்களில் புரட்டிப் பார்க்கின்ற போது 17ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய கள்ளிக் கோட்டை மன்னன் றூர்அலியின் செயல் ஞாபகத்துக்கு வருகிறது. ஆங்கிலேயப் படைத்தளபதி றெபேட் கிளைம் கள்ளிக் கோட்டைமீது பெருமெடுப்பிலான பீரங்கித் தாக்குதலோடு முன்னகர்ந்து நிலங்களைக் கைப்பற்ற. றூர்அலி தனது படையணிகளுடன் பாதுகாப்பாக கட்டங்கட்டமாக தந்திரோபாயப் பின்வாங்கல்களை செய்ய முன்னேறி அலுத்துப்போன றெபேட் கிளைம். றூர்அலிக்கு தூதுச் செய்தியை அனுப்பியிருந்தார். அதில் “பெருவீரனான தாங்கள் தப்பியோடுவது மன்னர்களுக்கு இழுக்கு” என எழுதப்பட்டிருந்தது.. அதற்குப் பதிலனுப்பிய றூர்அலி “தங்களுடைய மூன்று சதம் பெறுமதியான பீரங்கிக் குண்டுகளுக்கு முன்னூறு ரூபாய்கள் பெறுமதியான எனது ஒவ்வொரு குதிரைப் படையையும் இழப்பதற்கு நான் முட்டாள் அல்ல . தாங்கள் என்னைத் தொடர்ந்து நடந்து களைத்து தங்கள் கால்கள் எப்போது வீங்கி வலியெடுக்கின்றனவோ அப்போது நான் உங்களைப் போர்களத்தில் சந்திப்பேன்” எனக்குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே ஆங்கிலேயப் படை களைத்துப் போக றூர்அலி வேகமாக முன்னேறி ஆங்கிலேயப் படையை விரட்டியடித்த வரலாற்றுப் பாடம் வன்னி மண்ணில் இரண்டாவது தடவையாகவும் சிங்கள தேசம் கற்கப் போகின்றதென்பது அவர்களுக்கு கசப்பான உண்மையாகும். ஏனெனில் தினமும் ஓய்வின்றி களத்தில் போராடும் இராணுவம் தற்போது இலக்கை அடையாமல் சலிப்பு, மனவிரக்தி, பயம், என்பவற்றிற்கு உட்பட்டு புலிகள் மேற்கொள்ளப் போகின்ற பதிலடிக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தப்பியோடும் காலம் விரைவில் இல்லை எனத் தெரிகின்றது.
அரச படைகள் மென்மேலும் முன்னேறி சண்டைகளின்றி மடுவிலிருந்து வவுனிக்குளம் வரைக்கும், மற்றும் மேற்குக் கரையோரப் பகுதியான மாந்தையிலிருந்து இலுப்பக்கடவைக்கு சற்று வடக்கு வரையும், தென் எல்லையாக மன்னார் வவுனியா வீதியையும், வடக்கு எல்லையாக பாலியாற்றையும், கொண்ட மிகப்பெரிய பிரதேசத்தில் அகலக் கால்பதித்து வீங்கிப் பெருத்து நிற்கின்றது. இப்பிரதேசத்தினுள். அடங்குகின்ற மிகப்பெரும் காட்டுப்பிரதேசங்களும். பாலியாறு, பறங்கியாறு, நாயாற்றுப் படுக்கைகளும் தற்போது இராணுவத்திற்குப் பாதுகாப்பாக இருப்பினும் அடுத்து வருகின்ற மாதங்களில் ஏற்படப்போகின்ற பருவமழைக் காலம் அவர்களுக்கு மிகவும் இடர்பாடான ஒன்றாகவே இருக்கப் போகின்றது. ஏனெனில் இப்பிரதேசங்களில் சீரான எந்தவொரு போக்குவரத்து வழங்கல் பாதைகள் இல்லை. மேற்குறிப்பிட்ட ஆறுகள் பருவமழை காலத்தில் பெருக்கெடுத்தோடுகின்ற போது இராணுவம் பல இடர்களைச் சந்திக்கலாம்.
மேலும் நீண்டதூரம் சீராண வழங்கல் பாதைகள் இன்றி வடக்கு நோக்கி முன்னேறுகின்ற போது தெற்கில் பாலமோட்டை மற்றும் மூன்றுமுறிப்புப் பகுதிகளில் பலமாக நிலைகொண்டிருக்கின்ற புலிகள் மேற்கு பக்கமாக வலயன்கட்டு, பாலம்பிட்டி, பெரியமடு, ஆகிய பகுதிகளை நோக்கி வேகமாக ஊடறுப்புத் தாக்குதல் ஒன்iறைத் தொடுப்பார்களேயானால் வவுனிக்குளம், பனங்காமம், சிறாட்டிகுளம் பகுதிகளுக்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இராணுவம் மரண அடி வாங்கும். அத்தோடு கடற்புலிகள் தங்கள் பங்கிற்கு மேற்குக் கரையோரங்களில் நிகழ்த்தப் போகும் தரையிறக்கத் தாக்குதல்கள் இராணுவத்தை மேலும் அழிவின் விழிம்புக்கு இட்டுச் செல்லும் இப்படியானதொரு மூர்க்கமான தாக்குதலை புலிகள் செய்வார்களேயானால் மூன்றாம் கட்ட ஈழப்போரில் ஆனையிறவை இழந்தது போன்று மன்னாரில் தள்ளாடி இராணுவத்தளமும் மண்டியிட்டுப் போவதற்கான சாத்தியங்கள் கூட நிகழலாம். இது இவ்வாறு நிகழுமாயின் இரண்டு ஆண்டுகளுக்க முன்னர் புலிகளின் மரபுப் படையணியின் தந்தையான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் குறிப்பிட்டது போல “தழிழீழ விடுதலை போராட்டத்தில் நிகழ்ந்த சாதனைகள் பெரும்பாலானவை மன்னார் மாவட்டத்திலேயே நிகழ்ந்திருக்கின்றது இனியும் அது தொடரும்” என்றார். அவரது கூற்றை புலிகள் மெய்ப்பிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
நாலாம் கட்ட ஈழப்போரின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போவது வன்னியின் மேற்கில் மூழப்போகின்ற பெரும் போர். இதனை வருகின்ற வாரங்களில் எதிர்பார்க்கலாம். இந்தப் போர் இலங்கை அரசையும், படைகளையும், சிங்களப் படைத்துறை ஆய்வாளர்களையும் உலக இராணுவ ஆய்வாளர்களையும், ஏன் இந்திய இராணுவ ஆய்வாளர்களையும் கூட புலிகள் பற்றிய மதிப்பீட்டை மீள்மதிப்பீடு செய்ய நிர்ப்பந்திக்கும். நீண்ட காலமாக புலிகள் காட்டிவந்த அமைதி புயலுக்கு முந்திய அமைதியாகவே உண்மையான இராணுவ ஆய்வாளன் கருதுவான். தந்திரோபாயப் பின்வாங்கல்களும், சார்க் மாநாட்டுக்கான ஒரு தலைப்பட்ச சமரோய்வு அறிவிப்பும்,; அவர்களின் இயலாத்தன்மையின் வெளிப்பாடல்ல. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சர்வதேச அரசியல் இராஜதந்திர வெற்றியை எதிர்பார்த்து தமது காய்களை நகர்த்தி காத்துக் கிடக்கின்றனர். என்பதே உண்மை. அதன் வெளிப்பாடே இப்போர் நிறுத்த அறிவிப்போயாகும். சார்க் மாநாட்டின் முடிவும், அமெரிக்க தேர்தலின் முடிவும் முடிவுக்கு வரும் வேளை பெரும்பாலும் ஓயாத அலைகள் வானெழுந்து வீசும். அப்போதே சிங்கள தேசமும், சர்வதேசமும் புலிகளின் இவ்வளவு கால அமைதிக் காற்றின் உத்வேகத்தினை அறிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.
http://www.pathivu.com/?p=2665
#4
Posted 08 August 2008 - 08:57 AM
Iraivan, on Aug 8 2008, 09:47 AM, said:
உலகத்தில உள்ள எல்லாருக்கும் தெரியும் புலிகள் தாக்குவார்கள் என்று. ஆனால் எப்ப என்பது எவருக்குமே தெரியாது. அங்கு தான் புலிப்படையின் பலம் தங்கி இருக்கிறது. எதிரி பலவீனமாக உள்ள தருணமே.. புலிக்கு சாதகமான தளம்.
பலவீனம் என்பது பல விடயங்கள் சார்ந்திருக்கிறது. வெறும் ஆயுத பலம் மட்டும் படைப்பலத்தை தீர்மானிக்காது. அப்படி தீர்மானித்திருந்தால்.. ரஷ்சியா ஜேர்மனியிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..! வியட்நாம் அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..!
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.
#5
Posted 08 August 2008 - 09:02 AM
nedukkalapoovan, on Aug 8 2008, 09:57 AM, said:
பலவீனம் என்பது பல விடயங்கள் சார்ந்திருக்கிறது. வெறும் ஆயுத பலம் மட்டும் படைப்பலத்தை தீர்மானிக்காது. அப்படி தீர்மானித்திருந்தால்.. ரஷ்சியா ஜேர்மனியிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..! வியட்நாம் அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..!
மிகச் சரியான கருத்து. ஏற்றுக்கொள்கிறேன். ஆய்வாளர்கள் மட்டுமல்ல, நண்பர்கள், எதிரிகள் கூட எந்த இடத்தில் எந்த வடிவத்தில் நிலை திரும்பும் என்பதை எதிர்பார்க்கின்றார்கள். இந்தியப் புலனாய்வுத் துறையினரின் இலங்கைக்கான எச்சரிக்கையின் தொனிப் பொருளும் இதுவாகத்தானிருக்கலாம்.
#6
Posted 08 August 2008 - 09:04 AM
nedukkalapoovan, on Aug 8 2008, 08:57 AM, said:
பலவீனம் என்பது பல விடயங்கள் சார்ந்திருக்கிறது. வெறும் ஆயுத பலம் மட்டும் படைப்பலத்தை தீர்மானிக்காது. அப்படி தீர்மானித்திருந்தால்.. ரஷ்சியா ஜேர்மனியிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..! வியட்நாம் அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..!
உண்மைதான்
அதுமாத்திரமல்ல
கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல்
போரும் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதும் அதனாலேயே............
சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன். நான் சொன்ன சனங்களில் நான் வன்னி மக்களை மட்டும் சொல்லவில்லை.
முள்ளிவாய்க்காலில் உயிரைத்துறந்த அனைவரும் தற்கொடையாளிகளே
அனைவருக்கும் சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கிறேன்
#7
Posted 08 August 2008 - 05:09 PM
#8
Posted 08 August 2008 - 05:25 PM
நானும் கிருபனுக்கு அவருடைய ஆய்வு பிடிச்சுத்தான் கொண்டு வந்து இணைக்கிறார் எண்டு கொண்டு இருக்கிறன். வர வர களத்தில ஒருவருமே சீரியசா எழுதுறாங்கள் இல்லை
"Without sovereignty, one cannot exercise or experience a true democracy."
#9
Posted 08 August 2008 - 07:32 PM
kurukaalapoovan, on Aug 8 2008, 05:25 PM, said:
என்னத்தை சொல்ல குருக்ஸ் மதில் மேல் பூனையாக நின்று கருத்து எழுத தான் எல்லோரும் விரும்புகிறார்கள் .
நல்ல காலம் மோகன் அண்ணாவுக்கும் அந்த என்னம் வரவில்லை, அப்படி வந்தால் நடுநிலை அது இது என்று கருணாவையும் டக்கிளைசையும் யாழ்கள மட்டு நிறுத்தினராக போட்டு இருப்பார்.......
ஆனாலும் எங்களுக்கும் உங்கள விட உள்ளுக்க உதறல் தான் ஆனா காட்டி கொள்ளவில்லை
This post has been edited by I.V.Sasi: 08 August 2008 - 07:35 PM
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!
#10
Posted 09 August 2008 - 09:32 PM
This post has been edited by kirubans: 09 August 2008 - 09:32 PM
#11
Posted 09 August 2008 - 09:34 PM
kirubans, on Aug 9 2008, 09:32 PM, said:
தமிழில் இருக்கோ?
தமிழீழம் கிடைக்கும் என்று ஆங்கிலமும் ஏறவில்லை.....
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!
#12
Posted 09 August 2008 - 11:12 PM
பிறகு எழுதாதேங்கோ கரும்புலிகள் என்ன செய்கிறார்கள் அப்பிடி நாங்களும் செய்யப் போறம் எண்டு.
உவர் மோகன் யாழ் களத்தில அங்கத்தவர்களாக இருப்பதற்கு கட்டணம் ஒரு நாளைக் இத்தனை பதிவுகளுக்கு அதிகமாக பதியிறவைக்கு மேலதிக கட்டணம் அறவிட்டு அதை புனர்வாழ்வுக்கழகத்துக்கு குடுத்தார் எண்டா யாழ்களத்தில கன பிரச்சனை தீர்ந்துவிடும்.
"Without sovereignty, one cannot exercise or experience a true democracy."
#14
Posted 09 August 2008 - 11:19 PM
kurukaalapoovan, on Aug 10 2008, 12:12 AM, said:
பிறகு எழுதாதேங்கோ கரும்புலிகள் என்ன செய்கிறார்கள் அப்பிடி நாங்களும் செய்யப் போறம் எண்டு.
உவர் மோகன் யாழ் களத்தில அங்கத்தவர்களாக இருப்பதற்கு கட்டணம் ஒரு நாளைக் இத்தனை பதிவுகளுக்கு அதிகமாக பதியிறவைக்கு மேலதிக கட்டணம் அறவிட்டு அதை புனர்வாழ்வுக்கழகத்துக்கு குடுத்தார் எண்டா யாழ்களத்தில கன பிரச்சனை தீர்ந்துவிடும்.
என்ன செய்வது கோவில் மணிகளை கழட்டி கொடுத்தும் ஒரு விமானமும் விழவில்லை பெரியாரின் சிலை தலைகளை கழட்டி கேற்ற போல் மாதிரி அடிச்சசவது விழுத்துவம் என்றால் அதுக்கும் வழி இல்லை.........
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

Sign In
Register
Help


MultiQuote






