கருத்துக்களம்: "விண்டோஸ்' சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள "மிதோரி' மென்பொருள் மைக்ரோசொப்ட்டால் உருவாக்கம் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

"விண்டோஸ்' சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள "மிதோரி' மென்பொருள் மைக்ரோசொப்ட்டால் உருவாக்கம்

#1 User is offline   Janarthanan 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,466
  • Joined: 08-August 06
  • Location:Eelam

Posted 06 August 2008 - 01:27 AM

வீரகேசரி நாளேடு - உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

இந்த புதிய "மிதோரி' கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும். இணையதளத்தை மையமாகக் கொண்ட இந்த மென்பொருளானது தனி நபர் கணினிகளுக்கு "விண்டோஸ்' மென்பொருளை இணைக்கப் பயன்படும் ஏனைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களில் தங்கியிராமல் சுயமாக செயற்படும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது.

இதன் பிரகாரம் நவீன கணினி உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு "மிதோரி' தீர்வாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இம்மென்பொருளானது கையில் எடுத்துச் செல்லக் கூடிய "லப் டொப்' கணினிகளிலான செயற்பாட்டு குறைபாடுகள் மற்றும் தரவுகள், படங்கள், ஆவணங்கள் என்பனவற்றை பரிமாறிக் கொள்வதில் எதிர்கொள்ளும் தடைகள் என்பனவற்றுக்கு சிறந்த பரிகாரம் அளிப்பதாக அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.

மிக நிறை குறைந்த, காவிச் செல்லக் கூடிய கணினி செயற்பாட்டு முறைமையை உருவாக்கும் இலக்கில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள மிதோரியானது, மாறுபட்ட பல கணினி பிரயோகங்களை இலகுவாக கையாளக் கூடிய ஒன்றாக அமையும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய கணினிகளின் விற்பனையுடன் 80 சதவீதமான "விண்டோஸ்' விற்பனையும் இடம்பெற்று வருவதால், புதிதாக "மிதோரி' மென் பொருளை பாவனைக்கு கொண்டு வருவதில் பெரும் நடைமுறைச் சிக்கல் நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது
0

Advert

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]