Jump to content


விடுதலைப்புலிகள் இயக்கம், விகடன் ஸ்பெஷல் சர்வே


2 replies to this topic

#1 ஈழவன்85

    ஈழவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,744 posts
  • Gender:Male
  • Location:உங்கள் இதயம்

Posted 25 July 2008 - 11:08 PM

விடுதலைப்புலிகள் இயக்கம்-விகடன் ஸ்பெஷல் சர்வே
குறிப்பு: ஞாயிற்றுக்கிழமை (27.07.2008) இந்திய நேரம் மதியம் 12 மணிக்குள் வாக்களிக்க வேண்டும்.

1. விடுதலைப் புலிகள் இயக்கத்தை...

(அ)எப்போதும் ஆதரிக்கிறேன்
(ஆ)எப்போதும் எதிர்க்கிறேன்
(இ)ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு ஆதரித்தேன்

2. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ் ஈழம் அமைப்பது...

(அ)சரியான தீர்வு
(ஆ)தேவையில்லை
(இ)சுயாட்சி அதிகாரம் கொடுத்தால் போதும்

3. இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை....

(அ)தொடர வேண்டும்
(ஆ)தடையை நீக்க வேண்டும்
(இ)பொறுத்திருந்து பார்க்கலாம்

4. விடுதலைப்புலிகள் இயக்கத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள் ஆதரிப்பது...

(அ)சரியான நிலைப்பாடுதான்
(ஆ)ஆபத்தான கொள்கை
(இ)வேறு லாப நோக்கத்துக்காக

5. ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றவாளியான பிரபாகரன்...

(அ) தண்டிக்கப்பட வேண்டியவர்
(ஆ)குற்றமற்றவர்
(இ)குற்றத்தை மன்னித்து விட்டுவிடலாம்

6. இலங்கைப் பிரச்னையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்.?

(அ) தலையிடவே கூடாது
(ஆ)தலையிட்டு தீர்வு காணலாம்
(இ)நிலைமை கைமீறினால் மட்டுமே தலையிட வேண்டும்

7. கொள்கை மாறுபட்ட இலங்கை தமிழ்ப் பிரமுகர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்வது...

(அ)ஏற்றுக்கொள்ளவே முடியாது
(ஆ)தவிர்க்க முடியாத அணுகுமுறைதான்
(இ)அங்குள்ள சூழ்நிலை புரியவில்லை

8. தரைப் படை, கடற் படை, வான் படை என்று விடுதலைப்புலிகள் வளர்ச்சி அடைவது...

(அ)பெருமைக்குரிய விஷயம்
(ஆ)இந்தியாவுக்கு ஆபத்து
(இ)இரண்டுமே இல்லை

9. விடுதலைப்புலிகளை தி.மு.க....

(அ)இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும்
(ஆ)ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் ஆதரிக்க வேண்டும்
(இ)பட்டும் படாமலேயே இருக்கலாம்

10.தண்டனைக் காலத்துக்குப் பிறகும் சிறையில் இருக்கும் நளினியை.....

(அ)விடுதலை செய்ய வேண்டும்
(ஆ)விடுவித்து கண்காணிப்பில் வைத்திருக்கலாம்
(இ)சிறைத் தண்டனை தொடரட்டும்

11. கச்சத் தீவை இந்தியா...

(அ)திரும்பப் பெற வேண்டும்
(ஆ)விட்டுவிடலாம்
(இ)குறைந்தபட்சம் அந்தப் பகுதிக்குப் போகும் உரிமையாவது
பெற வேண்டும்

12. இலங்கை கடற் படையால் நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்னைக்கு...

(அ)ஆயுத ரீதியாக பதிலடி கொடுக்கலாம்
(ஆ)பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம்
(இ)சர்வதேச அரங்கில் இலங்கையை கடுமையாக கண்டிக்கலாம்

விகடன் இணையத்தளத்தில் சிறப்பு கருத்தாய்வு ஒன்று நடக்கிறது. இது இணையதளத்தில் மட்டுமா அல்லது புத்தக வாசகர்களுக்குமா என்று தெரியவில்லை. ஆயினும் பாலினம், வயது போக மேற்கண்ட கேள்விகளும், மூன்று பதில்களில் ஒன்றை தெரிவு செய்ய கேட்டிருக்கிறார்கள்.

நன்றி : விகடன்

http://www.vikatan.c.../lttesurvey.asp
விகடனில் ஒரு (இலவச)அக்கவுன்ட் ஓபன் செய்துவிட்டு உங்கள் கருத்துகளை தேர்வு செய்யவும்

#2 muruga

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 596 posts
  • Gender:Male
  • Location:பழனி மலை

Posted 26 July 2008 - 06:39 AM

7. கொள்கை மாறுபட்ட இலங்கை தமிழ்ப் பிரமுகர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்வது...

(அ)ஏற்றுக்கொள்ளவே முடியாது
(ஆ)தவிர்க்க முடியாத அணுகுமுறைதான்
(இ)அங்குள்ள சூழ்நிலை புரியவில்லை

கொள்கை மாறுபட்ட இலங்கை தமிழ் பிரமுகர்களுக்கும் "துரோகிகளுக்கும்" இடையிலுள்ள வேறுபாட்டை
விகடன் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்

" காலம் நமக்கு தோழன், காற்றும் மழையும் நண்பன் "

#3 karu

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,099 posts
  • Interests:Tamil Poetry & literature

Posted 26 July 2008 - 07:35 AM

தனக்கெனவோர் கொள்கையைக் கொண்டிருப்பதையும்,

ஒரே அணியிலிருந்தாலும் அங்கு செல்வாக்குள்ளவர்கள் கொள்கைப் பற்றற்று தாமே பெரியவர்கள் என்று, மற்றவர்கள் மீது இளக்காரத் தனமாக நடந்து அவர்களை ஓரங்கட்ட நினைக்கும்போது நமது வழியை நாம் பார்ப்போம் என வேறு பாதையைத் தெரிவதையும் கொள்கை மாறுபாடென்றும்,

எதுவித காரணமுமின்றிச் சுயலாபத்துக்காக அணிமாறிக் காட்டிக் கொடுப்பதை துரோகமென்றும்

வேறுபடுத்தலாமென எண்ணுகிறன்
S. K. RAJAH







யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]