Jump to content


Orumanam
Photo

விடுதலைப்புலிகள் தமது பலத்தை படையினரிடமே காட்டவேண்டும் - சங்கரி


 • Please log in to reply
19 replies to this topic

#1 Janarthanan

Janarthanan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,466 posts
 • Location:Eelam

Posted 26 February 2008 - 03:45 AM

'விடுதலைப்புலிகள் தமது வீரத்தை இராணுவத்தினரிடமே காட்ட வேண்டும். மாறாக நிராயுதாபாணிகளான மக்கள் மீத அல்ல.' இப்படிக் கூறுகிறா. ஆனந்த சங்கரி.

அண்மையில் பூநகரி மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல் மற்றும் கல்கிஸ்சை பஸ் குண்டுவெடிப்பு போன்றவை தொடர்பில் அவ. அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரியில் உள்ள கிராஞ்சி கிராமத்தில் மீது நடத்தப்பட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை கண்டணத்திற்குரியது. இச்சம்பவத்தில் ஆண்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் உட்பட 8 பேர் உயிரழிழந்தும் 14 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

கிராஞ்சி கிராமம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை பயிர்ச் செய்கைக்காக உருவாக்கப்பட்டது. 200 விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்படன. அப்பகுதியில் கடற்புலிகள் தளம் இருப்பதை நான் மறுக்வில்லை. கோழைத்மனாகவும் முட்டாள் தனமாகவும் விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மத்தியில் தளம் அமைத்தால் அது பொதுமக்களின் குற்றமா?

இத்தகைய சந்தர்ப்பத்தில் என்ன விலை கொடுதாயினும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கபட வேண்டிய கடப்பாடு அரச படைகளுக்கு உண்டு. :wub:

பிற நாடுகளில் பல சந்தர்பபங்களில் ஓர் உயிiரைக் காப்பதற்காக பல கோடி ரூபா செலவு செய்த வரலாறுகளும் உண்டு. கடற்புலிகளின் தளம் அமைந்திருப்பதை அறிந்திருந்த விமானப்படையினர் மிக்க அவதானமாகச் செயற்பட்டிருக்க வேண்டும். :wub:

தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பொதுமக்கள் உசார்ப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விடுதலைப்புலிகள் கீழ்த்தரமாகச் செயற்பட்டாலும் அரச படைகள் அவ்வாறு செய்யமுற்பட முடியாது. போர்ச் சூழல் பிரதேசங்களிலிருந்து 35 கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்திருக்கின்ற ஓர் அமைதியான கிரமத்தில் வாழும் மக்களின் மனித உரிமைகள் வெகுமளவு மீறப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் அரச படைகள் மதிப்பை இழக்கக் காரணமாக இருப்பதால் இவற்றை அரச படைகள் தவிர்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் தமது பலத்தை இராணுவத்தினரிடம் காட்ட வேண்டுமே தவிர நிராயுதாபாணிகளான மக்கள் மீது அல்ல.

கடந்த சனிக்கிழமை கல்கிஸையில் பயணிகள் பஸ்ஸில் குண்டு வீதியால் சென்ற 18 பேரை காயப்படுத்தியது. அதிஸ்டவசமாக ஓர் பயணியின் சமயோசித செயலினால் பெரும் அழிவுகள் ஏற்படாது மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பொறுப்பற்ற செயலினால் கெரவலப்பிடியவில மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ வெடிமருந்து, யாரோ கொடுத்த தகவலின் பேரில் கண்டுபிடிக்கப்பட்டு ஏற்படவிருந்த பெரும் அழிவு தடுக்கப்பட்டது.

தம்முடன் வாழப் பயந்து, தம் இருப்பிடங்களை விட்டு விட்டு தமிழ் மக்கள் தென்னிலங்கையில் சிங்கள மக்களுடன் வாழ்கிறார்கள் என்பது விடுதலைப் புலிகள் அறிந்த ஒரு விடயமாகும்.

அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஓர் இனக் கலவரமே. இரத்த வெறிபிடித்த விடுதலைப் புலிகள் அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதையே விரும்புகின்றனா.

அது நடைபெறாது தடுக்க வேண்டிய கடமை அரச படைகளுக்கு உண்டு என்றும் அதில் உள்ளது.

நன்றி சுடர் ஒளி.


சங்கரிக்கு ஒரு கடிதம்

திரு.வீ. ஆனந்தசங்கரி
தலைவர்??
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (சங்கரி பிரிவு)
சமிற் பிளற்ஸ், இராணுவக்காவல்,கொழும்பு.

அன்புள்ள அண்ணன் மற்றும் பேக்கரிமாமா அவர்களுக்கு,

ஒரு பகுத்தறிவு வேண்டுகோள்!

நீங்கள் நீண்ட காலமாக கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். யாரிடமிருந்தும் பதில் வரவில்லை என்ற மனக்கவலையில் தொடர்ந்தும் பல பக்கங்களில் எழுதி வருகிறீர்கள். கடிதம் எழுதியே கவர்னர் ஆகவிருக்கும் தலைவர் ஒருவர் உலகில் இருக்கிறார் என்றால் அது நீங்களாகத்தான் இருப்பீர்கள். முதலில் அதற்காக வாழ்த்துகிறோம்.

உங்களுக்கு அறளை பெயர்ந்து விட்டது என்று பலரும் கூறுகின்றனர். அதில் உண்மையிருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. குறுக்கு வழியில் பணமும் புகழும் சேர்க்கத்தான் நீங்கள் கோரிய தமிழீழத்தை சிங்கள ஆட்சியாளரிடம் விற்றுவிட்டு புனித விடுதலையைக் கொச்சைப்படுத்தி கடிதம் எழுதுகிறீர்கள்.

முதலில் நீங்கள் பௌத்த மதத்தில் சேர்ந்தது பற்றி இதுவரையும் யாரிடமும் வெளிப்படுத்தாது இருந்ததையிட்டு நாம் ஆச்சரியப்படவில்லை. வயிறுகழுவ நாட்டைவிற்கும் நீங்கள் மதம் மாறுவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது?

“பௌத்தம் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இல்லை” என்று 20ம் திகதிக் கடிதத்தில் குறிப்பிட்டதுடன் பௌத்த சித்தாந்தம் பேராசையற்றது. அன்பு, இரக்கம், நீதி, கருணை போன்ற தத்துவங்களைப் போதிப்பதாகும் என்றும் அறிவுரை கூறியுள்ளீர்கள்.

மேலும் வாசிக்க : /www.theepori.com/newsfull.php?newsid=2871

ninaivu-illam

#2 Iraivan

Iraivan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,881 posts
 • Gender:Male
 • Location:இறைவன்
 • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 26 February 2008 - 05:45 AM

"அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஓர் இனக் கலவரமே. இரத்த வெறிபிடித்த விடுதலைப் புலிகள் அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதையே விரும்புகின்றனர். "


விடுதலைப்புலிகள் தென்னிலங்கையெங்கும் தமது செயற்பாட்டினை மேற்கொள்கின்றார்கள். அவர்களைத் தடுப்பதற்கு முடியவில்லை. அந்த நிலையை மாற்றுவதென்றால் தென்னிலங்கையில் இனக்கலவரம் ஒன்றைத் தோற்றுவிப்பதன் மூலமே அதைச் செய்யலாம். இப்படியொரு தகவலை நண்பரொருவர் கூறினார். அதற்குக் கட்டியம் கூறுவது போல் இந்தச் சுந்தரியாரின் செய்தியும் அமைந்துள்ளது. இனக்கலவரம் ஏற்பட காரணம் விடுதலைப் புலிகளே என்ற கருத்தினை இப்போதே விதைக்கத் தொடங்குகிறார்கள்.
இறைவன்

#3 ragunathan

ragunathan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,406 posts
 • Gender:Male
 • Location:Sydney
 • Interests:Politics, music, sports.

Posted 26 February 2008 - 08:09 AM

"உங்களுடன் வாழப் பயந்து தென்னிலங்கையில் வந்து சிங்களவருடன் வாழும் தமிழர்கள்", என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு ? வடக்குக் கிழக்கில் தங்கு தடையின்றி தமிழ் இன அழிப்பு நடந்து வருவதால் தலைநகர் கொழும்பில் ஓரளவாவது பாதுகாப்புக் கிடைக்கும் என்று தப்பி வந்த மக்களை இப்படி குறிப்பிடுமளவிற்கு இந்த நக்கிப் பிழைக்கும் ஜென்மம் இறங்கி விட்டது. இது எஜமான விசுவாசமா அல்லது பணத்தாசையா அல்லது சாகும்போது வரும் பிதற்றலா என்று தெரியவில்லை. என்னவாக இருந்தாலும் இது கெதியில் பாடையில் போவதுதான் நல்லது. அச்தியைக் களனி கங்கையில் கரைத்துக்கொள்ளட்டும்.

"ராஜகோபுரம் எங்கள் தலைவன்"


#4 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,846 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 26 February 2008 - 09:13 AM

சங்கறி, உடும்புக்கறி எப்படி செய்வது என்று ஏதாவது பத்திரிகையில் எழுதினால் பிரயோசனமாக இருக்கும் அதை விட்டுப்போட்டு ஏன் இந்த போர்த்தேங்காய் வேலை.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#5 Nada

Nada

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 441 posts
 • Interests:வம்பளப்பது

Posted 26 February 2008 - 09:59 AM

விடுதலைப்புலிகள் தமது பலத்தை படையினரிடம்தான் காண்பிக்க வேண்டும்.ஆனால் படையினர் தமது பலதஇதை பொதுமக்களிடம் தான் காண்பிப்பார்கள் என்பது ஆனந்த சங்ககார சொல்ல மறந்தகதை

#6 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,603 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 26 February 2008 - 01:10 PM

கோழைத்மனாகவும் முட்டாள் தனமாகவும் விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மத்தியில் தளம் அமைத்தால் அது பொதுமக்களின் குற்றமா?


புலி என்றாலும் காட்டுக்க தென்னந்தோப்புக்க இருக்குது. ஆனால் ஆனந்த சங்கரியாரின் மதிப்புக்குரிய சிங்கள இராணுவம்.. பாடசாலைகள்.. குடிமனைகள்.. வைத்தியசாலைகள்.. கோவில்களை உள்ளடக்கி எல்லோ இராணுவ வலயங்கள் அமைச்சு.. குடியிருக்குது. அப்ப சங்கரியார்.. அவையையும் எல்லோ சனத்தை விட்டு பொட்டல் வெளில போயிருக்கச் சொல்லி வற்புறுத்த வேணும்..! அப்படியே தானும்.. கொழும்பில பதுங்கிக் கிடக்காம.. கிளிநொச்சியில போய் மக்களிடம் குறைகளைக் கேட்கலாமே.

கொழும்பில இருந்து கொண்டு கடற்புலிகளின் தளம் எங்க இருக்கென்று கண்டுபிடிக்கிற அளவுக்கு சங்கரியார் இராணுவத்துக்கு உளவு பார்க்கிறார் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆக தேசத்துரோகச் செயலுக்காக சங்கரியாருக்கு மரணதண்டனை வழங்குதல்.. எந்த வகையிலும் தப்பில்ல.!

சங்கரியார் பொதுமக்கள் கொல்லப்பட்டது என்று சொல்லுறார்.. இராணுவப் பேச்சாளரோ புலிகள் இறந்ததாச் சொல்லுறார். சங்கரியார் சிங்களப் பொதுமக்களுக்காக அழுகிறார்.. இவ்வளவு காலமும் வன்னியில் உயிரிழந்த பொது மக்கள் அவரின்ர அனுதாபத்துக்கு இலக்காகல்ல. இப்ப சிங்களவர்கள் இறக்கும் போதுதான்.. தமிழ் மக்கள் இறக்கினம் என்றது சங்கரிக்கே தெரிய வந்திருக்கென்றால்.. இராணுவப் பேச்சாளர், மகிந்த போன்றவைக்கு தெரிய வர இன்னும் சிங்களவர்கள் தியாகம் செய்ய வேண்டும் போலத்தான் தெரியுது..! :D

Edited by nedukkalapoovan, 26 February 2008 - 01:12 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#7 Sooravali

Sooravali

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,454 posts
 • Location:அகண்ட வெளி

Posted 26 February 2008 - 01:51 PM

சங்கரி மாமாவுக்கு மாம்பழ ஆசை நல்லாத்தான் வந்துட்டுது...
திரும்பிப்போய் தொடக்கத்தை யாராலும் மாற்ற முடியாது,
தொடந்து சென்றால் முடிவையாவது மாற்றமுடியும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

#8 வசி_சுதா

வசி_சுதா

  ♥ღღツ Vasi ツღღ ♥

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,763 posts
 • Gender:Male

Posted 26 February 2008 - 01:56 PM

அந்தாள் ஆசைப்படுற விருதை விரைவில் குடுத்து தொலையுங்கப்பா..
தாங்க முடியேல்ல..... :D

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-


#9 kurukaalapoovan

kurukaalapoovan

  Very Primitive Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,766 posts
 • Location:நரகம்

Posted 26 February 2008 - 02:26 PM

போர் என்று வந்து விட்டால் உதுகளை தவிர்க்க முடியாது எண்டும் சொல்லாம். அவ்வப்போது சிங்களத்தை தீர்வுத் திட்டத்திற்கு உடன்பட வைக்கிற புதிய உத்தி எண்டும் விளக்கம் கொடுக்கலாம். தமிழரின்ரை உந்த புதுத் தந்திரோபாயங்கள் விளங்காமல் உவர் என்னத்துக்கு புலம்பிறார். எங்கையும் frozen உடும்பு இறச்சியையாவது வேண்டி கறி வைக்கலாமே எண்டு பாக்கலாமே?
"கொடுக்க வேண்டிய விலை ஒன்றே ஆசையையும் தேவையையும் நிர்ணயிக்கிறது."
"Without sovereignty, one cannot exercise or experience true democracy."

#10 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,846 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 26 February 2008 - 07:09 PM

fரொசன் உடும்பு கஷ்டம் என்று நினைக்கின்றேன்.முயற்சி பண்ணினால் முதலை கிடைத்தாலும் கிடைக்கும்.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#11 தேவன்

தேவன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,271 posts
 • Gender:Male
 • Interests:reading books

Posted 03 March 2008 - 11:27 AM

ஒரு நல்லகாரியம் செய்யப்படும் போது நடப்பட்ட விதையின் வளர்ச்சிக்கும்
ஒரு தப்பான காரியம் செய்யும் போது தவறாக விதைபட்ட விதையின் வளர்ச்சிக்கும் வேறுபாடு எவளவு என்பதை தன்னுடைய வளர்ச்சியின் அநுபவத்தால் சங்கரியார் உலகுக்கு சொல்ல அனுப்பப்பட்ட ஒரு பாடம்.
உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையாக வாழ்பவன் ஆவான்.

#12 ragunathan

ragunathan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,406 posts
 • Gender:Male
 • Location:Sydney
 • Interests:Politics, music, sports.

Posted 08 March 2008 - 01:45 AM

:rolleyes: வசி !

என்ன விருதையா அது ? நீங்கள் வேற மாமனிதர் என்று லொள்ளுப்பண்ணுறீங்களோ எண்டு பயந்து போனேன். ஓ...ஓ அந்த விருதுதானே ? பேஷாக் குடுக்கலாம். என்ன ஒரு மின்கம்பம்தான் தேட வேண்டிக் கிடக்கு. அதையும் கெதியா நட்டுப்போட்டமெண்டால் கோவிந்தா ...கோவிந்தா எண்டு குடுக்கலாம். என்ன நான் சொல்லுறது ?

"ராஜகோபுரம் எங்கள் தலைவன்"


#13 அகதி

அகதி

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 192 posts
 • Gender:Male

Posted 19 May 2008 - 10:30 PM

இந்த கிழட்டு நரிக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,
என்னவோ எல்லாம் செய்யீறீங்க இவருக்கும் கெதியா செய்திடுங்கப்பா,,,,,,
கோடி புண்ணியம் கிடைக்கும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அகதி வாழ்வு முடியும்,பொறுமனமே,,,,,,,,,,,

#14 வினித்

வினித்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,717 posts
 • Gender:Male

Posted 19 May 2008 - 10:43 PM

உடும்பு கறி கிடைக்கிறது இல்லை போல?
தூரமாகிப்போன அன்னை மடி ...
துரத்திப்பிடிக்க முடியாத வயது ..

#15 Maruthankerny

Maruthankerny

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,579 posts
 • Gender:Not Telling
 • Location:USA
 • Interests:In Anything

Posted 19 May 2008 - 10:53 PM

புலிகளுக்கு புத்தி கூறியதற்கு.............. ஒரு தமிழன் என்ற வகையில் நன்றிகள்!

நீங்கள் இப்படி புத்தி கூறாதுவிட்டிருப்பின் புலிகள் படையினருடன் போராடாமல் மக்களுடேனே போராடி காலத்தை வீணடித்திருப்பார்கள்.
I dont hate anyland.....But Ilove my motherland

#16 வினித்

வினித்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,717 posts
 • Gender:Male

Posted 20 May 2008 - 07:26 AM

இந்த கிழட்டு நரிகள் புலியை பார்த்து ஊளையிட மட்டுமே முடியும் அதே புலி ஒரு உறுமலுடன் திரும்பி பார்த்தால் ஜரோப்பாவில் அகதி அந்தஸ்து கேட்டுவிட்டு தான் திரும்பி பார்க்கும் புலி போயிட்டுதா நிக்குதா என்று...

இந்த குடும்பமே இப்படி தான் அப்பன் ஒருவழி மகன் ஒரு வழி...........
தூரமாகிப்போன அன்னை மடி ...
துரத்திப்பிடிக்க முடியாத வயது ..

#17 கிருபா

கிருபா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 403 posts
 • Location:நோர்வே
 • Interests:கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்

Posted 20 May 2008 - 04:43 PM

இந்த கிழடு இன்னும் சாகல போல உங்காள பிள்ளையான், டக்கா என்று ஏதோ எல்லாம் ஒருமாதிரி எச்சிலை சாப்பிட்டு இப்ப கோப்பேல சாப்பிடுகினம் கிழடு இவ்வளவு காலம் எச்சிலைநக்கினதற்கு மங்கிமாமா ஒன்றும் குடுக்க வில்ல போல அதுதான் தானும் இருக்கம் என்று கடிதம் எழுதுவம் என்று வெளிக்கிட்டு இருக்கு .....என்ன செய்ய
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...

#18 Paranee

Paranee

  தமிழ் மகன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,065 posts
 • Gender:Male

Posted 26 June 2008 - 11:07 AM

விடுதலைப்புலிகள் தங்களின் பலத்தையெல்லாம் படையினரிடம்தான் காட்டுகின்றார்கள். சங்கரியப்புவிற்கு விளங்கேல்லை. .

பிள்ளையான் அங்கை தன்டை பலத்தையெல்லம் பாலியல் வல்லுறவில் காட்டுகின்றான். அதைப்பற்றி என்ன நினைக்கிறாராம்.

ஒருக்கால் நோர்வேக்கு வரச்சொல்லுங்கோ அவரை வடிவா பலம் பார்த்து விடுறம். .
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா ?

#19 தூயா

தூயா

  யாழ்.தூயா பபா

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,938 posts
 • Gender:Female
 • Location:எங்கட வீடு தான்
 • Interests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Posted 26 June 2008 - 11:24 AM

ரொம்ப பயந்திட்டார் போ

#20 suppannai

suppannai

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,227 posts

Posted 26 June 2008 - 12:58 PM

சங்கரி ஒரு சேதி

சங்கரி ஒரு சேதி கேளு
மகிந்தவின் காலை கட்டிக்கொள்ளு
பாம்பு துரத்துது பின்னால்
நீ வாந்தி எடுக்கிறாய் முன்னால்
தாடியன் உனக்கு நன்பனே
சேர்ந்து அடயுங்கடா கும்மாளம்
தலைவர் சொல்லவார் உனக்கு சேதி
அதுவரை நீ வாந்தி எடு :lol:

என்றோ ஒருநாள் என் நாள்  வரும் அதுவரை காத்திருப்பேன்t4120.gif.

 யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]