Jump to content

ரயிலில் அந்த கோணர் சீட் பிடிக்கோணும்


Recommended Posts

அந்த ரயிலின் வருகையை எதிர்பாத்து இங்கை பலர் படுகிற பாடு இருக்கே சொல்லி மாளேலாது.இன்னும் சிறிது நேரத்தில் இந்த இந்தாம் நம்பர் மேடைக்கு காங்கேசன்துறையை நோக்கி புறப்பட இருக்கும் யாழ் தேவி வந்தடையும் என்று புகையிரத நிலைய ஒலிப்பெருக்கி மும்மொழிகளிலும் திரும்ப திரும்ப சொல்லி மனம் பாடம் பண்ணி கொண்டிருக்கிறது. அதுவும் தமிழை மிகவும்

கடித்து துப்பி அறிவிப்பதால் என்னவோ அது வேறு மொழி போல காற்றில் பரவி கரைந்து கொண்டிருக்கிறது

http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post.html

Link to comment
Share on other sites

சின்னகுட்டி தாத்தா எப்படி சுகம் கண்டு கனகாலம் :lol: எங்கே தாத்தாவின்ட கதையை காணவில்லை என்று யோசித்தனான் பிகோஸ் தாத்தாவின்ட கதை நேக்கு நல்ல விருப்பம் பாருங்கோ :lol: இந்த முறையும் நல்லா இருக்கு ஆனா தாத்தாவின் வழமையான கதைகளிள் இருந்து வித்தியாசம் என்று சொல்லலாம் :( ஆனா இதுவும் ஒரு வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் :lol: ..நீங்களும் என்ன கோணர் சீட் பிடிக்க அவதிபடுறனீங்களோ இல்லை சும்மா கேட்டனான் தாத்தா :D ...அடுத்த கதையை கெதியா தாங்கோ பார்த்து கொண்டிருக்கிறேன் வாசிக்க.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பாட்டையும் , யாழ் சுதாகரின் அறிவிப்பையும் போட்டிருக்கலாமே சின்னக்குட்டி சார்.?

உங்களை மீண்டும் கண்டதில் சந்தோசம்

Link to comment
Share on other sites

வணக்கம் ஜமுனா... நீங்களும் நல்லாக எழுதிறனீங்கள் ... எனது பதிவுகள் பிடிக்கும் ஆவலாக இருக்கறது என்று நீங்கள் கூறும் போது உற்சாகமாக இருக்கிறது ..மிக்க நன்றிகள்

//நீங்களும் என்ன கோணர் சீட் பிடிக்க அவதிபடுறனீங்களோ //

எனக்கும் கோணர்சீற் பிடிக்கும் ஏனென்றால் கை போட வசதியாக இருக்கும் :lol: ... கரையிலை யன்னல் இருக்கிறபடியால்

வணக்கம் கறுப்பி ....பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

கறுப்பி .....இந்த பதிவின் முடிவிலை யாழ்தேவியில காதல் செய்தால் என்ற பாட்டு போட்டிருக்கிறன் ...வடிவாய் பாருங்கோ....அந்த பாட்டின் முடிவில் தான் யாழ் சுதாகரின் அறிவிப்பு வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்வாசனையுடன் எழுதுகிறீர்கள். நல்லாயிருக்கு.

கொழும்பிலிருந்து வரும் போது றம்புட்டான், மங்குஸ்தானையும் வாங்க மறந்துட்டீங்கள்.

கடைசியில் அந்த ஹிந்திப்பாட்டு நிறைய ஞாபகங்களை மீட்டிட்டுது. :rolleyes::huh:

Link to comment
Share on other sites

மண்வாசனையுடன் எழுதுகிறீர்கள். நல்லாயிருக்கு.

கொழும்பிலிருந்து வரும் போது றம்புட்டான், மங்குஸ்தானையும் வாங்க மறந்துட்டீங்கள்.

கடைசியில் அந்த ஹிந்திப்பாட்டு நிறைய ஞாபகங்களை மீட்டிட்டுது. :rolleyes::huh:

வணக்கம் suvy ...பதிவை வாசித்து கருத்து கூறியதுக்கு மிக்க நன்றிகள்..

றம்புட்டானும் மங்குஸ்த்தானையும் நிச்சயம் எழுதி இருக்கோணும் ...எழுதும் போது ஞாபகம் வரவில்லை......ஞாபகபடுத்தியதுக்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.