Jump to content

காதலர் தினம் 2008: யாழ் இணையத்தில் காதல் - யாழ் காதல் இளவரசன் 2008 - யமுனா!!


Recommended Posts

எல்லாருக்கும் வணக்கம்,

என்ன புதுபுதுசா யாழில காதலர் தினம் 2008 எண்டு போட்டு திரிகள் துவங்கிறன் எண்டு யோசிக்காதிங்கோ. யாழை இந்ததடவை காதலர் தினம் 2008ல் ஒரு கலக்கு கலக்கி எடுப்பம் எண்டு யோசிச்சு இருக்கிறம்.

முக்கியமா, யாழ் மீளவும் கலகலப்பு அடையவேணும் எண்டுறதுதான் எனது அவா. நான் சென்றவருடம் யாழில் இணைந்தகாலத்தில் இருந்த சோபை தற்போது குறைந்துவிட்டது. இதனால மீண்டும் ஏதாவது வித்தியாசமாகச் செய்து மக்களை மகிழ்விக்கலாம் எண்டு நினைக்கின்றேன்.

சரி இனி போட்டிக்கு வருவம்...

இந்தப்போட்டி ஏறக்குறைய யாழ் இணையம் அகவை ஒன்பதின்போது வைக்கப்பட்ட லெப் கேணல் பூட்டோ நினைவுப் போட்டிக்கு ஒப்பானது. இது ஒரு நேரடிப்போட்டி. போட்டி திகதியாக 10.02.2008 ஞாயிறுக்கிழமையை இப்போதைக்கு தெரிவு செய்து இருக்கிறன். காதலர் தினம் 14ம் திகதி வியாழக்கிழமை - கிழமை நாளில் வருவதால் அப்போது இந்தப்போட்டியை வைத்தால் பலரால் கலந்துகொள்ள முடியாது போகலாம்.

10.02.2008 அன்று கனடா நேரம் காலை 7.00 மணி, யூரோப் மாலை 1.00 மணி, சிட்னி இரவு 11.00 மணி (எண்டு நினைக்கிறன்.. ) இந்தநேரத்தில போட்டியை வைக்கலாம். உங்களில் பலருக்கு நேரம் பிரச்சனையாக இருந்தால் பிறகு மாற்றி அமைக்கலாம். ஞாயிற்றுக்கிழமையை விட 09.02.2008 சனிக்கிழமை பலருக்கு வசதிப்படுமாய் இருந்தால் அன்று இதை மாற்றி வைக்கலாம்.

[கீழ எனக்கு தெரிஞ்ச அளவில நேரத்த மாற்றம் செய்துபோடுறன், பிழை எண்டால் திருத்திகொள்ளுங்கோ. சரியான நேரம் கனடா ஈஸ்டேர்ன் ஸ்டாண்டட் டைம் காலை 7.00 மணி. இத வச்சு மிச்சம் நீங்களே கணிச்சு கொள்ளுங்கோ. நன்றி!]

Netherlands: 1.00 p.m

Colombo, Sri Lanka: 5.30 p.m

Germany: 1.00 p.m

Switzerland: 1.00 p.m

Kilinochchi, Tamil Eelam ???

U.K: 12.00 noon ??

Sydney Australia: 11.00 p.m

U.S.A: 7.00 a.m (ஈ.எஸ்.டி)

France: 1.00 p.m

Canada: 7.00 a.m (ஈ.எஸ்.டி)

போட்டி சுமார் ஒன்று தொடக்கம் ஒன்று அரை மணித்தியாலங்கள் நீடிக்கும். போட்டியில் வெற்றிபெறுவருக்கு என்ன பரிசு கொடுக்கப்படும் என்று பின்னர் அறிவிக்கின்றேன்.

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் - "நம்பர் வண்" நினைவுப் பரிசு!போட்டி பற்றி அறிய இங்கே அழுத்தவும்..

இந்தப்போட்டியின் விதிமுறைகள் அனைத்தும் மேலுள்ள போட்டியின் விதிமுறைகளை ஒத்தே இருக்கும். ஆனால், கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் யாழ் இணையத்தில் 2007, 2008 ம் ஆண்டுகளில் கருத்தாடல் செய்யப்பட்ட காதல் சம்மந்தமான விடயங்களாக இருக்கும். யாழ் இணையத்தில் உள்ள காதல் சம்மந்தப்பட்ட விசயங்களே கேள்விகளாக கேட்கப்படும்.

போட்டிக்கு உங்களை தயார்படுத்தும்முகமாக நான் மாதிரிகேள்விகளை கேட்கின்றேன். தெரிந்தவர்கள் சரியான விடையை சொல்லுங்கோ. நேரடிப்போட்டி தொடங்கும்வரை நான் உங்களை பரீட்சைக்கு தயார்ப்படுத்திக்கொண்டு இருக்கின்றேன்.

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றிகள்!

மாதிரி கேள்வி 01: கீழுள்ள காதல் கவிதையை யாழில் எழுதியவர் யார்?

வான வில்லின்

வர்ணங்கள் வளைத்து

எண்ணம் என்னும்

வண்ணம் எடுத்து

கற்பனைத்தேன் கலந்து

காரிகை உனைக் கிறுக்க‌

தூரிகை நான் எடுத்தேன்...

காவியம் பேசும்- அவள்

கண்கள் வரைய‌

கரு முகிலை தூதுவிட்டு

கருவிழியாக்கினேன்...

சிறகடிக்கும்

சிட்டுக்குருவியின்

இறகை- அவள்

இமைக்கு மடலாக்கினேன்...

வளர்ந்து வரும்

வளர் பிறையை

வளைத்து-அவள்

வதனத்தில் வைத்தேன்...

இள‌ம் த‌ளிர்-அவள்

இத‌ழ் வைக்க‌

இத‌ழோடு-பூ

இத‌ழ் வைத்தேன்...

கார் கால‌த்து

க‌ரும் இருளை

காத‌ல்-கள்ளியின்

கூந்த‌லாக்கினேன்..

தேன் நிலவு

தேவியை தேடி-பிடித்து

திரும‌க‌ளின்-திரு

தில‌க‌மாக்கினேன்..

தெரிஞ்ச ஆக்கள் யாராவது சொல்லுங்கோ பாப்பம்? அப்பதான் அடுத்த கேள்வியை கேட்க முடியும்..

Link to comment
Share on other sites

  • Replies 229
  • Created
  • Last Reply

அட கெட்டிக்காரன் கண்டுபிடிச்சுட்டீங்கள். நான் கேள்விய ஈசியா கேட்டிட்டன் போல இருக்கிது. ஏன் எண்டால் இலக்கியன் எழுதுறத கவிதைகள இலகுவா கண்டுபிடிக்கலாம்.

மாதிரி கேள்வி 02:

யாழ் கள காதலர் மணிவாசகன் + ரசிகை திருமணம் எப்போது, எங்கு நடைபெற்றது? (திகதி + இடம்?)

Link to comment
Share on other sites

ஜீலை 11/2007 இடம் வந்து இலண்டனில என்று நினைக்கிறேன்... :wub:

Link to comment
Share on other sites

கெட்டிக்காரன், போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! ஆனா.. மாதிரிக் கேள்விகள் ஒருநாளைக்கு ரெண்டு, மூண்டுக்கு மேல தரமாட்டன். பிறகு உண்மையா சோதின வைக்கேக்க எனக்கு கேள்வி தயாரிக்கிறது கஸ்டமா போயிடும்.

போட்டி சம்மந்தமான இதரவிசயங்கள் நேரங்கள் பற்றி ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கோ.

மற்றது, உங்களுக்கு தெரிஞ்ச யாழ் உறவுகளையும் போட்டியில பங்குபெறவச்சு.. அன்று போட்டி நடைபெறும் நேரம் எல்லாரும் யாழில ஒன்லைனில நிக்கிறமாதிரிக்கு ஒழுங்கு செய்யுங்கோ. தனிமடலில உங்கள் நண்பர்களையும் கூப்பிடுங்கோ. நானும் முடியுமானால், நேரம் கிடைத்தால் இதுபற்றி தனிமடல் அனுப்ப முயற்சிக்கிறன். நன்றி!

Link to comment
Share on other sites

அட என்னையா கெட்டிகாரன் என்று சொன்னனியள் தாங்ஸ் :D ....அப்ப இங்கே போடுற கேள்வி எல்லாம் சோதனைக்கு வராதா குருவே இது என்ன கொடுமை :wub: ...யூனியில கூட கடைசி நேரம் "டியூட்டோரியலில" தாற சாம்பிள் எக்ஸாம் பேப்பரை படித்து போட்டு போய் தானே டெஸ்டே செய்யிறனான் :o அதில இருக்கிற கேள்வி கொஞ்ச மாற்றி தான் போடுறவை ஒன்றும் பெரிய கஷ்டமா இருக்காது...நீங்க என்னவென்றா வேற கேள்வி தாறியள் என்று சொல்லுறியள் உது நல்லா இல்லை...(பிறகு நன் அட்டன்ட் பண்ண மாட்டேன் உந்த சோதனைக்கு :lol: )...என்னதிற்கும் கேள்வியை ஈசியா போடுங்கோ வைனல் எக்சாமிற்கு குருவே :) ..முதலே எனக்கு ஆன்சர் சீட்டை தந்தியள் என்றா நல்லா இருக்கு..கியூசன் பேப்பர் வேண்டாம் அதை பார்த்து பிறகு விடையை தேடுறது எல்லாம் மிணகட்ட வேலை பாருங்கோ... :o

போட்டி இனிதாக அமைய வாழ்த்துகள் :) ...நானும் தெரிந்த எல்லாருக்கும் மடல் அனுப்புறேன் இதை பற்றி...அது சரி போட்டியில வெல்லுற ஆளிற்கு என்ன பரிசு முக்கியமா தோற்கிற ஆளிற்கு என்ன பரிசு என்று சொல்லவில்லை அது தானே முக்கியம் அதையும் ஒருக்கா அறிவித்து விடுங்கோ..!! :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உங்கள் ஆதரவிற்கு நன்றி!

மாதிரி கேள்வி 03: ஏதாவது ஒரு காதல் ஜோக் ஒன்று சொல்லவும்.. ?? (சிரிக்கக்கூடிய மாதிரி இருந்தால்தான் புள்ளி வழங்கப்படும். போட்டியின்போது முதலாவதாக பிரசுரித்தாலும் சிரிக்கிறமாதிரி இல்லாவிட்டால் புள்ளி வழங்கப்பட மாட்டாது.)

Link to comment
Share on other sites

பெண் 1 - நான் உவரை தான் காதலிப்பேன்... :wub:

ஜெனரல் -யாரப்பா அந்த மனுசன் :huh:

பெண் 1- அவர்தான் நெடுக்ஸ் :wub:

ஜெனரல் -இது தான் இந்த ஆண்டின் மிக பெரிய பகிடி :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பெண் 1 - நான் உவரை தான் காதலிப்பேன்... :wub:

ஜெனரல் -யாரப்பா அந்த மனுசன் :huh:

பெண் 1- அவர்தான் நெடுக்ஸ் :wub:

ஜெனரல் -இது தான் இந்த ஆண்டின் மிக பெரிய பகிடி :lol:

அப்ப நான் வரட்டா!!

இது சிரிக்கக்கூடிய மாதிரி இல்ல. வேற பகிடி சொல்லுங்கோ.. இதுக்கு புள்ளி கிடையாது.

Link to comment
Share on other sites

அதற்கு புள்ளி இல்லையோ இந்தாங்கோ இதுக்கு இது சுட்ட ஜோக் உதுக்கு புள்ளி இருக்கோ... :wub:

"உன் காதலன் மெழுகுவர்த்தி தயாரிக்கிறாரா?" :wub:

"ஏன்?" :huh:

"உருகி உருகிக் காதல் கடிதம் எழுதியிருக்கிறாரே." :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இதுவும் சிரிக்கக்கூடிய மாதிரி இல்ல... இதுக்கும் புள்ளி கிடையாது. என்ன பகிடிவிடத்தெரியுமா இருக்கிறீங்கள்.. கற்பனைய கொஞ்சம் அவிட்டு விடுங்கோ..

Link to comment
Share on other sites

நான் ஒரு கற்பனைய அவிழ்த்துவிடுறன். சிரிக்கக்கூடிய மாதிரி இருக்கோ எண்டு பாருங்கோ...

காதலி: ஏன் எனக்கு ஐ லவ் யூ எண்டு நான் கோயிலுக்க நிக்கேக்க சொன்னனீங்கள்? :wub:

காதலன்: அப்பத்தானே உங்கட காலில செருப்பு இருக்காது? எல்லாம் பாதுகாபுக்காகத்தான்.. :huh:

Link to comment
Share on other sites

இப்ப எனக்கு காலம 4 மணி உந்த நேரத்தில நேக்கு பகிடியா வரும் :huh: நேக்கு நித்தா வருது நான் படுக்க போறேன் நாளைக்கு வாரேன்.. :wub: (நான் உங்கே 4 மணி மட்டும் நின்ற மாட்டர் ஒருவாவிற்கு தெரிந்தா போச்சு நான் ஸ்கேப் :wub: )...அத்தோட நீங்க சொன்ன ஜோக் நேக்கு சிரிப்பு வரவில்லை நீங்களும் டிரை பண்ணுங்கோ நான் நாளைக்கு வாரேன் குட்நைட்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சரி போய் தூங்குங்கோ நல்லிரவு!

நான் சொன்னதும் பகிடிமாதிரி இல்லையோ? பரவாயில்ல...

போட்டியில கேள்விகேட்கப்போறது மாத்திரம் தானே எண்ட வேலை? எண்டபடியால் தொடர்ந்து நான் பகிடிவிட முயற்சித்துப் பார்க்க விரும்பவில்லை.

யாராவது நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லுங்கோ பார்ப்பம்..

மாதிரி கேள்வி 03: ஏதாவது ஒரு காதல் ஜோக் ஒன்று சொல்லவும்.. ?? (சிரிக்கக்கூடிய மாதிரி இருந்தால்தான் புள்ளி வழங்கப்படும்.)

Link to comment
Share on other sites

ஆஹா நேரடிப்போட்டியா..... ஹும் நேரம் கிடைக்கிறவர்கள் கலந்து கொள்ளுவினம் எண்டு நினைக்கிறன்.யமுனா தான் வெற்றி பெற போறாரோ எண்டு தோணுது....ஹிஹி வெற்றி பெற போறவர்களுக்கு இப்பவே வாழ்த்துக்களை தெரிவிக்கிறன்.

காதல் ஜோக் கேட்டிருக்குறீங்க ... ஒரு ஜோக் இணைக்கிறன்....ஜோக் சிரிக்க கூடியமாதிரி இருக்கோ தெரியயில்லை ..... :huh:

ஆண் : "ஐ லவ் யூ டியர், உனக்காக என் உயிரக்கூட தர தயாராக இருக்கேன்"

பெண் : எப்ப? எப்ப? ? ? ? ?.... :wub::wub:

Link to comment
Share on other sites

ஆண்:- உன்ன முதல் முதல்ல பார்க்கும்போது எவ்வளவு அழகாயிருந்தா.

பெண்:- இப்போ எப்படி?

ஆண்:- உன்ன விட எல்லாப் பெண்களும் அழகாயிருக்காங்க.

Link to comment
Share on other sites

புதிதாக காதல் திருமணம் செய்துகொண்ட ஒருவன், தனது மனைவியைப் பற்றி பெருமை யாக நினைத்துக் கொண்டு இருந்தான். அப்போது அவன் முன்னால் கடவுள் தோன்றினார்.

அவன் கடவுளிடம், என் மனைவியை ஏன் இவ்வளவு மென்மையான இதயம் கொண்டவளாக படைத்தீர்கள்? என்று கேட்டான். உடனே கடவுள், அப்போதுதான் அவள் மீது உனக்கு காதல் ஏற்படும் என்பதால், அவ்வாறு படைத்தேன் என்றார்.

.

என் மனைவியை ஏன் இவ்வளவு அழகானவளாக படைத்தீர்கள்? என்று கேட்டான். உடனே கடவுள், அப்போதுதான் அவளை நீ விரும்புவாய் என்றார். தொடர்ந்து பேசிய இளைஞன், என் மனைவியை ஏன் முட்டாளாக படைத்தீர்கள் என்று கேட்டான். உடனே கடவுள், அப்போதுதான் அவள் உன்னை காதலிப்பாள் என்றார். :huh:

Link to comment
Share on other sites

ஆஹா நேரடிப்போட்டியா..... ஹும் நேரம் கிடைக்கிறவர்கள் கலந்து கொள்ளுவினம் எண்டு நினைக்கிறன்.யமுனா தான் வெற்றி பெற போறாரோ எண்டு தோணுது....ஹிஹி வெற்றி பெற போறவர்களுக்கு இப்பவே வாழ்த்துக்களை தெரிவிக்கிறன்.

காதல் ஜோக் கேட்டிருக்குறீங்க ... ஒரு ஜோக் இணைக்கிறன்....ஜோக் சிரிக்க கூடியமாதிரி இருக்கோ தெரியயில்லை ..... :huh:

ஆண் : "ஐ லவ் யூ டியர், உனக்காக என் உயிரக்கூட தர தயாராக இருக்கேன்"

பெண் : எப்ப? எப்ப? ? ? ? ?.... :wub::lol:

ஒருவர்: மனைவிக்கும், பெண் நண்பருக்கும்(girl friend) என்ன வித்தியாசம்?

மற்றவர்: 45Lbs :):)

ஆண்:- உன்ன முதல் முதல்ல பார்க்கும்போது எவ்வளவு அழகாயிருந்தா.

பெண்:- இப்போ எப்படி?

ஆண்:- உன்ன விட எல்லாப் பெண்களும் அழகாயிருக்காங்க.

புதிதாக காதல் திருமணம் செய்துகொண்ட ஒருவன், தனது மனைவியைப் பற்றி பெருமை யாக நினைத்துக் கொண்டு இருந்தான். அப்போது அவன் முன்னால் கடவுள் தோன்றினார்.

அவன் கடவுளிடம், என் மனைவியை ஏன் இவ்வளவு மென்மையான இதயம் கொண்டவளாக படைத்தீர்கள்? என்று கேட்டான். உடனே கடவுள், அப்போதுதான் அவள் மீது உனக்கு காதல் ஏற்படும் என்பதால், அவ்வாறு படைத்தேன் என்றார்.

.

என் மனைவியை ஏன் இவ்வளவு அழகானவளாக படைத்தீர்கள்? என்று கேட்டான். உடனே கடவுள், அப்போதுதான் அவளை நீ விரும்புவாய் என்றார். தொடர்ந்து பேசிய இளைஞன், என் மனைவியை ஏன் முட்டாளாக படைத்தீர்கள் என்று கேட்டான். உடனே கடவுள், அப்போதுதான் அவள் உன்னை காதலிப்பாள் என்றார். :)

ஆக மொத்ததில அனி, இறைவன், நுணாவிலான், யமுனா... உங்கள் ஒருவராலையுமே என்னைச் சிரிக்க வைக்க முடியவில்ல. :) உங்கள் ஒருவருக்கும் புள்ளி கிடையாது.

என்னப்பா ஒருவராலையும் ஒரு பகிடிவிட்டு எனக்கு சிரிப்பு வரப்பண்ண ஏலாதா? :wub:

திரும்பவும் இதுதான் கேள்வி: என்னால சிரிக்கக்கூடியதான ஒரு ஜோக்கை பார்த்தால்தான் அங்காள நகரமுடியும்.

அட ஒருவராலையும் ஒரு ஜோக் சொல்லி சிரிக்க வைக்க முடியாதா? :)

மாதிரி கேள்வி 03: ஏதாவது ஒரு காதல் ஜோக் ஒன்று சொல்லவும்.. ?? (சிரிக்கக்கூடிய மாதிரி இருந்தால்தான் புள்ளி வழங்கப்படும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஞாயிற்றுக்கிழமைகளில சரியான பிசி. அது ஒன்றுமில்ல நான் தான் வீட்டுக்கே சமைச்சுப் போடனும். :wub:

காதலன்: ஏன் இவ்வளவு நாளும் என்னைக் காதலிச்சிட்டு இப்ப வேணாங்கிறே..

காதலி: உங்க சமையல ருசி பார்த்தேன் கசந்திடுச்சு.

----------

காதலன்: ஏண்டி டொக்கு டொக்குன்னு ஒரு செருப்பைப் போட்டு ஆக்களைக் கொல்லுறே

காதலி: உங்க குறட்டை சத்தத்தில தினமும் சாவுறனே அதை விடவா.

----------

காதலன்: ஏண்டி இன்று இன்னும் எம் எஸ் என் வரல்ல..?!

காதலி: இன்னும் அவர் ஒன் லைனுக்கு வரல்லங்க.

காதலன்: எவரடி?

காதலி: உங்க வில்லன் தான்.

----------

காதலன்: ஏம்மா ரதி..உன் கைகள் மலர் போல் மென்மையாக இருக்கின்றனவே?

காதலி: சும்மா பொய் சொல்லாதேங்க.

காதலன்: பொய் இல்ல நிஜம்.

காதலி: எப்படிச் சொல்லுறீங்க

காதலன்: நான் தான் நேற்று தேனீயை விட்டு சோதிச்சுப் பார்த்தனே.

காதலி: அடப்பாவி நீங்களா தேனீயை விட்டு கொட்டு விச்சீங்க. இன்னும் அந்த வலி மாறல்லங்க.

----------

காதலன்: என்ன நேற்றே எம் எஸ் என்னில போன் நம்பர் தந்தன் இன்னும் அடிக்கக் காணம்..?!

காதலி: அத்தனை நம்பருக்க எது உங்களது என்றதை கண்டுபிடிக்கச் சிரமமாகிட்டுது.

----------

காதலி: என்னங்க நான் பேசிக்கிட்டே இருக்கிறன் நீங்க போனைக் காதில வைச்சிட்டு இருக்கீங்க.

காதலன்: உன் குரலை விட போன் ரொப் அப் பண்ண கைட் பண்ணுற பொண்ணு குரல் நல்லா இருக்கு.

----------

காதலன்: ஏன் செல்லம்.. ஒரு நாளைக்கு சேலை கட்டி வாருமன். பார்க்க ஆசையா இருக்கு?

காதலி: சரி வாங்கித் தாங்க கட்டிக்கிறன்.

-----------

காதலி: என்னங்க வந்த நேரம் முதல்.. என்னையே முகர்ந்து முகர்ந்து பாக்கிறீங்க. ஆக்கள் பார்த்தா என்ன நினைப்பினம்.

காதலன்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு என்றாங்க அதுதான் சோதிச்சுப் பாக்கிறன்.

-----------

காதலன்: ஏம்மா நான் உனக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறன். நீ சாப்பிட்டியா?!

காதலி: பின்ன நான் உங்களுக்காகப் பசி இருப்பனா.

-----------

காதலன்: எவ்வளவு நேரமா என் செல்லத்துக்காகக் காத்திருக்கன்.

காதலி: நான் சொன்னனா காத்திருக்கச் சொல்லி.

----------

காதலி: ஏங்க அந்தப் பரிசுப் பொருள் நல்ல அழகா இருக்குல்ல.

காதலன் (மனசுக்க): அடி பாவி இப்ப அதை வாங்கித் தரச் சொல்லுறாளே. நம்மிட்டதா நயாப் பைசா கூட இல்லையே.

காதலன்: உன்னை விட அது அழகா என்ன.

----------

காதலன்: போதும் போதும் உன்னோட பொய்களை நம்பினது போதும்.

காதலி: ஏங்க இதையாவது உண்மையாச் சொல்லுறீங்களா.

------------

காதலன்: ஏண்டி நான் என்னதான் பொய் சொன்னாலும் தெரியாத மாதிரியே இருக்கிறியே.

காதலி: நாய் வாலை நிமிர்த்த முடியுங்களா.

------------

காதலி: ஏங்க ஒரு வாய் சாப்பிடுங்களன்.

காதலன்: எதுக்கடி.. சரி அன்பாத் தாறா.. தா.

காதலி (காதலன் சாப்பிட்டு முடிய): இல்லைங்க அது நான் வழமையா எங்க வீட்டு நாய்க்குப் போடுற பங்குங்க.

-----------

காதலி: என்னால உங்களைக் கலியாணம் செய்ய முடியாது.

காதலன்: ஏண்டி என்னாச்சு திடீர் என்று.

காதலி: திடீர் என்றுதாங்க இன்னொருத்தன் மேல காதல் வந்திடிச்சு.

-----------

காதலன்: உன்னோட ஒட்டிக்கிட்டு ரயிலில போறதே தனி சுகண்டி

காதலி: ஆமாங்க.. ஓசியில என் காசில வாறீங்கல்ல.

-----------

காதலன்: என்ன வாங்குவம்.. மக் சிக்னா.. பீசா கட் பிசாவா

காதலி: இரண்டும் வேணாம்.

காதலன்: அப்ப என்னதான் வாங்க

காதலி: நான் வாங்கிறேங்க.

காதலன்: சரி வாங்கு

காதலி: கிட்ட வாங்க வாங்குறன்.

காதலன்: ஏண்டி காதை வாங்கிறாங்க.

காதலி: நீங்க தானே வாங்கு எண்டீங்க.

------------

காதலன்: ஏண்டி யாழ் களமுன்னு ஒன்றிருக்கு தெரியுமோ..?!

காதலி: அங்க தாங்க நேசக்கரம் இருக்கு.

காதலன்: அது காதல் கரம் இல்லடி.. கலியாணம் கட்டி செற்றிலாக. அது உதவிக் கரமடி. :lol:

-------------

காதலன்: ஏண்டி நாம ஒரு பிள்ளை நாட்டுக்காகப் பெறனுண்டி.

காதலி: நாம இல்ல நான்.

காதலன்: ஓமடி நீதான்.

காதலி: ஆமா நாட்டுக்காக பெத்த பிள்ளை தானே நீங்க என்று சொன்னாவே உங்கம்மா. :huh:

---------

காதலன்: ஏண்டியம்மா நமக்கு எப்படி பேபி பிறக்கும் என்று நினைக்கிறே?

காதலி: ஜம்மு பேபி போல ஒன்றுங்க.

காதலன்: மாப்பு.. ஜம்மு வைச்சிட்டாண்டா ஆப்பு :)

--------------

காதலன்: எனக்கு கலைஞனா வர ஆசை

காதலி: என் எக்ஸ் (Ex) கலைஞன் தாங்க.

காதலன்: அடி பாவி. :wub:

- நன்றி வணக்கம் வந்தனம் நமஸ்தே. :)

Link to comment
Share on other sites

காதலன்: ஏண்டி இன்று இன்னும் எம் எஸ் என் வரல்ல..?!

காதலி: இன்னும் அவர் ஒன் லைனுக்கு வரல்லங்க.

காதலன்: எவரடி?

காதலி: உங்க வில்லன் தான்.

----------

காதலி: என்னங்க நான் பேசிக்கிட்டே இருக்கிறன் நீங்க போனைக் காதில வைச்சிட்டு இருக்கீங்க.

காதலன்: உன் குரலை விட போன் ரொப் அப் பண்ண கைட் பண்ணுற பொண்ணு குரல் நல்லா இருக்கு.

----------

:o மேல இருக்கிற ஜோக் ரெண்டும் உள்ளதுக்க மிகவும் நகைச்சுவையாக உள்ளது. உங்களுக்கு புள்ளிகள் தரப்படுகின்றது. :D

உப்பிடி பகிடிகள் தொடந்து எழுதி தமிழ் சினிமாவுக்க போனா நல்ல எதிர்காலம் இருக்கிது.. :):D

எல்லாம் சொந்த அனுபவம் போல இருக்கிது? நன்றி!

மாதிரிக் கேள்வி 04: காதல் சம்மந்தமான ஒரு ஆண், ஒரு பெண் தமிழ் பெயர்கள யாராவது சொல்லுங்கோ பாப்பம். உதாரணமா உங்களுக்கு இல்லாட்டி எனக்கு எதிர்காலத்தில ஒரு ஆண், பெண் குழந்தைகள் பிறந்தால் அவற்றுக்கு மிகவும் காதலை வெளிப்படுத்தும் பெயரை நாங்கள் வைக்க விரும்பினால் குழந்தைகளிற்கு என்ன பெயருகள் வைக்கலாம்? (நல்ல ஸ்டைலான மொடேர்ன் பெயராகவும் இருக்கவேணும், நீளம் இல்லாமல் சுருக்கமான பெயராகவும் இருக்கவேணும், அதேநேரம் தமிழ்ப்பெயராகவும் இருக்கவேணும்..)

யாராவது முடிஞ்சால் சொல்லுங்கோ பாப்பம்? (உதவி தேவைப்பட்டால் சபேசன் அண்ணையக் கேளுங்கோ)

Link to comment
Share on other sites

பெண் குழந்தை எனில்

நிலக்சி -- Nilakshi( blue- eyed)

யாசிகா-Yashica (Success)

நுணாவிலான் பெயர் நல்லா இருக்கிது. ஆனா இது உண்மையில தமிழ் பெயர் தானோ? நிலக்சி எண்டுற பெயர் தமிழா எண்டு சரியா தெரியவில்லை..

இதயா..(பொது)

ப்ரியன்

ப்ரியா

விகடகவி, பெயர் ரெண்டும் நல்லா இருக்கிது...

சகி எண்ட பெயரும் காதல் சம்மந்தமான பெயர்தானே? இதையும் ஆண், பெண் இருவருக்கும் வைக்கலாமோ?

மாதிரி கேள்வி 05: நீங்கள் ஒரு பெண்ணை அல்லது ஆணை காதலிக்கிறீங்கள் எண்டு வைப்பம். உங்கட காதலன் அல்லாட்டி காதலிக்கு நாளைக்கு பிறந்தநாள். ஆனா இண்டைக்கு உங்கட கையில காசு ஒண்டும் இல்ல. இப்படியான நிலமையில நீங்கள் பிறந்தநாளுக்கு என்ன பரிசு குடுப்பீங்கள்.. (மிகச்சிறந்த ஐடியாவுக்கு புள்ளிதரலாம்..)

Link to comment
Share on other sites

உண்மையான காதலுக்கு.. என்ன பரிசு கொடுக்கிறீங்க என்றது முக்கியமில்ல..

அத ஒரு முக்கியமான நாளா ..மறக்காம..முதல் ஆளா..கொடுக்கிறது தான் முக்கியம்..

நான்(நகரம்) என்கிட்ட காசில்லை எண்டா..அவாவிற்கு ஒரு அழகான ரோஸ்..ஒரு அழுத்தமான கிஸ்...

நான்(கிராமம்) எண்டா.. எட்டி நிண்டு வாழ்த்து..அவா பேரில செய்த அர்ச்சினைப் பழம்..விபூதி..(அட இவனே சரியான பழம் போல இருக்கே..)

காதலிக்கு காசிலதான் ஏதும் வாங்கணும் அப்பதான் அவ ஏத்துப்பான்னா அவ காதலி இல்லை..

..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.