Jump to content

கொத்து ரொட்டி


Recommended Posts

கொத்து ரொட்டி

இது இலங்கையில் பிரபலமான உணவு.அசைவம், சைவம் இரு வகைகளிலும் செய்வார்கள்.

தேவையானப் பொருட்கள்

ரொட்டிக்கு:

===========

கோதுமை மா/மைதா மா - 3 கப்

பட்டர்மில்க் - 1/2 கப்

உப்பு

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

பிரட்டலுக்கு:

=============

உருளைக்கிழங்கு - 3 சிறியது

தக்காளி - 2 சிறியது

வெட்டிய கோஸ்,கரட் கலவை - 1 கப்

வெட்டிய காலிஃபிளவர் - 1/2 கப்

ஊறவைத்த சோயாமீற் - 1/2 கப்

அவித்த கடலை - 1 கப்

வெங்காயம் - 1 பெரியது

உள்ளி - 15 பல்லுகள்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 1" துண்டு

கராம்பு - 4

ஏலம் - 3

கறுவா - 2" துண்டு

கடுகு

பெரிய சீரகம்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை

செய்முறை

உருளைக்கிழங்கு, தக்காளி, ஊறவைத்த சோயாமீற்றை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய் என்பவற்றை நீளமான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

கராம்பு, ஏலம், கறுவா என்பவற்றை வறுத்து பொடியாக்கி வைக்கவும்.

வெட்டிய காலிஃப்ளவரில் சிறிது உப்பு போட்டு கலந்து மூடி மைக்ரோவேவில் 4 நிமிடங்களுக்கு அல்லது ஆவியில் வைத்து அவித்து எடுக்கவும். (தண்ணீர் விட தேவை இல்லை)

கோதுமை/மைதா மாவில் உப்பு, பேக்கிங் பவுடர், பட்டர் மில்க், தண்ணீர் சேர்த்து சிறிது தடிப்பான தோசை மாவு பதத்திற்கு குழைக்கவும்.

பின்னர் தோசைக்கல்லில் சிறிது தடிப்பான தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

இவை சிறிது ஆறியதும் ஒரு அங்குல துண்டுகளாக கத்தியால் வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பெரிய சீரகம், நீளமாக வெட்டிய வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உருளை, சோயாமீற் என்பவற்றை போட்டு வதக்கவும்.

பின்னர் அவித்த கடலை, அவித்த காலிஃபிளவர், கோஸ்,கரட் கலவையை சேர்த்து வதக்கவும்.

கலவை ஓரளவு வதங்கியதும் 1 கப் நீர் விட்டு மூடி அவிய விடவும்.

பின்னர் வெட்டிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் அவிய விடவும்.

கலவை நன்கு அவிந்து ஓரளவு நீர் வற்றியதும் குறுணலாக வெட்டிய இஞ்சி சேர்த்து கிளறவும்.

கலவை நன்கு நீர் வற்றி சுருண்டதும் பொடியாக்கிய ஏல கலவையை போட்டு கிளறி மூடி 2 நிமிடங்கள் மெல்லிய நெருப்பில் வைக்கவும்.

பின்னர் வெட்டிய தோசைத் துண்டுகளை கொட்டி கறியுடன் சேரும்வரை நன்கு கிளறவும்.

சுவையான கொத்து ரொட்டி தயார். இதனை பரிமாறும் தட்டில் கொட்டி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு:

இதற்கு துண்டுகளாக்கிய லேயர் பரோட்டாக்களையும் பன்படுத்தலாம். இலங்கையில் கடைகளில் லேயர் பரோட்டாக்களைத்தான் பயன்படுத்துவார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நுணாவில் உள்ளதை சொல்லும் உண்மையிலேயே உந்தசெய்முறை கொத்துரொட்டிக்குத்தானோ? :)

Link to comment
Share on other sites

தம்பி நுணாவில் உள்ளதை சொல்லும் உண்மையிலேயே உந்தசெய்முறை கொத்துரொட்டிக்குத்தானோ? :)

இப்படியும் செய்யலாம் என்பது தான்.யாரும் இந்த முறையில் செய்து பார்த்தால் தானே தெரியும் கு.மா அண்ணா.நான் என்ன வைச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறேன். :):)

Link to comment
Share on other sites

"கொத்து ரொட்டி" பேபிக்கு உயிர் நல்லா விருப்பம் ஆசை காட்டி போட்டியள் :) .................பேபி கேட்டு ஒருத்தரும் செய்து தராதபடியா பேபியே கடைக்கு போய் கொத்து சாப்பிட போகுது :) சுண்டல் அண்ணா "சகனாவிற்கு" போவோமா வேறேன்னதிற்கு கொத்துவிற்கு தான்!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.