Jump to content

வைகோ, நெடுமாறனுக்கு நிபந்தனை ஜாமீன்


Recommended Posts

சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007 ( 22:30 )

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் த‌மி‌ழ்ச்செ‌ல்வன் மறைவுக்கு இரங்கல் ஊ‌ர்வல‌ம் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாற‌ன் மற்றும் மதிமுக பொது‌ச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இலங்கை ராணுவ தாக்குதலில் பலியான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் த‌மி‌ழ்ச்செ‌ல்வனு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌‌வி‌த்து ஊர்வலம் நடத்தபோவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்தார். இதற்கு போலீசார் தடை விதித்தனர்.

எனினும்இ கடந்த 12ம் தேதி பழ.நெடுமாறன், வைகோ தலைமையிலான தொண்டர்கள் பேரணி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் தங்களை ஜாமீனில் விடுவிக்க‌க்கோரி சென்னை நகர 5 வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் முருகானந்தம் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

(மூலம் - வெப்துனியா)

நன்றி : தமிழ் யாகூ

Link to comment
Share on other sites

செசன்ஸ் நீதிமன்றத்தில் வைகோ நெடுமாறன் உட்பட 262 பேர் பிணை கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Friday November 16 2007 11:46:49 PM GMT] [Naffel]

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 262 பேர் பிணை கேட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் பிணை கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும் சென்னையில் ஊர்வலம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 282 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை பிணையில் விடுவிக்கக்கோரி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் கூறியுள்ளார். எனவே பிணை மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் எழும்பூர் 6 ஆவது மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ம.தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வைகோ, நெடுமாறன் உட்பட கைது செய்யப்பட்டுள்ள 282 பேரையும் பிணையில் விடுதலை செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிணை மனு மீதான விசாரணை நீதிபதி முருகானந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

http://www.tamilwin.net/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஆதரவான குரல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முனைந்தாலும் என்றைக்கும் அது அணையாது என்பதை அடக்குமுறையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

எமக்காச் சிறை சென்ற எம்முறவுகளுக்கு நன்றி தெரிவிப்பதைத் தவிர, வேற ஏதுவுமே எம்மால் முடியவில்லை.

Link to comment
Share on other sites

சிறைமீண்ட செந்தமிழ் மறவர்கள் வைகோ, நெடுமாறன் இருவருக்கும் ஈழத்தமிழர்களின் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

மேலும் வாசிக்க: http://www.hindu.com/thehindu/holnus/002200711161841.htm

நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்

Link to comment
Share on other sites

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க ஊர்வலத்தை அனுமதி மறுப்பை மீறி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 262 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.