Jump to content

இதயம் மட்டும் பேசட்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் மட்டும் பேசட்டும்

இசை மழைதனில் இன்பமாய் நனைந்து

பசை கொண்ட மனிதருடன் பாங்காய்

அசைந்து ஆடும் ஆட்டத்தின் உச்சம்

இசைந்திடும் மனதின் ஆதாரம் என்றிருந்தேன்

இதழுடன் இதழ் ஒன்றாய் இணைந்து

பின்னிக் கொள்வதில் அந்த இன்பமான

பிணைப்பே இணைப்பாய் அதுவே

பேரின்பம் தரும் போதை என்றிருந்தேன்

புண்பட்ட மனம் இங்கே நிதம் நிதம்

புண்ணாகிப் போனதால் நாளாருபொழுதாய்

புகைவிட்டு ஆற்றுகின்றேன் ஆஹா இதுவே

புத்துயிர் தரும் டொனிக் என்றிருந்தேன்

இத்தனை ஆனந்தம் எனக்குள்ளிருந்து

இதுவே வாழ்வின் சொர்க்கம் என்றே நனைந்தவேளை

இடப்பெயர்வு இன்னல்கள் சுமந்திடும்

இதயங்களின் கதை கேட்டுணர்ந்தபோது

இதயத்து சுகங்கள் இமைவழி மறைந்தோடிட

இடையறா பங்களிப்பு இரட்டிப்பாய் அளித்தபோது

இதயத்தில் கிடைத்ததே ஒருவித அமைதி ஒருமுறை

இதயம் மட்டும் பேசட்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் இதயத்துக்குப் பேசத் தெரியல்ல. பேசச் சொல்லிக் கொடுக்கும் மூளையின் பேச்சையே உலகம் நம்புதில்ல. இதயம் பேசி... ஏன் கறுப்பி வீணான கற்பனை பண்ணி.. மக்களை ஏமாத்திறீங்க.. கவிதையென்று..! பேசிற ஒரு இதயத்தைக் காட்டுங்க பாப்பம்..??! இப்படிச் சொல்லிச் சொல்லியே ஏமாற வைச்சிடுறாங்க மனிசரை..!

நானும் இதயம் உள்ளவங்க இரக்கமுள்ளவங்க.. அவங்க இதயம் பேசினா கேட்பாங்க என்றதையெல்லாம் நம்பி.. கெட்டதாலதான் சொல்லுறம். மக்களுக்கு தவறான தகவலைச் சொல்லி ஒரு மாயை உலகுக்குள்ள தள்ளி விடாதேங்க. எதிர்பார்த்து ஏமாறுற போது அது சாதாரணமா அமையுறதில்ல..! கவிதையில பொய் சொல்லுறது இலகு அது தரும் தனி மனித பாதிப்புக்கள் எல்லையற்றவை..! :lol::lol:

Link to comment
Share on other sites

இத்தனை ஆனந்தம் எனக்குள்ளிருந்து

இதுவே வாழ்வின் சொர்க்கம் என்றே நனைந்தவேளை

இடப்பெயர்வு இன்னல்கள் சுமந்திடும்

இதயங்களின் கதை கேட்டுணர்ந்தபோது

கறுப்பி அக்காவின் இதயம் மட்டும் பேசட்டு கவிதை அழகு வாழ்த்துகள் கறுப்பி அக்கா!! :lol: இதயம் பேச வெளிகிட்டால் எத்தனையோ விசயத்தை பேச தொடங்கிவிடும் கறுப்பி அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்,

உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? கறுப்பி அக்கா அழகிய ஒரு கவிதை ஒண்டு படைச்சு இருக்கிறா. அதைப் பாராட்டாமல் வேறென்னவோ வேறென்னவோ சொல்லி பீல் பண்ணுறீங்கள்?

அடிக்கடி பீல் பண்ணும் உங்களுக்காக ஒரு பாட்டு இதோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கவிதையில பசை என்டா பணங்கொண்டவர்களை குறிக்கிறது என நினைக்கிறன்

கறுப்பி கவிதை நல்லாவே இருக்கு. இதயம் பேசும் வார்த்தை இந்த உலகத்தில யாருக்கு தான் புரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? கறுப்பி அக்கா அழகிய ஒரு கவிதை ஒண்டு படைச்சு இருக்கிறா. அதைப் பாராட்டாமல் வேறென்னவோ வேறென்னவோ சொல்லி பீல் பண்ணுறீங்கள்?

அடிக்கடி பீல் பண்ணும் உங்களுக்காக ஒரு பாட்டு இதோ..

">

Link to comment
Share on other sites

புண்பட்ட மனம் இங்கே நிதம் நிதம்

புண்ணாகிப் போனதால் நாளாருபொழுதாய்

புகைவிட்டு ஆற்றுகின்றேன் ஆஹா இதுவே

புத்துயிர் தரும் டொனிக் என்றிருந்தேன்

கவிதை நல்லாக இருக்கு நண்பியே. கவிதையில் சந்தங்கள் மெருகூட்டுகின்றன.

அட புண்பட்ட மனசுக்கு புகைவிட்டு ஆற்றுவதால் இன்னும் புண் பெருகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாக இருக்கு நண்பியே. கவிதையில் சந்தங்கள் மெருகூட்டுகின்றன.

அட புண்பட்ட மனசுக்கு புகைவிட்டு ஆற்றுவதால் இன்னும் புண் பெருகாதா?

கவிதைக்கு பொய் அழகு தானே நண்பியே. அதுதான்.

புண்ணாகிப்போகும் என்று தெரிந்திருந்தும்

பண்பட்ட மனம் உள்ளவர்கள் கூட

புண்பட்ட மனதை புகைவிட்டு

ஆற்றுகிறார்கள்

என்ன செய்வது

Link to comment
Share on other sites

நீ கறுப்பர்

உதட்டுச்சாயம்

போடுவதைக் கண்டு

வர்ண ஒற்றுமைக்குப் போல

என நினைத்தேன...

இப்போதுதான்

புரிந்தேன்..

புகைவிட்டு

ஆங்காங்கே பழுத்தக் காய்ந்த

இடங்களை பூசி மெழுகியிருக்கிறாய் எண்டு...

பொல்லாத பெண்ணா நீ.. :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.