Jump to content

நடைமுறை அரசுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடைமுறை அரசுகள்

பண்டாரவன்னியன் ஆட்சிக்காலத்திற்குப்பிறகு கிட்டத்தட்ட நானூறு வருடங்களுக்குப்பிறகு வன்னிநிலப்பரப்பானது தமிழர்களின் ஆளுகைக்குள் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும்மேலாக தொடர்ந்து இருந்துவருகின்றது. ஆனாலும் வன்னியை ஒரு நாடாக தமிழர்கள் கூட கூறுவது குறைவாகவேயுள்ளது. இது ஏன்? நானூறுவருடங்களுக்குள் உலக நடைமுறையும் மிகப் பெரும் மாற்றங்களைக்கண்டுள்ளதுவே இதற்கான காரணமாகும். அதாவது இன்றைய உலகஒழுங்கில் ஒருநாடு நாடாகக்கொள்ளப்படுவதற்கு அது மற்றைய நாடுகளினால் அங்கீகரிக்கப்படுவது அவசியமாகிறது.

தமிழீழத்தைப்போன்ற மேலும் பல நாடுகள் அல்லது தேசிய இனங்கள் அன்னிய ஆக்கிரமிப்பால் சிதைவடைந்து மீண்டும் ஒரு நாடாக முயன்றபோதும் உலகநாடுகளின் ஆதரவு அல்லது அங்கீகாரம் இல்லாதமையால் இன்றும் வேறுநாடுகளின் ஆட்சியின்கீழ் இருக்கின்றன. இவற்றுக்கு எண்ணிலடங்காத உதாரணங்கள் உள்ளன. எனினும் சில நாடுகள் தமது முயற்சியினாலும் பலத்தாலும் நடைமுறைரீதியில் ஒரு அரசை அமைத்துள்ளன.

அவ்வாறான முழுமையான அங்கீகாரம் கிடைக்கப்பெறாத ஆனால் நடைமுறையில் ஒரு தனி அரசாங்கத்தை கொண்ட நாடுகளாக பின்வருவனவற்றைக்கூறலாம்: அப்காசியா, பூட்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், நகோனோ கரபா (Nagorno-Karabakh), சீனா, தாய்வான், சராவி ஜனநாயக அரபுக் குடியரசு (Sahrawi Arab Democratic Republic), சோமாலிலாண்ட் (Somaliland), தெற்கு ஒசேற்றியா (South Ossetia), டிரான்ஸ்நிஸ்ரியா (Transnistria), வட சைப்பிரஸ் (Northern Cyprus) ஆகியவை.

இனிவரும் காலங்களில் மேற்சொன்ன ஒவ்வொரு நாடுகளையும் பற்றியும் சிறு குறிப்புக்களை தரவுள்ளோம்.

அப்காசிய நடைமுறை அரசு

ஜோர்ஜியாவின் வட பகுதியில் ரஸ்யாவை வட எல்லையாக கொண்டபிரதேசமாக அப்காசியா விளங்குகின்றது. கிட்டத்தட்ட 8000 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பிரதேசத்தின் சனத்தொகை 250,000 ஆகும். தமிழீழத்தை விட அளவிலும் சனத்தொகையிலும் மிகச் சிரியதாக இந்தப் பிரதேசம் இருக்கிறது. எனினும் நான்கு மில்லியன் சனத்தொகையை கொண்ட ஜோர்ஜியாவின் இராணுவத்தை வென்று 1993ம் ஆண்டில் தனியரசினை நிறுவிக்கொண்டனர். அண்டை நாடான ரஸ்யாவின் ஆதரவும் துணையும் இருந்ததே இவர்களின் இராணுவ வெற்றிக்கான காரணமாகும்.

சர்வதேச அங்கீகாரம் இல்லாதிருந்த போதிலும் ரஸ்யாவின் ஆதரவு இருப்பதால் அங்கீகாரம் இல்லாத அப்காசிய தனியரசை நடைமுறைப்படுத்த முடிகின்றது. ரஸ்யாவின் நாணயமான ரூபிளே இங்கும் புழக்கத்திலுள்ளது. தமிழீழத்தைப் பொறுத்தவரை பொருளாதாரத்தில் இந்தியாவை நம்பியிருக்க வாய்ப்புக்கள் குறைவாயுள்ள பட்சத்தில் பொருளாதாரத்தில் தன்னிறைவை காணவேண்டியவர்களாக உள்ளனர். எனினும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாக கொண்டுள்ள நிலையில் சிறிலங்காவின் ரூபாயையே தொடர்ந்தும் புழக்கத்தில் கொண்டிருப்பது தற்போது ஒரு முரணாகவே (conflict of interest) நோக்கப்படக்கூடியது. விரைவில் தமிழர் தமது எதிர்கால நலன்களுக்கு சாதகமான ஒரு நாணயத்தை புழக்கத்திற்கு கொண்டுவருவது அவசியமாகும். தமிழர் பாவிக்கக் கூடிய நாணயமாக இந்திய ரூபாய், கனேடிய டொலர், அமெரிக்க டொலர், யூரோ ஆகியவற்றிலொன்றை கருதலாம். வெளிநாடுகளில் வாழும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தமிழர்கள் வழங்கக் கூடிய அன்னிய செலாவணியை கருதும்போது இந்திய ரூபாயை பாவிப்பதால் இந்தியா அடையக்க்கூடிய நன்மைகளை யாரும் மறுப்பதற்கில்லை என்பதால் இது இரு தரப்பும் நன்மையடையக்கூடிய (mutually benefidial) ஒரு திட்டமாகும் . கனடா மற்றும் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது கனேடிய டொலர் மற்றும் யூரோவும் அமெரிக்க டொலரின் வலிமையை கருதும் போது அமெரிக்க டொலரும் பொருத்தமானவையாக தென்படுகின்றன (potential candidates.)

எதிர்காலத்தில் அப்காசிய தனியரசானது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படுவதற்கான சாத்தியம் தற்போது மிகக் குறைவாகவேயுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட “சர்வதேச நலன்களுக்கு” இசைவாக அப்காசியாவின் உருவாக்கம் இல்லாமையேயாகும். தமிழீழத்தின் உருவாக்கத்தால் சர்வதேசம் பரஸ்பர நன்மையை அடையும் என்ற நிலையை உருவாக்குவதில் புலம்பெயர் சமூகம் அக்கறைப்படவேண்டு மென்பதையே இது குறிக்கின்றது.

இதுவரை கால உலக வரலாற்றில் நிலையாக ஒருநாடு குறித்த எல்லைவரையறைகளுடன் இருந்ததில்லை. தமிழீழம் போன்ற தேசிய இனங்கள் தனி நாடாக உருவாவதை தடுக்க விழையும் அதே அமெரிக்கா (“சர்வதேச சமூகம்”) சோவியத் யூனியன் என்ற நாட்டை பதினைந்து நாடுகளாக பிரித்ததுடன் நின்றுவிடாது எஞ்சியுள்ள நாடான ரஸ்யாவை இன்னும் பத்து தனிநாடுகளாக பிரிப்பதற்கு தனது உளவுத்துறையான சிஐஏ மூலம் முழுமூச்சாக முயன்றுவருகின்றது. தமிழீழம் தன்னிறைவான தனிநாடாக உருவாவதும் அது தொடர்ந்து நிலைத்து நிற்பதும் தமிழர்களின் அரசியல், பொருளாதார, மற்றும் இராணுவ வலிமையிலேயே தங்கியுள்ளது. அந்த வலிமையை உறுதி செய்வது புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் என்றாலும் வேறு எந்த விடுதலைப் போராட்டம் என்றாலும் எதுவும் அதிவேகமாக வெல்லப்பட்டதில்லை. சில குறிப்பிட்ட சூழல்களில் அயற் குறுக்கீட்டால் ஒரு மேலாதிக்க சக்தியோ ஒரு அடக்கு முறை ஆட்சியோ ஒப்பிடுகையிற் குறுகிய காலத்தில் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. எனினும், அத்தகைய மாற்றங்களின் பல பின்விளைவுகள் புதிய சிக்கல்கட்கு வழிகோலியுள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிப் பேசினோர் ஒரு காலத்தில் இஸ்ரேலின் உருவாக்கத்தை தமக்குரிய முன்னுதாரணமாகக் கூறினார்கள். இப்போது வெகு சிலரே தமிழரை யூதருடனும் தமிழீழத்தை இஸ்ரேலுடனும் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். பங்களாதேஷ் ஒரு முன்னுதாரணமாயிருந்த காலமும் இருந்தது. அ.அமிர்தலிங்கம் ஈழத்து முஜிபுர் என்று அழைக்கப்பட்டதும் நினைவிலுள்ளது. எனினும், முஜிபுர் ரஃமானின் ஆட்சியின் முடிவு மகிழ்ச்சிக்குரிய ஒரு சூழலில் நிகழவில்லை. இந்தியா, பங்களாதேஷ் விடுதலைக்கு உதவியது போல, ஈழ விடுதலைக்கும் உதவும் என்ற கனவு 1987 க்குப்பின் கலைந்து விட்டது.எனினும், இந்தியா பற்றிய மயக்கங்கள் முற்றாகக் கலையவில்லை. சைப்ரஸ் தீவில் கிரேக்க நாட்டு மேலாதிக்கவாதிகளின் குறுக்கீடு பற்றிய அச்சமே வட சைப்பிரஸில் வாழ்ந்த துருக்கிய இனத்தவரை தனி நாட்டு பிரகடனத்தை நோக்கித்தள்ளியது. பிரிவினையை இயலுமாக்கிய துருக்கியக் குறுக்கீடு, இப்போது வட சைப்பிரஸ் மக்களுக்கு ஒரு சுமையாக உள்ளது. சைப்பிரஸ் பிரச்சினை இன்னமும் தொடர்கிறது. வட சைப்பிரஸை சுதந்திர நாடாக அங்கீகரித்த ஒரே நாடான துருக்கி, தனது இராணுவத்தை அங்கே நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. சைப்ரஸ் பிரச்சினை கிரேக்க பேரினவாதிகட்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்கும் பல நல்ல பாடங்களைக் கற்பித்திருக்க வேண்டும். ஆயினும் வரலாற்றில் யாரும் யாரிடமுமிருந்து கற்பது அரிது. அதனாலேயே இஸ்ரேல் இன்னமும் பலஸ்தீனத்திலும் லெபனானிலும் திரும்பத் திரும்ப அதே பிழைகளைச் செய்து வருகிறது.

தமிழ் மக்கள் உலகின் எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்துடனும் தம்மை ஒப்பிடுவதானால் பலஸ்தீன மக்களுடன் ஒப்பிடுவது பல பயனுள்ள பாடங்களைத் தரும். நேரடியான ஒற்றுமைகளென்று ஒரு சில முக்கியமான அம்சங்கள் இருந்தாலும் முக்கியமான வேறுபாடுகளும் உள்ளன. எப்படியும் ஒரு விடுதலைப் போராட்டம் என்ற வகையில், பலஸ்தீனப் போராட்டத்தினின்று கற்பதற்கு தமிழ் மக்களின் போராட்ட சக்திகட்கு நிறைய உண்டு. பலஸ்தீன மக்களின் போராட்டம் மிகவும் பலமான இரண்டு எதிரிகட்கு மாறாக நடக்கிறது. அதை விட முக்கியமாக எந்த அரபு நாடுகள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமோ அவை பலஸ்தீன மக்களைக் காட்டிக்கொடுக்கின்ற வேலையைச் செய்கின்றன. அரபு இன உணர்வோ, இஸ்லாமிய மத அடிப்படையிலான ஒற்றுமையோ உதவக்கூடிய எந்த அரபு நாட்டின் தலைமையையும் பலஸ்தீன மக்களுக்காகப் போராடுமாறு தூண்டவில்லை. எகிப்தோ, ஜோர்டானோ இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவை முறிக்க ஆயத்தமாக இல்லை. சவூதி அராபியாவும் பிற எண்ணெய் வளமுள்ள நாடுகளும் இஸ்ரேலுக்கும் அதற்கு உடந்தையான அமெரிக்காவுக்கும் எண்ணெய் விற்பனையை மறுத்தும் பிற வகைகளிலும் தமது எதிர்ப்பை உணர்த்த ஆயத்தமாக இல்லை. இங்கே தான், இனம், மதம், தேசிய இனம், மொழி என்பதையெல்லாம் கடந்து வர்க்க நலன்கள் செயற்படுகின்றன. இந்தப் பாடத்தை நாம் கற்க ஆயத்தமாக இல்லை.

ஹிஸ்புல்லா போன்று ஷியா சிறுபான்மையினரின் ஆதரவுத்தளத்தின் மீது நிறுவப்பட்ட ஒரு இஸ்லாமிய மதவாத அமைப்பு இன்று லெபனானின் சகல மதத்தினரதும் மதிப்புகுரிய சக்தியாகவும் மக்களின் பாதுகாவலனாகவும் மதிப்பேற்றம் பெற்றுள்ளது என்றால் அது அதன் ஆயுத வலிமையால் மட்டும் இயலுமான ஒன்றல்ல. இழப்புகளைக் கணக்கில் எடுத்தால் இஸ்ரேலிய தரப்புத்தான் வெற்றிக்கொடி நாட்டியது போன்று தெரியும். உண்மையானது ஹிஸ்புல்லாவின் வெற்றியே. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தியதுடன் கடுமையான இஸ்ரேலின் குண்டு வீச்சின் நடுவிலும் போராட வல்ல சக்தியாக அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டது அதன் மகத்தான சாதனை. பலஸ்தீனத்தில் ஹமாஸின் நிலைப்பாடும் ஹிஸ்புல்லாவினது போன்றதே. ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விசுவாசமாகவும் அவர்களது விடுதலை வேட்கையின் குரலாகவும் போராட்டச் சக்தியாகவும் உள்ளளவும் அது தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தி எதிரியால் அழிக்க இயலாத சக்தியாக தொடர்ந்தும் நிலைக்க முடியும். அது எப்போது தனது மக்களின் நலனைப் பேரம் பேசி எதிரியுடன் சமரசம் செய்கிறதோ அப்போது அது தனது சீரழிவுக்கும் சிதைவுக்குமான பாதையை வகுத்துக் கொள்கிறது. பலஸ்தீனத்தில் அரபாத் தலைமையிலான பலஸ்தீன விடுதலை இயக்கம் கடந்த இருபதாண்டுகளில் மிகவும் சீரழிந்துள்ளது. அதனாலேயே இஸ்ரேல் தனது விஸ்தரிப்பு நடவடிக்கைகளையும் பலஸ்தீன மக்கள் மீதான கொடுமையையும் துணிவுடன் தொடர இயலுமாகியது.

எனினும் நமது ஊடகங்களின் ஆய்வாளர்களிடையே உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்கள் பற்றிய அக்கறையோ அவற்றின் வெற்றி தோல்விகளினின்று பாடங்களைக் கற்றுப் பிறருடன் பகிரும் அக்கறையோ அதிகம் இல்லை. தமிழர் போராட்ட ஆய்வுகள் எல்லாம் கடந்த காலத்தில் பெறப்பட்ட வெற்றிகளைப் பற்றிய கதைகளை இரைமீட்பனவாகவும் விடுதலைப் புலிகள் ஏன் எவ்வாறு வெல்லற்கரிய சக்திகளாக உள்ளனர் என்று விளக்குவனவாக இல்லாத பட்சத்தில் விடுதலைப் புலிகளை ஃபாஸிஸ பயங்கரவாதிகள் என்றும் எல்லா நேரமும் மனித உரிமைகளை மீறுவோரென்றும் ஓயாமற் குற்றஞ்சாட்டுவனவாக இருக்கும். இவற்றினின்று தமிழ் மக்கள் கற்கக்கூடிய பாடங்களென்ன என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் எது வாசகர்ட்கு மகிழ்ச்சி தருகிறதோ அதை மட்டுமே ஒவ்வொரு ஏட்டின் வாசகர்கட்கும் ஏற்ப வழங்குவதிலேயே பெருவாரியான ஆய்வுகள் தமது கவனத்தைக் குவிக்கின்றன.

இவ்வாறான அணுகுமுறையின் விளைவாக, உண்மையான கள நிலைவரங்களை வாசகர்கள் அறிய இயலாமற் போகிறதோடு விடுதலைப் புலிகள் சந்திக்கும் பின்னடைவுகள் மறைக்கப்படுகின்றன அல்லது மழுப்பப்படுகின்றன. கருணா குழுவின் பிரிவு காரணமாகவும் 2004 டிசெம்பர் அனர்த்தத்தினாலும் விடுதலைப் புலிகள் கணிசமானளவு பாதிக்கப்பட்டனர் என்பதையும் அதைப் பாவித்து அரசாங்கம் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துகிற முயற்சிகளில் மும்முரமாயின என்பதையும் தமிழ் மக்களுக்கு அவசியமான உணவு, எரிபொருள், மருந்து, கட்டிடப் பொருட்கள் என்பவற்றை வழங்குவதற்குத் தடைகளை உருவாக்கி மக்களை மேலும் அவல நிலைக்கு உட்படுத்தி வந்துள்ளது என்பதையும் கருத்திற்கொண்டால், விடுதலைப் புலிகளுக்கெதிரான ஒரு அதிரடி நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் 2004க்கு முன்பிருந்தே தொடங்கின. கருணா குழுவின் பிளவையும் 2004 இயற்கை அனர்த்தத்தையும் அடுத்து அவை துரிதமானதையும் நாம் காணலாம். கடந்த சில மாதங்களாக நிகழும் பிரகடனம் செய்யப்படாத போருக்கு கட்டியங்கூறுகிற விதமான நடவடிக்கைகளை நாம் சென்ற ஆண்டிலும் குறிப்பாக இந்த ஆண்டின் முற்பகுதியிலும் கவனித்திருப்போம்.

விடுதலைப் புலிகளைத் தாங்கள் விரும்புகிற விதமான ஒரு போருக்குள் இழுப்பதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. விடுதலைப் புலிகள் அத்தகைய ஒரு போருக்குள் நுழைவது எவ்வளவு மதியூகமானது என்பது முக்கியமான ஒரு கேள்வி. இலங்கை அரசாங்கத்தின் பாரிய மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் பற்றி விடுதலைப் புலி எதிர்ப்பையே தொழிலாகக் கொண்டோர் கூட கண்டித்து எழுதுமளவுக்கு அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகள் அமைந்திருந்தும் அதற்கெதிரான சர்வதேச நடவடிக்கைகட்கான சாடை எதுவுமில்லை. இந்தியா- பாகிஸ்தான் முறுகலைக் காரணமாகக் கொண்டு இன்றைய இந்தியக் காய்நகர்த்தல்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு நடத்த இயலாது.

சம்பூரும் மாவிலாறும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்ததை வைத்துச் சிங்கள மக்களை ஆறுதற்படுத்தி நியாயமான ஒரு தீர்வை நோக்கி அரசாங்கம் நகரும் என நான் நம்பவில்லை. இராணுவம் மேலும் தனது விஸ்தரிப்பு முயற்சிகளில் முனைப்படையும் என்பதே எனது எதிர்பார்ப்பு. எனவேதான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தனது ஆயுதப் போராட்ட முறையை மீளாய்வு செய்வதுடன் மக்களை விடுதலை அரசியலில் முக்கியமான பங்காளிகளாக்கவும், மக்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும் போராட்டத்தைச் சமூகத் தளத்தில் விரிவுபடுத்தவும் ஆயத்தமாக வேண்டும்.

அரசாங்கத்திற்கு ஆதரவாகச் ெசயற்படத் தொடங்கிய கேதீஸ்வரன் லோகநாதன் அண்மைய அரசாங்கத்தின் நடத்தை காரணமாகக் கசப்படைந்த நிலையிலேயே கொல்லப்பட்டார் என்பது அரசாங்கம் தமிழரிடமிருந்து மேலும் அந்நியப்படுவதை அடையாளப்படுத்துகிறது.எனவே ஒரு பரந்துபட்ட முன்னணிக்கும் வெகுசன வேலைகட்குமான தேவையுடன் வாய்ப்பும் அதிகமாகி வருகிறது எனலாம். விடுதலைப் போராட்டம் என்பது ஒற்றுமைப்படுத்தக்கூடிய அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி எதிரியைத் தனிமைப்படுத்துவதைத் தனது மூலோபாயமாகக் கொண்டிருக்க வேண்டும். அரசாங்கத்தின் படைகளின் வெறித்தனம் என்கிற தீமையை ஒரு நன்மையாக்க வெகுசன அரசியல் மூலமே இயலும்.

tx to thinakural.com

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடைமுறை அரசுகள் - பாகம் 2

அரசியல் அங்கீகாரம் என்பது ஒரு நாட்டிற்கு அரசியல், பொருளாதார, இராணுவ பலத்தை வழங்குகிறது. ஒரு நாட்டிடம் இந்த விடயங்கள் தன்னிறைவான அளவுக்கு இருக்குமானால் அந்த நாடு ஏனைய நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டாது. உதாரணத்திற்கு இஸ்ரேல் என்ற நாட்டை எடுத்துக்கொள்வோமானால் இந்த நாடு இன்னமும் உலகின் கால் பங்கு நாடுகளின் அங்கீகாரத்தை பெறவில்லை. இருந்தபோதிலும் இஸ்ரேல் இன்றைய உலகின் முன்னணி வல்லரசுகளில் ஒன்று என்று சொல்லத்தக்க அளவில் அரசியல், பொருளாதார, இராணுவ பலத்தைக் கொண்டிருக்கின்றது.

அங்கீகாரம் இல்லாமல் தனித்து இயங்கக்கூடிய அளவுக்கு தமிழீழத்திடம் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ பலம் இல்லாதபடியால் ஏனைய நாடுகளின் அங்கீகாரம் அவசியமாகின்றது. ஆனால், அவ்வாறான அங்கீகாரத்தை பெறுவதில் எமது அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ பலம் மிக முக்கிய தாக்கம் செலுத்தும் என்பது கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பதான ஒரு விசித்திரமான யதார்த்தமாகும். எனவே தமிழீழம் ஒரு தேசமாக மிளிர்வதற்கு தமிழர் மேலும் மேலும் இம்மும் முனைகளில் சர்வதேச ரீதியில் பலம்பெறவேண்டியது மிக மிக அவசியமானதாகும். உதாரணமாக, சர்வதேச் அரசியலில் தமிழர் மிக முக்கியமானவர்களாக வரமுடியும் ஏனெனில் பிரித்தானியா, கனடா போன்ற பலம்பொருந்திய நாடுகளில் கணிசமான அளவில் வாக்குப்பலத்தை கொண்டவர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். மேலும் இந்தியாவிலுள்ள அறுபது மில்லியன் தமிழர்களின் அக்கறையை கொண்டவர்களாக ஈழத்தமிழர் இருக்கின்றனர். இனி, சர்வதேச ரீதியில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிட்டளவு செல்வாக்கும் செலுத்தும் வாய்ப்பை தமிழரின் திருகோணமலைத் துறைமுகம் கொண்டிருக்கின்றது. கடைசியாக, உலக அளவில் முக்கியமாக தெற்காசிய ரீதியில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தமிழீழம் அமைந்திருக்கின்றது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் ஊடுருவலைத் தடுக்கவல்லதாக எதிர்காலத்தில் இந்தியாவுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கக்கூடிய தன்மையை தமிழீழம் கொண்டுள்ளதை மறுப்பதற்கில்லை.

ஏற்கனவே நாம் குறிப்பிட்ட, தற்போது நடைமுறை அரசைக்கொண்ட நாடுகளின் சனத்தொகையுடன் தமிழீழத்தின் சனத்தொகையை கீழ்வரும் அட்டவனையில் ஒப்பிட்டுள்ளோம்.

(அட்டவணையில் தரப்பட்டுள்ள இலக்கங்கள் அண்ணளவானவையே. தகவல்கள் அனைத்தும் விக்கிபீடியா விலிருந்து எடுக்கப்பட்டவை.)

table1vh5.jpg

மேலுள்ள அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளுமே இதுவரை உலகின் எந்த ஒரு நாட்டினாலும் அக்கீகரிக்கப்படாமல் தனியரசைக் கொண்டுள்ளவையாக இருக்கின்ரன. இந்த அட்டவணையைப் பார்த்தவுடன் எமது மனதில் இயல்பாகவே வரும் கேள்வி யாதெனில் ஒரு லட்சம் பேரையே கொண்ட ஒரு நாடு கூட தனியரசாக இயங்கும் போது கிட்டத்தட்ட முப்பது லட்சம் பேரைக் கொண்ட தமிழீழம் ஏன் சுதந்திர தனியரசாக வரமுடியாது என்பதாகும்.

ஐக்கிய நாடுகள் சபை 1945ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அதில் தற்போதுள்ள உலக நாடுகளில் 49 நாடுகள் அங்கத்தவராக இருந்தன. பின்னர் காலம் செல்லச் செல்ல எஞ்சியிருந்த நாடுகளும் மேலும் பல புதிய நாடுகள் உருவாகியும் இணைந்து கொண்டன. கீழ்வரும் வரைபு அவ்வாறு ஐக்கிய நாடுகளில் இணைந்துகொண்ட நாடுகளின் எண்ணிக்கையை காட்டுகிறது.

unmembershipaq8.jpg

இந்த வரைபு எமக்குக்கூறும் தகவல் யாதெனில், உலகில் புதிய நாடுகளுக்கு இனி இடமில்லை என்று சொல்பவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே. அவர்களை நம்புபவர்கள் அடி முட்டாள்களே. புதிய நாடுகள் உருவாகுவது உலக இயங்கியல். அந்த இயங்கியல் விதிகளின் படி தமிழீழம் உருவாகுவதற்கான சூழல் மிக வேகமாக உருவாகிவருகின்றது. வரைபின் படி 2006ம் ஆண்டிற்குப்பிறகு ஒரு நாடுதான் உருவாகியுள்ளது. இன்னும் எட்டு வருடத்திற்குள் ஆகக்குறைந்தது ஒரு ஐந்து நாடுகளாவது உருவாகும் என்று புள்ளிவிபரவியல் சொல்கிறது. அவ்வாறு உருவாகக்கூடிய நாடுகளில் தமிழீழம் முன்னணியிலேயே இருக்கிறது எனபதை இன்றைய சேதிகள் சொல்கிறது. ஆனாலும் அதை உணர்ந்து விரைவு படுத்தவேண்டியது தமிழர்தம் கைகளிலேயே இருக்கின்றது. முக்கியமாக புலம்பெயர் தமிழர் தாமாக உணர்ந்து தத்தமது கடமைகளை சரிவரச்செய்வதோடு விடுதலையை விரைவுபடுத்த வேறென்ன செய்யலாம் என்று சிந்தித்துச் செயர்படுவார்களேயானால் விடுதலை நிச்சயம் விரைவடையும்.

இனி, ஏற்கனவே குறிப்பிட்டது போல இன்னொரு நடைமுறை அரசினைப்பற்றி சுருக்கமாக தருகிறோம்.

சோமாலிலாண்டு நடைமுறை அரசு

கிட்டத்தட்ட தற்போது மீட்கப்பட்ட தமிழீழத்தின் அளவில் உள்ள நாடு இதுவாகும். சோமாலிலாண்ட் இன் மொத்த சனத்தொகை 3.5 மில்லியனாகும். தமிழரின் தாயகம் அதன் மொழியால் ஒருமைப்படுவது போல சோமாலிலாண்ட் அதன் கலாச்சாரத்தால் ஒருமைப்பட்டு நிற்கின்றது. சோமாலி மற்றும் அரபு மொழிகள் இங்கு அதிகாரபூர்வமாக புழக்கத்திலுள்ளது. தனித்துவமான பண அலகாக சோமாலிலாண்ட் சில்லிங் ஐ கொண்டிருக்கும் இந்த தேசத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்திலேயே தங்கியுள்ளது. தரைப்படை கடற்படை ஆகியவற்றைக்கொண்டுள்ள போதிலும் இதுவரை விமானப்படையை இது கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாட்கள் சுதந்திர நாடாக இருந்த பெருமையும் இந்த நாட்டிற்கு உண்டு. 1960 ஆம் ஆண்டு ஜூன் 26ம் நாள் பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து விடுதலையாகி சுதந்திர அரசாக சோமாலிலாண்ட் பிரகடனப்படுத்தப்பட்டது. அதே மாதம் 30ம் நாள் சோமாலியா பிரிட்டிசாரிடம் இருந்து சுதந்திரமாகியது. அடுத்த நாளான ஜூலை 01, 1960 இல் இரு நாடுகளும் இணைந்து ஒரே தேசமாகின. எனினும் சோமாலிலாண்ட் மாகாண அளவில் அதிகாரங்களைக்கொண்ட ஒரு தேசமாக விளங்கியது. பின்னர் சோமாலிய மத்திய அரசில் பெரும் குழப்பம் நிலவிய நிலையில் சோமாலிலாண்ட் தனியான சுதந்திர அரசாக 1991 இல் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. எனினும் எந்த ஒரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை.

சோமாலியா மற்றும் சோமாலிலாண்ட் ஆகியவை உலகிலேயே மிகவும் வறிய நிலையிலுள்ள நாடுகள். மேலும் சோமாலியா உள்நாட்டுப்போரினால் மிகவும் பாதிப்படைந்து அதன் அரசு நிலையற்றதாகவே பலகாலமாக காணப்படுகிறது. இந்த நிலையில் சோமாலிலாண்ட் இன் அங்கீகாரம் என்பது அதன் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியலில் தங்கியுள்ளது. விரைவில் சோமாலிலாண்ட் அரசு சர்வதேச அங்கீகாரம் பெறக்கூடிய நிலையும் ஓரளவு காணப்படுகிறது.

Link to comment
Share on other sites

பண்டிதர், உங்களது ஆய்வுக்கு நன்றிகள். மேலும் தகவல்களை உங்களின் ஆய்வுடன் இணைப்பேன் என உத்தரவாதப்படுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஹேய் மயிலிறகே மயிலிறேகே மனம் வருட வந்தாயா மணிக்கிளியே மணிக்கிளியே மனம் திருட வந்தாயா பெண் : மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன் பெண் : ஊராரும் வேராரும் காணாமலே கண்ணா உன் உள்ளதை படம் பிடித்தேன் பெண் : மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள வந்தாடும் பிள்ளை இது பெண் : கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள கண்மூடும் பிள்ளை இது ஆண் : எனது பார்வையில் எதிரில் தோன்றிடும் எதுவும் உன்காட்சிதான் அழகே நீயுமென் மனதில் பாய்கிற ஆசை நீர்வீழ்ச்சிதான் பெண் : நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன் நீ சொன்னால் முல்லை என் விழியில் வைப்பேன் பெண் : நான் சொன்னால் கூட நான் கேட்க்க மாட்டேன் நீ சொன்னால் நாள்கிழமை பாக்க மாட்டேன் ஆண் : ஒ மானே மானே மனதுக்குள்ளே உனையின்றி இனிமேலும் யாவரும் இல்லை பெண் : பழி வாங்கி போனது பல ராத்திரி உன்னாலே தூக்கம் கெட்டேன் பெண் : பனிவாடை காற்றோடு விவரம் சொல்லி உனக்காக தூது விட்டேன் ஆண் : தூதும் வந்தது தகவல் தந்தது தனிமை பொல்லாதது உன்போல் என் மனம் உருகும் சந்தனம் வெளியில் சொல்லாதது பெண் : எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான் அவரோடு அவனிங்கு அவனை தைத்தான் பெண் : உனதென்றும் எனதென்றும் இனியில்லையே உனக்குள்ளே நான் வந்தேன் தனியே வெளியே ஆண் : ஏ அன்பே அன்பே காதோடு சொல் கல்யாண பூமாலை நீ தரும் நேரம் .....! --- மயிலிறகே மயிலிறேகே ---
    • வழக்கொன்று தொடுப்பேன் ......!   😍
    • வாழ்த்துகள் தமிழ்க் கல்விக் கழகத்தின் விழாவை அணியம் செய்து, அணியாக நின்று செயற்பட்டுவரும் இளையோருக்கு உரித்தாகட்டும். வாழ்த்தியமைக்கு நன்றி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.