Jump to content



தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!


  • Please log in to reply
34 replies to this topic

#1 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,693 posts

Posted 06 November 2007 - 12:35 AM

தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!
-நக்கீரன்
'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள்,
ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்' என்று மகாகவி பாரதியார் மனம் நொந்தும் வெந்தும் சொன்னது இற்றைவரை சரியாக இருக்கிறது.இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டில் நடை போடுகிறது. இருந்தும் உலர்ந்த தமிழனை மருந்துக்கும் பார்க்க முடியாமல் இருக்கிறது.

'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என பாரதி கண்ட கனவை அமெரிக்கர்கள் 1969 இல் நனவாக்கினார்கள்.

இன்று செவ்வாய் மண்டலத்தையும் சனி மண்டலத்தையும் அமெரிக்க விண்கலங்கள் ஆய்ந்து கொண்டிருக்கின்றன!

ஆனால் தமிழனோ அதே சந்திரன், சனி, செவ்வாய் கோள்களை கோயில்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறான். சனி தோசம் நீங்க அகண்ட நாம அருச்சனை செய்கிறான்.

தமிழர்கள் எதையும் சிந்தித்து எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்று முடிவு செய்வதில்லை. அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதையே குடித்துக் கொண்டு உயிர் வாழ விரும்புகிறார்கள்.

தமிழர்கள் தீபாவளியை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். ஊடகங்கள் அதனைப் பெரிது படுத்துகின்றன. வணிகர்கள் விற்பனையை அதிகரிக்க தீபாவளியைப் பயன்படுத்துகிறார்கள்.

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

ஒரு காலத்தில் ïரண்யாட்சதன் என்ற ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

நராகாசூரன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள் இருடிகள் முதலியோரை வருத்தினான்.

தேவர்கள் மகாவிட்டுணுவிடம் முறையிட்டனர். அவர்களின் அல்லல்களைத் தீர்க்க திருவுளம் கொண்ட மகாவிட்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து டிகா«ãனா? நராகாசூரனது மார்பைப் பிளந்து கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

விரித்த உலகம் (ப+மி) அப் பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

ஆசைக்கு இணங்கிய பன்றி (விட்ணு) ப+மியுடன் கலவி செய்தது.

அதன் பயனாய் ப+மி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

தேவர்களுக்காக விட்ணு நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

விட்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. காரணம் நரகாசூரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான்.

உடனே காத்தல் கடவுளான விட்ணு பெரிய சதித் திட்டம் தீட்டினார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசூரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே விட்டுணு மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்.

உண்மையில் அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. அப்படி நடித்தார். இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து விட்டுணுவின் வில்லை எடுத்து நரகாசூரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறாள்.

இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

உயிர் போகும் தருவாயில் நரகாசூனிடம் ‘உனது கடைசி ஆசை என்ன?’ என்று சத்தியபாமா கேட்கிறாள்.

'எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்" என்கிறான் நரகாசூரன்.

தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா? ஆனால் புராணிகர்கள் அப்படித்தான் 'பரம்பொருளை' சித்திரித்திருக்கிறார்கள்.

எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்க கடவுள் அவதாரம் எடுத்து அசுரர்களைக் கொன்றதாகவும் சொல்கின்றன.

உண்மையில் இவையெல்லாம் அன்றைய ஆரிய திராவிட இனங்களுக்கு இடையிலான போரையே குறிக்கும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, பன்றி, முயல், உடும்பு இவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் 'அவிர்ப்பாகம்' என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள். குதிரை, மாடு, ஆடு, முயல், உடும்பு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

மகாவிட்ணுவின் அவதாரங்களுள் பரசுராமன் அவதாரம் என்பது முழுக்க முழுக்க அசுரர்களைக் கொன்றொழித்த கதைதான். பூலோகத்தில் அசுரர்கள் செய்துவரும் கொடுமைகளினால் பூமாதேவி பாரம் தாங்க முடியாமல் தனது கணவன் விட்ணுவிடம் முறையிட்டாள். உடனே 'பூமியில் அவதாரம் செய்து பூமிபாரத்தைத் தீர்த்து வைப்பேன்' என்று கூறி தக்னி முனிவருக்கும் அவரது பத்தினி ரேணுகைக்கும் பரசுராமனாகப் பிறக்கிறார் விட்ணு.

தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய 'வீரன்" என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர்களை; (அசுரர்களை)யும் ஒரு காலத்திலும் தலைதூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமி பாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், சகோதரனைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்? பூலோகத்தில் அரசு ஆண்டவர்கள் எல்லாம் அசுரர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா?

இராம இராவண யுத்தம் ஆரிய திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய னுளைஉழஎநசல ழக ஐனெயை என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராமன் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று ஒழிப்பதாக வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாவும் சொல்கிறான். ( ஆரண்ய காண்டம், 10 ஆவது சருக்கம்)

‘இராமன் காலத்தில் தென் இந்தியா தஸ்ய+க்கள், இராட்சதர்களுக்குச் சொந்தமாயிருந்தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களைப் போலவே இந்த இராட்சதர்கள் என்பவர்களும் நாகரிகமடைந்திருந்தார்கள்.’ (பி.டி.சி சீனிவாசய்யங்கார் "இந்திய சரித்திரம்’ முதற்பாகம் - பக்கம் - 19)

'தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று" என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய 'தமிழர் சமயம்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

'தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு, புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை' எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாம் எழுதிய " மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு" என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

'தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை' (தீபம் - விளக்கு, ஆவலி - வரிசை ) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய "சமணமும் தமிழும்" என்ற நூலில் சொல்லியிருக்கிறார்.

'ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி" என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தாம் எழுதிய "தமிழர் மதம்" என்ற நூலில் எழுதியுள்ளார்.
மேலும் அவர் -

"ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படு வராயினர்.' (வேளாளர் நாகரிகம் - பக்கம் 60)

தீபாவளியின் உண்மை அறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தால் கொண்டா டப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இரணியன், இராவணன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கு கொண்டாட்டம் இருக்கவேண்டும். ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்கும் தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டது அன்று. (ஆசிரியர் திருமுருக கிருபானந்தவாரியார், நூல் ‘வாரியார் விரிவுரை விருந்து’ பக்கம் 95)

'மறைமலை அடிகள் தமிழர், அதிலும் தனித் தமிழ் வெறியர் அவர் அப்படித்தான் எழுதுவார்' என்று சிலர் சொல்லக் கூடும். அவர்களுக்காக இதோ இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதைத் தருகிறேன். படியுங்கள்.

'தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்
(இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் -587-589)

இவ்வாறு நடைமுறை உண்மைக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்துவராத, முரண்பட்டு இருக்கிற பொய்களை, கலையுரைத்த கற்பனைகளை எல்லாம் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் தமிழர்களைத் தாழ்வுபடுத்தும் இந்தத் தீபாவளியை இன்னும் எத்தனை காலத்துக்கு எப்போதும் ஈரத்திலேயே படுக்க விரும்பும் எருமைகளைப் போல தமிழர்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?

துந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தங்கள் பேச்சாலும் எழுத்தாலும் கொளுத்திய பகுத்தறிவு ஒளி காரணமாக அநேக தமிழ் மக்கள் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்திவிட்டார்கள். என்றாலும் இன்னமும் ஆரிய இனத்துக்கு அடிமையான இழிநிலையை உணராத மக்கள் தொடர்ந்து தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இனிமேலாவது பாரதி விரும்பிய உலர்ந்த தமிழனாக மானத்தோடு வாழக் கற்றுக் கொள்வோமாக.

மானம் உணரும் நாள்!

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?

நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?

நரகன் என்பவன் நல்லனா? தீயனா?

அசுரன்என் றவனை அறைகின் றாரே?

இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?

இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்

பன்னு கின்றனர் என்பது பொய்யா?

இவைக ளைநாம் எண்ண வேண்டும்.

எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது

படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?

வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்

கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.

ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்

தூயது தூயதாம் துரும்பு இரும் பாகாது!

'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்

நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?

என்றுகேட்பவனை, 'ஏனடா குழந்தாய்!

உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று

கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை

ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.

தீவா வளியும் மானத் துக்குத்

தீபாவாளி ஆயின் சீஎன்று விடுவிரே!

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

-தமிழ் பிரிஸ்பன்
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#2 nunavilan

nunavilan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 22,342 posts
  • Gender:Male
  • Location:USA
  • Interests:இணையம்,உதைப்பந்து
    கைப்பந்து,கிறிக்கட்

Posted 06 November 2007 - 01:23 AM

Friday, October 20, 2006
தீபாவளி என்னும் முட்டாள்தனம்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்

தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்

விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது

ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது

அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது

அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்

தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்

விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்

இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்

இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?


இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.

இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?

தந்தை பெரியார் தீபாவளி என்ற பண்டிகை பற்றி கூறியதன் சிறு தொகுப்பு



http://veeravanniyan...og-post_20.html


நன்றி
Posted Image



தமிழீழம் என்பது தமிழீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட . முத்துக்குமார்

#3 கலைஞன்

கலைஞன்

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,132 posts
  • Gender:Male

Posted 06 November 2007 - 02:14 AM

ஐயோ... தீபாவளி கொண்டாடாட்டி எப்படியாம் தமிழ் சினிமாப் படம் பார்க்கிறது?

தீபாவளிக்கு தானே விஜையும், அஜித்தும், சிம்புவும்... எல்லாரும் புதுப்படம் ரிலீஸ் பண்ணுவீனம்.

தீபாவளி அன்று ஆட்டிறைச்சி கறியை முழுங்கிவிட்டு, பியரும் அடித்துவிட்டு ரெண்டு புதுப்படமும் பார்த்தால் சொல்லி வேலை இல்லை..

[இப்படி நான் சொல்லவில்லை. பலர் செய்கின்றார்கள்..]

#4 Jamuna

Jamuna

    ஜம்முபேபி

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,029 posts
  • Location:Sydney
  • Interests:நித்தா கொள்ளுதல்..

Posted 06 November 2007 - 03:31 AM

தீபாவளி வியாழகிழமை அல்லோ வருது பிறகு எங்கே நேரம் இருக்கு கொண்டாட :lol: ஆனாலும் இலங்கையில இருக்கும் போது ஜெனரல் சொல்லுற மாதிரி புது படம் எல்லாம் ரிலிஸ் ஆகும் காலம கோயிலிற்கு போய் அங்கே சைட் அடித்து போட்டு ஒவ்வொரு தியேட்டரிலையும் ஒவ்வொரு படம் பார்கிற சுகம் இருக்கே தனிசுகம் :lol: இதற்காக தான் தீபாவளியை நாம கொண்டாடுறதே :D !!அக்சுவலா சிட்னியில கூட "அழகிய திருமகன்" ரிலீஸ் பட் நேக்கு டைம் இல்லை படம் பார்க்க அது தான் பிரச்சினை ஆகவே நான் கொண்டாடமாட்டேன் சோ உங்கள் கூட்டத்தில் நானும் சேர்ந்துட்டேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

Edited by இணையவன், 06 November 2007 - 06:28 AM.
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...
Posted Image

காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!
பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...



ஜ...ஜ...ஜ....ஜம்மு....பே...பே...பே....பேபி!!
ஜம்மு பேபி!!


#5 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 13,348 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 06 November 2007 - 08:55 AM

தீபாவளி வரேக்க இதுகளும் வரும். நாம அதை மறந்தாலும்.. கொண்டாடாத கொண்டாடாத என்று நம்மள ஞாபகம் ஊட்டி கொண்டாட தூண்டுறாங்க. :lol:

கொண்டாடுறவங்க அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். சன் ரிவில நல்ல புரோகிராம் போடப் போறாங்க. அதில் உலகமே காறித்துப்ப நடந்து கொண்டு அப்புறம் கைபிடிச்சு.. உலகை அசத்திய நடிகர் சிறீகாந் தம்பதிகள் தலைத்தீபாவளி கொண்டாடிறாங்க மறக்காமப் பாருங்க. :lol:

Edited by nedukkalapoovan, 06 November 2007 - 08:58 AM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#6 putthan

putthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,975 posts
  • Gender:Male
  • Location:sydney
  • Interests:poltics,religion,gardening

Posted 06 November 2007 - 10:20 AM

View Postnedukkalapoovan, on Nov 6 2007, 06:55 PM, said:

தீபாவளி வரேக்க இதுகளும் வரும். நாம அதை மறந்தாலும்.. கொண்டாடாத கொண்டாடாத என்று நம்மள ஞாபகம் ஊட்டி கொண்டாட தூண்டுறாங்க. :lol:

கொண்டாடுறவங்க அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். சன் ரிவில நல்ல புரோகிராம் போடப் போறாங்க. அதில் உலகமே காறித்துப்ப நடந்து கொண்டு அப்புறம் கைபிடிச்சு.. உலகை அசத்திய நடிகர் சிறீகாந் தம்பதிகள் தலைத்தீபாவளி கொண்டாடிறாங்க மறக்காமப் பாருங்க. :lol:


அருமையான வரிகள் தலை தீபாவளி கொண்டாடும் சிறிகாந் தம்பதியர்களை கட்டாயம் பார்க்க வேண்டும் ஆனால் சன் டீவியை புறகணிக்க வேண்டும் கலைஞர் டீவியில் காட்டினா போய் பார்பேன்.

இந்த கந்தப்பு தீபாவளியை பகிஷ்கரிக்க தொடங்கி எனி மனிசி வருசத்தில ஒருக்கா தீபாவளிக்கு வாங்கி தாற உடுப்பு கூட கிடைக்காம போகபோகுது. :lol:
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன்"


http://putthan.blogspot.com/

#7 Nitharsan

Nitharsan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,084 posts
  • Gender:Male
  • Location:தமிழீழம்
  • Interests:புதிய விடங்களைஅறிதல், மற்றும் உருவாக்குதல்

Posted 06 November 2007 - 03:30 PM

இப்பா தீபாவளி தமிழனுக்கு இழுக்கோ, தன்மானப்பிரச்சினையோ என்றதில் தான் பொரிய பிரச்சினை இங்கு. சன் ரீ.வியில யாரின்ர எதை போட்டா என்ன, கலைஞர் ரீ.வில எதை போட்டா நமக்கென்ன.

ஈழத்தமிழருக்கு இழுக்க பல விடையங்கள் இருக்கு இன்றை காலத்தில் கூட ஒற்றுமைப்படாத ஜென்மங்கள் இருக்கு அது தான் எங்களுக்கு இழுக்கு அவர்களை திருத்த முயற்ச்சி செய்யுங்கள்.!

தீபாவளியை மக்கள் கொண்டாடும் மன நிலையில இருக்கினம் என்றால் அதுதான் எங்களுக்கு இழுக்கு. எங்கள் நாட்டில் நெடுகத்தான் பிரச்சினை அதற்hக நாங்கள் சந்தோசமாக, களிப்பாக இருக்க கூடாதா என்று கேட்டாள் உங்களை போல சுயநலவாதிகள் இருக்க மாட்டார்.! ஏனெனில் நாங்கள் பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடியவர்கள் அவர்கள் பிரச்சினைகளை எதிர்த்தவர்கள்..!

எல்லாவற்றுக்குள்ளும் அரசியல், நாட்டுப்பிரச்சினை கதைப்பதாய் சிலர் குளறலாம் ஆனால் அதை தவிர எமக்கு (ஈழத்தமிழருக்கு) இன்று பேச வேறு விடையங்கள் இல்லை. அதுவே முக்கியமானதும், அவசரமானதுமாகும்.

#8 தூயவன்

தூயவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,542 posts
  • Gender:Male
  • Location:யாழ்களம்

Posted 07 November 2007 - 12:54 AM

*******
தமிழ்செல்வன் அண்ணா மறைந்த சோகத்தில் இருக்கின்றபோது இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை அவசியமற்ற ஒன்று.


****** தணிக்கை - யாழ்பாடி

Edited by yarlpaadi, 08 November 2007 - 04:31 AM.


#9 தயா

தயா

    Thala (தல)

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,974 posts
  • Gender:Not Telling

Posted 07 November 2007 - 01:18 AM

தீபங்களை வரிசையாக வைத்தல் என்பதை தீப ஆவளி எண்று சொல்கிறார்கள்... (ஆவளி என்பது வரிசை என்பதை குறிக்கும்) இருள்கால ஆரம்பத்தில் தீபங்களை ஏற்றி விளாவாக செய்வது கார்த்திகை தீபம்... அதை ஒட்டி வட இந்தியர்கள் செய்வது க்கு பெயர் திவாளி (dewali)

ஈழ தமிழருக்கு அது கார்த்திகை கடைசியில் வரும் தீபம் ஏற்றும் மாவீரர் நாள்... அதையே தீபா(ஆ)வளி யாக கொண்டாடலாம்...!
என்னையும் என் குடும்பத்தையும் போராட அழைக்க கூடாது... நெருக்கடியான காலங்களில் நிதி எல்லாம் கேட்க்க கூடாது...
மற்றும்படி எனக்கு தனி நாடு தமிழீழம் எல்லாம் வேண்டும்...

#10 சபேசன்

சபேசன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,048 posts
  • Gender:Male

Posted 07 November 2007 - 09:49 AM

"தீபாவளி தமிழர் திருநாள் அல்ல" என்ற தலைப்போடு ஒரு இறுவட்டு (CD) தயாரித்துள்ளேன். தீபாவளி பற்றி என்னுடைய கருத்துக்களை சொல்லி உள்ளேன்.

நவம்பர் 1ஆம் திகதியே என்னுடைய உரையை முடித்து பதிவு செய்து விட்டேன். 500 இறுவட்டுக்களாவது வினியோகிக்கும் திட்டத்தில் உற்சாகத்தோடு இருந்தேன்.

ஆனால் தமிழ்செல்வன் அவர்களின் வீரச்சாவு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தந்துவிட்டது. எங்கும் போகாமல் மூன்று நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்.

தற்பொழுது என்னை சற்று தேற்றிக்கொண்டு 200 வரையிலான இறுவட்டுக்களை வினியோகித்துள்ளேன். என்னுடைய தளத்திலும் அந்த உரை உள்ளது.

இந்த உரை 55 நிமிடங்கள் நீழ்கிறது. சற்றுப் பொறுமையோடு கேளுங்கள்.

அதன் இணைப்பு:

மேலும் பல கட்டுரைகளுக்கு
http://www.webeelam.net

#11 வசி_சுதா

வசி_சுதா

    ♥ღღツ Vasi ツღღ ♥

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,763 posts
  • Gender:Male

Posted 07 November 2007 - 01:22 PM

நாட்டுக்கு தேவையான தலைப்பு.. :)

Edited by vasisutha, 07 November 2007 - 01:26 PM.

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-


#12 வசி_சுதா

வசி_சுதா

    ♥ღღツ Vasi ツღღ ♥

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,763 posts
  • Gender:Male

Posted 07 November 2007 - 01:29 PM

ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும்போது இப்படி எழுதுவதை விட
அதை நிரந்தரமாக முன் பக்கத்தில் இணைத்தால் அடுத்த வருடம்
கஸ்டப்பட்டு எழுத தேவையில்லை... :)

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-


#13 இளைஞன்

இளைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,870 posts
  • Gender:Male
  • Location:யேர்மனி

Posted 07 November 2007 - 06:31 PM

வசி சொல்வது எனக்கு நல்ல யோசனையாகப் படுது. :wub:

கொண்டாட்டம் என்பது மனமகிழ்வுக்கும், மக்கள் ஒன்றுகூடலுக்கும், அன்பு பகிர்வுக்கும் தான்.
ஆனால், கொண்டாட்டங்களுக்கு பொதுப்புத்தியை அவமதிக்கும் காரணங்களைக் கற்பிப்பதுதான்
முட்டாள்தனம். இன்றைய காலகட்டத்தில், தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கக்கூடிய கொண்டாட்டங்களே
அவசியமானது. தயா குறிப்பிட்டது போல வீர மறவர்களை நினைவுகூருகிற கார்த்திகை மாதத்து
திருநாளான மாவீரர் நாள் இந்தவகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
"நாமார்க்கும் குடியல்லோம்"<br />
<br />
நட்புடன்<br />
இளைஞன்

#14 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,185 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 07 November 2007 - 11:09 PM

தீபாவளி வருகிதே என்னடா தீபாவளி தமிழருடையதா இல்லாட்டி வாடைகைக்கு எடுத்ததா எண்டு ஒரு விவாதத்தையும் காணேல்லையே எண்டு நினைச்சனான். வந்திட்டுது :wub: :lol: ^_^
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#15 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,209 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 07 November 2007 - 11:50 PM

சபேசன் சாரின் குரலை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கின்றது :wub: ஐயா நீங்கள் ஏதும் தொலைக்காட்சி அல்லது வானொலிகளில் மதப்பிரச்சாரம் செய்பவரா? :lol:

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#16 Sabesh

Sabesh

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,006 posts
  • Gender:Male
  • Location:Canada

Posted 08 November 2007 - 04:41 AM

View Postதூயவன், on Nov 7 2007, 10:30 PM, said:

பேய்விழா என்பது கனடாக்காரனுக்குச் சொந்தமானதல்ல என்பதைத் தாங்கள் முதலில் அறியவேண்டும். மேலைத்தேசத்தைச் சார்ந்த அனைவரும் கொண்டாடுவது.

ஊரில விளக்கீடு (நெருப்பு பந்தங்களை காணி மற்றும் முக்கிய இடங்களில் நாட்டுதல். கோவிகளிலும் பெரிதாக உருவம் செய்து இரவில் எரிப்பார்கள், பேர் மறந்திட்டேன்) எண்டு ஒரு நாள் கொண்டாடுவோம். அதுவும் இதுவும் ஒரே கொண்டாட்டமா?

#17 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,693 posts

Posted 08 November 2007 - 04:48 AM

View PostSabesh, on Nov 8 2007, 03:41 AM, said:

ஊரில விளக்கீடு (நெருப்பு பந்தங்களை காணி மற்றும் முக்கிய இடங்களில் நாட்டுதல். கோவிகளிலும் பெரிதாக உருவம் செய்து இரவில் எரிப்பார்கள், பேர் மறந்திட்டேன்) எண்டு ஒரு நாள் கொண்டாடுவோம். அதுவும் இதுவும் ஒரே கொண்டாட்டமா?

அது கார்த்திகை விளக்கீடு. சொக்கப்பனை எரிப்பார்கள். அது வேறு. இது வேறு.
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#18 தூயவன்

தூயவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,542 posts
  • Gender:Male
  • Location:யாழ்களம்

Posted 08 November 2007 - 04:51 AM

இந்தக் கட்டுரைப் பிதற்றலைத் தணிக்கை செய்யாத யாழ்பாடி கட்டுரையாளரின் செயலில் உள்ள குறைபாட்டை எழுதியவுடன் தணிக்கை செய்கின்றார். இதனால் நான் எழுதிய கருத்தின் அர்த்தம் மாறுகின்றது.

********

கந்தப்பு தமிழர் பற்றிய கட்டுரை என்றவுடன் பாய்ந்தடித்து இணைத்து விட்டார் போல.

Quote

ஊரில விளக்கீடு (நெருப்பு பந்தங்களை காணி மற்றும் முக்கிய இடங்களில் நாட்டுதல். கோவிகளிலும் பெரிதாக உருவம் செய்து இரவில் எரிப்பார்கள், பேர் மறந்திட்டேன்) எண்டு ஒரு நாள் கொண்டாடுவோம். அதுவும் இதுவும் ஒரே கொண்டாட்டமா?

அதை விட, இறந்து போனவர்களுக்குத் திதி செய்யாது விட்டால், இந்தக் ஐப்பசி மாதத்தில் தான் ஒட்டுமொத்தத்திற்கும் மகவமோ, மகதம் என்று ஏதோ செய்வார்கள்.

அது போன்ற ஒன்றாக இதையெடுக்கலாம்.

ஆனால் ஒன்று. கறுத்தப்பூனை, பேயிற்குக் கால் இல்லை, பேய் வெள்ளை நிறத்தி;ல் இருக்கும் என்ற கருத்துக்களை எல்லாம் எம்மை ஆக்கிரமித்து ஆண்ட மேலைத்தேசத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்து தான் நாங்கள் பிடித்துக் கொண்டிருக்கின்றோம் போல.

---------நீங்கள் மறந்தது என்று சொல்வது சொக்கப்பனையா?


***** தணிக்கை -யாழ்பாடி

Edited by yarlpaadi, 08 November 2007 - 05:16 AM.


#19 Sabesh

Sabesh

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,006 posts
  • Gender:Male
  • Location:Canada

Posted 08 November 2007 - 05:13 AM

View Postதூயவன், on Nov 7 2007, 10:51 PM, said:

---------நீங்கள் மறந்தது என்று சொல்வது சொக்கப்பனையா?
ஓம் தூயவன். சொக்கபனைத்தான். கந்தப்புவும் நினைவு படுத்தினார். நன்றி.
நான் கிட்டத்தட்ட இப்படி தான் மாப் பண்ணி பார்தேன்.

கார்த்திகை விளக்கீடு = கலோவீன்
தைப்பொங்கல் = தாங்ஸ் கிவ்விங்
மாவீரர் நாள் = றிமெம்பறன்ஸ் டே
சித்திரை வருடபிறப்பு நியூ இயர்
ஆடி அமாவாசை (தந்தை இறந்த பின்) = பாதெர்ஸ் டே (தந்தை இருக்கும் போது)
ஏதோ ஒரு பறுவம் (தாய் இறந்த பின்) = மதெர்ஸ் டே (தாய் இருக்கும் போது)

#20 kurukaalapoovan

kurukaalapoovan

    Very Primitive Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,766 posts
  • Location:நரகம்

Posted 08 November 2007 - 08:39 AM

சபேஸ், றிமெம்பரன்ஸ் டே உம் மாவீரர் தினமும் சம்பந்தப்பட்டது என்றதை வைத்து ஒரு படம் - poster செய்யுங்கோவன் .

கார்த்திகை பூ மற்றும் பொப்பி பூ ஒன்று சேர்த்து?
"கொடுக்க வேண்டிய விலை ஒன்றே ஆசையையும் தேவையையும் நிர்ணயிக்கிறது."
"Without sovereignty, one cannot exercise or experience true democracy."






யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]