Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிகேடியர் தமிழ்செல்வன் - சில நினைவுகள்


Recommended Posts

பிரிகேடியர் தமிழ்செல்வன்” - சில நினைவுகள்

போராளியான அறிவன் எழுதிய சில பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனின் சில நினைவுகள் இந்த மடலில் உணரப்பட்டுள்ளது

அவருடனான சில நினைவுகள்

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் வீரச்சாவு ஐயோ நம்பமுடியவில்லை வெள்ளிகிழமை காலை (02-11-2007) 6.10 மணியளவில் அவரின் தங்ககம் குண்டுவீச்சுதாக்குதலிற்கு உள்ளாகியது. செய்திவந்ததும் போராளிகள் அவருக்கு ஒன்றுமே நடக்க கூடாது, நடவாது என அந்த பகுதிக்கு ஒடினர், எல்லா இடமும் மண் சிதறல்கள் ஒரு சில போராளிகள் வீரச்சாவு எல்லோரும் வீரச்சாவு அடைந்திருப்பார்களோ என்று எண்ணும் போதும் இல்லை இல்லை அவருக்கு ஒன்றும் நடந்திருக்காது என்ற அற்ப ஆசையில் இடிபாடுகளை அகற்றிய போது அவரது உயிரற்ற உடல் அப்போதும் கூட ஏன் இப்போதும் தான் அவர் எம்மை விட்டு பிரியவில்லை போல் உள்ளது. அவரது கால்பகுதியிலும் நெத்தியிலும் தான் காயம் கடவுளே எப்படியோ இருதசாப்தங்களாக பல காயங்கள் பட்டு உயிர் தப்பிய நீங்கள் இப்போது மட்டும் ஏன் தப்பி இருக்க கூடாது.

உங்களை சூழவுள்ள போராளிகளையும் பொறுப்பாளர்களையும் ஏன் போரின் மூலம் உள உடல் பாதிப்புற்ற பொதுமக்களையும் உங்கள் சிரிப்பினாலும், அன்பினாலும் சுகப்படுத்தும் நீங்கள் ஏன் உங்களை காப்பற்ற முடியாமல் போய்விட்டது.

இனி செல்வன் எனும் மெசெஞ்சர் ID Offline இல்தான் இருக்கும் அவரது 0088 என தொடங்கும் சற்றலைற் கை தொலைபேசி வேலை செய்யாது, அவரது sptselvan@hotmail.com மின் அஞசல் எதையும் உள்வாங்கும் ஆனால் பதில் கிடைக்காது. எம் அன்புக்கு இனிய அண்ணர் அவரது தடங்களை தான் இனி தளுவிடமுடியும்.

அவரது புன்னகையின் மகத்துவம்

சிலர் கூறலாம் அவர் அரசியலிற்காக தான் சிரிக்கிறார் என்று ஆனால் தேசிய தலைவருடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் கூறினார் தமிழ்செல்வனிற்கு அது பிறப்பிலேயே வந்த சிரிப்பு என்று ஆம் இராஜ தந்திரத்திற்காக அவர் சிரிக்கவில்லை ஆனால் தனது அனைத்து குணாதிசயங்களையும் இராஜ தந்திரத்திலும், நிருவாகத்திலும், களமுனையிலும் பயன்படுத்தினார். எம்மிடம் கோபம் வந்தாலும் சிரிப்பார், துன்பம் வந்தாலும் சிரிப்பார், சந்தோசத்திலும் சிரிப்பார், எமது வேலை பிடிக்கவில்லை என்றாலும் சிரிப்பார், ஆனால் எமக்கு சிரிப்பின் உள்ளடக்கங்கள் புரிந்துவிடும். யாரையும் மனம் கோணாமல் பேசுவதில் கடமைகளை செய்விப்பதிலும் சிறந்த மனிதர். நிர்வாகத்திறனிலும், மக்கள் அணுகுமுறையிலும், சண்டைக்கான தயார்படுத்தல்களிலும் ஒர் சிறந்த புத்தகம் என்றே கூறுவேன்.

தலைவருடைய ஒவ்வோர் அசைவையும் புரிந்து அதற்கேற்ப வேலைத்திட்டங்களை நகர்த்தி தலைவரின் அன்றாட மற்றும் மிகப் பெரிய பொறுப்புகளையும் சுமைகளையும் எப்படி குறைக்கலாம் என ஒவ்வொரு நாளும் இரவு பகல் பாராது இயங்கி கொண்டிருக்கும் அந்த மனிதன். அவரது விடாமுயற்சியும், தொடர்ச்சியான ஒய்வற்ற கடமை ஈடுபாடும் அவரை நோயாளி ஆக்கியது எனலாம். ஏற்கனவே வெற்றிலைக்கேணி மற்றும் பூநகரியில் விழுப்புண் அடைந்து வயிற்றுபகுதி, கால், வாய்பகுதிகளில் பாதிப்பு ஏற்பாட்டாலும் அந்த நேரம் வைத்தியசாலை, மெடிக்ஸ் ஆகிய இடங்களில் இருந்தே வேலைகளை நகர்த்துவார்.

http://tamilulagam.wordpress.com

Link to comment
Share on other sites

வரலாற்றுக் குதிரையொன்றின் மீள் பயணம்

-சேனாதி-

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் வீரச்சாவு ஐயோ நம்ப முடியவில்லை வெள்ளிகிழமை காலை (02ஃ11ஃ2007) 6:10 மணியளவில் அவரின் தங்ககம் குண்டுவீச்சு தாக்குதலிற்கு உள்ளாகியது.

செய்தி வந்ததும் போராளிகள் அவருக்கு ஒன்றுமே நடக்கக்கூடாது, நடவாது என அந்தப் பகுதிக்கு ஒடினர், எல்லா இடமும் மண் சிதறல்கள் ஒருசில போராளிகள் வீரச்சாவு எல்லோரும் வீரச்சாவு அடைந்திருப்பார்களோ என்று எண்ணும் போதும் இல்லை, இல்லை அவருக்கு ஒன்றும் நடந்திருக்காது என்ற அற்ப ஆசையில் இடிபாடுகளை அகற்றிய போது அவரது உயிரற்ற உடல் அப்போதும் கூட ஏன் இப்போதும் தான் அவர் எம்மை விட்டு பிரியவில்லை போல் உள்ளது. அவரது கால்பகுதியிலும் நெத்தியிலும் தான் காயம் கடவுளே எப்படியோ இரு தசாப்தங்களாக பல காயங்கள் பட்டு உயிர்தப்பிய நீங்கள் இப்போது மட்டும் ஏன் தப்பி இருக்கக்கூடாது. உங்களைச் சூழவுள்ள போராளிகளையும் பொறுப்பாளர்களையும் ஏன் போரின் மூலம் உள, உடல் பாதிப்புற்ற பொதுமக்களையும் உங்கள் சிரிப்பினாலும், அன்பினாலும் சுகப்படுத்தும் நீங்கள் ஏன் உங்களை காப்பற்ற முடியாமல் போய்விட்டது.

இனி செல்வன் எனும் மெசெஞ்சர் ஐனு ழககடiநெ இல்தான் இருக்கும் அவரது 0088 என தொடங்கும் செய்மதி செல்லிடப்பேசி வேலை செய்யாது, அவரது ளிவளநடஎயn@hழவஅயடை.உழஅ மின்னஞ்சல் எதையும் உள்வாங்கும். ஆனால் பதில் கிடைக்காது. எம் அன்புக்கு இனிய அண்ணர் அவரது தடங்களை தான் இனி தளுவிட முடியும்.

அவரது புன்னகையின் மகத்துவம் சிலர் கூறலாம் அவர் அரசியலிற்காக தான் சிரிக்கிறார் என்று. ஆனால் தேசியத் தலைவருடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் கூறினார், தமிழ்ச்செல்வனிற்கு அது பிறப்பிலேயே வந்த சிரிப்பு என்று. ஆம், இராஜதந்திரத்திற்காக அவர் சிரிக்கவில்லை. ஆனால் தனது அனைத்து குணாதிசயங்களையும் இராஜதந்திரத்திலும், நிருவாகத்திலும், களமுனையிலும் பயன்படுத்தினார். எம்மிடம் கோபம் வந்தாலும் சிரிப்பார், துன்பம் வந்தாலும் சிரிப்பார், சந்தோசத்திலும் சிரிப்பார், எமது வேலை பிடிக்கவில்லை என்றாலும் சிரிப்பார், ஆனால் எமக்கு சிரிப்பின் உள்ளடக்கங்கள் புரிந்துவிடும். யாரையும் மனம் கோணாமல் பேசுவதில் கடமைகளை செய்விப்பதிலும் சிறந்த மனிதர்.

நிர்வாகத்திறனிலும், மக்கள் அணுகுமுறையிலும், சண்டைக்கான தயார்படுத்தல்களிலும் ஒர் சிறந்த புத்தகம் என்றே கூறுவேன். தலைவருடைய ஒவ்வோர் அசைவையும் புரிந்து அதற்கேற்ப வேலைத்திட்டங்களை நகர்த்தி தலைவரின் அன்றாட மற்றும் மிகப்பெரிய பொறுப்புகளையும் சுமைகளையும் எப்படி குறைக்கலாம் என ஒவ்வொரு நாளும் இரவு-பகல் பாராது இயங்கிக்கொண்டிருக்கும் அந்த மனிதன்.

அவரது விடாமுயற்சியும், தொடர்ச்சியான ஒய்வற்ற கடமை ஈடுபாடும் அவரை நோயாளி ஆக்கியது எனலாம். ஏற்கனவே வெற்றிலைக்கேணி மற்றும் பூநகரியில் விழுப்புண் அடைந்து வயிற்றுபகுதி, கால், வாய்பகுதிகளில் பாதிப்பு ஏற்பாட்டாலும் அந்த நேரம் வைத்தியசாலை, மெடிக்ஸ் ஆகிய இடங்களில் இருந்தே வேலைகளை நகர்த்துவார்.

1998 என்று நினைக்கிறேன் கிளிநொச்சி சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதற்கான கள உதவி வேலைகள் மற்றும்; மருத்துவ வேலைகளை செய்து கொண்டிருந்தார். வன்னி மேற்கில் இருந்து அவரது வாகனத்தில் (இன்ரகூலர் பஜிரோ) வந்து கொண்டிருந்தபோது அவருக்கு மயக்கம் வருவதுபோல தோன்றியது உடனே சென்று பரிசோதனை செய்த போது சீனித்தன்மை (ளுரபயச டுநஎநட) உச்சத்தில் இருந்தது. ஏற்கனவே கைத்தடி, குளிசைகள், கண்ணாடி ஆகியவற்றுடன் திரியும் அவரிற்கு மேலதிகமாக டீடழழன ளுரபயச வுநளவ முவை மற்றும் சில குளிசைகள் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

நடமாடும் வீடு, நடமாடும் அலுவலகம், நடமாடும் கட்டளைப்பணியகம்

அவரது வாகனம் ஒர் வீடு, ஓர் அலுவலகம், ஓர் கட்டளைப் பணியகமாக இருந்தது. பஜிரோ இன்ரகூலர், வான், பிக் அப் எனப் பல தேவைகளிற்காக வாகனங்களை பாவிப்பார். எனினும் யாருக்கும் அவசரம் என்றால் தான் ஒரு இடத்தில் தங்கிக்கொண்டு வாகனத்தை கொடுத்து விடுவார். நீண்டகாலமாக யுரவழ புநயச இல்லாத வாகனம் பாவித்தபடியால் அவருக்கு பல சாரதிகள் இருந்தார்கள், பின்னர் யுரவழ பநயச உடன் தலைவர் வாகனம் கொடுத்த பின்பு அவசரத்திற்கு தானும் ஓட்டுவார். அவரது வாகனத்தை மாற்றுவது என்றால் கடினம். அதேபோல் சுத்தம் பண்ணுவதும் கடினம் ஏனெனில் அவ்வளவு பொருட்கள்.

வாகனத்தின் முன்பகுதியில் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் அவர், சீற்றின் தலைப்பகுதியில் பிஸ்ரல் இருக்கும் பின் ஆசனங்களில் உதவிக்காக போராளிகள் அவர்களது ஆயுதங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், டுயிவழி கொம்பியூட்டர், கோவைகள,; மாற்று உடுப்புகள், பத்திரிகைகள், மருத்துவப் பெட்டிகள் என நீண்டுகொண்டே செல்லும். அவருடன் நின்ற சாரதிகள், உதவியாளர்கள் அனைவரும் நிர்வாகத் திறமையுள்ள, சமர்க்களங்களில் வல்லவராக திகழ்ந்தார்கள். காரணம் ஒவ்வொரு நாளும் செயற்பாட்டு ரீதியாக அவரால் வளர்க்கப்பட்டார்கள்.

மரபு ரீதியான அலுவலக நடைமுறை நிர்வாக திட்டங்கள் அதிகார தோரணை எல்லோரும் என்னிடம் தான் வர வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. தானே இரவு- பகல் நிலைமைகள் பாராது எல்லா இடமும் செல்வார். எல்லோரிடமும் தானே சென்று என்ன நடக்கிறது, என்ன தேவை, என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.

வேலைத்திட்டங்களில் ஈடுபடும் போராளிகள், பொறுப்பாளர்கள் அவர்களிற்கு என்ன பிரச்சினை வந்தாலும் (தனிப்பட்டதோ கடமை நிமித்தமோ) அந்தப் பிரச்சினைகளையும் பழிகளையும் தானே பொறுப்பெடுத்து தன் தலையில் போட்டுக்கொள்வார். இதனால் நம்பிக்கையாக இருப்பதை விட மற்றவர்களிற்கு உறுதியினையும் தன் நம்பிக்கையையும் ஏற்பட செய்வதில் தலை சிறந்த ஒர் அதிகாரி அவர்.

சரியோ, தப்போ யார் என்ன செய்தாலும் அது புதிய முயற்சியாக இருக்கலாம் அல்லது தமது தவறுகளை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம். ஆனால் தமழ்செல்வன் அண்ணர் முதலில் விவாதம் செய்வதோ கிடையாது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்களையும் அதற்கு சமமாக போராளிகளையும் சந்திக்கும் அவர் ஒவ்வொருவரது தேவைகளையும் பிரச்சனைகளையும் உடனுக்குடன் முடிந்த வரை தீர்த்து வைப்பார்.

என்ன கடமைகள் இருந்தாலும் இடையிடையே முஸ்பாத்தி பண்ணுவதிலும் வயதான அம்மாக்களின் கைளால் சமைத்த உணவுகளை உண்பதிலும் அவரது நேர அட்டவணை பிசகாது. சமாதான காலத்திற்கு முன்பு முழங்காவில் ஆச்சி, மல்லாவியின் கமலா அக்கா, சுதா அண்ணையின் அம்மா, பளை அம்மா என்று பேர் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்களது கைகளால் சமைக்கும் உணவிற்காக நேரம் ஒதுக்கி செல்வதுண்டு.

இதேபோலதான் எத்தகைய கடமைகள் இருந்தாலும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள் யாவற்றையும் பார்ப்பார். பதிவு செய்து வாகனத்தில் செல்லும் போதும் கேட்பார். அதேபோன்று அனைத்து பத்திரிகை செய்திகள் மற்றும் தெரிவு செய்த ஆங்தில கட்டுரைகளை மொழி பெயர்ப்பு செய்வித்து படிப்பார்.

இதன் காரணமாக தான் மருத்துவதுறை, நிருவாகத்துறை, நுண்கலைத்துறை, கல்வித்துறை, விளையாட்டுத்துறை, ஊடகத்துறை அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்துறை, இராஜதந்திரம், சர்வதேச அரசியல் போன்ற அனைத்து துறையிலும் தலைவரின் ஆலோசனை வழி நடாத்தலை ஏற்று வளர்த்தார் முகாமைத்துவம் செய்தார்.

எந்த செயற்திட்டங்களாக இருந்தாலும், யாரை சந்திக்கப் போவது என்றாலும் முன்கூட்டியே அதனை ஆய்வு செய்து மதிப்பீடு செய்து எப்படி அவற்றை அணுக வேண்டும் என்பதில் ஒர் திட்டமிடல் இருக்கும். இது தலைவரிடம் அவர் பெற்ற பிரதான பாடமாகும் இதனால் தமிழ்செல்வன் அண்ணை எதற்கும் அஞ்சாத பயப்படாத மனிதராக தோற்றம் அளிப்பார்.

சர்வதேச ஊடகங்கள் இராஜதந்திரிகள் ஆகியோர்கள் சந்திப்பது எனில் முன்கூட்டியே சிறந்த ஆயத்தங்கள் இருக்கும். அதனை நிமிடத்திற்கு ஒருமுறை கண்காணித்து கொண்டே இருப்பார். வரும் விருந்தினர்களின் போக்குவரத்து, உணவு தங்ககம் என்ன கதைப்பார்கள் என்ன கதைக்க வேண்டும் என பல தடவைகள் சிந்தித்து சம்பந்தபட்டவர்களுடன் கலந்துரையாடி பின் தலைவரிற்கு தெரியப்படுத்தி அவரது ஆலோசனைகளுடன் அனைத்தையும் கையாள்வார்.

ஓவ்வொரு நாளும் அல்லது பல தடவைகள் தலைவரின் சிந்தனை அவரின் அரசியல்துறை மற்றும் மக்கள் தொடர்பான பார்வை எப்படி இருக்கிறது என்பதனை தமிழ்ச்செல்வன் அண்ணரின் முகத்தில் பார்த்து அறியமுடியும். ஏனெனில் தினம், தினம் தலைவரின் கட்டளையில் இயங்கும் ஓயாத இயந்திரம் ஆனால் இன்று ஓய்ந்து விட்டது.

சமாதான காலத்தில் ஏராளமான மக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அவரை சந்திக்க வந்திருந்தார்கள் எல்லோரையும் மனம் கோணாது நேரம் ஒதுக்கி சந்தித்து விருந்துபசாரம் செய்வார் தமிழ்ச்செல்வன் அண்ணர் அவர்களிற்கு ளரபயச டநஎநட இனை பாதுகாக்க வேண்டும் என்பதனால் உணவுக்கட்டுப்பாடும் அவசியம். ஆனால் தன்னைச் சந்திக்க வருபவர்கள் மனம் கோணாது இருப்பதற்காக குளிசைகளைப் போட்டுக்கொண்டே சந்திப்புக்களைச் செய்வார் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்.

துணிச்சல் மிக்க போர் வீரன்

1987-1989 காலப்பகுதியில் அவர் தென்மராட்சிப் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிரான போரில் தொடர்ச்சியான தாக்குதல்களை செய்து அவர்களிற்கு சிம்ம சொர்ப்பணமாக இருந்தார். வரணி, கொடிகாமம், மந்துவில், விடத்தல்பளை, அல்லிப்பளை, வாதரவத்தை போன்ற புதர்கள் நிறைந்த ஊர்களிற்குள் மறைந்திருந்து தாக்குதல்களை திட்டமி;ட்டு நடாத்திய அவருக்கு மக்கள் தான் அவரது சரணாலயமாக இருந்தது. அந்த பிரதேச மக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பிசகாது எடுத்துக்கூறும் வல்லமை அவருக்கு இப்போதும் இருந்தது.

1989 யூலை மாதம் என நினைக்கிறேன். நான் பளை நகரத்தில் நிற்கின்றேன் அப்போது பாடசாலை அரச அலுவலகங்களில் முகாம் அமைத்திருந்த இந்திய இராணுவத்தினருடன் ஒட்டுக்குழுக்களும் இருந்தனர். சிறிது நேரத்தில் முகாமில் இருந்து ஒட்டுக்குழுக்கள் அணியும், இந்திய இராணுவ அணியும் அல்லிப்பளை நோக்கிச் சென்றனர். ஒருசில மணித்தியாலயங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டன. அதன் பின்பு சென்ற வழியே ஒட்டுப்படையும், இந்தியப்படையும் திரும்பி ஓடி வந்தனர். அதன் பின்பு தான் தெரியும் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணர் தலைமையில் ஒட்டுக்குழுவையும், இந்திய இராணுவத்தினரையும் வரவழைத்து சண்டையிட்டனர் என்று. இதனை அடிக்கடி அவர் எங்களிற்கு கூறுவார்.

1990 காலப்பகுதியில் தென்மராட்சி தளபதியாக இருந்த போது ஆகாய, கடல்வெளிச் சமரின் போது சிலாவத்துறை, பூநகரி தவளைப் பாய்ச்சலின் போதும் முடிந்தவரை முன்னின்று களமாடி மயிரிழையில் உயிர் தப்பிய அவரைக் கண்டு சாவுதான் பயந்தோடி இருக்கும். அவருடைய சாரதிகள், மெய்ப்பாதுகாவலர்கள் சாவை எதிர்கொண்டிருக்கிறார்கள், வீரச்சாவு அடைந்திருக்கிறார்கள். அவருடைய ஆயுதம் வாகனம் பல தடவை செத்திருக்கின்றது ஆனால் தமிழச்செல்வன் அண்ணர் அவர்களை காப்பாற்றி இருக்கின்றது.

1997 ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை காலப்பகுதியில் இரணைமடுக்குள காட்டின் ஊடாக தான் வன்னி கிழக்கில் இருந்து வன்னி மேற்கிற்குப் பயணம் செய்வோம். அப்போது இரணைமடுக் குளக்கட்டை அண்மித்ததும் அவர் தனது பிஸ்டலை அலெக்ஸ் அல்லது பிற போராளிகளிடம் கொடுத்து விட்டு ஊழடவ உழஅஅயனெழ துப்பாக்கியை எடுத்து கையில் வைத்திருப்பார். ஏனெனில் இராணுவத்தின் முன்னரங்க காப்பரண் பகுதியில் அதற்கு அருகாமையில் செல்வதனால் சிலநேரம் ஆபத்து அதிகம். எனவே தாக்குதலிற்கு ஆயத்தமாக இருப்பார். அந்த நேரம் அவரது கைத்தடிக்கு ஓய்வாக இருக்கும். அவர் ஆபத்து அதிகம் இயலாது என்று ஒரே இடத்தில் வேலைகளை செய்யமுடியும் ஆனால் அப்படி இருப்பது இல்லை.

1999 ஆம் ஆண்டு பூநகரிப்பகுதியில் கட்டளை அதிகாரியாக இருந்த போது அவரது வாகனம் மீது எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது அவரது வாகனமும் அவரது சாரதியுமான 'மாமா" என்று அழைக்கப்படும் போராளியும் பலத்த காயங்களிற்கு உள்ளாகி 'மாமா" வீரச்சாவடைந்தார். பூநகரி மணற்பாங்கான பகுதி இவரால் நடக்கமுடியாது மலசலம் கழிக்க முடியாது (இவரின் காயங்கள் காரணமாக சாதாரணமாகவோ, சாதாரண மலசல கூடத்தினையோ இவரால் பாவிக்க முடியாது) உயரமான கொமட் வசதி தேவை. எனினும் இவற்றையும் பொருட்படுத்தாது சமர்க்களத்தில் பணியாற்றுவார். ஏனெனில் தான் நேரடியாக நின்று போராளிகளுடன் சேர்ந்து எதனையும் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு.

இதே போலத்தான் ஆனையிறவுச் சமரின் போதும் கடும் விமானத் தாக்குதல் எறிகணைத் தாக்குதலிற்கு மத்தியிலும் களமுனைக்கு சென்று காயப்பட்ட போராளிகளை பார்வையிட்டு மருத்துவ மற்றும் தள உதவி வேலைகளை பார்வையிட்டுத் திரும்பும் போது அவரது வாகனத்தை இலக்கு வைத்து விமான குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சாரதி அருள் என்னும் ஒருகால் இல்லாத போராளியின் சாமர்த்திய ஓட்டம் அவரைப் பாதுகாத்தது.

2001 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப் போவதாக கதை அடிபட்டது. திரு. சொல்கெய்ம் வரப்போகின்றார் மல்லாவியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி களை கட்டியது அந்த நேரத்தில் மல்லாவி நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் கிளைமோர்த்தாக்குதலிற்கு உள்ளாகியது. ஆனால் அவர் தற்செயலாக அதில் பயணிக்கவில்லை அதேபோன்று பெரியமடு பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவரது வாகனம் சேதமடைந்தது ஆனால் அதில் சோ.தங்கன் அவர்களும் அருள் அவர்களும் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்.

இவற்றை எல்லாம் ஏன் நான் சொல்கின்றேன் என்றால் இத்தகைய ஆபத்துக்கள் மத்தியிலும் அவர் ஒரு மணித்துளிகள் கூட தனது வேலைத்திட்டத்தினை ஒத்திப் போட்டது கிடையாது. அவ்வளவு துணிச்சல் மிக்க தளபதியாக அதிகாரியாக போராளியாக விளங்கினார். ஏன் ஓர் சிறந்த மனிதாபிமானியும் கூட.

சிறந்த போராளியாக இருப்பதனையே வி;ரும்பினார். தனது விடுதலை வரலாற்றில் எத்தனையோ பொறுப்புக்கள், பதவிகள் வகித்தாலும் சாதாரணமாக ஓர் விடுதலைப் போராளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார். தனது நிர்வாக வேலைகள் போக கூடுதலான நேரங்களில் போராளிகளை வளர்ப்பதிலும் புதிய போராளிகளை உருவாக்குவதிலும் களமுனைகளிற்கு செல்லுதல் கள நடவடிக்கைகளை பொறுப்பெடுத்து நகர்த்தல் போன்றவற்றில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தினார். களத்தில் இருந்து காயப்பட்ட விலத்திய போராளிகளை ஒன்றுசேர்ப்பதிலும் மீள் இணைப்பதிலும் சிறப்பாக செயற்பட்டவர். எமக்குத் தெரிந்தவை சிலவற்றைதான் பகிர முடியும். ஆனால் தெரியாத பல நடவடிக்கைகள் தெரிந்தும் கூறமுடியாத நிறைய உள்ளன.

தலைவரின் எண்ணத்திற்கு ஏற்ப மக்கள் படையணியை கட்டியெழுப்பியும் மக்களை அணிதிரட்டியும் போராட்டத்திற்கு வலுவூட்டினார். மக்கள் மத்தியில் சிறந்த விடுதலை வீரனாக சிறந்த போராளியாக இருப்பதனையே விரும்பினார். மக்கள் தம்மை கண்டதும் பொறுப்பாளர் என மதிப்பு கொடுத்து ஒதுங்காது கௌரவம் அளிக்காது தங்கள் பிள்ளைகள் போல் எம்மை பார்க்க வேண்டும் என நினைத்து செயற்படுவதுடன் மற்றைய போராளிகளிற்கும் அவ்வாறு நடக்கும் படி கூறுவார்.

மக்கள் வீடுகளிற்குச் சென்று 'ஆச்சி, அப்பு, ஜயா, தங்கச்சி, தம்பி என அன்பாக அழைத்து செல்லமாக சண்டைப் பிடித்து வீட்டிற்குள் புகுந்து என்ன இருக்கு எனக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்".

முழங்காவில் ஆச்சியின் பண்ணைக்குச் சென்று (நடுச்சாமத்தில்)" ஏய் கிழடி என்ன சாப்பாடு வைச்சிருக்கிறாய்" என தொந்தரவு கொடுப்பார். ஆச்சி கேட்டபா 'ஏன் உன்ர மனிசி சமைத்து தரவில்லையோ" என்று யார் தந்தாலும் உன்ர சாப்பாடு போல் வராது என்று சொல்வார். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் வீட்டிற்குச் செல்வது குறைவு. அதிலும் வீட்டில் சாப்பிடுவதும் குறைவு. வருத்தம் வந்தால் கூட போராளிகளின் மருத்துவ முகாமில் தான் தங்குவார். ஏனெனில் தான் ஒரு நல்ல குடும்ப தலைவனாக இருப்பதைவிட ஓர் நல்ல உதாரணமுள்ள போராளியாகவே இருக்க விரும்பினார் இருந்து காட்டினார். புதிய பொருட்கள், புதிய வாகனங்கள், புதிய ஆயுதங்கள் மற்றும் எதுவென்றாலும் மற்றவர்களிற்கு கொடுத்து அவர்கள் பெறும் திருப்தியில் சந்தோசப்படுவார். கூடவே வேலைப் பழுக்களையும் சுமத்திவிடும் அழகு.

வீதியில் அவரது வாகனம் சென்றுகொண்டிருக்கும். நாங்களும் கூடுதலாக அவருடன் செல்வோம். ஏனெனில் வாகனத்திற்குள்ளேயே ஒரு கூட்டம் நடாத்தி முடிக்கப்படும். ஆனால் வாகனத்தில் செல்வோர்களிற்கு எப்போதும் ஒரு பயம். எந்த நேரமும் வாகனத்தை விட்டு இறக்கப்படலாம். காரணம், யாராவது வருத்தகாரர், கர்ப்பவதிகள், வயோதிபர்கள் வந்தால் போராளிகளை இறக்கிவிட்டு அவர்களை ஏற்றிக்கொண்டு செல்வார். இந்த விடயத்தில் கூடுதலாக மாட்டுப்பட்டு வாகனத்தால் கீழே இறக்கப்படுபவர்களில் அலெக்ஸ் (லெப். கேணல் அன்புமணி) ஒருவர்.

அலெக்ஸ் எனும் போராளி தமிழ்செல்வன் அண்ணர் அவர்களை தெரிந்தோர்க்கு அலெக்ஸ் அவர்களையும் தெரிந்திருக்கும். ஏனெனில் அவர் எப்போதுமே அவர் பக்கத்தில் இருப்பார். 1993 இல் தமிழ்ச்செல்வன் அண்ணர் காயப்பட்டபோது பராமரிப்பிற்காக வந்த அவர், இன்று பதினான்கு வருடங்கள் அவருடனேயே இருந்து அவருடனேயே சென்றுவிட்டார். இலத்திரனியல், தொலைத்தொடர்பு, ஆயுதங்கள், கணனி போன்ற அனைத்திலும் தேர்ச்சிபெற்ற அந்தப் போராளி தமிழ்ச்செல்வன் அண்ணரின் வலதுகரம். நான் அவரைக் கண்டால் அல்லது தொடர்பு கொண்டால் ஓடி ஒழிந்து கொள்வேன். ஏனெனில் ஒரு பெரிய பொருள் கொள்வனவு பட்டியலுடன் வருவார்.

தமிழ்செல்வன் அண்ணாவைப் பொறுத்த வரை அவர் தலைசிறந்த போராளிகளை உருவாக்குவதில் வல்லவர் என்பதற்கு அலெக்ஸ் ஓர் உதாரணம். எல்லாவற்றிலும் பிரியமானவர். உணவிலும் விதிவிலக்கு அல்ல. தாக்குதலிற்கு முதல்நாள் கிராமப்புற அம்மாக்கள், ஆச்சிமார், அப்புமார் சமைக்கும் உணவில் அலாதி இன்பம். அதிலும் பூநகரி அரிசிச்சோறு ஆட்டுக்கறி கூழ் என்றால் மின்னல் வேகத்தில் வந்து நிற்பார். அது மட்டுமன்றி ஒரு கூட்டத்தையே அழைப்பார். தாக்குதலிற்கு முதல் நாள் கூட பூநகரியில் ஓர் போராளி குடும்பத்தின் வீட்டில் ஆடு வெட்டி சமைத்து சாப்பிட்டு விட்டு பூநகரிக் களநிலமைகளை பார்வையிட்ட பின்பு தான் கிளிநகர் நோக்கிப் புறப்பட்டார்.

விசேட வேலைத்திட்டமாக அவர் கிளிநொச்சிக்கு வந்து அடுத்த நாளும் பூநகரி களமுனைக்குச் சென்று களமுனையை அவதானிக்கப் போவதாகவே கூறி இருந்தார். ஆனால் அதற்கிடையில் எம்மை விட்டு சென்று விட்டார். ஆம், பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணர் தோல்யுறா மனிதன். எங்கள் சகோதரன் சாவிலும் கூட அவர் வெற்றி பெற்றுவிட்டார் நாம் தோற்றுவிட்டோம். ஏனெனில் எமக்கு முன் சென்றுவிட்டார். எனது மூத்த சகோதரன் வீரச்சாவு அடைந்த போது கூட எனக்கு கண்ணீர் வரவில்லை. ஆனால் எனது 'தமிழ்ச்செல்வன்" எனும் இந்த சகோதரர் செய்தி கேட்டு அழுது விட்டேன், அழுகின்றேன். வாருங்கள் சேர்ந்து அழுவோம் அடுத்த கணமே அவரின் பணியினை தொடர்வோம

http://www.tamilnaatham.com/articles/2007/...van20071104.htm

Link to comment
Share on other sites

இனி செல்வன் எனும் மெசெஞ்சர் ID Offline இல்தான் இருக்கும் அவரது 0088 என தொடங்கும் சற்றலைற் கை தொலைபேசி வேலை செய்யாது, அவரது sptselvan@hotmail.com மின் அஞசல் எதையும் உள்வாங்கும் ஆனால் பதில் கிடைக்காது. எம் அன்புக்கு இனிய அண்ணர் அவரது தடங்களை தான் இனி தளுவிடமுடியும்.

:icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுப்புதான் அன்றி வெறொன்றும் இல்லை பராபரமே. சந்தர்ப்பம் இருந்தால் சிங்கத்திடம் ரெண்டு கேள்விகள் கேட்கலாம் என்ற நினைப்பில் தான் போனேன். அதுவும் தவிர கனடாவில் வசிக்கும் மனோரஞ்சன் எனப்படும் முன்னாள் ENTLF நபரை  (புலிநீக்க அரசியல் சூத்திரதாரிகளில் இவரும் ஒருவர்), இவரையும் நேர்ல பார்க்க சந்தர்ப்பம் இருந்த படியால் போனேன். அனுரகுமார  வழமையான அரசியல்வாதிபோல் சிங்களத்துக்கான அரசியலை பேசினார். தமிழருக்கு அரசியல் பிரச்சினை இருக்கா? அப்படி இருந்தால் கிலோ எத்தனை ருபாய் என்பது போலத்தான் அவரின் பேச்சு இருந்தது. சிங்களம் ஆராவாரமாய் கைதட்டியது. மனோரஞ்சன் அனுரகுமாராவை விட அழகான நேர்த்தியான சிங்கள மொழியில் அனுராவுக்கு புகழாரம் சூட்டி செம காமெடி பண்ணி இருந்தார்.  தமிழர்கள் சார்பில் கேட்கப்பட்ட இன்றைக்கும் தொடரும் அநீதிகள் தொடர்பான இரண்டு கேள்விகளுக்கும் சிங்கனிடம் பதில் இல்லை. வெறும் சடையில் தான் இருந்தது. ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையில் சகோதரத்துவ சக ஜீவன சுகவாழ்வு பற்றி சிங்கம் பேசப் பேச ... வந்திருந்த சிங்களம் அவரை ஆபத்பாந்தவராக கைநீட்டி, உச்சம்குளிர்ந்து  ஜயவேவா...ஜயவேவா கோசம் போட்டது. போங்கடா நீங்களும் உங்க அரசியலும் என்று விழா ஒருங்கிணைப்பாளரை  பார்த்து நக்கலாக சிரித்து, உருத்தும் படி சில விடயங்களை சொல்லிவிட்டு நான் பார்க்கிங் லாட் நோக்கி நடையை கட்டினேன்.  எதிரில் தெரிந்த எல்லா சிங்களவரும் எதிரியை போல தெரிந்தார்கள்!!!
    • ஓம் விக்னேஷ் வரைய நமக ஓம் விக்னேஷ் வரைய நமக சந்தன சேற்றின் மகிமை கண்டாயா சண்முக அண்ணன்  
    • ஈழத்து இசைப்பரப்பில் தவிர்க்க முடியாத ஆனால் ஆர்ப்பாட்டமில்லா ஆளுமை     பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன ஓரிரு நாட்களுக்குள்ளே அவர் மறைந்த நாள் வந்தது. நெஞ்சம் கனக்கிறது. "பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது" அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் காலத்தாலும் அழிக்க முடியாதது. அவை பற்றி விரைவில் பதிவிடுவேன். அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய இசைப் பணிகளில் சிலவற்றைத் தகவலுக்காக இங்கே பதிவிடுகிறேன். 1.இந்திய அமைதிப் படை ஆக்கிரமித்திருந்த 80களின் இறுதியில் சுய முயற்சியாக விடுதலைப் பாடல் தொகுப்பு. (இதன் தலைப்பு நினைவிலில்லை) 2. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த"ஓ.... மரணித்த வீரனே" பாடல் சில மாற்றங்களுடன் மீள் ஒளிப்பதிவு. 3.1994 இல் "பிஞ்சுமனம்" திரைப்படத்திற்கு இசையமைப்பு. இது தான் அவர் இசையமைத்த முதல் திரைப்படம். 4. 1995இல் கலைண்பாட்டுக் கழகம்- மகளிர் பிரிவு தயாரித்து வெளியிட்ட இவர் இசையமைத்த "நெருப்பு நிலவுகள்" இசைப் பாடல் தொகுப்பு. 5. 1995இல் "திசைகள் வெளிக்கும்" திரைப்படத்திறகு் இசையமைத்தமை. ஆம். அருமையான மனிதர். அமைதியில் உறங்கட்டும்...! "ஈழத்துத் திரைத்துறையின் அஞ்சலிகள்"   ---> Kesavarajan Navaratnam ()      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.