Jump to content

தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்கள் ஆற்றிய வீரவணக்க உரை:


Recommended Posts

தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்கள் ஆற்றிய வீரவணக்க உரை:

கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 5 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய வீரவணக்க உரை:

எமது மக்களின் விடிவுக்காக சுதந்திரவேட்கை கொண்டு அதற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த இம்மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

எமது விடுதலைப் போராட்டத்தில் நேற்றைய நாள் மறக்க முடியாத நாள். சிறிலங்கா வான்படையினர் நேற்றைய நாள் காலை 6:00 மணியளவில் எமது போராளிகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் ஐந்து போராளிகளும் வீரச்சாவடைந்தனர்.

அமைதி முயற்சிகளின் சின்னமான இடத்தின் மீதுதான் சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஐந்து போராளிகளும் ஆற்றிய பணிகளை இன்றைய சூழலில் வார்த்தைகளினால் சொல்லமுடியாது. ஆனால் அவர்களின் ஈகங்கள் அர்ப்பணிப்புக்கள் வரலாற்றில் பொன்எழுத்துக்களினால் பதியப்படும். ஏனெனில், எமது விடுதலைப் போராட்டத்தில் எமது இயக்கத்தின் வரலாற்றில் போராளிகள் செய்யும் ஈகங்கள் அர்ப்பணிப்புக்கள் பதிவுகளாக இடம்பெறும்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு லெப். கேணல் அன்புமணி வலது கையாக இருந்து அர்ப்பணிப்புக்களை செய்தவர்.

மேஜர் மிகுதன், மேஜர் கலைச்செல்வன், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் ஆகியோர் மக்களுக்காக ஈகங்கள் செய்தனர்.

அம் மாவீரர்களின் இழப்பால் தமிழீழத் தேசமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகள் மீதான துயரில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக மக்கள் தமது துயர்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆகவே எல்லோருடைய மனங்களிலும் அம்மாவீரர்களின் இழப்பு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல அம் மாவீரர்களின் இழப்பால் அதாவது சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் செயலால் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தலைமையில் எமது விடுதலை வென்றெடுப்பதற்கான எழுச்சியை எமது தேசம் கொண்டிருக்கிறது.

அம் மாவீரர்களின் இழப்பால் எல்லோருடைய இதயங்களும் எமது தேசம் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்ற அவா ஆட்கொண்டு இருப்பதை உணரமுடிகிறது.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் அமைதி முயற்சிகளுக்கு வீழ்ந்த அடியாகும்.

சிறிலங்கா அரசின் கோழைத்தனமான செயல்களை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். சிறிலங்கா அரசானது பயங்கரவாத முகத்தினை தமிழர் தேசத்திற்கு மட்டுமல்ல பன்னாட்டு சமூகத்திற்கும் அண்மை நாட்களாக காட்டி வருகின்றது.

சிறிலங்கா அரசபயங்கரவாதத்தை பன்னாட்டு சமூகம் விரைவில் புரிந்து கொண்டு எமது சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரித்து எமது தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் தமிழீழம் விரைவில் கிடைக்கும் என்பதை ஆணித்தரமாக கூறுகின்றேன்.

அம்மாவீரர்கள் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்ந்து சென்று எமது சுகந்திரத்தை வென்றெடுப்பதற்கு உறுதியெடுப்போம்! என்றார் பா. நடேசன்.

www.pathivu.com

Link to comment
Share on other sites

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் அமைதியின் மீது வீழ்ந்த அடி என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.