Jump to content

பிரிகேடியர் தமிழ்செல்வனுக்கு கருணாநிதி இரங்கல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன்: கருணாநிதி

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுபவர் தமிழ்ச்செல்வன். சவால்களை உறுதியான உள்ளத்தோடு சந்திப்பவர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர். தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன் என்று கூறியுள்ளார்.

thatstamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

செல்வா எங்கு சென்றாய்?

எப்போதும் சிரித்திடும் முகம் -

எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ

இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்

பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய

உத்தம வாலிபன் - உயிர் அணையான்

உடன் பிறப்பணையான்

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்

தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/full.php?203mOAcdb...471e64ccbUcYO3e

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

இரங்கல் கவிதையோடு... மனிதாபிமனற்ற இந்த தாக்குதலுக்கு எதிராக சிங்கள அரசிற்கு கடும் கண்டத்தையும் தெரிவித்துள்ளார் கலைஞர்...

இது மனித குலதிற்கு எதிரான தாக்குதல் - மருத்துவர் இராமதாசு

மேலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இரங்கலையும்... சிங்கள அரசிற்கு கண்டத்தையும் தெரிவித்துள்ளனர்...

ஆனால் ஜெ தொலைகாட்சியில் தடை செய்யப் பட்ட விடுதலை புலிகள் இயக்கதிற்கு ஆதரவாக கவிதை எழுதிய கலைஞருக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது... இந்த இரங்கல் கலைஞர் பதவி ஏற்ற போது ஏற்று கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது எனவும் இந்திய அரசியல் சட்டதிற்கு எதிரானது எனவும்... காங்கிரஸ் அதிருப்தி எனவும் ஜெவின் தமிழர்களுக்கு எதிரான... பார்ப்பன... சிங்கள காட்டுமிராண்டிதனத்தின் அடிவருடிதன கோர முகத்தை காண முடிகிறது

http://www.tamilnadutalk.com/portal/index....mp;#entry178966

Link to comment
Share on other sites

New Delhi: Tamil Nadu Chief Minister Karunanidhi in an open display of his pro- Liberation Tigers of Tamil Eelam (LTTE) leanings penned a poem in memory of the slain Tamil Tiger political wing leader S P Thamilselvan.

karunanidhi_ltte248.jpg

“You had the strength of meeting the opposition with a smiling face. You had the strength of the Himalayas at a very young age and was moulded by Balasingam (LTTE's late political ideologue). Selva where have you gone?” the poem reads in memory of the slain guerrilla.

Now this could prove to be an embarrassment for the Congress, the DMK being an ally of the party at the Centre.

Thamilselvan was killed along with five other rebel leaders by Sri Lankan Air Force bombing raid early on Friday.

Meanwhile, Tamil Tigers' elusive supreme V Prabhakaran appointed P Nadesan, who had been a delegate to earlier peace talks between the rebels and the government, as the new political head of the outfit.

http://www.ibnlive.com/news/mk-pens-poem-f...an/51678-3.html

Link to comment
Share on other sites

தமிழர்களின் இதயங்களில் செல்வனாகிய இந்த மாமனிதன் வாழும் போது எம் சந்ததிக்கு செய்ததை விட இன்று சாவின் பின்னும் சாதித்துச் சென்றிருக்கிறான். நீ என்றும் எம் இதயங்களில் ......

Link to comment
Share on other sites

Condolence poetry by Kalaignar Karunanidhi

English translation: TamilNet

Young, young, yet a heart of

Himalayan strength, strength!

A commander seasoned in the line

of the old lion Balasingam

The virtuous youth whom with determination

offered himself to the War for Rights -

his soul hasn't gone extinguished

he hasn't gone brotherless

A beloved son who wrote his fame

all over the earth, wherever Tamils live -

where have you gone

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து அரசியல் நடைமுறைகள் ஈழத்திற்கு எப்போதும் உதவப்போவதில்லை. அதுவும் 1970ம் ஆண்டுகளிலிருந்து நம்ம கருணா(நிதி)சார் ஈழத்திற்கு சார்பாக கவிதைகளும் கட்டுரைகளும் வடித்துக்கொண்டிருப்பவர். இன் �

�ு மத்திய அரசில் பலம் வாய்ந்த இவர் ஏன் எதற்காக கவிதைகளுடன் ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றார். இவர �

� அல்லது இவர்கள் எப்பவோ நடவடிக்கை எடுத்திருப்பார்களேயானால் ஈழத்தில் இன்று இவ்வளவு பேரழிவுகளை சந்திக்கவேண்டிய நிலைமை எமக்கு வந்திருக்காது.

Link to comment
Share on other sites

சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2007

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு, முதல்வர் கருணாநிதி இரங்கல் கவிதை எழுதியுள்ளது, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என்பதை நிரூபிக்கும் வகையில், அந்த இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருப்பதற்கு, கவிதை வடிவில் அவர் இரங்கலைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டிய அவர், இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்ட ஒரு முதல்வர், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்த்துள்ளார்.

நன்றி : தமிழ் யாகூ

ஒருவரின் மரணத்திற்கு வெடி கொழுத்தும் சிங்களவனுக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்ததால் தமிழ்நாடு அரசாங்கத்தைக் கலைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஜெயலலிதாவுக்கு முதல்வர் கலைஞர் பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

குருத்தோலையாக வளர்ந்த மாவீரன் கொல்லப்பட்டமைக்கு கண்ணீர் சிந்தும் உரிமை கலைஞருக்கு இல்லையா?: கி.வீரமணி

தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாயமாக குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே, அவனுடைய தளபதிகளோடு என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்குக்கூட தமிழக முதல்வர் கலைஞருக்கு உரிமை இல்லையா? என்று திராவிடர் கழகத் தலைவர் (தமிழ்நாடு) கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்பதால் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல்: கருணாநிதி

சென்னை: ஒரு தமிழன் என்பதால், எனது உடலில் ஓடுவது தமிழ் ரத்தம் என்பதால், தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்தேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பதிலும் வருமாறு:

கேள்வி: தமிழ்ச்செல்வன் மறைவுக்கு நீங்கள் மனிதாபிமானத்துடன் இரங்கல் தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதா அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று கூறியிருக்கிறாரே

பதில்: ஆட்சியில் இல்லாத காரணத்தால், ஆத்திரத்தில் அல்லல்படுகிறார். எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் மறைந்தாலே இரங்கல் தெரிவிப்பது மனித நேயப் பண்பாடு என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தெரியும்.

அந்த அடிப்படையில் தான் அதிமுகவிலே இருந்த நாவலர் நெடுஞ்செழியன் மறைந்த போது கூட நான் தேடிச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன்.

இலங்கையிலே கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடலில் ஓடுவது தமிழ் ரத்தம். எனவே தான் என்னுடைய இரங்கலை நான் தெரிவித்தேன்.

ஜெயலலிதாவுடன் இன்றளவும் தோழமை கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று வந்த மதிமுக தலைவர் வைகோ, தமிழ்ச்செல்வன் மறைவுக்காக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து கண்டிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தால் அதற்கு ஜெயலலிதா ஒப்புதல்.

அதே தமிழ்ச்செல்வன் மறைவுக்காக நான் அறிக்கை விடுத்தால் என்னுடைய ஆட்சியைக் கலைக்க வேண்டுமா. எப்படியாவது ஆட்சி கவிழ்க்கப்படாதா. தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து சுரண்ட முடியாதா என்று ஜெயலலிதா தவியாய் தவிக்கிறார். என்ன செய்வது. ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் மக்கள் ஆதரவு வேண்டுமே என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இதேபோல, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

- தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

../இச்சாவு தமிழக மக்களினன் உள்ளங்களைப் பாதித்து உணர்ச்சியைக் கிளப்பியிருப்பதை உணர்ந்து கொண்டமையால் தான் தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி உள்ளத்தைத் தொடும் இரங்கல் கவிதை ஒன்றை தமிழக முதல்வர் தமது அரசின் ஊடக பொதுசனத் தொடர்பு அமைச்சு ஊடாக உத்தியோக பூர்வமாக உடனடியாக வெளியிட்டார் என தமிழகச் செய்திகள் கூறுகின்றன../

பம்மாத்து நன்றாக இருக்கின்றது. பட்டினிச் சாவை எதிர் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு தமிழகத்தில் சேகரித்த உணவு மருந்துப் பொருட்களை கொண்டு வர விடாமல் மத்தியின் காலடியில் சரணாகதி அடைந்தவர் தமிழக மக்களின் எழுச்சிகண்டு இறந்த எம் பிரிகேடியருக்கு அஞ்சலி செலுத்துவது.....?

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் மறைவின் போது, இலண்டன் அலேக்ஸாண்டா மண்டபத்தில் நடைபெற்ற அஞ்சலிக்கூட்டத்தில் தொல் திருமாவளவன், மதிமுக உறுப்பினர் ஒருவரும் கலந்து கொண்டார்கள். தேசத்தின் குரலுக்கு தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி, வைகோ, வீரமணி, இராமதாஸ், விஜயகாந்த உட்பட பலர் இரங்கல் தெரிவித்தார்கள். வன்னியில் இருந்து போராளிகள் பாலசிங்கம் அவர்களுக்கு வழங்கிய இரங்கல் அலேக்ஸாண்டா மண்டபத்தில் காண்பிக்கப்பட்டது. அப்பொழுது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள், தேசத்தின் குரலுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக தமிழக சகோதர்களுக்கு குறிப்பாக முதன்மையாக கலைஞர் அவர்களுக்கே நன்றி செலுத்தினார். அகவே இங்கு கலைஞர் அவர்களை விமர்சிப்பது தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைந்த தற்காலத்தில் அழகல்ல.

Link to comment
Share on other sites

ஆமாம் கந்தப்பு நீங்கள் சொல்வதுதான் சரி, அதாவது கலைஞரை மட்டுமல்ல யாரையும் நாம் விமர்சிக்கும் நேரமல்ல இது.

இன்று எம்மக்களின் மனோநிலை ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள் நாமும் அர்த்தமில்லாத கருத்துக்களை முன்வைப்பது அவ்வளவு சிறந்ததல்ல.

Link to comment
Share on other sites

கந்தப்பு அவர்களது கருத்தை தொடர்கிறேன்............................

வேற்று நாட்டு

சில அரசியல் தலைவர்கள்

வார்த்தைகளை நாம் நினைப்பது போல பேசிவிட முடியாது.

தான் தோன்றித்தனமாக பேசி விட்டு ஏகப்பட்ட விலையை

ஏன் தலையை கூட கொடுக்க வேண்டி வரலாம்.

இந்தியாவிலிருந்து யாராவது பகிரங்கமாக

மறைந்த தமிழ்செல்வன் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பார்களானால்

அதை நாம் நன்றியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதை குதர்க்கமாக விமர்சிக்கக் கூடாது.

அவை எம் முகங்களில் நாமே எச்சில் துப்பிக் கொள்வதாகவே இருக்கும்.

தமிழகத்தில் இருந்து

தமிழ்செல்வன் அவர்களது இழப்பு குறித்து மனம் உடைந்து

போயிருந்த ஒரு கவிஞர் என்னோடு தொலைபேசியில் பேசும் போது

இடையிடையே கண்ணீர் விட்டழுதார்.

"எனக்கு பிடித்த ஒருவருக்காக இன்று

தன்னால் ஒரு கவிதை கூட வடிக்க முடியவில்லை.

நான் பல முறை சிறைகளில் வாடியிருக்கிறேன்.

தூக்கமே இல்லாமல் இருந்திருக்கிறேன்.

எனது நடவடிக்கைகளால்

என் நண்பர்கள் பலரை வாட வைத்திருக்கிறேன்"

என்று வருந்தி பேசினார்.

அவரது இயலாமை புரிகிறது?

நம்மில் பலர் எமக்காக பேசுங்கள் என்று

அவர்களை கேட்கிறோம்.

மெளனம் சாதிக்கிறீர்களே என்று விசனப்படுகிறோம்?

பின்னர்

எமக்காக பேசும் அவர்களை

வெளியேயிருக்கும் நாமே குத்திக் குதறுகிறோம்.

இது குறித்து நாம் சற்று சிந்தித்தால் என்ன?

இவற்றை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை

எதிர்த்து வார்த்தைகளை கொட்டாமல் இருந்தால் அதுவே போதும்.

கண்டு கொள்ளாமல் விட்டால் கூட என்ன?

எதிரியை கூட அது சிந்திக்க வைக்குமே

என்று ஏன் நம்மால் சிந்திக்க முடிவதில்லை?

எனவே முடிந்தால்

தயவு செய்து

அப்படியான கருத்துகளை தொடராதீர்கள்.

அல்லது முடிந்தால் அகற்றிவிடுங்கள்.

அது நாம் நமது சமூகத்தின் விடுதலைக்கு

நம்மையறியாமல் நாமே செய்யும் கெடுதலாக இருக்க வேண்டாமே?

ஒரு பயங்கரவாதியாக கருதப்பட்ட ஒருவருக்காக

அதுவும் ஒரு எதிரிக்காக தங்களது வார்த்தைகளை

வடிக்காமல் விட்டதையும்

அவரது இழப்பில்

மகிழாமல் அவரது இழப்பு செய்தியை மட்டுமே பிரசுரித்ததையும்

சிங்கள பத்திரிகைகள் கூட செய்தன என்றால்

அதை நான் அண்மைக் காலத்தில் கண்டது

தமிழ்செல்வனுக்காக மட்டுமே?

இலங்கை அரசின் சிலரை தவிர

பெரும்பாலானவர்கள் இவரது கொலையை

ஏற்க மறுப்பது அதிலிருந்தே தெரிகிறது.

எனவேதான் இலங்கை அரசு

தொலைக் காட்சியில்

அவர் குறித்த இராணுவ உடைகளோடு இருந்த

காட்சிகளை முதன்மைபடுத்தியது?

இருந்தாலும்

அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அது கூட

அந்த புன்னகைக்குள் இப்படி ஒரு வீரமா என்று

சிங்கள மக்களையே வியக்க வைக்க அது உதவியிருக்கிறது.

இராணுவ தரப்பு கூட

தாக்கியது

தமிழ்செல்வன் என்று தெரியாமல் என்று

வாய் தவறி சொன்னாலும்

அதன் அர்த்தம் என்ன என்பது பலருக்கு புரியும்?

அது சிங்கள மக்களிடமே நியாயப்படுத்த முடியாத ஒன்றாகியிருக்கிறது?

எனக்கு தெரிந்த பல சிங்கள ஊடகவியலாளர்கள்

தமிழ்செல்வனோடு இணைந்து எடுத்துக் கொண்ட

புகைப்படங்களை மகிழ்வோடு காட்டியிருக்கிறார்கள்.

அவர் குறித்து பேசும் போதெல்லாம்

மகிழ்வோடு அவர் குறித்து பேசியதை கண்டிருக்கிறேன்.

கொலையாளிகளாக இல்லாமல்

போராளிகளாக இருக்க முடியாது.

அவரது கடந்த காலத்தை வைத்து

அவரது நிகழ்காலத்தை குதற நினைப்பவர்கள்

நம்மில் மட்டுமே இருக்கிறார்கள்?

இருந்தாலும்

எதிரிகள் கூட மதிக்கும்

ஒரு மனிதனாக தமிழ்செல்வன் வாழ்ந்திருக்கிறார்.

அது அவரது புன்னகையும்

அவரது எண்ணமும் கொடுத்த கொடை.

தமிழ்செல்வனை அழிப்பதற்கு

யார் நினைத்திருந்தாலும்

அவர்கள்

அவரை மக்கள் மனங்களில் என்றென்றும்

வாழவே வழி செய்திருக்கிறார்கள்.

அனைத்தும் அழிந்து போகும்

உன் நினைவுகள் அழியாது தமிழ் செல்வனே!LTTE.sp_tamilselvan9.jpg

Link to comment
Share on other sites

" எயா ஹொந்த மினிகெக் " (அவர் ஒரு நல்ல மனிதர்)"

தமிழ் செல்வன் குறித்து அப்துல் ஜப்பார்

தமிழகத்தில் ஏனைய ஊடகங்கள் செய்திகளைத் தருமுன்பே "முத்தமிழ்"

குழுமத்தில் படித்து விட்டேன்.

நான் தொட்டது கணினியா மின்சாரமா என்றொரு பேரதிர்ச்சி. நினைவுகள்

பின்னோக்கி நீங்கின.

2002 ஏப்ரல் 10ம் தேதி வன்னியில் தலைவர் பிரபாகரனுடனும் தத்துவாசிரியர்

அந்தன் பாலசிங்கதுடனும்

உலக ஊடகவியலாளர்கள் சந்திப்பு. மாலை ஐந்தே முக்காலுக்கு ஆரம்பித்து

ஏழேமுக்கலுக்கு முடிந்தது.

செய்திகளை உடனே அனுப்பும் வசதிகள் அங்கில்லாததால் பெரும்பாலானோர்

புறப்பட்டுச்சென்று விட்டனர்.

அதில் என்னை தங்களுடன் அங்கு அழைத்துச் சென்ற இலங்கை தினகரன் குழுவும் அடக்கம்.

மறுநாள் காலை கொழும்பு புறப்படும் நோக்கத்துடன் விடுதி பொறுப்பாளரிடம்

கிளினொச்சி வரை செல்ல

ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தர முடியுமா என்று கேட்டேன். "இல்லை உங்களை

இருக்கச் சொல்லி

இருக்கிறார்கள் " என்றார். யார் ? எதற்கு ? என்று என்னுள் எழுந்த

கேள்விக்கு பதில் சொல்லுமுகமாக பவநந்தன்

என்கிற இளைஞர் வந்தார். " ஐயா உங்களை தமிழ்ச் செல்வன் அண்ணா பார்க்க

விரும்புகிறார்" என்றார்

மீண்டும் என்னுள் ஆச்சரியம் கலந்த ஒரு குழப்பம். என்னையா, என்னைத்தானா,

ஏன், எதற்கு என்கிற

கேள்விகள். சற்று நேரத்தில் வண்டி வந்தது. தமிழீழ பொருண்மிய தலைமைச்

செயலகத்துக்கு அழைத்துச்

சென்றார். காத்திருந்தேன். சற்று நேரத்தில், வெள்ளை உடையில், ஊன்றுகோல்

உதவியுடன், ஆனால்

உள்ளத்திலும் எண்ணத்திலும் ஊனமில்லாத பளீர்ச்சிரிப்பு கவர்ச்சி இளஞர்

கூப்பிய கைகளுடன் என் முன்

வந்தார். அவர்தான் இன்று அமரராகிவிட்ட சுப. தமிச்செல்வன்.

லண்டன் ஐ.பீ.சி - தமிழ் வானொலியில் வாரம் தோறும் ஒலிபரப்பாகும் தங்கள்

இந்திய கண்ணோட்டத்தை

தலைவர் தவறாமல் கேட்பார். அவர் களத்திலிருக்கும் காலங்களில் ஒலிப்பதிவு

செய்து அனுப்பச் சொல்வார்.

உங்களைப் பற்றி அதற்கு முன் அதிகம் தெரியாது. ஆனால் ஒலிப்பதிவுக்காக

கேட்க நேர்ந்தபோது நான்

தலைவரைவிட உங்களது பெரிய ரசிகனாகிவிட்டென்" என்றார். ஒரு குழ்ந்தையின்

குதூகலத்துடன்.

இந்திய அரசியல் நடப்புகளை - அதிலும் குறிப்பாக தமிழக நடப்புகளை முழுமையாக

- துல்லியமாக - அதுவும்

பாரபட்சமில்லாமல் பதினைந்து நிமிடங்களுக்குள் கோர்த்துத் தருவது அருமை"

என்று பாராட்டினார். என்

ஊடகத் துறை வாழ்க்கையில் அது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக

இன்னும் கருதி வருகிறேன்

சுமார் ஒரு மணி நேரம் கலகலப்பான உரையாடல். விடை பெறப்போனேன். இல்லை

இருங்கள் நாளைதான்

நீங்கள் போகிறீர்கள். மீண்டும் என்னுள் கேள்விகள் ஏன் ? எதற்கு ?

"வாகனம் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் நாட்டின் இருப்பை - நடப்பை

சற்று அவதானித்து விட்டு

வாருங்கள். பிறகும் பேசலாம்" என்றார்.

அப்போதுதான், இலங்கை விமானப்படையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இறையான "செஞ்சோலை"

சிறுவர் இல்லத்தையும் பார்த்தேன். வெயிலால் அல்ல, அலைச்சலால் அல்ல ஆனால்

நான் நேரில் கண்ட

துயர் மிகு காட்சிகளால் உள்ளமும் உடலும் சோர்வடைய கனத்த இதயத்துடன்

தலைமையகம் திரும்பினேன்

அப்போதுதான் தலவருடனான சந்திப்பு பற்றி தமிழ்ச் செல்வன் சொன்னார். மறக்க

முடியாத - உணர்ச்சி

மயமான அந்தச் சந்திப்பு நிகழவும் செய்தது. அது பற்றிய கட்டுரை 2002 மே

முத்ல் தேதி ஜூனியர் விகடனில்

அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். ஆனால் இங்கிருந்து யார் சென்றாலும்

அவர்களிடமெல்லாம் என் நலன்

விசாரித்திருக்கிறார். அவர் ஜெனீவா வந்திருந்த போது ஐ.பி.சி நண்பர்களிடம்

என் நலம் விசாரித்ததாகச்

சொன்னார்கள். கூடவே இரண்டு பாராட்டுரைகளையும் சேர்த்தே சொல்வாராம்.

அத்தகைய நல்ல மனிதர்

அந்த அளவு அன்பைப் பெற அவருக்காக நான் எதையும் செய்து விடவில்லை என்பதுதான் உண்மை.

விடுதலைப் புலிகள் என்றால் கொழும்பில் நெருப்பை உமிழ்பவர்கள்

இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியிலும்

கூட தமிழ்ச் செல்வனுக்கு நல்ல மதிப்பு - மரியாதை. அவரைப் பற்றி ஒரு வெறி

பிடித்த சிங்களப் பேரின

வாதி சொன்ன வாக்கியம் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. " எயா

ஹொந்த மினிகெக் "

அவர் ஒரு நல்ல மனிதர் என்று பொருள்.

எதிரியின் வாயிலிருந்து கூட வந்த இந்த்ச் சொற்கள் தான் நாம்

அவருக்குச்சூட்டும் மிகப்பெரிய - மிகச்சிறந்த

புகழஞ்சலியாக இருக்கக் கூடும். அவரது நல்லாத்மா சாந்தியடைய பிரார்த்த்ப்போம்.

- சாத்தான்குளம். அப்துல் ஜப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி, 30 வருடங்களுக்கு மேலாக இதே பம்மாத்து தானே.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30800

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.