Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

இந்திய நாட்டின் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் எனது பிறப்பிடம். நான் ஒரு கணிபொறியாளன். தற்போது சிங்கப்பூரில் பணிபுரிந்துகொண்டுள்ளேன். உங்கள் மேலும், உங்களின் கலப்படமற்ற தமிழ் மீதும், என் உளம் கவர்ந்த தலைவர் அண்ணன் பிரபாகரன் மீதும் கொண்டுள்ள பாசத்தால் உங்களோடு நானும் இந்த தளத்தின் மூலம் உறவாட ஆசை கொண்டு , உங்களோடு இணைகிறேன். எங்கள் நாடு வேண்டுமானால் உங்களுக்கு உதவ மறுக்கலாம். ஆனால் எங்களில் மிகுதியானோர் உங்கள் மேல் அன்பு கொண்டுள்ளனர். நானும் அவர்களில் ஒருவன்.

விரைவில் தமிழ் ஈழ நாடு உருவாக வேண்டும். நான் அங்கு வந்து என் அருமை அண்ணன் பிரபாகரனை சந்தித்து அவர் கரம் பிடித்து மகிழ வேண்டும் என்பதே என் ஆசை. என்னையும் உங்களோடு ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு

சோழ இளவரசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ இளவரசரே. தாங்கள் நலம்தானே!

நலமென்று சொல்ல இயலாத சோகத்தில் நானிருக்கிறேன் தோழரே,

ஈழத்தின் புண் சிரிப்பை இழந்துவிட்ட இந்நிலையில்,

நலம் தான் என்று சொல்ல நான் ஒன்றும் கோத்தபாய அல்ல.

என் வீட்டு சொந்தம் ஒன்றை இழந்தது போல் ,

கண் விட்டு நீர் அகலா நிலையில் , நலம் தான் என்று எப்படி சொல்ல முடியும் ?

தமிழ் ஈழம் உதிக்கும் நாளே நான் நலம் கொள்ளும் திருநாள் .

அதுவரை என் நேசப் புண் ஆறாது .

Link to comment
Share on other sites

வணக்கம் சோழ இளவரசே . வாருங்கள் யாழுக்கு.உங்கள் வரவு நல்வரவாகட்டும்.யாழை மீட்டி பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் சோழ இளவரசரே தங்களின் வருகை நல்வரவாகட்டும்!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சோழ இளவரசரே தங்களின் வருகை நல்வரவாகட்டும்!! :icon_mrgreen:

நன்றி ஜமுனா .

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பனே உங்கள் வரவும் நல்வரவாக அமைய எனது வாழ்த்துக்கள்!

தமிழ்மொழியை நன்கறிய ஆவலாக உள்ளவர்களில் நானும் ஒருவன் அதன்பிரகாரம் உங்களிடம் ஒரு சந்தேகத்தை கேட்டறிய ஆவல்.

அதாவது...

''ஈழத்தின் புண் சிரிப்பை இழந்துவிட்ட இந்நிலையில்,"

அல்லது புன் சிரிப்பா சரி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பனே உங்கள் வரவும் நல்வரவாக அமைய எனது வாழ்த்துக்கள்!

தமிழ்மொழியை நன்கறிய ஆவலாக உள்ளவர்களில் நானும் ஒருவன் அதன்பிரகாரம் உங்களிடம் ஒரு சந்தேகத்தை கேட்டறிய ஆவல்.

அதாவது...

''ஈழத்தின் புண் சிரிப்பை இழந்துவிட்ட இந்நிலையில்,"

அல்லது புன் சிரிப்பா சரி?

மன்னிக்க வேண்டும் நண்பரே.

புன் சிரிப்பு என்பதே சரியானது. தவறினை திருத்திக்கொள்கிறேன்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் சோழ மன்னன் வாங்கோ.

உங்கள் பெயர் ஆங்கிலத்தில் இருந்தது சோழா என்றது ஆரம்பத்தில் விளங்கவில்லை. ஓ நீங்கள் தற்போது சிங்கப்பூரில் வாழும் சோழ மகாராஜனா..

நல்வரவு! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ இளவரசரே. தாங்கள் நலம்தானே!

நலம் தான் சகோதரி , நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சோழ மன்னன் வாங்கோ.

உங்கள் பெயர் ஆங்கிலத்தில் இருந்தது சோழா என்றது ஆரம்பத்தில் விளங்கவில்லை. ஓ நீங்கள் தற்போது சிங்கப்பூரில் வாழும் சோழ மகாராஜனா..

நல்வரவு! :icon_mrgreen:

ஆம் ஐயா , எம் முன்னோரின் வழியில் நானும் கடல் கடந்து வந்து ஆட்சி செய்து கொண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களோடு என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெருமைக்குரிய பெயரில் வந்திருக்கும் சோழ இளவரசனை வரவேற்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் செய்திகளில் உங்களின் கருத்தைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் இன்று தான் உங்களின் அறிமுகத்தை யாழ் அரிச்சுவடியில் வாசிக்க நேரம் கிடைத்தது. இராச இராச சோழன் ஆண்ட தாஞ்சாவூரில் இருந்து வந்த சோழ நாட்டு இளவரசனை அன்புடன் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலமே ஆகட்டும். வாருங்கள் நம் களத்துக்கு. உறவாடுவோம்.

தமிழ் உள்ளங்களாய் இணைவோம். உலகத்துக்கே ஓர் எடுத்துக் காட்டாக வாழ்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.