Jump to content

அக்கா எனும் இனிய உறவு!


Recommended Posts

எனது அன்புத் தெய்வம் அக்கா..

வணக்கம்,

உலகத்தில் நாங்கள் வாழ்வதற்கு மூலாதாரமாக பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று மனித உறவுகள். மனித உறவுகள் என்று பார்க்கும்போது அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி, தங்கை, காதலி, மனைவி… இவ்வாறு பல பாசப்பிணைப்புக்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இப்படி பல இனிய உறவுகள் வாழ்க்கையில் இருப்பதால்தான் எங்கள் வாழ்வு ஓரளவு அர்த்தம் உள்ளதாகவும், உற்சாகமானதாகவும், மகிழ்வாகவும் இருக்கின்றது. அதேவேளை இந்த உறவுகளில் பிரிவுகள் வரும்போது நாம் நிலைகுலைந்து போகின்றோம். வாழ்வில் தடுமாற்றம் அடைகின்றோம்.

எனக்கு தங்கச்சி இல்லை. ஆனால், மூன்று அக்காமார் இருக்கின்றார்கள். எனது இரண்டாவது அக்காவிற்கு இன்று பிறந்தநாள். இதனால் எனது அக்காவிற்காக முதலில் ஒரு கவிதை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் அதைவிட அக்காவுடனான எனது பழைய நினைவுகளை மீட்டுப்பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். எனவே அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். உங்களுக்கும் அக்கா இருந்தால் உங்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

சரி, இனி கதைக்கு வருவம்..

எனது இரண்டாவது அக்காவிற்கு என்னைவிட பதினொரு வயதுகள் அதிகம். எனக்கு நினைவு உள்ள காலம் தொடக்கம் எனது அம்மாவின் நினைவைப்போல் எனது அக்காவின் நினைவும் என் மனதில் ஒன்றாக நிழலாடுகின்றது. சிறுகுழந்தையாக நான் இருந்தபோது என்னைக் கண்ணும் கருத்துமாக கவனிப்பதில் இருந்து இன்று நான் நல்லபடியாக வாழ்வதற்கு பல அறிவுரைகள் தருவது வரை அக்காவுடனான எனது பயணம் தொடர்கின்றது.

எனக்கு மூன்று வயதாக இருந்தபோது ஒரு சத்திரசிகிச்சையை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் நான் பெறவேண்டி இருந்தது. அம்மாவுக்கு அப்போது உடல் நலமில்லை. இதனால் எனது இரண்டாவது அக்காதான் என்னை அப்பாவுடன் சிகிச்சைக்காக கொழும்புக்கு திருகோணமலையில் இருந்து புகையிரதத்தில் கொண்டுசெல்லவேண்டி இருந்தது. அக்காவும், அப்பாவும், நானும் புகையிரத்ததில் பயணம் செய்தபோது அப்பாவிடம் அருகில் இருந்த பயணிகள் அக்காவைப் பார்த்து “இவ உங்கட மனைவியா?” என்று கேட்டார்களாம். இதைக்கேட்ட அப்பாவுக்கோ அதிர்ச்சி. இதில் இருந்து அந்த சின்ன வயதில் தானே ஒரு சிறுமியாக இருந்துகொண்டு அக்கா என்னை எவ்வளவு அக்கறையாக பார்த்து இருக்கிறா என்று தெரிந்துகொள்ளுங்கள். அக்கா என்னில் மிகவும் பாசமாக இருந்தார், இருக்கின்றார். நானும் அவவில் மிகவும் பாசமாக இருந்தேன், இருக்கின்றேன். ஆனால், சிறுவயதில் எனது மரமண்டை மூளைக்கு அக்காவிற்கு கொடுக்கவேண்டிய மரியாதைகள் தெரிந்து இருக்கவில்லை. அக்காவை கெட்டவார்த்தைகளால் திட்டுவது தொடங்கி காலால் உதைப்பதுவரை வீட்டில் எனது அட்டகாசங்கள் அளவுக்கு மிஞ்சி இருந்தன.

எங்களுக்கு யாரோ உருளைக்கிழங்கு பயிரிடப்படும்போது மனிதமலம் அதற்கு உரமாக போடப்படுகின்றது என்று பள்ளியில் கூறிவிட்டார்கள். இதனால், நான் அரியண்டப்பட்டு சிறுவயதில் உருளைக்கிழங்கு கறி சாப்பிடுவது இல்லை. உருளைக்கிழங்கு கறியை எனக்கு கண்ணில் காட்டக்கூடாது. எனக்கு அப்போது சோற்றுக்கு கடைஞ்ச வல்லாரை கீரையும், பருப்புக்கறியும் வேண்டும். இரண்டும் இருந்தால்தான் சாப்பிடுவேன். அக்காதான் பெரும்பாலும் வீட்டில் சமைப்பா. பள்ளியால் நான் வந்ததும் சோற்றுக்கு என்ன கறி இருக்கின்றது என்றுதான் முதலில் பார்ப்பேன். எனக்கு விருப்பமான இரண்டு கறிகளும் இல்லாவிட்டால் சரியான கோவம் வரும். ஒரு முறை கோவத்தில் சோற்றை கோப்பையுடன் அப்படியே சுழற்றி எறிந்துள்ளேன். பிறகு அக்காவை கெட்ட வார்த்தைகளால் திட்டுவது. பட்டப்பெயருகள் வைத்து கூப்பிடுவது. ஆனால், அக்கா நான் என்ன செய்தாலும் என்னை கோபிக்கமாட்டா. சிலவேளைகளில் எனது தொல்லைகளை தாங்கமுடியாது அழுவா. தான் படிக்கும் அதேநேரம் எங்களுக்கு சாப்பாடு செய்து தந்து, பாடங்கள் சொல்லித்தந்து, எங்கள் உடுப்புக்களை தோய்த்து அயர்ன் பண்ணித்தந்து, எங்களுடன் விளையாடி.. இப்படி ஒரு தாயாக இருந்து அக்கா எம்மை கவனிப்பா.

சிறுவயதில் நான் அக்காவுடன்தான் படுப்பேன். அக்காவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு படுக்காவிட்டால் எனக்கு நித்திரை வராது. அக்காவை நிம்மதியாக நித்திரையும் கொள்ளவிடமாட்டேன். சிலவேளைகளில் இரவில் நடுசாமத்தில் எழும்பி பசிக்கிது என்று சொல்லி அக்காவுக்கு கரைச்சல் கொடுப்பேன். அக்காவும் நடுஇரவில் அரைத்தூக்கத்தில் குசினிக்குபோய் எனக்கு பால் கரைத்துக்கொண்டு வந்து தருவா. நான் அப்போது லக்ஸ்பிறே பால்தான் குடிப்பேன். நான் கேட்கும்போதெல்லாம் அக்கா லக்ஸ்பிறே பால், பாலாக எனக்கு கரைத்து கரைத்து தருவா. பள்ளியில் வைக்கப்படும் தடகள விளையாட்டுக்களில் நான் வெற்றிபெறும்போது அக்கா மிகவும் சந்தோசப்படுவா. நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் காலங்களில் எனக்கு நல்ல சத்தான உணவுகளை அக்கா எனக்கு சமைத்து தருவா.

நாங்கள் தினமும் மாலை நேரம் ஏதாவது பலகாரம் செய்து தரச்சொல்லி அக்காவை கரைச்சல்படுத்துவோம். அக்காவும் பஞ்சியைப்பாராது, தனது படிப்பை கவனியாது எங்களுக்கு வடை, பட்டிஸ், ரோல்ஸ், வாய்ப்பன், கேக், முறுக்கு, கட்லட், மில்க்டொபி, அல்வா, லட்டு, பனங்காய்ப்பனியாரம்.. இப்படி விதம் விதமாக பல பலகாரங்கள் செய்து தருவா. நாங்கள் மகிழ்வாக இருப்பது கண்டு அக்கா மிகவும் மகிழ்ச்சி அடைவா.

சமைக்கும்போது நான் சிலவேளைகளில் உரலில் சம்பல் இடித்து தருகின்றேன் என்று போனால், அக்கா விடமாட்டா. தானே எல்லாவற்றையும் எங்களுக்காக செய்து தருவா. என்னை விறகு எடுத்துக்கொண்டு வா என்று மட்டும் அல்லது தேங்காய் முடிந்துவிட்டால் தேங்காய் ஒன்றை அலவாங்கில் உரிச்சு தரும்படி மட்டும் சொல்லுவா. வேறு வேலைகள் என்னை செய்யவிடமாட்டா. தினமும் அக்கா வீட்டை கூட்டி சுத்தம் செய்து அழகாக வைத்து இருப்பா. பூக்கன்றுகள் நடுவா. நாங்கள் செய்வது எல்லாம் வீட்டை கஞ்சல் போட்டு நாற அடிப்பதும், கிரிக்கட் விளையாடி அக்காவின் பூமரங்களை நாசமாக்குவதும் தான். ஆனால், இதற்காக அக்கா எம்மில் கோபிக்கமாட்டா.

அக்கா செய்யும் சமையல் அந்தமாதிரி ருசியாக இருக்கும். அக்கா என்ன சமைத்தாலும் அவை மிகவும் ருசியாக இருக்கும். அக்கா தோசை சுடப்போகின்றா என்றால் நானும் அண்ணாவும் தோசையை அக்கா சுடமுன்பே குசினிக்குபோய் ஆளுக்கொரு பலகைக்கட்டைகளை எடுத்துப்போட்டுக்கொண்டு குந்திவிடுவோம். சம்பலை கோப்பையில் நிறைத்துவிட்டு அக்கா சுடப்போகும் தோசைக்காக ஒவ்வொரு நொடியாக இருவரும் ஏங்கிக்கொண்டு இருப்போம். முதல் தோசை எனக்கு என்றால் இரண்டாவது தோசை அண்ணாவுக்கு. பிறகு எனக்கு, பிறகு அண்ணாவுக்கு. இப்படி நாங்கள் தோசைமாவில் அரைவாசியை காலி செய்தபின் அக்கா இனி ரெண்டு பேருக்கும் தோசை சாப்பிட்டது காணும் ஓடுங்கடா எண்டு கலைப்பா. அப்போது இறுதியாக எண்ணைத்தோசை தரும்படி சொல்லுவோம். அக்காவும் தோசைக்கு நல்லெண்ணை விட்டு அதனுள் சீனியும் தூவி முறுகவைத்து தந்தபின் நன்றாக சாப்பிட்டுவிட்டு ஏவறைவிட்டபடி எழும்பிப் போவோம். ஆனால், அக்கா எல்லாருக்கும் தோசை சுட்டுக்கொடுத்து கடைசியில் இறுதியாக மிஞ்சுகின்ற மாவை தண்ணியை ஊற்றி வழித்து எடுத்து கல்லில் ஊற்றி சாப்பிடுவா. அக்கா என்ன சாப்பிடுகின்றா என்பது பற்றி நாம் அப்போது கவலைப்படுவதில்லை.

நான் ஏ.எல் படிக்க தொடங்கிய ஆரம்பகாலத்தில் ஆமி பிரச்சனை காரணமாக பள்ளிக்கு செல்லமுடியவில்லை. பிரச்சனை ஓரளவு குறைந்து நான் மீண்டும் பள்ளி செல்லதொடங்கியபோது தவணைப் பரீட்சை வந்துவிட்டது. என்னிடம் படிப்பதற்கு பயோலோஜி நோட்ஸ் இல்லை. உடனே அக்காதான் இரவிரவாக கண்முழித்து நான் இன்னொரு நண்பனிடம் இரவல் வாங்கிய ஒரு பெரிய கட்டு நோட்சை முத்துமுத்தான எழுத்தில் அழகாக படங்களையும் கீறி எழுதித்தந்தா. பிறகு அந்த நோட்சை ஜாலியாக கட்டிலில் படுத்து இருந்து படித்து சோதனையில் நான் நல்ல பெறுபேற்றை பெற்றேன்.

அக்கா மிக நன்றாக சங்கீதம் படிப்பா, வீணையும் நன்றாக வாசிப்பா. அக்கா ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பி சங்கீதம் பயிற்சி செய்வா. காலை ஐந்து, ஐந்தரை மணிக்கு அக்காவின் குரல் சுறுதி இசையுடன் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். நான் படுத்து இருந்துகொண்டு அக்கா பாடுவதைக் கேட்டு ரசித்துக்கொண்டு இருப்பேன். பக்கத்து வீட்டு ஆக்களும் அக்கா சங்கீதம் பாடுவதை மிகவும் விரும்பிக் கேட்பார்கள். அக்கா பாடியதைக் கேட்டே எனக்கு இவ்வளவுக்காவது கர்நாடக சங்கீதத்தில் ஞானம் இருக்கின்றது. நகுமோ… நீ ஜனனே.. நா.. நா.. நா.. நா.. ஆஆஆ அஆஆ அஆஆ…

குழந்தைப்பிள்ளைகளில் எனது அக்கா மிகவும் பாசம் உடையவ. குழந்தைகளை கொஞ்சிக்கொஞ்சி விளையாடுவா. ஆனால், எனக்கு இது அப்போது பிடிக்காது. ஏனென்றால் நான்தானே அப்போது வீட்டில் குழந்தைப்பிள்ளை? எனவே, அக்கா வேறு பிள்ளைகளில் அன்பு செலுத்தும்போது எனக்கு அவர்களில் மிகவும் கோபமாகவும், பொறாமையாகவும் இருக்கும், அக்காவிலும் கோவம் வரும். இதனால், நான் சிலவேளைகளில் அவர்களை அடித்துவிடுவேன். வீட்டுக்கு வரவிடாமல் வெருட்டி துரத்திவிடுவேன். எனது அக்கா எனக்கு மட்டுமே உரிமை என்று நான் அப்போது நினைத்து இருந்தேன்.

அக்காமீது நான் வைத்து இருந்த எனது ஏகபோக உரிமை பறிபோகும் நாள் விரைவில் வந்தது. அக்காவிற்கு வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவரை கலியாணம் பேசி எல்லாம் சரிவந்து அக்கா கொழும்பு சென்று பின் இந்தியாவில் திருமணம் செய்யவேண்டிய தருணம் எனது வாழ்வில் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியது. மழை பெய்யப்பெய்ய நனைந்தபடி அக்காவை சைக்கிளில் ஏற்றி நான் யாழ்ப்பாணம் பஸ்டாண்டில் கொண்டுபோய் விட்டேன். கிளாலி ஊடாக அக்கா அம்மாவுடன் கொழும்பு பயணம். அக்கா பஸ்ஸினுள் இருந்தா. நான் வெளியில் இருந்து பஸ் புறப்படும்வரை அக்காவைப் பார்த்துக்கொண்டு நின்றேன். கதைப்பதற்கு வசனங்கள் வரவில்லை. அக்காவாலும் கதைக்கமுடியவில்லை. அவவின் கண்கள் கலங்கி இருந்தன. சிறிது நேரத்தில் பஸ்போய்விட்டது.

வீட்டுக்கு திரும்பி வந்ததும் நான் வாழ்க்கையில் முதன்முதலாக வெறுமை என்பது என்ன என்பதை உணர்ந்துகொண்டேன். இரவு முழுவதும் நித்திரை வரவில்லை. கட்டிலில் இருந்து புரண்டுகொண்டு இருந்தேன். அழுகை, அழுகையாக வந்தது. தலாணியில் முகத்தைப் புதைத்தபடி நன்றாக அழுதேன். நான் அழுத அழுகையில் தலாணி எல்லாம் தொப்பையாக ஈரமாகிவிட்டது. காலையில் தூக்கத்தால் எழும்ப மனம் வரவில்லை. அக்கா இல்லாத ஒரு காலையை என்னால் எதிர்கொள்ள விருப்பமோ அக்கறையோ இருக்கவில்லை. எல்லாம் சூனியமாக இருந்தது. அக்காவின் பிரிவு அன்று என்னை சனியனாகத் தொற்றி வாழ்வில் பல தடுமாற்றங்களை, குழப்பங்களை ஏற்படுத்த தொடங்கியது. அக்கா இல்லாததால் படிப்பில் எனது நிலை கவலைக்கிடமாக மாறியது. அக்காவின் உணவு இல்லாததால் எனது உடம்பு பலவீனம் அடையத்தொடங்கியது. அக்கா அருகில் இல்லாததால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் என்னைப்பிடித்து ஆட்டத்தொடங்கின. அக்காவின் மகிமையை அக்கா இல்லாதபோது உணர்ந்துகொண்டேன். அக்காவிற்கு நான் செய்த கொடுமைகளைப் பற்றி மிகவும் கவலையுற்றேன்.

நான் இப்போதும் அக்காவிடம் “நான் உனக்கு சிறுவயதில் பல துன்பங்களை தந்து இருக்கிறன். தெரியாமல் செய்துபோட்டன். என்ன மன்னிச்சுவிடு!” என்று நேரில் காணும்போதும், போனிலும் சொல்லுவேன். ஆனால், அதற்கு அக்காவோ, “அடேய் விசரா இதை பற்றி எல்லாம் கவலைப்படாதை. நீ சந்தோசமா நல்லா இரு. உங்களுடன் நான் அப்போது இருந்த அனுபவங்கள நினைச்சுப் பார்க்கேக்க எனக்கு எவ்வளவோ சந்தோசத்தை அவை தருகிது. அது மாதிரி வாழ்க்கை இனி எனக்கு கிடைக்காதா என்று நான் கவலைப்படுவன், ஏங்குவன்!” என்று சொல்லுவா. அக்கா இப்போது கணவர், இரண்டு பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கின்றா. பிள்ளைகளை வீட்டில் கூப்பிடும்போது மறதியில் எனது பெயரை தான் கூப்பிடுவதாக அக்கா அடிக்கடி சொல்லுவா. நான் அண்மையில் அக்காவுடன் சில மாதங்கள் தங்கி நின்றேன். அப்போது எமது பழைய அனுபவங்களை பரிமாறிக்கொண்டோம். எனது மருமக்களுக்கு எங்கள் கதைகளை கேட்கக்கேட்க மிகவும் ஆச்சரியம். அவர்களால் இப்படி, இப்படி எல்லாம் முன்பு நடந்தது. இப்படி, இப்படி எல்லாம் நாங்கள் முன்பு வாழ்ந்தோம் என்று கூறியபோது அவற்றை நம்பமுடியவில்லை. மிகவும் அக்கறையுடன் எங்கள் பழைய கதைகளை பிடுங்கிப்பிடுங்கி கேட்டு அறிந்தார்கள்.

எனது அக்கா எனக்கு செய்த பணிவிடைகள் என்று பார்த்தால் அவை ஏராளம் ஏராளம். சொல்லில் அடங்காது. எல்லாவற்றையும் இங்கு நினைவுபடுத்தி எழுதமுடியவில்லை. நான் எனது வாழ்க்கையில் இவ்வளவுக்காவது வளர்ந்து இருப்பதற்கு மூல காரணமாக இருப்பவர்களில் எனது இரண்டாவது அக்கா முக்கிய இடத்தை பெறுகின்றா. அக்காவுடன் ஒன்றாக ஒரேவீட்டில் இருந்தகாலமே எனது வாழ்வில் நான் மிகவும் சந்தோசமாக இருந்தகாலமாக நினைக்கக்கூடியதாக உள்ளது. இப்படியான ஒரு இனிய உறவை நான் பெற்றதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன். எனது இரண்டாவது அக்காவை அவவின் பிறந்தநாளான இன்று நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

நான் அண்மையில் அக்காவிடம் சென்று இருந்தபோது இருவரும் சேர்ந்து பல சினிமாப் பாடல்களை இரண்டு வெவ்வேறு கொண்டாட்டங்களின் போது பாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. சிறுவயதில் பெரும் குழப்படிக்கார பெடியனாக இருந்த என்னுடன் சேர்ந்து பலநூறுபேரின் முன்னால் இப்போது பாட்டுப்பாடியது அக்காவிற்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் அக்கா நினைவில் அவவுடன் சேர்ந்து பாடிய ஒரு பாடலை இங்கு இணைக்கின்றேன். இது நாங்கள் பாடிய பாடல் அல்ல. ஒரிஜினல் சினிமாப்பாட்டு smile.gif

உங்கள் அக்காமாருடனான இனிய அனுபவங்களை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்..

நன்றி!

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

உங்கள் அக்காவை பார்க்கும் போது தான் எனக்கு அக்காவில்லை என்று கவலையாக இருக்கிறது தங்களின் அக்காவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்த்துகள் :lol: !!அக்சுவலா எனக்கு அக்காவில்லை அநுபவங்களை பகிர்ந்து கொள்ள :blink: !!ஆனாலும் யாழ் மூலம் கிடைத்த அக்கா மிகவும் அன்பான சொந்த அக்கா போல என் மேல் அன்பு செலுத்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றே சொல்லலாம்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அக்காவாக எவரும் என்னுடன் கூடிப்பிறக்கவில்லை. நானொரு தனிக்கட்டை. கூடிப்பிறக்காத அக்காக்கள் நிறையப்பேர்களுண்டு. முதலில் உங்களது அக்காவிற்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கலைஞன் எனக்கும் அக்கா இல்லை ஆனால் அருமை பெருமையாக ஏழு ஆண் சகோதரர்களுக்கு ஒரு அன்புத்தங்கை இருந்தாள். அதாவது எனக்கு நேரே இளையவளாக.

பல வருடங்களுக்கு முன்பு தாயகத்திற்கு சென்று அவளுடன் தங்கி கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் சந்தோஷமாக பொழுதைப்போக்கிவிட்டு நான் இதற்கு முதல் வசித்த நாட்டிற்கு திரும்பி வந்து ஆறு வாரங்களில் கொலை வெறிபிடித்த நாய்கள் சுட்டு கொன்று விட்டாங்கள்.

ஆகவே உங்க அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

Link to comment
Share on other sites

அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கலைஞன், இப்படியான அக்காமார் கிடைத்தற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.எனக்கு அண்ணாவும், இரு தங்கைகளும் உண்டு.துரதிஸ்ட வசமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்டத்தில் வசிக்கிறோம்.என்றாலும் ஒன்றாக கூடிதிரிந்த வாழ்க்கை இன்றும் பசுமரத்தாணியாக உள்ளது.

Link to comment
Share on other sites

கலைஞன் மிக நன்றாக உணர்வுபூர்வமாக அக்காவுடனான நினைவுகளை

இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

அனைவரினதும் அன்பான கருத்துக்களிற்கு மிகவும் நன்றி!

அட... உங்கள் ஒருவருக்கும் அக்காமார் இல்லையா? ம்.. உண்மையில் அது உங்களுக்கு மிகவும் துர்அதிஷ்டமே.. அக்கா எனும் உறவு மிகவும் இனிமையானது. எனக்கு தங்கச்சி எனும் உறவு இல்லை. இந்த உறவும் எனக்கு கிடைத்து இருந்தால் நான் வாழ்வில் எவ்வளவோ முன்னேறி இருப்பேன்.

மற்றது, எனக்கு இன்னும் இரண்டு அக்காமார் இருக்கின்றார்கள். இவர்களுடனான அனுபவமும் மிகவும் இனிமையானது. சந்தர்ப்பம் வரும்போது மற்றைய அக்காமாருடனான அனுபவங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்

வல்வைமைந்தன், உங்கள் ஒரே ஒரு தங்கச்சிக்கு நிகழ்ந்த கொடுமை பற்றி வாசித்து கவலையுற்றேன். இது தாங்க முடியாத ஒரு பெருந்துயரமாக உங்களுக்கு இருக்கும். எனது அனுதாபங்கள்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்பின் கலைஞா,

பாசம் தோய்ந்த தங்கள் எழுத்துக்களுக்கு என் வந்தனங்கள். பொய் முலாம் பூசப்படாமல் உண்மையை ஏற்றுக்கொள்கின்ற போது அது மிகச் சுவையாகவே இருக்கின்றது. நடந்த நிகழ்வுகளை கூடிப்பழகிய உறவுகளை அற்புதமாக வடித்திருக்கின்றீர்களே, என் அக்காவின் நினைவும் வந்தது. நாங்கள் ஆறு பெண்பிள்ளைகள் ஒரே ஒரு அண்ணா, நான் கடைசிக்கும் முதல். உங்களின் இரண்டாவது அக்கா போலவே என் மூத்த அக்கா, உங்களின் தோசைக் கதையைப் படித்த போது அதே நினைப்பு அப்படியே வந்து போனது. நல்லெண்ணெய்த் தோசை என்றால் நல்ல விருப்பம். எங்கள் அக்கா நல்ல சுறுசுறுப்பு பரீட்சை நேரத்தில் கூட எல்லா வேலையும் செய்து போட்டுத்தான் போய்ப்படிப்பா.

2004ம் ஆண்டு அக்காவைப் பார்க்க யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். இப்பவும் என்னை குழந்தைப் பிள்ளையாவே நினைச்சுக்கொண்டு இருக்கிறா..உடுப்பெல்லாம் தா நான் தோய்ச்சுத்தாறன் என்று சொல்லுவா. !! நான் தான் வெக்கப்பட்டு போங்கோ அக்கா!! நான் இப்ப சின்னப்பிள்ளை இல்லை என்று சொன்னன்...!. குடும்ப உறவுகள் சகோதரர்களோடு வாழ்ந்திருந்த காலங்கள் இனிமையானவை. இளமையானவை. எங்கள் வீடே ஒரு பல்கலைக்கழகம் தான், அவரவர் தங்கள் துணையைத் தேடிக்கொண்டு போன பிறகு ஏதோ ஓர் இடைவெளி சூழ்ந்து கொண்டது இருப்பினும் அடித்தளத்தில் உள்ள அன்பு மாறாது..

கலைஞா, உங்கள் அன்பு அக்காவிற்கு எனது வாழ்த்துகளும்!.

Link to comment
Share on other sites

கலைஞன்,

எனக்கும் ஒரு அக்கா இருக்கிறா. ஆனால் சின்ன வயதிலிருந்தே நாங்கள் பெரிசா ஒண்டா இருக்கேல்ல. இப்ப எங்கள் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில். அக்காவும் நானும் ஒரே நாட்டில் இருந்தாலும் வேலையால தள்ளித் தள்ளி இருக்கிறம். அக்காவுக்கு தம்பிகளோட இருக்க முடியேல்ல எண்ட வருத்தமும் இருக்குது.

நாட்டில இருக்கேக்குள்ள எங்கட குடும்பத்திலயும் சரி, எங்கட ஊரிலையும் சரி எல்லாருக்கும் ஒரு லெவல் இருந்தது. ஆக்கள் ஊர்ப் பெருமை பேசித்திரிவினம். ஆளுக்காள் பெரிசா ஒட்டா இருக்க மாட்டினம். எல்லாம் வெள்ளைக்காரத் துரைமாரும் சீமாட்டியளும் மாதிரி.. :icon_idea: இந்தப் பழக்கமோ என்னவோ வீட்டில பெரிசா அன்னியோன்னியமா இருக்கிற மாதிரிக் காட்ட மாட்டம். றோட்டில ஆளையாள் கண்டாலும் தெரியாத மாதிரிப் போவம்.. எல்லாம் அப்ப ஒரு ஸ்டைல்தான்..

எல்லாருக்கும் கல்யாணமான பின்னால அவை அவையளிண்ட சோடிகளால விசயம் கொஞ்சம் நாறித்தான் போச்சு..! :icon_idea:

எப்படியிருந்தாலும், உங்கள் அக்காவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்காவை பற்றி நல்லா எழுதி இருக்கீங்க. உங்கள் அக்காவிற்க்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எனக்கும் 3 அக்காமார் இருக்கினம். உங்களை மாதிரிதான் அக்காமார் கூட இருக்கும் போது அவையின் அருமை புரியலை, இப்போ திருமணமாகி போன பின்னர்தான் அக்காமார் பத்தி புரியுது.

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

உங்கள் அக்காவை பார்க்கும் போது தான் எனக்கு அக்காவில்லை என்று கவலையாக இருக்கிறது தங்களின் அக்காவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்த்துகள் :( !!அக்சுவலா எனக்கு அக்காவில்லை அநுபவங்களை பகிர்ந்து கொள்ள :( !!ஆனாலும் யாழ் மூலம் கிடைத்த அக்கா மிகவும் அன்பான சொந்த அக்கா போல என் மேல் அன்பு செலுத்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றே சொல்லலாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

:lol::lol::D ஜம்முத்தம்பி :) நலமோ ராசா?

Link to comment
Share on other sites

ஜம்முத்தம்பி நலமோ ராசா? :lol:

நிலா அக்கா பேபி அக்கா கூட டூஊஊஊ. :( .............சோ 5நாளைக்கு கதைக்கமாட்டேன் இது எப்படி இருக்கு! :( !எனக்கு லொலிபொப் வாங்கி தராதபடியா தான் :) !!ம்ம்ம்..........நான் நல்ல சுகம் நீங்க அக்கா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

வெண்ணிலா ஓ நீங்கள்தான் அந்த அக்காவோ?

ஜெனரல்!!

வெண்ணிலா அக்காவே தான் :lol: என்ன யாழில சண்டைபிடித்து கொண்டு இருகிறனாங்க என்று பார்கிறது விளங்குது அப்படி தான் ஜெனரல்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலா அக்கா பேபி அக்கா கூட டூஊஊஊ. :( .............சோ 5நாளைக்கு கதைக்கமாட்டேன் இது எப்படி இருக்கு! :( !எனக்கு லொலிபொப் வாங்கி தராதபடியா தான் :) !!ம்ம்ம்..........நான் நல்ல சுகம் நீங்க அக்கா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜெனரல்!!

வெண்ணிலா அக்காவே தான் :lol: என்ன யாழில சண்டைபிடித்து கொண்டு இருகிறனாங்க என்று பார்கிறது விளங்குது அப்படி தான் ஜெனரல்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ன ஜம்மு இப்படி கோவப்பட்டுட்டியள்? ஏன் நேற்று கூளிருக்குள் போனதில் இருந்து என்னமோ ஆகிட்டுதோ? அட பாவமே நேற்றுதான் ஒரு ஆட்டுக்கால் வாங்கி தந்தேனே. அதை சூப்பிட்டு இருந்தியளாமே விடிய விடிய.

கலைஞன் அண்ணா ஜாம்முவின் ஒரேயொரு அக்கா அடியேன் தான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உடன் பிறந்த அக்காவும் இல்ல தங்கையும் இல்ல தம்பியும் இல்ல. ஆனா உடன்பிறவாத அக்கா தங்கைகள் தம்பிகள் இருக்கினம். ஆனா அவையெல்லாம் சொந்த அக்கா தங்கை தம்பி போல அமையாது என்பதை நான் அனுபவத்தில கண்டிட்டன். எல்லாரையும் நம்பி ஏமாந்ததுதான் அதிகம். அதிலும் பெண்கள் இருக்காங்களே நேரத்துக்கு ஏற்றாப் போல நாங்க சிந்திக்காதையே சிந்தித்ததாச் சொல்லி எங்களில குறைபிடிக்கிற ஆக்களாத்தான் இருந்திருக்காங்க.. அப்படின்னா பாருங்களே நம்மட துரதிஸ்டத்த..! :):wub:

Link to comment
Share on other sites

என்ன ஜம்மு இப்படி கோவப்பட்டுட்டியள்? ஏன் நேற்று கூளிருக்குள் போனதில் இருந்து என்னமோ ஆகிட்டுதோ? அட பாவமே நேற்றுதான் ஒரு ஆட்டுக்கால் வாங்கி தந்தேனே. அதை சூப்பிட்டு இருந்தியளாமே விடிய விடிய.

கலைஞன் அண்ணா ஜாம்முவின் ஒரேயொரு அக்கா அடியேன் தான் :lol:

பேபிக்கு ஒன்றும் ஆகவில்லை ஆனா அக்கா கூட டூஊஊஊஊ :wub: !!மறுபடி சொன்ன 5நாள் முடிய தான் கதைபேன் :( அப்ப எனக்கு லொலிபொப் கொண்டு வாங்கோ அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

எனக்கு உடன் பிறந்த அக்காவும் இல்ல தங்கையும் இல்ல தம்பியும் இல்ல. ஆனா உடன்பிறவாத அக்கா தங்கைகள் தம்பிகள் இருக்கினம். ஆனா அவையெல்லாம் சொந்த அக்கா தங்கை தம்பி போல அமையாது என்பதை நான் அனுபவத்தில கண்டிட்டன். எல்லாரையும் நம்பி ஏமாந்ததுதான் அதிகம். அதிலும் பெண்கள் இருக்காங்களே நேரத்துக்கு ஏற்றாப் போல நாங்க சிந்திக்காதையே சிந்தித்ததாச் சொல்லி எங்களில குறைபிடிக்கிற ஆக்களாத்தான் இருந்திருக்காங்க.. அப்படின்னா பாருங்களே நம்மட துரதிஸ்டத்த..!

மொத்தத்தில தாத்தா எல்லா பெண்களிட்டையும் ஏமாந்து போயிருகிறார் என்று விளங்குது :) தாத்தா ஏமாறுபவர்கள் இருக்க மட்டும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் :lol: என்று எனக்கு அடிகடி சொல்லி தருவீங்க ஒரு டயலக் அது தான் நினைவுக்கு வருது!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கு கூடப்பீறந்த அக்கா யாருமே இல்லை. ஆனால் கூடப் பிறந்த அக்கா போல நான் இருக்கிறேன் ஜம்முவுக்கு. :)

ஆனால் ஜம்முதான் அடிக்கடி என்னோடை டூஊஊஊஉ போடுது .

:wub:

Link to comment
Share on other sites

எனக்கு கூடப்பீறந்த அக்கா யாருமே இல்லை. ஆனால் கூடப் பிறந்த அக்கா போல நான் இருக்கிறேன் ஜம்முவுக்கு. :lol:

ஆனால் ஜம்முதான் அடிக்கடி என்னோடை டூஊஊஊஉ போடுது .

:lol:

ம்ம் நெடுக்ஸ் தாத்தாவை ஏமாற்றிபோட்டீனம் அது தான் தாத்தா பீல் பண்ணுறார் :lol: ஆனா நம்ம அக்கா அப்படி இல்லையே அச்சா அக்கா அல்லோ :) !!ஆனாலும் டூஊஊஊ போடுவேன் ஏன் என்று சொல்லமாட்டேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம் நெடுக்ஸ் தாத்தாவை ஏமாற்றிபோட்டீனம் அது தான் தாத்தா பீல் பண்ணுறார் :( ஆனா நம்ம அக்கா அப்படி இல்லையே அச்சா அக்கா அல்லோ :wub: !!ஆனாலும் டூஊஊஊ போடுவேன் ஏன் என்று சொல்லமாட்டேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

^_^ இந்தக்கா நல்லது என்று நெடுக் அண்ணா உங்கக்காவை அக்கா என கூப்பிட போறார் ஜம்மு.

ஜம்முத்தம்பி நீங்கள் ஏன் என்கூட டூஊஊஊஊஊஊ அதுவும் 5 நாளைக்கு டூஊஊஊஊ என்று தெரியுமே :)

Link to comment
Share on other sites

நான் எண்ட அக்காவுக்கு இப்படி ஒண்டு யாழில் எழுதினான் எண்டு சொன்னன். வந்து வாசிச்சு பார்கச் சொன்னன். அவவும் வந்து வாசிச்சு பார்த்தாவாம்.

வாசிக்க ஒருபக்கத்தால சிரிப்பாவும், இன்னொரு பக்கத்தால சரியான கவலையாகவும் இருந்தது எண்டு சொன்னா.

ஏன் தன்னை மட்டும் பற்றி இப்படி எழுதினனி? மற்ற அக்காமார் இதைப் பார்த்தால் கோவிப்பார்களே என்று சொன்னா. நான் சமயம் வரும் போது அவர்களின் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்துகொள்வதாய் சொல்லி இருக்கிறன்.

நான் எழுதின ஆக்கங்கள் எல்லாத்தையும் பார்த்ததா சொன்னா. நல்லகாலம் அதுகள பார்த்து பேச்சு ஒண்டும் விழவில்லை.

உங்களுக்கும் நீங்கள் யாழில் எழுதுவது உங்கள் வீடுகளில் தெரியுமா? இல்லாட்டி வீட்டுக்கு தெரியாமல் யாழில் களவாக எழுதுவதா?

அக்காவையும் யாழில் இணைக்கலாம் எண்டு பார்த்தன். நேரமில்லை எண்டு சொல்லிப்போட்டா. ஹிஹி.. ஆனா எழுபவற்றை பார்வையாளரா இருந்து வாசிச்சு பார்ப்பதாய் சொன்னா.

Link to comment
Share on other sites

கலைஞன் அக்காவுடனான நினைவுகளை அழகாக எழுதியிருக்குறீங்கள்...! அக்காவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...! :lol:

வாசிக்கும் போது எனக்கும் கவலையாக இருந்தது உங்கள் அக்காபோல் எனக்கும் ஒரு அக்கா இல்லை எண்டு...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கும் நீங்கள் யாழில் எழுதுவது உங்கள் வீடுகளில் தெரியுமா? இல்லாட்டி வீட்டுக்கு தெரியாமல் யாழில் களவாக எழுதுவதா?

கலைஞா, நான் நினைச்சன் உங்கட அக்கா வாசித்தால் கட்டாயம் இப்படித்தான் சொல்லி இருப்பா என்று!

ஏன் மற்ற அக்காமாரைப்பற்றிச் சொல்லவில்லை என்று!.

நானும் என் தங்கையும் தான்..நல்ல தோழிகள். முதலில் என் புனைபெயரைக் கண்டு பிடி என்று சொன்னன்,

அவள் கெட்டிக்காரத்தனமா சில தகவல்கள் சொல்லு என்று கேட்டாள், பிறகு ஒரு மாதிரிக் கண்டுபிடிச்சிட்டாள்.

வாசிச்சிட்டு சில நேரம் நக்கல் பண்ணுவாள். அண்ணாவுக்கும் தெரியும். அம்மாவுக்கும் தெரியும்!.

எனக்கு என்ன என்றாலும் வீட்டில் சொல்லிப் போடவேணும்

இதுவரைக்கும் எதையும் வீட்டில் இருந்து மறைச்சதில்லை.

யாழில் குழப்படி பண்ணுறவை பற்றியும் வீட்டில் சொல்லி இருக்கிறன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அக்கா, அண்ணா இல்லை. இருத்திருந்தால் எப்படி இருந்திருப்பினமோ தெரியாது. எல்லா அக்கா மாரும் கலைஞனின் அக்கா போல இருப்பார்கள் எண்டும் இல்லை. உதாரணத்துக்கு உண்மையாகவே பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு கதை. ஊரில் ஒரு குடும்பத்தில் ஒரு பெண்குழந்தை இருந்தா. அவாக்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு தங்கை பிறந்தா. ஊர் ஆக்கள் "எனி சொத்து முழுக்க உனக்கு வராது, அவளுக்கும் (தங்கைக்கும்) பாதி போய்விடும்" என பகிடியாக சொல்ல (அவாக்கு 15-16 வயது இருந்திருக்குமென நினைக்கிறேன்) "அப்பிடியெண்டால் தனக்கு தங்கை வேண்டாம்" என சொல்லி தங்கச்சியாரை கிணத்துக்குள் போட போய்ட்டா. பின்னர் அயலவர்கள் தான் காப்பாற்றினாதாக சொல்வார்கள். இவா வளர்ந்து திருமணமாகியும் தங்கையுடன் கதைப்பதில்லை மாறாக, ஏதாவது பிரச்சனை பட்டுகொண்டே இருந்தா.

ஆகவே, இப்படியான அக்காமாரும் இருக்கினம். ஆனாலும் கூடுதலான அக்காமார் தம்பிமாரி அன்பாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

கலைஞன் குடுத்து வைச்சவர். கலைஞனின் அக்காவுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்,

நீங்கள் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்கிது. என்ன இருந்தாலும் சொந்த சகோதரங்கள் போல வராது. என்டாலும் இதற்கு விதிவிலக்கும் இருக்கிது. உங்கட கஸ்டகாலம் உங்களுக்கு இனிய பெண் உறவுகள் கிடைக்கவில்லை போல இருக்கிது.

என்டாலும், உங்கள் வருங்காலத் துணைவி உங்களிற்கு இனிய ஒரு உறவாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் துணைவி உங்கள் மீது உண்மையாக அன்பைச் செலுத்தி, நீங்கள் இவ்வளவு காலமும் பெண்கள் பற்றி வாழ்வில் பெற்ற கசப்பான அனுபவங்களை மறக்கச் செய்து, உங்கள் வாழ்வில் ஒளியேற்றி பெண்கள் பற்றிய உங்கள் தவறான பார்வையை மாற்றவேண்டும் என கடவுளை பிரார்த்திக்கின்றேன். :o:lol:

அனி,

நன்றி. உங்களிற்கு அக்கா ஒருத்தி உங்களுடன் கூடப்பிறக்கவில்லை எண்டு கவலை. எனக்கு தங்கச்சி ஒன்டு என்னுடன் கூடப்பிறக்கவில்லை எண்டு கவலை.

தமிழ்தங்கை, சபேஸ் நன்றி உங்கள் கருத்துக்களிற்கு.

பொதுவாக வீட்டில், உறவுகளிற்கிடையே மூன்றாவது மனிதர்களின் தலையீடு காரணமாகத்தான் பிரச்சனைகள் வருது. எல்லாம் தலைவிதி. காசு இருப்பவனிற்கு அன்பான உறவுகள் இல்லை. அன்பான உறவுகள் கிடைக்கப்பெற்றவனிடம் காசு இல்லை. இடியப்பச் சிக்கல் வாழ்க்கை :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.