Jump to content

தலைவரைத் திட்டி ஆனந்தசங்கரி கடிதம்


Recommended Posts

அநுராதபுரம் விமானப்படைத் தளத் தாக்குதலை ஒட்டி, விடுதலைப் புலிகளின் தலைவர்

பிரபாகரனைத் திட்டிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைததிருக்கிறார். வீ. ஆனந்த சங்கரி.

த.விகூட்டணியின் கடிதத் தலைப்பில் 'அன்புள்ள பிரபாகரன்' என விளித்து, கொலைகளை

நிறுத்தி பேச்சுக்குச் செல்லவும் என தலைப்பிபட்ட அந்தக்கடித்தில் ஆனந்தசங்கரி

தெரிவித்திருக்கின்ற விடயங்கள் வருமாரு :-

அநுராதபுரத்தில் உம்மால் மேற்கொள்ப்பட்ட நடவடிக்கையை நாம் மிக வன்மையாகக்

கண்டிக்கின்றேன.; இந்தச் சம்பவம் யாரும் மகிழ்ச்சியடையக் கூடிய நிகழ்ச்சியல்ல.

நியாயாமாகச் சிந்திக்கும ஒவ்வொருவரும் உமது கொடூரமான இச் செயலுக்கு உம்மைத்

திட்டத்தான் செய்வார்கள். இருப்பினும் மனைவி மக்களுடன் பாதுகாப்பாக வாழ்கின்ற ஒரு சிலர் உமது செயலை மிகைப்படுத்திப் பாராட்டும் தெரிவிப்பர். உமக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் அளவுக்கு உமது செயல் தகுதியானதல்ல.

இந்த நடவடிக்கையில 35 உயிர்கள் பலி கொள்ளபப்டுவதற்கு காரணமாய் இருந்திருக்கிறீர்.

அவற்றில் 14 பேர்; ஏழைச் சிங்களக் குடும்பங்களில் இருந்து பிழைப்புக்காக விமானப்படையில் சேர்ந்தவராவார்கள். மிகுதி 21 பேரும் உம்மால் கரும்புலிகளின் தற்கொலைப்படைக்கு பலாத்காரமாக இணைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்கள் கூடத் தத்தம் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள ஏழைக்குடும்பங்களைச் சோ்ந்தவர்களாவர்.

பத்திரிகைளில் உம்மை நடுவில் வைத்து எடுக்கப்டட 22 பேரும் இறந்திருந்தால் உம்மை

உண்மையான வீரனெனப் பாராட்டியிருப்பேன். அனால் உம்முடன் படத்தில் தோன்றும் 21

ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளைப் பலியெடுத்தமை வருத்தத்துக்குரியதாகும்.

உமக்குப் பொருந்தக்கூடிய ஒரு பொருத்தமான தமிழ் பழமொழி "காது கேளாத ஒருவரின்

காதில் சங்குதுவது" போலாகும்.

நான் எவ்வளவு புத்திமதி கூறினாலும் நீர் அதை செவிமடுப்பதில்லை. தமிழ் ஈழம் அடைய முடியாதென்றும் அப்படி அடைந்துவிட்டால் கூட ஒரு நாள் தன்னும் அதைக் காப்பற்ற முடியாது என்றும் உமக்குத் தெரியும். சர்வதேச சமூகம் அதை ஒரு போதும் ஆதரிக்காது.

அப்படியிருந்தும் ஒரு போதும் அடைய முடியாததும், கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அடைய முடியவில்லை என அறிந்திருந்ததுமான ஒன்றிற்காய் பல மனித உயிர்களைப் பலியிடுவதில் என்ன பயனை அடையப் போகின்றீர்? 70 முதல் 80 ஆயிரம் உயிர்களை இழக்கக் காரணமாக இருந்து, பல்லாயிரக் கணக்கான விதவைகள், அநாதைகள், ஊனமுற்றோரை உருவாக்கவும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்து அழிவுக்கும் காரணமாகவும் இருந்த நீர், இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துள்ளீர். கிழக்கு மாகாணத்தை முற்று முழுதாக இழந்து விட்டீர். வட பகுதியையும் நீர் இழப்பது உறுதி. ஆனால சிலகாலம் செல்லலாம்.

தமிழீழம் அடைவதற்கல்ல, உமது சுய கௌரவத்தை பாதுகாப்பதற்கான அம் முயற்சியில் வடபகுதியில் வாழும் தமிழினத்தை முற்றாக அழித்துவிடுவீர். தமிழச் சமுதாயமோ அல்லது சர்வதேச சமூகமோ உமது அத்தகைய வழி முறைகளைப் பாராட்டப் போவதுமில்லை, அங்கீகரிக்கப் போவதுமில்லை.

தயவு செய்து எனது ஆலோசனைகளைத் தீவிரமாகப் பரிசீலிக்கவும். இன்னும் காலம்

கடந்துவிடவில்லை.

இந்திய முறையிலனா அல்லது நீர் விரும்பும் ஏதோவொரு வகையான ஒரு நியாயமான தீர்வுத் திட்டம் ஏற்படுவதற்கு உடனடியாக உடன்படவும். நாம் காணும் தீர்வு தவணை முறையில் அமையாமல் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு போரட்டத்தை ஆரம்பிக்க வழிவகுக்காது, ஒரு நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும்.

மதி கெட்ட இத்தகைய செயல்களில் ஈடுபட முடியுமாக இருந்தால், கணக்கற்ற முறையில் தினமும் நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பதற்கு ஏன் முடியவிலை? அண்மையில் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவுச் சங்க சமாஜத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்ட்டமை நீர் அறிந்ததே. அத்தகையவொரு ஆட்கடத்தல், கொலைச் சம்பவத்தைக் காட்டிக் கொடுத்து எத்தகையவொரு குற்றச் செயல்களிலும் உங்களுக்கு சம்பந்தமில்லை என்பதை நிரூபித்துக் காட்டவும்.

தயவு செய்து ஒரு விடயத்தை உணரவும். நான் எந்தக் கொலையையும் கண்டிக்கத்

தவறவில்லை என்பதோடு எக்காரணம் கொண்டும் கொலைகளை மறைக்க உதவுபவனும்

அல்லன். எந்தவிதமான கொலைகளாக இருந்தாலும், அவற்றை நீர் நிறுத்தும். மறுகணமே

ஏனைய கொலைச் சம்பவங்கள் தானாகவே நின்று விடும். என்று தெரிவித்துள்ளார்.

நன்றி சுடர் ஒளி

சங்கரியின் கடிதமாக இது இருக்காது. இது சங்கைக்குரிய ஆனந்த சங்கரி தேரோவின் கடிதமாகவே தெரிகிறது. வடக்கில் பெப் 27 நடக்கும் தேர்தலை நினைவில் வைத்துக் கொண்டு கதிரைக்கு வழிகிறார் இந்த இனத் துரோகி. ***

Link to comment
Share on other sites

ஒரு சிங்கள இனவாதியின் மன உணர்வை அப்படியே கடிதம் பிரதிபலிக்கின்றது. செஞ்சோலைப்படுகொலை நடந்த சமயம் அரசின் அடிவருடிகள்சிலர் ஐம்பதுக்கு மேல் சிறார்கள் கொல்லப்பட்டு கிடக்க வெறும் ஒன்பது பேர்தான் கொல்லப்பட்டனர் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த சம்பவத்தை கண்காணிப்பு குழு பார்த்து உறுதிப்படுத்திய பின்பும் பத்திரிகைளில் புகைப்படம் வந்த பின்பும் அவர்களது பிரச்சாரத்தை தொடர்ந்தனர். இதெல்லாம் சுய சிந்தனையின் வெளிப்பாடாக கருத துளியும் சந்தர்ப்பம் இல்லை. போடும் எலும்புக்கேற்றபடி குரைக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

ஆனந்த சங்கரியின் கடிதத்தை கண்டித்து யாழ்கள பேபிகள் சங்க தலைவர் கொனரபல். ஜம்மு பேபி பிஸ்கட் மன்னன் ஆனந்தசங்கரிக்கு வரைந்த மடல்!! (பின்னே ஆனந்த சங்கரியே அறிக்கை விடக்க நான் அவருக்கு கடிதம் அனுப்ப கூடாதோ)

அன்புள்ள ஆனந்த சங்கரி!!

உம்மால் தேசிய தலைவருக்கு எழுதபட்ட கடித்தத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :D !!இந்த கடிதத்தை எழுத கூட உமக்கு தெரியாது என்பது எல்லாரும் அறிந்த விடயம்!!இந்த கடிதத்தை பார்த்து எல்லாரும் திட்ட தான் செய்வார்கள்!!இருப்பினும் நாயிற்கு பிஸ்கட் போடுற மாதிரி உமக்கு போட்டு கொண்டிருப்பவர்கள் இந்த கடிதத்தை பாராட்டுவார்கள்!!உமக்கு பாராட்டு தெரிவிக்கு அளவிற்கு இந்த கடிதம் உம்மால் எழுதபட்டது அல்ல அத்துடன் இந்த கடிதமும் தகுதியானது அல்ல தாங்களும் தலைவருக்கு கடிதம் வரைபதிற்கு தகுறி அற்றவறே!! :)

இந்த கடித்தத்தின் மூலம் தங்களுக்கு பல பிஸ்கட் கிடைக்கும் என்பதை நானறிவேன்!!அத்தோடு இந்த பிஸ்கட்டால் எத்தனையோ தமிழ் உயிர்களை காவுகொள்ள தயாரா இருகிறீர்!! :)

எத்தனையோ தமிழ் ஏழை குடும்பங்களை தங்களுக்கு (பிஸ்கட் தந்து மூளைச்சலவை செய்து வைத்திருக்கும் சிங்கள இனவெறியர்களுக்காக) கடத்துகிறீர்கள் இவை எல்லாரும் பொறுப்புள்ள பாதுகாக்கபட வேண்டிய ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்!! :(

இந்த கடித்தத்தை நேராக வந்து வன்னியில் கொடுத்திருந்தா தங்களை ஒரு வீரன் என்று பாராட்டி இருபேன் ஆனா பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டு அங்கே இருந்து சவுண்ட் விடுவது (குரைப்பதை) ஒரு வீரதனமான செயல் என்று என்னால் கூறமுடியாது அட்லீஸ் கடிதத்தை பேனாவை பிடித்து தாங்கள் எழுதி இருந்தாலும் பரவாயில்லை பேனாவை பிடிக்க கூட தங்களுக்கு சக்தி இல்லை என்பதை நானறிவேன்!!தங்களின் நிலை வருத்ததிற்குரியதாகும்!! :(

தங்களுக்கு பொருந்தகூடிய ஒரு பொருத்தமான தமிழ் பழமொழி "கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசணை என்பது ஆகும்" <_<

நான் இவ்வளவு புத்திமதி கூறினாலும் பிஸ்கட்டிற்காக இதனை செவிசாய்க்கமாட்டீங்க என்பது நன்கு தெரியும்!!தமிழ் ஈழம் தலைவரின் வழியில் இருந்து அடைவது உறுதி ஆனா இப்படியான பிஸ்கட்டிற்காக அலைபவர்களை யாராலையும் காப்பாற்ற முடியாது!சர்வதேச சமூகம் கூட வேலை முடிய பிஸ்கட்டையும் நிற்பாட்டிவிடுவார்கள் என்பதை உங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்!! :D

தலவைரின் வழியில் தமீழிழம் மலர்வதை தாங்களும் பார்க்க தான் போறீங்க அந்த நேரம் பிஸ்கட் இங்கால கொடுத்தா தாங்கள் கூட ஒடிவரலாம் என்று நினைக்கிறேன்!!சிலகாலம் செல்லட்டு தங்கள் நிலையை நாங்களும் தானே பார்க்க போகிறோம்!!

கெளரவத்தை பற்றி எல்லாம் இல்லாதவர்கள் பேசுவது வேடிக்கை ஆகவே அதை பற்றி எல்லாம் பேசி அதற்குள்ல மதிப்பை கேவலபடுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்!!தங்களை கூட ஒருத்தரும் பாராட்டபோவதில்லை பிஸ்கட்டை மட்டும் வேலைமுடியமட்டும் போட்டு கொண்டு இருக்க போகீனம் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! :) !

தயவு செய்து என்னுடைய ஆலோசனைகளையும் தீவிரமாக பரிசீலனை செய்யவும் இன்னும் காலம் கடந்து போகவில்லை!!

யாருடைய ஒருவரினது பிஸ்கட்டிற்கு ஆசைபடவும் எல்லாருடைய பிஸ்கட்டிற்கு ஆசைபடவேண்டாம்!!கொலைகடத்தல்,ஆட்கடத்தல் என்பனவற்றையும் எல்லாம் இந்த பிஸ்கட்டிற்காக தானே செய்கிறீங்கள்!!இப்படியான குற்ற செயல்களுக்கு தாங்கள் காரணமில்லை என்று நிருபீத்து காட்டமுடியுமா!!

தயவு செய்து ஒரு விசயத்தை உணரவும்.காமேடி பண்ணா இது நேரமில்லை காமேடி பண்ண வேண்டும் என்றா டங்கு மாமாவோட சேர்ந்து காமேடி பண்ணவும் :D !!அத்துடன் "கண்டணம்" தெரிவிக்கிறதிற்கு ஒரு தகுதி இருகிறது அது தங்களிடம் இல்லாததால் கண்டணம் என்ற வார்த்தையை பாவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்!!ஆகவே பிஸ்கட்டிற்காக யாரோ எழுதி தந்த கடித்தத்தை பிரசுரிக்காம அடுத்த முறை பேனாவை பிடித்து தாங்களாகவே ஒரு கடிதத்தை வரைய முயற்சியுங்கள்!!(அது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் முயற்சிக்கவும்) :lol:

இப்படிக்கு.

ஜம்மு பேபி

பேபிகள் சங்க தலைவர் (யாழ்களம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு இந்தக் கடிதத்தை இலங்கையில் இருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிகளுக்கு அனுப்புங்கள். சுடரொளி நிச்சய்ம் பிரசுரிக்கும்.

Link to comment
Share on other sites

எனது அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா ஆனந்த சங்கரி ஜயா வணக்கம்!

எப்படி நலமாக இருக்கின்றீர்களா? உடல்நிலைகள் எல்லாம் எப்படி? தயவுசெய்து அறியத்தாருங்கள்..

நான் யாரென்று சொல்ல மறந்துவிட்டேனே..ஒரு தமிழன் அதாவது ஈழத்தமிழன் உங்களுடன் கொஞ்சம் பேச விரும்புகின்றேன்.

எங்கள் தலைவருக்கு அறிவுரை கூறி உங்களிடமிருந்து ஒரு மடல் கிடைத்ததாமே, உண்மையா?

கட்டையிலை போற நேரத்திலை ஏனய்யா உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இன்னும் கொஞ்ச வாழ்க்கை மிஞ்சிக்கிடக்கு அதையாவது நல்ல பிள்ளையாக போக்கவேண்டியது தானே.

உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை? எங்கள் தலைவர் உங்களுக்கு என்ன இடையூறு பண்ணுகின்றார்?

அதாவது எங்கள் தலைவர் தமிழ் மக்களிற்கு உண்மையை புரிய வைத்தது தப்பா? முழுத்தமிழரையும் தலை நிமிரப்பண்ணியது தப்பா? இன்று சிங்களவர் உங்களை ஒரு மனிதன் என்று தூக்கிப்பிடிப்பதிற்கு காரணமாக இருப்பது தப்பா?

தமிழ் மக்களின் கொலைகளுக்கு சிங்களவனுக்கு ஆதவராக இருக்கும் நீங்கள் தமிழ் மக்களைப்பற்றி பேசுவதிற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கு என்று சொல்ல முடியுமா ஜயா?

சிங்களவனே எங்கள் தலைவரை கௌரவமான சொற்பிரயோகங்களால் குறிப்பிடும்போது, ஒரு துரோகியான நீங்கள் எப்படி ஜயா இப்படி பேச முடியும்?

ஜயா தெரியாமல் தான் கேட்கின்றேன் இந்த அறிக்கையை விடுவதிற்கு என்ன தொகை உங்களிற்கு கிடைத்தது என்று சொல்லுவீங்களோ?

தமிழ் ஈழம் என்பது தீர்மானித்த விடயம் அதைப்பற்றி நீங்கள் புலம்புறதிலை எந்த அர்த்தமுமில்லை அதாவது காலம் தாண்டிய புலம்பல்.

இப்போ தமிழ் மக்களின் விருப்பம் என்ன என்று தெரியுமோ ஜயா? அதாவது கிடைக்கும் தமிழ் ஈழத்தை உங்களைப்போன்ற பச்சோந்திகள் உயிருடன் இருந்து பார்க்கவேண்டும்.

ஜயா உங்கள் மகனிடமாவது நல்ல அறிவை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் தானே?

ஜயா இன்னும் காலம் தாண்டவில்லை நான் சொல்லும் அறிவைக்கேட்டு நல்ல பிள்ளையாக இருக்கப்போகின்றீர்களா? இல்லையா? ஜயா நீங்கள் எல்லாம் ஒரு மனிதப்பிறவியா? எத்தனை அப்பாவி சின்னங்சிறுசுகளை எல்லாம் பிச்சுக்குதறுகிறாங்க இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரிவதுமில்லை, காதுக்கு கேட்பதுமில்லை செம்மறியல்மாதிரி அறிக்கைகள் விட வந்திட்டீங்களோ ஜயா?

ஜயா இறுதியாகவும், உறுதியாகவும் சொல்கின்றேன் இதைப்போன்ற பையித்தியத்தனமான முயற்சிகளிலை இறங்கி நொந்துபோய் இருக்கும் மக்களிடம் தர்ம அடி வாங்கி சாகாதையுங்கோ.

Link to comment
Share on other sites

வல்வை மைந்தன்.

திருந்தாதஜென்மங்களுக்கு என்னஅறிவுரைசொன்னாலும் திருந்துமா?

Link to comment
Share on other sites

வயது போனால் அறளை பெயருறது என்று ஊரிலை சொல்ல கேட்கிறனான். ஆனந்த சங்கரிக்கு இப்ப என்ன வயது? 70- 80 இருக்குமோ?

Link to comment
Share on other sites

ஏதோ எல்லாரும் கதைக்கிறாங்கள் என்டு ஆனந்தத்தில் மிதக்கும் சங்கரியாரும் ஒருக்கால் குலைச்சுப்பார்க்கிறார். விடுங்கோவன் குலைக்கட்டும். யாரிற்கு வாய் உளைவு. . .

இவரைப்போலத்தான் இந்தியாவிலையும் ஒரு சாமியார் இருக்கிறார். அடிக்கடி குலைப்பார்.

Link to comment
Share on other sites

ஜம்மு இந்தக் கடிதத்தை இலங்கையில் இருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிகளுக்கு அனுப்புங்கள். சுடரொளி நிச்சய்ம் பிரசுரிக்கும்.

வந்தியதேவன் அண்ணா பேபிகள் எழுதினதை எல்லாம் பத்திரிகைகள் பிரசுரிக்குமா :D<_<:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தியதேவன் அண்ணா பேபிகள் எழுதினதை எல்லாம் பத்திரிகைகள் பிரசுரிக்குமா :D<_<:lol:

நிச்சயம் பிரசுரிப்பார்கள். அட்லீஸ்ட் சிறுவர் பகுதியிலாவது பிரசுரிப்பார்கள்.

Link to comment
Share on other sites

ஏன் இத்தகைய துரோகிகளின் குரைப்புகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் .... நாய்கள் தங்கள் எஜமானர்களுக்கு ( அவன் நல்லவன் கெட்டவன் என்று பார்க்காமல் ) விசுவாசமாகவே இருக்கும் .

Link to comment
Share on other sites

"பத்திரிகைளில் உம்மை நடுவில் வைத்து எடுக்கப்டட 22 பேரும் இறந்திருந்தால் உம்மை

உண்மையான வீரனெனப் பாராட்டியிருப்பேன். அனால் உம்முடன் படத்தில் தோன்றும் 21

ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளைப் பலியெடுத்தமை வருத்தத்துக்குரியதாகும்."

ம், "அண்ணை எப்ப சாவான் திண்ணை எப்போ கிடைக்கும்" என்றொரு நப்பாசை சங்கரி அப்புவுக்கு.

"நான் எவ்வளவு புத்திமதி கூறினாலும் நீர் அதை செவிமடுப்பதில்லை. தமிழ் ஈழம் அடைய முடியாதென்றும்

அப்படி அடைந்துவிட்டால் கூட ஒரு நாள் தன்னும் அதைக் காப்பற்ற முடியாது என்றும் உமக்குத் தெரியும். சர்வதேச சமூகம் அதை ஒரு போதும் ஆதரிக்காது".

அது தானே கூட இருந்த கூட்டணி உறுப்பினர்களுக்கே குழி பறித்த ஆனந்தத்துக்கு தமிழ்மக்களின் தலைவன் மேல் அபாண்டமாக பழிசுமத்துவதில் அப்படியொரு ஆனந்தம்.

"தயவு செய்து எனது ஆலோசனைகளைத் தீவிரமாகப் பரிசீலிக்கவும். இன்னும் காலம்

கடந்துவிடவில்லை."

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட (4 வாக்குகள் பெற்ற வள்ளல்) வர் தமிழ்மக்களுக்கும், அவர்களுடன் சேர்ந்து தோளோடு தோள் நிற்கும் வி.புலிகளுக்கும் அறிவுரை சொல்ல நீங்கள் யாரய்யா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.