Jump to content


Orumanam
Photo

யாழ் காலக்கண்ணாடி - 02 - 06 - 08


 • Please log in to reply
39 replies to this topic

#21 சாணக்கியன்

சாணக்கியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,881 posts
 • Gender:Male
 • Location:சிங்கத்தின் குகை
 • Interests:தாய்நாட்டில் நிம்மதியாக வாழ்வது

Posted 28 October 2007 - 10:03 PM

Posted Image


(21-10-2007 - 27-10-2007)


வணக்கம் களஉறவுகளே!

இந்த வார காலக்கண்ணாடியோடு உங்களனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. யாழ் களத்தில் இந்த வாரம் ஒரு எழுச்சி மிக்க வாரமாக அமைந்தது. எல்லாளனின் வருகையை அடுத்து களம் களைகட்டியது நீங்கள் அனைவரும் அறிந்ததே. யாழ் இணைய தகவல் வழங்கிகள் கூட சுமை தாளாமல் பல வேளைகளில் செயலிழந்தது. இத்தகைய ஒரு வாரத்தில் காலக்கண்ணாடியை தொகுத்து வழங்க என்னை அழைத்த ஜமுனா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு காலக் கண்ணாடிக்குள் நுழைகிறேன்.

Posted Image


இந்த வாரம் புதிய வரவுகள் இருபத்தி மூன்று (23)

விண்ணப்பித்தவர்கள்:
Saseekumar (சசிகுமார்), Dusanthan (துசந்தன்), Subas (சுபஸ்), Banumathi vm (பானுமதி வீ.எம்), Devi priya (தேவி பிரியா), Mala (மாலா), Subash (சுபாஸ்), Ganeshruba (கணேஸ் ரூபா), Ramana (ரமணா), Thavarasa (தேவராசா), David (டேவிட்)

புதிய உறுப்பினர்கள்:
Moonsignal (நிலவின் சைகை), Nilamakan (நிலமகன்), MURUKU (முருகு), Unmaiadiyaan (உண்மை அடியான்), M.P (பா.உ), Urdnahc (?), Nankutty (நன் குட்டி), Madhu (மடு), Aaru (ஆறு), Eelamlover (ஈழக் காதலன் / காதலி), Sukumar-TE (சிவகுமார்-த.ஈ)

கருத்துக்கள உறவுகள்:
தங்கை

அனைத்து புது முகங்கங்களையும் அன்புடன் வரவேற்கின்றோம், அத்துடன் ஆரம்பகட்ட பரீட்சைகளில் தங்கை போல சித்தியடைந்து விரைவில் கள உறவாக வாழ்த்துகிறோம்!

உறவோசையில்,

கரிகாலன் அவர்கள் அங்கத்துவத்தை ரத்து செய்வது எப்படி ???? என்றும் மற்றும் ஆதி அவர்கள்ஆதியால் பாதிக்கப்பட்ட யாழ்க்கள உறவுகளுக்கு! மற்றும் ஆதியின் சந்தேகங்கள் போன்ற தலையங்கங்கள் மூலமாக தனது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர். இவர்கள் விரக்தியடையாது தொடர்ந்து எழுத கள உறவுகள் சார்பில் வேண்டுகின்றேன்.

பல யாழ்கள உறவுகளின் துறைசார் திறமைகள் கண்டு நாரதர் அவர்கள் ஒரு பேப்பருக்குத் தரமான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. என்றும் மற்றும் கிராபிக்கிஸில் கைதேர்ந்த யாழ்க் கள உறவுகளுக்கு வேண்டுகோள். என்று இரு வேண்டுகோள்களை விடுத்திருந்தார். நிச்சயம் இவ் வேண்டுகோள்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

Posted Image


ஊர்ப்புதினம் பகுதியில்,

எல்லாளன் நடவடிக்கையை தொடர்ந்து ஊர்புதினம் அது தொடர்பான செய்திகளால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டது. தாக்குதல் பற்றிய செய்திகள், தாக்குதல் நடத்திய கரும்புலிகள் பற்றிய செய்திகள், அழிக்கப்பட்ட விமானங்கள் குறித்த ஊகங்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் தாக்குதலுக்கு பிந்திய செயற்பாடுகள், தங்கள் கையாலாகத்தனத்தை அவர்கள் வெளிப்படுத்திய விதம், ஊடகங்கள் மீதான பாச்சல் என ஒவ்வோரு நாளும் பரபரப்பாக காணப்பட்டது.

எல்லாளன் தாக்குதல் சம்பந்தமான பின்வரும் 3 தலைப்புகள் பலராலும் பார்வையிடப்பட்டு மற்றும் கருத்துகள் பதியப்பட்டு முதல் 3 இடங்களை பெற்றுள்ளன:

இதைவிட வேறு சில முக்கிய செய்திகளாக,இந்த வாரம் மிகுந்த ஈழவன் ஊக்கத்துடன் சுழன்று சுழன்று கருத்துகளையும் செய்திகளை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருந்தார். அஜீவன் அவர்கள் பிறமொழி ஊடக செய்திகளை மொழிபெயர்ப்பு செய்து இணைத்திருந்தார் இருவருக்கும் பாராட்டுகள்.

உலக நடப்பு பகுதியில்,

இந்தியாவின் குஜராத்தில் 2002 இல் நரேந்திர மோடியின் தலமையிலான அரசு இந்துத்துவ அமைப்புகளுடன் இணைந்து சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்திய கோரமான இனப்படுகொலையை தெல்கா ஊடகம் புலனாய்வு செய்து ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமான விவாதம் ''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!'' என்ற தலைப்பில் இடம்பெற்றது.

மேலும் சில உலக செய்திகள்:

செய்தி அலசல் பகுதியில்,

ஒலிவர் ஜேம்ஸ் எழுதிய "நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்" என்ற ஆய்வை வலைஞன் இணைத்திருந்தார். இதில் "தமிழ்பேசும் மக்கள் தமக்கு உகந்த தீர்வை தாமே முன்மொழிந்து அதனைப் பிரகடனம் செய்வதன் மூலம் நிறுவுவதற்கு முன்வரவேண்டும். இவ்வாறு நிறுவப்படும் தீர்வானது சர்வதேச அரங்கில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளில் ஒன்றாக அமைவது சிறப்பானதாகும். " என்று பொருள்பட விவாதிக்கப்பட்டிருந்தது. இதில் இறைவன், தயா, பூனைக்குட்டி, நுணாவிலான் ஆகியோர் தமது கருத்துகளை பகிர்ந்திருந்தனர்.

Posted Image


எங்கள் மண்:

ஒரு முன்னாள் போராளி தன் மனைவியையும் குழந்தையையும் கூட போராட்டத்தில் ஈடுபடுத்தியதை விபரிக்கும் "சண்டைக்காரன் லெப்டினன் கேணல் தேவன் " எனும் ஒரு உண்மைக்கதையை ஈழவன் பிரசுரித்திருந்தார்.

வாழும் புலம்:

கலைஞன் அவர்கள், "போரை நான் விரும்புபவனாக இருந்தால் அல்லது ஆதரிப்பவனாக இருந்தால் போரில் எனது தனிப்பட்ட வாழ்வை அல்லது சுகத்தை நான் இழக்க தயாராக இருக்கின்றேனா? இல்லை என்றால், எப்படி நான் என்னைப் போன்ற இன்னொருவர் தனது வாழ்வை போரில் தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள அல்லது ஆதரிக்க முடியும்? எனக்கு மட்டும் ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயமா?" என்று தனது மனச்சாட்சியை பார்த்து கேள்விகளை எழுப்பி,
"எனது மனச்சாட்சியைப் பொறுத்த அளவில் இப்படி இந்த இளம் வயதில் அவர்கள் கரும்புலிகளாக இருக்கட்டும், சாதாரண போராளிகளாக இருக்கட்டும் தமது வாழ்வை போரிற்கு ஆகுதி ஆக்கிக்கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை." என்று பதிலும் கூறி இருந்தார். நியாமான இந்த கேள்விகள் தன்னை போல பிறரையும் நேசிக்கும் மனிதரின் நெஞ்சிலும் நிச்சயம் தோன்றும்.

இதற்கு நேடுக்கால்போவான், வடிவேல்007, கலைநேசன்1, வசிசுதா, நுணாவிலான், பூனைக்குட்டி, இன்னோருவன், ஐ.வீ.சசி, சுகன், பனங்காய், இறைவன், வல்வை மைந்தன், புத்தன், மருதங்கேணி, கரிகாலன் ஆகியோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Posted Image


தமிழும் நயமும்:

உலக பொது மறையாம் வள்ளுவரின் "திருக்குறள் இசை வடிவம்" குறள் அவர்களால் இணைக்கப்பட்டுள்ளது. இசையுடன் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது.

பொங்கு தமிழ்:

"சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம் - அக்னிபுத்திரன்" என்னும் தலைப்பில் தேவிபிரியா இலக்கியம் பற்றி ஒரு சிறந்த பதிவை இட்டுள்ளதாக இளங்கோ மற்றும் சுவி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

வாழ்த்துகள்:

இளைஞன் அவர்கள் இந்தவாரம் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவருக்கும் எமது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!

துயர் பகிர்வோம்:

யாழ் போதனா வைத்தியசாலையில் "இந்திய கோரமுகத்தின் 20 ஆண்டு நிறைவு நாள்" நினைவு கூறப்பட்டது.

Posted Image


ஆக்கற்களம் - தென்னங்கீற்று

கனடாவில் சுயாதீன திரைப்பட நிறுவனம் நடாத்திய 6வது சர்வதேச குறும்பட விழாவில்,சிங்கப்பூர்,மலேசியா , லண்டன், இலங்கை,இந்தியா,டென்மார்க், கனடா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து 150 படங்கள் பங்கு கொண்டது.

இதில் பாரீஸிலிருந்து பாஸ்கரின் (மன்மதராசா) இயக்கத்தில் உருவான "நதி" குறுந்திரைப்படம் " 5 " விருதுகளை வென்றது . அங்கு நடைபெற்ற குறுந்திரைப்பட விழாவில் இந்த குறும்படமே 5 விருதுகளைப் பெற்றது. "மேலும் வாசிக்க"

கதைகதையாம்

அஜீவன் வழங்கும் "நினைத்தாலும் மறக்க முடியாதவை - (தடம் 4)" மற்றும் "சாய்ந்த கோபுரங்களில்" இளங்கோ வழங்கும் "14. தமிழ்த் தேசியத்திலும் அடிப்படைவாதம்"

போன்றவை இடம்பெற்றுள்ளன.

இறுதியாக யாழ்களம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒன்றாக கருத்துப்பட உருவாக்கம் சிறப்பான முறையில் காலத் தேவைகளுக் கேற்ப ஓவியர் மூணா அவர்களின் கைவண்ணத்தில் வெளியிட்டு வருகின்றது. இது ஒரு நல்ல ஆரம்பம் என்ற போதும், இது போதுமானது அல்ல! களஉறவுகள் பங்களிப்பு இது போன்ற விடயங்களில் போதாது என்றே கொள்ள முடியும். இந்த இடத்தில் கரும்புலிப் போராளி இளங்கோ அவர்கள் தன்னை தற்கொடையாக தரும் முன்னர் மக்களை விழித்து வரைந்த மடலின் வாசகங்களை அனைவரும் மனத்திற் கொள்ள வேண்டும். இதே நிலை தாயகத்தில் உள்ள ஏனைய இளைஞர்களுக்கும் ஏற்படாது, அவர்களும் எம்மைப் போலவே வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வோருவரும், ஏதாவது ஒரு திறமையை வளர்த்து அதன் மூலம் நாட்டிற்காக அற்பணிப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.

கவிநயத்திலும், மெய்யியலிலும் எனக்கு விமர்சனம் செய்யும் தகுதி இல்லாத காரணத்தினாலும், ஏனைய பகுதிகளை அலச நேரம் போதாமை காரணமாகவும் இத்துடன் காலக்கண்ணாடியை நிறைவு செய்கிறேன். தவற விடப்பட்ட ஆக்கங்களுக்காக மன்னிப்பு கோருகிறேன், பொறுமையுடன் வாசித்த உங்கள் அனைவரிடமும் நன்றிகளை கூறிக் கொண்டு விடைபெறுகிறேன், வணக்கம்!

அன்புடன்,
சாணக்கியன்

Posted Image


Edited by சாணக்கியன், 29 October 2007 - 08:35 AM.


ninaivu-illam

#22 இணையவன்

இணையவன்

  மட்டுறுத்துநர்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 4,415 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்

Posted 05 November 2007 - 07:53 AM

Posted ImagePosted Image
Posted Image


யாழிற்கு புதிய உறுப்பினர்கள்
இவ்வாரம் புதிதாக நாற்பதுக்கும் அதிகமானவர்கள் யாழில் இணைந்துள்ளனர். இவர்களில் velu murugan, eElasUdar, mugiloli,drops, Selvendran,payumpuli, யதார்தன், lojan, Chola_, srini, oorkkaluku, kavalur kanmani, vithikal, indran, periyarkuyil,gonesan, dhama, subash chandrabo..., ஆகியோர் விண்ணப்ப நிலையில் உள்ளனர்.

மாயவன், TMVP, sarankumar, EDI, Kavallur Kanmani, அருண், kavalur kanmani, oorkkaluku, Samyuktha, Thooyan-Ragavan, ravi12,YarlShiva , Anpe, jeganco, forlov, antony, VAALI, prince of chola, இரமணன், Thiva, Subo, Gowsy, ragunathan, Akkaraayan ஆகியோர் புதிய உறுப்பினர்களாவார்கள்.


செய்திகள்
இவ்வரம் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறீலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தது முக்கிய செய்தியாக இடம்பெற்றது. நெடுக்காலபோவான் இணைத்த விடுதலைப் புலிகளின் அறிக்கையின் கீழ் யாழ் கள உறவுகள் தமது துயரினைப் பகிர்ந்து கொண்டனர்.

Posted Image
Posted Image

வீரச் சாவடைந்த விடுதலை வீரர்களின் இறுதிச் சடங்கு தொடர்பான செய்திகளும் வீர வணக்கப் படங்களும் காணொளிகளும் இணைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பழ.நெடுமாறன் அவர்கள், கலைஞர் கருணாநிதி, அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்கள், அனைத்துலக ஊடகங்கள், மற்றும் பலர் தமது வீர வணக்கங்களையும் இரங்கல் செய்திகளையும் தெரிவித்திருந்தனர்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவையடுத்து தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக பா. நடேசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், நாம் 'எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்ற வாரம் அனுராதபுர முகாமில் நடத்தப்பட்ட எல்லாளன் நடவடிக்கையத் தொடர்ந்து ஆனந்த சங்கரி என்பவர் எழுதிய கண்டனக் கடிதம் வேடிக்கையாக இருந்தது. கோதபாயா ராஜபக்ஸா புலிகளின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதாக சூழுரைத்ததுடன் வன்னிப் பகுதிகளில் விமானத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. எல்லாளன் நடவடிக்கையில் பங்குகொண்டு வீரச்சாவடைந்த கரும்புலிகளின் உடல்களைச் சிதைத்து நிர்வாணப்படுத்திதை புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசைய்யா இளந்திரையனை கண்டித்திருந்தார். எல்லாளன் நடவடிக்கையைத் தொடர்ந்து அனுராதபுர வான் படைத்தளத்தில் பணிபுரிந்த 3 தமிழர்கள் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. அனுராதபுர வான் படைத்தளத்தில் ஏற்பட்ட அழிவுகளை ஈடுசெய்ய சீனா, ரஷ்யா, செக்., பாக். இஸ்ரேல் அரசுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன.

நீண்டகாலமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்த போராளி மேஜர் இரும்பொறை திங்கட்கிழமை இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்து ஒன்றின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அனுராதபுர தோல்வியை ஈடுசெய்வதற்காக அரச படைகள் மன்னார் முகமாலைப் பகுதிகளில் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தன. இம் முன்னகர்வுகள் ழுறியடிக்கப்பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்

தொடர்ந்து செய்திகளை இணைத்துவரும் யாழ் கள உறவுகளாகிய ஈழவன், கறுப்பி, இறைவன், நுணாவிலான், வல்வை மைந்தன் மற்றும் ஏனையோருக்கும் செய்திகளை ஒருங்கிணைப்பதில் உதவி புரியும் கந்தப்புவுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.


வாழும் புலம் பகுதியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரகாவியமானதையுட்டு இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நினைவுக் கூட்டங்களும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. அதேவேளை லண்டனில் சில அமைப்புகள் அஞ்சலி செலுத்த முன்வராமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

Posted ImagePosted Image

சிட்னி கேசிப் 34, சிட்னி கேசிப் 35 ஆகியவற்றின் மூலம் புத்தன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.பொங்குதமிழ் பகுதியில் தமிழ் மொழியின் சிறப்புக்களை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்குகிறார் நுணாவிலான்.

கவிதைப் பூங்காடு பகுதியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவால் ஏற்பட்ட உள்ளக் குமுறல்களை கவிதை வடிவில் விகடகவி, எழிலன், பரணீ, யாழ் ஆதித்தியன், ரகுநாதன், வ.ஐ.ச.ஜெயபாலன், கவிரூபன், வல்வை சகாரா , தமிழ்வானம், ravi_dk ஆகியோர் வெளிப்படுத்தினர். வெண்ணிலா இனியவள் ஆகியோரின் ஆக்கங்களும் கவிதை பூங்காட்டை அலங்கரித்தன.

கதை கதையாம் பகுதியில் புத்தனின் ஒருநிமிடக் கதை திருமணக் பேச்சு தொடர்பான சிந்தலையைத் தூண்ட, சாத்திரி ஈழத்து அனுபவங்களை தனது நகைச்சுவைப் பாணியில் தந்திருந்தார்.

வண்ணத் திரை பகுதியில் 'அரவாணி' ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை நிகழ்த்த இருப்பதாக செய்தியொன்றை கிருபாகரன் இணைத்துள்ளார்.

விளையாட்டுத் திடலில் உலகக் கிண்ணக் கால்பந்து, கராத்தே பற்றிய செய்திகள் இணைக்கப்பட்டன.

இனிய பொழுதில் கலைஞன் 'அக்கா எனும் இனிய உறவு!' என்ற கட்டுரை மூலம் தனது அக்காவின்மீதுள்ள அன்பை வெளிக்காட்டியிருந்தார்.

வலையில் உலகம் பகுதியில் கூகுளில் தமிழ் தட்டச்சுவான் வந்துள்ள செய்தியை கலைநேசன் இணைத்திருந்தார்.

அரசியல் அலசல் பகுதியில் குறுக்காலபோவான் எழுதிய 'செய்தி ஊடகங்களின் ஆரம்பமும் இன்றைய பிரச்சார வடிவமும்' என்ற கட்டுரை மூலம் செய்தி ஊடகங்கள் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது.

மெய்யெனப் படுவதில் நியூமராலஜி பற்றியும் பாரீசில் நடைபெற்ற தலித் மகாநாடு பற்றியும் கட்டுரைகள் இணைக்கப்பட்டன.

பொறுமையாக இவ்வாரக் காலக்கண்ணாடியை வாசித்த உறவுகளுக்கு நன்றிகள். ஊர்ப்புதினம் பகுதியில் ஏராளமான செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாவற்றையும் தொகுக்க முடியவில்லை. தவறுதலாக ஆக்கங்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

அடுத்த வாரக் காலக் கண்ணாடியைத் தயாரிப்பவரை பின்பு அறிவிக்கிறேன். அல்லது யாராவது விரும்பினால் முன்வரலாம்.
நன்றி.

Edited by இணையவன், 05 November 2007 - 10:08 AM.

நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#23 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,636 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 12 November 2007 - 02:04 AM

யாழ் காலக்கண்ணாடி


காலம் : 5 - 11- 2007 முதல் 12- 11 - 2007 வரைஅன்பின் யாழ் சகோதர சகோதரிகளே எல்லோருக்கும் அடியேனின் வணக்கங்கள்.காலக்கண்ணாடியில் சந்தர்ப்பவசமாக அன்பு நெஞ்சங்களை சந்திப்பதில் அளவிலா மகிழ்ச்சி.என்னை தேர்ந்தெடுத்த இணையவனுக்கு நன்றிகள் பல.

புதிய உறுப்பினர்களாக யாழில் இணைந்தவர்கள் பின்வருவோர்:முகிலொலி , Nitharsanakumar , waren , jaffna25 , velu murugan, sarmil , ramjan , punguduthivaan , drops .
விண்ணப்பித்தோர் பட்டியலில் kahir,raja1965,neervai thambi,udisecular இடம்பெறுகிறார்கள்

புது உறுப்பினர்கள் வாருங்கள். உங்களை யாழ் களம் வரவேற்கிறது. கள விதிகளை வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை வழங்குங்கள் சகோதர சகோதரிகளே.ம் நான் சொன்னா கேட்பிங்களாக்கும் என்றொரு அசரீதி கேட்கிறது.அ அ ஆ..........

ஏனெனில் வெட்டு குழு, தணிக்கை குழு என ஆவியாக திரிகின்றன.
கள விதிகளை படிக்க கீழுள்ள தள முகவரிக்கு செல்லவும்

http://www.yarl.com/...php?act=SR&f=40

அதி கூடிய செய்திகளை யாழுக்கு வழங்கி கொண்டிருக்கும் முதல் 5 உறுப்பினர்கள்
ஜமுனா,வெண்ணிலா, கறுப்பி, தூயவன், ரசிகை.

களத்தில் மிக நீண்ட கால உறுப்பினரும், தற்போதும் கருத்துக்களை வழங்கி கொண்டிருப்பவர் vasisutha.
யாழில் அதிகூடிய கருத்துக்களை வழங்கியவர் ஜம்மு. கருத்துக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15,000 ஐ எட்டுகிறது.பாராட்டுக்கள்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
மேலும் உறுப்பினர் அட்டவணையை கீழுள்ள தள முகவரியில் பார்வையிடலாம்.
http://www.yarl.com/...M...&filter=ALL


இவ்வாரம் ஊர்புதினம் பகுதியில் பின்வருவோர் செய்திகளை இணத்திருந்தார்கள்.
கறுப்பி, கலைஞன், hirucy, Iraivan, Eelathirumagan, sukan, NewsBot,vvsiva, nedukkalapoovan, janarthanan, paranee, muruga, சாணக்கியன் அனிதா,கந்தப்பு, அருண்
கலைஞனால் படங்களுடன் இணக்கப்பட்ட தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? என்ற விவாத வினா தொடுத்திருந்தார்.இதற்கு justin கீழ்கண்டவாறு எழுதி இருந்தார்.சிந்திக்க தூண்டியது."ஒரு முக்கிய தலைவனை இழந்த பின்னும், சுதாரித்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது தமிழீழம். மேலே விமானம் பறக்க எந்த சலனமும் இல்லாமல் முக்கிய தளபதிகள் சூழ்ந்திருந்தார்கள் அங்கே. சிறி லங்காவில் மூன்று நாள் அதே அரற்றல் பிதற்றல் கொண்டாட்டம். முக்கிய தலைவர்கள் ஓடி ஒளித்துக் கொண்டார்கள் புலி பாயும் என்று.யாரைப் பார்த்தால் தடை செய்யப் பட்ட அமைப்பு மாதிரித் தெரிகிறது? புலிகளையா சிங்கள அரசையா? ". இணைப்புக்கு,
http://www.yarl.com/...showtopic=30570

நெடுகாலபோவானால் இணைக்கப்பட்ட "முகமாலையில் புதனன்று படையினருக்கு பேரிழப்பு "

பரணியால் இணைக்கப்பட்ட "வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிரிட்டனில் கைது"

ஜனார்த்தனனால் இணைக்கப்பட்ட "முகமாலை வரவு -செலவுத் திட்டம் இது - ஐ.தே.க"

கறுப்பியால் இணைக்கப்பட்ட "மௌனம் காக்கும் புலிகளின் குற்றச்சாட்டுக்கு நோர்வே மறுப்பு" ஆகிய செய்திகள் கூடுதலான வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளன.உலக செய்தியில் ஈழபிரியனால்(ஆங்கில),அஜீவனால் (தமிழ்) இணைக்கப்பட்ட "நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த ஒரு இரண்டு வயது குழந்தைக்கு இயல்பான ஒரு வாழ்க்கை கிடைக்க 13 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் முயன்றுவருகிறார்கள்."லக்சுமியின் அறுவை சிகிச்சை வெற்றி பெற பிராத்திப்போம். ". இணைப்புக்கு,
http://www.yarl.com/...showtopic=30612


செய்தி அலசலில் கறுப்பியால் இணைக்கப்பட்ட வான்வழி விழுந்த அடி சமாதானத்தின் மீது வீழ்ந்த அடி பிரிகேடியர் தமிழ் செல்வன்,மற்றும் ஐந்து போராளிகட்கும் வீர அஞ்சலி செலுத்தப்பட்டு, தமிழ் செல்வன் அண்ணாவின் போராட்ட வரலாறு காலத்தின் தேவை அறிந்து எழுதப்பட்டுள்ளது.நிச்சயமாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.இந்த அருமையான செய்தி அலசலை தந்த கறுப்பிக்கு யாழ் சார்பாக நன்றிகள் பல. ". இணைப்புக்கு, http://www.yarl.com/...showtopic=30525


செய்தி திரட்டில் நிதர்சனால் இணைக்கப்பட்ட "கடும் குளிரின் மத்தியிலும் குலையா உறுதியுடன் கனேடிய தமிழரின் பிரிகேடியர் தமிழ் செல்வன்,ஐந்து போராளிகளின் வீரவணக்க நிகழ்வு" கனேடிய தமிழ் மக்களால் கடும் குளிர்,மழையின் மத்தியிலும் மிகவும் உணர்வு பூர்வமாக தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர்.வல்வை சகாரா கூறியது போல் தள்ளாடும் முதியவர்கள் மட்டுமல்ல ஆறெழுமாதங்கள் நிரம்பிய பச்சைக் குழந்தைகளைக் கூட இந்தக் கொட்டும் மழையில் வைத்துக்கொண்டு தங்கள் உணர்வின் வெளிப்பாட்டை காட்டிய தமிழ்மக்களும் நின்றதைப் பார்த்தபோது எனக்கு மெய் சிலிர்த்துப் போய்விட்டது. நிச்சயமாக இச்செய்தி எங்கள் தாயகத்திற்கு ஒரு பெரும் புத்துணர்வை ஊட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
http://www.yarl.com/...showtopic=30567


எங்கள் மண்ணில் புது முகம் சோழ இளவரசன் தமிழீழ மக்களின் பிரச்சனை பற்றி சிங்கபூரில் உள்ள அவரின் நண்பர்களுக்கு கற்பிக்க களத்தில் இறங்கியுள்ளார்.இவருக்கு யாழ் கள உறுப்பினர்கள் நிறைய ஆதரவு வழங்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.மேலும் தகவலை கீழுள்ள திரியில் பார்க்கலாம்.
http://www.yarl.com/...showtopic=30539

அடுத்து யாழ் கழ உறவு Jude "அங்கிகரிக்கப்படாத நாடுகள் பட்டியலில் தமிழ் ஈழத்தை இணைத்திருக்கிறேன் " என்ற தலைப்பில் மிக பெரிய பொறுப்பை ஏற்றுள்ளார்.அவருக்கு கீழ் கண்ட உதவிகள் தேவை.ஒவ்வொரு கள உறவும் நேரமெடுத்து அவருக்கு உதவ வேண்டுமென்பது எனது அவா.
சிறி லங்கா அரசின் சமாதான செயலகம்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பணிப்பாளர்
ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகளுக்கான பணிப்பாளர்
உலக வங்கி.
மேலும் தகவலுக்கு http://www.yarl.com/...showtopic=30522

பொங்கு தமிழ் பகுதியில் கந்தப்புவால் இணைக்கப்பட்ட "தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!" என்ற தலைப்பில் பலத்த வாத பிரதி வாதங்கள் நடைபெறுகிறது.யாராவது இப்பக்கத்தை பார்க்க தவறின் சென்று பார்த்து உங்கள் பொன்னான கருத்துக்களை அளியுங்கள்.இணைப்புக்கு

http://www.yarl.com/...showtopic=30565


வாழும் புலத்தில் புது முகம் ரகுநாதன் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தேசப்பற்று பற்றி கடுமையாக சாடியிருந்தார்.அத்துடன் தமிழ் நாட்டிலுள்ள தமிழரிடம் எமது தலைவர்,போராட்டம் என்பவற்றுடன் ஒப்பிட்டிருந்தார்.மேலும் வாசிக்க http://www.yarl.com/...showtopic=30683

வாழும் புலத்தில் சோழனால் இணைக்கப்பட்ட "கண் திறக்கும் பிரித்தானிய ஊடகங்கள்!" என்ற தலைப்பில்,நீண்ட காலங்களாக எம்மக்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் கொடுமைகளைப் பாராமுகமாக இருந்த பிரித்தானிய ஊடகங்கள், சிலரது அயராத முயற்சிகளை அடுத்து கண் விளிக்கத் தொடங்கியிருக்கிறது.இச்செய்த
யை பார்க்க,
http://www.yarl.com/...showtopic=30776

உறவாடும் ஊடகத்தில் அஜீவனின் வானொலியில் கீழ்வரும் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.
- தன்நம்பிக்கையும் வெற்றியும்
- தாய்பாலின் மகத்துவம்
- கரம் கொடுக்கும் கலைத் தென்றல்
- கே.எஸ் பாலச்சந்தரனின் சர்வர் நகைச்சுவை
- காந்தி நினைவு தினத்தில் வைரமுத்துவின் வைர பேச்சு
கேட்பதற்கு
http://www.radio.ajeevan.com

கவிதை பூங்காட்டில் எல்லா கவிதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சுவையளித்தன. மொத்ததில் ஒரு பல்சுவை விருந்தை யாழ் கவிஞர்கள் தந்தார்கள்.அவற்றுள் சில ......
வல்வை சகாராவின் "போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே!"
http://www.yarl.com/...showtopic=30508
குட்டி தம்பியின் செல்வண்ணை! "உன் பெயரை உச்சரித்துவிட்டு"
http://www.yarl.com/...showtopic=30625
காவலூர் கண்மணியின் "இலக்கியமே நீ தூங்கு"
http://www.yarl.com/...showtopic=30531
தமிழ்வானத்தின் "புன்னகை மழையே நீ எங்கே"
http://www.yarl.com/...showtopic=30523
யாழ் poetன் "அஞ்சலிப் பரணி"
http://www.yarl.com/...showtopic=30471

ஆகிய கவிதைகள் தமிழ்செல்வன் அண்ணாவை பற்றி எழுதப்பட்டவை.என நெஞ்சை அனைத்து கவிதைகளும் என் நெஞ்சை தொட்டன.கவிஞர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.


கதை கதையாம் பகுதியில் என்னை கவர்ந்த, என்னை போன்ற பலரை கவர்ந்த நகைச்சுவை கதை சாத்திரியின் "போத்தல் பித்தளை அலுமினியம்" பலரது பழைய வாழ்க்கையை மீட்டியது. என்னை கவர்ந்த நகைசுவை பகுதி " இந்த வாகனத்தை சுத்தி கலர் ரியூப்லைற் பூட்டி சின்ன ஸ்பீக்கரும் பூட்டி அதிலை சினிமா பாட்டைபோட்டுகொண்டுதான் வருவினம். அவையின்ரை ஸ்பீக்கரிலை பாடுற சினிமாபாட்டை செளந்தர்ராஜனும்.பி.சுலாவும் பாடியிருந்தாலும் அதிலை வாற சத்தம் இரண்டு பேரின்ரை குரலும் ஒரேமாதிரி வித்தியாசம் கண்டு பிடிக்கேலாத குரலாதான் கேக்கும்.ஆனாலும் பாட்டு என்ன பாட்டு எண்டு விளங்கும்.அதைவிட ஜஸ்பழவானின்ரை டீசல் இஞ்சின்வேலைசெய்யிற சத்தம் பாட்டுச்சத்தத்துக்கு மேலாலை கேக்கும்".நிச்சயமாக சாத்திரி ஒரு நகைசுவை உணர்வுள்ள மனிதர் என்பதில் ஐயமில்லை.
இக்கதையை வாசிக்காதவர்கள் இத் திரியில் வாசிக்கலாம்.
http://www.yarl.com/...showtopic=30498
கதை கதையாம் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு டைகர்பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "காதல்காவியம்" ஜம்மு பேபியின் "அழகிய காதல் மகன்" என்ற படம் பல பாடல்களுடன் எல்லோரும் பார்க்க வேண்டியது.
http://www.yarl.com/...mp;#entry358552
இனிய பொழுதில் நெடுக்ஸின் பட்டிமன்றம் "75 ஆண்டுகளாக சினிமா சாதித்ததென்ன..??! " என்ற தலைப்பில் காணொளியில் விவாதத்தை பார்த்தபின் விவாதம் ஆரம்பமாவது சுவாரசியமாக உள்ளது.இணைப்புக்கு ,
http://www.yarl.com/...showtopic=30738
இனிய பொழுதில் இவ்வாரம் இணைக்கப்பட்ட இனியவளின் பொன்மொழிகள்
இனியவள்: ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக் கொள்கிற மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி.
வெண்ணிலா:பொறுமையில்லாத பெண் வேரில்லாத மரத்திற்கு சமம்
மற்றும் என்னால் இணைக்கப்பட்ட " கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது " ஆகியவை அலங்கரிக்கின்றன.
http://www.yarl.com/...t...5692&st=200

அறிவு தடாகத்தில்,குறுகாலபோவானால் சட்டக்குறி -Barcode ஒரு அருமையான தகவலை தந்துள்ளார். வாசிக்க
http://www.yarl.com/...showtopic=30785
அரசியல் அலசலில் பண்டிதரால் இணைக்கப்பட்ட "நடைமுறை அரசுகள்" என்ற தலைப்பில் உலகில் பல் அங்கீகரிக்கப்படாத அரசுகள் பற்றி அலசப்படுகிறது.
http://www.yarl.com/...showtopic=30779

சமூக சாளரத்தில் கறுப்பியால் இணைக்கபட்ட "செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க...ஆண்கள் நினைப்பு இது தான்" என்ற தலைப்பில் கருத்தடை பற்றி சுவாரசியமான விவாதம் நெடுக்ஸ் - சாணக்கியன் இரட்டையர்களால் நடத்தப்படுகிறது.
http://www.yarl.com/...showtopic=30762

யாழ் தரவிறக்கம் பகுதியில் ஆங்கில பட தரவிறக்க களமுகவரிகளை கலைநேசன்1 வழங்கி வருகிறார்.விரும்பியவர்கள் பலனடையுங்கள்
http://www.yarl.com/...showtopic=28904


குறைகள்: ஊர்புதினத்தில் செய்தி தொடக்கத்தை இணைத்து பின் செய்தி மூல திரியை இணைப்பது செய்தியை வாசிக்கும் ஆர்வத்துக்கு இடையூறாக உள்ளது.
விவாத சம்பந்தமான தலைப்புக்கள் எழுதப்பட்ட நிலையிலும் ஒருவரும் கருத்தே எழுதாமல் பல தலைப்புகள் மறைந்து விடுவது கவலைக்கிடமானது.
பலரின் கருத்துக்கள் நிர்வாகத்தால் அழிக்கப்படுவது, (அக்கருத்து யாரையும் பாதிக்காத போதும் கூட )ஆரோக்கியமான தளத்துக்கு அழகல்ல
.

நிறைகள்: சில காலங்களுக்கு முன் பல உறுப்பினர்கள் (நானும் உட்பட) எழுதும் போது ஏற்படும் எழுத்து பிழைகள் திருத்தமடைந்து மிக முன்னேற்றகரமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு யாழ் களத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இறுதியாக யாரையும் புண்படுத்துவதோ அல்லது மட்டம் தட்டுவதோ எனது நோக்கமல்ல.மாறாக இக்களத்தை எப்படி நோக்குகிறேன் என்பதை என்மனதுக்கு எட்டியபடி எழுதியுள்ளேன்.
பொறுமையாக வாசித்தமைக்கு நன்றிகள் பல.
அடுத்த கிழமைக்கான காலக்கண்ணாடியை யாராவது முன்வந்து செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்.

உங்களில் ஒருவன்
நுணாவிலான்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#24 இவள்

இவள்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 67 posts
 • Gender:Female
 • Location:Canada

Posted 20 November 2007 - 10:44 PM

அனைவருக்கும் "இவளின்" வணக்கங்கள்

யாழில் சென்றவாரம் என்ன நடந்ததுயென்று சுருக்கமாக எழுதுகின்றேன். நேரம் காணாதபடியால் விவரமாக எல்லாவற்றையும் வாசிக்க முடியலங்க, ஏதும் விடுபட்டால் உங்க பெரியமனசால் மன்னிச்சுக் கொள்ளுங்கள்.வலைஞன் அண்ணாவின் தனிமடலை நான் தாமதாக பார்வையிட்டதால் காலக்கண்ணாடியும் தாமதமாகிவிட்டது. :rolleyes:

யாழில் கார்த்திகை மாதம் 10 ம் திகதியில் இருந்து 18 ம் திகதிவரையில் என்ன என்ன நடைப்பெற்றதென்பதை சுருக்கமாக பார்ப்போம்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
+ யாழ் அரிச்சுவடி : புதிய உறவுகள்

-"வாலி" - //அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்....! //என்று தலைப்பிட்டு அறிமுகமானார். வாலி என்றவர் யாழில் சுவைக்க காரணம் "சுண்டல் " தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

வாலியண்ணாவை யாழிற்கு வரவேற்பதில் சந்தோசம். ஆனால் பாருங்கோ வாலியண்ணாவுக்கும் ,கள உறவு சுண்டல் எழுதுவது போல் "னை" என்ற பிரச்சனை உள்ளது. அதாவதுங்கோ சுண்டலுக்கும் "ணை" எண்டு எழுத வராதுங்கோ, தங்களுக்கும் ணை எண்ட எழுத்தில் பிரச்சனை உள்ளது . உங்கள் அறிமுகத்தலைப்பை பார்க்கவும்.

"அன்பழகன்" //அனைவருக்கும் வணக்கம்// என்று எழுதியவர் ஒரு கருத்தோடு அவரைக் காணவில்லை!

"ஜாவா" என்ற புதியவர் // அன்பு வணக்கம் //வந்தனங்கள் என்று ஆரம்பிச்சு தன்னைப்பற்றிய அறிமுகத்தை தந்திருந்தார்.

"eelamlover" என்ற புதிய உறவு //அனைவருக்கும் வணக்கம்//என்று தலைப்ப போட்டு , தான் சில மாதங்களாக யாழை வாசிப்பதாகவும் தற்போது இணைந்துள்ளதாகவும் எழுதியிருந்தார்.

அனைத்து புது உறவுகளையும் அன்போடு வரவேற்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ யாழ் உறவோசை :

இதில சென்ற கிழமை என்ன நடந்திச்சுன்னு பாத்தீங்க என்றால், //எணக்கு களத்தில் எழுத தடைய? // என்ற கேள்வியோடு "நாவூற" தலைப்பிட்டு இருக்கின்றார்.

"நாவூற" வாழுற இடம் www.neruppu.org என்ற இணையத்திலாம். நெருப்பு இணையத்தில் வாற செய்திகளை அடிக்கடி இணைச்சார். நிர்வாகமும் அதை நிர்வாகத்துக்குள் நகர்த்திக்கிட்டே இருந்தார்கள்.

எண்ட கருத்து என்னவென்றால் நிதர்சனம், நெருப்பு போன்ற இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இங்கு இணைப்பதை நிர்வாகம் தடுக்கவேணும். அவை வேற வேற இடங்களில இருந்து செய்தி எடுத்துப் போட்டுட்டு உரியாக்களின்ர பெயருகள போடுறேல.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ ஊர்புதினம் : முக்கியமான செய்திகள்

- விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் - சிறீலங்கா வான்படைத்தளபதி சூளுரை.
http://www.yarl.com/...showtopic=30804

- யுத்தத்தை தொடர ஈரான், சீனா, பாகிஸ்தானிடம் ஆயுத உதவியை சிறீலங்கா நாடியுள்ளத - பி.ராமன
:http://www.yarl.com/forum3/index.php?showtopic=30875

- தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு 4 பேர் படுகாயம்
: http://www.yarl.com/...showtopic=30879

- அமெரிக்காவின் றாடர் கருவி: இந்தியா அச்சத்தில் - இந்தியப் பத்திரிகை
: http://www.yarl.com/...showtopic=30922

- இவ்வருடம் இருபதாயிரம் புதிய படை உறுப்பினர்கள் - கோதபாய
: http://www.yarl.com/...showtopic=30917

- சிறீலங்காவிற்கு பிரித்தானியா பத்து இலட்சம் பவுண்ஸ் வழங்கியுள்ளது
: http://www.yarl.com/...showtopic=30954

- சிறீ லங்கா உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!! , காணொளி..
: http://www.yarl.com/...showtopic=30938

- வைகோ, நெடுமாறனுக்கு நிபந்தனை ஜாமீன்
: http://www.yarl.com/...showtopic=31001

- உலக த‌மிழ‌ர்களை ஏமா‌ற்று‌கிறா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்று!
: http://www.yarl.com/...showtopic=31032

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
+ உலக நடப்பு:

- ஆடு வெட்டி யாகம் நடத்திய சங்கராச்சாரியார்

வசி சுதா : அப்ப இறைச்சி கடைக்காரர் அதோட இறைச்சி சாப்பிடுற
ஆட்களையும் உள்ள தள்ளவேணும்.

இறைவன்: அனுமதியின்றி ஆடு வெட்டப்பட்டால் அது கள்ள ஆடுதானே.

வசிசுதா: ஆட்டின் அனுமதியைதானே சொல்றீங்கள்?

ஈழவன் : எப்படி உங்களால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகின்றது

வசிசுதா : தானா வருது...

: http://www.yarl.com/...showtopic=31071
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
- பிரிட்டனை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரிட்டனில் இருந்து வெளியேறுவோரில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவில் தான் குடியேறி வருகின்றனர்.

: http://www.yarl.com/...showtopic=30972


- காதலி ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்கும் காதலன்..!

கௌரிபாலன் : பெண்கள் எப்போதுமே புத்திசாலிகள்தான் ...

நெ.போ: அப்படியா அவங்க நினைச்சுக்கிறாங்களே தவிர.... புத்திசாலிகள்...??!

ஜொம்மு பேபி பஞ்ச்- காதல் ஒரு கழற்றி போட்ட செருப்பு, சைஸ் சரியா இருந்தா யாருக்கும் போட்டு கொள்ளளாம்"!!

நெடுக்கால போவான் அண்ணேக்கு இந்தமாதிரி செய்திகள் தான் கண்ல படும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

+ நிகழ்வும் அகழ்வும்:சென்ற வாரம் யாழில் இணைக்கப்பட்ட கருத்துப்படங்கள்

Posted Image

Posted Image
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
+ செய்தி திரட்டி:

- நாய்க்கு தாலி கட்டிய இளைஞர்...........

Posted Image

என்ன கொடுமை இது !

- சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை!

இதில பாருங்கோ சாணக்கியன் சார் நல்ல கேள்விகள் கேட்டிருக்கார், :unsure:

1) கர்ப்பமான போதே பெற்றோரில் ஒருவருக்கு எயிட்ஸ் இருப்பது உணரப்பட்டால் கருவை அழித்து இந்த அவலம் இடம்பெறாமல் தடுக்க சட்டம் அனுமதிக்குமா?

2) கருக்கலைப்பை தடைசெய்த அரசாங்கம் ஏன் பிள்ளையை தொண்டு நிறுவனத்திடம் கொண்டு ஓடுகிறது? தனது சட்டத்தினால் ஏற்பட்ட பக்கவிளைவுக்கு தானல்லவா பரிகாரம் வழங்கவேண்டும்!

3) பெற்றோரை தீவிரமாக தேடும் பொலிசார் அவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கி மேலதிகமாக பிள்ளையையும் அவர்களிடமே கொடுப்பார்களா?

4) கருவை கொல்லக்கூடாது என்று சட்டமியற்றியற்றிய அரசும், மதஅடிப்படை வாதிகளும், அவ்வாறே பெறப்பட்டு கைவிடப்பட்ட குழந்தைகள், சிறுவர்களை பாதுகாக்கவென கிராமம் தோறும் ஆச்சிரமங்கள் அமைத்து இலவசமாக பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை மகிழ்வுடன் பொறுப்பேற்று பராமரிக்குமா?

http://www.yarl.com/...showtopic=30904


- திருட்டு பயலைக் காட்டு ஆத்தா - தேங்காய் பூசாரி

Posted Image
Posted Image

நல்ல காலம் உருட்டப்பட்ட தேங்காய் யாழ் களத்துக்குள்ள வரயில்லை! :rolleyes:

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
+ வாழும் புலம்:

- சிட்னிகோசிப் 35, சிட்னி தமிழ் பாடசாலை

ஜொம்மு பேபி பஞ்-"எத்தனை வருசமா தான் இராமாயணத்தையும்,மகாபாரத்தைய
ம் கலைவிழாவில் பார்கிறது அதற்காவதாவது கொஞ்சம் மாற்றுங்கோவேன்"!!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
+ உறவாடும் ஊடகம்:

தரிசனத்தின் இம்சைகள்:

வசிசுதா: அநேகமான நிகழ்ச்சிகள் மறுபடி மறுபடி போடுகிறார்கள். சில தடவை அல்ல பலமுறை. ஏலேங்கடி ஏலேலோ, சொல்லுங்கள் வெல்லுங்கள்,
இன்றைய நேயர், இது உங்கள் விருப்பம் (விழாக்களில் மக்களிடம் பாடல் கேட்டு போடுவது) திரைப்படங்கள், நடனநிகழ்ச்சிகள் இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் திரும்ப திரும்ப மறு ஒளிபரப்பு செய்கிறார்கள்.மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழுங்காக பதிவு செய்து போடுவதும் சிரமாக உள்ளது போல.

தரிசனம் தொலைக்காட்சி இந்தக்குறைகளை கவனத்தில் கொள்ளுங்கோவன். :rolleyes:

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
+ கவிதைப்பூங்காடு: இந்தவாரம் இணைக்கப்பட்ட கவிதைகள் விரிவாக விளக்கம் சொல்ல நேரமில்லாததால் அதன் தலைப்புகளை இங்கு இணைக்கின்றேன்.

இதயம் மட்டும் பேசட்டும் http://www.yarl.com/...showtopic=30850
தேசத்தின் புன்னகை - இன்குலாப் http://www.yarl.com/...showtopic=30897
கல்லறை காயாது- தணிகைச் செல்வன் http://www.yarl.com/...showtopic=30898
ஒப்பிலாது நீ உலவினை உலகிடை! - பாவலர். பரணன் http://www.yarl.com/...showtopic=30899
'வேங்கையன் பூங்கொடி" http://www.yarl.com/...showtopic=28361
காலநதியின் வேகமென்ன http://www.yarl.com/...showtopic=30960
கண்ணீரும் குருதியுமாய் ஈழம் http://www.yarl.com/...showtopic=31057
இவன் ஒரு சிவன்! http://www.yarl.com/...showtopic=31040
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
+ கதை கதையாம்:

- அவளா இவள், ஒரு நிமிட கதை

புத்தன் அவர்கள் ஒரு நிமடக்கதையில் அசத்தோ அசத்தென்று அசத்துகின்றார்.

- தீவாளி

சாத்திரி அண்ணரின் கதையென்றாலே சலிப்படையாமல் வாசிக்க தூண்டும் விதமாக நகைச்சுவை பாணியில் கதையை எழுதியிருப்பார்.அது போலவே இந்த " தீபாவளி" என்ற கதையும் அமைந்திருந்தது.

தீபாவளி தலைப்பின் கீழ் //ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள்.அதில் சாத்திரி நீங்களும் விதிவிலக்கல்ல என்பதனை உங்கள் நகைச்சுவை கதைமூலம் உணர்த்தியுள்ளீர்கள்.இனி வரும் ஒவ்வொரு தீபாவளியும் உங்கள் தந்தையும்,சகோதரியும் என் நினைவில்........ //என்று குமாரசாமி அவர்கள் உருக்கமாக எழுதியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
+ சிரிப்போம் சிறப்போம்:

- குழந்தைகளின் கும்மாளம் , தலைப்பில் ஜொம்மு(பேபி)வ போட்டு கலாய்கிறாங்கய்யா கலாய்க்கிறாங்க

வழமைபோல் நகைச்சுவைக்காட்சிகள், அதிசயக்குதிரை ,கலக்க போவது யாரு? தலைப்பில் சில நகைச்சுவை காட்சிகள்,படங்கள்,கணொளி என்று இணைக்கப்பட்டிருந்தன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
+ இனிய பொழுது:

- இனியவளின் பொன் மொழிகள்:

இனியவள் : தன் துன்பத்தை மற்றவர்கள் மீது திணித்தோ அல்லது மற்றவர்ளுடன் பகிர்ந்து கொள்ளவோ விரும்புகிறவன் மிகவும் சாதாரண மனிதனாகத்தான் இருப்பான்*****

கலைஞனின் பொன்மொழி : பொய்யாக சிரிப்பதை விட மெய்யாக அழுவது நன்று!!


- வியாழ மாற்றம் - (16.11.2007)

ஜஸ்ரின் : மகர ராசிக்குக் கஷ்ட காலம் என்றிருப்பதால் இந்தச் சோதிட சாத்திரங்களை நம்புவதை நான் இன்றுடன் கைவிடுகிறேன். மீண்டும் நல்ல காலம் பிறக்கும் போது நம்பலாம்

ஈழவன் : நான் ஜோதிடத்தை நம்புவதில்லை ஆனாலும் எனது ராசியில் சொல்லப்பட்டவை அனைத்தும் கடந்த 2 வாரங்களுகுள் நடந்து இருகின்றன.முக்கியமாக வாகனம் படிப்பு ,புதிய வேலை,முன்கோவம் அதன் விளைவு என்பவை நடந்தே இருகிறது

வசிசுதா: ஈழவன் அவர் (வியாழபகவான்) 16ம் திகதி அதாவது நாளைக்குத்தான் வீடு மாறப்போறார் என்று எழுதியிருக்கினம்...... எப்படி உங்களுக்கு 2 கிழமைக்கு முன்னமே எல்லாம் நடந்திச்சு? mr.வியாழபகவான் உங்கட சொந்தக்காரரோ?

எல்லாற்ற ராசியையும் பற்றி அறிய இங்க போங்கோ : http://www.yarl.com/...t...30941&st=20


- கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல்

வெண்ணிலாக்கா : மெல்லிசாக இருந்தப்போ அறிவாளி அதே ஆள் குண்டானால் அறிவிலி.
உந்த ஆய்வை மறுபரிசீலனைக்கு அனுப்பணும்

http://www.yarl.com/...t...30930&st=20

வழமை போல் இனியபொழுதில் இனிய சினிமா காட்சிகள் ,யம்மு ரசித்தவை,சுட்டவை,இளையராஜாவின் இனிய கானம்,இனியவள் ரசித்த நகைச்சுவை காட்ச்சிககள் , தலைப்பின் கீழும் பல புதிய பதிவுகள் உள்ளன.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
இத்தோடு காலக்கண்ணாடியை முடிவுக்கு கொண்டு வருகின்றேன். எழுதியதை பொறுமையா வாசிக்கும் அனைவருக்கும் "இவளின் " நன்றிகளைக் கூறிக் கொண்டு விடைபெறுகின்றேன்.அடுத்த வாரத்திற்கான காலக்கண்ணாடியை வழங்குவதற்கு " ஈழவன்" அவர்களை அழைக்கின்றேன். :)

#25 Sabesh

Sabesh

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,076 posts
 • Gender:Male
 • Location:Canada

Posted 04 December 2007 - 05:10 AM

காலக்கண்ணாடி (கார்த்திகை 19 முதல் கார்த்திகை 25 வரை)


எல்லாருக்கும் வண்க்கம். நேரமின்மை காரணமாக நுனிப்புல் மேய்ந்து இக்கண்ணாடியைத் தருகிறேன். யாழ்பிரியா நேற்று தனிமடலில் கேட்டிருந்தார். யாரும் கல்லெறிந்தால் அவர்தான் பொறுப்பு எனச்சொல்லியிருந்தேன். அதனால் கல்லெறிய விரும்புபவர்கள் "யாழ் பிரியாவிற்கே" எறியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! :D முன்னரே கேட்டு அதிக நேரம் தந்திருந்தால் சிறப்பாக செய்திருப்பேனோ எனக்கேட்டால் வேறு காரணம் தான் தரமுடியும்; ஏனெனில் "சட்டியில இருக்கிறது தானே அகப்பையிலை வரும்" :) .
இங்கு இருக்கும் தமிழ் பண்டிதர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தயவு செய்து எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை திருத்தி வாசிக்கவும்.


யாழ் இனிது (வருக வருக)

யாழ் அரிச்சுவடி (சென்ற வாரம் களத்தில் இணைந்த உறவுகள்):
விண்ணப்பித்தோர்
polikainayagan
thamby2007
jeyaa
Amutan
saarulatha
ksrajan
radcell

புதிய உறுப்பினர்கள்
maravan15
jaffnaBoy
madayan
சாள்ஸ்
rajan24
thushi_eelam
udhayakumar
karan_123
Oli
Born4eelam

கருத்துக்ள உறவுகள்
Eelathupithan

யாழ் முரசம்:
என்னதான் மட்டுறுத்துனர் முரசு அடித்து சொன்னாலும் கடவுளுக்கும் பகுத்தறீவுக்கும்(?) இடயிலான கருத்தாட்டத்தில் உறவுகள் உணர்ச்சிவசப் படத்தான் செய்கின்றனர். இல்லை மட்டுறுத்துனருக்கும் வேலை வேண்டும் என நினைத்து வைக்கிறார்களோ தெரியாது. காரணம் அரைத்த மாவை திரும்ப திரும்ப அரைப்பதாக படுகிறது. ஆகவே இது தொடர்பான கருத்துகளே திருத்தம்/நீக்கம்/மற்றும் தணிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளன.

யாழ் உறவோசை:
வழமையான ஆர்ப்பாட்டங்களும் உதவி கோரல்களும்.
நீங்களே பார்த்து மகிழ


செம்பாலை (செய்திக்களம்)

ஊர்ப் புதினம் முக்கியமானவை:

க. வே. பாலகுமாரின் "மாவீரர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது"
விடுதலை கோரி தமிழ்க்கைதிகள் சிறையில் உண்ணாவிரதம்.
இரா. சம்பந்தன்னின் "கனகசபையின் மருமகனைக் கடத்த ஏவிவிட்டது மகிந்த அரசுதான்"
அமெரிக்காவில் TRO வின் சொத்தகள் முடக்கம்
கோத்தபாய ராஜபக்சவின் "அம்பாந்தோட்டை அசம்பாவிதத்துடன் ஜேவிபி தொடர்பு"
கெல உறுமயவின் "சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ராவூப் கக்கீமும் இருக்கின்றனர்"
நல்லூரில் உள்ள தியாகி தீபனின் நினைவுச்சிலை உடைக்கப்பட்டது
2008ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
சண்டே லீடர் அச்சகம் தீ வைப்பபு
கிளிநொச்சி யுனிசெஃப் அலுவலகத்தை மூட ஜேவிபி வலியுறுத்தல்
பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பதிலளிக்க பெர்னாண்டோபிள்ளே மறுப்பு
தமிழர் புணர்வாழ்வுக் கழகத்துக்கு தடைவிதித்த இலங்கை
இந்தியாவின் காதில் பூச்சுற்றும் இலங்கை
சிறலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு

உலக நடப்பு:
பயனுள்ள சில:
பரித்தானியாவில் பெருகி வரும் பாலியல் நோய்கள்
பிரிட்டனின் அரைவாசிக்கும் அதிகமான மக்களின் முக்கிய தரவுகளடங்கிய கணினி பதிவேடுகள் தொலைவு
ஆஸ்திரேலிய தேர்தல்.

நிகழ்வும் அகழ்வும்:
யாழ் செய்திக்குழுமத்தின் எண்ணக்கருவை சிறந்த ஓவியமாக்கிருக்கிறார் அனிதா - வாழ்த்துக்ள். :)

செய்தி திரட்டி
வழமையான மசாலாக்கள் தான். நீங்களே பாருங்கள்


படுமலைபாலை (தமிழ்களம்)

எங்கள் மண்:
நுணாவிலான் சுட்டு தந்த "ஈழத்து ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பியலாய்வு" - நான் எதிர்பார்து போன அழவுக்கு இல்லை (மிகச் சில ஊர்கள் பற்றித்தான் உள்ளது)
உதயபானு சுட்டு தந்த "எங்கள் அடையாளங்கள்" - அணைவரும் அறிந்திருக்க வேண்டியவை

வாழும் புலம்:
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேச தலைவர் அமெரிக்காவில் கைது
புத்தனின் சிட்னிகோசிப் 35
துக்களக் வாரப்பத்திரிகை ஜரோப்பா வாழ் தமிழர்களால் தீ வைப்பபு

தமிழும் நயமும்:
தூய தமிழ்ச் சொற்கள், தமிழ் சொற்கள் அறிவோம்

உறவாடும் ஊடகம்:
புயலெனத் தென்றலின் ஒளிப்பாய்ச்சல் - புதிதாக வரவிருக்கும் தொல்லைக்காட்சிக்கு விளம்பரம்.
நெடுக்ஸின் ஆதங்கம் "ஏன் இப்படி நடந்துக்கிறாங்க?"


செவ்வழிப்பாலை (ஆக்கற்களம்)
கவிதைப் பூங்காடு:
வழமைபோல அதிகமாக காதல் சுக ? பிரிவுக் கவிதைகளுடன் சில மாவீரர்களுக்கான கவிதைகள். நீங்ளே பருக...

கதை கதையாம்:
நுணாவிலான் சுட்டு தந்த "வார்தை தவறிவிட்டாய்"

நூற்றோட்டம்:
நுணாவிலான் மீண்டும் சுட்டு தந்த "மால்கம் எக்ஸ் - என் வாழ்க்கை நூல் அறிமுகம்"

சிரிப்போம் சிறப்போம்:
நீங்களே பார்த்து சிரிக்க

விளையாட்டுத் திடல்:
இலங்கை அணி 96 ஓட்டங்களால் தோல்வியாம் - ஆரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

கோடிப்பாலை (அறிவியற்களம்):
வலையில் உலகம்:
மீண்டும் நுணாவிலான் சுட்டு தந்த "எரிதங்ள் (spam) ஒரு விளக்கம்" - பயனுள்ள தகவல்

அறிவுத் தடாகம்:
ஜம்முவிற்காக சுண்டலின் ஆராய்ச்சியில் "பெண்களிடம் I Love You சொல்லும் தைரியம் வருவது எப்படி?"
அதிவேக விமானம்

விளரிப்பாலை (சிந்தனைக்களம்)
மெய்யெனப் படுவது - இந்த பிரிவின் பெயரே ஒரு மாதிரித்தான் இருக்கிறது. அதாவது மெய்யெனப் படுவது ஆனால் மெய் இல்லை என்பது போல இருக்கிறது.
இப்பிரிவின் கீழ்வரும் விடயங்ளை சிந்தனை செய்வொம் எண்டு பெயரில் இருக்கிறதையும் குழப்பி விடுவார்கள் என்பதால் நான் உள் நுளைவதில்லை. நீங்கள் விரும்பின்?

மேற்செம்பாலை (சிறப்புக்களம்)
நாவூற வாயூற:
சுண்டலுக்காக தூயா தரும் "சுண்டல் அவிப்பது எப்படி" - எங்கேயோ நல்லாய் அவிச்சிருக்கிறார் போல
நுணாவிலானின் கைவண்ண கொத்து ரொட்டி மற்றும் சிக்கன் ப்ரைடு ரைசு

நலமோடு நாம் வாழ:
வழம போல நுணாவிலான் பயனுள்ள தகவல்களைச் சுட்டு தந்திருக்கிறார்
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? - என்னை போல புத்திசாலியா பிறந்து என்ன பிரயோசனம் ஜம்மு மாதிரி புத்திசாலியா வாழ இல்லா வேண்டும் :(
உங்களுக்கு என்ன நோய்?
காய்கறிகளின் வயாகரா - ரொம்ப முக்கியம்
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

வாழிய வாழியவே:
தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

இத்துடன் எனது சுருக்கமான காலக் கண்ணாடியை முடிவுக்கு கொண்டு வருகிறேன். ஏதாவது முக்கியமானவற்றை தவற விட்டிருந்தால் மன்னிக்கவும்.
நட்புடன்,
சபேஸ்


#26 கலைஞன்

கலைஞன்

  உங்களில் ஒருவன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,303 posts
 • Gender:Male

Posted 13 December 2007 - 11:22 PM

யாழ் காலக்கண்ணாடி கார்த்திகை 26, 2007 - மார்கழி 02, 2007


வணக்கம், இந்தக்கண்ணாடி வெற்றிலை பாக்கு வச்சு அழைச்சு ஒருவரும் கூப்பிடாமல் என்பாட்டில் எதேச்சையாக நான்கு மணித்தியாலங்களில் விரைவாக செய்தது. தவறுகள் ஏதாவது இருந்தால் அல்லது நான் முக்கியமான தகவல்களை எவற்றையாவது மறந்துஇருந்தால் மன்னித்துகொள்ளவும். யாழ் காலக்கண்ணாடி முடங்கும் சந்தர்ப்பத்தில் கண்ணாடியை காப்பாற்ற மீண்டும் இப்படி அதிரடியாக வருவேன் எனக்கூறி தற்காலிகமாக விடைபெறுகின்றேன். நன்றி!

#27 யாழ்கவி

யாழ்கவி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,551 posts
 • Gender:Female
 • Location:தமிழீழம்

Posted 16 December 2007 - 10:31 AM

காலக்கண்ணாடி- 10.12.2007- 16.12.07

தமிழீழ மண் மீட்பிற்காக தமது இன்னுயிர்களை எம்வாழ்விற்காக அர்ப்பணித்த எமது மாவீரர்களுக்கும் கடந்த வருடம் 13.12.06 வரை எமது தேசத்தின் குரலாய் ஒலித்துக்கொண்டிருந்த அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் ஒரு கணம் சிரம் தாழ்த்தி இவ்வார நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றேன்.

உலகெங்கும் வாழும் தமிழர்களை தன்னகத்தே ஒன்றிணைத்து வீறுநடை போடும் யாழில்


புதிய உறுப்பினர்களாக விண்ணப்பித்து அனுமதிக்காக காத்திருப்போர்
kolins, veena, NAMBY,
Sooriyavarman, Sathyaa, Sashi
rajah 27, darwin, palanikannan
Saravanan N.K, Sathirakala, univercity
nhathanpr


நிர்வாகத்தின் அனுமதி பெற்று யாழில் தடம் பதித்தவர்கள்

eelaththamilan, Tamizhan, karlmax
tamil-makan 30, Then Pandi Singam, Semmari
isaiyaruvi


இவர்கள் எல்லோரையும் அன்புடன் வரவேற்கின்றேன். உங்கள் ஆக்கங்கள் களத்தை மேலும் மெருகூட்டட்டும்.


இவ்வார தணிக்கை குழுவின் தளபதியாக வலைஞன் அவர்களும் உபதளபதிகளாக இணையவன், யாழ்பாடி, யாழ்பிரியா மற்றும் எழுவான் ஆகியோரும் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தமது சேவைகளை நிறைவேற்றியுள்ளார்கள். அவர்கள் பணி மேலும் தொடரட்டும்.


இனி ஊர்புதின பக்கத்திற்கு செல்வோமாயின், அங்கு தமிழீழ, சிறீலங்கா செய்திகளை சுடசுட இவ்வாரத்தில் இணத்திருப்போர்

நியூஸ்புலற், ஜனார்த்தனன், கறுப்பி, கந்தப்பு, நுனாவிலான்,,,,

செய்திகளை சற்று அலசுவோமாயின்
" தேசத்தின் குரல்" ஆண்டண் பாலசிங்கம் அவர்களுக்கு அஞ்சலி

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் "கைது நடவடிக்கைகளின்" பின்னணி என்ன?: அம்பலப்படுத்துகிறது ஜூனியர் விகடன்[

இலங்கையில் அதிக பார்வையாளரைக்கொண்ட No.1 தமிழ் இணையதளம் புதினம்.கொம்

பொதுமக்களை இலக்கு வைக்காத தாக்குதல்கள் பயங்கரவாதமல்ல.! "- டென்மார்க் நீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவது பெருமை - திருமாவளவன்

தப்பியது மகிந்த அரசாங்கம்- மலர்வளையம் வைத்து கொண்டாடிய அமைச்சர்- ஈழவேந்தன் நீக்கம்

கில்லாரி கிளின்டனின் தேர்தல் செலவுக்கு புலிகள் பண உதவி -- ஸிரீ லன்கா அரச உத்தியேர்கபூர்வ செய்தி


தேசத்தின் குரலுக்கு தேசியத் தலைவர் அகவணக்கம்

தென் இலங்கையில் தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்குமா?

புலிகளே கடத்தினர்- கெஹலியவின் கண்டுபிடிப்பு

மனோ கணேசனுக்கு உலக சமாதான காவலர் விருது


என பல செய்திகள் ...... இடம் பெற்றுள்ளன,

[b]உலகநடப்பு பகுதியில் [/b]சீமனின் பேட்டியொன்று குமுத்திலிருந்து குலொத்தினால் இன்ணைக்கப்பட்டுள்ளது.
சீமானின் பேட்டி

செய்தி திரட்டியில்
உலகில் மிகப்பெரிய 2.6மீ நாகபாம்பு கென்யாவில் கண்டுபிடிப்பு என்று ஒரு தகவல் அருண் என்பவரால் இணைக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு செய்தியாக செயற்கை இருதயம் மட்டும் தொடர்ந்து இயங்குகின்றது 7 ஆணடுக்கு முன் பொருத்திக்கொண்டவர் மரணம் என்ற செய்தி கறுப்பி அக்காவினால் இணைக்கப்பட்டுள்ளது.தமிழ்களத்தின் எங்கள் மண் பகுதியில் மட்டு மாநிலத்திலும் மரபு ரீதியாகப் பேணப்படும் புதிர் உண்ணுதல் என்னும் எமது பாரம்பரிய நிகழ்வுகளை விளக்கும் கட்டுரை நுணாவிலான் அவர்களினால் இணைக்கப்பட்டுள்ளது.


வாழும் புலத்தில்

தமிழ்தேசியம் என் (உன்) தாத்தா வீட்டு சொத்தா என்று புலம்பெயர் தமிழ்மக்கள் பலரின் கேள்விகளையும் ஆதங்கங்களையும், தமிழ்தேசியத்தையும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் தமது சொந்தநலன்களுக்காக பயன்படுத்தும் புலம்பெயர் நாடுகளில் வாழும் சிலரிடம் கேள்வி கேட்டுச்சென்றுள்ளார் சாத்திரி. அவர்களின் நடவடிகைகள் எமது தமிழீழ போராட்டத்தை மந்தப்படுத்தாமல் இருப்பது எமது மக்கள் கைகளிலேயே இருக்கின்றது என்று எனது எண்ணத்தைக்கூறி,


பொங்குதமிழ் பகுதிக்குச் செல்கிறேன்

அங்கு தமிழன் என்பவன் யார் என்ற சற்று சிந்திக்ககூடிய கேள்வியொன்று அவதாரம் என்பவரினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அக்கேள்விக்கு சாத்திரி, வாசகன், கிருபன், ஜமுனா, பூனைக்குட்டி மற்றும் பலரால் விடையளிக்கப்பட்டுள்ளது. எனது அறிவிற்கு தமிழர்களை வரைவிலக்கணப்ப்டுத்தமுடியாத
. ஆனால் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று மட்டும் சொல்லத்தோன்றுகின்றது.


மகாகவி பாரதியாரின் 125வது பிறந்தநாள் (11.12.07) நினைவுக்கட்டுரை ஒன்று " தமிழ்தேசியத்திற்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்" இருப்பின் வேர்களில் இருந்து இளைஞன் அவர்களினால் இணைக்கப்பட்டுள்லது.


தமிழும் நயமும் பகுதியில்

தூய தமிழ் சொற்களை அறிவோம் என்று ஈழத்துபித்தனினால் இக்காலகட்டத்திற்கு பயனுள்ள பகுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலசொற்களையே தமிழ்சொற்கள் என நினைத்து கதைக்கும் எம் புலம்பெயர் தமிழர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பகுதி.


அடுத்ததாக கவிதை பூங்காட்டுப்பகுதியை பார்ப்போமாயின்

பொயற், இனியவள், காவலூர்கண்மணி, வல்வைசகாரா, வெண்ணிலா, நுணாவிலான், இளைஞன் ஆகியோரின் கவிதைகள் கவிதைபூங்காட்டுப்பகுதியை அலங்கரிக்கின்றது.
அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கிட்டுச் செல்கிறேன்.

" ஆலாய் தளைத்து அறுக வேர்பரப்பி
மூங்கிலாய்த் தோப்பாகி வாழவேண்டும் எந்தன் கண்ணே"
என தன் முதற்காதலியை வாழ்த்திச்சென்றுள்ளார் பொயற் தன் " முதற்காதல்" மூலம்

" பூட்டிய உன் இதயத்தால் ஈட்டியாய் தைக்கும் என்
உயிரை மீட்டிய பல்லவி கொண்டு நீட்டியே விடடி எனக்கவியாய்"
என அருமையாகவும் எளிமையாகவும் தனது கவிதை வரிகளை தந்துள்ளார் " இனியவளின் பூட்டிய இதயம்"

மனிதத்தை தொலைத்துவிட்ட மகத்தான பூமியில்
தனிமனித நேயத்தை தரணியெங்கும் விதைப்பாரா?
எமது ஏக்கங்களை கேள்வியாக விட்டுச்சென்றுள்ளார் காவலூர் கண்மணி தனது கிறீஸ்மஸ் கவிதையில்.

"மனத்தால் தன்னும் தாய்மை வலியுணராப்பெண்டிரும்
தாவி அன்னைம திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும் தயவுசெய்து.."
என்ர எச்சரிக்கை மடலுடன் ஓர் பிரசவத்திற்கான இறுதி என்னும் கவிதையை வல்வைசகாரா வடித்துள்ளார்.

கவிதை அந்தாதி, லொள்ளுக்கவிதைகள், வேங்கையன் பூங்கொடி ,பரணியின் பூவிழுந்த மனசு, நெடுக்காலபோவானின் வேலி போடலையோ வேலி பூங்காட்டை என்னும் பலவும் அலங்கரித்துள்ளன.


கதை கதையாம் பகுதியில்

படைபாளி என்ற புத்தனின் தொடர்கதையொன்று இவ்வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்பாளியை படையுங்கள் வாசிக்க காத்திருக்கின்றோம் என்று கூறி


சற்று இளைப்பாறுவதற்காக அரும்பாலைப்பக்கம் செல்லுகின்றேன்

அங்கு வண்ணத்திரையில் அன்ரன் பாலசிங்கத்தின் வேடத்தில் நடிக்க விருப்பம் என்ற இணைப்பை குட்டித்தம்பி இனைத்திள்ளார்.


சிரிப்போம் சிறப்போம் பகுதியில்

6 பக்கங்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் ஜம்மு பேபியின் காதல், பெண்கள் VZ ஆண்கள், நகை சுவைக்காட்சிகள் என பல இடம் பெறுகின்றன.


விளையாட்டுத்திடலில் புதிதாக ஒரு செய்திகளையும் காணவில்லை


இனிய பொழுதில் "காதலித்தால் உடம்புக்கு நல்லது" நல்ல செய்தியை கறுப்பி இனைத்துள்ளார். பறவை- குருவி வேட்டை விரும்புவர்களுக்கு குறுக்கால போவான் பல இணைப்புக்களை இணைத்துள்ளார்.


[color="#00FFFF"]மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் இல்லை என்று நலமோடு வாழவழி சொல்லுகிறார் நுணாவிலான்
.


சிந்தனையை தூண்டி அறிவை வளர்க்கும் இடமான ஆடுகளத்தில் நுணாவிலான், கறுப்பி, இன்னிசை, றமா, அ, ரொக் போய்.. இன்னும் பலர் களமாடிக்கொண்டிருக்கின்றனர்.


ஆக்ககங்கள் ஏதாவது விடப்பட்டிருப்பினும், இவ்வளவு நேரமும் பொறுமையாக வாசித்த அனைவருக்கும் மற்றும் இவ்வார காலக்கண்ணாடியை என்னை நம்பி ஒப்படைத்த யாழ்பிரியாவிற்கும் நன்றி கோறி இவ்வார காலக்கண்ணாடியை நிறைவு செய்கின்றேன்..
தாயினும் பெரியது தாயகம்
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்
- புதுவை இரத்தினதுரை

#28 ragunathan

ragunathan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,406 posts
 • Gender:Male
 • Location:Sydney
 • Interests:Politics, music, sports.

Posted 22 December 2007 - 11:07 PM

யாழ் காலக் கணிப்பு 23/12/2007

வணக்கம் யாழ்க் கள உறவுகளே !

என்னால் மற்றவர்கள் போல பலவர்ணங்களிலும், வேறுபட்ட எழுத்துருக்களிலும் இன்னும் எழுதத் தெரியவில்லை. ஆகவே தயவு செய்து இம்முறை என்னைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டு இவ்வாரக் காலக் கணிப்பில் உள்நுழைகிறேன்.

இக்காலப் பகுதியில் யாழ்க்களத்துடன் தம்மையும் இணைத்துக் கொண்டவர்கள்,

வினவி, போன் ஈழம், காட்டாறு, அன்பழகன், வணங்காமுடி, சூறாவளி ஆகிய அன்பர்கள். இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தமது கருத்துக்களை மிகவும் திறம்பட எழுதியிருந்தார்கள்.

காட்டாறு - இவர் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர். நிறைந்த ஆளுமையும், சொல்லாடலும் கொண்டவர் போலத் தெரிகிறது. மிகவும் உற்சாகத்துடன் விவாதங்களில் பங்குபற்றி வருகிறார்.

சூறாவளி - ஆரம்பத்தில் சிறிது சிரமப்பட்டாலும் தற்போது மிகவும் திறமையாக தமிழில் எழுதி வருகிறார். அவரது ஆக்கங்களின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மற்றவர்களைக் குறிப்பிடவில்லை என்பதன் பொருள் அவர்கள் திறம்படச் செய்யவில்லை என்பதல்ல, மாறாக அவர்களது ஆக்கங்களை நான் தவரவிட்டிருப்பேன் என்பதுதான் சரி.

மேலும் பல புது முகங்கள் தம்மை ஏற்கனவே பதிந்து கொண்டாலும், களத்தில் சற்றுப் பிந்தியே கலந்து கொண்டுள்ளதால் அவர்கள் எற்கனவே அறிமுகப் படுத்தப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை.

இக்காலப் பகுதியில் ஆர்வத்துடன் விவாதங்களில் பங்கு பற்றியவர்களைப் பார்த்தால்,
பின்வருவோர் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
நெடுக்கலபோவான், தமிழ்னெக்ஷ், நுனாவிலான், காட்டாறு, தூயவன், சபேசன் போன்றவர்கள்.
ஈ. வே. ராமசாமிப் பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற விவாத்தில் இவர்களின் பங்களிப்புக் குறிப்பிட்டுச் சொல்லும்படியானது. இதில் இரு பகுதியாக நின்று இவர்கள் வாதிட்ட விதமும், இணைக்கப்பட்ட தகவல்களும், இவர்களின் ஆழ்ந்த அறிவையும் பரந்த வாசிப்புத் திறணையும் காட்டுவதாகவே நான் நினைக்கிறேன். நான் அறிந்திராத பல புதிய தகவல்களைக் கண்டேன். மிகவும் பிரயோசனமாக இருந்தது.

இவ்வாரப் பகுதியில் வெளிவந்த செய்திகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில செய்திகளை கீழே தொகுத்திருக்கிறேன்.

சிறிலங்காப் பாரளுமன்றத்தில் இவ்வருடப் பாதீட்டுக்கான வாகெடுப்பில் தமிழ் கூட்டமைப்பு எம்பீக்களின் உறவினர்கள் கடத்தப்பட்டனர்.

புலிகளை 2008 இற்குள் அழிப்பதாக ராணுவத் தளபதி சூளுரை.

தமிழ்நாட்டில் புலிகளை வைத்து அரசியல் நடத்தும் கட்சிகள்.

இந்தியா, ரஷியா தலைமையில் இலங்கை விமானப் படைக்கு புதிய விமானங்களும். ராடர் உபகரணங்களும் வழங்கத் திட்டம்.

அநுர பண்டார நாயக்கா எதிர்கட்சி வரிசையில் அமர்வு.

இந்திய ராணுவத்தின் இலங்கையிலான பங்குபற்றுதல் குறித்து இந்தியாவில் ஆராய்வு.

தமிழ்நாட்டில் சில கடற்புலி உறிப்பினர்கள் கைது என்று ரோ புரளி.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் விமானக் குண்டு வீச்சில் காயமடைந்ததாக த நேசன் ஆங்கில இதழில் டி பி எச் ஜெயராஜ் புழுகல்.

டக்கிளசு தனது எதிர்காலம் பற்றிக் கனவு.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேசத்தின் கண்டனங்கள் இலங்கை அரசால் புறக்கணிப்பு.

இரு சென்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் அரசால் படுகொலை.

மன்னார், மற்றும் மணலாறு பகுதியினூடாக முன்னேற முற்படும் ராணுவத்தை வழிமறித்து புலிகள் மறிப்புத் தாக்குதல்.

இந்திய கிரிக்கட்டு அணி அவுஷ்திரேலியாவில் சுற்றுப் பயணம்.

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம்.


இறுதியாகக் குறைகள் பக்கத்தில்....

அநேகமான உறுப்பினர்களின் ஆக்கங்கள் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பதாக இருந்தாலும் ஒரு சிலர் அதை தீவிரத்துடன் எதிர்த்து எழுதி வருவது தெரிகிறது. குறிப்பிடும்படியாக, குறுக்கலபோவான் என்பவர் எந்த ஆக்கத்தை எடுத்துக் கொண்டாலும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகவே எழுதி வருவது கண்கூடு. இவ்வாரான செயற்பாடுகள் விவாதத்திற்கு உதவுவதைவிட பலர் விவாதத்தை விட்டு வெளியேற்வே வழி வகுக்கும். அல்லது அன்பர்கள் இவர் போன்றவர்களின் கருத்துக்களை தவிர்ப்பது மேல். நிர்வாகம் இதுபற்றி என்ன செய்ய விரும்புகிறது என்பது பற்றி அறிய ஆவல். இவர்கள் தமது கருத்துக்களால் விவாதத்தையே திசை திருப்புவதுடன் மற்றவர்களை சினம்படவும் வைக்கின்றனர்.

மற்றும்படி குறைகள் என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை.

இத்துடன் முடிக்கிறேன். குறைகளிருப்பின் தயவுடன் மன்னிக்கவும்.

நன்றிகள்.

அன்புடன்

ரகுநாதன்.

"ராஜகோபுரம் எங்கள் தலைவன்"


#29 suvy

suvy

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,560 posts
 • Gender:Male
 • Location:France

Posted 06 January 2008 - 09:19 PM

காலக் கண்ணாடி 31/12/2007 to 06/01/2008

இணைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. - இணையவன

Edited by இணையவன், 06 January 2008 - 10:25 PM.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

#30 இன்னிசை

இன்னிசை

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,081 posts
 • Gender:Female
 • Location:Australia

Posted 21 January 2008 - 03:37 AM

காலக் கண்ணாடி!!13/1/2008 தொடக்கம் 20/01/2008 வரை..Posted Image


அன்புள்ள அண்ணா!!

நான் இங்கு நலமே தங்களிற்கு சுகம் இல்லை என்று அறிந்தேன் மிகவும் வேதனையாக இருந்தது,மிகவிரைவில் குணமடைந்து யாழில் பவனி வர இறைவனை வேண்டி யாழ்களத்தில் நீங்கள் இல்லாத சமயம் என்ன நடந்தது என்பதனை இங்கே மடலாக வரைகிறேன். :)


புதிதாக இந்த வாரம் யாழில் பெரிசாக ஒருவரும் இணையவில்லை மெஷக், இசையருவி என்பவர்கள் யாழிலுள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களை வருக வருக என வரவேற்று கொண்டு..

வழமை போலவே யாழில கருத்துகளில் மாற்றங்களிள் சில கருத்துகள் வெட்டப்பட்டு இருக்கின்றன ஆனால் கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே இருக்கின்றன,ஒரு வேளை நீங்க திருந்தியபடியாவோ தெரியவில்லை... :lol:

அடுத்து அண்ணா 1000 மணித்தியாலம் வீணாக்கினேன் என்னை பாராட்ட வேண்டும் என்று மாப்பி அவர்கள் ஒற்றைகாலில நிற்கிறார் அவரையும் எங்கள் யாழ்கள உறவுகள் பாராட்டிய வண்ணமே இருக்கின்றார்கள் நீங்க நலம் பெற்று வந்தவுடன் இங்கே சென்று வாழ்த்திவிடுங்கோ..

http://www.yarl.com/...topic=33297&hl=

நாட்டில பிரச்சினை ஆரம்பித்துவிட்டது போல இருக்கு யாழில இருந்து வாற செய்திகளை வாசிக்க விளங்கி கொள்ளகூடியவாறு இருக்கிறது..நான்காம் கட்ட ஈழபோர் ஆரம்பம் என்று நாட்களை யாழ்களத்திள் குறுக்காலபோவோன் அண்ணா எண்ணி கொண்டிருக்கிறார் அவர் கணக்கில சரியான கெட்டிகாரன் என்று நினைக்கிறேன் மேலும் நாட்டில நடந்த செய்திகளை சொல்லுறேன் கேளுங்கோ..

மொனரலாகலை பஸ் தாக்குதல் தங்கட ஆக்களுக்கு ஏதாவது நடந்தோன இவங்கள் படுகிற பாடு இருக்கே. இதை விட மோசமா தமிழ் ஆக்களுக்கு நடந்தாலும் ஒரு கதையும் இல்லை.

http://www.yarl.com/...showtopic=33399

அதோட கிளிநொச்சி பாடசாலைக்கு குண்டு போட வந்த விமானம் மீது அண்ணாமார் தாக்குதல் நடத்தி அங்க இருந்த 790 பாடசாலை மாணவர்களையும் காப்பாற்றி போட்டினம். அண்ணாமார் இல்லாட்டி என்ன நடந்திருக்கும் என்டதை நினைக்கவே பயங்கரமா இருக்கு. :(

http://www.yarl.com/...showtopic=33462

பாடாசாலைக்கு குண்டு போடவந்ததை வைத்து ஐ.தே.க அரசியல் நடத்த பாக்குது இவங்களை என்ன செய்யிறது??

http://www.yarl.com/...showtopic=33517


1.தசநாயக படுகொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்கிறார் நடேசன்
2. மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கல்
3.கிளிநொச்சியில் சிறிலங்கா விமானம் குண்டு தாக்குதல். 7 பேர் காயம்
4.மனிதாபிமானப் போர் நடவடிக்கையை வடக்கில் முன்னெடுக்க மஹிந்த உறுதி (இதற்கு பெயர் தான் மனிதாபிமானமோ)
5.புத்தளப் பகுதி மக்களுக்கு 500 துப்பாக்கிகள் வழங்க மகிந்த உத்தரவு - (வழங்கினா மட்டும் போதுமே துப்பாக்கியை பிடிக்க தெரிய வேண்டுமே)

இப்படி கனக்க சொல்லிகொண்டே போகலாம்..


உலகநடப்பில பெரிசா ஒன்றும் இல்லை வழமை போலவே யாழில வாற மாதிரியே "சாக்குமூட்டையில் இளம்பெண்" இப்படியான செய்திகள் தான் இதை எல்லாம் உலக செய்தியாக போடீனம் எல்லாம் நேரம் தான் உலக நடப்பில பலபட்ட விசயங்கள் நடக்கிறது அவ்வாறான செய்திகளை இணைத்தா பலதரபட்ட விசயங்களை அறிந்துகொள்ளமுடியும் என்பது என்ட கருத்து அண்ணா உங்களுடையதும் அப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறேன் மேலும் உலகநடப்பில வந்த செய்திகளை சொல்லுறேன் கேளுங்கோ அண்ணா,அதற்கு முன்னாடி தை 1 தான் தமிழ்புத்தாண்டு என்று வசம்பண்ணா ஒரு செய்தியை இணைக்க அதற்குள்ள வழமைபோலவே சண்டை தான் அதுவும் ஒரே விசயத்தை சொல்லி சொல்லியே சண்டை பிடிக்கிறது பார்க்கிற எங்களிற்கு சினமா இருக்கு. சரி நான் இப்ப உலக நடப்பு செய்திகளை சுருக்கமா தாறன்..

1.ரூபாய் ஒரு லட்சத்துக்கு கார் ரெடி! *அறிமுகம் செய்தது டாடா - இது பிளாஸ்டிக் கார் என்டு எங்கட யாழ் கள ஆராய்ச்சியாளர் சொல்லினம் எனக்கு தெரியாது. நான் நினைக்கிறன் நமக்கு நடராசா தான் சரி என்டு :D

Posted Image

2.'புற்றீசல்கள்'-விஜய்காந்த், சரத்குமார் மீது ஜெ மறைமுக தாக்கு

3. ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை - தற்போது தடை விலக்கல்.

4. சோமாலிலாந்த்" - புதிய நாட்டுக்கு அமெரிக்கா அங்கீகாரம்?

5. மார்ட்டின் லூதர் தொடர்பில் ஹிலாரி கூறிய கருத்து இனவாதத்தை தூண்டுவதாக ஒபாமாவின் தரப்பு விமர்சனம்'

6. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான போட்டி மிக்சிக்கன் மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் ரொம்னி வெற்றி

இப்படி கனக்க நாடுகளை பற்றிய செய்திகள் இருக்கு..


இந்த முறையும் வழமைபோலவே யாழின் கருத்துபடம் பல கருத்துகளை சொல்லி செல்கிறது மூனாவின் ஓவியத்தால் மிகவும் நன்றாக இருக்கிறது. எல்லா கருத்துபடங்களுமே பல கருத்துகளை சொல்லி செல்கின்ற விதம் அருமை அண்ணா..

Posted Image


Posted Image

எங்கள் மண் பகுதியை சிநேகிதி அக்காவின் "வளரும் பயிர்கள் வாடாதிருக்க" என்ற உளவியல் சம்பந்தபட்ட பதிவு அலங்கரிக்கிறது பல விசயங்களை சொல்லி செல்கிறா ஆனா எனக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை ஏனென்றா உங்க தங்கைச்சி ஆச்சே எதற்கும் ஒருக்கா வந்து நீங்களும் இதை வாசித்து பாருங்கோ...

http://www.yarl.com/...showtopic=33348

வாழும் புலபகுதியில் "தமிழ் மக்கள் எல்லாரும் இந்த முறை வெளிநாடுகளிள் பொங்கல் கொண்டாடுறீங்களோ என்று" மாப்பி அவர்கள் கேட்டகேள்வி விளங்கவில்லை போல பலருக்கு ஏதோ வேற விசயங்களை பற்றி அங்கே கதைக்கீனம்,அண்ணா நான் வீட்டுக்குள்ள பொங்கி சாப்பிட்டுட்டு பிறகு வேலைக்கு போய் பொங்கலை கொண்டாடினான் நீங்க எப்படி??

http://www.yarl.com/...showtopic=33251

தொடர்ந்து அதே பகுதியில் வந்த தலைப்புகள்

1.சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி! - சாதி ஊரில இருக்கோ இல்லையோ நாங்க இங்க இருந்து இப்படியான தலைப்புகளால சாதியை வளர்க்கிற மாதிரி தெரியுது நீங்க என்ன நினைக்கிறீங்க..

2.வெண்புறா இன்னிசை நிகழ்வு - நேசன் அண்ணா தான் இந்த தலைப்பை தொடங்கி இருக்கிறார்

3. மனைவியின் மனதை கவர்வது எப்படி!!! - (பார்த்து வையுங்கோ அண்ணி வரேக்கை உங்களுக்கு உதவும் :wub: )

4.தமிழ் ஒலிபரப்பில் பாலுமகேந்திரா - அஜீவன் அண்னாவால் இந்த தலைப்பு தொடங்கப்பட்டிருக்கு

5. சிட்னி கோசிப் 36 & 37 கூட வந்திருக்கு. புத்து மாமா நல்லா தான் விடயங்களை அவதானிக்கிறார் போல இருக்கு

6. சாத்திரி ஐயாவின்ட ஓலை கொண்டுவந்துள்ளேன் ஐயா நகைச்சுவையுடன் கடிக்கிற மாதிரி இருக்கு. நல்லா செய்திருக்கிறார் அண்ணா


தமிழும் நயம் என்ற பகுதியில் சபேசன் அவர்களினால் "தமிழில் நாம் விடும் தவறுகள்" என்று ஒரு வித்தியாசமான பதிப்பு மிகவும் பயனுள்ளதும்,நானும் நீங்களும் அங்கே போய் தான் நாங்கள் விடுகிற பிழைகளை படிக்க வேண்டும் அண்ணா..

http://www.yarl.com/...showtopic=33372

கவிதை பூங்காட்டில் மலந்த மலர்கள் இனியவளின்..நகர்ந்து போன நாட்கள் ***காதலாய்..****
பகுதி 2. (நட்பு காதலாக மாறுது இங்கே அண்ணா :lol: ).


http://www.yarl.com/...m...st&p=374535

கலங்காதே கண்ணே என்று எங்களை கலங்க வைக்கிறார் கவீருபன்..

http://www.yarl.com/...m...st&p=375376

இதற்குள் பொன்னி தாத்தா "லொள்ளு கவிதை" எழுதுறார் (அது எங்கையோ சுட்டது தான் அண்ணா வழமையா அவர் செய்யிறது தானே)..

http://www.yarl.com/...m...st&p=374853

இவற்றுடன் கவிதை அந்தாதி மற்றும் விகடகவியின் தினசரி தூறல்கள் மூலம் கவிதை அந்தாதி வாசனை நிரம்பிய பூங்காவாக காட்சி தருகிறது..

கதை வாசிக்கிறது என்றா எனக்கு நல்ல விருப்பம் ஆனா கதை ஒன்றும் பெரிசா காணவில்லை இந்த முறை ஊருக்கு போனேன் - வாசுதேவன் என்ற தொடர்கதை நன்றாக இருக்கிறது. ஊருக்கு போகேக்கை எனக்கும் இப்படி தான் இருந்தது. கனக்க குறுக்கு பாதை எல்லாம் இல்லாம போச்சு. என்ட ஊரின்ட வடிவே கெட்ட மாதிரி இருந்தது அண்ணா எங்கட ஊரில நாங்க திரிய எங்களுக்கு இன்னொருவன் அனுமதி தரவேணுமாம் :(


http://www.yarl.com/...showtopic=33272

அதோட கண்மணி அக்காவின்ட அக்னி சிறகுகளும் நல்ல ஒரு கதை அண்ணா..

http://www.yarl.com/...showtopic=32389

தென்னங்கீற்றில் "உயிரம்புகள் திரைபடவிமர்சனத்தை" நெடுக்ஸ் தாத்தா அவர்கள் பதிந்திருந்தார்கள் விமர்சனத்தை வாசிக்கும் போது பார்க்கவேண்டும் போல இருக்கு அதுவும் எம்மவரின் படைப்புகளிற்கு நாங்கள் தானே ஊக்கம் அளிக்கவேண்டும், நீங்களும் விமர்சனத்தை உங்க போய் பாருங்கோ...

http://www.yarl.com/...showtopic=33272

வண்ணதிரையை வண்ணமாக்க பல பதிவுகள் அதில் தமிழ்வாணண் அண்ணாவின் பதிவான காதல்கடிதம் என்ற பதிவில் அவரின் கருத்துகளிள் இருந்து அவருடைய மனநிலை விளங்குகிறது நாம் ஒவ்வொருவரும் எம்மவர் படைப்புகளை இயன்றளவு கெளரவிக்க வேண்டும்

http://www.yarl.com/...showtopic=33356

மேலும் வண்ணதிரையில்..

1. ஒரே படத்தில் சத்யராஜ், த்ரிஷா, மாதவன்

http://www.yarl.com/...showtopic=33498

2. கருணாநிதி பக்கம் கடவுள்?

http://www.yarl.com/...showtopic=33378

3. ரஜினியின் 'குசேலர்'!

http://www.yarl.com/...showtopic=33499

4. பீமா

http://www.yarl.com/...showtopic=33497


சிரிப்போம் சிறப்போம் என்ற பகுதியில் போய் சிரிப்போம் என்று பார்த்தா ஆதி பாரம்பரிய விளையாட்டு என்று ஒரு காளையை வைத்து பயம் காட்டுகிறார் மேலும்.. ஜயோ.....என்ட கோமணம்....நான் கழற்றமாட்டேன் என்று நீங்க எழுதினது இன்னும் போய் கொண்டு இருக்கு அண்ணா பாவம் அந்த தாத்தா அண்ணா.

விளையாட்டுதிடல் இவ்வளவு நாளும் பரபரப்பா இருந்தது தற்போது கொஞ்டம் அமைதியாக உள்ளது அத்தோட ஷோன் பொலக் ஓய்வு பெற போகிறாறாம் அண்ணா.


[url="http://www.yarl.com/forum3/index.php?showtopic=33333"http://www.yarl.com/forum3/index.php?showtopic=33333%5b/url%5dஅதோட%20கிரிக்கெட்%20பற்றி%20இன்னுமொரு%20செய்தியும்%20இருக்கு%20பெர்த்%20டெஸ்டில்%20வெற்றி%20பெறுவதற்கு%20அவுஸ்திரேலிய%20அணிக்கு%20413%20ஓட்டங்கள்%20இலக்கு%20%5burl="http://www.yarl.com/forum3/index.php?showtopic=33530"]http://www.yarl.com/forum3/index.php?showtopic=33530[/url]


இனிய பொழுதை வழமை போலவே இனியவளின் பொன்மொழி,இனியவளின் பாடல்கள் மற்றும் அரவிந்தனின் நியுசிலாந்து பயணம் என்பன இனிமை ஆக்கின்றன..


அறிவியற்களம்,சிந்தனை கள பக்கம் நான் போறதில்லை தானே அண்ணா ஆனாலும் இந்த முறை அங்க பெரிசா ஒன்றையும் காணவில்லை அண்ணா!!

சமையல் கட்டு பக்கம் வந்த பனங்காய் என்பவர் வந்து "ஈழத்து கெபாப் கொத்து" என்று ஒரு சமையலை போட்டிருக்கிறார் வாசிக்க ஆசையா இருக்கு சாப்பிட பயமா இருக்கு அவரின்ட செய்முறையை பார்க்க..எதுக்கும் நீங்க ஒருக்கா செய்து பார்த்திட்டு சொல்லுங்கோ எப்படி இருந்தது என்டு


http://www.yarl.com/...showtopic=33379

வெஜிடபிள் உப்புமா எப்படி செய்யிறது என்டு கிருபாகரன் அண்ணா போட்டிருக்கிறார் செய்து பார்த்திட்டு சொல்லுங்கோ சரியா..

http://www.yarl.com/...showtopic=33502

வாழியவே வாழியவே பகுதியில "தைப்பொங்கல் வாழ்த்துகள்" என்று உங்களால் பதியபட்ட கல கல கொண்டாட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா ..

அத்துடன் ஒரு துயரமான சம்பவம் ஒன்று எமது கள உறவு வெற்றிசெல்வன் அண்ணாவின் தம்பியான கப்டன் தமிழ்க்குமரன் என்றழைக்கப்படும் திருமலை மாவட்டத்தை சேர்ந்த கனகசூரியன் ஜெயகாந்தன் அவர்களும் அவருடன் கப்டன் தவமைந்தன் என்றழைக்கப்படும், திருமலை மாவட்டத்தை சேர்ந்த செல்வராசா ராஜேந்திரன், கப்டன் பானுகஜன் என்றழைக்கப்படும், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த சோமசுந்தரம் ஜெயம் ஆகிய போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டனர் என்று வெண்ணிலா அக்கா இந்த செய்தியை தந்துள்ளா வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்... :(

யாழ்நாற்சந்தி பக்கம் போனா அங்கே முந்தி இருந்த கலகலப்பு இல்லை மிகவும் அமைதியாக இருக்கு அத்துடன் காணாமல்போகின்றோம் பகுதியில் வெண்ணிலா அக்கா தான் இந்தியா செல்வதால் வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளா அண்ணா..

என்னை மிகவும் கவர்ந்த பகுதியான யாழ் ஆடுகளம் தற்போது சோர்விழந்த நிலையில் உள்ளது அங்கு ஆடும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது தான் காரணம். நுணாவிலன் அண்ணா சரியான பிசி போல இருக்கு கேள்வி போடுறார் இல்லை..


இவ்வளவு நேரமும் இந்த கடிதத்தை பொறுமையா வாசிச்சதுக்கு உங்களுக்கு நன்றி நீங்க வெகுவிரைவில் குணமடைந்து களத்திற்கு வர இறைவனை (யாழ் கள இறைவனை அல்ல) பிரார்த்திக்கிறேன்.. :)

இப்படிக்கு,
அன்புடன் தங்கா.


எனக்கு இந்த காலக்கண்ணாடி செய்ய வாய்ப்பளித்தவர்களுக்கும் இந்த காலக்கண்ணாடியை செய்ய பொறுமையுடன் உதவி செய்த எனது ஜ** அண்ணாவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அத்துடன் யாழ்கள வாசகர்களே நான் எழுதியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் சிறுபிள்ளையான என்னை பொறுத்தருள்வீர்கள் என நம்புகிறேன். அத்துடன் யாருடைய ஆக்கங்களையாவது தவற விட்டு இருந்தால் என்னை மன்னியுங்கள்.. :)

Edited by இன்னிசை, 22 January 2008 - 04:53 AM.

இன்னிசை

#31 putthan

putthan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,590 posts
 • Gender:Male
 • Location:sydney
 • Interests:poltics,religion,gardening

Posted 03 February 2008 - 08:12 AM

காலக் கண்ணாடி (கொசிப் கண்ணாடி)

26-01- 2008 முதல் 03-02- 2008..

நுனிபுல் மெய்யும் புத்தனை யாழ்காலகண்ணாடி எழுதும்படி கேட்டுள்ளார்கள் இயன்றளவு முயற்சிக்கிறேன் வழமையாக யாழிற்கு வந்தனா,மெய்ந்தனா,இரண்டு பேருக்கு வாழ்த்தினேனா,இரண்டு லொள்ளு கருத்து எழுதினேனா என்று இருப்பவன் நான் ஆனால் இம்முறை அரிச்சுவடியில் இருந்து யாழ் ஆடுகளம் வரை பொறுமையாக பார்க்கும் படி செய்துவிட்டார்கள் நன்றிகள்.. :(

புதிதாக யாழில் இணைந்த தமிழ் மூதாட்டிமார் கண்ணகி,ஒளைவையார்(பெயரை வைத்து பெண்பால் என்று நம்புகிறோம்) மற்றும் நிழலி ,சம்பு ஆகியோரையும் வரவேற்று கொள்கிறோம்,தொடர்ந்து அவர்கள் நல்ல ஆக்கங்களை தர வாழ்த்துக்கள் பழைய ஆட்கள் தான் மறுஅவதாரம் எடுத்திருந்தாலும் வாழ்த்துக்கள்.

தணிக்கை அதிகாரிகள் தங்கள் சேவையை திறம்பட நடத்தி கருத்து சுகந்திரத்தை கொடிகட்டி பறக்கவிட்டனர் அதில் இணையவனின் பங்கு அளப்பரியது.(கருத்து சுகந்திரமாவது கத்தரிக்காய் ஆவது).

யாழ் உறவோசை பகுதியில் மாப்பி "யாழில் இந்த முறை யாராவது" காதலர் தினம் கொண்டாடுறீங்களோ என்ற கேள்வி கேட்டிருந்தார் இந்த கேள்வி கேட்டதே பிழை காரணம் காதலை உலகதிற்கு முதல் அறிமுகபடுத்திய தமிழ் பரம்பரையில் வந்த நீங்கள் இப்படியான ஒரு கேள்வியை கேட்டது மிகவும் வேதனைகுரியது. ஆதாம்,ஏவாள் இவர்கள் யார்??தமிழர்கள் இதற்கு பல ஆதாரங்கள் உண்டு வெகுவிரைவில் யாழில்.

http://www.yarl.com/...m...st&p=379249

ஊர்புதினத்தில் பல புதினங்கள் பலரால் இணைக்கபட்டன அவற்றை படிக்கும் பொழுது எனது வாழ்கையின் காலகண்ணாடி பின் பக்கமாக நகர்ந்தன,

தேசியத் தலைவருக்கு வைக்கப்படும் குறி - பின்னணியும் உண்மை நிலையும்

79 - 80 ஆண்டுகளிள் என்று நினைக்கிறேன் பருத்திதுறையில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவர் ஒரு உயரம் குறைந்தவர் தோளுக்கு மேல் துப்பாக்கியை வைத்து சுழன்று,சுழன்று சுட்டார் அவர் பிரபாகரனாக தான் இருக்க வேண்டும் என்று ஊரில சனம் எல்லாம் கதைத்தது எனக்கு என்னும் நினைப்பு இருக்கிறது.

http://www.yarl.com/...showtopic=34119

மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்?: மாவை சேனாதிராஜா விளக்கம்

இப்படியான செய்திகளை கூட்டணிகாரர் மாவட்ட சபைகளிற்குறிய தேர்தலிலும் விட்டவைகள்.

http://www.yarl.com/...showtopic=34156

தம்புள்ளவில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி- 71 பேர் படுகாயம்

துன்பகரமான செய்தி மனித உயிர்கள் விலை மதிபற்றனவாக மாறிவிட்டன தென்பகுதியில் பஸ்களிள் தான் குண்டுகள் வெடிக்கபடுகிறது ஆனால் வடபகுதியில் விமானங்களில் சென்று தேவாலயங்கள்,ஆலயங்கள்,பாடசாலை
களில் குண்டுகளை கொட்டி உயிர்களை பறித்தனர் அப்பொழுதும்,இப்பொழுதும்.

http://www.yarl.com/...m...st&p=379021


பேசி சிங்களப் பேரினவாதிகள் எதனையுமே தந்த வரலாறில்லை.....

தேசிய தலைவருக்கு 30 வருசதிற்க் தெரிந்த விசயம் எமக்கு இப்பொழுது தான் அரசியல் விமர்சன கட்டுரை எழுத வசதியாக இருக்கிறது

http://www.yarl.com/...showtopic=34153

படை முகாம்கள் உசார் நிலையில்.

75 - 78 ஆண்டளவிள் பொலிஸ் நிலையை உசார் நிலையில் உள்ளன என்று பத்திரிகையில் வந்தன படைமுகாம்கள் உசார் நிலையில் உள்ளன என்று தற்போது வருகின்றன போராட்டதிற்கு கிடைத்த வெற்றி.

இப்படியும் பிபிசிக்கு சொல்லுறாங்க.

பி.பி.சி யில் ஆனந்தி அக்கா இருக்கும் போது நல்ல நியூஸ் சொன்னவா இப்ப உளவாளிகள் இருக்கீனம் அப்ப அவை அப்படியான நியூஸ் தானே சொல்லுவீனம் இது ஒரு பெரிய நியூஸே.."பி.பி,சி" தமிழோசை என்று சொன்னா "உளவாளி" நியூஸ் என்று சின்ன பிள்ளையே சொல்லும்.

http://www.yarl.com/...t...t=0&start=0

புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து தமிழக மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்: தொல்.திருமாவளவன்..

அப்படி செய்ததிற்கு நன்றி வைகோவும் உப்படி தான் பிரபல்யமா வந்தவர் இவரும் அப்படி தானோ தெரியவில்லை என்றாலும் தாங்கள் வாய் சொல்லில் வீரர் தான் அண்மையில் நடந்த ஒரு மாநாட்டில் உண்மையை தெரிவித்திருந்தார் அதற்காக அவரை நாம் பாரட்ட தான் வேண்டும்.

http://www.yarl.com/...showtopic=34147

கண்ணிவெடியால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்தில்லை: கடலோர காவல்படை

இந்த அதிகாரிமாருக்கு ஒரு ஆபத்தும் இல்லை தானே அவர்கள் ஏயார்கன்டிசன் ரூமில இருந்து அறிக்கை விட தான் சரி ஆனால் அப்பாவி தினம் உழைக்கும் மீனவர்களிற்கு யார் பாதுகாப்பு கொடுக்க போகின்றார்கள்.

http://www.yarl.com/...showtopic=34108

கிரிக்‌கெட் வீரர் முத்தையா முரளிதரன் மீது முட்டையை வீசியுள்ளனர் ஹோபர்ட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல்

முட்டை எறிந்ததை வன்மையாக கண்டிக்கிறோம் ஜனநாயக விரோத செயல் ஏன் கல் எறியவில்லை

http://www.yarl.com/...mp;#entry379139

மேலும் பல செய்திகளை பலர் இணைத்துள்ளனர் 25 வருசமா நானும் செய்தி வாசிக்கிறேன் கருபொருள் ஒன்றாக இருக்கும் நேரம் காலம் வேறுபடுகின்றன.

கருத்து எண்ணிக்கை கூட்டுவதிற்காக செய்தியை கொப்பி பேஸ்ட் பண்ணாமல் பேஸ்ட் பண்ணுபவர்களும் அதனை வாசித்து பேஸ்ட் பண்ணிணா அவர்களிற்கும் நல்லது எங்களிற்கும் நல்லது என்பது அடியேனின் வேண்டுதல்.

உலக நடப்பிற்கு வந்தா நம்ம நாட்டில நடக்கிற சமாச்சாரத்தை விட உலகத்தில பெரிசா என்ன நடந்திட்டுது.


இந்திய கப்பற்படை கப்பல் ஜலஸ்வா விபத்து : 5 மாலுமிகள் பலி

சந்தோசமா செய்தியை பார்தேன் நம்மன்ட சிறிலங்காவின்ட கன்னி வெடியில கப்பல் அகபற்றுவிட்டதோ என்று.

http://www.yarl.com/...m...st&p=378996

தமிழகத்தில் புலிகளை ஆதரிக்கத் தடை

உலகமே தடை செய்த போதும் வெற்றி நடை போடுவது தான் நம் போராட்டம்..

http://www.yarl.com/...showtopic=34085

அடுத்த பத்து நாட்களில் கொசோவோ தனி நாடாகப் பிரகடனம்?

அது சாத்தியபடும் காரணம் அது ஜரோப்ப கண்டத்தில் இருப்பதால் ஆனால் நாம இருப்பதோ ஆசியா கண்டத்தில் அதுவும் இந்தியாவிற்கு அருகாமையில் சுகந்திரத்தை பற்றி திரைபடம் தான் தயாரிக்க முடியும் இவர்களாள் ஆனால் சுகந்திர தனி நாடு ஒன்றை உருவாக்கி அங்கீகரிக்க முடியாது இவர்களாள்..

http://www.yarl.com/...showtopic=34109

ஈரானை‌த் தா‌க்க‌த் தய‌ங்க மா‌ட்டோம‌், ஜா‌ர்‌ஜ் பு‌‌ஷ்

யாரை தான் தாக்க இவங்க தயங்கினவங்க..

http://www.yarl.com/...showtopic=34022

தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளையை உதறிய ஸ்ரீகலா

இப்படியான செய்தியை சுண்டல் தான் இணைத்திருப்பார் என்று பார்த்தால் இணைத்தது வேற யாரோ..

http://www.yarl.com/...showtopic=34011

கருத்துபடங்கள் எல்லாம் நல்லா இருக்கின்றன அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆட்களிற்கு வாழ்த்துக்கள் காலதிற்கேற்ற படங்கள்...

Posted Image


அத்துடன் கலைஞனின் சம்பாஷனை படங்கள் வித்தியாசமான படைப்பு தற்காலத்தின் பிரதிபலிப்பு வாழ்த்துக்கள்..

http://www.yarl.com/...m...st&p=377881


வாழும் புல பகுதிக்கு போனா கந்தப்பு உணர்ச்சி வசபட்டு " அவுச்திரெலியாவில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியினரும் மானங்கெட்ட சூடு சுரணை அற்ற தமிழர்களும்" என்ற பதிவை(சத்தியமா இது கொப்பி பேஸ்ட் இல்லை) பதிவு செய்திருந்தார்...

http://www.yarl.com/...showtopic=34089


அதே பகுதியில் ஜம்மு பேபியால் பதிவு செய்யபட்டிருந்தது "அவுஸ்ரேலிய டமிழ்ஸ் அறிவது!!" என்ற ஒரு பதிவு..

நான் சிறிலங்காவில இருந்து தானே வந்தனாங்க என்னென்று கறுத்தபட்டி சிட்னியில அணியிறது சிட்னி டமிழ்சிற்கு எவ்வளவு சிங்கள பிரண்ட்ஸ் இருக்கீனம் அவை எல்லாம் கண்டிட்டா என்ன நினைப்பீனம் அவைகள் கண்டு நாங்கள் சிறிலங்காவிற்கு போகக்க விமான நிலையத்தில வைத்து பிடித்தா யார் பதில் சொல்லுறது சோ நான் அணிய மாட்டேன் ஆனா டமிழ்ஸ் நீங்க யாராவது அணிந்து கொண்டு போனா நான் சப்போர்ட் தாரேன் "கறுப்பு பட்டி" வேண்டும் என்றா வாங்கி தாறேன்.

http://www.yarl.com/...showtopic=34053

கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா தமிழ்ஸ் அறிவது!, சர்வதேச துக்கதினம்!

அதே பகுதியில் மாப்பி அவர்களினாள் இந்த பதிவு பதியபட்டது "சிறிலங்கா சுகந்திர தினத்தை" நாங்கள் துக்க தினாமாக அனுஷ்டிப்போம் இந்திய சுகந்திர தினத்தை கொண்டாடுவோம்..

http://www.yarl.com/...showtopic=34061

மேலும் மாப்பி அவர்களினால் இன்னொரு பதிவு பதியபட்டிருந்தது அது தான் சாமியோவ், நாம சபரிமலைக்கு போறது நல்லதோ? சாமியோ சரணம் ஐயப்பா!, என்று மாப்பி வாக்கு கேட்டவர்...

எனகொரு சந்தேகம் மாப்பி முற்பிறப்பில் தேர்தல் வேட்பாளராக இருந்தவரோ தெரியவில்லை..

http://www.yarl.com/...showtopic=33999

பொங்கு தமிழ் பகுதிக்கு நகர்ந்தால் "இளங்கோ" அவர்களினாள் இணைக்கபட்ட எமக்கான சினிமாவைக் கண்டடைதல்: 'கல்லூரியின்" அழகியலை முன்வைத்து சில அவதானங்கள் - 1 என்று -பரணி கிருஸ்ணரஜனி- அவர்கள் எழுதிய ஆக்கத்தினை தந்திருந்தார்..

பரணி கிருஸ்ணரஜனி இவர் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் விடுதலை கட்டுரை தொகுதியை விவரித்து விடுதலையின் விரிதளங்கள் என்று ஒரு புத்தகம் வெளியிட உள்ளார் என்று நினைக்கிறேன்..

http://www.yarl.com/...m...st&p=379072

அதே பகுதியில்

சபேசன் அவர்களாள் "ஒரு மொழியின் இறப்பு" என்ற ஒரு பதிவு பதியபட்டிருந்தது

http://www.yarl.com/...t...t=0&start=0

"தமிழும் நயமும் பகுதிக்கு சென்றால்" "கேக்" இதற்கு சரியான தமிழ்சொல் என்ன?
(நாளைக்கு பரீட்ச்சை உடனே சொல்லுங்கோ) என்று நாத்திகன் கேட்டிருந்தார் எனக்கு உடனே தோன்றியது நாத்திகனிற்கு எது தமிழ் சொல் என்று..

http://www.yarl.com/...t...t=0&start=0உறவாடும் ஊடகதிற்கு வந்து பார்த்தா சாத்திரி "அம்மா தாயே" என்று கொண்டிருக்க நான் நினைத்து போட்டேன் தொழிலை மனுஷன் மாற்றிட்டாக்கும் என்று,ஆனா சாத்திரி நல்ல முயற்சி ஒன்றை தான் செய்யிறார் வாழ்த்துக்கள்.

http://www.yarl.com/...mp;#entry379190

கவிதை பக்கம் போய் பார்போம் என்று போனா அங்கே வழமையை விட கவிதைகள் குறைந்து இருக்கின்றன அந்த பக்கம் யாழ்கள கவிஞர்கள் போறது குறைந்திட்டோ இப்படியே போனா நான் பிறகு அதில கவிதை எழுதிபோடுவேன் அது நடக்க தான் வேண்டுமா என்று நீங்களே யோசியுங்கோ..இந்த முறை பதியபட்ட கவிதைகள் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொன்று நல்லதாக இருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

"ஓ ஓ என் பழையவளே" என்று உந்த சாத்திரி மனுஷன் கவிதை எழுதி எந்த பழையவளே நினைவுபடுத்து போட்டார்..

http://www.yarl.com/...showtopic=33878

அதே சாத்திரி பிறகு "ஒரு நண்பனின்உண்மை கதையிது" என்று பீலிங்கா ஒரு கவிதையை தந்து போட்டு போயிருக்கிறார் யாழ்வாசலில முனியம்மா வந்தவுடனே உந்த கவிதையை பதிந்த மாதிரி இருக்கு..

http://www.yarl.com/...showtopic=33934

"இனியது கேட்கின் எழில் நீர்க்கரையே - வாசுதேவன்." பதிந்த கவிதை எனக்க்கு உப்படியான கவிதை விளங்குறது கஷ்டம் பாருங்கோ என்றாலும் எல்லாரும் நல்லா இருக்கு என்று சொல்லுபடியா நானும் அதையே சொல்லுறேன்..

http://www.yarl.com/...showtopic=34125

ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன்-என்று பொயட் அவர்களினால் இணைக்கபட்ட கவிதை அதுவும் அதையே மாதிரி எனக்கு விளங்கவில்லை என்றாலும் கவிதை சூப்பர்..

http://www.yarl.com/...showtopic=34080

அடுத்து விகடகவி தம்பியின்ட தூறள்கள் எல்லாம் நல்லா இருக்கின்றன..தம்பி கவனமப்பு ஆகலும் தூறளிள நனைந்து பிறகு எங்களின்ட மாப்பிற்கு நடந்த மாதிரி தான் ஏதாச்சும் வந்திட்டு என்றாலும்..

http://www.yarl.com/...t...40&start=40

எங்கே ஆளை உந்த பகுதியில காணவில்லை என்று பார்த்தனான் அங்கையும் நிற்கிறார்...வேற யார் மாப்பி தான் காதலர் தினம் 2008: கவியரங்கம் - "காதலே வா!!", யாழ் காதலர்தினம்! என்று கொண்டு ம்ம் அதில வந்துள்ள கவிதையும் நல்லா இருக்கு ஆனா ஒருத்தரும் புதுசா காதல் கவிதை எழுதவில்லை ஏன் ஒருத்தரும் எழுதாட்டி அதிலையும் பிறகு நான் எழுதிடுவேன் பிறகு நீங்க தான் பாவம்.. :o

http://www.yarl.com/...showtopic=34076

அடுத்து "காவல்துறை" என்பவர் பல காதல் கவிதைகளை சுட்டு போட்டிருக்கிறார் சுட்டு போடுறதில தனிசுகம் தான் என்றாலும் சுட்ட கவிதை எல்லாம் சுட சுட..

"கதை கதையாம்" பகுதிக்கு போறது எனக்கு நல்ல விருப்பம் சின்னதில இருந்து கதை விடுறது என்றா நேக்கு கொள்ளை பிரியம் பாருங்கோ,உங்கையும் பெரியளவில் ஒரு கதைகளும் இல்லை சில கதைகள் மட்டுமே இருந்தன எல்லா கதைகளும் நன்றாக இருந்தன அதில்..

காவலூர் கண்மணி "மன்னவா மாலை கொடு" என்ற கதை நல்லா இருந்தது-"மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா"

http://www.yarl.com/...showtopic=33988

அடுத்து சின்னகுட்டியின் "ரயிலில் அந்த கோணர் சீட் பிடிக்கோணும்" என்ற கதை இனிமையான பயணம் நீங்களும் பயணத்தில இணைந்து கொள்ளுங்கோ..

http://www.yarl.com/...showtopic=34122

அடுத்து உந்த சாத்திரி "இன்னும் ஓர் சிறியமுயற்சி" என்று பெரிய முயற்சியில் இறங்கிறார் அவருக்கு என்ட வாழ்த்துக்கள்..

http://www.yarl.com/...mp;#entry379130

அடுத்து "தென்னங் கீற்று" பகுதிக்கு சென்றால் அங்கே அஜீவனால் "சுவிஸில் கனேடியன்" திரையரங்கில்..பதியபட்டிருந்த
து..ஆனால் பனம் கீற்று சத்தம் அங்கே கேட்கிறது..

http://www.yarl.com/...showtopic=34133


வண்ணதிரை பக்கம் போகவில்லை ஏனென்றா "தமிழ் படங்களை புறகணிக்கிறேன்" ஏனேன்றா அவ்வளதிற்கு தேசிய ஆதரவாளன்..

விளையாட்டு திடலிற்கு போனா இன்றைக்கு என்று பார்த்து முத்தையா முரளிதரனுக்கு முட்டை எறிந்து போட்டாங்க..

http://www.yarl.com/...mp;#entry379267

அத்துடன் அவுஸ்ரெலிய அணி பலத்த வெற்றியை 20 ஓவர் போட்டியின் போது பெற்று கொண்டது ஒரு கவலை கில்கிற்ஸ் ஒய்வு பெறுவது தான்..

http://www.yarl.com/...showtopic=34102

இனிய பொழுதிற்கு போய் இனிதா இருப்போம் என்று பார்த்தா அங்கையும் நம்ம மாப்பி வாக்கு கேட்கிறார் "காதலர் தினம் 2008: இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? கெட்டதா?? அட எதுக்கு தான் வாக்கு கேட்பது என்று இல்லையே..போற போக்கை பார்த்தா நீங்க கேட்பீங்க "முதலிரவிற்கு ஆணும் பெண்ணும் வேண்டுமா என்று... :D

http://www.yarl.com/...t...t=0&start=0மீண்டும் அதே பகுதியில் எங்களின்ட மாப்பி "உங்கள் பிரச்சினைகள் இங்கே தீர்த்து வைக்கப்படும்!!" என்று பாபா ஸ்டைலில் (மதாவதிகளின் ஸ்டைலில்) தலையங்கம் இட்டிருந்தார் எனகொரு பிரச்சினை எப்படி சின்ன...செட் பண்ணுறது.. :)

http://www.yarl.com/...t...t=0&start=0

அதே பகுதியில் நெடுக்ஸ் அவர்கள் எனக்கு ஒரு சந்தேகம்.. தீர்ப்பீர்களா..??! என்று கேட்டிருந்தார்...உது தெரியாதோ ஆம்பிளைகள் தங்களது ஜம்புலன்களையும் தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்பதிற்காக தான்..

http://www.yarl.com/...t...t=0&start=0

"அறிவியற்கள" பக்கம் நான் தலை வைத்து படுக்கிறதில்லை அதால அந்த கண்ணாடி எனக்கு தெரியவில்லை..

"மெய்யென்படும்" பகுதிக்கு மனிசியுடன் கொழுவல் என்றால் போய் வாசிப்பதுண்டு ஆனா பிரயோசனாம எந்த தகவல்களும் அங்கே கிடைப்பதாக தெரியவில்லை ஆகவே நீங்களும் அங்கே போக வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்..

"சமுக சாளரம் " பக்கம் போனா நம்ம மாப்பி மறுபடியும் "எங்களுக்கு காதல் ஏன் ஏற்படுகின்றது என்று உங்கள் யாருக்காவது தெரியுமா?, யாழ் காதலர்தினம்!" என்று வாக்கெடுப்பு நடத்துகிறார்..போற போக்கை பார்த்தா நானே மாப்பிக்கு நானே ஒரு பொம்பிளை பெயரில வந்து காதல் கடிதம் எழுதலாம் என்று நினைக்கிறேன்...சீடனை பற்றி பயப்பிட தேவையில்லை போல இருக்கு...அது தான் சீடனின்ட தங்கா நல்லா கவனித்து கொள்ளுறா போல இருக்கு நான் பயப்பிட தேவையில்லை..யாரும் ஒருத்தருக்காவது உங்களின்ட சீடன் பயப்பிடுறான் என்று சந்தோசம் பாருங்கோ.. :D

http://www.yarl.com/...mp;#entry379250

அடுத்து சமையல் பக்கம் வந்தா உந்த தூயா பிள்ளை தான் அதுகுள்ள மிணகடுறது இப்ப அந்த பிள்ளைய காணவே இல்லை நுணாவிலன் தான் இப்ப பார்ட் டைம்மா அங்கே வேலை செய்யிறார் என்று நினைக்கிறேன் அவர் "சிக்கன் கறி" என்று அங்கால யாரோ செய்ததை எடுத்து கொண்டு வந்திருக்கிறார்..எடுத்து கொண்டு வந்த "சிக்கன் கறி" நல்லா தான் இருக்கு..

http://www.yarl.com/...mp;#entry377990

அடுத்து "நலமோடு வாழ" ஏதாவது ஜடியா சொல்லி இருப்பீனம் என்று பார்த்தா அங்க "நுணாவிலன்" நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் என்று தலைப்பை போட்டிருக்கிறார் நான் உள்ளுகுள்ள போகவில்லை பிறகு மனிசி பார்த்துவிட்டா குணமாக நகை வாங்கி தர சொல்லி கேட்டு கொண்டிருக்கும் ஆகவே நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை..

http://www.yarl.com/...mp;#entry378244

இறுதியாக யாழ் ஆடுகளதிற்கு ஒரு நாளும் இல்லாம இன்றைக்கு வந்தனான் ஆடுகளத்திள நாங்க ஆடாத ஆட்டமா அங்கேயும் மாப்பி நிற்கிறதை பார்த்து போட்டு நான் ஓடி வந்துட்டேன் ஏனேன்றா மாப்பி கல்யாணம் கட்டாத கான்சம் போய் என்பதால்.. :D

http://www.yarl.com/...t...20&start=20

இறுதியாக இந்த கிழமை யாழ்கள ஒட்டுமொத்தத்தையும் பார்க்கும் போது இதன் காதல் நாயகன் மாப்பி என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது எனவே அவருக்கு இந்த ஆண்டிண் "காதல் இளவரசன்" என்ற பட்டத்தை அடியேன் பரிந்துரைக்கிறேன் யாராவது அதை ஆமோதிப்பீர்களா??அதாவது அவருக்கு தனிமடலில்..... :D

இறுதியாக யாழில் தற்போது பல சுய ஆக்கங்கள் வருவது மகிழ்ச்சி வெட்டி ஒட்டுபவர்கள் இந்த செய்தி இணைப்பதில் ஏதாவது பிரயோசனம் இருக்கா என்று நீங்களே செய்தியை வாசித்து விட்டு ஒட்டினீங்கள் என்றா நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்,அத்துடன் செய்திகளை ஒட்டுறது சரி கவிதை மற்றும் கதைகளை கொப்பி பேஸ்ட் பண்ணுவதை இயன்றளவு தவிர்த்தா நல்லது என்று நினைக்கிறேன் பிறகு கோவித்து போடாதையுங்கோ.இன்னொரு முக்கிய விசயம் பிந்திய செய்திகளை இணைக்க வேண்டாம் கிரிகேட் முடிந்து ஒரு கிழமையால "இந்த கிரிகேட் போட்டியின் போர்கு சச்சின் விளையாட மாட்டார் என்ற" செய்தியும் வருகிறது ஆகவே இதில் கவனமெடுத்து கொண்டா நல்லது.. :D

வழமை போலவே இந்த கிழமையும் யாழில சுறுசுறுப்பான உறுப்பினர்கள் என்று பார்த்தா செய்திகளுடன் "கறுப்பி"

மற்ற ஆட்களும் சுறுசுறுப்பாக பல ஆக்கங்களை தந்திருந்தாலும் என் பார்வையில கடந்த கிழமை அசத்தல் மன்னன் என்று சொல்ல முடியாது அசத்தல் கோஷ்டி மாப்பியும் அவரின்ட சீடனும் தான் அவைக்கு எதிராக நெடுக்ஸ் சபாஷ் சரியான போட்டி என்றே சொல்லலாம் இவர்களின் கூட்டணியை நான் நன்கு ரசித்தேன் மற்ற உறவுகளும் ஒவ்வொரு விதத்தில் உற்சாகமான கருத்துகளை தந்து கொண்டிருந்தார்கள் .. :D


உவ்வளவும் எழுதி போட்டு ஒருத்தர் சிட்னியில இருந்து வருவார் அவர் தான் அந்த சிட்னி கோசிப் எழுதுபவர் நல்ல நல்ல சிட்னி கருத்துகளை யாழில லொள்ளா தாறவர் அவரை பற்றியும் சொல்ல தானே வேண்டும் மனிசன் சில நேரத்தில நல்லதா சொல்லும் சில நேரத்தில விசரில கதைக்கும் அவர் தான் அரசமரத்தில தியானித்து இந்தியா உபகண்டம் பூராக தனது கொள்கையை பரப்பிய புத்தனின் பேரில் வரும் சிட்னியின் லொள்ளு புத்தன். :D

அப்ப நான் லொள்ளு பண்ணட்டே..
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன் http://putthan.blogspot.com.au http://upload.wikime...rn_Province.svg

#32 கலைஞன்

கலைஞன்

  உங்களில் ஒருவன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,303 posts
 • Gender:Male

Posted 10 February 2008 - 02:51 AM

யாழ் காலக்கண்ணாடி
03 - 02 - 2008 தொடக்கம் 10 - 02 - 2008 வரை
காதல் கண்ணாடி!திங்கட்கிழமை

அஜீவன்:

ஆம் வந்தேன்
செய்திகளை பார்வையிட்டேன்.
கனேடியன் திரைப்பட திரையிடல் குறித்து ஒரு தகவலையும்
விரைவில் வரவிருக்கும் இணைய தளத்தின் செய்திகள் குறித்து
என் இலங்கை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது
அவர்கள் என்னோடு பரிமாறிக் கொண்ட
மன்னார் கடலின் மோதல் செய்தியை இணைத்தேன்.

கந்தப்பு:

எனக்கு கொஞ்சம் நேரமில்லாமல் இருக்கிறது. பெரிதாக இம்முறை உதவி செய்ய முடியாமல் இருக்கிறது.

சின்னக்குட்டி:

யாழில் எல்லா தலைப்பு வாசிக்கவில்லை என்பதால் என்னத்தை பற்றி கருத்து சொல்ல கேட்கிறீர்கள் என்று விளங்கவில்லை மன்னிக்கவும் சிரமம் கொடுப்பதற்கு ...என்னத்தை பற்றி கருத்து சொல்ல வேண்டும் என்று சொன்னீர்கள் எண்டால் அதை பார்த்துவிட்டு கருத்து சொல்லுகிறேன்.

செவ்வந்தி:

கடந்த திங்கட்கிழமை செய்திகள் வழமைபோலவே இருந்தன, பொழுதுபோக்கு அம்சங்கள் காதலர் தினத்திற்கு அப்பவே களைகட்டியிருந்தது என நினைக்கிறேன். மொத்தத்தில் எல்லாமே நன்றாக இருந்தது.

இறைவன்:

இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினம். ஒரு நாட்டின் சுதந்திரதினத்தைக் கொண்டாட விடுமாறு இன்னொரு நாடு கோரிக்கைவிடுவது புதுமையானது. இலங்கையில் சுதந்திர தினத்தை அண்டியதாக நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு கண்டனம் என்ற போர்வையில் அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கை அன்றைய பக்கத்தின் முக்கிய செய்தி.

செவ்வாய்க்கிழமை

சஜீவன்:

நேற்று எஙகள் வீட்டில் ஒரு விசேடம் என்றபடியால் நான் கன நேரம் யாழில் நேரத்தை செலவிடவில்லை.ஆனாலும் நேற்று நான் பாத்தவற்றில் டோரவை கானவில்லை, என்ற செய்தியை சகல ஊடகங்களுக்கும் முன் அஜீவன் அவர்கள் இனைத்தது பற்றி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நன்றி!

டங்குவார்:

குறை என்று சொல்லப்போனால், மற்றக் களங்களை ஒப்பிடும்போது, யாழில் பக்கங்களைத் திறக்க சிறிது அதிக நேரம் பிடிக்கிறது. மற்றும்படி எல்லாம் சரி.

கவரிமான்:

நிறை: நான் யாழில் இணைந்ததன் நோக்கம் தமிழ் எழுத மற்றும் வாசிக்க கற்றுக்கொள்வதற்கு. நான் இணைந்ததன் நோக்கம் நிறைவேற்ற கூடிய ஒரு இணையம் இது.

குறை: பரீட்சை காரணமாக சிறிது காலம் வராமல் இப்போது வந்தேன்... எங்கு பார்த்தாலும் காதல் காதல் என்று ஏன் முக்கியத்துவம் கொடுக்க பட்டிருக்கிறது என்று புரியவில்லை..

அதுசரி நீங்க எல்லோருக்கும் PM சென்ட் பண்ணி இப்படி கேட்கிறீங்களோ??? ஏன் இதை ஒரு topic ஆக செய்திருக்கலாம் எல்லோ.....

புதன்கிழமை

கலைநேசன்1:

நேரம் கிடைக்காத காரணத்தினால் யாழுக்கு முன் போல் தினமும் வரமுடியாமல் உள்ளது. யாழில் குறை சொல்வதற்கு என்று என்னைப்பொறுத்தவரையில் ஒன்றுமில்லை.எனக்குப்பிடித்த ஊர்புதினம் சிறப்பாக உள்ளது. என்றாலும் சில முக்கிய கருத்தாடல்களில் கூட வீண் அரட்டைகள்,அவற்றை செய்வோர் தவிர்க்கலாம். இவற்றைத்தவிர்த்தால் யாழ் 100:80 பாஸ்மார்க்.

பிறேம்:

வழமையைப் போன்றே இருந்தது. எந்தவொரு அனுபவமும் கிடைத்தது போன்று இல்லை. சிலவேளை நான் ஆழ்ந்து கவனிக்கவில்லையோ தெரியவில்லை...

நுணாவிலான்:

நகைச்சுவை சம்பவம் ஒன்று. 2004ல் சேதுவை வெளியேற்றுவதா அல்லது வைத்திருப்பதா என ஒரு கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. புதிதாக வந்த பொன்னையா அண்ணா அதற்கு வாக்களித்து சேது எப்போ வருவார் என்று கேட்டது மிகவும் நகைச்சுவையாக இருந்தது.

இன்று யாழில் ஊர்புதினம் பகுதியில் எனக்கும் குறுக்காலபோவானுக்கும் இடையில் சில வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டது.நேரமின்மையால் தொடர முடியவில்லை.அவ்வளவு தான் கூற முடியுமென நினைக்கிறேன்.

வணங்காமுடி:

புதன்கிழமை அனுபவங்கள் என்று குறிப்பிட்டு எழுதுவதற்கு பெரிதாக என்னிடம் ஒன்றுமில்லை. எனினும் பொதுவாக யாழ்களத்தின் தேவையையும் அதன் உண்மையான பாவனையையும் சேவையையும் ஒரு சிலர்தான் சரியாக புரிந்துகொண்டு பயன் பெறுவதாகத் தெரிகிறது. என்னைப்பொறுத்தளவில் நான் யாழ்களத்தின் செய்திப் பகுதியில் தான் அதிக நேரத்தை செலவு செய்கிறேன். வேறு வார்த்தையில் கூறுவதானால் சில பகுதிகளுக்கு இன்னும் போனதேயில்லை.

கருத்தாடலில் இங்கு நான் சிந்தனைச் சுதந்திரத்துடன் சொல்லிலும் செயலிலும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதில் இயன்றளவு ஈடுபாடு காட்டிவரும் நிலையிலும் தாய்நாட்டில் வாழ்ந்துகொண்டு இன்னல் நிறைந்த இன்றைய போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் எமது இனத்தின் வேதனைகள்தான் என் இதயத்தை அன்றாடம் கசக்கிப் பிழிகின்றது. போராட்டம் பற்றிய செய்திகளில் பலர் கருத்துகளை முன்வைக்கிறார்கள் பிரயோசனமானதுதான். ஆனாலும் எதிரியை குறைத்து மதிப்பிட்டு அவனை முட்டாள் என்றும், எமது போராளிகள் எப்போதும் களத்தில் வெற்றி கொள்ள வேண்டுமென்று ஜதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்புகளை பலர் முன்வைப்பதும் ஆரோக்கியமானதாகப் படவில்லை.

தேசித்தலைவர் அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை ஒரு மக்கள் தலைவன், விடுதலை வீரன், ஒரு இனத்தின் வழிகாட்டி, எமது தமிழீழம் உதயமாகும் அந்த இனிய நாளிலிருந்து அதன் தேசபிதா. அவருக்கென்று பல கடமைகள் உள்ளன அதில் நாமறிந்தவை ஒரு சில மட்டுமே. இதைப் புரியாத அல்லது புரிந்தும் வேண்டுமென்றே சில ஊடகங்கள் இலங்கை இந்திய அரசியல் தலைவர்களைப் பார்ப்பதுபோல் போல் எமது தேசியத்தலைவரை விமர்சித்து செய்திகளை முன்வைப்பது தவிர்க்கவேண்டியவை. ஏனெனில் ஈழத்தமிழன் இழக்கக்கூடாத, மதிப்பு ஒரு இம்மியளவும் குறையாமல் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு சொத்துதான் நம் தேசியத் தலைவர்.

ரகுநாதன்:

இன்றைய ஒரு நாள் அநுபவத்தைக் கேட்கிறீர்களா, அல்லது யாழ்க் களத்தில் என்னுடைய அநுபவத்தைக் கேட்கிறீர்களா ?

இன்றைய ஒருநாள் அநுபவம் என்றால், எமது போராட்டம் சரியான பாதையில்தான் செல்கிறது என்பதை வந்துகொண்டிருக்கும் செய்திகள் கூறுவதாக உணர்கிறேன்.

இவ்வளவு காலமும் எனது யாழ்க்கள அநுபவம் என்னும்போது, அநேகமானோர் விடுதலையின்பால் விருப்பமுள்ளோராகவும், தேசியத் தலைமையின் மீது அதீத நம்பிக்கை கொண்டோராகவும் காணப்படுகின்றனர். இது மிகவும் வரவேற்கத் தக்கது.

புலம் பெயர்ந்தவர்களுக்கும், இன்னும் உள்நாட்டில் இருப்போருக்கும் இடையில் சில கசப்புணர்வுகள் இருப்பதாக உணர்கிறேன். இது போராட்டத்தில் யாரின் பங்களிப்பு அதிகம் என்பதில் மட்டும்தான் இக்கருத்து வேறுபாடு இருப்பதாக நினைக்கிறேன்.

தேசியத்தின் மேலும், விடுதலைப் போரின்மேலும் சிலர் நம்பிக்கை இழந்து எழுதி வருவது வேதனை. மற்றவர்களைச் சீண்டிப் பார்க்கும் போக்கு இவர்களிடம் காணப்படுவது கவலை அளிக்கிறது.

மற்றும்படி, மிகவும் அருமையான ஒரு களம். புதிய நண்பர்கள், முகம் தெரியாவிட்டாலும் மனம் தெரிந்தவர்கள். சிறந்த கருத்துப் பரிமாறலும், வளர்ச்சியும்!

வியாழக்கிழமை

சாத்திரி:

நான் சிறிது நேர வேலை இடைவேளியில் செய்தி பார்க்கலாமென யாழில் நுளைந்தேன் யோசித்து எமுவதற்கு நேரம் போதாது மன்னிக்கவும்.

கவிரூபன்:

குறிப்பாக சொல்ல எதுவும் தோன்றவில்லை. ஆனால் இந்தக் கிழமை களம் உற்சாகமாக இயங்குவது போல தோன்றுகிறது. இன்றைக்கும் அப்படியே நடப்பதாக நினைக்கிறேன். காதலர் தினம் நெருங்குவதாலா? அடியேன் அறியேன்...;0)

ஒளவையார்:

வியாழக்கிழமை யாழ் களத்தில்..........நடந்தது என்ன... அதில் நான் உணர்ந்தது என்ன?.....இன்றைய தினம் யாழ் அரிச்சுவடிக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த தடை தளர்ந்தது, களம் விரிந்தது. மனம் மகிழ்ந்தது.
கருத்துக்கள் இனிக் களமேறும்.

வெள்ளிக்கிழமை

சூறாவளி:

யாழ் களத்தில் யாரேனும் ஒருவர் தனிப்பட்ட ரீதியில் தாக்கப்பட்டால் அக்கருத்தினை கள உறுப்பினர்களின் நன்மை கருதியும், யாழ் களத்தின் நன்மை கருதியும், நிர்வாகம் சம்பந்தப்பட்ட கருத்தினை நீக்கிவிடுவதும், நீக்கப்பட்டதற்கான காரணத்தை யாழ்முரசம் பகுதில் தருவது பாராட்டுக்குரியது.

இருந்த போதிலும் அவ்வப்போது யாழ் களத்தில் கருத்து மோதல்கள் தோன்றுவதும், அதன் விளைவாக தனிப்பட்ட ஒருவரை இலக்காக வைத்து கருத்து எழுத்தப்படுவதும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

உலகின் பலகோணத்தில் இருந்தும், பல சூழலில் இருந்தும் தாயகத்து விடுதலைக்காகவும், தாயகமக்களின் வழ்வுக்காகவும் யாழ் களத்தில் இணையும் தமிழ் ஊறவுகள் நிச்சயமாக தனிப்பட்ட ஒருவரை தாக்குவதில் முனைபோடு இருக்க மாட்டார்கள். ஆனாலும் தமது தேசத்தின் விடுதலையையும் போராட்டத்தையும் மதிப்பிறக்கும் காரியத்தை அனுமதிக்கவும் மாட்டார்கள்.

தமிழில் பல தளங்கள் இருப்பினும் யாழ் போன்ற களங்கள் எமது விடுதலைக்கு முக்கியத்துவம் கொடுகுமாகையால், அவ்வாறு எமது போராட்டத்தை மலினப்படுத்தும் கருத்துக்களை பிரசுரிப்பது பல நெங்சங்களை புண்படுத்தும்.

இன்றைய காலத்தில் அனேகமான தமிழர்கள் எமது அரசியல் நிலமையையும் களநிலவரத்தையும் நன்கே உணார்ந்து உள்ளனர். தமிழர்கள் இனி சிறு எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்..
. எமது கடந்த கால அனுபத்தினால் அவ்வாறானவர்களை துரேகிகளாகவே பார்க்கவும் தலைப்படுவார்கள்...

அவ்வாறான கருத்துக்களை யாழ் களம் அனுமதிப்பதுவும் நீக்காததும் எம்மை பலவழிகளில் சிந்திக்க தூண்டுகிறது.... தயவுகூர்ந்து இந்த குழப்பத்தை தீர்த்துவைக்கவும்.

புலிகேசி:

யாழ் இணையத்தளம் தினமும் என்னால் விரும்பி வாசிக்கப்படுகின்றது. பல தளங்களுக்கும் சென்று தேடவேண்டிய செய்திகளை ஒன்றிணைத்து பலராலும் தரப்படுவது இதன் சிறந்த சேவை. முக்கியமாக இத்தளத்தில் தமிழ்த்தாயின் உண்மைப் புதல்வர் புதல்விகள் தமது மனச்சாட்சிக்குத் துரோகம் செய்யாது கருத்துக்களை தெரிவித்து வருவது கண்கூடு. இருப்பினும் சில புல்லுருவிகள் வரத்தான் செய்கின்றார்கள். மொத்தத்தில் யாழ் களம் உலகெங்கும் வாழும் எம்மவருக்கு மிகவும் அவசியமான பணியை செய்துவருகின்றது. அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எம் நாடு மலரும்போது இதன் சேவையும் நிச்சயம் பதிவாகும் என்பது திண்ணம்.

சனிக்கிழமை

இளங்கோ:

மிகவும் தாமதமாகத்தான் வந்திருக்கிறேன். முன்பெல்லாம் அடிக்கடி வருவேன். குறிப்பிட்ட ஒரு நாளை என்னால் கூறமுடியவில்லை. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது யாழ் அனுபவம் உண்மையில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

நன்றி

குறுக்காலபோவான்:

காலமை எழும்பி இண்டைக்கு சனிக்கிழமை ஆற அமர இருந்து யாழிலை குப்பை கொட்டுவம் எண்டு கொண்டு வந்தன். பிறகு யோசிச்சன் ஒரு கோப்பிய போட்டுக் கொண்டு வந்து குந்தினா நல்ல இருக்கும் எண்டு. போய்ப் பாத்த பால் இல்லை. சரி ஊள்வினைப் பயன் எண்டு போட்டு வெறுங்கோப்பிய போட்டு கொண்டு வந்து ஒரு மாதிரி யாழில 2 குப்பையை போட்டுட்டு வெறுங்கோப்பி குடிச்ச வாய்க்கு யோகர்ட் சாப்பிட்ட நல்லா இருக்கும் எண்டு போனா அதுவும் இல்லை.

உவை யாழில நிர்வாகம் எண்டு 1 இல்லை கனபேர் இருக்கினம். இதுகளை கவனம் எடுக்கிறது நல்லம். செய்யிறது எண்டா ஒழுங்கா செய்ய வேணும் இல்லாட்டி பூட்டிப் போட்டு இருக்க வேணும்.

கலைஞன்:

என்னத்தவுங்கோ நானே திருப்பித்திருப்பி சொல்லிறது? ஒருவரும் இல்லாட்டி இப்பிடித்தான் நானே திரும்பவும் திரும்பவும் அடிக்கட்டி முண்டு குடுக்கவேண்டி வரும்.

கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்! தனிமடல் அனுப்பி கேட்கேக்க கருத்துக்கள் சொல்லாத மற்ற ஆக்கள் வலு கெட்டித்தனமா தப்பீட்டதாய் நினைக்காதிங்கோ. திரும்பவும் உங்கட கதவுகள தேவை வறேக்க தட்டுவம். ரெடியாய் இருங்கோ.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்! எல்லாருக்கும் ஒரு பெரிய உம்ம்ம்ம்மாஆஆ.. :)

.. :icon_mrgreen: ஹிஹி...

நன்றி! வணக்கம்!

Edited by கலைஞன், 29 February 2008 - 03:26 AM.


#33 Jamuna

Jamuna

  ஜம்முபேபி

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 20,029 posts
 • Location:Sydney
 • Interests:நித்தா கொள்ளுதல்..

Posted 20 February 2008 - 04:19 AM

ஜம்மு பேபியின் யாழ்காலகண்ணாடி 17/2/2008Posted Image


வணக்கம் வணக்கம் பரந்து வாழும் டமிழ்சை இணைக்கும் ஒரே ஒரு நிகரற்ற ஒரே ஒரு தொலைகாட்சி "மூன்டீவி"தற்போது இலவசமாக கண்டு களிக்கலாம் இந்த "மூன்டீவியை" கண்டு களிக்க நீங்கள் 9 பாகை திருப்ப தேவையில்லை :o ...கார்ட்டும் இல்லை...காசும் இல்லை..(இப்படி தான் முதலில சொல்லுவோம் போக போக எல்லாத்தையும் கொண்டு வருவோம் அது வேற விசயம் பாருங்கோ)..நீங்கள் உங்கள் சாப்பாட்டு கோப்பையுடன் வந்து இருந்தால் மட்டும் காணும் "மூன் டீவியை" கண்டு களிக்கலாம்..(தற்போது மூன்டீவி பரீசார்த்த ஒளிபரப்பில்)..."நிலாவில் கூட கலங்கம் இருக்கலாம் ஆனா "மூன் டீவியில் கலங்கம் என்பதிற்கு இடமே இல்லை"...(கொஞ்ச நாளாள மூன்டிவியும் துரோகி டீவியாக மாறலாம் அது வேற விசயம் பாருங்கோ சரி எனி நாங்கள் எங்களின்ட பரிசார்த்த ஒளிபரபிற்கு செல்வோம்.... :D

Posted Image
எண்ணக்கரு சாணா & ஓவியம்: மூனாவணக்கம் முதலாவது நிகழ்ச்சியாக நேயர் விருப்பம் தொகுத்து வழங்குபவர்....எங்கள் அன்பு அறிவிபாளர் சுண்டல் அண்ணா..(கொடுமை)...

வணக்கம் இது "சிறிலங்கன் ஏயார்லைன்சின் நேயர் விருப்ப நேரம்" (ஆனா சிறிலங்கா பொருட்களை புறகணிப்போம் என்ன)....

கலோ வணக்கம் நேயரே யார் கதைக்கிறியள் நான் தான் "தமிழ் நேசன் கதைக்கிறேன்"..இப்ப தான் முதன் முதலாக "மூன்டீவியில்" கதைக்கிறேன்....அட இது என்ன கொடுமை இன்றைக்கு தானே முதன் முதலில நிகழ்ச்சியே நடக்குது பிறகு முதலில தானே கதைப்பியள்...(நேயரின் லைன் கட்டாக்கபட்டுவிட்டது சுண்டல் அண்ணாவால்)...

அடுத்த நேயர் வணக்கம் நேயரே...வணக்கம்..வணக்கம் வண்ண தமிழ் வணக்கம்...(வணக்கம் சொன்னது இருகட்டும் பெயரை சொல்லுங்கோ)..என் பெயர் சேகுவரா இந்த நிகழ்ச்சியில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது...என்ன பேசுவது என்றே தெரியவில்லை....(பேச தெரியாட்டி பிறகு ஏன் வந்தனியள் போனை கட் பண்னிட்டார் சுண்டல் அண்ணா)....

சரி அடுத்த நேயரை பார்போம் வணக்கம் நேயரே....வணக்கம் எல்லாரும் எழும்பி நின்று வணக்கம் சொல்லுங்கோ எனக்கு...(இது என்னடப்பா கொடுமை டீவியில எப்படி எழும்பி நின்று வணக்கம் சொல்லுறது அட முதல் நாளே இப்படியா டீவி போக வேண்டும்)...சரி உங்க பெயர் என்ன..என் பெயர் விந்தியா...சுவீட் நேம்...அப்படி சொல்லாதையுங்கோ எனக்கு வெட்கம் வெட்கமா வருது...(சரி நேயரே உங்களுக்கு விருப்பமான பாடல் என்னவென்று சொன்னா ஒலிபரப்ப முடியும்)...நேக்கு வந்து "மாம்பழமா மாம்பழம் மல்கோவா மாம்பழம் பாட்டு போடுவியளே" அக்சுவலா அந்த பாட்டு எங்களிட்ட இல்லை கிடைக்க பெற்றவுடன் போடுறோம் நீங்கள் உங்கள் குரலில் அந்த பாடலை பாடி காட்டுவீர்களா.."பாடினா போச்சு"....என்று பாட தொடங்க நிகழ்ச்சியை விட்டு போட்டு சுண்டல் அண்ணா ஓட்டம் எடுக்கிறார்...அத்துடன் நிறைவிற்கு வருகிறது "நேயர் நேரம்"...(யாழில் கடந்த வாரம் அறிமுகமான உறுப்பினர்கள் அவர்களை வருக வருக என வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் :D )...


அடுத்து மூன்டீவியின் தலைப்பு செய்திகள் வாசிப்பவர் கறுப்பி அக்கா...

(தலைப்பு செய்திக்கு பிரதான அநுசரனை டில்மா தேயிலை)....சிறிலங்கா பொருட்களை புறகணிபோம்...

மன்னாரில் படையினரின் முன்நகர்வுகள் முறியடிப்பு: 11 படையினர் பலி- 23 பேர் காயம்...

*புலத்தில் வாழும் டமிழ்ஸ் கிரிகெட்டில் ஜயசூரியாவிற்கு கையை தட்டி கொண்டு இதுக்கு கையை தட்டினார்கள்...!!

பாலை மோட்டை மோதலில் 7 படையினர் பலி:14 பேர் படுகாயம்....

*யாழ்கள அண்ணண்மார்கள் தாங்கள் நேரடியா பங்குபற்றிய தாக்குதலை போல பல திடுகிடும் தகவல்களை வெளியிட்டார்கள்...!!

சுதந்திர பிரகடனத்துக்கு தயாராகிறது கொசோவோ - * எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை...

*இலங்கை என்று ஒரு நாடு இருக்கே எங்கே இருக்கு என்று கேட்கிறார்...எங்களின்ட சூறாவளி அண்ணா..!!

ஆயிரத்தில் ஒருவன் ஐயா நீ! ,தமிழருக்காகக் குரல் கொடுக்கும் சிங்களர் டாக்டா பிரயன் செனிவிரத்தின...

*உலகம் அறிந்திடாத பிறவி ஜயா நீ...என்று பாட்டு படிக்கிறார் கந்தப்பு அதற்கு எசை பாட்டு பாடுறார் நம்ம குறுக்ஸ் அண்ணா...(போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு)...

மணலாற்றில் விடுதலை புலிகள் -படையினர் மோதல்....

*சிட்னி டமிழ்ஸ் இதையும் வொக்ஸ் ஸ்போட்டில் நேரடியாக ஒலிபரப்பு செய்தா நல்லா இருக்கும் என்று சிறிபாலன் அண்ணாவிடம் கருத்தை தெரிவித்தனர்...(சிறிபாலன் அண்ணா பேபி கூட கோவித்திடாதையுங்கோ என்ன :o )...

இது வரை கேட்டது "மூன்டீவியின்" தலைப்பு செய்திகள் விரிவான செய்தியை அறிவதிற்கு புதினம்.கொம்முக்கு போனா சரி ஏன் என்றா அங்கே இருந்து தான் செய்திகள் வாறது...(இல்லாட்டி யாழில ஊர்புதினதிற்கும் போகலாம் :o )...

http://www.yarl.com/...hp?showforum=40

அடுத்து மூன்டீவியில் இடம்பெற இருப்பது.."உலக பார்வை"...(எங்களின்ட பார்வையை பற்றியே பார்க்க நேரமில்லை இதில உலக பார்வை)..தொகுத்து வழங்குபவர் சிறப்பறிவிப்பாளர் "நெடுக்ஸ் தாத்தா"...(இவ் நிகழ்ச்சிக்கு பிரதான அநுசரனையாளர்கள்..(மூட்டுவலி இடுப்பு வலி என்றா துரித நிவாரணம் சித்தாலேப..)...சிறிலங்கா பொருட்களை புறகணிபோம்...

*முகமது நபியின் காட்டூன்கள் -

Posted Image


புலம்புகிறார்கள் எங்கள் "யாழ்கள" மெம்பர்ஸ் நீங்களும் இங்கே சென்று பார்க்கவும்..

http://www.yarl.com/...m...st&p=382617

*அமெரிக்கா-இலினாய்ஸ் பல்கலையில் துப்பாக்கி சூடு- 4 மாணவிகள், 1 மாணவன் பலி -

(அட இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் நான் பல்கலைகழக பக்கமே போகவில்லை என்று சொல்கிறார் எங்கள் "இளையதளபதி"....சின்னப்பு...(கொடுமை)..

*யு.எஸ் செயற்கைகோளை சுட முடிவு......

(குறி பார்த்து சுடுவதிற்கு எங்கள் யாழ்கள மெம்பர்ஸை யு.எஸ் எதிர்பார்த்து காத்திருக்கிறது ஏனேன்றா குறி பார்த்து சுடுவதில் யாழ்கள மெம்பர்ஸ் கெட்டிகாரர்கள் ஆனால் யாழில தான்..(நீங்களும் இந்த அரிய வாய்ப்பை நழுவவிட வேண்டாம்)...

*இந்தியாவிற்குச்செல்கிறீர்க
ா நீங்கள் திருப்பி அனுப்பப்படலாம்.-


ஆகவே எல்லாரும் எனி சோமாலியா எத்தியோப்பியா போன்ற வளர்முக நாடுகளிற்கு செல்லும்படி கேட்டு கொள்ள படுகிறீர்கள்...

* நாய்களின் காதலர் தினம் -

உலக கண்ணோட்டத்தில் மிகவும் முக்கிய விடயம் இதுவே ஆகும் எமது விசேட நிருபர் கு.சா தாத்தா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..(மனிசனே கொண்டாடும் போது நாய்கள கொண்டாடுவதில் என்ன தப்பு என்று கொதிக்கிறார் கொதி மன்னன் டங்கு மாமா :o )...

இத்துடன் நிறைவிற்கு வருகிறது "உலக கண்ணோட்டம்"...உலகத்தில் என்ன நடக்குதோ எல்லா விசயங்களையும் அறிந்து கொள்ள இங்கே செல்லவும்..இது "மூன்டீவியின்" பிரத்தியோக இணையதளம்...

http://www.yarl.com/...hp?showforum=34

மூன் டீவியின் காதலர் தின ஸ்பேசலாக வரவிருக்கும் திரைகாவியம் "காதல்"...காதல் இளவரசன் கலைஞன் மற்றும் காதல் இளவரசி வெண்ணிலா ஆகியோரின் அட்டகாசமான நடிப்பில்...உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் காதல் காவியம் "காதல்"...(பார்க்க தவறாதீர்கள்)....இது வெற்றிபட இயக்குநர் ஜம்மு பேபியின் அடுத்த வெளியீடு...(என்ன பார்க்கிறியள் ஓவரா இருக்கு என்றோ நேக்கு அப்படி தெரியவில்லையே)..

http://www.yarl.com/...t...t=0&start=0

அடுத்து "காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்" தொகுத்து வழங்குபவர் உங்கள் அன்பு அறிவிப்பாளர் விகடகவி மாமா...இந்த நிகழ்ச்சிக்கு பிரதான அநுசரனையாளர்கள்...(மங்கையர் மனம் கவர்ந்த நகைகளிற்கு சுவர்ணா நகைமாளிகை வெள்ளவத்தை...(சிறிலங்கா பொருட்களை புறகணிபோம்)...

Posted Image


*காதலர் தினம் 2008: பக்தகோடிகளினால் யாழ் இணையத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது!! யாழ் காதலர்தினம்! -

(மிகவும் சிறந்த முறையில் "காதலர் தினம் கொண்டாடபட்டது யாழில் அவர்களுக்கு மூன்டீவி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது)....

http://www.yarl.com/...mp;#entry383845

*காதலர் தினத்தை எவ்வாறு கொண்டாடலாம்!!
ஜம்மு பேபியின் கனவு!!-


(பேபிகள் எல்லாம் இப்படி கனவு காண தொடங்கினா நாடு உருபட்ட மாதிரி என்று புலம்புகிறார் டைகர்பிளேட் அண்ணா)...

*காதலர்தினம் 2008: யாழ் காதல் இளவரசனுக்கு காதல் இளவரசி ஒருவர் தேவை!, யாழ் காதலர்தினம்!-

"இளவரசருக்கு என்னும் இளவரசி கிடைக்காதது தான் பரிதாபம்..(நீங்களும் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்...)

http://www.yarl.com/...t...t=0&start=0

இத்துடன் நிறைவிற்கு வருவது மூன்டீவியின் "காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி"........

அடுத்த நிகழ்ச்சி "வம்பளத்தல்" வம்பளக்க வருகிறார் வம்பளத்தள் மன்னன் வசபண்ணா...இந்த நிகழ்ச்சிக்கு பிரதான அநுசரனை வழங்குபவர்கள்...(ராதா ஸ்பைஸ் அனைத்து வித இலங்கை மற்றும் இந்திய பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்று கொள்ள நாட வேண்டிய நம்பிக்கையான ஸ்தாபனம்)...சிறிலங்கா பொருட்களை புறகணிபோம்...

*திருமணதிற்கு முன் உறவு: 70% ஆதரவு! என்கிறார் நுணாவிலன் என்ற நேயர் -

என்ன கன்றாவியையும் செய்யுங்கோ ஆனா பாதுகாப்பா செய்யுங்கோ என்கிறார் வசபண்ணா...இல்லாட்டி நாயிற்கும் மனிசனிற்கும் வித்தியாசம் இல்லாம போயிடும் என்ற ஒரு தத்துவத்தை வேற சொல்லி செல்கிறார்.... :o

* "சிறீலங்காவைப் புறக்கணி" என்ன வேடிக்கை விளையாட்டா..?! என்று கதிகலங்கிறார் நெடுக்ஸ் தாத்தா -

அதற்கு நம்ம அறிவிபாளர் மெளனம் ஏனேன்றா இந்த நிகழ்ச்சிக்கு அநுரசனையாளர்கள் யார்.....??

* காதலர் தினமும் தமிழரின் காதல் வாழ்வும் என்று மெல்பன் சபெசன் அண்ணா காதலை பற்றி மட்டும் சொல்ல எங்களின்ட மூன் டீவி நேயர்கள் என்னத்தை பற்றி எல்லாம் கதைத்து கொண்டு போக அதுகுள்ள பூஸ் குட்டி அண்ணா வந்து "மியாவ் மியாவ்" என்று கத்தி போட்டு போனை வைக்கிறது (அட நம்ம இன்பதமிழ் வானொலிக்கும் சில பேர் உப்படி தானே செய்யிறவை என்ன)...இப்படி நேயர்கள் எல்லாம் கருத்தை விட்டு அங்கால,இங்கால போக வசபண்ணா நிகழ்ச்சியை விட்டு போட்டு ஓட்டம் பிடிக்கிறார் அத்துடன் நிறைவிற்கு வருகிறது "மூன்டீவியின்" வம்பளத்தல்.....

http://www.yarl.com/...mp;#entry383999

"மூன்டீவியின்" நீயூஸ் இன் அலட் செய்தியை வாசிப்பவர்....மருமொண் அண்ணா...!!

*வணக்கம் கிடைக்கபெற்ற முக்கிய செய்தி "தாலி கட்ட சொன்னதால் தப்பியோடிய காதலர்கள்.... " ஆகவே அனைத்து காதலர்களும் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளுகுள் இருக்கும்படி கேட்டுகொள்ளபடுகிறார்கள்...

அடுத்த நிகழ்ச்சி "கு.சா தாத்தாவுடன் கொஞ்ச நேரம்"....(இந்த நிகழ்ச்சிக்கு பிரதான அநுசரனை விக்டோரியன் பிட்டர்)..."தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்"

"நான் எதை சொல்ல என்னத்தை சொல்ல சொன்னா போல இவங்க கேட்டிடவா போறாங்கா என்றாலும் சொல்லுறேன்..

தண்ணி அடிப்பவர்களை (மதுபானம் அருந்துபவர்களை) குடிமக்கள் / குடிகாரர் என்று சொல்வது சரியானதா?, விளக்கம் தேவை!...இந்த அருமையான கேள்வியை தாபால் மூலம் தன்ட நேரத்தை வீணாக்கி அனுப்பினவர் மதிபுகுரிய கலைஞன்...

இது தான் எனக்கு இன்றைக்கு தரபட்ட தலைப்பு யாரிப்ப தலைபோட கதைக்கிறாங்க அது அந்த காலம் தலைபோட இல்லாம கதைக்கிறது தான் இந்த காலம்...தம்பி குடிக்கிறது தப்பில்லை எல்லாம் அளவோட இருந்திட்டா எல்லாருக்கும் நல்லது கொஞ்சம் ஓவரா போயிட்டுது என்றா எல்லாம் ஓவர் தான்...(எனக்கு அடுத்த பெக் அடிக்க நேரமாச்சு மீண்டும் நாளை உங்கள் அனைவரையும் சந்திபோம் வணக்கம் :o )...

அடுத்து மூன்டீவியில் "பிரார்தனை நேரம்"..பிரார்திக்க வருபவர் உலக நம்பர் 1 கள்ள சாமி புத்தன்..(என்ன கொடுமை இது)..இந்த நிகழ்ச்சிக்கு பிரதான அநுசரனை...(சாய்பாபா புட்டபத்தி கிளையினர்)..

எல்லாருக்கும் புத்தனின் சரணங்கள்..(ரொம்ப முக்கியம்)..இன்று நாம் பார்க்க போவது "திருக்குறள் பொது நூலா?" (இதையே இப்ப எத்தனை தரம் தான் சொல்ல போறியள் அந்த டீவியில் இருக்கும் போதும் இதை தான் சொன்னியள் இங்கே வந்தும் இதுவா)...பல கல்லுகள் வந்து விழ ஓட்ட எடுக்கிறார் கள்ளசாமி புத்தன்...(தடங்கலிற்கு வருந்துகிறோம்)....

அடுத்து மூன்டீவியில் நடைபெற காத்திருக்கும் நிகழ்ச்சி "நலமோடு வாழ" சிந்தனைகளை அள்ளி தர வருகிறார்...(5 கிளாஸ் பெயிலான கந்தப்பு தாத்தா எங்கே உங்கள் கரகோஷம்)...இந்த நிகழ்ச்சிக்கு பிரதான அநுசரனை..(பாவம் ஒருத்தரும் அநுசரனை தரமாட்டீனம் என்று சொல்லிபோட்டீனமாம்)...

வணக்கம் இன்று நாம் பார்க்க போவது "முத்தம் என்ன செய்யும்" என்று சொல்லி வாய் மூடவில்லை குஞ்சாச்சியிட்ட இருந்து போன் இப்ப நான் என்ன செய்ய போறேன் என்று பாருங்கோ என்று...மனிசன் பயத்தில புரோகிராமை முடிக்காம ஓடுகிறார்...

"விளையாட்டு துளிகள்" இந்த நிகழ்சியை தொகுத்து வழங்குபவர்...விந்தியா மாமி....!!

வணக்கம்..66 வயதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஜப்பானிய வீரர் ....நேக்கு இப்ப தானே 65 வயசு அப்ப நானும் பங்குபற்றலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளா விந்தியா மாமி ஆனா என்ன மாமிக்கு ஓட தெரியாதே அது தான் பிரச்சினை...

*அடுத்து சினிமா கிசு கிசு....இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருபவர் "கிசு கிசு மன்னன் வல்வை அண்ணா" இந்த நிகழ்ச்சிக்கு பிரதான அநுசரனை..இதயம் நல்லெண்ணேய்...(இந்திய பொருட்களையும் புறகணிபோம் பின்னே ஒவ்வொரு டீவியும் ஒவ்வொர்னு சொல்லக்க நாங்களும் வித்தியாசமா சொல்ல வேண்டும் தானே)....

வணக்கம் இன்றைய சினிமா கிசு..கிசு...பல நல்ல சினிமா விசயங்கள் மூன்டீவியில வந்தாலும் அப்படியான விசயங்களிற்கு ஆதரவுமின்மையால் மூன்டீவி அந்த பக்கம் போகவில்லை..இப்ப மாட்டருக்கு வாறோம்...

*நயன்தாரா-தனுஷ்?-இறுக பிடிச்சு ஒரு உம்மா! -

எனக்கும் யாரும் உம்மா தரமாட்டீனமா என்று புலம்புகிறார் வலைஞன் மாமா....

*மனைவியை பிரிந்தார் யுவன் -

மனைவியுடன் சேர்ந்தார் பவன்...(யாரிவர் என்று பார்கிறியளே அவரை உங்களுக்கு தெரியாது அக்சுவலா எனக்கும் தெரியாது)...

*'காதலர் தினம்' ஹீரோ நடிகர் குணால் தற்கொலை -

அவரின் தற்கொலை செய்தியை கேட்டு தாங்க முடியாம தற்கொலை செய்ய சென்ற கலைஞன் அண்ணாவை ஒரு மாதிரி காப்பாற்றி கொண்டு வந்திருக்கிறோம்...

இத்துடன் முடிவிற்கு வருவது "சினிமா கிசு கிசு"..வணக்கம் நேயர்களே...!!

அடுத்த நிகழ்ச்சி "சமைப்போம் ருசிபோம்" இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்...சமையல் என்றா என்னவென்று தெரியாத எங்களின்ட இன்னிசை தங்கா...(இந்த நிகழ்சிக்கு பிரதான அநுசரனை சகானா டேக் கவே...கல்யாணம் கட்ட போகும் ஒவ்வொருவரும் தங்கி இருக்க வேண்டிய அடுத்த மனைவி)...

எல்லாருக்கும் வணக்கம் (மேக்கப் போகாம இருக்க மறுபடி போய் கொஞ்சம் பவுடரை பூசி கொண்டு வந்திட்டு)...இன்றைக்கு நாங்கள் சமைக்க போவது "நண்டு வறுவல்"....அக்சுவலா எனக்கு நண்டு என்றாலே தொட பயம் பாருங்கோ ஸ்பைடர் மாதிரி இருக்கும் நண்டு ஜ கேட் டூ டச் நண்டு பட் ஜ லைக் இட் டூ ஈட்...(நல்லா சிரிக்கிறியள் கமராவை கண்டவுடன என்னும் கூடவா சிரிக்கிறியள் போல இருக்கு கொஞ்சம் குறையுங்கோ :o )...இறுதியாக பாத்திரத்தை கழுவி போட்டு "சாகானா கடையில வாங்கின நண்டு வறுவலை"...காட்ட நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது....

அடுத்த நிகழ்ச்சி "கவிதையும் கானமும்"..தொகுத்து வழங்குபவர் கவிதையின் நிலவு வெண்ணிலா...(இந்த நிகழ்ச்சிக்கு பிரதான அநுசரனை...சிட்னி முருகன் கோயில்...(இது என்னடா கொடுமை இப்ப கோயில் எல்லாம் அநுரசனை வழங்க தொடங்கிட்டோ....அரோகரா...நான் சொன்னது முருகனிற்கு)....

*வணக்கம் உங்களுடன் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி...முதலாவது நேயரின் கவிதையை பார்போமா..தமிழ் தங்கை அக்கா அவர்களினால் அனுப்பபட்டிருக்கு "காதல் நவரசம்) -அதிரசமாக இனிக்கிறது...(காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை அப்படியா தமிழ் தங்கை அக்கா)....

*அடுத்து விகடகவி மாமாவின் தினசரி தூறள்கள் -ஒவ்வொரு துளியும் இதயத்தில் விழும் துளிகள்....(சின்ன மழைதுளிகள் சேர்த்து வைப்போமா)...

*மீண்டும் தமிழ் தங்கை அக்காவின் "நீ" என்ற கவிதை - "நீ" என்பதிற்கு அர்த்தத்தை அதன் மூலம் தான் புரிந்து கொண்டேன்...(நீ தானா அந்த குயீல்..டொயிங்...டொயிங்..யார் வீட்டு சொந்த குயில்)...

*அடுத்து வாசகன் அண்ணாவின் "காதலில்" என்ற கவிதை -காதலித்தா இப்படியும் சோகம் வருமா என்று தோன்றுகிறது...(காதல் வளர்தேன்....காதல் வளர்தேன்...ஏய்..புள்ள உன்னை எங்கை பிடித்தேன்)...

*வழமை போலவே "வல்வை சகாரா அக்காவின்"..வேங்கையன் பூங்கொடி தேன் போல் இனிக்கிறது அழகு தமிழில்...

*அடுத்து தமிழ்வாணன் அண்ணவின் "எழுது எழுது என் அன்பே - காதல் கடிதம் " என்ற காதல் கடித பாடல்கள் அருமையாக இருக்கின்றன...


இத்துடன் நிறைவிற்கு வருவது கவிதையும்...கானமும் வணக்கம் நேயர்களே..... !!

அடுத்த நிகழ்ச்சி உங்கள் அன்பு அறிவிபாளர்..(நல்லவர்,வல்லவர்) என்ன பார்கிறியள் என்னை பற்றி நானே தான் சொல்ல வேண்டும்...தொகுத்து வழங்கும் "காதலர் தின வாழ்த்து நிகழ்ச்சி"..(இந்த நிகழ்ச்சிக்கு பிரதான் அநுசரனை பரிமளம் அக்கா..(கு.சா தாத்தாவின் பழைய காதலி)...

எல்லாருக்கும் வணக்கம்...அனைவருக்கும் இனிய காதலர் தினநல்வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் மனதிற்கு பிடித்தவர்களிற்கு இங்கே வந்து வாழ்த்துக்கள் கூறி பாடல்களை கேட்கலாம் முதலாவது நேயரை பார்போமா அதற்கு முன் ஒரு மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது அதனை பார்த்து விட்டு செல்வோம் என்ன...

"காதலர் தினம் 2008 யாழ் இணையத்தில் சிறீ லங்கா புறக்கணிப்புடன் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது!, காணொளி + மடல்கள்!"


அருமையான சிந்தனை இந்த ஆக்கத்தை செய்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...நேயர்களே நீங்களும் இந்த மடல்களை உங்களுக்கு பிடித்தவர்கள் மற்றும் பிடிக்காதவர்கள் எல்லாருக்கும் அனுப்பி வையுங்கொ என்ன...இந்த நேரத்தில் ஒரு நேயர் வணக்கம்...வணக்கம் இருகட்டும் யார் இதை மூன்டீவியில போட சொன்னது அவன் அவன் கஷ்டபட்டு கொண்டு இருக்கிறான் நாட்டில உவையள் இங்கே காதலர் தினம் கொண்டாடினமாம்...(கலோ...கலோ ஜம்மு பேபி லைனை கட் பண்ணிட்டு சும்மா அக்டிங் கொடுத்தது)....

http://www.yarl.com/...topic=34696&st=

இன்னொரு அழைப்பு...வணக்கம் நேயரே...எவன் அவன் இந்த மடல்களை எல்லாம் மூன்டீவியில போட்டது நாங்கள் என்னதிற்கு இருக்கிறோம் நாங்கள் செய்தா அதை செய்தோம் இதை செய்தோம்...(கிட்டு அண்ணாவின்ட நினைவு நாளுக்கு கதிரை அடுக்கினாங்க என்று சொல்ல நாங்க இருக்கிறோம் தானே பிறகு என்ன)...தம்பி உமக்கு தேவையில்லாத வேளை சொல்லிட்டேன்...போன் வைபடுகிறது...அப்ப தான் ஜம்மு பேபிக்கு மூச்சே வந்த மாதிரி இருந்தது...

ஜம்மு பேபி (மனதிற்குள்ள) தாங்களும் உருபடியா ஒன்றும் செய்யமாட்டாங்க...(ராமசாமியின்
கோமணம் நல்லதா இல்லாட்டி தங்களின்ட கோமணம் நல்லதா என்று சண்டை பிடிப்பாங்க)...யாரும் என்னவும் செய்தா அதையும் விடுறாங்க இல்லை...என்று நிகழ்ச்சியை முடித்து விட்டு பீலிங்காக இருக்கிறது....(அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவிள்ளாத வெள்ளம் வந்தா தாழும்)...


*லெப்.கேணல் பொன்னம்மான், 21வது ஆண்டு நினைவு-லெப்.கேணல் பொன்னம்மானிற்கும் அவருடன் உயிர் நீத்த வேங்கையர்களிற்கும் "மூன்டீவி" தனது வீரவணக்கங்களை தெரிவித்து கொள்கிறது..

Posted Image

*1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவடைந்த லெப்.கேணல் பொன்னம்மான்...


இத்துடன் நிறைவிற்கு வருவது "மூன்டீவியின் இன்றைய நிகழ்ச்சிகள் யாவும்"...மற்றுமொரு இனிய நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்....தொடர்ந்து வரும் "மூன்டீவி" நிகழ்ச்சியை தொகுத்து வழங்க "யாழ்பிரியாவை" அழைக்கின்றேன்...(அக்கோய் வாங்கோ வந்து உங்க முகத்தையும் ஒருக்கா கண்ணாடியில காட்டுங்கோ பார்போம் எல்லாரையும் கேட்கிறியள் சரி அதற்கு முன் உதாரணமா நீங்க ஒருக்கா செய்து காட்டினா தானே மற்றவை வரூவீனம் நீங்களே பயந்தா)....எங்கே அக்காவிற்கு ஒருக்கா நல்ல குத்து பாட்டா போடுங்கோ பார்போம்...(வாடி...வாடி நாட்டுகட்டை வசம்பா வந்து மாட்டிகிட்டாய்)...சரி இந்த பாட்டு காணும் பிறகு என்னோட கோவித்து கொண்டு பொலிஸ் மாமாவை கூட்டி கொண்டு வாரதில்லை சொல்லிட்டேன் பிறகு நான் அழுவன்..... :)

எஸ்கியூஸ் மீ பெரியவா எல்லாம்...இந்த பக்கம் வெறிச்சோடி போய் கிடந்தது நேக்கு கொஞ்ச டைம் கிடைத்தது அக்சுவலா வேலை பிரேக் 30 நிமிசம் அதில செய்து பார்த்தனான் காலகண்ணாடியா தெரியாட்டி வெறி சாறி..(உடனே எடுத்து விடுங்கோ)..யாரையும் புண்படுத்தி இருந்தாலும் மன்னிப்பை கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்...எனி யாரும் காலகண்ணாடி செய்யாட்டி இப்படியான காலகண்ணாடி தான் வரும் சொல்லிட்டேன்...

அப்ப நான் வரட்டா!!

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...
Posted Image

காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!
பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...ஜ...ஜ...ஜ....ஜம்மு....பே...பே...பே....பேபி!!
ஜம்மு பேபி!!


#34 கலைஞன்

கலைஞன்

  உங்களில் ஒருவன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,303 posts
 • Gender:Male

Posted 03 March 2008 - 03:31 AM

யாழ் காலக்கண்ணாடி 01-03-2008

Posted Imageஸ்ரீலங்கா பாஸ்போர்ட் - சிறுகதை

ஐயோ இது என்ன கதை.. அண்மையில ஒரு கதை. வெளிநாட்டில உள்ள ஒரு பையனுக்கு ஊரில பொண்ணு பார்த்தாங்கலாம். பொண்ணும் படத்தைப் பார்த்திட்டு பையனப் பிடிச்சிட்டு எண்டிச்சுதாம். அடுத்த நாள் கோல் எடுத்து அன்பாக் கதைக்கிறாப் போல கதைச்சு.. பொடியனட்ட என்ன பாஸ்போட் என்று கேட்டிச்சாம் பெட்டை. பொடியன் சிறீலங்கா பாஸ்போட் என்றானாம். உடன போன் கட்டாகிட்டுது. அப்புறம் என்ன.. கலியாணம் அம்போ தான். இப்ப பொடியன் வெள்ளைக்காரியோட குடும்பம் நடத்திட்டு.. கப்பியா இருக்கிறான்..!

வேப்ப மரத்தில் பால்

அதெப்படி.. பொட்டு சந்தனம் என்ற உடன ஆராய்ஞ்சி பார்க்கனும் என்று தீர்மானிக்கிறீங்க.. புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் அவுக்கிற பொய்கள மட்டும் அப்படியே நம்பிடுறீங்க.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கு திருமண நம்பிக்கை `கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை'யாக மாறி வருகிறது.

தனக்கு திருமணம் தேவையா இல்லையா என்று தீர்மானிக்கிறது அவையவைட விருப்பம். ஆனால் திருமணம் செய்யுறன் என்று போட்டு சுத்தித் திரிஞ்சிட்டு.. ரகசியமா.. ஏமாற்றிறது மன்னிக்க முடியாத குற்றம். அதை ஆண் செய்தால் என்ன பெண் செய்தால் என்ன..!

பணம் சம்பாதிக்கிற ஆண்களை விட பெண்கள் அதிகம் சுயநலவாதிகளாக இருப்பது கண்கூடு. பெண்களின் சுபாவம் அது. அதற்காக...?! கலியாணம் கட்டிறன் என்றிட்டு ஏமாற்றிறவையை.. யாரேனும் ரேப் கும்பலட்ட காட்டி ரேப் பண்ணச் சொல்லனும். அப்பதான் திருந்துவினம்..! அது பாவமே இல்ல..!

உவை கலியாணம் கட்டாமல் இருக்கிறது என்ற போர்வையில் பல ரகங்களை ரசிக்கிற கூட்டமாயும் இருப்பினம்..! அதுதான் இப்ப நவீன கெளரவ விபச்சாரம்..!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எனக்கு என்ர பேராண்டி போல. 96 வயசு எனக்கு.. அவர் பேராண்டி தானே..! அந்த உறவுதாங்க..!

தமிழ்க்குடில் இணைய வானொலி

இணைய வானொலி ஒன்றும் புது விடயமல்லவே. கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் பழையது என்று சொல்லலாம். அதுவும் பரீட்சார்த்த ஒலிபரப்பிலேயே பஞ்சி பார்த்தா... எதிர்காலம்..??! என்ன பாராட்டும் படியாவா அமையும்..???!

திறமைகளைப் பாராட்டத்தான் வேணும். பஞ்சிகள..???!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

யாழ் கள உறவு ஈழத்திருமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இலங்கையில் மதுபாவனை வீதம் கணிசமான அளவு உயர்வு

மகிந்த ஆட்சியில் மக்கள் நல்ல "குடி" மக்களா மாறியிருக்கினம் என்றீங்க..!

Poll: யாழ் இணையம் அகவை பத்து கொண்டாடலாமோ?

பிளீஸ் கொண்டாட்டம் என்றிட்டு யாழ் பூரா.. எதையும் பண்ணிடாதேங்க.. அண்மையில சிறீலங்கா சுதந்திர தினத்தை இட்டு நோர்வேயில கண்காட்சி நடத்தினாங்க.. சிறீலங்கா 60 ஆண்டுகளா செய்த கொடூரத்தை சொல்லி. அப்படி ஏதாச்சும் கருமங்களைப் பண்ணித் தொலையுங்கப்பா...!

சும்மா.. யுரியூப்பும்.. கட்டூணுமே கதி என்று கிடக்காம. தெவிட்டிப் போச்சுது.. ஏதாச்சும் புதிசா செய்யுங்க.. மக்களுக்கும் புதிசா...??!அனுரா பண்டாரநாயக்காவின் உடல்நிலை மோசம்?

சோ வட்..??!

தமிழ்க்குடில் இணைய வானொலி

வான் குருவியின் குரலைக் கேட்க முடியுது. ஆனால் அது இன்னும் பழைய உலகில் பறந்தபடி இருக்குது. இதுவும் எங்கட ஆக்களின் வழமையான ஒரு ஏமாற்று வேலைதானோ..! பரீட்சார்த்தம் என்றால் கூட புதிய உலகில் பறக்க முடியாதோ..??!

நாயக்கர் ரீக் கடை வாசலில்.. ரீக்கு ஓடர் கொடுத்திட்டு..விவேக்..

என்னடாப்பா பேப்பரை விழுந்து விழுந்து படிக்கிறீங்க.. எங்க பாப்பம்.. அப்படி என்ன செய்தி இருக்கென்று.. என்று சொல்லி பேப்பரை ஒத்திப் பறிச்சு வாசிக்கிறார்..

தலைப்புச் செய்தி..

இந்திரா காந்தி ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இலங்கை ஜே ஆர் அரசை எச்சரித்தார்....

அடப்பாவிகளா.. இந்திராகாந்திக்குப் பிறகு.. ராஜீவ் காந்தி.. சந்திரசேகர்..விபிசிங்.. நரசிமராவ் .. வாச்பாய்..மன்மோகன் சிங் என்று வந்திடாங்களே...!!!!!

பத்திரிகையின் அடியில் "இது ஒரு பரீட்சார்த்தப் பதிப்பு" என்றிருந்ததை கவனிச்சிட்டு விவேக் சொல்கிறார்... முடியல்ல தாங்க முடியல்ல....!

முதல் முத்தம்-கார்: நினைவில் இருப்பது எது?

எந்தெந்த வயதில்.. எதை அனுபவிக்க வேணும்.. உதைத்தான் காலம்பூரா சொல்லுறாங்க.. அனுபவிச்சு என்னத்தைக் கண்டியள்.. சனத்தொகையைப் பெருக்கினதும்.. பூமியைக் கெடுத்ததும் தான் மிச்சம்..!

முத்தம்.. கார் இரண்டையும் விட்டுத்தள்ளுங்க... சுத்த வேஸ்டு..!

எனது மூளையெனும் ஞாபக்குறிப்பில் (அதுதாங்க டயறியில்) இருப்பது... முதன் முதலில் பரீட்சையில் 100% எடுத்து ஆசிரியரிடம் கைலாகு (கைகுலுக்கிக் கொண்டது) பெற்ற அந்த நினைவுகள் மட்டுமே..! அதைப் போல இனிமையான பொழுது எனக்கு கிடைக்கவே இல்லை..!

எனது டயறி

யாராலும் திருடப்பட முடியாதது.. யாராலும் களவா வாசிக்கப்பட முடியாதது.. யாராலும் திருட்டுத்தனமா எழுதப்பட முடியாதது.. மிகவும் ரகசியமானது எனது டயறி. அது வேற எதுவுமல்ல.. எனது மூளை..! நான் எனது டயறியா எனது மூளையைப் பாவிக்கிறேன்..!

இது உண்மைக் கதை.. கதை என்று நினைச்சு.. அது நல்லா இருந்தா ஒருக்கா ஜோராக் கைதட்டுங்கோ..! முடியல்ல...!

காசா - சர்வதேசம் அங்கீகரித்துள்ள இஸ்ரேலுக்கான கொலைக்களம்.

காசாப் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக காசா பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களில் பல சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 20 பலஸ்தீனப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் இத்தாக்குதல்களை ஐநாவோ அல்லது அமெரிக்க ஊதுகுழல் மனித உரிமை அமைப்புக்களோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..!

இஸ்ரேலை ஒட்டியே சிறீலங்காவும் தமிழர் தாயகத்திலும் பொதுமக்களை இலக்கு வைத்துக் கொலைக்களம் விரித்துள்ளது.

கிட்லருக்கு படுதோல்வியைக் கொடுத்த ஸ்டாலின் கிராட் சண்டைக்களமாக வன்னிப் போரரங்கு: "விடுதலைப் புலிகள்" ஏடு

குடாநாடு புலிகளின் பூரண கட்டுப்பாட்டுள் இருந்த போது புலிகள் மக்களை நோக்கி அன்பான வேண்டுகோளை வைத்தனர். எமது எல்லைகளை நாம் தான் பாதுகாத்து நிற்க வேண்டும். போராளிகளோடு இணையுங்கள் என்று..!

அன்று அந்த அழைப்பை குடாநாட்டில் வாழ்ந்த தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருப்பின் குடாநாடு 13 வருடங்களுக்கும் மேலாக சிங்கள ஆளுகைக்குள் சென்றிருக்காது. இதேதான் கிழக்கிலும்.. நிலை. அவை அவை தாயக நிலைமையைக் காட்டி.. தாங்க தாங்க எப்படி வெளிநாடு போய் வசதியா பாதுகாப்பா வாழுறது என்று சிந்திச்சிட்டு இருக்கினமே தவிர.. எங்கட தமிழர் படை வெல்லப்பட முடியாது என்று காட்டனும் என்று எத்தனை பேர் களத்தில நின்று சாதிக்க நிக்கிறியள் என்றதுதான் என் கேள்வி..??!

வன்னி மக்கள் தான் மீண்டும் இன்றும் புலிகள் வெல்ல முடியாதது என்று காட்ட வேண்டியவர்களாக நிற்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு மட்டும் தானா இக்கடமையை செய்ய வேண்டும் என்ற நியதி..??! மற்றவர்கள் தூர பாதுகாப்பா இருந்து கொண்டு.. புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்று காட்ட வேணும் என்று வேண்டுகோள்கள் வைக்கத்தானே இருக்கினம்..?! நீங்கள்.. நாங்கள்... புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்று காட்ட செய்ய வேண்டியவை என்ன.. அதைச் சொல்லுங்கள் என்று தான் கேட்கிறேன்..!

யுரியூப்பில தர வேற்றம் செய்யுறதும்.. யாழில காட்டூண் வரையுறதும் என்று சொல்லிடாதேங்க பிளீஸ்..! இவற்றால நிச்சயம் சிறீலங்காப் படைகளின் நில ஆக்கிரமிப்பை ஒரு மில்லிமீற்றர் தானும் தடுத்து நிறுத்த முடியாது..! போர்க் களத்தில் நின்று கொண்டும் காட்டூண் வரையலாம்.. யுரியூப்பில் தரவேற்றம் செய்யலாம்..!

சிறீலங்காவின் உயர்தரக் கல்வி ஆங்கில மொழியில் அமையப் போகிறது.

சிறீலங்காவில் உயர்தரக் கல்வியை ( ஏ லெவல்) எனி ஆங்கில மொழி மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கலை மற்றும் வர்த்தக பாடங்கள் முதற்கட்டமாக ஆங்கில மொழியில் போதிக்கப்பட உள்ளன. இது மேலும் இதர துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக தரத்துக்கு ஏற்ப பாடவிதானத்தைக் கொண்டிருக்கும் சிறீலங்கவின் கல்வித்திட்டம் ஆங்கில மொழியில் பிந்தங்கி இருப்பது அதன் பொருளாதார வளர்ச்சியில் செல்வாக்குச் செய்யும் என்பதைக் கருத்தில் கொண்டும்; ஆங்கிலத்தின் உலகலாவிய பாவனை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு சிறீலங்காவை இந்த நிலைக்கு மாறியுள்ளது..!

சிறீலங்காவில் இதுவரை காலமும் ஆங்கில மொழிக் கல்வி தெரிவுக்குரிய ஒன்றாக மட்டுமே இருந்தது. பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள் மட்டுமே நேரடியாக ஆங்கில மொழிமூலம் அமைந்திருந்தன.

வரவேற்கத்தக்க ஒரு மாற்றம்..!

கிட்லருக்கு படுதோல்வியைக் கொடுத்த ஸ்டாலின் கிராட் சண்டைக்களமாக வன்னிப் போரரங்கு: "விடுதலைப் புலிகள்" ஏடு

புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பது ஏன் இந்திய அமைதிப்படை காலத்திலேயே தெரிஞ்சு போச்சுத்தானே..! அந்த எல்லை குறுகியதாக இருந்தது. அதன் பின்னர்... எத்தனை போர்... எத்தனை நவீன இராணுவ மயப்படுத்தல்கள்..??!

புலிகள் அல்ல எல்லைகள் இழக்கப்படக் காரணம். மக்களின் ஒத்துழைப்பின்மையே காரணம். சுயநலம் பிடிச்சதுகள் ஒன்றா நின்று போரிட்டிருந்தா.. ஈழம் எப்பவோ வந்திருக்கும்.

இங்க கூட பாருங்க.. ஒரு கருத்தை தெளிவாச் சொல்ல வக்கில்ல.. பன்னாடை பரதேசி என்றிட்டு.. அப்புறம்... ஞானதோயம்... உச்சரிக்கிறது.. இப்படி தங்கட தற்திறமைகளை.. வெளியிட்டு பீற்றிக்கிறத்துக்கு.. செலவழிக்கிற நேரம் தான் அதிகமே தவிர போராட்டத்திற்கு தற்போதைய தேவையென்ன.. வெற்றியினை, பிடிக்கப்பட்டும் எல்லைகளை தமிழர்கள் தமதாக்குவது எப்படி.. என்பதை வன்னிக்களம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்திய- பாகிஸ்தான் கார்கில் போரை விட பலமான சூட்டாதரவை வன்னியில் சிறீலங்காப் படைக்கு பாகிஸ்தானும் இந்தியாவும் இதர வல்லரசுகள் சேர்ந்து வழங்கியுள்ளன. இதற்குள் ஒருவர் சொல்லுறார்.. அங்குலம் அங்குலமா படை முன்னேறுது.. புலி தோற்குது என்று.

இன்னொருவர் சொல்கிறார் சிங்களவன் ஓர்மமா வாறான்.. புலி ஓடுது என்று. அப்புறம் சொல்லுறார்.. புலிகள் வெல்லப்பட முடியாது என்று நிரூபிக்க வேண்டுமாம்.

கனடாவிலும் லண்டனிலும் அவுஸ்திரேலியாவிலும் இருந்து கொண்டு புலி வெல்லப்பட முடியாது என்று களத்தில் நிரூபிக்க உள்ள வழிவகைகளைச் சொல்லுங்கோ சனம்.. கேட்டிச் செய்யும்.. அதுவும் செய்யுறியள் இல்ல.. களத்தில நிற்கிற போராளிகளுக்கு உதவுறியளும் இல்ல. சும்மா.. சருகு சரசரத்த கணக்கா.. புறுபுறுக்கிறியளே தவிர..!

இப்படியும் பிரசுரிக்கிறாங்க.!

நீங்கள் தன்னிச்சையாக பிழையை இனங்கண்டு மின்னஞ்சல் அனுப்பினீர்களா.. அல்லது யாழ் களத்தில் இச்செய்தியைப் பார்த்த பின்னர் அனுப்பினீர்களா..??!

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

எனது இப்பதிவின் நோக்கம் பிழையை இனங்காட்டுவதும் அதை திருத்தத் தூண்டுவதும். அதுவும் தமிழ் இணைய ஊடகம் ஒன்று அப்பட்டமான பிழையோடு இருப்பதை இனங்காட்டுவதும் தான்..!

நான் வெறுமனவே மின்னஞ்சல் போட்டிருப்பின்.. சில நேரம் அது கணக்கில் எடுக்கப்படாத தன்மை கூட இருந்திருக்கலாம். ஆனால் இங்கு நிலை அப்படியன்று. நீங்கள் மட்டுமன்றி உங்களைப் போல இச்செய்தியைப் படிப்பவர்கள் பலரும் தவறைச் சுட்டிக்காட்டும் போது அவர்களும் திருத்த முனைவார்கள் இல்லையா..??!

வெறுமனவே ஊடகங்களை, ஊடகம் நடத்துவோரை பன்னாடைகள் செம்மறியாட்டுக் கூட்டங்கள் என்று திட்டிக் கொண்டிருப்பதிலும் அவர்களின் தவறுகளை இனங்காட்டுவது அவர்கள் தம்மை மெருகேற்ற உதவும் என்ற நோக்கத்தில் தான் இப்பதிவை இட்டேன்.

மற்றும்படி எனது பெயர் விளங்க நான் இந்த பிழைபிடித்தலை செய்யவில்லை. நான் இணையத்தில் புனை பெயரில் முகமூடியாகத்தான் இருக்கிறேன். எனவே எனது முகமூடிக்கு பெயர் கிடைச்சு எனக்கு என்ன ஆகிறது..??!

இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கும் அபாயம்

மனிதன் தோன்றியே ஒரு 5 இலட்சம் வருசம் தான் போயிருக்கு. 760 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் மனிசனே இருப்பானோ தெரியல்ல.. தொழில்நுட்பம் இருக்கப் போகுதாம்..! எவண்டா அந்த குருட்டு விஞ்ஞானி..??!

இப்படியும் பிரசுரிக்கிறாங்க.!

சின்னத் தப்புத்தான். இருந்தாலும் ஒரு ஊடகம் சிறிய தவறைக் கூட விட அனுமதிக்கக் கூடாது..! மக்களை நோக்கி சிறிய தவறான தகவலைக் கூட வழங்கக் கூடாது..! அதுதான் ஊடக நீதியாக இருக்க முடியும்.

போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்

தினம் தினம் கள முனையில் எதிரியின் நகர்வுகளை தடுக்க களமாடி வித்தாகும் மாவீரக் கண்மணிகளுக்கு வீரவணக்கங்கள்.

நிச்சயம் உங்கள் கனவு பலிக்கும். தமிழீழ தேசமதில் உங்கள் மூச்சுக் காற்று நிலைக்கும்..!

பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்

சுஜாதாவின் அறிவியல் நூல்களை வாசித்தன் மூலம் பள்ளி நாட்களில் நான் அறிந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர், சிறந்த அறிவியல் எழுத்தாளர்..!

இவரைப் போலவே அறிவியல் செய்திகளை தாய் மொழியில் தர வேண்டும் ஆர்வம் எனக்குள்ளும் எழுந்தது.. ஆனால் முடியல்ல..!

இவர் ஒரு இரசாயனப் பட்டதாரி. அதுமட்டுமன்றி மின்னணுவியல் பொறியியல் பட்டதாரியும் கூட..!

படைப்புக்களால் அறிவூட்டிய கலைஞனுக்கு கண்ணீரஞ்சலிகள்.

இப்படியும் பிரசுரிக்கிறாங்க.!

சுட்டிக்காட்டிய தவறு திருத்தப்பட்டுள்ளது. சங்கதி நடத்துவோருக்கு நன்றிகள்

அகதிகளை திருப்பி அனுப்புவதை தாமதப்படுத்துமாறு சுவிஸ் நீதிமன்றம் உத்தரவு

சிறீலங்காவின் தெற்கு மேற்குப் பகுதிகளில் தமிழர்கள் நிம்மதியாக அமைதியாக வாழ முடியுமாமே..! வாழ்த்து பார்த்தால் தான் புரியும்.. சுவிஸில இருந்து கொண்டு நீதிமன்ற வாசிப்புச் செய்யிறது இலகு..! நடைமுறையில் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வழங்கிற தீர்ப்பு என்பது இது அல்ல..! கொழும்பில் நிகழும் கடத்தல்கள் காணாமல் போதல்கள்.. சுற்றிவளைப்புக்கள்.. கைதுகள்.. பதிவுகள்.. நடமாட்ட இறுக்கங்கள்.. சோதணைகள் இவையெல்லாம் இயல்பு வாழ்க்கையா.. சுவிஸ் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை..????!

இப்படியும் பிரசுரிக்கிறாங்க.!

சங்கதி.கொம் எனும் தமிழ் செய்தித் தளம்.. பிரித்தானியா விடுத்த எச்சரிக்கைக்கு.. நோர்வேயின் கொடியோடு செய்தியைப் பிரசுரித்திருக்கிறது.

எப்பதான் இவர்கள் உருப்படப் போகிறார்கள்..!

அடிப்படை அறிவே இல்லையா இந்த ஊடகங்கள் நடத்துறவைக்கு..??!

http://www.sankathi...._...amp;ucat=3

புலிகளின் 14 உடலங்கள் ஒப்படைப்பு.

இந்த மாதம் மட்டும் இதுவரை இராணுவத்தின் 3 உடலங்களைப் புலிகளும் கையளித்திருப்பதாக அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்கள ஆஸ்கர் அவோர்ட்ஸ்!!

நானும் பிறந்தது முதல் ஒரு அவாடுக்கு.. பாடுபடுறன்.. கிடைக்கவே இல்ல. இறுதியில எனது 96வது வயசில.. யாழ் ஒஸ்கார் அவாடை வென்றதை இட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அதை வழங்கிய.. (நம்ம பேராண்டி என்ற ரகசியத்தை மறைச்சிட்டு..) ஜம்முக்கு நன்றி நன்றி நன்றி.

விடுதலைப்புலிகள் தமது பலத்தை படையினரிடமே காட்டவேண்டும் - சங்கரி

புலி என்றாலும் காட்டுக்க தென்னந்தோப்புக்க இருக்குது. ஆனால் ஆனந்த சங்கரியாரின் மதிப்புக்குரிய சிங்கள இராணுவம்.. பாடசாலைகள்.. குடிமனைகள்.. வைத்தியசாலைகள்.. கோவில்களை உள்ளடக்கி எல்லோ இராணுவ வலயங்கள் அமைச்சு.. குடியிருக்குது. அப்ப சங்கரியார்.. அவையையும் எல்லோ சனத்தை விட்டு பொட்டல் வெளில போயிருக்கச் சொல்லி வற்புறுத்த வேணும்..! அப்படியே தானும்.. கொழும்பில பதுங்கிக் கிடக்காம.. கிளிநொச்சியில போய் மக்களிடம் குறைகளைக் கேட்கலாமே.

கொழும்பில இருந்து கொண்டு கடற்புலிகளின் தளம் எங்க இருக்கென்று கண்டுபிடிக்கிற அளவுக்கு சங்கரியார் இராணுவத்துக்கு உளவு பார்க்கிறார் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆக தேசத்துரோகச் செயலுக்காக சங்கரியாருக்கு மரணதண்டனை வழங்குதல்.. எந்த வகையிலும் தப்பில்ல.!

சங்கரியார் பொதுமக்கள் கொல்லப்பட்டது என்று சொல்லுறார்.. இராணுவப் பேச்சாளரோ புலிகள் இறந்ததாச் சொல்லுறார். சங்கரியார் சிங்களப் பொதுமக்களுக்காக அழுகிறார்.. இவ்வளவு காலமும் வன்னியில் உயிரிழந்த பொது மக்கள் அவரின்ர அனுதாபத்துக்கு இலக்காகல்ல. இப்ப சிங்களவர்கள் இறக்கும் போதுதான்.. தமிழ் மக்கள் இறக்கினம் என்றது சங்கரிக்கே தெரிய வந்திருக்கென்றால்.. இராணுவப் பேச்சாளர், மகிந்த போன்றவைக்கு தெரிய வர இன்னும் சிங்களவர்கள் தியாகம் செய்ய வேண்டும் போலத்தான் தெரியுது..!

காதலனுடன் இணைந்து கணவனை கொன்று விட்டு விடுதலைப் புலிகள் மீது பழி - பெண் கைது

அடப்பாவிகளா... தமிழாக்கள் தான் புலியின்ர பெயரை அசைலம் அதுஇதென்று அடிக்க யூஸ் பண்ணிறாங்க என்றா.. நீங்கள் சிங்களவர் இதுக்குமா...??! முடியல்ல...!

புலிகளின் 14 உடலங்கள் ஒப்படைப்பு.

வெலிஓயா மற்றும் மன்னார், வவுனியா களமுனைகளில் பலியான விடுதலைப்புலிகளின் 14 உடலங்களை இராணுவம் அனுராதபுரத்தில் வைத்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்துள்ளது.

கடந்த வாரமும் 9 புலிகளின் உடலங்களை இராணுவம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..!

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மோதல் - 11 மாணவர்கள் காயம்

இதுவே அமெரிக்கா என்றால் ஒரே சூடுதான். 11 பேர் பலி என்று செய்தி வந்திருக்கும்..!

பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்! பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!!

18ம் திகதி வெளில வந்த பொட்டம்மான் டம்மி..! 13ம் திகதி காட் அற்றாக் வந்த பொட்டம்மான் தான் உண்மை. யாழ் கடும்போக்காளர்கள் மந்தைகள். அவர்களுக்கு சிந்திக்கத் தெரியாது. அதால நாங்க சந்தியில சிந்து பாடுவம்..!

இப்படித்தான் 1989இல் தலைவரை இந்தியப்படை கொன்ற பின்னர் இன்றும் சிலருக்கு சந்தேகம். இருப்பது உண்மையான வே. பிரபாகரனா இல்ல டம்மியா என்று..! அப்படியானவர்களும் பத்திரிகை.. ஊடகம் நடத்தலாம். அதற்கெல்லாம் ஒரு தகுதி தேவை இல்லைத்தானே..!

அஜீவன் தொடர்பில் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அவர் விமர்சனங்களை உள்வாங்கிறாரோ இல்லையோ தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கிக் கொள்ளுறார். அதுவும் ஒரு வகையில நல்ல விளம்பரம் தானே..!

குறுகிய நேர இடைவெளியில் புலிகளால் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியும்: "சண்டே ரைம்ஸ்"

குறுக்காலபோறவைக்கு சிலதை வெளில சொல்ல முடியாம இருக்கிறது.. குத்துது குடையுதாம்.. அதுதான் வெளில சொல்லிட்டா.. விசயம் வெளிக்கும் தானே..! ஏன் கனக்க.. உங்களுக்கே உதுகளைக் கேட்க வேணும் என்றது விரும்பம் தானே..!

யாரைச் சொல்லுறீங்க கோடரிக்காம்புகள் என்று..

குறுக்காலபோவனுக்க குடையுறது உதுகள் தான். அதில உண்மையும் இல்லாமல் இல்லத்தானே. புலிகளும் பெரிசா தோற்றம் காட்டி சனத்தை மாயைக்குள்ள வைச்சிருந்தது தப்புத்தானே..!

நான் பல தடவை கண்ணாலும் பார்த்து காதாலும் கேட்டனான்.. கிழக்கில ஒரு அங்குலமும் விட மாட்டம் எண்டதை..! இல்லை என்றீங்களா..??!

இளந்திரையன் மட்டுமல்ல.. தமிழ்செல்வன்.. எழிலன்.. பாலகுமாரன் சொன்னதுகளை கொஞ்சம் ரிவைன் பண்ணிக் கேட்டுப் பாருங்கோ..!

கோடரிக்காம்புகள் என்று திட்ட முதல் சில யதார்த்தப் புறநிலைகளை புலிகளும் மறைக்க முற்பட்டிருக்கினம் என்று உண்மை. மக்களை ஒரு மாயைக்குள்ள வைச்சிருந்ததாலதான் இப்ப சனம் விமானத்தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்த முடியாம சாகுதுகள்.

தமிழ்செல்வன்.. சொன்னவர் எனி தமிழீழக் கட்டுமானங்களை விமானப்படை தொடவும் ஏலாது என்று. இறுதில் என்னாச்சு.. அவரே விமானப்படைக்கு இரையானார்.. இதெல்லாம் ஏன்..??!

உதுகளை எதிர்தரப்பில நிக்கிறவன் சுட்டிக்காட்டி மக்களை குழப்பத்தானே செய்வான்.. நாம் அதற்கு என்ன பதில் வைச்சிருக்கிறம் கொடுக்க..???!


திருமலைல மாவிலாறு அணையைப் பூட்டீட்டு சொன்னவை.. ஒரு அங்கில நிலமும் விடமாட்டம் எண்டு...

அப்புறம் தமிழ்செல்வன் அண்ண சொன்னவர் எமது கட்டுமானங்களை சிறீலங்கா விமானப்படை தொடவும் ஏலாது என்று...

அப்புறம் இளந்திரையன் சொன்னவர் எங்களட்ட இத்தகைய தாக்குதல் விமானங்கள் மட்டும் தான் இருக்கென்று நாங்கள் சொல்லவில்லை. விமானத்தாக்குதல் தொடரும் வெற்றிச் செய்திகள் வந்து குவியும் என்று...

இதோ இறுதிப் போர் தொடங்குது. ஈழம் பெற எல்லாரும் புறப்படுங்கோ எனிப் போர் தொடங்கினா 3 மாதத்துக்கும் கூட அதிகரிக்காது எண்டும் சொன்னவை..

அப்புறம் சொன்னவை எனி போர் தெற்கிலதான் என்று.. இரண்டு குண்டு வைக்கிறது போராமோ..??!

கிழக்கு தளபதி ரமேஸ் சொன்னவர் எங்களட்ட இருக்கிற ஒரு ஆயுதத்தைப் பாவிச்சாலே இராணுவ முகாங்களில் ஒரு இராணுவமும் இருக்க முடியாதென்று...

நாங்களும் புலம்பெயர்ந்த நாடுகளில இறுதிப் போர் என்று சொல்லிக் கேட்க காசைக் கொடுத்திட்டு இலவு காத்த கிளியாக இருக்கிறம்.. வெற்றிச் செய்தியையும் காணம்.. ஒரு செய்தியையும் காணம்...

கடைசியில விமானப்படைக்கு இரையாகி தமிழ்செல்வன் அண்ணா மட்டுமல்ல பலர் பலியாகிட்டினம். கிழக்கில அங்குலமில்ல முழுசுமே பறிபோகிட்டுது.

அப்புறம் வடக்கைதான் பாதுகாப்பினமென்றால் மன்னாருக்குள்ளால அதுவும் புட்டுக்கிட்டு போகுது.

ஆமிட பொடியை அள்ளி அள்ளி கொடுப்பினம் என்று பார்த்தா ஆமிக்காரன் அள்ளி அள்ளிக் கொடுக்கிறான்..!

இப்ப புதிசா இது

QUOTE
இதனிடையே இரு முக்கிய மாற்றங்கள் தொடர்பாக தற்போது சில கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஒன்று விடுதலைப் புலிகள் பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் ஆயுதத் தளபாடங்களை தருவித்துள்ளதாக புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்- இக்பால் அத்தாஸ்

பாருங்கோ ஆயுதம் வந்திட்டுது.. அடிய...!

எனி வெற்றிச் செய்தி தலைவர் தருவார்..! நாங்கள் சீன வெடி கொழுத்துவம்.. புகலிடத்தில... காசைக் கொடுத்திட்டு...சும்மா குந்தி இருந்து கொண்டு..!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

என்ன கேள்வி இது. கேக் எப்படி முட்டை போடும்.. கோழி போன்ற பறவைகள் தானே அதிகம் முட்டை போடும்..??!

நான் சைவம். ஆனா கோழி பொரிச்சிருந்தா சாப்பிடுவன்.

பூச்சி அல்ல.. லேடி பேட் என்று அழைக்கிற வண்டு அது. அது என்னை பிறந்த நாளுக்கு வாழ்த்த வந்திச்சு. பிடிச்சு கேக்கு மேல விட்டிருக்கேன்..!

என்னை மலர்களும் வாழ்த்த வந்திச்சுதுகள். அதுகளையும் கேக்கு மேல பிடிச்சு விட்டிருக்கேன்.

மனிசரை விட இவற்றின் வாழ்த்துக்கள் இதய சுத்தியானவை.. அதுதான் இத்தனை மதிப்பளிப்பு..! மனிசர் ஒருக்கா வாழ்த்துவாங்க அடுத்த தடவை மனமாறி திட்டுவாங்க.. இல்ல திட்டிக்கொண்டே ஓடி ஒளிச்சிடுவாங்க..!

Posted Image


வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் பிறந்த நாள் பரிசு...! சண்டை பிடிக்காம பங்கிட்டு சாப்பிடுங்க..! அடுத்தவன் பங்கை பறிக்க நினைக்காம அடுத்தவனுக்கும் கொடுத்து நீங்கள் உங்கட பங்கைச் சாப்பிடுங்க.

லண்டன் மாப்பிள்ளைக்காக காத்திருப்போர் இனிமேல்....!

மான் மரை முயல் வளர்க்கிறது சரி. ஆனால் இறைச்சிக்கு... என்றது சரியான தகவலா..??! எதற்கும் லண்டன் பொலீசிடம் கேட்டுச் சொல்கிறேன். அப்படி இல்லை என்றால் விக்கிற கடைகளைப் போட்டுக் கொடுக்கிறேன்..!

தமிழ் பேசும் புத்திஜீவிகள் குழு லண்டனிலிருந்து இங்கு வருகை

அடபாவிகளா.. லண்டனில கோயில் வைச்சு சனத்தை மேய்க்கிறவனும்.. காட்டிக் கொடுத்திட்டு லண்டனில பதுங்கினவனும்.. வடக்கில இருந்து எழும்பச் சொன்னதன் தார்ப்பரியம் புரியாம தொப்பி பிரட்டினவனும்.. தமிழ் மக்களுக்கான புத்திசீவிகள்.. முடியல்ல சாமி முடியல்ல..!

உதுகள உங்க லண்டனில ஏன் நாயே என்றும் எவனும் மதிக்கிறதில்ல.. உதுகள்..ஊர் சனத்துக்கு விடுப்புக்காட்ட.. அங்க சனத்துக்கு ஜனநாயகம் போதிக்க சிறீலங்கா அரச பிரதிநிதிகளா வருகினம் போல. உவையட்டத்தான் ஆனந்த சங்கரியும்.. டக்கிளசும் அடிக்கடி விசிட் அடிக்கிறவை போல லண்டனில..!

அன்பான தாயக மக்களே.. உங்களுக்கு ரோசம் மானம் இருந்தா.. புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்திட்டு.. சிங்களவனுக்கு அரிவருடிப் பிழைக்கும்.. உந்த புத்தி சீவிகளை முதலில.. அடிச்சு விரட்டுங்கோ..! இவர்கள் போலிப் பித்தலாட்டக்காரர்கள்..! விளம்பரம் தேடிகள்..! அப்படி சொல்ல ஆசைதான்.. ஆனா நீங்கள்.. இதைச் செய்வியளோ...??!

QUOTE(Iraivan @ Feb 23 2008, 08:27 AM)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிட்டன் பிரிவுத் தலைவர் கே.சுப்பையா, இப்படியொரு பிரிவுத் தலைவரும் வருகை தருகின்றாரா? தலைவர் பிரிட்டன் ஜெயிலில். பிரிவுத்தலைவர் சுற்றுலாவில் .

ஊரில சுருட்டினதுகள லண்டனில முதலீடு செய்ய ஒவ்வொரு காட்டிக் கொடுப்பாளனுக்கும் ஒவ்வொரு நாட்டில பிரதிநிதி இருக்கிறான். அவனுக்கும் அவன்ர குடும்பத்துக்கும் வருமானம் வருகுதில்ல. சும்மா இருப்பானா..??!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எப்படியோ இறக்கப் போற நாள் வரத்தானே போகுது. அதைத்தான் எதிர்பார்த்திட்டு இருக்கிறன். எண்டன்.

40க்குள்ள என்றா என்ன எனக்கு 2 வயசு என்றீங்களா..??! ஐயோ ஐயோ எனக்கு 96 வயசுதாங்க..!

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

லண்டன் மாப்பிள்ளைக்காக காத்திருப்போர் இனிமேல்....!

எனியாவது தமிழ் பெட்டையள் பொடியள் ஆங்கிலம் படிப்பாங்கள். குறிப்பா பெட்டையள். அவைதான் உங்க வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்காக நேத்திக்கு விட்டு வளர்க்கப்படுறவை..!

லண்டன் வந்து அங்க ஒன்றும் வெட்டி விழுத்தப் போறதில்ல.. ஒரு பிள்ளையைப் பெறுவினம்.. அதை வண்டில்ல வைச்சிட்டு தள்ளிட்டு திரியுற ஜொப்புக்கு ஆங்கிலம் எதுக்கு.. ஆங்கிலம் படிக்கச் சொல்லுறது ஆங்கிலேயர்களின் வாழ்க்கையோடு ஒத்துழைச்சு அவங்களைப் போல வாழ...! புட்டும் முருங்கக்காயும் என்று அலையுறவைக்கு... ஆங்கிலேயர் போல வாழ... ஆங்கிலம்..???!

தமிழ் கடைகள் வழிய.. மான் பிரட்டல்.. முயல் வறுவல் என்றெல்லாம் எழுதிப் போட்டு விற்கிறார்கள். மான்.. முயல் எல்லாம் வேட்டையாடத் தடை. எப்படி.. இதையெல்லாம் விற்கிறார்களோ..??! அதுவும் லண்டனில்.. தமிழில் எழுதி வைச்சு.. தமிழர்களுக்கு விற்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதி வைக்கிறதில்ல..!

இனவெறியில் படையில் இணைந்து உயிர் துறந்த பிக்கு

கொண்ட கொள்கைக்காய் உயிரைத் தியாகம் பண்ணின பிக்குவைப் பாராட்டத்தான் வேணும். நம்மாக்களோ போராடப்பயந்து ஊரைவிட்டு ஓடி வாறாங்க.. பிக்குவோ.. போராடப் போயிருக்காரே களமுனைக்கு..! யார்.. உயர்ந்தவர்..??! சிந்தியுங்க புலம்பெயர் விற்பன்னர்களே..!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

என்ன நக்கலா.. பிள்ளை குட்டி வைச்சிருக்கிற எவன் சந்தோசமா இருக்கிறான்..??!

நாளைக்கு எல்லோ என்ர பிறந்த நாள். ஒரு நாள் முந்தி பிறக்க வைச்சிட்டீங்களே பேராண்டி.

நான் பிறந்த நாள் எல்லாம் கொண்டாடிறதில்ல. இறந்த நாளை எதிர்பார்த்திட்டு இருக்கிறன்..!

அவள் ஒரு மாதிரி

தோல் கறுப்பு என்பதற்காக வெறுக்கப்படும் மனிதர்களில் பெண்கள் மட்டும் தான் அடக்கம் என்றில்லை. தோல் கறுப்பு என்பதற்காக பெண்களால் வெறுக்கப்படும் பல ஆண்களும் அடக்கம். ஏன் ஓர் மனித குலமே அடக்கம்..! முதலில நீங்கள் இதைப் புரிஞ்சுக்கனும்..!

அதுமட்டுமன்றி தோலின்ர நிறத்திலதான் அழகு இருக்கென்று நினைக்கிறது மனித வாடிக்கையாக்கப்பட்டுள்ளது. வயதாக ஆக உருக்குலையும் புற அமைப்புகளில அழகைக் காட்டிறப்போவே.. இதை உணரனும். எத்தனை பேர் உண்மையா இயல்பா உணருறாங்க. சிலர் தான் கறுப்பை கலியாணம் செய்தன் என்று அதை புரட்சியா சொல்லிக்கினம்.. இது கூட அடிமனதில் உள்ள தோல் கறுப்பு என்ற தாழ்வு எண்ணத்தில் வெளிப்பாடுதானே..!

ஆனா உந்த வெள்ளைத் தோல் மாயையில இருந்து விடுபடுறது இப்படி அடுத்தவைக்கு புத்தி சொல்லேக்க மட்டும் சரியா இருக்கும்... தனக்கென்று வரேக்க...???! இப்படி எழுத்தில உலகத்தை ஏமாற்றி "புரட்சி" செய்யுற மாமன்னர்கள்/மன்னிகள் பலரை உலகம் கண்டிட்டுது..!

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்

"புரட்சி"தலைவி தான் தலைவர். அவாவுக்குத்தானே முதலில் மாலை போட்டிருக்குது.

இப்ப எல்லாம் கேய்.. லெஸ்பியன்களுக்கும் சிவில் சட்டத்தில குடும்பமா வாழ வழி செய்து கொடுக்கினம். காரணம்.. அவை அசாதாரண மனிதர்களாக குறைபாடுகளோட இருப்பதால..! டவுன் சின்ரோம் ஆக்கள் போல.. ஒரு வகை..! தமிழ் நாட்டில தமிழரை ஆள ஒரு சாதாரண மனிதன் இல்லையே என்பது கவலைக்குரியதுதான்..!

அண்மையில் கலைஞரும் தனக்கு இளமை திரும்ப என்று சாத்திரப்படி ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்ததாக சொல்லிகிறார்களே...??!

இதற்காக ஏன் "புரட்சி"த்தலைவி கவலைப்பட வேணும். அவாதான் "புரட்சி" செய்திட்டாவே.

யாழ் களத்திலும் சில "புரட்சி"வாதிகள் கேய்.. லெஸ்பியனுக்கு.. புறஸ்ரிரியுருக்கு உரிமை வேணும்.. சம்பளம்.. ஓய்வூதியம் கொடுக்கனும் என்று அறைகூவல் விடுத்திச்சினமே..!

மனிதர்கள் ரெம்பத்தான் ஆட்டம் போடுறாங்க பூமி மேல. உதென்றும் நல்லதுக்காப் படேல்ல..!

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கையிலிருந்து "நம்பிக்கை"

புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் தனது பொய்ப்பிரச்சாரங்களை முடுக்கிவிடவும் அதற்காக புலம்பெயர்ந்துள்ள தாயக விரோத சக்திகளைப் பாவிக்கவும் சிறீலங்கா அரசு பலமான முயற்சிகளைச் செய்து வருகிறது.

தமிழர்களின் போராட்டத்தின் முக்கிய பலமாக புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு விளங்குவதை உணர்ந்து கொண்டுள்ள சிறீலங்கா தாயகத்தமிழர்களின் விடுதலைக் கனவை நசுக்க புலம்பெயர்ந்த தமிழர்களின் தயவையும் வேண்டி நிற்கிறது போலும்..! இது தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்..!

இந்தோனிசியாவில் பயங்கர பூமி அதிர்ச்சி - சுனாமி எச்சரிக்கை

2004 ஆசிய சுனாமிக்குக் காரணமான பூமி அதிர்ச்சி ஏற்பட்ட இடத்தில் மிகப் பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தோனிசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரபாகரனை தப்ப விட யோசித்தோம்-இலங்கை

.........................

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

பேராண்டி.. காலக்கண்ணாடி ரெம்ப கலர்வுள்ளா இருக்குப்பா..! நன்றி.

Posted Image


:lol: :lol: :lol: :lol:


Edited by கலைஞன், 03 March 2008 - 04:21 AM.


#35 கரும்பு

கரும்பு

  உங்களில் ஒருவன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,930 posts
 • Gender:Male

Posted 23 March 2008 - 04:18 AM

யாழ் காலக்கண்ணாடி 23-03-2008குறிப்பு: கீமானை பாவிக்காது யாழ் பெட்டிமூலம் எழுதப்பட்ட கண்ணாடி இது. எழுத்துப்பிழைகள் பலப்பல இருக்கக்கூடும். திருத்தி வாசிக்கவும்!! நன்றி!

யாழ் இனிது [வருக வருக]

1. யாழ் அரிச்சுவடி: காசிபாரதி, கனிஷ்டா எனும் பெயர்களில் ரெண்டு தாய்க்குலம் இணைச்சு இருக்கிறீனம். லோயர், கொக்குவிலான், விஓரி நெட்வேர்க், ரேடியோபிரியன், ரவிவர்மா எனும் பெயரிலும் புதிதாக ஆக்கள் இணைஞ்சு அரிச்சுவடியில் கருத்து எழுதி இருக்கிறீனம். மிச்ச ஆக்கள பற்றி தெரியாது. அனைவருக்கும் நல்வரவு. மற்றது முரளி என்பது கலைஞன் எனும் மாயவிம்பத்தின் உண்மைத்தோற்றம்.

2. யாழ்முரசம்: நிருவாகிகள் பகுதியில் இணையவன் மாத்திரம் தான் யாழுடன் அடிக்கடி இணைஞ்சு இருப்பதுபோல் தெரிகின்றது. மோகன், வலைஞன், யாழ்பிரியா ஒளிஞ்சு திரிகின்றார்கள். யாழ்பாடி திடீர் தலைமறைவு போல இருக்கிது. எழுவானும் எழுதக் காண இல்லை. இத்தாலில் சகலரும் அறியத்தருவது பகுதி பூனைக்குட்டி, மன்மதரசாவின் தலைமறைவு காரணமாக முடங்கி இருக்கின்றது.

3. யாழ் உறவோசை: விகடனில் தூயாவின் வலைப்பூ பற்றிய செய்தி வந்துள்ளது. வாழ்த்துகள்! சாத்திரிக்கும், குளக்காட்டனுக்கும் ஏதோ உதவி வேணுமாம். காலம் கடந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்று காவியா அவர்கள் தனது உள்ளக்குமுறலை வெளியிட்டு இருக்கின்றார். டைகர் வானொலி பேட்டிப்பக்கத்தில் இணுவில் கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் பேட்டி இடம்பெற்றுள்ளது.

செம்பாலை [செய்திக்களம்]:

1. ஊர்ப் புதினம்: சேர்.ஆர்தர்.சீ.கிளார்க், அனுரா பண்டாரநாயக்கா, சிறீ லங்கா இராணுவத்தின் முன்னாள் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க ஆகியோரின் மரண அறிவித்தல்கள் வந்து இருக்கின்றன. குறுக்காலபோவான் தொப்பிகல காட்டில ஒரு நிமிசம் வசதியாக 1 க்கு இருக்கலாம் எண்டு சொல்லி இருக்கிறார். நிறையப்பேர் அதை ஆமோதித்து உள்ளார்கள். திருகோணமலை கடற்படைத்தளம்,சீனன்குடா விமானப்படைத்தளம் புலிகளின் பார்வையில்? என்று கறுப்பி ஏதோ கேட்க அதுக்க நிறைய பிடிபாடு நடந்து இருக்கிது. :lol: ஆமியும், புலியும் அடிபடுதோ இல்லையோ இஞ்ச நிறையப்பேர் தங்களுக்க அடிபடுறத பார்க்க பரிதாபமா இருக்கிது. புதிய வகை கடலடித்தாக்குதல் எனும் தலைப்பில் கிளுகிளுப்பாக பல விசயங்கள் போய்க்கொண்டு இருக்கிது.

2. உலக நடப்பு: காதலி சட்டிங்கில் திட்டி அப்பாவி மாணவி பலியாம் எண்டு நெடுக்காலபோவான் தனக்கு பிடித்தமான செய்தியை இணைச்சு, பிறகு வழமையான அறுவையையும் தந்து உள்ளார். சும்மா பொழுதுபோக கருத்து எழுதி கடைசியில நெடுக்காலபோவானின் அறுவை தாங்க முடியாமல் இஞ்ச பெண்கள் யாராவது மனம் உடைந்து தற்கொலை செய்யாமல் இருந்தாலே போதும் போல இருக்கிது. வத்திக்கான் புதிய பாவச்செயல்கள் பற்றி அறிவித்து இருக்கிதாம். புதிய புண்ணியச்செயல்கள் பற்றி அறிவிக்காமல் எப்பவும் பாவம் பற்றியே கதைக்கவேண்டிய அளவுக்கு உலகம் கெட்டுப்போச்சிது. நம்ம பயபிள்ளையள் எப்படி டிகிரி எடுத்துக்கிறாங்க எண்டு நெடுக்காலபோவான் தனது மனச்சாட்சியை பார்த்து ஒரு கேள்வி கேட்கின்றார். இதில கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏன் என்றால் பழங்காலத்தில முனிவர்கள், ஞானிகள், அரசர்களே பிட் அடித்து இருக்கின்றார்கள் என்று வரலாறு சொல்லிது. திருட்டு பிடிபடாதவரை ஆபத்துக்கு பாவம் இல்லை என்று யாரோ சொன்னார்கள். :unsure:

3. நிகழ்வும் அகழ்வும்: எங்கள் விகடகவி வரைந்த கருத்துப்படத்தை கனடாவில் இருந்து வரும் ஓர் இலவச பத்திரிகையின் முகப்பில் தற்செயலாக நேற்று பார்த்தேன். வாழ்த்துகள்! ஒசாமா தோற்பது ஏன்? - முதல் பத்துக் காரணங்கள் எனும் தலைப்பில் பண்டிதர் அவர்கள் சிறப்பான ஒரு காணொளியை உருவாக்கி இணைத்து இருந்தார். பாராட்டுக்கள்!

4. செய்தி திரட்டி: சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்: கறுப்பான ஆண்களே பெண்களின் தேர்வு எண்டு சொல்லி சுண்டல் ஒற்றைக்காலில நிக்கிறார். சுண்டல் தான் கறுப்பு நிறம் என்றும் பகிரங்கமாக அறிவித்து இருக்கின்றார். யாராவது சிவப்பு நிறமான பெண்கள் விருப்பம் என்டால் சுண்டலை தொடர்பு கொண்டு தேவையான அளவு கடலையை பெற்றுக்கொள்ளுங்கள். :wub: பணக்காரர்களிடம் பணம் பிடுங்க.. தங்களைத் தொலைக்கும் பெண்கள் என்று ஏழ்மையில் வாழும் நெடுக்காலபோவான் கவலைப்படுகின்றார். பணக்காரர்களின் பணம், ஏழைகளின் இதயம் எண்டு எல்லாப் பக்கத்தாலையும் ஒரே களவா இருக்கிது.

படுமலைபாலை [தமிழ்க்களம்]:

1. எங்கள் மண்: தமிழர் வரலாறு என்று ஈழவனும், தென்மாராட்சி என்று சுவாரசியமான விடயங்களை இணைச்சு இருக்கின்றார்கள். டைகர்பிளேட் அவர்கள் யேர்மன் மொழியில் தமிழீழ வரலாறு பற்றி கூறுகின்றார். இதுதவிர ஜேர்மன் மொழியும் இலவசமாக சொல்லித்தருகின்றார். ஜேர்மன் மொழியில 'இக் லீப ட்திக்' என்றால் ஐ லவ் யூ வாம் எண்டு சபேஷ் சொல்லிறார்.

2. வாழும் புலம்: பிரான்ஸ் உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள். வாழ்த்துகள்! லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதையில தமிழன் ஒருத்தன் நின்றதை தான் கண்டதாய் கிருபன் சொல்லுறார். ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில என்ன என்ன பிரச்சனையோ. சில விசயங்கள் பற்றி நாங்கள் கிண்டல் செய்யாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறன். நீங்களும் பலபேர் ஏஜென்சிகளுக்கு லட்சக்கணக்கில காசக் குடுத்து உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு கொள்கலன்களுக்கையும், புகையிரதத்துக்கையும் ஒளிஞ்சு வந்த வரலாறுகள கொஞ்சம் நினைச்சு பாருங்கோ.

3. பொங்கு தமிழ்: 7 அடி உயரமும், 4 அடி அகலமும் உள்ள மெகா சைஸ் திருக்குறள் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளதாக சுழியன் சொல்லிறார்.

4. தமிழும் நயமும்: பறவைகள் பறந்தன - இது இறந்தகாலம், பறவைகள் பறக்கின்றன - இது நிகழ்காலம், இப்பொழுது இதனுடைய எதிர்காலம் என்ன? எண்டு கேட்டுவிட்டு அதன்பதில் பறவைகள் பறப்பன இப்படி சபேசன் கூறுகின்றார். ஒழுங்கா எழுத்துபிழை இல்லாமல் மனுசன் எழுதுறதே பெரிய காரியம். இலக்கணமும் பார்த்தால்...?

5. உறவாடும் ஊடகம்: தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் பற்றி வெற்றிச்செல்வன் தகவல் தந்து இருக்கின்றர். புலிகளின்குரல் இணையத்தளத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியீடாக வெளிவந்த புதிய இறுவெட்டு விழித்திருப்போம் என்ற விழிப்புணர்வு பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன, மற்றும் 21.03.2008 அன்று புலிகளின்குரல் இணையதளத்தில் தேனிசை செல்லப்பாவின் புது மெட்டு புது வேட்டு இசைத்தட்டு வெளிவருகிறது ஆகிய தல்வகளை வீ.ஓ.ரி நெட் வேர்க் தந்து இருக்கிறார். ரீரீஎன் வேர்சஸ் ருபவாகினி எண்டு ஏதோ சொல்லி ஈழத்துக்காக பிறந்தவர் வாய்விட்டு சிரிக்கிறார்.

சரி இனி கொஞ்சம் வேகமா போறன். ஸ்கூல் லைப்ரரி மூடப்போறாங்கள்..

செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]:

வன்னிமைந்தன் பாடலாசிரியர் ஆகி உள்ளார். வாழ்த்துகள்! நிழல் எனும் தலைபில் யமுனா அழகிய ஓர் கவிதை எழுதி உள்ளார். வாழ்த்துகள்! இதுதவிர விகடகவி, கனிஷ்டா, அகத்தியன், வன்னிமைந்தன், காவலூர் கண்மணி ஆகியோரும் நல்லா கவிதை எழுதி இருக்கிறீனம். ஆனாலும் நெடுக்காலபோவான் எழுதிய சூப்பரான ஒரு கவிதையே இந்தவார காலக்கண்ணாடியில் வெற்றிபெறும் கவிதையாக தவழ்கின்றது.

நேருவின் பேரனிடம் நீதி கேட்டவள்..!

தெந்தமிழீழத் தாயவள்
செருக்களம் போயினள்
உடலினில் குண்டு சுமந்தல்ல..
வயிற்றினில் பசி சுமந்து..
நெஞ்சினில்
புதல்வர் தம் உணர்வோடு..!

தமிழீழ விடுதலைக்காய்
மாமாங்கம் தனில்
மங்கை அவள்
தனித்து நின்று
துணிந்து திறந்தாள்
சாத்வீகப் போர்க்களம்.

காந்திய தேசத்தின்
ஆக்கிரமிப்பு இராணுவம்
தமிழீழ மகளிர் தம்
மானம் குதறுகையில்
பொங்கினள் பூபதி அம்மா
நேருவின் பேரனிடம்
நீதி கேட்டு..!

தாயவள் பசியினில் துடிக்கையில்
நேருவின் பேரன்
நெஞ்சினில் களிப்புடன்
தமிழின அழிப்பினில்
கழித்தனன் காலத்தை டில்லியில்..!

நாட்கள் கழிகையில்
பொங்கிய பூவவள்
பூகம்பமாய் சிதறினள்
சாவினில் சரித்திரம் படைத்திட்ட
தமிழீழத் தாயவளாய்
மின்னினள் தமிழீழ வானில்.

அன்னையவள் இட்ட
சுதந்திரத் தீயினில்
பூவையர் திரண்டனர்
புலிகளாய்..!
தமிழீழ தேசத்தின்
ஒளி விளக்குளாய்..!

விடுதலைப் பயணம்
இன்னும் முடியவில்லை...
தொடரும் ஆதிக்கக் கரங்களின்
அடங்காத வெறிக்கு
முடிவு வரும்..!
முடித்து வைப்போம்
அன்னையவள் கனவினை..!
சத்தியம் செய்வோம்
அம்மா பூபதி
நினைவினை மனதினில்
சுமந்துமே..!


எங்க எல்லாரும் ஒருக்கால் நெடுக்காலபோவானுக்கு கைதட்டிவிடுங்கோ..

கனகாலத்துக்கு பிறகு வந்த தூயா "நானும் எனது ஈழமும்" என்ற கதையின் 8வது பகுதியை தந்து இருக்கின்றா. வாசிக்கும்போது கவலையாக இருந்தது. இன்னும் பல கதைகள் இணைக்கப்பட்டு இருக்கிது. வாசிக்க நேரம் கிடைக்கவில்லை. மன்னிக்கவும். கதை சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!

பெரிய ஒரு எழுத்தாளர் சுஜாதா இறந்துபோனார். அவருடனான தனது அனுபவங்களை கவிஞர் பகிர்ந்து இருக்கின்றார். இதுதவிர மாயா, தஞ்சா ஆகியோர் பற்றி வேரும் விழுதும் பகுதியில் இளைஞன் தகவல் தந்து இருக்கின்றார்.

மற்றது தன்னைக் கொல்லவேண்டாம் எண்டு சாத்திரி சித்திராவைப் பார்த்து கெஞ்சுகின்றார். இவர் பார்த்து அழுவது நாடகத்தொடர் சித்திராவா அல்லது நிஜவாழ்க்கையில் வரும் சித்திராவா எண்டு முனியம்மா அக்கா சாத்திரி அண்ணையிடம் ஒருக்கால் கேட்டுக்கொள்வது நல்லது. :lol:

அரும்பாலை [இளைப்பாறுங்களம்]:

நடிகர் ரகுவரன் செத்துப்போனார். அஞ்சலிகள்! நம்பியாருக்கு 91 வயதாம். சாகப்போறார். அவருக்கும் அஞ்சலிகள்! (நானும் ஒருநாளைக்கு சாகத்தான் போறன். எனக்கும் யாராவது இப்பவே அஞ்சலி செலுத்தலாம். செத்தாப்பிறகு சொல்லாமல் இப்பவே சொன்னால் அதை என்னால் வாசிச்சு உணரக்கூடியதாக இருக்கும்).

பிறகு என்ன எண்டால், புத்தரின் மனைவியாக ஐசு வாறாவாம். இப்ப கட்டின புருசன் புத்தராக போகாமல் ஐசு பார்த்துக்கொண்டாலே பெரிய புண்ணியமாப் போகும். :D

அவுசுத்திரெலியாத் தொடரில் இந்தியா வென்றதினால் கொல்லப்பட்ட ஆடுபற்றி கந்தப்பு என்னமோ சொல்லிறார். எல்லாம் சரி கந்தப்பு, ரெண்டு நாளைக்கு முன்னம் சிட்னி முருகன் கோயில் திருவிழாவுக்கயும் ஒரு ஒதுக்குபுறமா உங்கட கோஷ்டி ஆடு அடித்ததாய் யாரோ சொன்னார்கள். உண்மையோ? அதுவும் மறி ஆடாமே? ஆட்டை செட் அப் பண்ணியது புத்து மாமாவாமே? ஐயோ என்ன கொடுமை இது? யாராவது பால் ஆட்டை வெட்டுவார்களா? பாவம் பேபிகள் அணிக்கு பால் கறந்தாவது குடிக்க குடுத்து இருக்கலாம்.

கோடிப்பாலை [அறிவியற்களம்]:

நுணாவிலான் பல பயனுள்ள தகவல்களை இணைச்சு இருக்கிறார். நன்றி! அதுல முக்கியமானது "உங்கள் கணணியின் ஹார்டு ட்ரைவிலிருந்து நீக்கிய (அழிக்கப்பட்ட)கோப்புகளை மீள பெற்றுத்தரும் மென்பொருள் பற்றியது".. மற்றது எத்தின வயசில நாங்கள் சாவம் என்பது பற்றிய ஒரு டெட் கல்குலேட்டர் தலவல். இத முன்னம் ஒருக்கால் நான் பாவிச்சு பார்க்கேக்க ஒவ்வொரு தரமும் எனக்கு ஒவொருவிதமான ஆயுள் சொல்லிச்சிது. நான் முதலில என்ன செய்தனான் எண்டால் அதில எனக்கு விருப்பம் இல்லாத ஆக்களின்ட பிறந்ததிகதிகள போட்டு அவேள் எவ்வளவு காலம் உயிர்வாழுவீனம் எண்டு செக்பண்ணி பார்த்தன்.

நேரம் போகிது. இனி முக்கியமான சில விசயங்கள் மட்டும்..

விளரிப்பாலை [சிந்தனைக்களம்]:

ஆண்-பெண் நட்பு பற்றி ரசிகை ஏதோ கேட்கிறா. எனது கேள்வி என்ன எண்டால் நீங்கள் மணிவாசகனுடன் இப்போதும் நட்புடன் இருக்கிறீங்களா? என்பதுதான் (கோவிக்ககூடாது).
அட சும்மா வாழ்ந்திட்டு போங்கோ. சும்மா நான் நட்புடன் மட்டும்தான் இருப்பேன். காதல் செய்யமாட்டேன். அது கூடாத பழக்கம் எண்டு எல்லாம் சொல்லி குழப்பாதிங்கோ. இருவருக்கிடையில் ஒரு அன்டஸ்டான்டிங் இல்லாதவரை நட்போ, காதலோ, அல்லது கலியாணமோ எதுவுமே நிலைக்கமுடியாது. இதுவே யாழ் கட்டை பஞ்சாயத்து தீர்ப்பு! ^_^

பெண்கள் பெயரில் எழுதும் ஆண்கள் பற்றி இளைஞன் ஏதோ கேட்கிறார். அனுபவசாலிகள் சளைக்காமல் மிகுந்த ஆர்வத்துடன் தமது அனுபவங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறீனம். இளைஞனிடம் ஒரு கேள்வி - உங்களுக்கும் பெண்கள் பெயரில் எழுதி அனுபவம் இருக்கிதோ?

மேற்செம்பாலை [சிறப்புக்களம்]:

"சுவிஸ் இலங்கந்தால் குற்வில் ஓபர்ஆர்கவ் தமிழ்ச்சங்க" போட்டிப் பரீட்சை பற்றி வசம்பு தகவல்தந்து இருக்கிறார். அனி, அஜீவன் அண்ணா, சஜீவன், சின்னப்பு, டைகர்பிளேட் நீங்களும் போட்டியில் கலந்து வெற்றிபெற்று யாழுக்கு பெருமை சேருங்கோ.

என்றும் கககலப்பாக பேசுகின்ற சாந்தி அக்காவின் அப்பா இயற்கை எய்திவிட்டார். கண்ணீர் அஞ்சலிகள்! குடும்பத்தினருக்கு யாழ் சார்பான அனுதாபங்கள்!

யாழ் உறவுகள்:

2008 க்குரிய மலசலகூடம் திறக்கப்பட்டுள்ளது. :unsure: யாருக்காவது அவசரம் எண்டால் நாற்சந்தியில் அசிங்கம் செய்து நாறடிக்காமல் தயவுசெய்து அதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் உங்கள் கழிவுகளை கொட்டவும். தவறான இடங்களில் கழிக்கப்படும் கழிவுகளை வழித்து வழித்து துடைத்து துடைத்து நிருவாகம் மிகவும் நொந்துபோய் இருக்கின்றது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!

யாழ் களஞ்சியம்:

நித்தா கொள்ளுகின்றது. :)

வேறு என்ன மீண்டும் சந்திப்போம். யாராவது இந்தக்கிழமை காலக்கண்ணாடி செய்யுறீனமோ தெரியாது. வேறு யாராவது ஏற்கனவே செய்தால் தயவுசெய்து உங்கள் கண்ணாடியையும் இங்கு இணைக்கவும்!

யாழ் இணையத்திற்கு முன்கூட்டிய இனிய அகவை பத்து வாழ்த்துகள்! :)
அனைவருக்கும் இனிய ஈஸ்டர் தின வாழ்த்துகள்! :)நன்றி! வணக்கம்!


Edited by முரளி, 23 March 2008 - 03:05 PM.


#36 கரும்பு

கரும்பு

  உங்களில் ஒருவன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,930 posts
 • Gender:Male

Posted 19 April 2008 - 06:36 AM

யாழ் காலக்கண்ணாடி 13.04.2008

~வலையில் கலைஞன் - திரு. வலைஞன் அவர்களுடனான செவ்வி~

Posted Image


முரளி: வணக்கம் வலைஞன், இந்தவார யாழ் சிறப்பு காலக்கண்ணாடியை முன்னிட்டு உங்களை செவ்வி காண்பதில் மகிழ்ச்சி.
வலைஞன்: உங்களிற்கும் எனது வணக்கங்கள் முரளி.. !
முரளி: கடந்த வாரங்களில் யாழில் இடம்பெற்ற கருத்துப்பகிர்வுகள் பற்றிய உங்கள் எண்ண ஓட்டங்கள் எவை?
வலைஞன்: (தொண்டை டெஸ்டிங்... ஹும் ஹூம் ஹூஊம்...) பொதுவாக யாழ் இணையம் கடந்தவாரங்களில் கலகலப்பாக இருந்தது. யாழ் இணையம் அகவை பத்தில் காலடி வைத்தமையாலும், மற்றும் பெர்ணாண்டோ பிள்ளை போன்ற கோமாளிகளின் மரணங்கள் காரணமாகவும் யாழ் இணையம் வாசகர்களால் எந்தநேரமும் நிறைந்து கலகலப்பாக காணப்பட்டது.
முரளி: கடந்த வாரங்களில் புதியவர்கள் வரவு பற்றி குறிப்பிட்டு எதையாவது சொல்ல முடியுமா?
வலைஞன்: நிறையப்பேர் வந்துள்ளார்கள். எதைச் சொல்வது எதை விடுவது என்று எனக்கு தெரியவில்லை. என்னைவிட இணையவன் அவர்களிற்கே இதுபற்றி அதிகம் தெரியும்.
முரளி: ஊர்ப்புதினம் பற்றிய உங்கள் பார்வை என்ன?
வலைஞன்: நாம் யாழின் முகப்பை வடிவமைப்பதில் நீண்ட நேரம் செலவளித்தமையால் எமது கருத்துப்படங்களை கூட அப்டேட் செய்யமுடியாத சிக்கலான நிலமை காணப்பட்டது. தவிர, கள உறவுகளிடையேயான வழமையான அடி,பிடிகளையும் அவதானிக்ககூடியதாக இருந்தது.
முரளி: நீங்கள் விரும்பிப்படித்த சில செய்திகள் பற்றி?
வலைஞன்: பிரியங்கா காந்தி அவர்கள் நளினி அவர்களை சந்தித்த செய்தி சுவாரசியமாக இருந்தது. வெள்ளைப் புலியுடன் வைகோ என்ற செய்தி எனது புருவங்களை உயர்த்தச் செய்தது. தலைவரின் வீட்டுக்கு இராணுவக் காவலாம் என்ற ஈழவன் இணைத்த செய்தி சிரிப்பை ஏற்படுத்தியது.
முரளி: கேட்பதாக குறை நினைக்ககூடாது. யாழ் உறவோசைப் பகுதியில் "வலைஞன் என்பவரின் செயலைக் கண்டிக்கின்றோம்" என்று நெடுக்காலபோவான் ஆரம்பித்த கருத்தாடல் பற்றிய உங்கள் உணர்வலைகள் என்ன?
வலைஞன்: எனக்கு அடிக்கடி வயித்தெரிச்சலை கிளப்புபவர்களில் இந்த நெடுக்காலபோவான் என்பவரும் ஒருவர். என் வாழ்க்கையில் எத்தனையோ பேர் குறுக்காலபோய் விளையாடி இருக்கின்றார்கள். ஆனால் எனக்கு எதுவும் நடைபெறவில்லை. இவர் ஒருவர் நெடுக்காலபோவதால் மட்டும் ஏதாவது நடக்கும் என நான் நினைக்கவில்லை.
(மனதினுள்... மவனே நெடுக்கு, நானும் லண்டனிலதானப்பு இருக்கிறன். உண்ட ஐப்பி அட் ரஸ் எல்லாம் குறிச்சுத்தான் வச்சு இருக்கிறன். நீ சிறீ லங்காவுக்கு திரும்பிப் போறதுக்கு முன்னம் உனக்கு இருக்கடி மவனே இருட்டடி..)
முரளி: என்ன வலைஞன் ஏதோ தீவிர யோசனை...?
வலைஞன்: இல்லை. இன்று எனது மாதாந்த தொலைபேசிக் கட்டணத்தை செலுத்தவேண்டும். அதுபற்றிய நினைவு வந்துவிட்டது. மன்னிக்கவும்.
முரளி: கு.சா அண்ணா அவர்கள் அறிவுத்தடாகம் பகுதியில் செல்போனின் தரத்தை அறிவது எப்படி? என ஒரு கருத்தாடல் செய்து இருந்தரே? வாசித்தீர்களா?
வலைஞன்: ஆம்.. எனக்கும் எனது செல்போனை பரிசோதித்தபோது நம்பர் ஒன்று வந்தது.
முரளி: நீங்கள் நன்றாக கவிதைகள் எழுதக்கூடியவர், நிறைய தமிழ் அறிவு உங்களுக்கு இருக்கின்றது என நினைக்கின்றேன். கவிதைப்பூங்காட்டில் நீங்கள் பெற்ற அனுபவங்களை கொஞ்சம் கூறமுடியுமா?
வலைஞன்: நான் கறுப்பி அவர்களின் கவிதை அந்தாதியை இரசிப்பவன். இப்போது கனகாலமாக கவிதை அந்தாதியில் ஒருவரும் எழுதாது இருப்பது கவலை அளிக்கின்றது. கவிரூபன், கஜந்தி போன்றோரின் வரவின்மையும், விகடகவி அவர்கள் தினசரி தூறல்கள் என தனது கவிதைகளை இன்னொரு தனிப்பகுதில் எழுதுவதுமே இதற்கு காரணம் என நினைக்கின்றேன். எல்லோரும் நன்றாக கவிதை எழுதி உள்ளார்கள். சொல்வதாக குறை நினைக்கக்கூடாது, நீங்கள் நட்பு என்ற தலைப்பில் வல்வைசகீரா அவர்கள் எழுதிய கவிதைக்கு அவ்வளவு காரசாரமாக விமர்சனம் எழுதி இருக்கக்கூடாது. விகடகவி அவர்கள் எழுதிய என்னைச் சுற்றி பெண்கள் என்ற கவிதையை வாசித்து மகிழ்ந்தேன்.
முரளி: எமக்காக மட்டறுத்தல் செய்வது பற்றி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லமுடியுமா?
வலைஞன்: ... சற்றுப் பொறுங்கள்......!
பொறுமையுடன் இருங்கள்.......!
விரைவில் எதிர்பாருங்கள்......!
உங்களுக்கு எச்சரிக்கை ஒன்று வழங்கப்படுகின்றது...!
முரளி: அடடா அருமை, அருமை ஹைக்கூ போல இல்லாவிட்டாலும் ஹைக்கூ படிக்கும்போது ஏற்படும் உணர்வு தோன்றியது. நன்றி!
வலைஞன்: நீங்கள் வரவேற்கப்படுகின்றீர்கள்! (யூ ஆர் வெல்கம்...!)
முரளி: யாழ் இணையத்தில் மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும், எல்லோரிடமும் கெட்டபெயர் வாங்கும் நிருவாகி - மட்டறுத்துனர் என்றால் அது நீங்களாகத்தான் இருக்கமுடியும். இதுபற்றிய உங்கள் உணர்வலைகள் என்ன?
வலைஞன்: காய்ச்சலும், தலையிடியும் தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும். இங்கு பலர் நாம் ஏதோ பெரிய பதவியில் இருந்து மாதாமாதம் பல்லாயிரம் ஸ்ரேலிங் பவுண்கள் உழைப்பதாக கற்பனை செய்துகொண்டு எமக்கெதிராக பொய்ப்பிரச்சாரம் செய்கின்றார்கள். நாம் வீடுகளில் பேச்சு வாங்கிக்கொண்டு, வேலைத்தலங்களில் பேச்சு வாங்கிக்கொண்டு, ஒழுங்காக நேரத்துக்கு நேரம் உணவு உண்ணாது, வெளியில் நண்பர்களுடன் கூடிக்குலாவி மகிழாது இங்கு யாழ் இணையத்திலேயே தவம் கிடந்து செய்கின்ற சேவைபற்றி மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிம்மதியாக மலசலகூடத்திற்கு சென்றுவருவோம் என்று பார்த்தால் அந்த சொற்ப வேளையிலேயே ஒருவர் இன்னொருவருடன் மழலைகள் போல் மோதிக்கொள்கின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் வயது என்ன? வெட்கமாய் இல்லையா இப்படி எல்லாம் பண்பற்ற முறையில் கருத்தாடல் செய்வதற்கு? கருத்துக்கள உறவுகள் தமது கருத்துக்களிற்கு தாமே மட்டறுத்துனர்களாக என்று இருக்கின்றார்களோ அன்றுதான் நான் நிம்மதியாக வீட்டில் மலசலம் கழிக்கமுடியும்.
முரளி: தற்போது சில கள உறவுகள் இரண்டு வரிகளில் செய்திகளை இணைத்துவிட்டு மிகுதியை படிக்க அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள் என்று கூறுகின்றார்கள். யாழ் நிருவாகி என்றமுறையில் இதுபற்றிய உங்கள் பார்வை என்ன?
வலைஞன்: நாம் காலம் காலமாக வாசகர்களுக்கு கூறிவந்துள்ளோம். அதாவது யாழ் இணையத்திலிருந்து கொடுக்கப்படும் தொடுப்புக்களிற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல என்று. கள உறவுகள் தமது தனிப்பட்ட புளக்குகளில் செய்திகளை பிரசுரித்துவிட்டு பின்னர் இங்கு வந்து அதற்கு தொடுப்பு கொடுக்கின்றார்கள். இதை நாம் தவறு என்று கூறவில்லை. ஆனால், அத்தகைய தொடுப்புக்களை அழுத்தியபின் வரும் பின்விளைவுகளிற்கு அல்லது அந்த தொடுப்புக்கள் மூலம் கூறப்படும் செய்திகளிற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல என்பதை மீண்டும் கள உறவுகளிற்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
முரளி: யாழ் இணையத்தின் செய்தி அலசல் ஒன்றையும் சில காலமாக காண இல்லையே? உங்கள் செய்திக்குழுமம் தற்போது என்ன செய்துகொண்டு இருக்கின்றது?
வலைஞன்: எல்லோரும் தத்தமது தனிப்பட்ட வாழ்வில் மும்மரமாக இருப்பதனால் தற்போதைக்கு எம்மால் தொடர்ந்து செய்தி ஆய்வுகளைத் தரமுடியவில்லை. மன்னிக்கவும். நாம் கள உறவுகளிடம் வேண்டிக்கொள்வது என்ன என்றால் குழுமங்கள், நிருவாகிகள், மட்டறுத்துனர்கள் என்று யாழ் இணையத்தில் இருந்து உங்களைப் பிரித்துப் பார்க்காது, இது உங்கள் இணையம் என்ற மனநிலையுடன் உங்கள் பங்களிப்புக்களையும் இவ்வாறான செய்தி ஆய்வுகள், கருத்துப்படங்கள் போன்றவற்றுக்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும். உதாரணமாக கிருபன் அவர்கள் எழுதிய எல்லாளனின் மீள்வருகை என்ற செய்தி ஆய்வுபோல் இங்கு இருக்கும் நெடுக்காலபோவான், வெற்றிவேல், மற்றும் தயா போன்றவர்களும் செய்தி ஆய்வுகளை வழங்க முடியும். இங்கு கிருபன் அவர்கள் எமது செய்திக்குழுமத்தில் இல்லாதபோதும் ஓர் அழகிய செய்தி ஆய்வை யாழ் இணையத்துக்கு தந்தது பாராட்டத்தக்கது. இதை மற்றவர்களும் முன்மாதிரியாக கொள்ளவேண்டும்.
முரளி: யாழின் தற்போதைய முகப்பை பலர் விரும்பவில்லை போல் தெரிகின்றதே? நான் பலருடன் உரையாடியபோது கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு முகப்பில் பம்பரம் சுற்றுவது அவர்களிற்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. இதற்கு ஏதாவது மாற்று தீர்வு உங்களிடம் உள்ளதா?
வலைஞன்: தற்போது முகப்பு அமைப்பு ஓர் சோதனை - பரீட்சார்த்த முயற்சி - பீட்டா வேர்சன் என்று ஏற்கனவே கூறி இருக்கின்றோம். விரைவில் முகப்பில் உள்ள கோளாறுகளை சரிப்படுத்த முயற்சிப்போம். அதேவேளை அவசரமாக யாழினை பார்க்க விரும்புபவர்கள் http://www.yarl.com/forum3 என அடித்து நேரடியாக உள்ளே வரலாம்.
முரளி: சிறீ லங்கா புறக்கணிப்பு பற்றி உங்கள் செய்திக்குழுமம் தீவிர ஆர்வம் செலுத்தியது. பின்னர் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளானது. இப்போது சிறீ லங்கா புறக்கணிப்பு எந்தநிலையில் உள்ளது?
வலைஞன்: எமது பிரச்சாரப் பீரங்கி திரு.பண்டிதர் தொடர்ந்தும் தனது முயற்சியை யூரியூப் இணையத்தில் செய்துகொண்டுதான் இருக்கின்றார். எமது அன்புக்குரிய அண்ணன் குறுக்காலபோவான் அவர்களும் அற்புதமான அறிவுரைகளை காலத்திற்கு காலம் தந்து எம்மை சரியான பாதையில் வழிநடத்திக்கொண்டு இருக்கின்றார். நாம் மீண்டும் வாசகர்களிடமும், கள உறவுகளிடமும் கேட்டுக்கொள்வது என்ன என்றால், வெறும் விமர்சனங்கள் மூலம் மட்டும் முட்டி மோதிக்கொள்ளாது ஏதாவது ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட்டு, சுயமாக ஆக்கங்கள் செய்து எமது புறக்கணிப்பு போராட்டம் வெற்றி பெற உதவுங்கள். நாம் ஒன்றை செய்தபின் அதைப்பற்றி கிண்டலடிப்பதில் காலத்தை செலவளிக்காது, நீங்களும் சுயமாக ஒன்றை படைத்துப் பாருங்கள். கள உறவுகள் அனைவரும் எப்போது படைப்பாளிகளாக மாறுகின்றார்களோ அப்போதுதான் நாம் யாழ் இணையம் ஆரம்பித்ததன் நோக்கம் நிறைவேறும்.
முரளி: உங்கள் தோழன், சக நிருவாகி மோகன் அவர்கள் யாழ் இணையம் அகவை 10 ஐ முன்னிட்டு வழங்கிய பேட்டி பற்றிய உங்கள் கருத்துக்கள் எவை?
வலைஞன்: அவர் தெளிவாக எல்லாம் கூறிவிட்டார். இதுபற்றி நான் வேறு கூறுவதற்கு என்ன இருக்கின்றது? தாயக போராட்டத்திற்கு எம்மாலான ஆதரவை கொடுக்கவேண்டும் என்பதை மோகன் அவர்கள் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். இதை கள உறவுகள் உணர்ந்து செயற்படவேண்டும் என்பதே எனது விருப்பம்.
முரளி: நீங்கள் மட்டறுத்தல் செய்தல், நிருவாக வேலைகள் தவிர யாழில் ஏன் ஒன்றும் எழுதுவதில்லை? ஒன்றும் படைப்பதில்லை?
வலைஞன்: யார் சொன்னார்கள் அப்படி? பலருக்கு தெரிந்து இருக்காது, ஆனால் யாழில் வெளிவந்த பல கருத்துப்படங்களில் எனது கைவண்ணம் உள்ளது. இதுதவிர யாழ் முகப்பு - தலையில் நீங்கள் காலத்துக்கு காலம் பார்க்கும் அழகிய படங்கள், ஓவியங்கள் எல்லாம் எனது கைவண்ணமே. நான் எனது திருப்திக்கு படைப்புக்களை செய்கின்றேன். மற்றவர்களிடம் அவற்றை காட்டி பாராட்டு பெறுவதில் எனக்கு ஆர்வம் இல்லை.
முரளி: யாழ் செயலரங்கம் பகுதி செயற்பாடு எதுவும் இன்றி இருக்கின்றதே! ஏன்?
வலைஞன்: என்னிடமே எல்லாவற்றையும் கேட்டால் எப்படி? நீங்கள் மற்றும் உங்கள் சீடன் எனக்கூறப்படுகின்ற யமுனா போன்றவர்கள் இங்கு ஏதாவது பயனுள்ளதாக செய்யலாமே?
முரளி: சிலர் என்னை கிண்டலடிக்கின்றார்களே? இதற்கு என்ன செய்யலாம்?
வலைஞன்: நீங்கள் பொல்லுக்கொடுத்து அடிவாங்குவதற்கு நாங்கள் நிருவாகம் என்ன செய்ய முடியும்? நான் உங்களுக்கு கூறக்கூடிய அறிவுரை யாதுஎனில் புத்தியை புத்தியாலும், கத்தியை கத்தியாலும், பக்தியை பக்தியாலும் வெல்லுங்கள். கத்திக்கு பக்தியை காட்டுவது உங்களுக்குத்தான் ஆபத்தானது.
முரளி: செய்தி திரட்டியில் விநோதமான செய்திகள், குழப்பமான செய்திகள் எல்லாம் போடுகின்றார்களே! நிருவாகம் ஏன் இந்தப்பகுதியில் அதிக கவனம் செலுத்துவதில்லை? அண்மையில் கூட சுருட்டு சாமியார், காதலி பெண் டாக்டர் தற்கொலை! என்று ஒரு செய்தி வந்தது. இது எல்லாம் யாழ் இணையத்துக்கு தேவையானதா?
வலைஞன்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனைகள் உள்ளது. எனவேதான், நாம் யாழில் பலபிரிவுகளை வைத்து இருக்கின்றோம். மற்றவர்களின் ரசனைகளின் சுதந்திரத்தை பறிப்பதற்கு நிருவாகத்திற்கு உரிமை இல்லை. ஆனாலும், அநாகரிகமான முறையில் கருத்துக்கள விதிமுறைகளை மீறி ஏதாவது செய்திகள் பிரசுரிக்கப்பட்டால் நாம் உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவோம். ஆனால், எமது பொதுவான அபிப்பிராயம் உங்களுக்கு எப்படிப்பட்ட ரசனை இருந்தாலும், எந்தப் பகுதியில் அதிக ஈடுபாடு இருந்தாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும், ஆதரவு அளிக்கும் கருத்தாடல்களிலும் உங்கள் நேரத்தை செலவளியுங்கள்.
முரளி: அண்மைக் காலங்களில் யாழில் நடைபெறும் தனிநபர் தாக்குதல்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
வலைஞன்: முன்பு சுமார் ஓரிரு வருடங்களுடன் இருந்த நிலமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்போது தனிநபர் தாக்குதல் மிகவும் குறைவடைந்துள்ளது என்று கூறவேண்டும். எனினும், பழைய கள உறவுகள் சிலர் இன்னும்தான் தம்மை மாற்றிக்கொள்ளாது தொடர்ந்தும் சிறுபிள்ளைகள் போல் கருத்துக்கள விதிமுறைகளை மீறி அநாகரிகாமான முறையில் நடக்க முயற்சிக்கின்றார்கள். எனவே, இவர்களிற்கு நாம் அடிக்கடி எச்சரிக்கைகள் கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.
முரளி: யாழில் உள்ள அந்த எச்சரிக்கை (warn %) பற்றி சிறிது கூறமுடியுமா? உங்களிற்கும் யாராவது எச்சரிக்கை (warn %) தந்துள்ளார்களா?
வலைஞன்: இங்கு நீங்கள் நினைப்பதுபோல் பெரிதாக எதுவும் இல்லை. நிருவாக வசதிகள் கருதி எமது கருத்தாடல் மென்பொருள் மூலம் கிடைக்கும் வசதியை நாம் பயன்படுத்துகின்றோம். இதன்மூலம் தவறான முறையில் கருத்து எழுதும் கள உறவுகளிடம் ஒரு விழிப்பு நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். இது தவறை சுட்டிக்காட்டும் ஒரு வழிமுறையே தவிர, தண்டிப்பதற்கான எடுகோல் அல்ல. மேலும், எனக்கு ஒருவரும் எச்சரிக்கை (warn %) தரவில்லை. ஆனால் நான் சக நிருவாகி தோழர் மோகன் அவர்களிற்கு எனக்கு யாழில் அதிக வேலைப் பளுவை கொடுத்தமைக்காக இரண்டு எச்சரிக்கைகள் கொடுத்துள்ளேன்.
முரளி: கடந்த வாரங்களில் வண்ணத்திரை பற்றிய உங்கள் பார்வை எப்படி இருந்தது?
வலைஞன்: நான் ஓர் கலைஞன் மாத்திரம் அல்ல. ஓர் சிறந்த இரசிகனும் கூட. எனக்கு பாவனா என்றால் உயிர். பாவாவின் படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன். தேனீக்கள் தாக்கி மீரா காயம்! என்ற தமிழ்சிறி இணைத்த செய்தியை வாசித்தபோது எனக்கு சிரிப்பு ஏற்பட்டது. அதில் கருத்து எழுதிய ஒருவர் "ம்ம்ம்.... குடுத்து வைச்ச தேனிக்கள்...... " என எழுதி இருந்தார். சிரிக்காமல் வேறு என்ன செய்வது? தசாவதாரம் படத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துள்ளேன்.
(மனதினுள்... எனக்கும் யாழில பத்து முகங்கள் இருக்கின்றது என்ற செய்தியை உங்களுக்கு சொல்லலாமா..?)
முரளி: என்ன தீடீரென ஏதோ ஆழமாக சிந்திக்கின்றீர்கள்?
வலைஞன்: வேறொன்றும் இல்லை. பலர் எனக்கு அனுப்பிய தனிமடல்களிற்கு பதில்போடவேண்டும். அதைப்பற்றி சிந்தித்தேன்.
முரளி: ஆம் கேட்கவேண்டும் என நினைத்தேன். வசம்பு அவர்கள் ஓர் பெரிய பிரச்சனையை கிளப்பி இருந்தாரே, நிருவாகம் தனிமடலிற்கு பதில்போடுவதில்லையென்றும் சிலது பெண்களாக இருந்தால் அவர்களிற்கு மட்டும் உடனடியாக பதில் அனுப்பப்படுகின்றது என்றும் ஏதோ...
வலைஞன்: நான் இதுபற்றி மீண்டும் கருத்துக்கூற விரும்பவில்லை. இங்கு நாங்கள் தனிமடலில் கருத்து எழுதும்போது ஆண், பெண் என்று பிரித்துப்பார்ப்பதில்லை. அனைவரையும் கருத்துக்கள உறவுகளாகவே பார்க்கின்றோம். மேலும், பெயரை மட்டும் வைத்து ஒருவர் ஆண், பெண் என்று கூறிவிடமுடியுமா என்ன?
முரளி: நீங்கள் கடந்தவாரங்களில் படித்து சுவைத்த சில அம்சங்களை சுருக்கமாக கூறமுடியுமா?
வலைஞன்: மன அழுத்தம் குறைக்க ஐந்து வழிகள்... என நுணாவிலான் ஒரு தகவல் தந்து இருந்தார். எனக்கு யாழில் ஏற்படும் மன உலைச்சல்கள் ஏற்பட்டபோது மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி எனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை குறைத்துக்கொண்டேன். அவதானிப்பும் மனவோட்டமும்..!, என்னையா நடக்குது? என்ற இரு தலைப்புகளையும் நிருவாகத்திற்கு நகர்த்தினேன்...
முரளி: குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நிருவாகத்துக்கு நகர்த்துதல் என்றால் என்ன?
வலைஞன்: யாழ் கள உறவுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, மனக்கசப்புக்களை ஏற்படுத்தும் சில கருத்தாடல்களை தற்காலிகமாக வெளியேற்றி கள உறவுகள் டென்சன் அடையாமல் இருப்பதற்கு செய்யப்படும் ஒழுங்குமுறையை நிருவாகத்துக்கு நகர்த்துதல் என்று கூறுவோம். இதமூலம் பல வீண்பிரச்சனைகளை எம்மால் தவிர்க்கக்கூடியதாக உள்ளது.
முரளி: யாழ் இணையத்தை குழப்புவதற்கு அல்லது தமது இணையத்தை பிரபலப்படுத்துவதற்கு யாராவது திட்டமிட்ட முறையில் யாழ் இணையத்தை குழப்புவதாக நினைக்கின்றீர்களா? அப்படியான நோக்கத்துடன் கருத்தாடல்கள் செய்யப்படுகின்றனவா?
வலைஞன்: ஆம் நிச்சயமாக. அப்படியான சந்தேகம் எமக்கு உள்ளது. எனினும் நாம் இதை வெளியில் சொல்வதில்லை. அவர்கள் யார் என்பதும் எமக்கு நன்றாகவே தெரியும்.
முரளி: இறுதியாக என்ன சொல்லிக்கொள்ள விரும்புகின்றீர்கள்?
வலைஞன்: எதற்கு எடுத்தாலும் வலைஞனையும், மோகனையும், நிருவாகத்தையும் குறைகூறுவதை நிறுத்திவிட்டு முதலில் உங்கள் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக்கொள்ள பாருங்கள். நீங்கள் பிரச்சனைகளை உருவாக்கிவிட்டு நிருவாகத்தை குறைகூறுவதில் பயனில்லை. என்னை யாழ் காலக்கண்ணாடிக்காக பொறுமையுடன் இவ்வளவு நேரமும் செவ்வி கண்ட உங்களுக்கு எனது நன்றிகள்! வணக்கம்!

எனக்கு நித்தா வருது. இதுக்கு மேல எழுத நேரம் இல்லை... :lol:

-யாவும் கற்பனை-

நன்றி! வணக்கம்!#37 suvy

suvy

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,560 posts
 • Gender:Male
 • Location:France

Posted 20 April 2008 - 09:38 PM

காலக்கண்ணாடி 14-04-2008ல் இருந்து 20-04-2008 வரை

http://www.dailymoti...di-part1_people

http://www.dailymoti...di-part2_people

http://www.dailymoti...di-part3_people
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

#38 கரும்பு

கரும்பு

  உங்களில் ஒருவன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,930 posts
 • Gender:Male

Posted 14 May 2008 - 05:06 AM

யாழ் கலகக் கண்ணாடி 11.05.2008Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image


பேட்டை நாய்க்குட்டியுடனான பேட்டி...முரளி: வணக்கம் டன்..! யாழ் இணையத்தின் சார்பில் உங்களை கலகக் கண்ணாடி சார்பாக நேர்முகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
டன்: வணக்கமுங்கோ..
முரளி: முதலாவதாக, நீங்கள் பேட்டை ரெளடி என்று இருந்த உங்கள் புனைபெயரை பெயரை பேட்டை நாய்க்குட்டி என்று அண்மையில் மாற்றிவிட்டதாய் அறிந்தோம். இதற்கான காரணம் என்ன என்று அறியலாமா?
டன்: அது பாருங்கோ.. நான் கருத்து மாத்திரம்தான் ரெளடித்தனமாய் எழுதுறது.. மிச்சம் எனக்கு வெள்ளை உள்ளம் பாருங்கோ. ஆனால் இங்கு சிலர் ரெளடியாகவே நடந்துகொள்வதால் எனது பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாது எனது இமேஜ் (விம்பம்) குறைந்துவிடக்கூடாது என்பற்காக பேட்டை நாய்க்குட்டி என்று மாற்றிக்கொண்டேன்.
முரளி: சரி, டன் கடந்தவாரங்களில் யாழில் நடைபெற்ற கருத்தாடல்கள் பக்கம் எமது பார்வையைச் செலுத்துவோம்.. ஊர்ப்புதினம் பற்றிய உங்கள் பார்வை என்ன?
டன்: எனக்கு இப்போது யாழே புதினமாக இருக்கிது. இதில வேற நீங்கள் ஊர்ப்புதினம் பற்றி கேட்கிறீங்கள். சரியுங்கோ.. சொல்லிறன் கேளுங்கோ. புலிகளிண்ட அரசியல் ஆலோசகரா வை.கோபாலசாமியப் போடப் போறாங்களாம் என்று யாரோ அய்யா சாமிகள் சொல்கின்றார்கள். மேலும்..
முரளி: சாமி என்று சொல்லும்போது தான் நினைவுக்கு வருக்கின்றது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றதா?
டன்: அதை ஏனுங்கோ கேட்கிறீங்கள். இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் யாழ் இணையத்துக்கு வந்தாப்பிறகு போட்டிது பாருங்கோ. நான் இப்ப ஒரு பகுத்தறிவாளன் பாருங்கோ. கடவுள் நம்பிக்கை வைப்பது எனது கொள்கைக்கு இழுக்கு பாருங்கோ.
முரளி: அப்படி என்றால் பகுத்தறிவு பற்றி நடைபெறும் விவாதங்களில் உங்கள் கருத்துக்கள் ஒன்றையும் காணவில்லையே?
டன்: நாங்கள் சுயேச்சைக் குழுவுங்கோ. வெளியில நிண்டு ஆதரவு குடுக்கிறம்.
முரளி: அப்படியானால் நீங்களும் தமிழ் முறையில் எதிர்காலத்தில் திருமணம் செய்வீர்கள் என்று நாம் எதிர்பார்க்கலாமா?
டன்: மன்னிக்கவும்.. நாம் சோமாலிய முறைப்படி திருமணம் செய்வோம். ஆங்கில முறைப்படி தேனிலவு கழிப்போம். :D
முரளி: ஓ அப்படியா... சபேசன் அவர்கள் தமிழ்நெறித்திருமணம் என ஒரு கருத்தாடல் செய்து இருந்தார். இதுபற்றிய உங்கள் பார்வை என்ன?
டன்: அப்படியே சபேசன் அவர்கள் தனக்கு பிறக்கும் பிள்ளை வளர்ந்ததும் முதன்முதலாக தமிழ்நெறிப்படி சாமத்தியவீடுயும் செய்து உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்த எனது வாழ்த்துகள்.. நான் தமிழ்நெறித் திருமணத்தை விட தமிழ்நெறி சாமத்தியவீட்டை பார்க்கவே ஆர்வமாய் இருக்கின்றேன்.
முரளி: நீங்கள் மெஜிக் கலை சம்மந்தமாக ஒரு கருத்தாடலை யாழில் ஆரம்பித்து இருந்தீர்கள்? மெஜிக் என்றால் உங்களுக்கு அவ்வளவு இஸ்டமா?
டன்: ஓமுங்கோ. சாய்பாபா போல நானும் ஒரு பெரிய ஆளாகவந்து சோமாலிய மக்களிற்கு சேவைகள் செய்யலாம் எனும் நோக்கத்தில் இந்தக்கலையைப் நான் தற்போது பயின்று வருகின்றேன். :D
முரளி: உங்கள் நேசக்கரம் திட்டம் தற்போது எந்த அளவில் நிற்கின்றது? யாழ் கள உறுப்பினர்களின் பங்களிப்பு எந்த அளவில் கிடைக்கின்றது?
டன்: அதை ஏனுங்கோ கேட்கிறீங்கள். மாதாமாதம் காசுதரவேணும் எண்டுற பயத்திலதான் நீங்கள் கலைஞன் எண்டுற பெயரைவிட்டு தற்போது முரளி எனும் பெயரில் எழுதுவதாக எனது புலனாய்வுத்துறை சொல்லிதுங்கோ. காசு கேட்டதும் நீங்களே ஆள் தலைமறைவு. மிச்ச ஆக்களப்பற்றி கேட்கவேணுமோ... ஏதோ எம்மால் முடிந்த அளவில இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்த இருக்கிறம். சாத்திரி அண்ணை தான் மூண்டாம் வகுப்புக்கு மேல படிக்க இல்ல.. தனக்கு கணக்கு வழக்கு பார்க்கிறது கொஞ்சம் கஸ்டமா இருக்கிது எண்டு சொல்லி இருந்தார். இதனால சாந்தி அக்காவப் போட்டு இருக்கிறம் பொறுப்பா நிக்கிறதுக்கு. விரைவில எமது நேசக்கரம் திட்டம் மூன்றை அமுல்படுத்த உள்ளோம். அனைவரினதும் பங்களிப்பை எதிர்பார்க்கிறம்.
முரளி: யாழ் களத்தில எழுதும் நம்ம நெடுக்காலபோவானை கருத்துக்கள' உறவுகள் எனும் வித்தியாசமான ஒரு குழுமத்தில போட்டு இருக்கின்றார்களே. இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
டன்: அவரைக் கருத்துக்கள' உறவுகளில் அல்ல, கருத்துக் கழன்ற உறவுகள் எனும் குழுமத்தில போடவேணும் பாருங்கோ. தான் எழுதியதையே தான் அழிச்சு விளையாடி இருக்கிறார். யாழ் களம் என்ன அ.. ஆ எழுதிப்பழகிற மொண்டூசரியா?
முரளி: ஆனால் இப்படிச் செய்து இருப்பது நெடுக்காலபோவானின் ஒரு காலை உடைத்துவிட்டது போல் இருக்கின்றதே?
டன்: அவரையுங்கோ எல்லாரும் தாத்த தாத்தா எண்டுதான் யாழில கூப்பிடுறீனம். எண்டபடியால் யாழில நொண்டி நொண்டி நடந்து திரிவதே அவருக்கு அழகு..! இந்தவகையில் அவரது காலை பேட்டை ரெளடி மன்னிக்கவும்.. வலைஞன் அவர்கள் உடைத்து இருப்பது எனக்கு சரியாகவே படுகின்றது. :wub:
முரளி: தற்போது ஆங்கிலம் கலந்து யாழில் எழுதக்கூடாது என்று கூறுகின்றார்களே. இதனால் தமிழ்மொழி யாழில் சிதைவடைகின்றதாமே?
டன்: இந்தநூற்றாண்டிண்ட மிகப்பெரிய பகிடி இதுவாத்தான் இருக்கும் பாருங்கோ. யாழே சிதைந்து கிடக்கிது. தவிர இங்கு ஒருவருக்குமே தமிழில் ஒழுங்காக எழுதவே தெரியாது. இந்தநிலையில் இப்படியான ஒரு அறிவித்தலை செய்து இருப்பது எனக்கு ஒரு வியாபார உத்தியாகவே தெரியுது பாருங்கோ.
முரளி: தமிழ் சம்மந்தமாக உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. தமிழ் மொழியில் இருக்கும் ஆயுத எழுத்து எது என்று கூறுங்கள் பார்க்கலாம்..
டன்: அரிவாள், கத்தி, அலவாங்கு, கோடாரி.. இதில் விருப்பமானதை எடுத்துக்கொள்ளுங்கள்..
முரளி: உங்களை நான் யாழ் இணையத்தின் மட்டறுத்துனராக சிபாரிசு செய்தால் நீங்கள் எப்படியான மாற்றங்களை யாழில் கொண்டு வருவீர்கள்?
டன்: இவ்வளவு காலமும் நிருவாகத்திற்கு நகர்த்தப்பட்ட கருத்தாடல்களை வெளியில கொண்டுவந்து அவற்றை வைத்து புதிய கருத்தாடல் தளம் ஒன்றை உருவாக்குவன் பாருங்கோ. :wub:
முரளி: வேறு என்ன என்ன எல்லாம் செய்வீர்கள்?
டன்: நான் பதவி ஏற்றதும் மட்டறுக்கும் முதலாவது கருத்து உங்களுடையதாகத்தான் இருக்குமுங்கோ. மேலும்.. காலத்துக்கு காலம் உங்களுக்கு எச்சரிக்கைகள் வழங்கி மகிழ்வேன். தேவை ஏற்பட்டால் நெடுக்காலபோவானுக்கு செய்ததுபோல் உங்களுக்கும் ஒரு காலை உடைத்து யாழில் நொண்டியாக வலம்வர வைத்து மகிழ்வேன்.
முரளி: ஏன் உங்களுக்கு என்னில் அவ்வளவு கோபமா?
டன்: கோபம் இல்லையுங்கோ. அன்பு பாருங்கோ. :wub:
முரளி: யாழின் ஒரு பகுதிக்கு மட்டும் மட்டறுத்துனராக உங்களை நியமிப்பதாய் இருந்தால் நீங்கள் எந்தப்பகுதிக்கு மட்டறுத்துனராக வரவிரும்புவீர்கள்.. ?
டன்: யாழ் வழிகாட்டி பகுதியுங்கோ. ஏன் எண்டால் பாருங்கோ, அதுல தானுங்கோ எண்ட கருத்துக்கள் எல்லாம் ஈவு இரக்கமின்றி துண்டாடப்பட்டு இருக்கிது.
முரளி: ஈவு இரக்கம் இன்றி என்றால் என்ன பொருள் என்பதை கூறமுடியுமா?
டன்: அது பாருங்கோ.. நீங்கள் கருத்து எழுத எழுத உங்களுக்கு பின்னாலையே நிண்டு - உங்கள போலோ பண்ணி நீங்கள் எழுதின கருத்தை முதலாவது ஆளாக வந்து வாசிச்சுவிட்டு மற்றவர்கள் பார்க்கமுன்னம் அதை உடனடியா வெட்டுறது பாருங்கோ.
முரளி: நீங்கள் யாழில் தற்போது நகைச்சுவையாக ஒன்றும் எழுதுவதில்லையே ஏன்?
டன்: யாழே தற்போது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது. இதில நான் வேற எழுதவேணுமோ பாருங்கோ? :wub:
முரளி: எமக்காக ஏதாவது ஒரு கவிதை சொல்ல முடியுமா?
டன்: எனக்கு கவிதை வராது எண்டு தெரிஞ்சு என்னைவச்சு தமாசு பண்ணுறதுக்காக கேட்கிறீங்கள் போல இருக்கிது...
எண்டாலும் ஒண்டு சொல்லிறன் கேளுங்கோ..

சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரெயிலே
கலக்கிது பார் அவர் ஸ்டயிலே
சுத்தி வாறார் சுழண்டு வாறார் மயிலே
அவர் கைவச்சால் எல்லாம் ஸ்பொயிலே (அழிவு)

முரளி: ஆஹா அருமை அருமை... எப்படி இப்படி எல்லாம் உங்களால் முடிகின்றது...?
டன்: நன்றி! அது ஒண்டும் இல்ல பாருங்கோ.. சொல்லவேண்டிய நேரத்தில சொல்லவேண்டிய விசயங்கள் எனக்கு தானா வந்துடும் பாருங்கோ. அது கவிதையா இருந்தாலும் சரி.. க**சா இருந்தாலும் சரி.. :wub:
முரளி: யாழ் அரிச்சுவடிப் பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன?
டன்: யாழில தற்போது அறிமுகம் செய்யுற ஆக்கள் எல்லாரும் நல்லா தமிழில எழுதுறீனம் பாருங்கோ. சேரேக்க எத்தனையாவது அவதாரம் எண்டும் சொல்லிப்போட்டுச் சேர்ந்தால் அதற்கு ஏற்றபடி நாங்களும் எங்கட வரவேற்ப குடுக்கலாம் பாருங்கோ.
முரளி: யாழில் சமையல்பற்றிய கலந்துரையாடல் நடைபெறுகின்றது. உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?
டன்: நீங்கள் எந்தச் சமையலைப் பற்றி கேட்கிறீங்கள் என்று தெரியவில்லையுங்கோ. மன்னிச்சுக்குங்க சாமி..
முரளி: யாழ் மீண்டும் கலகலப்பாக வருவதற்கு மூன்று வழிகள் கூறுங்கள் பார்க்கலாம்..
டன்:
1. சிறையில அடைக்கப்பட்டுள்ள தொண்டர்கள் விடுதலை செய்யப்படவேணும் பாருங்கோ.
2. மட்டறுத்துனர்களின் அதிகாரங்கள் மட்டுப் படுத்தப்படவேணும் பாருங்கோ.
3. வெளி ஆக்களுக்கு படம் காட்டுறதுக்காக கருத்துக்களத்தை மாற்றி அமைக்காது.. இங்கு உள்ள கருத்துக்கள உறவுகளிற்கு ஏற்றவகையில கருத்துக்களத்த மாற்றி அமைக்கவேணும் பாருங்கோ. :wub:
முரளி: நீங்கள் இம்மாதம் 23 ம் திகதி உங்கள் 51 வது வயதில் காலடி வைப்பதாக யாழ் நாட்காட்டியில் அறிந்தோம். உங்களிற்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
டன்: நன்றியுங்கோ..
முரளி: யாழில் அண்மையில் நீங்கள் விரும்பிச் சுவைத்த கவிதைகள்...
டன்: தயங்குங்கோ இயங்குங்கோ மயங்குங்கோ.. இது ரொம்ப பிடிச்சுப்போச்சுங்கோ :wub:
முரளி: இந்த வார கலகக் கண்ணாடியின் கதாநாயகனாக யாரைப் போடலாம்..?
டன்: உங்களைப் போடத்தான் ஆசை.. ஆனாலும்.. நான் திருவாளர். வலைஞன் அவர்களை தெரிவு செய்கின்றேன் பாருங்கோ.
முரளி: இதற்கு ஏதும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றனவா?
டன்: அவர் நடந்து வரும்போதே சுனாமி ஒன்று வருவது போல் உள்ளது. இது தவிர வேறு என்ன தகுதி வேணும் பாருங்கோ..
முரளி: இறுதியாக உங்களிடம் ஒரு வரி கேள்வி - பதில்கள்..
டன்: சரியுங்கோ. ஒண்டு ஒண்டா கேளுங்கோ..
முரளி: அடி வாங்க..?
டன்: நெடுக்காலப்போவான்
முரளி: ஆக்களை வெருட்ட..?
டன்: வலைஞன்
முரளி: இளிச்சவாய்..?
டன்: நீங்கள்
முரளி: ஈகைக்கு?
டன்: நாங்கள்.. இவ்வளவும் காணும் இனி நீங்கள் போங்கள்..
முரளி: நன்றி! நன்றி! இவ்வளவு நேரமும் பொறுமையாக எமக்காக யாழ் கலகக் கண்ணாடிக்காக பேட்டி தந்தமைக்காக உங்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
டன்: எங்களுக்கு வெறும் நன்றி வேணாமுங்கோ. அத நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ. தாயக மக்களுக்காக நாங்கள் செய்யுற நேசக்கரம் திட்டம் மூண்டுக்கு எல்லாரும் ஆதரவு தாங்கோ.. அது ஒண்டுதான் இப்ப நமக்கு வேணுமுங்கோ..

அப்ப நான் போகட்டா..! :wub:

(யாவும் கற்பனை அல்ல)

#39 கரும்பு

கரும்பு

  உங்களில் ஒருவன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,930 posts
 • Gender:Male

Posted 18 May 2008 - 04:39 AM

யாழ் காவல் கண்ணாடி 18.05.2008


Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image


முரளி: இனிய டொரண்டோ வணக்கங்கள் மோகன். யாழ் காவல் கண்ணாடி சார்பாக இன்று உங்களுடன் தொலைபேசியில் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மோகன்: உங்களுக்கும் இனிய ஒஸ்லோ வணக்கங்கள் முரளி. :)
முரளி: சொல்லுங்கள் மோகன்... கடந்தவாரம் யாழில் நீங்கள் பெற்ற அனுபவங்கள் பற்றி..
மோகன்: வழமைபோலவே எல்லாம் நடைபெற்றன. ஒரே ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால் நீங்கள் சேம் சைட் கோல் அடித்து எமது அணியை தோல்வி அடையச்செய்து இருந்தீர்கள். :D
முரளி: ஊர்ப்புதினம் பகுதியில் எவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்று உள்ளன?
மோகன்: புலிகளின் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக யாரோ கதை அளந்தார்கள். கொழும்பில் மீண்டும் குண்டு வெடித்து உள்ளது. பிள்ளையானுக்கு கிரீடம் சூட்டப்பட்டுள்ளது.. இவை தவிர இன்னும் பல செய்திகள் உள்ளன.
முரளி: யாழ் வாசகர்களின் வருகை கடந்தவாரம் எப்படி இருந்தது?
மோகன்: வழமைபோலவே இருந்தது. எமது இணையத்தில் தற்போது தினமும் பல வாசகர்கள் முன்பைவிட அதிக அளவில் இணைந்து இருக்கின்றார்கள். இதை நான் அண்மைக்காலமாக அவதானித்து வந்துள்ளேன்.
முரளி: கேட்கவேண்டும் என்று நினைத்தேன். நானும் அண்மைக்காலமாக அவதானித்து வந்துள்ளேன், யாழில் பெண்களின் வருகை தற்போது மிகவும் குறைவடைந்துள்ளதே? இதற்கு என்ன செய்யலாம்?
மோகன்: ஒன்றும் செய்யமுடியாது. உங்களுக்கு விருப்பம் என்றால் நீங்களும், உங்கள் சீடன் யமுனாவுமாக ஆளாளுக்கு நான்கு ஐந்து பெண் பெயர்களில் உறுப்புரிமை எடுத்து யாழை மீண்டும் கலகலப்பு அடையச்செய்யலாம். எமக்காக மலசலகூடம் ஒன்று கட்டித்தந்த நீங்கள் இந்த உதவியையும் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். :)
முரளி: நிச்சயமாக.. நிச்சயமாக விரைவில் அந்த அவதாரத்தையும் எடுக்கின்றோம்.
மோகன்: மிக்க நன்றி!
முரளி: சரி மோகன் சொல்லுங்கள்.. கடந்தவாரம் உங்களுக்கு அதிக மன அழுத்தம் தந்த கள உறவுகள் யார்? உங்களுக்கு அதிக மன அழுத்தம் தந்த முக்கியமான மூன்று உறுப்பினரகளை கூறமுடியுமா?
மோகன்: மூன்று என்ன... முதல் பத்தையும் கூறுகின்றேன் கேட்டுத் தொலையுங்கள்.. முரளி, தூயவன், வலைஞன், வன்னியன், தயா, நெடுக்காலபோவான், வசம்பு, நுணாவிலான், லக்கிலுக், மற்றும் பகுத்தறிவு :(
முரளி: நாம் உங்களுக்கு அதிக மன அழுத்தம் தந்து இருக்கின்றோம். மன்னித்துக்கொள்ளவும்.
மோகன்: பரவாயில்லை. தொடர்ந்தும் தரத்தானே போகின்றீர்கள், மன்னிப்பை ஆறுதலாகக் கேட்கலாம்.
முரளி: எம்மை யாழில் தடை செய்யவேண்டும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா?
மோகன்: இப்போதும் கூடத்தான் அப்படி நினைக்கின்றேன். நீங்கள் தடைசெய்யாமலே இத்தனை பல பெயருகளுடன் யாழுக்கு வந்து குழப்படிகள் செய்கின்றீர்கள். இதுவாவது பரவாயில்லை. ஆள் யார் என்று தெரியும். ஆனால், நான் தடைசெய்த பின்னர் அதன்பிறகு பலநூறு அவதாரங்கள் எடுத்து நீங்கள் குழப்படிகள் செய்யும்போது நான் படக்கூடிய அவஸ்தையைவிட இது பரவாயில்லை போல் உள்ளது. எனவே உங்களை தடை செய்யவில்லை.
முரளி: வலைஞனும், மோகனும் ஒருவர் என்று சிலர் கூறுகின்றார்களே? அது உண்மையா?
மோகன்: இது என்ன புதிய ஒரு குண்டைத் தூக்கிப் போடுகின்றீர்கள்? எனக்கு MOHAN எனப்படும் பெயரில் இன்னொரு உறுப்புரிமை இருக்கின்றது. இதுதவிர வேறு அவதாரங்கள் ஒன்றும் எனக்கு இல்லை. இந்த மோகன் எனும் பெயருடன் நான்படும் துன்பங்களே கொஞ்ச நஞ்சம் அல்ல. இதற்கு மேலும் தேவையா? :o
முரளி: நான் கவனித்துள்ளேன். அதாவது யாழ் உறவோசைப் பகுதியில் பெரும் போர் நடைபெறும் நேரங்களில் நீங்கள் மட்டறுத்தல் ஒன்றும் செய்யாது இரகசியமாக வந்து காணொளிகளை மட்டும் இணைத்துவிட்டுச் அமைதியாகச் செல்வீர்கள். வேறு ஒன்றும் கூறுவதில்லை. ஏன் அப்படி?
மோகன்: ஊரில எத்தினயோ பிரச்சனைகள் நடக்கிது. இஞ்ச சண்டை பிடிக்கிறதவிட்டுப்போட்டு அங்க நடக்கிற பிரச்சனைகள் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள் என்று சொல்லாமல் சொல்லி நான் காணொளிகளை இணைக்கிறது. ஆனால் நீங்கள்தான் அவற்றைப் பார்ப்பதே இல்லையே!
முரளி: ஓ அப்படியா? இனிமேல் பார்க்கின்றேன். மன்னித்துக்கொள்ளவும்.
மோகன்: பரவாயில்லை, மன்னிப்பை ஆறுதலாகச் சொல்லலாம்.
முரளி: நாம் எழுதுபவற்றை வாசிக்கும்போது உங்களுக்கு சிரிப்பு ஏற்படுவதில்லையா?
மோகன்: அந்த நிலையை எல்லாம் எப்போதோ கடந்துவிட்டோம். இப்போது புன்னகை தவிர வேறு எதுவும் எனக்கு பெரிதாக வருவதில்லை.
முரளி: அண்மைக்காலமாக மெய்யெனப்படுவது பகுதியில் இந்து மதத்தை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்கின்றார்களே? ராமர் எனும் பெயரை வைத்து இருக்கும் நீங்கள் ஏன் இவற்றைப் பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கின்றீர்கள்?
மோகன்: அவற்றினை மட்டறுத்தல் செய்யும்போது எனக்கு கிடைக்கும் மன உலைச்சலைவிட, நான் செய்த தவறுகளுக்காக கடவுளிடம் நேரடியாக தண்டனை பெற்றுக்கொள்வது பரவாயில்லை போல இருக்கின்றது. எனவே, அவைபற்றி நான் கண்டும் காணாமல் இருக்கின்றேன்.
முரளி: உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக அறிந்தோம். எதிர்காலத்தில் உங்கள் குழந்தையும் யாழ் இணையத்தில் கருத்தாடல் செய்ய அனுமதிப்பீர்களா?
மோகன்: நிச்சயமாக இல்லை. நீங்கள், நெடுக்காலபோவான், மற்றும் யமுனா போன்றோர் எழுதுபவற்றை வாசித்துவிட்டு பின் அதுபோல் எனது குழந்தையும் வீட்டில் என்னை கிண்டல் செய்யத் தொடங்கினால் என்னால் அந்தத் துன்பத்தை தாங்க முடியாது. வீட்டில் எனது குழந்தை யாழ் என்ற சொல்லை உச்சரிக்கக்கூட நான் விடமாட்டேன். யாழ் எனும் இசைக்கருவியின் படத்தைக்கூட நான் எனது குழந்தையின் கண்களில் படாமல் பார்த்துக்கொள்வேன். ஏன் "யா" என்ற எழுத்தைக்கூட எனது குழந்தைக்கு நான் சொல்லிக்கொடுக்க மாட்டேன். :D
முரளி: நீங்கள் யாழ் இணையம் நடாத்துவதற்கு உங்கள் வீட்டில் இருந்து எவ்வாறான ஒத்துழைப்புக்கள் கிடைக்கின்றது?
மோகன்: அதை ஏன் கேட்கின்றீர்கள், கந்தப்புவின் நிலமைதான் வீட்டில் எனக்கும். இதனால்தான் நான் அடிக்கடி யாழுக்கு அனோனிமஸாக (ஒளிஞ்சு) வரவேண்டி உள்ளது. என்னைக் காணவில்லையானால் எனது மனைவி என்னை முதலாவதாக வந்து தேடும் இடம் இந்த யாழ் இணையமே. எனவே, வீட்டில் பேச்சு வாங்காதிருப்பதற்காக பெரும்பாலும் வேலைத்தளத்தில் இருந்து யாழ் நிருவாக வேலைகளைக் கவனிப்பேன்.
முரளி: எமக்காக ஒரு கவிதை கூற முடியுமா?
மோகன்: எனக்கு கவிதை வராது. மன்னிக்கவும். என்றாலும் நான் அடிக்கடி வாயில் முணுமுணுக்கும் பாடல் வரிகளை கூறுகின்றேன்..

எங்கே நிம்மதி...! எங்கே நிம்மதி...!
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

எங்கே இண்டர்நெட் இணைப்பு இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

எங்கே நிம்மதி...! எங்கே நிம்மதி...!
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

எனது கைகள் மீட்டும் போது யாழ் அழுகின்றது!
எனது கைகள் தழுவும் போது மட்டறுத்தல் சுடுகின்றது!
எனது கைகள் மீட்டும் போது யாழ் அழுகின்றது!
எனது கைகள் தழுவும் போது மட்டறுத்தல் சுடுகின்றது!

என்ன நினைத்து என்னைப் படைத்தான்?
இறைவன் என்பவனே... !
கணணியைப் படைத்து இணையத்தை படைத்த
மனிதன் கொடியவனே!
ஹோ, மனிதன் கொடியவனே!

முரளி: (அழுகை...)
மோகன்: (பதற்றம்) (பின்னர் தானும் சேர்ந்து அழுகின்றார்...) (பின்னர் ... ) முரளி அழாதீர்கள். உள்ளதைத்தானே சொன்னேன். :lol:
முரளி: (மெளனம்... சிறிது நேரத்தின் பின்னர்..) உங்களுக்கு யாழ் மூலம் மன அழுத்தம் ஏற்படும்போது என்ன செய்வீர்கள்?
மோகன்: தைலனோல் குளிகைகள் போடுவேன், எனது மகளுக்கு இணையத்தில் எத்தனைவிதமான ஆபத்துக்கள் உள்ளன என்பது பற்றி அறிவுரைகள் கூறுவேன், குசினியில் மனைவிக்கு உதவிகள் செய்துகொடுப்பேன். மன அழுத்தம் மிகவும் அதிகமானால் வீட்டில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு இருட்டினுள் அமைதியாக இருந்து கடவுளை பிரார்த்தனை செய்வேன்.
முரளி: கடந்த சில காலமாக தூயா அவர்களின் சுவையருவியில் பல பதார்த்தங்களை அறிமுகம் செய்து உள்ளார். தூயாவின் சமையல் குறிப்பை வீட்டில் செய்துபார்த்த அனுபவம் இருக்கின்றதா?
மோகன்: உடாங் சம்பல் மூலம் முன்பு பெற்ற அனுபவத்தின் பின் சுவை அருவியில் உள்ளவற்றை வாசிப்பதுடன் மட்டும் நிறுத்திவிட்டேன்.
முரளி: ஒருவன் அல்லது ஒருத்தி ஒருத்தரை காதலிக்கும்போது அந்தக் காதலை யார் யாரிடம் எல்லாம் கட்டாயம் சொல்லவேணும்? என்று ஒரு கேள்வியை நான் அண்மையில் யாழில் கேட்டு இருந்தேன். இதற்கு உங்கள் பதில் என்ன?
மோகன்: ஆம், நானும் அதைப் பார்த்து இருந்தேன். நான் போலீசுக்கு என வாக்களித்து இருந்தேன். நெடுக்காலபோவான் சொன்னதுபோல் காதலன்/காதலி காணாமல்போனபின் வேதனைப்படுவதை தவிர்ப்பதற்கு ஆரம்பத்திலேயே போலிசிற்கு ஒரு சிறிய அறிவித்தல் கொடுத்துவிட்டு காதல் பயணத்தை தொடங்குவதே எனக்கு பாதுகாப்பாக தெரிகின்றது.
முரளி: யாழ் நிருவாகம் என்பது யார் அல்லது எது என்று யாருக்காவது தெரியுமா? என்று நான் அண்மையில் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன். இதற்கு உங்கள் பதில் என்ன?
மோகன்: அது யார் என்று இறுதிவரை தெரியாமல் இருப்பதே உங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது, மற்றும் இங்கு வந்துபோகும் மற்றையவர்களுக்கும் நல்லது. :D
முரளி: யாழ் ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் உங்களுக்கு இருக்கின்றதா?
மோகன்: விருப்பம்தான், ஆனால் இதன்மூலம் வரக்கூடிய சிக்கல்கள் கருதி இவற்றில் பங்குபற்றுவதில்லை. பலர் இங்கு பல்லவியை தேடித்திரிகின்றார்கள் போல இருக்கின்றது.
முரளி: உங்களுக்கு பிடித்த விளையாட்டு.
மோகன்: பெரிதாக இல்லை. ஆனால் எனக்கு தடைதாண்டி ஓட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டில் மகளுடன் ஒளித்துப்பிடித்தும் விளையாடுவேன்.
முரளி: நீங்கள் அண்மையில் பார்த்து ரசித்த தமிழ் திரைப்படம் எது?
மோகன்: பல உள்ளன. எனக்கு யாழில் மன அழுத்தம் ஏற்படும்போது தமிழ்ப்படங்கள் பார்ப்பேன். குருவி எனப்படும் ஒரு படம் வரப்போவதாய் சொன்னார்கள். யாழிலும் குருவி என ஒருவர் முன்பு இருந்தார். எனவே இந்தக் குருவி படத்தை பார்ப்பதற்கு ஆவலாய் உள்ளேன்.
முரளி: நீங்கள் யாழில் அண்மையில் படித்துச்சுவைத்த கவிதைகள்?
மோகன்: வரமான பூச்ச்சரங்கள் என காவலூர்கண்மணி அவர்கள் அன்னையைப் பற்றி ஓர் அழகிய கவிதை எழுதி இருந்தார். நன்றாக இருந்தது.
முரளி: யாழ் உறவோசைப் பகுதியில் வாசகன் என்பவர் மெதுவாக வந்து இரண்டு வசனங்களில் எதையாவது எழுதி ஒரு கருத்தாடலை ஆரம்பித்து திடீர் பூகம்பங்களை யாழில் கிளப்பிவிட்டு செல்கின்றாரே? இவரும் நோர்வேதானே? இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
மோகன்: நானும் இவரைத்தான் யார் ஆள் என்று நோர்வேயில் கடந்த சில வருடங்களாகத் தேடிக்கொண்டு திரிகின்றேன். கண்டுபிடிக்க முடியவில்லை.
முரளி: யாழ் இணையத்தின் பெறுமதி சுமார் $100,000 க்கு மேல் தேறும் என்றும், யாழுக்கு கூகிள் விளம்பரம் மூலம் தினமும் $150 வருமானம் வருவதாக இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றாரே. உண்மையா?
மோகன்: நானும் இளைஞன் கூறியபின்னர்தான் இந்தத் தகவல்பற்றி அறிந்துகொண்டேன்.
முரளி: யாழ் மூலம் கிடைக்கும் வருமானத்தை என்ன செய்வதாய் தீர்மானித்து இருக்கின்றீர்கள்?
மோகன்: யாழ் இணையத்தில் கருத்து எழுதுவதால் அல்லது யாழை பார்வையிடுவதால் உளவியல் வியாதிகளை எதிர்கொள்ளும் வாசகர்கள், மற்றும் கள உறவுகளிற்கு இலவசமாக இணையம் மூலம் மனநல சிகிச்சை பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கப்போகின்றேன். :D
முரளி: கடைசியாக..
மோகன்: கொஞ்சம் பொறுங்கள். நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கவிரும்புகின்றேன்.
முரளி: கேளுங்கள் மோகன்..
மோகன்: ஏன் நீங்கள் மட்டும் யாழ் காலக்கண்ணாடி செய்கின்றீர்கள்? மற்றையவர்கள் ஏன் இப்போது இதைச் செய்வது குறைந்துவிட்டது?
முரளி: இஞ்ச எல்லாருக்கும் குந்தி இருந்து வாசிக்கிறது மட்டும்தான் பிடிச்சு இருக்கிதாம். நீங்கள் வேற நாளுக்கு நாள் யாழில புதுசு புதுசா சட்டங்கள் கொண்டு வந்து கருத்து எழுதுற ஒண்டு ரெண்டு சனங்களயும் வெருட்டிக்கொண்டு இருக்கிறீங்கள். எல்லாம் அறிவித்தலா போட்டால் எப்பிடி ஆக்கள் கேட்பீனம்? சொல்லிறத, சொல்லுறமாதிரி பணிவாச் சொல்லலாம் தானே?
மோகன்: ஓ அப்படியா? மன்னித்துக்கொள்ளவும்.
முரளி: பரவாயில்லை, இன்னும் புதிது புதிதாக அறிவித்தல்கள் சட்டங்கள் கொண்டுவரத்தானே போறீங்கள்? எண்டபடியால நீங்களும் மன்னிப்பை ஆறுதலாகச் சொல்லலாம்.
மோகன்: ஹாஹா (சிரிப்பு)... பின்னர் (திடீர் மயான அமைதி... ) :)
ஒரு பெண் குரல்: ஹலோ, யார் நீங்கள்? கனநேரமா போனில அவரப்போட்டு சும்மா மினக்கடுத்திக்கொண்டு இருக்கிறீங்கள்?
முரளி: யாழ் காவல் கண்ணாடிக்காக இவ்வளவு நேரமும் பொறுமையாக தொலைபேசிமூலம் உரையாடிய மோகனுக்கு நன்றி சொன்னதாய் சொல்லுங்கோ! வணக்கம்!
பெண் குரல்: சொல்லிவிடுறன். நன்றி! வணக்கம்!

(கீக் கீக் கீக்... தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது)

(இதுவும் கற்பனைதான். கோவிச்சுக்காதிங்கோ)

Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image#40 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,906 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 08 June 2008 - 09:47 PM

காலக்கண்ணாடி 02/06/ 2008 தொடக்கம் 02/06/2008

எழைக்கேற்ற எள்ளுருண்டை மாதிரி சென்ற கிழமை நான் வாசித்த பதிவுகளையும் , செய்திகளையும் கீழெ இணத்துள்ளேன்.
சில தவற விடப்பட்டிருக்கலாம் கள உறுப்பினர்கள் மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றேன்.

சென்ற கிழமை களத்துக்கு புது உறுப்பினர்களாக நிலாமதி ,தமிழ் குரல், மொழி ,சங்கிலியன் ஆகியோர் இணைந்து கொண்டார்கள்

02/06/2008

ஊர்ப்புதினம்

நேற்று முந்தினம் வெள்ளவத்தையில் பொதுமக்களை இலக்கு வைத்து வீசப்பட்ட குண்டு வெடிப்பின் பின்னணியில் சிறிலங்கா படையினர்?

வன்னியில் கிளைமோர் தாக்குதல் - இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் பலி

ஏறாவூரில் துணைப் படைக்குழுவின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை

கிழக்கு மாகாணம் பௌத்த கலாசாரத்தின் புனித புத்த பூமி--எல்லாவள மேதானந்த தேரர்:

பிள்ளையான் அணியினர் ஆயுதங்களை எடுத்துச் செல்ல சிங்களப்படை தடை?

கருணாவிடம் காசு கொடுத்து வாங்கிய ஆயுதத்தால் பிள்ளையானுக்கு எதிராக போராடுகிறோம் - ஜிகாத்.

யாழ்ப்பாணம் ஏழாலையில் வெடிப்புச் சம்பவம்: 9 வயதுச் சிறுவன் பலி மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயம்

ஐரோப்பாவில் புலிகளின் குரல் - உறவாடும் ஊடகம்

03/06/2008

ஊர்ப்புதினம்

தமிழீழ விடுதலைப் புலிகளினால் புலித்தேவன் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி வெறும் வதந்தி – யாலவன்

தென்பகுதிக் குண்டுவெடிப்புக்கு புலிகள் பொறுப்பல்ல.

இரண்டாக உடைகிறது ஐக்கிய தேசியக் கட்சி!

கொழும்பு நிர்வாகம் குறிப்பிடுவது என்ன? - நிலவரம் ஆய்வு நிகழ்வு

இலங்கை தமிழர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்க விரும்புகிறீர்களா?

ஜனாதிபதியின் கிரகநிலை சரியில்லை

இன்னுமா....உறக்கம்? - கவிதைப்பூங்காடு

உயிரே நீதான் உறவே! - கவிதைப்பூங்காடு


04/06/2008

ஊர்ப்புதினம்

வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு

எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்ச்செய்திதான்: புலித்தேவன்

படையை விட்டு தப்பியோடிய கோத்தபாயதான் தேசத்துரோகி: ரணில்


05/06/2008

ஊர்ப்புதினம்

பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 18 பேர் காயம்

நாகர்கோவிலில் புலிகளின் சிறப்புக்கனரக அணியினரால் படையினரின் காவலரண்கள் தாக்கியழிப்பு

கடந்த மாதம் 138 படையினர் பலி- 549 பேர் காயம்: சிறிலங்காப் பிரதமர்

காத்தான்குடியில் மீண்டும் பதற்றம்: 25 தமிழர்களுக்கு வாள்வெட்டு- நோயாளர் காவு வாகனம் மீதும் தாக்குதல்


கருணா இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளாரா? கிழக்கு மாகாண ஆளுநர் பதவி கருணாவுக்கு?

வந்தது கடிதம் - கவிதைபூங்காடு

மலர் கொண்டு வருவன் மண் மீது தூவ .................கவிதைபூங்காடு


மீன் சொதி - நாவூற


06/06/2008

ஊர்ப்புதினம்

மொரட்டுவையில் குண்டு வெடிப்பு

கண்டியில் குண்டு வெடிப்பபு

மொரட்டுவை பிரதேசத்தில் மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிப்பு

சிறை மீழும் செம்மலுக்கு கவர்னர் பதவி?

அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு

பொத்துவில் காட்டுப் பகுதியில் 9 பேர் கடத்தல்

பயங்கரவாதத்தை ஒழிக்க இஸ்ரேல் இங்கைக்கு உதவி.

நாகர்கோவிலில் புலிகளின் மோட்டார் தாக்குதல்: இரு படையினர் பலி!

விசேட சலுகைக்காக சர்வதேசத்தை இறைஞ்சுகின்றது இலங்கை

யாழ் இணையம் உருவாக்கிய ஓர் இனிய கலைஞனின் அறிமுகம்!, தரிசனம் - வேரும் விழுதும்


07/06/2008

ஊர்ப்புதினம்

இந்தியப்படைகளின் அட்டூழியத்தை பிரியங்கா அறிவாரா?


தொடர் தாக்குதல்களின் எதிரொலி: சிறிலங்காவின் பங்குச் சந்தையில் சரிவு

கொழும்பில் உள்ள புலிகளின் வலைமையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும் - ஹெல உறுமய

கொழும்பில் இவ்வாண்டு மட்டும் 76 பேர் பலி 457+ பேர் காயம்.

ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் - 03.06.2008

சாதி சரி இல்லை என்றாள்! - கவிதைப்பூங்காடு

08/06/2008

ஊர்ப்புதினம்

மற்றோரு பலப்பரீட்சைக்கு தயாரகும் வட போர் அரங்கு

அதிர்ச்சித் தாக்குதல்களால் ஆட்டம் காணும் சிறிலங்கா

ரணில் அவசர இந்திய விஜயம்: இந்திய அரசு அழைப்பு

ரணிலை கட்சித் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்ற கட்சி எம்.பி.கள் சிலர் தீவிர முயற்சி

அரச துணைக்குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் களையாது.இதில் இணைக்காமல் விட்டவற்றை மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

தமிழ் சிறி
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]