Jump to content

தமிழ் தேசியமும் கோடம்பாக்க மாயையும்


Recommended Posts

'மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும்' 'மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும்' 'சாதியம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி' தலித்தியமும் தமிழ் தேசியமும்' என்ற தலைப்புக்களிலே நான் எழுதிய கட்டுரைகளுக்கு பலரும் ஆரோக்கியமான விதத்தில் தமது எதிர்வினைகளை தெரிவித்திருக்கிறார்கள். அதை விட ஊடகத்துறையின் முக்கியத்துவத்தையும் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு அதன் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அனைவரும் இருக்கிறார்கள்.இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கருத்தியல் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அந்தத் தடத்திலே உறுதியாக கால் பதிக்காமல் எங்களது இனத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியாது என்ற உணர்வும் நம்பிக்கையும் நமது இளைய சமூகத்திலள்ள ஒரு குறிப்பிட்ட சிலருக்காவது ஏற்பட்டிருப்பதையிட்டு பெருமையாக இருக்கிறது.

இங்கே இந்த யாழ்களத்திலே கடவுள் மற்றும் மதத்தை நம்புபவர்களுக்கும் அதை நம்பாதவர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. அரசில் ரீதியாக குறிப்பிடுவதானால் கருத்து முதல் வாதத்துக்கும் பொருள் முதல் வாதத்துக்கும் இடையிலான விவாதமாக இது தொடர்கிறது. சில சமயம் ஆரோக்கியமாச் செல்லும் விவாதம் சில சமயங்களில் தனி நபர் தாக்குதலாக மாறுகிறது.

நான் அவதானித்த வரையில் சராசரியாக ஒரு நான்காயிரம் பேர் இந்த களத்தில் உள்ள விடயங்களை தினசரியோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையோ படிக்கின்றார்கள் என்பதை கணிக்க முடிகிறது. அதிலும் ஒரு ஆயிரம் பேர் தீவிரமாக படிக்கிறார்கள் என்பதையும் உணரமுடிகிறது. இதில் முதல் கட்டமாக குறைந்த பட்சம் ஒரு 250 இளையோரையாவது தாயகப்பற்றுடன் கூடிய முழுமையான கருத்தியல் ஆளுமையும் செயலூக்கமும் மிக்கவர்களாக உருவாக்கி ஒன்றிணைந்த தாயக செயற்பாட்டின் கீழ் இணைத்து விடுவோமாக இருந்தால் அது தாயக விடுதலைக்கு நாங்கள் செய்கின்ற பேருதவியாக இருக்கும்

சிறீலங்கா அரசு எமக்கு எதிராக சர்வதேச அளவில் கருத்தியல் போர் அல்லது ஊடக யுத்தம் ஒன்றையும் ஆரம்பித்திருக்கும் நிலையில் நாங்கள் அதை கணக்கில் எடுக்காது 'மக்கள் திருந்தவில்லை மக்கள் மாறவில்லை' என்று இனியும் சொல்லுவோமாக இருந்தால் நிச்சமாக தேசியத் தலைவருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தக்கும் நாங்கள் மிகப் பெரிய துரோகத்தை செய்தவர்களாக இருப்போம்.

ஒரு ஊடகத்தினால் மக்களை மாற்றமுடியாது என்று ஊடகத்துறையில் இருக்கும் ஒருவர் சொன்னால் அவர் ஒரு துரோகி என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன். மாற்றுக் கருத்துள்ள ஒருவரால் அடித்து மூடப்படுகின்ற ஒரு கதவின் இடுக்கினூடாகக் கூட ஊடகத்தால் அவரது வீட்டுக்குள் நுழைய முடியும்.

ஒரு காலத்தில் எங்களுக்கென்று எந்த ஊடகங்களும் இல்லாத நிலையில் எங்களது கருத்தை எங்களது அவலத்தை வெளிப்படுத்த முடியாமல் நாங்கள் கஷ்டப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்று எங்களுக்கென்று ஊடகங்கள் வந்த பின்பு அந்த ஊடகப்பரப்பை அந்தக் கருத்தியல் தளத்தை நாங்கள் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறோமா? என்று கேட்டால் இல்லை என்று தான் நான் பதில் சொல்வேன்.

எங்களுடைய ஊடகங்களில் எந்த ஊடகமும் சர்வதேச ஊடகங்களுடனோ ஊடகவியலாளர்களுடனோ நெருக்கமான உறவைக் கொண்டிருக்கவில்லை. ஊடகம் என்ற தளத்தில் நின்று கொண்டு எங்களது போராட்டத்தின் நியாயத் தன்மையை சிறீலங்கா அரசால் எங்களது மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை சர்வதேச ஊடகங்கள் மூலமாக வெளிக் கொண்டு வரச் செய்வதற்கும் சர்வதேச சமூகத்தை எங்கள் பக்கம் திரும்ப வைப்பதற்கும் ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கவில்லை. தமிழ் நெட் இணையத் தளம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சர்வதேச ஊடகப் பரப்புக்குள் எமது செய்திகளை எடுத்துச் சென்றாலும் அது ஒரு இணையத் தளம் என்ற நிலையை விட்டு தமிழர் தரப்பின் வலுவான செய்தி நிறுவனம் என்ற அடுத்த கட்டப்பாச்சலுக்கு செல்லவில்லை.

தமிழர் தரப்பு ஊடகத்துறையில் குறைந்த வளங்களுடன் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் நிறையச் செய்திருக்கிறது என்று பெருமை பேசி திருப்திப்பட்டுக்கொள்ளும் போக்கு எங்கள் பலரிடம் இருக்கிறது. இந்தப் போக்கே எமது துறைசார் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது என்பதை நாங்கள் உணர்வதில்லை.

அதேபோல புலம் பெயர்ந்த எங்களுடைய மக்களை தமிழ்தேசியம் என்ற தளத்தில் வைத்து அணி திரட்டுவதற்கும் அவர்கள் மத்தியில் 'எங்களது தாயகம்' என்ற சிந்தனையையும் அந்த தாயக மீட்புக்கு நாங்கள் ஒவ்வொருவருமே எங்கள் கடமையை செய்ய வேண்டும் என்ற தேசிய எழுச்சியை உருவாக்குவதிலும் எங்களது ஊடகங்கள் தவறிழைத்திருக்கின்றன.

எங்களது ஊடகங்களில் தாயகம் நோக்கிய பயணத்துக்கான அணி திரட்டல் 25 வீதம் நடைபெறுகின்றது என்றால் அதை மழுங்கடித்து அந்த தேசிய உணர்வை சிதைப்பதற்கான வேலைகள் 75 வீதம் நடைபெறுகின்றன.

ஊடகங்களின் இருப்பை தக்க வைப்பதற்கு சினிமாவும் சின்னத் திரையையும் அதுசார்ந்த நிகழ்சிகளும் அடிப்படையானவை மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்ற மலினமான சிந்தனைப் போக்கு எங்களுடைய ஊடகங்களுக்கு இருக்கிறது.

சமூகத்தை சீரழிக்கும்- செயலற்றதாக மாற்றும் கழிசடை சினிமாவையும் சின்னத் திரையும் காட்டி வியாபாரம் செய்ய முற்படும் நமது ஊடகங்கள் தினசரி ஒரு புளுபிலிம் அதாவது நீலப்படம் காண்பித்தால் சமூகம் பற்றி அக்கறையுள்ள- ஊடக வடிவம் பற்றி அக்கறையுள்ள ஒரு கொஞ்சப்பேர் எதிர்ப்பார்கள் -அதை கண்டித்து ஏழுதுவார்கள். ஆனால் நிறையப் பேர் பொய் பெயர் கொடுத்து இரகசியமாவது சத்தாதாரர்களாகி அதை பார்ப்பர்கள்.

தெற்கே பிரபாகரனும் வடக்கே வீரப்பனும் ஆயுதத்தை வைத்துக்கொண்டு மக்களை அழிப்பதை நாட்டுப்பற்றள்ள எந்தத் தமிழனும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் என்று வீர வசனம் பேசுகின்ற திரைப்படங்களயும் பெண்களின் மார்பகங்களையும் இடையையும் வக்கிரத்தனமாக குலுங்க வைத்து ஆட வைத்து முக்கல் முனகல் சத்தங்களுடன் அதை விதம் விதமான கோணங்களில் படம் பிடித்து காட்டுகின்ற திரைப்பட பாடல்களையும் ஒளிபரப்பவதும் நீலப்படங்களை ஒளிபரப்புவதும் ஒன்றுதான்.

தன்னுடைய விடுதலைக்கு போராடுகின்ற ஒரு இனம் தனக்கென்று ஒரு ஊடகத்தை கையில் எடுக்கின்ற போது எப்படிச் செயற்பட வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வை எமது ஊடகங்களுக்கு இல்லாததும் அது கருத்தை வாங்கி விற்கின்ற நிறுவனமாக இல்லாமல் கருத்தை உருவாக்குகின்ற நிறுவனமாகவும் மாற்றுக் கருத்துக்களுக்கு எதிரான கருத்தியல் போரை நடத்தகின்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் அதற்கான திட்டமிடலும் எமது ஊடகங்களில் குறைவாக இருப்பதும் எமது ஊடகத் தளத்தில் உள்ள மிகப் பெரிய குறைபாடாகும்.

அடுத்து மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு மக்களுக்கு கற்றுக் கொடுப்பது என்பது ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.

நாங்கள் விரும்புவதை மக்கள் விரும்பகின்றபடி கொடுப்பது தான் சமூக அக்கறையுள்ள ஒரு ஊடகத்தின் வெற்றியாகும். மக்கள் விரும்புவதை மக்கள் விரும்பும்படி கொடுப்பதற்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தேவையில்லை.

மக்கள் என்கிற போது அவர்கள் எல்லோருமே ஒரேவிதமான சிந்தனைப் போக்கை கொண்டவர்களல்ல. மனித சமூகம் என்பதே முரண்பாடுகளால் கட்டமைக்கப்பட்டது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான முரண்பாடு, கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான முரண்பாடு, சகோதர சகோதரிகளுக்கு இடையிலான முரண்பாடு நண்பர்களுக்கு இடையிலான முரண்பாடு உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு இனங்களுக்கிடையிலான முரண்பாடு மதங்களுக்கிடையிலான முரண்பாடு என்று எண்ணற்ற முரண்பாடுகளுக்கூடாகத் தான் மனித சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் மனித சமூகத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி உந்தித் தள்ளுகிறது என்பதும் ஒரு முரண்பாடு தீரும் போது அது இன்னொரு முரண்பாட்டை தோற்றுவித்துவிட்டுச் செல்கிறது என்பது ஒரு புகழ் பெற்ற அரசில் கோட்பாடாகும்.

எனவே முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் பற்றிய இயக்கவியல் விதியை சாரியாக கணிப்பீடு செய்து பிரதான முரண்பாடு எது? அடிப்படை முரண்பாடு எது? பகை முரண்பாடுகள் எவை? நட்பு முரண்பாடுகள் எவை?என்பதை வரையறுத்து இன்று எந்த முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கிறதோ அந்த முரண்பாட்டின் தன்மை அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் அதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் என்பவை பற்றியெல்லாம் மக்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வடிவங்களில் உணர்த்துவதும் அதற்கான வேலை திட்டங்களை வகுத்து செயற்படுத்துவதும் தான் தனது விடுதலைக்காக போராடுகின்ற ஒரு சமூகத்தளத்தில் செயற்படுகின்ற ஒரு ஊடகத்தின் கடமையாகும்.

இந்த கடமையை கடந்த நூற்றாண்டில் புலம் பெயாந்த யூதர்களால் உருவாக்கப்பட்ட ஊடகங்கள் மிகவும் திறம்பட செய்ததனால் அந்த இனம் தனது விடுதலையை விரைவாகப் பெற்றது.

புலம் பெயர்ந்த யூதர்கள் தங்களுடைய மக்களை அணிதிரட்டுவதற்கு ஊடகங்களை கையில் எடுத்த போது அவர்கள் வாழ்ந்த சமூகங்களிலும் அவர்களது சமூத்திலும் செல்வாக்குச் செலுத்திய ஹொலிவூட் சினிமாவிலோ அது சார்ந்த நிகழ்வுகளிலோ தங்கியிருக்கவில்லை. மாறாக தங்களுடைய திட்டமிட்ட ஊடக செயற்பாட்டின் ஊடாக அந்த ஹொலிவூட் திரையுலகுக்குள்ளேயே தங்கள் சமூகத்தினர் கால் பதிப்பதற்கு வழியமைத்தக் கொடுத்தனர்.

தங்களுடைய தாயகத்திலே தங்களுக்கு இருந்த முரண்பாட்டின் தன்மையையும் தாங்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலே தங்களுக்கிருந்த முரண்பாடுகளின் தன்மையையும் சரியாகக் கணித்து புலம்பெயர்ந்த யூத சமூகம் எப்படிச் செயற்பட வேண்டும் என்ற ஒரு பொது கொள்கைத் திட்டத்தை வகுத்து அதை நடைமுறைப் படுத்தினார்கள்.

யூதர்களுடைய ஊடகங்களின் புலம் பெயர்ந்த யூதர்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள் பற்றிப் பேசப்பட்டது. அதற்கான தீர்வுகள் பற்றி ஆராயப்பட்டது.அனைத்துப் பிரச்சனைகளுக்கும் யூதர்கள் நாடற்றவர்களாக இருப்பதே காரணம் என்றும் தங்களது தாயகத்தை விரைந்து மீட்டெடுப்பது ஒன்றுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

தங்களது ஊடகக் கட்டமைப்பு எவ்வாறு செயற்பட வேண்டும் அதன் கருத்துருவாக்கம் என்பது எவ்வாறு அமைய வேண்டும் உலக அரசில் பொருளாதார நகர்வுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை எல்லாம் துல்லியமாகக் கணித்து இந்த நகர்வுகளை எதிர் கொள்ளும் விதத்தில் யூத சமூகம் எவ்வாறு செயற்பட வேண்டும்? எவ்வாறு அதில் கால் பதிக்க வேண்டும் என்றெல்லாம் துறைசார் நிபுணர்களை வைதது அவர்கள் மாதாந்தம் ஆராய்ந்து செயற்திட்டங்களை வகுத்தார்கள். இதை யெல்லாம் தங்களுடைய ஊடகங்களுடாக ஒவ்வாரு புலம்பெயர்ந்த யூதனதும் வீட்டு வரவேற்பறைக்கள் எடுத்துச்

சென்றார்கள்.

இதற்கென…

1. கொள்கை வகுப்பு மையம்

2. திட்டமிடல் செயற்பாட்டு மையம்

3. சமூக சேவைகள் மையம்

என்ற மூன்று அமைப்புக்களை உருவாக்கினார்கள்.

கொள்கை வகுப்பு மையம் என்பது யூத இனத்தில் இருந்த பல்துறை சார்ந்த அதிஉயர் புத்திஜீவிகளைக் கொண்டதாக இருந்தது.இவர்கள் புலம் பெயாந்த யூத சமூகம் தாங்கள் புலம் பெயர்ந்த ஒவ்வாரு நாடுகளிலும் எதிர்நோக்கும் நடை முறைப்பிரச்சனைகளை கணக்கில் எடுத்து முரண்பாடகளை சரியாகக் கணித்து தங்களது தாயகம் நோக்கிய பயணத்துக்கான கொள்கைத்திட்டங்களை அடிப்படையாக வைத்து செயற்திட்டம் ஒன்றை உருவாக்கி வந்தார்கள். 6 மாதத்துக்கு ஒரு தடவை இந்த நடைமுறைச் செயற்திட்டத்தை மீழாய்வு செய்து புதுப்பித்து வந்தார்கள்.

திட்டமிடல் செயற்பாட்டு மையமானது கொள்கை வகுப்பு மையத்தால் உருவாக்கப்படும் இந்த செயற்திட்டத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு நாட்டின் தேவைக்கு ஏற்ற நடைமுறைச் செயற்திட்டங்களை வகுத்து அதை செயற்படுத்தி வந்தது. சமூக சேவை மையம் என்பது புலம் பெயர்ந்த ஒவ்வாரு யூதனதும் குடும்பப் பிரச்சனையிலிருந்து தொழில் பிரச்சனையில் இருந்து குடியிருபபு பிரச்சனையில் விசா பிரச்சனையில் இருந்து அனைத்தையுமே கையாண்டது.

ஒரு யூதன் அகதியாக ஒரு நாட்டுக்கு வரும் போது அவனுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் இந்த அமைப்பு செய்தது.இந்தச் செயற்பாட்டு முறைதான் புலம்பெயாந்த அனைத்து யூதமக்களையும் ஒன்றிணைப்பதற்கு அடிப்படையாக இருந்தது.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களான நாங்கள் என்ன செய்கிறோம்?எங்களுடைய ஊடகங்கள் என்ன செய்கின்றன.?எங்களுடைய சனங்கள் திருந்தாதுகள் அவையை திருத்தறது கஸ்டம் என்று எங்களுடை சோம்பேறித் தனத்தை எங்களுடைய செயற்திறனற்ற தன்மையை மறைப்பதற்கு நாங்களே தீர்ப்பைச் சொல்லி அதை நியாயப்படத்திக் கொண்டிருக்கிறோம்.

தாயகத்திலே எங்களுடைய மக்கள் அழிக்கப்படுகிறார்கள். எங்களுடைய போராளிகள் ஈடுஇணையற்ற தியாகத்தை செய்கிறார்கள்.எங்களுடைய பிரதேசங்கள் சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. புலம் பெயர்ந்த சமூகம் இவ்வளவு நடந்தும் இன்னும் திருந்தவில்லை. இவர்களுக்கு சூடில்லை சுரணையில்லை' என்று நாங்கள் கொஞ்சம் பேர் கத்திக் கொண்டிருக்கிறோம். அதுவும் முன்றாம் தரமான கழிசடை சினிமாக்களையும் ஆ... ஊஊஊஊ .... ம் .... என்ற முக்கல் முனகல் பாட்டுக்களையும் போட்டுக்காட்டிக்கொண்டு கத்திக் கொண்டிருக்கிறோம். (இந்த சினிமாக்களை தணிக்கை செய்து ஒளிபரப்புவதற்க்கு கூட எங்களுக்கு விருப்பமில்லை) எங்களில் நிறையப்பேர் ஒரு ஊடகம் நடத்துவதென்றால் சினிமாவுக்கும் அது சார்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடத்த முடியாது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு ஊடகம் அதிலும் தன்னுடைய விடுதலைக்காகப் போராடுகின்ற ஒரு இனத்தினுடைய தளத்திலே இயங்குகின்ற ஊடகங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு புலம் பொயர்ந்த யூதர்கள் நடத்திய ஊடகங்கள் நம்முன் கண்கண்ட சாட்சிகளாக இருக்கின்றன.

மேற்குலக சமூகத்தை ஆக்கிரமித்திருந்த மிகப் பிரசித்த பெற்ற ஹொலிவூட் சினிமாவை மையமாக வைத்துத்தான் தங்களுடைய இருப்பை உறுதிப்படத்த வேண்டும் என்றோ அந்தச் சினிமாக்கள் தான் யூதசமூகத்தை ஒன்றிணைக்கும் என்றோ ஏன் அவர்கள் நினைக்கவில்லை. நான் இப்படிக் குறிப்பிடும் போது யூத சமூகம் வேறு எங்களுடைய சமூகம் வேறு என்று சிலர் சொல்லக் கூடும்.ஆனால் யூதர்களுடைய ஆரம்பகால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எவ்வளவு பிளவுகள் சீரழிவுகள் ஒற்றுமையின்மை எல்லாம் அவர்கள் மத்தியிலும் இருந்தது என்பதை நாங்கள் கண்டு கொள்ளலாம்.

ஒரு நாட்டினுடைய இனத்தினுடைய விடுதலைப் போராட்டம் ஒரு சில வருடங்களில் முடிந்துவிடுவதில்லை. அப்படி முடிந்தாலும் ஒரு சில வருடங்களில் அந்த நாட்டினுடைய இனத்தினுடைய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடப் போவதில்லை என்பதையும் புலம்பெயர்ந்த யூதர்கள் உணர்ந்தார்கள்.விடுதலைக்கு முன் விடுதலைக்குப் பின் என்று இரண்டு தளங்களிலே அவர்கள் தூர நோக்கோடு சிந்தித்தர்கள்.

இந்தச் சிந்தனை இந்த முன்னுதாரணம் ஏன் எங்கள் கண்களுக்கு தெரியமறுக்கிறது. தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்றை உருவாக்கி அந்த தளத்தில் நின்று புலம் பெயர்ந்த மக்களை நாங்கள் ஒன்றிணைக்க வேண்டும் என்றால் அது என் எங்களுக்கு 'தீண்டத் தகாத' செயலாகத் தெரிகிறது? ஏன் நாங்கள் இன்னமும் கோடம்பாக்க மாயையில் இருந்து மீழ முடியாமல் இருக்கிறோம்? தயவு செய்து இது பற்றி இங்கே ஆக்க பூர்வமாக விவாதியுங்கள்.

சிவா சின்னப்பொடி

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

யூதர் வாழ்ந்த போராட்ட காலம் வேறு, ஆனால் நாம் இப்போது வாழும் காலம் வேறு. எனவே யூதர்களின் வியூகங்களை பயன்படுத்துவது எங்களிற்கு வெற்றியைத் தரும் என்று நான் நினைக்கவில்லை. தற்போது உலகம் மிகவும் மாறி விட்டது. பேரினவாதிகள், அடக்குமுறையாளர்கள் பல நுணுக்கமான விடயங்களையெல்லாம் பாவித்து அடக்கு முறை செய்கின்றரர். இதற்கு உதாரணமாக சிறீ லங்கா அரசினால் சர்வதேச பிரச்சாரத்திற்கு இறால் குமரிசாமி எவ்வாறு பிரயோகிக்கபடுகின்றார் என்பதை கூறலாம்.

எனவே தமிழர்கள் தமது பிரச்சனைகளை லாவகமாகக் கையாண்டு நாசூக்காக வெற்றிபெரும் வகையில் புதிய சமன்பாடுகளை கண்டுபிடித்து உருவாக்க வேண்டும். யூதர்கள் போட்ட பழைய சமன்பாடுகள் இந்தக்காலத்தில் பிழையான தீர்வைத்தான் தமிழருக்கு தரக்கூடும்!

Link to comment
Share on other sites

தமிழர்கள் தமது பிரச்சனைகளை லாவகமாகக் கையாண்டு நாசூக்காக வெற்றிபெரும் வகையில் புதிய சமன்பாடுகளை கண்டுபிடித்து உருவாக்க வேண்டும்.

ஐயா! எந்த ஒரு விடயத்தையும் நாங்கள் அப்படியே கொப்பி அடிக்கத் தேவையில்லை.ஆனால் மற்றவர்களுடைய அனுபவத்திலிருந்து நல்ல விடயங்களை எடுத்துக்கொள்வது நல்லது தானே.பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கடந்த வருடம் இதேகருத்தை தெரிவித்திருந்தார்.புலம் பெயர்ந்த தமிழர்கள் சிறீலங்கா அரசின் பரப்பரையை முறியடிப்பதற்கு ஒரு லொபியை உருவாகக் வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

அப்போது ஒரு ஊடக மேதை அதை சொல்வதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டதாக நம்பகமான ஒருவர் மூலமாக அறிந்தேன்.பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சொன்ன கருத்தில் எந்தவித தவறும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

''தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்றை உருவாக்கி அந்த தளத்தில் நின்று புலம் பெயர்ந்த மக்களை நாங்கள் ஒன்றிணைக்க வேண்டும் என்றால் அது ஏன் எங்களுக்கு 'தீண்டத் தகாத' செயலாகத் தெரிகிறது?"

தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்:

எனது மனதில் தேங்கிக் கிடந்த ஆதங்கத்தை மிகவும் தத்துவமாக வடித்திருக்கின்றீர்கள். எனது சிந்தனையும் உங்கள் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதில் சில கருத்துக்களை விபரமாக எழுத ஆரம்பித்தால் சுய விளம்பரமாக போய்விடும் என்பதிற்காக அதை நான் தவிர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.

சில விடயங்கள் மக்களை சென்றடைய வேனும் என்றால் நாம் மேலும் அதிக தீவிரம் காட்ட வேனும். இந்த தளத்தில் தமிழ் தேசியம் சம்பந்தமான ஆக்கங்கள் அதிகளவாக சுயமாக தயாரித்து இதில் பதியப்பட வேனும். ஏற்கெனவே பிரசுரமான ஆக்கங்களை விட நாமாக பதிவு செய்வது தான் (இலகுவான தமிழில் ) விரைவில் எல்லோரையும் சென்றடையும் என்பது எனது கருத்து.

இந்த தளத்தில் இளைஞர் சமூகத்தை தமிழ் தேசியத்தில் கவரச்செய்ய பல செயல் திட்டங்களை நாம் அறிமுகப் படுத்த முயற்சிக்க வேண்டும்.

அதாவது தாயகத்தில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றோம், அதாவது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தாமாகவே முன் வந்து எங்களது சுய சம்பவங்களை ஆதாரத்துடன் கதைகளாகவோ அல்லது கட்டுரைகளாகவோ இதில் எழுத முன்வரவேண்டும். இளம் சமூதாயத்தினர் ஆர்வமாக வாசிக்கத் தகுந்த முறையில் எழுத்தாற்றல் உள்ளவர்களின் உதவியுடன் எழுத வேண்டும்.

இப்படியான பல முறைகளில் நாம் ஊடக புரட்சியை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்க இது....... நாங்க இப்ப இதில பிஸியாய் இருக்கேக்கை இப்படி சொல்லுறியள்.....

ibchl5.jpg

Link to comment
Share on other sites

என்னங்க இது....... நாங்க இப்ப இதில பிஸியாய் இருக்கேக்கை இப்படி சொல்லுறியள்.....

ஐயா.புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஒவ்வொருக்கும் தங்களது தாயகம் பற்றிய அக்கறை இருக்கிறது. இதில் சிலருக்கு கூடுதலான அக்கறை இருக்கும்.சிலருக்கு குறைவான அக்கறை இருக்கும்.சிலர் குடும்பச் சிக்கல்கள் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தாயகம் பற்றின அக்கறையற்றவர்களாக இருப்பார்கள்.ஒரு சிறு பகுதியினர் மட்டும் தான் தாயக விடுதலைக்கு எதிரானவர்கள். இன்னொரு சிறு பகுதியினர் மேற்குலகப் பிரசைகள் என்று நினைப்பவர்கள்.

கடைசி இரண்டு பிரிவினரையும் தவிர மற்ற அனைவரையும் தாயக விடுதலை என்ற தளத்தில் வைத்து ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்குத் தான் இருக்கிறது.

தேசியத் தலைவரையும் தாயகவிடுதலையும் முதன்மை படுத்தி மக்களை அணிதிரட்ட முடியாது என்ற அவநம்பிக்கை தான் சினிமாவையும் சின்னத்திரையையும் தேடி ஊடகங்களை ஓடவைக்கிறது. புலம் பெயாந்த தமிழ் மக்கள் எல்லோரும் கோடம்பாக்க சினிமாவையும் சின்னத்திரையையும் தான் விரும்புகிறார்கள் என்றால் சண் ரீவியின் சந்தாதாரர் ஆகியிருப்பார்கள்.பிரச்சனை மக்களிடம் இல்லை.முதலில் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு தேசியத் தலைவரையும் தாயக விடுதலையையும் முதன்மைபடுத்தி மக்களை அணி திரட்ட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். கோடம்பாக்க சினிமாவுக்குள் இருக்கும் தமிழ் உணர்வாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களது படைப்புக்களை வெளிக் கொண்டுவர உந்துசக்தியாக இருக்கவேண்டும்.எங்களுடைய ஊடகங்களை ஆரம்பித்த காலத்திலிருந்தே இதற்கான அடித்தளத்தை போட்டு; செயற்பட்டிருந்தால் ………???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நவம் கூறியதுபோல் சகல விடயங்களும் ஊடகங்களிலேயே தங்கியுள்ளது.இந்த விசர்பிடித்த இந்திய தொடர்களை போட்டிபோடுக்கொண்டு இரண்டொரு நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன.அதிலும் இவர்கள் இலவசமாக ஒளிபரப்பும் நாட்களில் சொல்லிவேலையில்லை.வெகு விரைவில் என்று விளம்பரப்படுத்தி புதிய திரைப்படங்கள்,புதிய தொடர்கள் என்று அட்டகாசமாக அறிவிப்பார்கள்.இவர்கள் அங்கே கொடுக்கும் பணத்தை எம்மவர்களுக்கு கொடுத்து ஊக்கிவிக்கலாந்தானே?கோடம்பாக்க கிளுகிளுப்பு தொடர்களையும்,திரைப்படங்களைய

Link to comment
Share on other sites

உண்மையில் நவம் கூறியதுபோல் சகல விடயங்களும் ஊடகங்களிலேயே தங்கியுள்ளது.இந்த விசர்பிடித்த இந்திய தொடர்களை போட்டிபோடுக்கொண்டு இரண்டொரு நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன.அதிலும் இவர்கள் இலவசமாக ஒளிபரப்பும் நாட்களில் சொல்லிவேலையில்லை.வெகு விரைவில் என்று விளம்பரப்படுத்தி புதிய திரைப்படங்கள்,புதிய தொடர்கள் என்று அட்டகாசமாக அறிவிப்பார்கள்.இவர்கள் அங்கே கொடுக்கும் பணத்தை எம்மவர்களுக்கு கொடுத்து ஊக்கிவிக்கலாந்தானே?கோடம்பாக்க கிளுகிளுப்பு தொடர்களையும்,திரைப்படங்களைய
Link to comment
Share on other sites

இந்த அடி வருடி ஊடகவியலாளர்களுக்கு தகுந்த பாடம் படிப்பிக்கலாம், ஆனால் நாங்கள் சிந்தித்தால் மட்டுமே, இதற்கு உதாரணமாக சில வருடங்களின் முன்பு கனடா வாழ் தமிழர்கள் இணைந்து ஒரு பத்திரிகையை ஓட ஓட விரட்டினார்கள், அங்கே அவர்களுக்கு என்னும் ஒரு கடமை காத்திருக்கிறது எப்போ நிறைவேற்றப் போகிறார்கள்? என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? அது தானங்க கனடிய தமிழ் ஒலபரப்புக் கூட்டுத் தாபனம்.{CTBC}

Link to comment
Share on other sites

யாழ்களத்துக்கு இது ஒரு சாபக்கேடு போல....!

ஒரு கோட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பெரிய கோட்டை சின்னதாக்க வேண்டும் எண்று நினைப்பவர்கள், இன்னும் ஒரு பெரிய கோட்டை போடலாம்... இல்லை அந்த சின்ன கோட்டை இன்னும் நீட்டி பெரிதாக்கி விடலாம்... அதுதான் இண்றைய ஜதார்த்தம்....! அதை விடுத்து சின்ன கோடு சின்னதாகவே இருக்கட்டும், பெரிய கோட்டை அழித்து விடுவோம் என்பது சிறப்பான புத்திசாலித்தனம் என்பது போல இருக்கிறது கட்டுரையாளரின் கருத்து...

சினிமா என்பது ஒரு சிறப்பான ஊடகம்.... அதை எங்களுக்கும் சாதகமாக பயன் படுத்த தெரியவில்லை என்பதை அந்த ஊடகத்தை குறை சொல்வதும் ஒண்றுதான்...!

ஒரு கதைக்கு சினிமா மோகத்தையும் இந்த பொழுது போக்கு சாதனங்களையும் தமிழர்களிடம் இருந்து பிரித்து விட்டோம் எண்று வைத்து கொள்ளுங்கள்... அதனால் என்ன நன்மையை கொண்டு வந்து விடுவீர்கள்..?? எந்தளவுக்கு மாற்றத்தை மக்களிடம் கொண்டு வந்து விடுவீர்கள்..?? நீங்கள் செய்ய நினைப்பதை சினிமானையும் பொழுது போக்கையும் வைத்துக்கொண்டு ஏன் செய்ய முடியாது..??

புலம்பெயர்ந்தவர் இப்படி பொழுது போக்கு மோகம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள் எண்றால், தாயக பற்றோடு இல்லை என்பதுதான் உண்மையாகிவிடுமா..???

Link to comment
Share on other sites

இதை எல்லாம் பெரிதாக விவாதம் செய்யத் தேவையில்லை.

புலம் பெயர் நாடுகளில் எத்தனை தமிழ் ஊடகங்கள் இருக்கின்றன?

அத்தனை ஊடகங்களிடமும் ஒரே ஒரு ளே்வி!

வேற்று நாட்டு படைப்புகளை நீங்கள் இலவசமாக பெற நிச்சயம் முடியாது.

அப்படி நீங்கள் ஒலி அல்லது ஒளிபரப்பினால் அதை திருட்டுத் தனமாக ஒலி-ஒளி பரப்பகிறீர்கள்

என்றே சொல்லலாம்.

நீங்கள் எங்கு இருந்து எதை வாங்கினாலும் பணம் கொடுக்கிறீர்கள்.

எமது நாட்டு அல்லது புலம் பெயர்ந்து வாழும் எமது கலைஞர்களுக்கு

ஒரு படைப்பை செய்ய எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கேட்டு

பதில் எழுதுங்கள்.

அது மட்டும் தெரிந்தால்

எத்தனையோ படைப்பாளிகள் படைப்புகளை தருவார்கள்.

ஒரு பாடலுக்கு எவ்வளவு?

ஒரு குறும்படத்துக்கு எவ்வளவு?

ஒரு தொடருக்கு எவ்வளவு?

ஒரு செய்தியை அனுப்பினால் எவ்வளவு?

இவற்றிற்கு பதில் சொல்லுங்கள்?

தெரியாது என யாரும் சொல்ல முடியாது

வெகு காலமாக

புலம் பெயர் நாட்டில் ஊடகங்கள் இருக்கின்றனவே...........

அவை

ஏதாவது கொடுத்துத்தானே இருக்கும்? :P

Link to comment
Share on other sites

:lol: அஜீவன் விடையை தெரிந்து வைத்து கொண்டே நீங்கள் இப்படியான கேள்வியெல்லாம் கேட்க கூடாது
Link to comment
Share on other sites

:lol: அஜீவன் விடையை தெரிந்து வைத்து கொண்டே நீங்கள் இப்படியான கேள்வியெல்லாம் கேட்க கூடாது

அதுதானே சாத்திரி.........

எனக்கு கேட்கக் கிடைத்த விடைகளில் சில..........

1. இந்த படைப்புகளை நாங்கள் போடுவதே பெரிய விசயம்.........

2.முதலில் செய்து அனுப்புங்க பார்க்கலாம்.

3.எதிர்காலத்தில நல்ல நிலைக்கு வந்தா கவனிப்பம்தானே?

4.காசா?............ அதுதானே எங்களுக்கும் பிரச்சனை!

இப்படி தொடர்ந்து ........................ :) :P :(

Link to comment
Share on other sites

அதுதானே சாத்திரி.........

எனக்கு கேட்கக் கிடைத்த விடைகளில் சில..........

1. இந்த படைப்புகளை நாங்கள் போடுவதே பெரிய விசயம்.........

2.முதலில் செய்து அனுப்புங்க பார்க்கலாம்.

3.எதிர்காலத்தில நல்ல நிலைக்கு வந்தா கவனிப்பம்தானே?

4.காசா?............ அதுதானே எங்களுக்கும் பிரச்சனை!

இப்படி தொடர்ந்து ........................ :lol: :P :)

ஜீவன் அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை ஐயா! கோடம்பாக்க கழிசடை சினிமாக்களுக்குபல ஆயிரக்கணக்கில் அள்ளிக்கொடுக்க எப்போதுமே தயாராக இருக்கிற நம்முடைய ஊடக நிர்வாகிகள் எங்களுடைய படைப்பாளிகளுக்கு பொருளாதார ரீதியாக கை கொடுத்து அவர்களை வளர்த்துவிடுவதற்கு தயாரில்லை. ஊடகத்துறையின் பெறுமதி என்ன என்ன வென்று தெரியாத கலை என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கிறவைதான் ஊடகங்களை தீர்மானிக்கிற சக்திகளாக இருக்கினம். ஒரே ஒரு கைத் தப்பாக்கியோடு தேசித்தலைவர் ஆரம்பித்த விடுதலைப் போராட்டம் தான் இன்று தாக்குதல் விமானங்களை உருவாக்கி எதிரி மீது தாக்குதல் நடத்துகின்ற அளவுக்கு வளர்ந்திருக்கு என்றால் அதுக்கு காரணம் தேசியத் தலைவரின் சரியான திட்டமிடலும் அதற்கான வேலைத் திட்டமும் ஆகும்.புலம் பெயர்ந்த ஊடகங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் என்ற தளத்தில் இருந்து திட்டமிட்டு செயற்பட்டிருந்தால் நாங்கள் கோடம்பாக்கத்தில் தங்கியிருக்கிற நிலையை மாற்றி கோடம்பாக்கம் எங்களில் தங்கி இருக்கிற நிலையை உருவாக்கியிருக்கலாம். நமது ஊடகங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து (இப்ப 10 வருசம்) திறமையுள்ள இளைஞர்களை கண்டபிடித்து அவர்களை ஊடகத் துறையில் படிப்பித்திருந்தால் இப்போது நிறைய தொழில் சார் தகமையுடைய ஊடகவியலாளர்கள் இயக்குனர்கள் ஒளிப்பதிவாளர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாம் உருவாகியிருப்பார்கள். இப்படியான கருத்தை சொன்னவர்களுக்கு பிறப்பாலை தகுதியில்லை என்று சொல்லி அதை கணக்கிலேயே எடுக்காத பொறுக்கித் தனம் தானே புலம்பெயர்ந்த ஊடகங்களிடம் இருந்தது.

Link to comment
Share on other sites

புலம்பெயர் படைப்பாளிகளில் இதுவரை எத்தனை பேர் தரமான ஆக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? இப்படைப்பாளிகளின் அத்துறை சம்பந்தப்பட்ட கல்வித்தகைமைகளைக் கூறமுடியுமா? புலம்பெயர் படைப்பாளிகளில் பலர், ஒருதுறையில் விருப்பம் இருந்தால், அத்துறையை முழுமையாகக் கற்காமல், அவர்களின் 'கேள்விஞானத்தை' வைத்துக்கொண்டு முழுமையான படைப்பை தரமுயல்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

உதாரணமாக இசைத்துறையை எடுத்துக் கொண்டால், எத்தனை பேர் முறையாக இசையைக் கற்றிருக்கிறார்கள்? அப்படி இசையைக் கற்றவர்கள்கூட தினமும் பயிற்சி செய்கிறார்களா? இந்தியாவிலுள்ள பாடகர்களின் குரல்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து கொண்டு போகிறதே தவிரக் குறைவதில்லை. இதற்குக் காரணம் அவர்கள் சாகும்வரையிலும் ஒவ்வொருநாளும் பயிற்சி செய்வார்கள். தங்களது குரலைப் பேணுவதற்கு உணவுக்கட்டுப்பாட்டோடு இருப்பார்கள். இதனை எமது தமிழ் இசைக்கலைஞர்கள் செய்கிறார்களா? அவர் தமிழீழத்திலேயே மிகவும் புகழ்பெற்ற ஒரு பாடகர். அவர் கர்நாடக சங்கீதத்தை முறையாகப் பயின்றவர். ஆனால் அவரின் கர்நாடக சங்கீதத்தை நாம் காது குடுத்துக் கேட்க முடியாது. அவரிடம் நல்ல குரல்வளம் உள்ளது. நன்றாகப் பாடக்கூடியவர் என்றும் தெரியும். ஆனால் அவர் சரியாகப் பயிற்சி செய்யாததால் அவரின் பாடல்கள் ரசிக்கக்கூடிய மாதிரி இருக்காது. ஆனால் அவர் இங்கு ஒரு புகழ்பெற்ற பாடகர். அவருக்கு பெயரும் புகழும் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் படம் எடுத்தவர்கள், எதனை வைத்து எடுத்தார்கள்? கோடம்பாக்கத்திற்கும் மேலாகக் கவர்ச்சி காட்டித்தானே எடுத்தார்கள். அவர்களில் யாராவது ஒருவர் திரைப்படக்கல்லூரிக்குச் சென்று படித்திருக்கிறார்களா? அல்லது யாராவது ஒரு இயக்குனரோடு வேலை செய்திருக்கிறார்களா?

புலம்பெயர் நாடுகளில், ஒருசிலருக்கு சுயவிளம்பரம் தேடுவதுதான் வேலை. தங்களுக்குத் தெரிந்த ஒருசிலரைச் சேர்த்துக் கொண்டு, ஒரு நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தி செய்து, அந்த நிகழ்ச்சியில் தங்களுக்குத் தாங்களே 'பொன்னாடை' போர்த்தி விளம்பரப்படுத்தி, தாங்கள் துறையில் தாங்கள் விற்பன்னர்கள் என்று காட்டிக்கொள்வதுதான் அவர்களின் வேலை.

இந்நிலை மாறவேண்டும். நாம் திறமை உள்ளவர்களை நிச்சயம் வரவேற்கவேண்டும். அதேநேரம் திறமையின்றி சுயவிளம்பரம் தேடுபவர்களை நிராகரிக்கவும் வேண்டும். திறமையில்லாதவர்கள் இப்படி சுயவிளம்பரம் தேடும்போது, திறமையுள்ளவர்கள் மறைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் திறமையுள்ள பலர், பெயரையோ, புகழையோ நாடுவது குறைவு. நாம் திறமையற்றவர்களையும், சுயவிளம்பரம் தேடுபவர்களையும் நிராகரிக்கும்வரை எமக்கு நல்ல படைப்புகள் கிடைக்காது. அதுவரையிலும் நாம் கோடம்பாக்கத்தைத்தான் பார்க்கவேண்டும்.

அதற்காக நான் கோடம்பாக்கத்திற்கு ஆதரவு என்று நினைக்கவேண்டாம். என்னைப் பொறுத்தவரை எது தரமாக இருக்கிறதோ அதைத்தான் நாடுவேன். உதாரணமாக, கோடம்பாகத்தில்கூட ஆரம்பத்தில் எனக்கு ரகுமானைப் பிடிக்காது. ஏனென்றால் ஆரம்பத்தில் இசையில் அவர் தொடர்பினைப் பேணுவதில்லை. வரிக்கு வரிகூட இசை மாறுபட்டு இருக்கும். ஆனால் பின்னர் அதனைச் சரிசெய்து இன்று மிகநன்றாகச் செய்கிறார். அதுபோலத்தான் யுவன்சங்கர்ராஜாவும். திறமையுள்ளவர்கள் எங்கிருந்தாலும் வரவேற்கப்படக்கூடியவர்கள். இதற்கு இன்னொரு உதாரணமாக, தமிழீழக் கலைஞர் கு. வீரா அவர்களைக் குறிப்பிடலாம். ஒரு நடிகனாக எனக்கு அவரில் திருப்தி வரவில்லை. ஆனால் ஒரு கவிஞராகவும், அறிவிப்பாளராகவும் அவரை எனக்குப் பிடிக்கும். அவர் தனது திறமையை உணர்ந்து அதனை வளர்த்து வந்துள்ளார். நான் சொல்வதெல்லாம், உங்களிடம் ஒரு திறமை இருப்பதை உணர்ந்தால் அந்தத் திறமையை ஓரளவாவது வளர்த்துக் கொண்டு ஆக்கங்களைக் கொடுங்கள் என்பதுதான்.

Link to comment
Share on other sites

ஏட்டில் இருப்பதை படிப்பத்தையா கல்வி என்கிறீர்கள் தமிழச்சி...???? இல்லை பயிற்ச்சி என்பதை மட்டும்தான் ஆற்றல் என்கிறீர்களா..??

கல்வி கற்றால்த்தான் ஊடகர் எழுத்தாளர், படைப்பாளி ஆக வேண்டும் எண்றால். கருணாநிதி என்பவர் எப்படி கலைஞர் ஆகினார்.? எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் எப்படி தமிழ்நாட்டை ஆண்டார்கள்? அதுவும் வளமாக..???

கல்வி வந்து இருந்ததால்தான் எமது தலைவர் கல்விகற்று வந்த பல ஜெனரல்களுக்கு நித்திரையை கெடுக்கிறாரா...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏட்டில் இருப்பதை படிப்பத்தையா கல்வி என்கிறீர்கள் தமிழச்சி...???? இல்லை பயிற்ச்சி என்பதை மட்டும்தான் ஆற்றல் என்கிறீர்களா..??

கல்வி கற்றால்த்தான் ஊடகர் எழுத்தாளர், படைப்பாளி ஆக வேண்டும் எண்றால். கருணாநிதி என்பவர் எப்படி கலைஞர் ஆகினார்.? எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் எப்படி தமிழ்நாட்டை ஆண்டார்கள்? அதுவும் வளமாக..???

கல்வி வந்து இருந்ததால்தான் எமது தலைவர் கல்விகற்று வந்த பல ஜெனரல்களுக்கு நித்திரையை கெடுக்கிறாரா...???

எமது தலைவர் கல்விகற்கவில்ல்லை என்று யார் சொன்னது?

எமது தலைவர் போரியல் பற்றி 24 மணி நேரமும் கற்கிறார். பல போரியல் அறிவியல் புத்தகங்களை படிக்கிறார். படித்ததை பிரயோகிக்கிறார். பல்கலைக்கழகம் போய்கல்விகற்க அவருக்குத் தேவையில்லை. self study செய்கிறார்.

ஒரு உதாரணம். இன்று வெளிநாடுகளில் கொஞ்சம் திறமையான குழந்தைகளை gifted kids என்று சொல்கிறார்கள். மற்ற சராசரிக்குழந்தைகளுடன் பள்ளியில் கல்விகற்க இந்தக் குழந்தைகளுக்குப் போரடிக்கும். இதனால் இந்தப் பிரச்சனைக்கு வளர்ந்த நாடுகளில் இரு விதமான தீர்வுகள் வைத்திருக்கிறார்கள்.

1) gifted school: இப்படியான எல்லா gifted kids ஐயும் ஒன்றுசேர்த்து பள்ளிகள். இங்கு பாடத்திட்டம் அவர்களின் வேகத்திற்கேற்ப இருக்கும்

2) self study: மேலே 1) இல் கூட போரடிக்கும் குழந்தைகளை தனியாஅக ஒருஆசிரியர்/ பெற்றோர் கவனமெடுத்து அவர்களின் சூப்பர் வேகத்திற்கேற்ப அவர்களின் அறிவுப்பசிக்கேற்ப கல்விகற்க வசதியை வழங்குவது. இந்த வகையில் படித்த ஒரு இஸ்ரேலியக் குழந்தை 14 வயதில் கனடாவில் குயீன்ஸ் யூனிவேசிட்டி யில் அனுமதி பெற்று கல்வி கற்கிறது.

எமது தலைவர் gifted of the gifted of the gifted of the gifted அவ்வளவே. இதற்காக அவர் படிக்க்க வில்லை என்று சொல்வது முட்டாள்தனம்.

எமது தலைவரின் போரியல் கலைகளை ஆராய்ந்து எத்தனையோ நூற்றுக்கணக்கான PhD thesis களும் இன்னும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களும் எதிர்காலத்தில் வரவிருக்கிறது.

கல்வி கற்றால்த்தான் ஊடகர் எழுத்தாளர், படைப்பாளி ஆக வேண்டும் எண்றால். கருணாநிதி என்பவர் எப்படி கலைஞர் ஆகினார்.? எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் எப்படி தமிழ்நாட்டை ஆண்டார்கள்? அதுவும் வளமாக..???

இதற்காக கல்வி கற்காதவர் எல்லாம் கருணாநிதி ஆக முடியுமா? பல்கலைகழகங்களை மூடிவிடலாமா?

இன்று ஒவ்வொரு துறைக்கும் பல்கலைக்கழகத்தில் துறை இருக்கிறது. அனுபவ ஞானம் என்று இருப்பவர்களால் பல்ல்கலைக்கழகத்திலிருந்து வெளிவருபவர்களுடன் பெரும்பாலான சமயங்களில் போட்டியிட முடியாது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அறிவியல் ரீதியாக தமக்குத் தேவையான படிப்பை பெற முன்வராததே யாகும்.

ஊடகவியலாளர் என்றும் எழுத்தாளர் என்றும் கூறிக்கொள்ளும் நம்மவர்கள் "நன்றாக" வாசிக்கிறார் என்றோ அல்லது "நன்றாக" எழுதுகிறார் என்றோ அந்த துறைக்குள் இழுத்துவிடப்பட்டவர்கள். இந்த "நன்றாக " செய்வது மட்டும் தொடர்ந்து குப்பை கொட்டப் போதுமானது அல்ல. இவர்கள் தமது ட்தொழில் சார் அறிவை வளர்க்க / தொழில்ரீதியான பயிற்சி பெற எந்த அக்கறையும் எடுப்பது இல்லை. இந்த நிலை மாறவேண்டும்.

Link to comment
Share on other sites

சிவா சின்னப்போடியின் எழுதியவிடையங்கள் மிக முக்கியமானவை, சிந்தித்து செயற்படுத்தப்படவேண்டியவை.

எனது மனதிலும் எழுந்த ஏன், எப்படி தீர்வுகாணலாம் என்ற கேள்விகளுக்கு விடை கொடுத்துள்ளார்... யூதர்களின் முக்கியமான நடவடிக்கைகள் ஆராயப்பட்டு அதில் எமக்கு தேவையானவை நடைமுறைபடுத்த படவேண்டும்.

தலைவர் பிரபா நடைமுறைப்பிரச்சனைகளை எவ்வளவோ பயங்கர பிரச்சனைகளை எல்லாம் யோசித்து முடியாது என இருந்திருந்தால் நமது போரட்டம் இவ்வளவு உலகம் பாரட்டும் வான்படையளவுக்கு வளரமுடிந்திருக்குமா?

எனவே எமது போரட்ட அறிவு குறைவானவர்களுக்கு போதிய அறிவூட்டப்படலாம்.........

விளக்கமிருந்தும் விளக்கமில்லாமல் நடிப்பவர்கள்,சுய நலக்காரர்கள், இலங்கையரசின் கையாட்கள் இவர்கள் இனம் காணப்பட்டு இவர்கள் இடையூருகளில் இருந்து விலத்தி நம் செயற்திட்டங்களை விரைவில் செயற்படுத்த வேண்டும்.....

தலைவர் போன்று சரியான வழி நடத்தக்கூடியவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டு குழப்புவர்கள் அகற்றப்படவேண்டும்

தேசப்பற்றுள்ளவர்கள் சரியான திட்டங்களின் படி செயற்படும் போது தயங்கி பின் நிற்கும் தேசப்பற்றுள்ளவர்கள் பெரும் சக்தியாக தொடர்வார்கள்...பின் யாரலும் தடுக்கமுடியாது..... பல விதமான புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

தமிழர்கள் அறிவானர்கள் ஆனால் ஒற்றுமை இல்லாதவர்கள் என்னும் எண்ணத்தை இல்லாமல் பண்ணவேண்டும்.....

நாமும் வாழ்ந்து விடுதலை வெற்றிக்கு தடைகளை உடைதெறிய வாருங்கள்..... வீண் விவாதங்களை தவிருங்கள்.....

விடுதலி கிடைக்கும் மட்டும் ........

Link to comment
Share on other sites

எமது தலைவர் கல்விகற்கவில்ல்லை என்று யார் சொன்னது?

எமது தலைவர் போரியல் பற்றி 24 மணி நேரமும் கற்கிறார். பல போரியல் அறிவியல் புத்தகங்களை படிக்கிறார். படித்ததை பிரயோகிக்கிறார். பல்கலைக்கழகம் போய்கல்விகற்க அவருக்குத் தேவையில்லை. self study செய்கிறார்.

ஒரு உதாரணம். இன்று வெளிநாடுகளில் கொஞ்சம் திறமையான குழந்தைகளை gifted kids என்று சொல்கிறார்கள். மற்ற சராசரிக்குழந்தைகளுடன் பள்ளியில் கல்விகற்க இந்தக் குழந்தைகளுக்குப் போரடிக்கும். இதனால் இந்தப் பிரச்சனைக்கு வளர்ந்த நாடுகளில் இரு விதமான தீர்வுகள் வைத்திருக்கிறார்கள்.

1) gifted school: இப்படியான எல்லா gifted kids ஐயும் ஒன்றுசேர்த்து பள்ளிகள். இங்கு பாடத்திட்டம் அவர்களின் வேகத்திற்கேற்ப இருக்கும்

2) self study: மேலே 1) இல் கூட போரடிக்கும் குழந்தைகளை தனியாஅக ஒருஆசிரியர்/ பெற்றோர் கவனமெடுத்து அவர்களின் சூப்பர் வேகத்திற்கேற்ப அவர்களின் அறிவுப்பசிக்கேற்ப கல்விகற்க வசதியை வழங்குவது. இந்த வகையில் படித்த ஒரு இஸ்ரேலியக் குழந்தை 14 வயதில் கனடாவில் குயீன்ஸ் யூனிவேசிட்டி யில் அனுமதி பெற்று கல்வி கற்கிறது.

எமது தலைவர் gifted of the gifted of the gifted of the gifted அவ்வளவே. இதற்காக அவர் படிக்க்க வில்லை என்று சொல்வது முட்டாள்தனம்.

எமது தலைவரின் போரியல் கலைகளை ஆராய்ந்து எத்தனையோ நூற்றுக்கணக்கான PhD thesis களும் இன்னும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களும் எதிர்காலத்தில் வரவிருக்கிறது.

இதற்காக கல்வி கற்காதவர் எல்லாம் கருணாநிதி ஆக முடியுமா? பல்கலைகழகங்களை மூடிவிடலாமா?

இன்று ஒவ்வொரு துறைக்கும் பல்கலைக்கழகத்தில் துறை இருக்கிறது. அனுபவ ஞானம் என்று இருப்பவர்களால் பல்ல்கலைக்கழகத்திலிருந்து வெளிவருபவர்களுடன் பெரும்பாலான சமயங்களில் போட்டியிட முடியாது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அறிவியல் ரீதியாக தமக்குத் தேவையான படிப்பை பெற முன்வராததே யாகும்.

ஊடகவியலாளர் என்றும் எழுத்தாளர் என்றும் கூறிக்கொள்ளும் நம்மவர்கள் "நன்றாக" வாசிக்கிறார் என்றோ அல்லது "நன்றாக" எழுதுகிறார் என்றோ அந்த துறைக்குள் இழுத்துவிடப்பட்டவர்கள். இந்த "நன்றாக " செய்வது மட்டும் தொடர்ந்து குப்பை கொட்டப் போதுமானது அல்ல. இவர்கள் தமது ட்தொழில் சார் அறிவை வளர்க்க / தொழில்ரீதியான பயிற்சி பெற எந்த அக்கறையும் எடுப்பது இல்லை. இந்த நிலை மாறவேண்டும்.

நல்லாத்தான் சொல்லுறீயள்....! தலைவர் படித்தது என்பது எல்லாம் சரி அவர் ஒரு துறை சம்பந்தமாய் படித்த பின்னர் போராட வர இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி....! அவர் போராடவேணும் எண்ட கட்டாயத்தில் அது சம்பந்தமான ஆர்வத்தை வளர்த்து படிக்கிறார், சாதிக்கிறார்....

கல்வி என்பது ஏட்டிலை மட்டும் இல்லை... என்னதான் பெரிய புத்தகமாய் வாங்கி நீச்சல் பற்றி படித்தாலும் நீந்துவதுக்கு ஆர்வமும் திறமையும் வேணும்...! மைல் கணக்கில் நீந்த பிறகு பயிற்ச்சி தானாக வந்து விடும்.. அதுமாதிரித்தான் கல்வியும்.... படிக்கிறவன் எல்லாம் பண்டிதர் ஆகவும் முடியாது..! அதுபோலத்தான் உடகவியலாளவும்... திறமையும் ஆர்வமும் இருப்பவர் தன்னை நண்றாக வளர்த்து கொள்ள முடியும்...!

Link to comment
Share on other sites

நல்லாத்தான் சொல்லுறீயள்....! தலைவர் படித்தது என்பது எல்லாம் சரி அவர் ஒரு துறை சம்பந்தமாய் படித்த பின்னர் போராட வர இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி....! அவர் போராடவேணும் எண்ட கட்டாயத்தில் அது சம்பந்தமான ஆர்வத்தை வளர்த்து படிக்கிறார், சாதிக்கிறார்....

கல்வி என்பது ஏட்டிலை மட்டும் இல்லை... என்னதான் பெரிய புத்தகமாய் வாங்கி நீச்சல் பற்றி படித்தாலும் நீந்துவதுக்கு ஆர்வமும் திறமையும் வேணும்...! மைல் கணக்கில் நீந்த பிறகு பயிற்ச்சி தானாக வந்து விடும்.. அதுமாதிரித்தான் கல்வியும்.... படிக்கிறவன் எல்லாம் பண்டிதர் ஆகவும் முடியாது..! அதுபோலத்தான் உடகவியலாளவும்... திறமையும் ஆர்வமும் இருப்பவர் தன்னை நண்றாக வளர்த்து கொள்ள முடியும்...!

[/q

ஆமாம் நிங்கள் சொல்வது நூற்றுக்க நூறு வீதம் சரி. ஊடகம் வளர்கிறதோ ஊடகத்துறை வளர்கிறதோ இல்லையோ காக்கா பிடிக்கும் வால்பிடிக்கும் திறமையும் பயிற்சியும் உள்ளவர்கள் தங்களை நன்றாக வளர்த்துக்கொள்கிறார்கள். ஊடகம் என்பது கருத்தை உருவாக்கும் நிறுவனம் தேடலும் முறையான பயிற்சியும் இடையறாத வாசிப்பும் அதற்குஅவசியம். தலைவர் நாட்டிலே ஊடகத்துறையினரின் முறையான பயிற்சிக்காக ஊடகக் கல்லூரி ஒன்றையே ஆரம்பித்திருக்கிறார். ஐயா ஊடகத்துறையில் ஆர்வமில்லாதவன் ஊடகக் கல்வியை பெறமுடியாது.uote]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு டாக்டராக வருவதற்குப் - படித்திருக்க வேண்டும்

ஒரு இஞ்சினியராக வருவதற்குப் - படித்திருக்க வேண்டும்

ஒரு வக்கீலாக வருவதற்குப் - படித்திருக்க வேண்டும்

ஒரு ஆசிரியனாக வருவதற்குப் - படித்திருக்க வேண்டும்

ஆனால் ஒரு ஊடகவியலாளனாக வருவதென்றால் மட்டும் திறமையும் ஆர்வமும் இருந்தால் போதுமா?

நல்லாத்தான் இருக்கு உங்க நியாயம்.

Link to comment
Share on other sites

அன்புள்ள நண்பர் பண்டிதருக்கு

கோடம்பாக்க மாயைக்குள் மூழ்கியிருப்பவர்களுக்கு எதைச் சொன்னாலும் புரியப் போவதில்லை.ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் விடுதலைப் போராட்டை ஆரம்பித்த தேசியத் தலைவர் இன்றைக்கு ஒரு விமானப்படையையே உருவாக்கும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்திருக்கிறார் என்றால் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது எது எமது விடுதலைக்கு தேவையானது எது தேவையற்றது என்பதை முதலில் சரியாக வரையறுத்தார்.பம்மாத்து அரசியல் நடத்த மாட்டேன் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்று அவர் தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டு இன்றுவரை அதை கடைப்பிடித்துவருகிறார்.இது தான் எமது போராட்டத்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாகும்.

தேசியத் தலைவரது இந்த முன்மாதிரியை மக்களுக்குஎடுத்துச் சொல்லி புரியவைத்த மக்களை அந்த திசையில் அணி திரட்ட வேண்டும் என்றால் உதெல்லாம் சாத்தியமில்லை விஜய் அஜித் அசின் நயன்தாரா வகையறாக்கறைகாட்டித்தான் மக்களை அணி திரட்டமுடியும் என்று அடம்பிடிக்கின்ற கூட்டத்தை என்ன செய்யமுடியும்?விடுதலைக்கு போராடுகின்ற ஒரு இனத்தின் தளத்திலே இயங்குகின்ற ஒரு ஊடகம் மக்களை பங்களார்களாக செயற்பாட்டாளர்களாக மாற்றுகின்ற வேலையைத்தான் செய்ய வேண்டுமேயன்றி அவர்களை பார்வையாளர்களாக இரசிகர்களாக வைத்திருக்கக்கூடாது.

தேசியத் தலைவருடைய முன் மாதிரியையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் மாவீரர்களடைய தியாகங்களையும் சரியான முறையில் திட்டமிட்ட ஊடக வடிவங்களுக்கு ஊடாக மக்கள் மத்தியல் எடுத்துச் செல்வதன் மூலம் மக்களை அணி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை புலம்பெயர்ந்த ஊடகங்களை இயக்குபவர்களுக்கு இல்லாதபடியினால் தான் அவர்கள் கோடம்பாக்கத்தை நோக்கி ஓடுகிறார்கள்.கோடம்பாக்கம் என்று நான் குறிப்பிடுவது தமிழ் சமூகத் தளத்தை சீரழிக்கும் கருத்துருவாகக்த்தின் குறியீட்டையே ஆகும்.

புலம்பெயர்ந்த அனைத்து தமிழ் மக்களுக்குள்ளும் தாயகம் மீதான அக்கறை இருகக்pறது. ஒரு சில துரோகிகளைத் தவிர மற்ற அனைத்து மக்களையுமே ‘தாயக விடுதலை தமிழ் கருத்தில்- தமிழ் அடையாளம் என்ற தளத்தில் வைத்து ஒன்றிணைக்க முடியும்.தாயகம் என்பது புலம் பெயர்ந்த ஒவ்வாரு தமிழரினதும் உணர்வில் கலந்த விடயமாகும். இதற்கு நான் சொல்லக் கூடிய தீர்வு ‘தலைவராவது விடுதலைப்போராட்டமாவது ..உதையெல்லாம் விட்டுவிட்டு புது சினிமாவையும் சின்னத்திரை தொடரையும் காட்டினால் தான் மக்களை அணி திரட்ட முடியும்’ என்ற கருத்தியலாளர்களின் பிடியில் இருந்து நமது ஊடகங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

-சிவா சின்னப்பொடி

Link to comment
Share on other sites

முதலிலை இண்றைய காலத்தின் நவீன ஊடகமாக வளர்ந்து நிற்கும் சினிமாவையும் தொலைக்காட்சியையும், சாதகமாக பயன் படுத்த வில்லை என்கிறீரா இல்லை பயன்படுத்துவது போதாது என்கிறீரா...??? எனக்கு இன்னும் விளங்கவில்லை...! எது எப்படி எண்டாலும் சினிமா சம்பந்தமான உங்களின் ஒப்புக்கு சப்பான ஊகங்களின் அடிப்படையில் அமைந்த இயலாமைகளை ஒதுக்குங்கள்...!

எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் இல்லாமல் நீங்கள் ஈழ போராட்டதின் விழுமியங்களையும், கொடூரங்களையும் அறிந்து இருக்க முடியாது... செவிவளியேதான் நாங்கள் செய்திகளை வாங்கி கொள்கிறோம் என்பவர்கள் செய்தி திரிபுகளையும் வாங்கி கொள்கிறார்கள்...! அது உண்மையான தாக்கதினை ஏற்படுத்தி விடுவதில்லை...! அதோடு பத்தி எழுத்தாளர்களும், செய்தி ஆசிரியர்களும் எழுதுவது எல்லாவற்றையும் படிக்கிறோம் என்பவர்கள் மிக குறைவு..! தலையங்கத்தை மட்டுமே படிப்பவர்கள் அதிகம்...

சினிமா என்பது சிறப்பான ஊடகம்....! முக்கியமாய் உங்களிடம் ஒரு கேள்வி.. வீரபாண்டிய கட்டப்பொம்மன் கதையை எத்தினைபேர் எழுத்து மூலம் தந்து உள்ளார்கள் .? அதை எத்தினை பேர் படித்து அறிந்து கொண்டார்கள்...??? படித்தவர்கள் எல்லாரும் அதை அப்படியே அதே தாக்கத்தோடு மற்றவர்களுக்கும் சொன்னார்களா...??? சொல்ல முடிந்ததா...??? ஆனால் " வீரபாண்டிய கட்டப்பொம்மன்" என்னும் திரைப்படம் எவ்வளவு தாக்கத்தோடு மக்கள் அனைவருக்கும் போய் சேர்ந்து கொண்டது என்பதை உங்களால் உணரமுடிகிறதா...???

சினிமா என்பது அவ்வளவு துல்லியமாக உணர்வுகளையும், அவலங்களையும், நிலைமைகளையும் அப்படியே கொண்டு செல்ல கூடியது... ஒரு திரைப்படம், தொலைக்காட்ச்சி நாடகம், மேடை நாடகம், தெருநாடகம் ஏற்ப்படுத்தாத தாக்கத்தினை எதனாலும் ஏற்ப்படுத்த முடியாது.... உங்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இவற்றை எப்படி பயன் படுத்த முடியும் எண்று யோசியுங்கள் சிறப்பாக இருக்கும்...

முடிந்தால் அஜீவன் அண்ணா போண்ற எங்களின் கலைஞர்களை வளர்த்து விட முடியுமா எண்று சிந்தியுங்கள்... இன்னும் சிறப்பாக இருக்கும்... இல்லை தென்னிந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களை கொண்டு ஈழத்தின் அவலங்களியும் திரைப்படங்களின் பிரதிபலிக்க செய்யுங்கள், அப்படியான படங்களுக்கு புலம்பெயர் மக்களின் ஆதரவு முழுமையான நல்ல படங்களை கொண்டுவர அடிக்கல்லாக இருக்கும்

அதை எல்லாம் விடுத்து சினிமாவையும், திரை நாடகங்களையும் எங்களுக்கு பயன் படுத்த முடியவில்லை இல்லை தெரியவில்லை எண்று சொல்பவராக இருந்தால்.... அந்த பக்கம் நீங்கள் தலைவைத்து படுக்காமல் இருப்பது நல்லது...!

நண்றி..

Link to comment
Share on other sites

ஒரு டாக்டராக வருவதற்குப் - படித்திருக்க வேண்டும்

ஒரு இஞ்சினியராக வருவதற்குப் - படித்திருக்க வேண்டும்

ஒரு வக்கீலாக வருவதற்குப் - படித்திருக்க வேண்டும்

ஒரு ஆசிரியனாக வருவதற்குப் - படித்திருக்க வேண்டும்

ஆனால் ஒரு ஊடகவியலாளனாக வருவதென்றால் மட்டும் திறமையும் ஆர்வமும் இருந்தால் போதுமா?

நல்லாத்தான் இருக்கு உங்க நியாயம்.

நல்ல FORM மிலை இருக்கிறீயள்.... நீங்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் படிநிலை முன்னேற்றமும், பரீட்ச்சைகளும் உண்டு...!

ஒரு படைப்பாளியாக வருவதுக்கு அடிப்படை திறமை அவசியம்...( Ex:- ஓவியர், பாடகர், இசை இயக்குனர், திரைப்பட இயக்குனர்) அவர்கள் எல்லாருக்கும் கல்வி என்பது இரண்டாம்தரம்...! ஒருவர் தன் உணர்வுகளை எழுத்துமூலம் கொண்டு வருபவருக்கு நல்ல மொழி ஆழுமையும், (நல்ல தமிழ்) சொல்லும் நேர்த்தியும் இருந்தால் போதும்....!

நீங்கள் செய்திகளை சேகரித்து தருபவரை மட்டும்தான் ஊடகவியலாளர் என்பவராக இருந்தால் I 'm sorry உங்களின் ஆற்றல் மட்டுப்படுத்த பட்டு இருக்கிறது...! வளர்த்து கொள்ள முயலுங்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல FORM மிலை இருக்கிறீயள்.... நீங்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் படிநிலை முன்னேற்றமும், பரீட்ச்சைகளும் உண்டு...!

ஒரு படைப்பாளியாக வருவதுக்கு அடிப்படை திறமை அவசியம்...( Ex:- ஓவியர், பாடகர், இசை இயக்குனர், திரைப்பட இயக்குனர்) அவர்கள் எல்லாருக்கும் கல்வி என்பது இரண்டாம்தரம்...! ஒருவர் தன் உணர்வுகளை எழுத்துமூலம் கொண்டு வருபவருக்கு நல்ல மொழி ஆழுமையும், (நல்ல தமிழ்) சொல்லும் நேர்த்தியும் இருந்தால் போதும்....!

நீங்கள் செய்திகளை சேகரித்து தருபவரை மட்டும்தான் ஊடகவியலாளர் என்பவராக இருந்தால் I 'm sorry உங்களின் ஆற்றல் மட்டுப்படுத்த பட்டு இருக்கிறது...! வளர்த்து கொள்ள முயலுங்கள்...!

ஊடகத் துறைக்கு படிநிலை முன்னேற்றமும், பரீட்ச்சைகளும் இல்லையென்று யார் சொன்னது? உங்களுக்குத் தெரியாவிட்டால் அதுக்கு நான் பொறுப்பாளி யல்ல. படிப்பவர்கள் எல்லாம் டாக்டராகவும் எஞ்சினியராகவும் வரமுடியாது. அதற்கும் ஆர்வமும் திறமையும் தேவை.

ஓவியர்

பாடகர்

இசை இயக்குனர்

திரைப்பட இயக்குனர்

மேற்சொன்ன எல்லாவற்றுக்கும் நீங்க்கள் சொன்ன எல்லாம் உண்டு <_< . ஈழத்தில் இல்லாமலிருக்கலாம் இந்தியாவில் உண்டு. உங்களுக்கும் தெரியும். சும்மா நடிக்காதீர்கள். இந்த வாதத்தில் யார் வெற்றி பெறுவது என்பதல்ல நோக்கம். எது எங்களுக்கு எங்கள் சமூகத்திற்கு நல்லது என்று ஆராய்வதே நோக்கம். நீங்கள் முதலில் குருகுலவாசக் காலத்திலிருந்து வெளியே வாருங்கள். எல்லாக் கலைக்கும் ஆர்வத்திற்கும் மேலாக நல்ல போதனை தேவைப்படுகிறது. தமிழீழத்தில் ஊடகத் துறைக் கல்லூரி, நுண்கலைக் கல்லூரி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

இங்குள்ள புகலிட ஊடகவியலாளர்கள் எத்தனைபேர் தமது வாழ்க்கைச் செலவுக்கு அதை நம்பியிருக்கிறார்கள்? மிகக் குறைவு. எனக்குத் தெரிந்த பல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் பலர் வெறும் தன்னார்வத் தொண்டர்கள். பல எழுத்தாளர்கள் சும்மா பாட்ரைமாகத் தான் எழுதுகிறார்கள். பாட்ரைமாக இப்படிச் செய்து சமுதாயப் புரட்சி வேறா? இந்த நிலை ஏன்? எங்கே தொடங்க வேண்டும்? எந்தெந்தப் படிநிலைகளில் பிரச்சனை இருக்கிறது? எவ்வாறு அணுகுவது? சிந்தியுங்கள்.

சிந்திப்போம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.
    • படக்குறிப்பு, சோழர் ஆட்சியில் மருத்துவமனை செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 08:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள தற்போதைய கால கட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் பல உள்ளன. சாதாரண தலைவலி முதல் இதயம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை மருத்துவத்துறை வெகுவாக முன்னேறிவிட்டது. நகர்ப்புறங்களில் பல மருத்துவமனைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது. சோழர் ஆட்சியில் 950 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தில் மருத்துவமனை செயல்பட்டு வந்திருப்பதாக இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும் துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், அந்த மருத்துவமனை பற்றிய முழு விவரங்களை பகிர்ந்து கொண்டார். படக்குறிப்பு,திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் ஆதுலர் சாலை என்பதன் பொருள் என்ன? "ஆதுலர் சாலையை ஆதுலர் + சாலை என்று பிரித்துப் பொருள் கொண்டால் ஆதுலர் என்பதற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சாலை என்பதற்கு மருத்துவ நிலையம் என்றும் பொருள்படும். அதாவது, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ நிலையம் என்றும் பொருள் சொல்லலாம்" என்றார் அவர். "வைத்திய சாலையை நிர்வாகம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும், அங்கே பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும் வைத்திய விருத்தி, வைத்திய பாகம், வைத்திய போகம், வைத்தியக்காணி, ஆதுலர் சாலைபுரம் போன்ற பெயர்களில் நில தானம் கொடுக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம்   மூன்று நதிகள் சந்திக்கும் இடம் தொடர்ந்து திருமுக்கூடலில் செயல்பட்டு வந்த ஆதுலர் சாலை குறித்து அவர் விவரித்தார். "காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பாலாற்றின் கரையில் உள்ளது திருமுக்கூடல். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் இடம் என்பதால் இந்த ஊர் திருமுக்கூடல் என பெயர் பெற்றது . இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் 950 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் மருத்துவமனை செயல்பட்டுள்ளது. கோவில் முதல் பிரகாரத்தின் கிழக்குப் பக்க சுவரில் ராஜகேசரி வீரராஜேந்திர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1068) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆதுலர் சாலையை பற்றி விரிவாக தெரிவிக்கின்றது" என்று வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார். படக்குறிப்பு, திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கல்வெட்டு   மருத்துவமனை எவ்வாறு செயல்பட்டது? அந்த கல்வெட்டின்படி, ராஜேந்திர சோழர் மாவலிவானராசன் என்ற இருக்கை சிம்மாசனத்தில் இருந்து கொண்டு 'வீரசோழன்' என்ற மருத்துவமனையை உருவாக்கி அதை நிர்வாகம் செய்வதற்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். கல்வெட்டின் அடிப்படையில் அந்த ஆதுலர் சாலை செயல்பட்ட விதம் குறித்து அவர் விளக்கினார். அதன்படி, "இந்த மருத்துவமனையில் திருக்கோவில்களில் பணியாற்றியவர்களுக்கும் வேத பாடங்களை பயில்கின்ற மாணவர்களுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 15 படுக்கைகள் இருந்துள்ளன. இதில் மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், மூலிகை மருந்துகளை தயார் செய்கின்ற மருந்தாளுநர்கள் இரண்டு பேர், செவிலியர் இருவர், பொதுப் பணியாளர் ஒருவர் ஆகிய 7 பேர் பணி செய்துள்ளனர். அறுவை சிகிச்சை மருத்துவம் சல்லியக்கிரியை என்ற பெயரில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், மனித உடலில் ஏற்படும் பெரிய காயங்களை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். மருந்தாளுநர்கள் ஓராண்டு காலத்திற்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் அவற்றின் அளவுகளை சரிபார்த்தும் கணக்கிட்டும் வந்துள்ளனர். ஏறக்குறைய தற்பொழுது செயல்படும் மருத்துவமனை போலவே இந்த சோழர் கால மருத்துவமனையும் செயல்பட்டு வந்ததை கல்வெட்டு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன" என்று அவர் கூறினார். படக்குறிப்பு, திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில்   20 வகை மருந்துகள் வீரசோழன் மருத்துவமனையில் நாடி பாா்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவர் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விபரமும் அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு வகை குறித்தும் கல்வெட்டு தெரிவிக்கிறது. கோவிலின் ஒரு பகுதியான “ஜனநாத மண்டபம்” என்ற இடத்தில் மருத்துவனை செயல்பட்டு வந்திருப்பதாக வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட மருந்துகளின் பெயா்கள் இந்த கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 1.பிரம்மயம் கடும்பூரி 2.வாஸாரிதகி 3.கோமூத்திர கரிதகை 4.தஸமூல ஹரிதகி 5.பல்லாதக ஹரிதகி 6.கண்டிரம் 7.பலாகேரண்ட தைலம் 8.பஞ்சாக தைலம் 9.லசுநாகயேரண்ட தைலம் 10.உத்தம கரிநாடி தைலம் 11.ஸுக்ல ஸிகிரிதம் 12.பில்வாதி கிரிதம் 13.மண்டுகரவடிகம் 14.த்ரவத்தி 15.விமலை 16.ஸுநோரி 17.தாம்ராதி 18.வஜ்ரகல்பம் 19.கல்யாணலவனம் 20.புராணகிரிதம் "இந்த மருந்துகளில் ஒன்றிரண்டு நீங்கலாக மீதமுள்ள அனைத்தும் தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளன. இம்மருந்துகளைப் பற்றிய விரிவான குறிப்புகளும் அவை தீா்க்கும் நோய் பற்றிய விபரங்களும் “சரஹா் சம்ஹிதை” என்னும் ஆயுா்வேத நூலில் காணப்படுகின்றது" என்று கூறினார்.   படக்குறிப்பு,திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கல்வெட்டு "சோழர் ஆட்சியில் பல இடங்களில் மருத்துவமனைகள்" இதுபோல், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோழர்கள் மிகச் சிறப்பாக ஆதுலர் சாலை என்று அழைக்கப்படக் கூடிய மருத்துவமனைகளை நடத்தி வருந்திருப்பதாக அவர் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோயில் தேவராயன் பேட்டையில் உள்ள மத்தியபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், நன்னிலம் அருகே திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆதுலர் சாலை செயல்பட்டு வந்திருப்பதாக கல்வெட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டி முனைவர் வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/crggkk0z4ndo
    • ஆனாலும் சிங்கன்   @குமாரசாமி மகா கெட்டிக்காரன். உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.
    • 26 MAY, 2024 | 03:13 PM   வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.  இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/184524
    • இன்று தான் எத்தனையாம் இடம் என்று தெரியும்.   அதுவரை கவலை வேண்டாம்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.