முற்றிலும் இலவச பயன்மிகு மென்பொருட்கள்
#1
Posted 23 January 2007 - 12:25 PM
முகவுரை
முற்றிலும் இலவசமாக இணையத்தில் வினியோகிக்கப்படுகின்ற, பிரச்சனை ஏதும் இன்றி இறக்கம் செய்து கொள்ளகூடியதுமான, விற்பனையாகும் பிரபல்யமான மென்பொருட்களுக்கு மாற்றீடான, பயன்மிகு மென்பொருட்கள் பலவற்றின் விபரங்களை இணைப்புடன் (Link) இங்கு தரவுள்ளேன்.
ஏனையவர்களும் இதே போன்ற சட்டரீதியான, இலவச, பிரபல்யமான, மென்பொருட்களின் விபரங்களை மாத்திரம் இங்கு இடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். பலருக்கும் பொதுவாக பயன்படும் மென்பொருட்களின் விபரங்கள் வரவேற்கத்தக்கது.
யாழ் இணைய தளத்தின் வேறு பக்கங்களில் காணப்பட்டாலும் பரவாயில்லை. மீண்டும் இங்கே பதிந்து இதை ஒரு தொகுப்பக்கலாம் என்பது எண்ணம்.
#2
Posted 23 January 2007 - 01:19 PM
IZArc version 3.7 Build 1430
22.01.2007
Winzip என்பது பிரபல்யமான File Compressing மென்பொருள். அதற்கு போட்டியாக பின்தொடர்வது WinRAR ஆகும். இவை இரண்டும் விற்பனையாகும் பொருட்கள். பணம் செலுத்தி இறக்குமதி செய்யவேண்டும்.
இவை இரண்டிற்கும் முழு அளவில் மாற்றீடானதும், Compression சம்பந்தமான எல்லா Format களை ஆதரிக்க கூடியதுமானம், இலாப நோக்கற்ற தொண்டர்கள் குழாம் ஒன்றினால் ஆக்கப்பட்டு பணவசதி அற்றவர்களை இலக்காக கொண்டு முன் வைக்கப்பட்டதுமான File Compression Software தான் இந்த IZarc என்ற மென்பொருள். இதை ஆக்கியவர்கள் இப்படி கூறுகிறார்கள்
1. பாவனைக்கு இலேசான முகப்புகளை கொண்டது.
2. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இருந்து Drag & Drop செய்யலாம்.
3. வலது கிளிக் செய்து Extract செய்யவோ அல்லது Zip பண்ணவோ முடியும்
4. ஒரு Archive type இலிருந்து இன்னொன்றிற்கு மாற்ற முடியும்.
5. பல மொழிகளை ஆதரிக்கும்.
6. இன்னமும் பல
இதை டவுண்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்கள். Winzip, WinRAR தேவையில்லை. Zip, RAR, Bin, Cue, ISO, CAB, TAR, TAZ, NRG, ACE, ARG, இன்னும் பல.
விபரம் அறிய
http://www.izarc.org/
டவுண்லோட் பண்ண
http://www.izarc.org/download.html
This post has been edited by E.Thevaguru: 23 January 2007 - 02:55 PM
#3
Posted 27 January 2007 - 12:08 PM
Microsoft PowerToys for Windows XP-- ImageResizer.exe
இமெயிலில் படம் அடிக்கடி அனுப்புபவர்களுக்கும் அல்லது இணைய வெப்தளங்களுக்கு படங்கள் ஏற்றம் செய்பவர்களுக்கும் அதிகம் வேண்டியது இந்த மென்பொருள். ஒரு image ன் அளவை சுலபமாக மாற்றக்கூடிய மென்பொருள் இது. இந்த அளவு மாற்றத்தை விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ள MS Paint என்ற சிறிய செயலியை உபயோகித்து சாதாரணமாக செய்யலாம். Photoshop அல்லது Paintshop Pro போன்ற கனதியானவற்றின் உதவியோடும் செய்யலாம். ஆனால் இந்த செயலிகளை இயக்கி உள்ளீடு செய்து அல்லது மூலைகளை பிடித்து இழுத்து என்பதெல்லாம் சற்று அதிக வேலை.
மேற்கூறிய Image Resizer.exe என்ற மென்பொருளை இறக்கி உங்கள் கண்னியில் நிறுவிக்கொண்டால் ஒரு image ஐ அல்லது போட்டோவின் அளவை மாற்றுவதற்கு Photoshop ஓ அல்லது MS Paint ஓ அல்லது Online Resizer ஓ எந்த மென்பொருளும் தேவையில்லை. இலேசாக வலது கிளிக் செய்து வேண்டிய அளவை கொடுத்து OK பண்ண விடயம் முடிந்துவிடும். அததனை இலேசானது.
இந்த ImageResizerPowertoySetup.exe என்ற பைல் ஐடவுண்லோட் பண்ணி MY Documents என்னும் போல்டரினுள் இட்டேன். அதை இரட்டை கிளிக் செய்ய அது இன்னொரு பைல் ஐ Widows/Downloaded Installations என்ற போல்டரினுள் Image Resizer Powertoy for Windows XP.msi என்ற பெயரில் போட்டது. அதை இரட்டை கிளிக் செய்ய Installation Wizard தோன்றியது, பின் I accept.......next....next........Finish. சரி இன்ஸ்டலேஷன் முடிந்துவிட்டது,
இயக்கி பார்ப்போமென டெஸ்க்ரொப் இல் icon ஐ தேடினால் காணோம். சரி Start-->All Programs க்கு போய் பார்த்தால் அங்கும் Image Resizer என்ற பெயரையே காணோம். ஆனால் அதற்குரிய Help பைல் ஐ திறக்கக்கூடியதான கட்டளை மாத்திரம் காணப்படுகிறது. சிறிது நேர தடுமாற்றத்தின் பின் ஒரு படத்தை வலது கிளிக் பண்ணி பார்க்க அங்கு தோன்றும் மெனுவில் அதற்குரிய கட்டளை காணப்படுகிறது. என்ன அளவு வேண்டுமோ அதை கொடுத்து OK ஐ கிளிக் பண்ண இன்னொரு பட பைல் பக்கத்தில் உருவாக்கப்படுகிறது. தபால் தலை, வங்கி அட்டை, போஸ்ற் காட், கபினெட் அளவு இப்படி எந்த அளவிலும் resize பண்ணிக்கொள்ளலாம்.
வலது கிளிக் பண்ணி Copy and Drag செய்வது போன்று அத்தனை சுலபமானது. இன்கே டவுண்லோட் பண்ணிக்கொள்ளவும்.
http://www.microsoft...ppowertoys.mspx
#4
Posted 03 February 2007 - 01:50 PM
Pop-Up Stopper Free Edition 3.1.14
இந்த Panicware கம்பனியின் இலவச மென்பொருளை பலவருடகாலமாக பாவிக்கின்றேன். விளம்பர பொப்-அப் கள் ஏதுவுமே தோன்றி எனக்கு இடையூறு செய்வதில்லை. இலவச TOOL BAR ஏதாவதுடனாவது சேர்ந்த வேறு ஏதாவது Pop up Blocker உங்கள் கணனியில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. இந்த Pop up Blocker ஐயும் சேர்த்து நீங்கள் பாவிக்கலாம். Netscape, Internet Explorer, and Mozilla போன்றவைகளுடன் இணைந்து வேலை செய்யக்கூடியது. இந்த ஸ்ரொப்பரை பாவிப்பதற்கு கணனியில் எந்த செட்டிங்கை மாற்றவேண்டிய தேவையில்லை. விரும்பினால் எந்த பொப் அப் ஐயும் அனுமதிக்க செய்ய முடியும். ஏதாவதொரு லிங்கை கிளிக்பண்ணும்போது பொப் அப் தடுத்தால் உடனே CTRL or Shift கீயை அழுத்திக்கொண்டு லிங்கை கிளிக்பண்ணினால் தடுப்பதை நிறுத்தி விடும். கீழ்க்காணூம் தளத்தில் இருந்து இலவசமாக இறக்கிக்கொள்ளலாம். அடுத்ததாக விசேஷம் என்னவெனில் இது காலாவதியாகாது; தொடர்ந்து பாவிக்கலாம்.
இது ஒரு பிரபல்யமான மென்பொருள். உற்சாக மிகுதியால் சிலவேளைகளில் தேவையான தளங்களையும் தடுத்துவிடும். அப்படியெனில் CTRL கீயை அழுத்தி பிடிக்கவேண்டியதுதான்.இந்த மென்பொருளின் கனமும் அதிகம் இல்லை. 511.7 KB தான்.
http://www.download....4-10490082.html
This post has been edited by E.Thevaguru: 06 February 2007 - 11:25 AM
#7
Posted 05 February 2007 - 04:25 PM
Cute Pdf Writer 2.62
Pdf களைப் பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
தேவையாயின் இந்த தளத்திலே இந்த மென்பொருளைப் பற்றி உள்ளது.
http://www.cutepdf.c...ePDF/writer.aspமென்பொருளைப் பற்றி
http://www.cutepdf.c.../CuteWriter.exeமென்பொருள் தரவிறக்க
http://www.cutepdf.c...d/converter.exeஇந்த மென்பொருளும் தேவைப்படும்
This post has been edited by suddi: 05 February 2007 - 04:31 PM
-சுட்டி-
குழந்தையும், கோழிக்குஞ்சும் எப்போதும் பொறுக்கும்.
சிறுவர் பக்கத்திற்கு செல்ல இதனை அழுத்தவும்.
சுட்டியின் பெட்டி இலக்கம் 1
[color="#0000FF"]*****மீண்டும் சுட்டி*****
#10
Posted 18 February 2007 - 07:46 AM
முற்றிலும் இலவசமான பயர்பொக்ஸ் 2.0 இணைய உலாவியும் உம் அதன் 25 உடனிணைப்புகளும்
Mozilla Firefox 2.0 & its recommended addons
பல விருதுகளை வென்றுள்ள ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியானது பின்வரும் தன்மைகளைக் கொண்டுள்ளது.
- மிக விரைவானது.
- மிக பாதுகாப்பானது.
- உங்களுக்கேற்றவாறு மாற்றியமைக்கக் கூடியது.
தரவிறக்கம் செய்யMozilla firefox 2.0.0.1
பயர்பொக்ஸானது (பயர்பொக்ஸ் 2.0 இல் மட்டுமே நன்கு செயல்படக்கூடிய, முற்றிலும் இலவசமான) 25 உடனிணைப்புகளுக்கு பரிந்துரை செய்கின்றது.
அவையாவன,
Forecastfox by Richard Klein
காலநிலை (weather forecast) அறியப்பயன்படும் ஒரு உடனிணைப்பாகும். இது உலாவியின் அடியிலேயேஇருந்து நமக்கு வேண்டிய நகரத்தின் வெப்பநிலை, மழை வருமா வராதா என்பது குறித்தெல்லாம் அறிய முடியும். முகில் கூட்டங்கள் அடங்கிய படங்கள் மூலம் நாம் இதை அறிந்து கொள்ளலாம்.
அளவு : 415KB
தளம் : http://addons.mozilla.org/firefox/398/
Foxytunes by alex sirota
இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கையில் சிலர் பாடல் கேட்பது வழக்கம். அதன் ஒலியளவு கூட்ட குறைக்க ஒவ்வொரு முறையும் நாம் மீடியா ப்ளேயரையோ அல்லது வேறு ப்ளேயரையோ திறக்க வேண்டியதில்லை. இதிலிருந்தே அவற்றை கையாளலாம்.
அளவு : 499KB
தளம் : http://addons.mozilla.org/firefox/219/
Flash Got by Grigio Maone
இது ஒரு டவுன்லோட் அக்சிலேட்டராகும். இதை பயர்பொக்ஸ்சில் தவிர வேறெந்த உலாவியும் பயன்படுத்தமுடியாது.
அளவு : 235KB
தளம் : http://addons.mozilla.org/firefox/220/
Clipmarks by Clipmarks
முழு வெப்பக்கத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் பதிவு செய்ய உதவுகிறது.
அளவு : 97KB
தளம் : http://addons.mozill...g/firefox/1407/
FireBug by Joe Hewitt
இணையத்தில் பயன்படுத்தப்படும் Java script, CSS, HTML ஆகியவை சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கும் ஒரு மென்பொருளாகும்(software utility).
அளவு : 105KB
தளம் : http://addons.mozill...g/firefox/1843/
Greasemonkey by Aaron Boodman
ஏற்கனவே உள்ள இணையப் பக்கத்தை பயனாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க உதவும் மென்பொருளுடனிணைப்பு ஆகும்.
அளவு : 54KB
தளம் : http://addons.mozilla.org/firefox/748/
Linkedin Companion for Firefox by Jerry Luk
வேறெந்த ஆளையும் குறிப்பிட்ட ஒருவரது கணக்கிற்கு வர அழைப்பு கொடுக்க உதவும் உடனிணைப்பாகும். வேலை தேடுதல், பள்ளித் தோழர் தோழிகள்(classmates), அலுவலகத் தோழர் தோழிகள்(collegues) தேடுதல், வியாபார உறவு வலைப்பின்னல்களை அமைத்தல் போன்றவற்றிற்கு இது உதவுகிறது.
அளவு : 103KB
தளம் : http://addons.mozill...g/firefox/1512/
Download Statusbar by Devon Jensen
இணையிறக்கம் செய்யும் போது அதனுடைய நிலை எவ்வாறு உள்ளது எனத் தெரிந்து கொள்ள உதவுகிறது. இது ஒரு தனி டூல்பாராக அமைந்து விடுவதால் நாம் உளவுவதற்கு தொந்தரவாக இருக்காது.
அளவு : 75KB
தளம் : http://addons.mozilla.org/firefox/26/
Blue organizer by Alex iskold
உலாவிக் கொண்டிருக்கும்போது users தங்களுக்குத் தேவையான அல்லது பிடித்துள்ள செய்திகள்(news), ஒளிப்படங்கள்(Photos), விமர்சனங்கள்(Reviews), விவாதங்கள்(Disacussions) ஆகியவற்றைப் பதியவும் இது உதவும்.
அளவு : 229KB
தளம் : http://addons.mozill...g/firefox/3481/
Pronto Shopping Messenger by Pronto, Inc
இணையத்தில் ஷாப்பிங் செய்யும்போது தேவையான குறிப்புக்களை குறித்துக் கொள்ளவும், விவரங்களை அறியவும் உதவுகிறது.
அளவு : 121KB
தளம் : http://addons.mozill...g/firefox/3348/
Yoono by Yoonoஒரு குறிப்பிட்ட இணைய தளத்தில் இருக்கும் மேய்ந்து கொண்டிருக்கும் போதே அதற்கிணையான பிற இணைய தளங்களைப் (very similar to similar pages hyperlink in google search) பட்டியலிட உதவுகிறது.
அளவு : 270KB
தளம் : http://addons.mozill...g/firefox/1833/
Map+ by Ara Agopian
குறிப்பிட்ட இடம் மற்றவைகளைச் சொன்னால், அதன் நிலவரை மற்றும் இன்னபிற விவரங்களைக் கொடுக்கும்.
அளவு : 45KB
தளம் : http://addons.mozill...g/firefox/2394/
Performancing by Perfomancing
ஒரு வலைப்பூ(Blog) என்னென்ன் வசதி தருகிறதோ அனைத்தையும் தருகிறது. Text மட்டுமன்றி, ஒளிப்படஙகளையும் இதில் தொகுக்கலாம்.
அளவு : 294KB
தளம் : http://addons.mozill...g/firefox/1730/
Jeteye by jeteye Technologies, Inc
இதைப் பயன்படுத்தும் பயனர்கள் புக்மார்க்குகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். இதுதானாகவே அனைத்து லிங்குகள், குறிப்புகள் போன்றவற்றை அந்தந்த தளத்தில் நுழையும்போதே சேகரிக்கத் தொடங்கி விடும்.
அளவு : 406KB
தளம் : http://addons.mozill...g/firefox/1508/
Sage by Sage Team
இது rss feeder களுக்கு உதவுகிறது. செய்திகள், விவாதங்கள் போன்றவற்றை எளிதில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
அளவு : 135KB
தளம் : http://addons.mozilla.org/firefox/77/
JAHA-Web-Activated Telephony by Gilad Katz
இந்த உடணினைப்பு இணைய வழி இலவச அல்லது குறைவான (free or low cost) முதலீட்டில் தொலைபேச உதவுகிறது. இதன் மூலம் உலகிலுள்ள எந்தவொரு லேண்ட் லைனுக்கோ அல்லது கைபேசிக்கோ கதைக்கலாம்.
அளவு : 22KB
தளம் : http://addons.mozill...g/firefox/2577/
Foxmarks Bookmark Synchronizer by Forxmarks LLC
சிறிய விசார்டு உதவியுடன் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கணனிகளுக்கிடையேயான நூர்குறிப்புகளை ஒத்திக்கலாம்(Synchronization). இதை யாருமறியாமல் பயனாளர் பெயர், நுழைவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். தளத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் நமது நூற்குறிப்புக்களைஅணுகலாம்.
அளவு : 149KB
தளம் : http://addons.mozill...g/firefox/2410/
Cooliris Previews by the Cooliris Team
கூகிள் தேடலில் ஒரு ஹைப்பர் தொடுப்பில் கர்சரைக் கொண்டு சென்றல் அத்தளத்தின் ப்ரிவியூவை உடனடியாகக் காணலாம்.
அளவு : 59KB
தளம் : http://addons.mozill...g/firefox/2207/
Answer by Asher Szmulewicz
இதுவும் தேடலின் போது உதவும் ஒரு முக்கிய உடனிணைப்பாகும். 1-Click answers தளம் உதவுவதால் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான விடையை மற்ற தளத்தில் காணலாம்.
அளவு : 32KB
தளம் : http://addons.mozilla.org/firefox/735/
Adblock Plus by Wladimir Palant
விளம்பர நோக்கத்தோடு புதிது புதிதாய் வரும் தளங்களையும், படங்களையும் தடை செய்ய உதவுகிறது.
அளவு : 215KB
தளம் : http://addons.mozill...g/firefox/1865/
Stumble Upon by Geoff Smith
பல்வேறான ஒளிப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை எளிதாக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளப் பயன்படுகிறது.
அளவு : 171KB
தளம் : http://addons.mozilla.org/firefox/138/
ChatZilla by James Ross
இது ஒரு பயர்பொக்ஸ் அடிப்படை சேர்வர் ஆகும். இது மூலமாக எளிமையாக சாட் செய்யலாம். Java script, CSS மூலமாக எளிதாக பயனர் தோழமையாக்கலும்(user - custmmization) உண்டு.
அளவு : 298KB
தளம் : http://addons.mozilla.org/firefox/16/
Del.icio.us Bookmarks by Yahoo!Inc.
http://del.icio.us/ தளத்தில் அவப்போது மேம்படுத்தப்படும் நூற்குறிப்புக்களை நமது உலாவியிலும் மேம்படுத்த உதவுகிறது.
அளவு : 201KB
தளம் : http://addons.mozill...g/firefox/3615/
FireFTP by Mime Cuvalo
இது ஒரு பாதுகாப்பான cross-platform FTP client ஆகும். இதில் கோப்புச்சுருக்கம், மறையாக்கம்(SSL Encryption), அட்டவணையாக்கம்(Hashing) போன்றவையும் உண்டு.
அளவு : 102KB
தளம் : http://addons.mozilla.org/firefox/684/
Web Developer by Chris Pederick
இணையத்தகவல் துளிகள்(Cookies), CSS, Java script, Forms, ஒளிப்படங்கள், என்பனவற்றைத் தொகுக்க(edit) உதவும். இணைய வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் உதவும்.
அளவு : 145KB
தளம் : http://addons.mozilla.org/firefox/60/
This post has been edited by suddi: 18 February 2007 - 07:51 AM
-சுட்டி-
குழந்தையும், கோழிக்குஞ்சும் எப்போதும் பொறுக்கும்.
சிறுவர் பக்கத்திற்கு செல்ல இதனை அழுத்தவும்.
சுட்டியின் பெட்டி இலக்கம் 1
[color="#0000FF"]*****மீண்டும் சுட்டி*****
#11
Posted 08 March 2007 - 10:43 PM
AVG Anti Virus Free Edition 7.5
இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் பல உள்ளன. AVG Anti Virus, Avast, AntiVir, Bit Defender,Clam Av, Comodo Anti Virus, ClamWin, McAfee (Free only For Students). இதில் எது சிறந்தது என்றால் பதில் சொல்வது கஷ்டம். அவரவர் தாங்கள் பாவிப்பதை சிறந்தது என்பார்கள் AVG Anti Virus, Avast, இவை இரண்டும் பிரபல்யமானது. பிரபல்யமானது சிறந்தது என்றில்லை. நான் பாவிப்பது AVG. மூன்று வருடங்களாக பாவித்து வருகின்றேன். AVG யில் சிறப்பு என்னவெனில் பெரும்பாலும் நாள்தோறும் Virus Definition துரித கதியில் அப்டேட் ஆகும். பாவனைக்கு இலேசானது. அடுத்து Grisoft கம்பெனி ஒரு ஸ்திரமான கம்பெனி. தங்களது பொருட்களுக்கு நிறைய ஆதரவு தருவார்கள். முற்றிலும் இலவசம். இதில் Professional Edition மேலதிக அம்சங்களுடன் பணத்திற்கு உண்டு. இதை Commercial Edition என்பார்கள்.
இவற்றைவிட Online Scanners என்று எமது கணனியில் நிறுவாமல் Scan பண்ணிக்கொள்ளக்கூடிய வசதிகளும் உள்ளன. அதில் Housecall Trend Micro, McAfee என்பது பிரபல்யமானது. வேறு பலவும் இருக்கலாம். இவைகள் எமது கணனியில் நிறுவப்படுவதில்லை என்றாலும் சில கோப்புகளை தற்காலிகமாக எமது கணனியில் சேமித்துவிடும்.
தனியாக வீட்டில் ஒரு கணனி வைத்திருப்பவர்களுக்கு இந்த இலவச பதிப்பு போதிமானது. நீங்கள் டவுண்லோட் பண்ணுகிறவற்றையும் இவைகளைக்கொண்டு ஸ்கான் பண்ணிக்கொள்ளலாம். இமெயில் ஸ்கானிங்கையும் இவை செய்யும். இதை டவுண்லோட் பண்ணுகிற தளத்தில் அதற்குரிய Manual ஐயும் டவுண்லோட் பண்ணிக்கொண்டு அதற்குரிய நடைமுறையையும் கற்றுக்கொள்ளலாம். இதன் டவுண்லோட் பைலின் அளவு 18.8 MB ஆகும்.
டவுன்லோட் பண்ண:-
http://free.grisoft....anti-virus-free
#12
Posted 09 March 2007 - 09:57 AM
1. வின்மெர்ஜ்-WinMerge
இது இரண்டு ஃபைல்களை ஒப்பிட்டு பார்க்க பயன்படுத்தும் ஒரு திறந்த மூலம். மிக வேகமாக செயல்படுகிறது. ஒப்பிட்டு பார்க்கும் போது -ஏதேனும் மாற்றங்களை நீங்கள் செய்தால் ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்கிறது.
கிடைக்கும் இடம்:http://winmerge.sourceforge.net/
2. மைஜெனரேஷன்.-MyGeneration
நான் பார்த்ததிலேயே ஒரு மிக சிறந்த கோட் ஜெனரேட்டர். பொதுவாக கோட் ஜெனரேஷன் வகை டூல்கள் தங்களுக்குள் முன்னதாக டிஃபைன் பண்ண பட்டிருக்கும் லாஜிக் படி மொத்தமாக கோட் ஜெனரேட் பண்ணும். சில கமெர்ஷியல் ப்ராடக்ட்கள் ஒரு சில டிஎல் எல் ஃபைல்களை ரெஃபர் பண்ணி கோட் ஜெனரேட் பண்ணும். அதாவது பேஸ் க்ளாஸ் கோட் அந்த டி எல் எல் ஃபைல்களில் இருக்கும். அந்த கோட் என்ன என்பது நமக்கு தெரியாது. அந்த பேஸ் கிளாஸ்களை இவர்கள் இன் ஹேரிட் செய்து கோட் எழுதுவார்கள். இதனால் நீங்கள் ஒரு தேர்ட்பார்ட்டி டிஎல் எல்லை பயன்படுத்த வேண்டிய கட்டயாத்திற்கு உள்ளாக்க படுவீர்கள். ஆனால் இந்த இலவச மென்பொருள் டெம்ப்ளெட் பயன்படுத்தி கோட் ஜெனேரட் செய்கிறது. உங்கள் தோதுக்கு கோட் ஜெனெரேட் பண்ணலாம். ப்ளாக்கர் டெம்ப்ளேட்கள் நிறைய கிடைப்பது போல, இங்கும் நிறைய மாடல் டெம்ப்ளேட்கள் உள்ளன. எளிதாக பயன்படுத்தி மின்னல் வேகத்தில் ஆயிரக்கணக்கான லைன்களை ஜெனெரேட் பண்ணலாம். கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய டூல்.
கிடைக்கும் இடம்:http://www.mygenerationsoftware.com/portal/default.aspx
3. ஆரெஸெஸ் பாப்பர்-RSS Popper
அவுட்லுக் பயன்படுத்துபவர்களுக்கான இலவச ஆர்ஸெஸ் ரீடர்.
கிடைக்கும் இடம்:http://rsspopper.blogspot.com/
4. ஸ்லிக்ரன்-SlickRun
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்கள், ஃபைல்கள், எக்ஸிக்யூட்டபிள்கள் அனைத்தையும் கீ-வேர்ட் பயன்படுத்தி லான்ஞ் பண்ண உதவும் டூல். பலவற்றை ஒரே கீ-வேர்ட் வைத்து திறக்கலாம். உதாரணமாக நான் காலையில் அலுவலகம் வந்த உடன் இதில் ஃப்ராஜக்ட் என்று அடிப்பேன். உடனடியாக டோட் (ஆரகிள் டூல்), அவுட்லுக், டெஸ்ட் டைரக்டர் , எக்ஸ்ப்ளோரர், கம்பெனி இன்ட்ரானெட் அனைத்தும் லான்ச்சாகி விடும்.
கிடைக்கும் இடம்.http://www.bayden.com/SlickRun/
5.டு-டூ லிஸ்ட்-ToDo List
நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிட ஒரு எளிமையான டூல். திறந்த மென்பொருள் வகை சார்ந்தது.
கிடைக்கும் இடம்:http://www.abstractspoon.com/
விடுதியடா தமிழா
#13
Posted 09 March 2007 - 10:28 AM
நீங்களே எழுத்தரு அமைக்கலாம்
http://www.myfirstfont.com/
உலாவியின் முகவரி பகுதியில் உங்கள் விருப்பதிற்கு ஏற்ப பேஃவைகான் அமைக்கலாம்
http://www.chami.com...rvices/favicon/
http://www.chami.com...rvices/favicon/
விடுதியடா தமிழா
#17
Posted 10 March 2007 - 10:31 AM
ஏற்கனவே கூகுள் Docs and spreadsheetsன்ற சேவையை அளித்து வந்தாலும், அதில் Powerpointக்கு இணையான வசதி இல்லாமல் இருக்கிறது (ஆனால், இதற்கான வசதிகளை கூகுள் வெளியிடும் என்று இணையத்தில் கிசுகிசுக்கிறார்கள்! Presently என்ற பெயரில் இதற்கான முன்னோட்ட வேலைகள் நடப்பதாகவும் தகவல் உலவுகிறது). Openoffice நிறுவ சொந்தக் கணினியோ அலுவலகக் கணினியில் நிர்வாக அணுக்கமோ தேவை. எனவே, இணையத்திலேயே ஒரு office மென்பொருள் இருப்பது விரும்பத்தக்கது.
இந்த வகையில் Thinkfree தளத்தில் word, spreadsheet, presentation மூன்றையும் இணையத்திலேயே இலவசமாக உருவாக்கவும் அவற்றை உலகெங்கும் இணையம் வழி பகிரவும் இயலும். இந்த கோப்புகளை பதிவிறக்கி Microsoft office வழியாகவும் பார்க்கலாம் என்பது சிறப்பு. தவிர, இணைப்பறு நிலையில் பயன்படுத்துவதற்கு பதிவிறக்கத் தக்க Thinkfree மென்பொருள்களையும் தருகிறார்கள்.
இன்று தான் இந்த Thinkfree தளம் குறித்து அறிந்தேன். ஒப்பீட்டளவில் Google Docsஐ காட்டிலும் சிறந்த சேவையாகவே தோன்றுகிறது. நீங்களும் போய்ப் பார்த்து சொல்லுங்களேன்.
http://www.thinkfree...common/main.tfo
விடுதியடா தமிழா
#18
Posted 10 March 2007 - 01:24 PM
சேமிக்கப்பட்ட ஒரு கோப்பை ஒரு கணினியிலிருந்து மற்ற கணினிக்கு எடுத்துச் செல்லும் போது அந்தக கணினியில் அதே மென்பொருள் இருந்தால் தான் அதைப் படிக்கமுடியும். உதாரணமாக MS Word-ல் உருவாக்கப்பட்ட ஒரு கோப்பை மற்ற கணினியில் கொண்டுபோய் படிக்க வேண்டுமானால் அல்லது அச்சு எடுக்க வேண்டுமேயானால் அதற்கு MS Word கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறையைப் போக்கவே இந்த மென்பொருள் உதவுகிறது. அதாவது பிடிஎஃப் என்பது ஆங்கிலத்தில் (PDF- Portable Document Interface) என்பதன் விரிவுரையாகும்.
இந்த பிடிஎஃப் கோப்புகளை படிக்க உதவும் மென்பொருளை "அடோப்" ஏற்கனவே இலவசமாக வழங்குகிறது. http://www.adobe.com/acrobat/ சென்று அதை பதிவிறக்கம் செய்து கொளுங்கள்.
ஆனால் இந்த பிடிஎஃப் கோப்புகளை உருவாக்குவதர்கான மென்பொருளை "அடோப்" விலைக்கே விற்று வருகிறது. இதனால் இதன் தேவை முக்கியமாகிவிட்டது. இம்மென்பொருளை சில நிறுவங்கள் Share Ware-ஆக (பாதி நாள் தான் வேலை செய்யும்) வழங்கி வந்தார்கள். சிலர் இணையம் மூலமாகவே பிடிஎஃப் கோப்புகளாக மாற்றும் முறையில் குறைந்த அளவு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் வாங்கிக் கொண்டும் குறைச்சேவை செய்து வந்தனர். ஆனால் அவர்களின் வாயில் மண் அள்ளிப்போட வந்ததுதான் இந்த பிரிமோ பிடிஎஃப்.
Active PDF என்ற நிறுவனத்தினர் பிடிஎஃப்-ஆக மாற்றும் மென்பொருளை இலவசமாகவே வழங்குகின்றனர். இதை www.primopdf.com என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் அனைத்துவிதமான கோப்புகளையும் பிடிஎஃப் வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு மாற்றுவதற்கு Print --- Select Primo PDF என்பதனைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அத்தளத்திற்குச் செல்ல http://www.primopdf.com/சொடுக்கவும்.
விடுதியடா தமிழா
#19
Posted 11 March 2007 - 07:39 AM
உபுண்டு லினக்ஸ் (Ubuntu linux)உபுண்டு லினக்ஸ் (ubuntu linux) என்பது, க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். டெபியன் க்னூ/லினக்ஸ் (debian GNU/Linux) இனை அடிப்படையாகக்கொண்டது இதில் அடங்கியுள்ள அத்தனை மென்பொருட்களும் தளையறு மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களை தபால் மூலம் பெறுவதற்கு கூட பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. மார்க் ஷட்டில்வர்த் (Mark Shuttleworth) என்பவருடைய கனோனிகல் லிட் (Canonical Ltd) எனும் நிறுவனம் உபுண்டுவுக்கு அநுசரணை வழங்குகிறது.
உபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை கொண்டவையாக அமைகின்றன. திட்டமிடப்பட்ட அடுத்த வெளியீடான டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழங்கலை கொண்டு அன்றாட கணினி பாவனைகள் அனைத்தையும் செய்யமுடியும். அத்தோடு வழங்கியாகவும் இதனை பயன்படுத்த முடியும். மேசைக்கணினிகளைப்போலவே மடிக்கணினிகளுக்கும் இது சிறப்பான ஆதரவை வழங்குகிறது.
உபுண்டு என்ற ஆபிரிக்க வார்த்தைக்கான அர்த்தம், "மானுட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்ஸ்" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.

தன்மைகள்
உபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்நிறுவிக்கொண்ட
ுடனேயே பயன்படுத்தக்கூடியதாக, தேவையான சாதாரண மென்பொருட்கள் அனைத்தையும் இறுவட்டு கொண்டிருக்கிறது.
நிர்வாகி அனுமதி, sudo மூலம் பயனருக்கு வழங்கப்படுகிறது.
தமிழ் உள்ளிட ஏராளமான மொழிகளில் இடைமுகப்பை மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி.
தமிழ் உள்ளீட்டுக்கென GTKIM.
utf -8 குறிமுறைக்கான ஆதரவு.
பொதி முகாமைக்கு deb பொதி வடிவம் பயன்படுத்தப்படுகிறது.
synaptic மூலம் வேண்டிய மென்பொருட் பொதிகளை இணையத்திலிருந்து நேரடியாக நிறுவிக்கொள்ளக்கூடிய வசதி. (தளைகள் தன்னியக்கமாக கையாளப்படும்)
புதிய வெளியீடு வந்தவுடன் நிறுவப்பட்ட இயங்குதளத்தை இணையத்தினூடாக இலவசமாகவும், எளிமையாகவும், புதிய வெளியீட்டுக்கு மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி.
மென்பொருள் பொதி முகாமைத்துவமும் அனுசரணையும்
உபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது. அவையாவன,
Main (முதன்மை)
Restricted
Universe
Multiverse
Main
இதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம் பாதுகாப்பு பொருத்துக்களும், இற்றைப்படுத்தல்களும் வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன.
Restricted
இதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர் இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத வன்பொருள் இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால் உபுண்டு அணுயினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம்.
Universe
இப்பிரிவினுள் பெருமளவான மென்பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம் எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை கிடையாது.
Multiverse
இதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் பொது மக்கள் உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை
உபுண்டு வழங்கலின் வடிவங்கள்
பல்வேறு தேவைகளையும் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு இவ்வழங்கல் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது.
இயக்கும் முறையை அடிப்படையாகக்கொண்ட வடிவங்கள்
நிறுவக்கூடிய வட்டு - இந்த இறுவட்டினை நீங்கள் கணினியில் நிறுவி பின் வழங்கலை (க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை) பயன்படுத்தலாம்.
நிகழ்வட்டு - இதனை கணினியில் நிறுவிக்கொள்ளாமல், வன்தட்டில் எந்த விதமான மாற்றங்களையும் உருவாக்காமல், இறுவட்டிலிருந்தே பயன்படுத்திப்பார்க்கலாம். இயங்குதளத்தை கணினியில் நிறுவமுடியாதவர்கள், இதனை பயன்படுத்தலாம். .
வன்பொருள் கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட வடிவங்கள்
கணினியில் பொருத்தப்பட்டுள்ள முறைவழியாக்கியின் (processor) கட்டமைப்பின் வகைகளை பொறுத்து இவை வெளிவருகின்றன.
x86 (PC) வடிவம்
PPC (ஆப்பிள் கணினிகள்)
64 bit (64பிட் கட்டமைப்புக்குரியது)
உபுண்டு இயங்குதளத்தை இறுவட்டு வடிவில் தரவிறக்க
உபுண்டு பீட்டா பதிவிறக்கம்
உபுண்டு தமிழ் மடலாடற்குழு
உபுண்டு தமிழ்க் குழு
விடுதியடா தமிழா
#20
Posted 31 March 2007 - 09:23 PM
Mihow Picture downloader V 1.4
இணைய உலாவில் சென்றபோது ஒரு வெப்தளத்தில் நயகரா நீர் வீழ்ச்சியின் அழகான படங்கள் 53 ஐ கண்ணுற்று எனது கணனியில் சேமிக்க ஆசைப்பட்டேன். வலது கிளிக் பண்ணி ஒவ்வொரு படமாக சேமிப்பது சிரமமாக இருக்கும் என்பதால் கூட்டாக தரவிறக்கம் செய்ய ஏதாவது மென்பொருள் இருக்கா என இணையத்தில் தேடினேன். கிடைத்தது "Inquisitor" என்ற மென்பொருள். கணனியில் நிறுவினேன். கண்ணை கவரும் அழகான வண்ண மென்பொருள். Thumbnail படங்களை பார்த்து தெரிவு செய்து இறக்கம் செய்யக்கூடிய வசதி. வேறு பல வசதிகளும் நிறையவே இருந்தது. அண்மையில் தான் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு குறைபாடு. இறக்கவேண்டிய பக்கத்தின் விலாசத்தை பிரதி பண்ணி ஒட்ட முடியவில்லை. தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. 5 அல்லது 6 அங்குல விலாசங்களை புள்ளி பிசகாமல் தட்டுவதென்பது கடினமாக இருந்தது.
எனவே அதை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஒன்றை தேடினேன். கிடைத்து; Mihow Picture downloader V 1.4. எளிமையானது; வசதிகள் குறைவு; ஆனால் கையாள்வது சுலபம். பெரிய அளவு படங்களை மாத்திரம் இறக்கம் செய் எனவும் கட்டளை கொடுக்க முடியும். Jpg, gif, png,mp3, avi,mpg, swf ஆகிய format ல் உள்ள எதையும் டவுண்லோட் பண்ணும்.
ஒரு format ஐ தேர்வு செய்து தள விலாசத்தை paste பண்ணியவுடன் அந்த தளத்தில் அந்த format ல் உள்ள படங்களின் விலாசங்களை காட்டும். விலாசங்களை வைத்து படங்களை தெரிவு செய்வது கடினம்தான். ஆனால் டவுண்லோட் பண்ணிய பின் தேவையில்லாதவற்றை அழித்து விடலாம். டவுண்லோட் பண்ணும்போது மாத்திரம் Thumbnail Preview காட்டும். 53 படங்களையும் ஒரேயடியாக இறக்கிக்கொண்டேன். ஒரு படம் இறக்கும்போது தடங்கல் ஏற்படின் இத்தனை விநாடி முயற்சி; அதன் பின் அடுத்த படத்திற்கு போகவேண்டிய setting ஐயும் கொடுக்கலாம். முற்றிலும் இலவசம். இங்கே கிளிக் பண்ணி இறக்கி கொள்ளலாம்.
http://www.mihov.com/eng/pd.html

Sign In
Register
Help


MultiQuote




