Jump to content

வெயில் படம் - இந்த கதை என் வாழ்க்கையில் அனுபவித்த வலி என்று துண்டு சீட்டை நீட்டினார் இயக்குனர்


mooki

Recommended Posts

வெயில் படம் - இந்த கதை என் வாழ்க்கையில் அனுபவித்த வலி என்று துண்டு சீட்டை நீட்டினார் இயக்குனர்

Tuesday, 26 December 2006

சிரபுஞ்சியில் வெயில் அடித்தால் எப்படியிருக்கும். அப்படியொரு அபூர்வமாய்... காதல் உள்ளிட்ட அத்தனை உறவுகளின் உன்னதங்களை உயில் எழுதி வைத்திருக்கும் படைப்பு இது. தலைப்பு வெயில் என்றாலும் பல காட்சிகளில் கண்கள் என்னவோ சிரபுஞ்சியாய் மாறுவதை எந்த கைக்குட்டை கொண்டும் தடுத்துவிட முடியாது. கால் சட்டை பருவத்தில் அப்பாவால் கண்டிக்கப்படும் பசுபதி (முருகேசன்) வீட்டை விட்டு வெளியேறி வெளியூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்கிறார்.

வயது வளர வளர போஸ்டர் ஒட்டும் வேலையில் ஆரம்பித்து ஆபரேட்டர் வேலை வரை உயர்த்தப்படும் பசுபதியின் வாழ்க்கையில் திடீரென முளைக்கிறது காதல் அத்தியாயம்.

தியேட்டரின் எதிரே இருக்கும் டீக்கடைக்காரிரன் மகளுக்கும் (பிரியங்கா) பசுபதிக்குமிடையே காதல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்னொரு பக்கம் ஊரிலேயே படித்து வளரும் பசுபதியின் தம்பி பரத் (கதிர்) விளம்பர ஏஜென்சி நடத்தி குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார். இங்கு பரத்துக்கும் விளம்பரங்களுக்கு டப்பிங் பேசவரும் பாவனாவிற்கும் இடையே காதல்.

இந்த சூழலில் பசுபதியின் காதல் பிரியங்காவின் அப்பாவுக்கு தெரிந்ததும் பிரச்சனை வெடிக்கிறது. காதலி தன்னைத்தானே பலியிட்டு கொள்ள, பசுபதியின் வாழ்க்கையில் வெறுமையும் இருட்டும் சூழ்ந்து கொள்கிறது.

எதற்குமே கொடுப்பினை இல்லாமல் சோதனைத சூறாவளியில் சுழலும் பசுபதி, இருபது வருடங்களுக்கு பிறகு தனது உறவுகளை புதுப்பித்துக் கொள்ள ஊருக்கு வருகிறார். கட்டித்தழுவி கண்ணீர்விட வேண்டிய அப்பா மீண்டும் துரத்துகிறார். இனி பசுபதியின் திசை எது என்பது மீதிக்கதை. "வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி..." என சின்னஞ்சிறுசுகளெல்லாம் பாட்டுப்பாடி களிக்கும் ஆரம்ப காட்சிகளிலேயே மூளைக்குள் கால் முளைத்து பால்ய காலத்திற்கு பயணிக்க வைக்கிறது நினைவுகள்.

பெற்றவர்கள், உடன்பிறப்புகள், வாழ்க்கை துணையாக கனவு கண்ட காதலி என ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா உறவுகளையும் இழந்து தவிக்கும் பாத்திரத்தில் பசுபதி நெகிழ வைத்துவிடுகிறார்.

நைந்துப்போன வேட்டியும், பிய்ந்துபோன செருப்புமாக பல வருடங்களுக்கு பிறகு ஊர் மண்ணை மிதிக்கும்போது காலில் சின்ன நடுக்கத்தை வரவழைக்கும் இடத்திலேயே நடிப்பில் 'நின்று' காட்டியிருக்கும் பசுபதி படம் முழுவதும் வென்று காட்டியிருக்கார்.

வாசலில் நின்றபடி "அப்பா நான்தாப்பா முருகேசன்... முருகேசன்ப்பா... யப்பா உங்க பையன் முருகேசன்ப்பா...." என அடையாளம் காட்ட முயல்வதும் பதிலுக்கு அப்பா கண்டுகொள்ளாமல் போகும்போது முட்டிக்கொண்டு வரும் அழுகைக்கு அணைப்போட்டு கொள்கிறார். இந்த இடத்தில் பசுபதிக்கு பதில் அழுது தீர்க்கிறது படம் பார்க்கும் அத்தனை கண்களும்.

மீண்டும் திருட்டு பட்டம் கட்டப்படும்போது மண்டியிட்டு 'நான் திருடலப்பா' என்று கதறுவது, தம்பி பரத்தை சந்திக்கும் இடத்தில் 'நீங்க கசாப்புக்காரரின் மகன் கதிர்தானே....?' என்று தயங்கி நிற்பது, க்ளைமாக்ஸில் வில்லனின் உயிரை குடித்துவிட்டு அய்யனார் சிலை போல உட்கார்ந்து உயிரைவிடுவது என ஒவ்வொரு இடத்திற்கும் தனித்தனி விருது தந்து கௌரவிக்கப்பட வேண்டியவர் பசுபதி.

ஒட்டுமொத்த பாராட்டுகளும் பசுபதிக்கு போய்ச்சேர விட்டுக்கொடுத்து விலகி நின்றிருக்கும் பரத்தின் பரந்த மனதுக்கும் பாராட்டு சொல்லியே ஆகவேண்டும்.

பசுபதியின் தியேட்டர் காதலியாக வரும் பிரியங்கா தமிழ் சினிமாவில் இன்னொரு சரிதாவாக சாதிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. அகன்று விரிந்த கண்கள் மொத்தத்திலும் பசுபதிக்கான காதலை தேக்கி வைத்துக்கொண்டு செய்யும் ரியாக்ஷ்ன் அடடா... பிரமாதம். வறட்டு இருமலும் வறட்டு பிடிவாதமும் மாறாமல் கண்களை அந்திச்சூரியனாக்கி மகனை வெறுத்தொதுக்கும் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார் ஜி.எம். குமார். ('அறுவடை நாள்' இயக்குனர்)

டப்பிங் குரல்கொடுக்கும் பாவனா, பசுபதியின் பால்யகால சிநேகிதி ஸ்ரேயா, வில்லனாக வரும் ரவிமரியா, அம்மாவாக வரும் T.K. கலா போன்றவர்களின் நடிப்பையும் ஒரு வரி மெச்சாவிட்டால் அந்த பாவம் சும்மா விடாது. பார்ப்பது படம் என்ற பயாஸ்கோப் தோரணங்களை களைத்துவிட்டு 'வாழ்க்கையை', 'வலி'யை உணர வைக்க உதவியிருக்கிறது மதியின் காமிராக் கண்கள். எதார்த்தம் பிறளாததற்கு இன்னொரு காரணம் லைட்டிங். புழுதிக்காடு, பூக்கும் காதல் என ஒவ்வொரு களத்திற்கும் ஏற்ற ஆளுகையை கையாணடிருக்கிறது மதியின் 'மதி'. குறித்து வைத்து கொள்ளுங்கள் K.V.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இப்படி கால இடைவெளிகளில் தனித்து நின்ற இசை கதாநாயகர்கள் வரிசையில் அடுத்த இடம் G.V. பிரகாஷுக்குதான்.

'உருகுதே மருகுதே....' என பாடலில் உருக்குபவர் பின்னணியிலும் வயலின், புல்லாங்குழலை இழையோட வைத்து மனதை கனக்கவைக்கிறார். காதலியின் கையில் திரைப்படம் ஓட்டுவது, ஒட்டுமீசை ஒட்டிக்கொண்டு ரெக்கார்டு டான்ஸ் பார்க்கும் சிறுவர்கள் என காட்சிக்கு பொருத்தமான நா. முத்துக்குமாரின் வரிகள், வரிகளுக்கு பொருத்தமாக காட்சியமைத்த விதம் இரண்டுமே கவிதைகளாக தெரிகின்றன.

கொள்ளுப்பட்டறையில் பற்ற வைத்த இரும்பை தண்ணீருக்குள் அழுத்தும் காட்சி. இந்த இடத்தில் ஆறியிருந்த மனசுக்குள் மறுபடியும் கோபம் கொப்பளிப்பதை சிம்பாளிக்காக காட்டும் இயக்குனர் வஸந்தபாலனின் மாறுபட்ட பார்வைக்கு இந்த ஒரு இடம் ஒரு சோறு பதம்.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, "இந்த கதை என் வாழ்க்கையில் அனுபவித்த வலி" என்று துண்டு சீட்டை நீட்டினார் இயக்குனர். வஸந்த பாலன் இனி உங்கள் வாழ்க்கையில் 'வலி' வழியாய் மாறும்.

நிஜமான கதையை இயல்பாக படம்பிடிக்கும் ஆபூர்வங்கள் சொற்ப சிலரோடு முடிந்துவிடுமோ என்றெழுந்த சமீபகால பயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இதோ நானும் இருக்கிறேன் என நம்பிக்கையூட்டும் வஸந்த பாலனை வரவேற்கலாம். உணர்ச்சி கதிர்களை வீசுகிறது இந்த 'வெயில்.'

http://www.sooriyan.com/index.php?option=c...798&Itemid=

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வெயில் படம் குறித்து எனது கருத்து.......

புதிய திரைக்கதை திரைக்கு ஆனால் அது வசந்தபாலனுக்கு நான்காண்டுகளாய்

அனுபவித்த வலி..

வாழும் போது அங்கீகரிக்காத சமுதாயம்

மாண்ட பின் தலையில் வைத்துக் கொண்டடி என்ன பயன் ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கும் தலைவருக்கும் இறுதிப் போரில் இறந்த மக்களுக்கும் வீரவணக்கங்கள்.
    • Published By: DIGITAL DESK 7  19 MAY, 2024 | 10:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என்று பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. மே மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்த தகவல்களில் கூறப்பட்டன. இந்த தகவல்களுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதிலளிக்கையில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது என கேள்வியெழுப்பியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் கூறினார். இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சட்ட விதிகளின் பிரகாரம் 2024ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட சனிக்கிழமை ஒன்றில் நடாத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஒக்டோபர் மாதத்தில் முதல் வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவில் சாதகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கின்ற நிலையில், அந்த கட்சியின் மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினர் ஜனாதிபதி ரணிலை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சந்திப்பு பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடன் இடம்பெற்ற ஒன்றாகும். மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியும் பல அரசியல் கட்சிகளுடனும்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது. அத்துடன் அநுர பிரியதர்ஷன யாப்பா தலமையிலான புதிய அரசியல் கூட்டணியும் ரணில் விக்க்கிரமசிங்கவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/183926
    • வணக்கம். 🙏 வயசானாலும், குறும்பு போகவில்லை..🌷👍😜  
    • Published By: DIGITAL DESK 7   19 MAY, 2024 | 10:49 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது. இதேவேளை, பிராந்தியத்தில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் சர்வதேச நாடுகளின் ஆய்வுக் கப்பல்களின் வருகையை கட்டுப்படுத்த உள்ளக சமுத்திரவியல் ஆய்வுக்குழுவை ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இலங்கை விஜயத்தின்போது கூடுதல் அவதானம் செலுத்தியிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் டொனல்ட் லூ, தேசிய பாதுகாப்பு ஆலோசரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க கூறுகையில், இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக விசேட உள்நாட்டு சமுத்திரவியல் ஆய்வுக்கு குழு ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு ஆய்வுக்குழுவை உருவாக்குவதன் மூலம் வேறு நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வரவேண்டிய தேவை ஏற்படாது. குறித்த சமுத்திரவியல் ஆய்வுக் குழுவை உருவாக்கும்போது ஏற்படக்கூடிய பயிற்சிகளின் அவசியம் மற்றும் இதர தேவைகளின்போது அமெரிக்காவிடம் ஒத்துழைப்பு வழங்க துணைச் செயலாளர் டொனல்ட் லூ இணக்கம் தெரிவித்தார்.   உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் இராஜதந்திர ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொள்கிறது. இலங்கைக்கான விசேட சமுத்திரவியல் ஆய்வுக்குழு காணப்படுமாயின் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாது. மறுபுறம் அந்த நாடுகளின் தேவைக்கு ஏற்ப தரவுகளையும் எம்மால் வழங்க முடியும். ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையின் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஏற்கனவே கூறியுள்ளன. உள்நாட்டு ஆய்வுக்குழு ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் இந்திய பெருங்கடல் தரவுகளை ஏனைய நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்துவதற்கான மீளாய்வுகள் இடம்பெறுகின்றன. அதே போன்று அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும்  நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கவும் அவற்றை தடுப்பதற்குமான பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது. இவை அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்க இணக்கம் தெரிவித்ததாக கூறினார். https://www.virakesari.lk/article/183930
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.