Jump to content

கிழக்கு மாகாண சபை - சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்! எம்.பௌசர்:-


Recommended Posts

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில்  ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாட்டினை தமிழ், முஸ்லிம் மக்கள் எடுத்து , நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு வேலைத்திட்டமாக இல்லாது விட்டாலும் தனித் தனியே  செயற்பட்டனர்.

இதில் முதலாவதாக தம்மை ஒடுக்குகின்ற பிரதான பொது எதிரி  சிங்கள  இன மேலாதிக்க ஆளும் குழுமம் என்பது மிக வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாக இருந்தது.அந்த சிங்கள  இன மேலாதிக்க ஆளும் குழுமத்தினை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு இரு இன மக்களின் அபிலாசைகளும் ஒரு மையப் புள்ளியில் இணைந்தன.இந்த இணைவின் விளைவாக ஒரே நேரத்தில் நம்பிக்கையுடன் கூடிய  எதிர்பார்ப்பொன்றும், அதே நேரம் அதிர்ச்சியுடன் கூடிய பிரித்தாளும் சூழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையினை மதிப்பிடுபவர்களுக்கு பல பார்வைகளும், அந்த பார்வையின் அடியாக அரசியல் நிலைப்பாடுகள் எழுவதும் தவிர்க்க முடியாதவை. தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமையை, இணைந்த வாழ்வை விரும்புவர்களுக்கும், நீண்ட காலமாக இலங்கை அரசியலில் ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை மக்களுக்கான சமத்துவ அரசியல் வாய்ப்பினைக் கோருபவர்களுக்கும் இதுவொரு நல்ல தொடக்கம் என நம்புவது தவிர்க்க முடியாததாகிறது.

தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமையை, இணைந்த வாழ்வை விரும்பாத சக்திகள்  “பொது அரசியல் அபிலாசைகள் ஒன்றாக சந்திக்கும் புள்ளியைதகர்க்கவே விரும்புவர். நிச்சயமாக   இலங்கையின் சிங்கள மைய அரசு ஒருபோதுமே இந்த இணைவின் புள்ளி தொடர்வதற்கும், இரு இனங்களுக்கும் இடையே அரசியல், சமூக ஐக்கியம் வளர்வதற்கும் வாய்ப்பளிக்காது என்பது சர்வ நிச்சயம்.

 

மிக வெளிப்படையாக சொல்லப்போனால், தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகள் இணைந்த பின்புலத்தில் தனது அதிகாரத்தினை பெற்றுக் கொண்ட மைத்திரி, ரணில் கூட்டு, அதிகாரத்தினை கைப்பற்றிய பின்னான சூழலில் இதனை அனுமதிக்காது. இலங்கையின் இன முரண்பாட்டின் அரசியலை ஆழ விளங்கிக் கொண்டோருக்கு இது இலகுவில் புரியும் உண்மையாகும்.

அதேபோல் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமையை, இணைந்த வாழ்வை விரும்பாத சக்திகள் தமிழருக்குள்ளும் முஸ்லிம்களுக்கும் இருக்கின்றனர். அவர்களுடன் இரு தரப்பினையும்  சார்ந்த அரசியல் தலைவர்களும் பிரதி நிதிகளும் உள்ளனர். இவர்கள்  மைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் போவதற்கும் தமது தனிப்பட்ட  நிலைப்பாடுகளுக்காவும் இந்த இணைவை முரண்பாடாக மாற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

 

இதன் முக்கிய ஒரு களமாகவே கிழக்கு மாகாணசபை விவகாரம் சமகாலத்தில்  மாறி இருக்கிறது. எந்த இணைவின் மாற்றம்  மைய இலங்கை அரசியலில் ஒரு சர்வாதிகார இனவாத அரசாங்கத்தினை   தூக்கி எறிந்ததோ, அதே சூழல் இலங்கை கிழக்கு மாகாணசபை விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாட்டினை, அதிகார மோதலை தோற்றுவிக்கும் களமாக விரிகிறது. இது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு ஆபத்தான சூழலை தோற்றுவிப்பதுடன் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையை நிலை நாட்டுவதற்கான பலத்தினையும் மீண்டும் சிதைத்தழிக்க முற்படுகிறது.

கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சியமைப்பது? யார் முதலமைச்சர் என்கிற அதிகார மோதல் எழுந்துள்ளது. தமிழர்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்கிற கோரிக்கையை ஒரு பிரிவினரும், முஸ்லிம்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்கிற கோரிக்கையில் இன்னொரு பிரிவினரும் தமது அரசியல், அறிக்கைப் போரில் குதித்துள்ளனர். இந்த அரசியல் பிற்போக்குவாதத்திற்கு இனவாதம் ஆகுதியாக வார்க்கப்படுகிறது. முரண்பாடுகள் கூர்மையாக்கப்படுகிறது. நேர்மறையான பார்வைக்குப் பதிலாக எதிர்மறையான பார்வை விதைக்கப்படுகிறது.

 

கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேலாக, இந்த விவகாரத்தில்  நேரடியாக சம்பந்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் மூன்றுக்கும் மேற்பட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நாடாத்தியும் அவர்களுக்குள்  ஒரு பொது இணக்கத்திற்கு வர முடியவில்லை என சொல்லப்படுகிறது.   இந்த  நிலையில் கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல காய் நகர்த்தல்கள் மறைமுகமாக நடந்து வருகிறது. இது தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கிய வாழ்வில் ஆபத்தான ஒரு கட்டத்திற்கு வழி வகுக்கலாம் என நான் அஞ்சுகிறேன்.

இந்த இக்கட்டான சூழ் நிலையில் தமிழ், முஸ்லிம் சிவில் சமூகம் இந்த விவகாரத்தில் பார்வையாளர் என்கிற நிலையத் தாண்டி பங்களிப்பாளர்களாக மாற வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது. சமகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் நோக்கிய அரசியல் அழுத்தம் அவசியமாகிறது.

* இரு கட்சிகளிடையேயும் இதுவரை பேசப்பட்ட விடயங்களை  தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முன் பகிரங்கப்படுத்துதல் வேண்டும்.

*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கோரிக்கை, நிலைப்பாடுகள் என்ன என்பதையும், முஸ்லிம் காங்கிரஸ் தனது கோரிக்கை, நிலைப்பாடுகள் என்ன என்பதையும்  பொது வெளியில் பகிரங்கப்படுத்துதல் வேண்டும்.

* தமிழ் , முஸ்லிம் சிவில் சமூகம் கூட்டாக இணைந்து இந்த விவகாரத்தில் காய்தல் உவத்தலின்றி நடு நிலையாக  உடனடித் தலையீடு செய்தல் வேண்டும்.

* அமைக்கப்படுகின்ற இந்த சிவில் சமூக பிரதி நிதிகளை இரு கட்சித் தலைமைகளும் மதிப்பதுடன்,  தமக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் அவர்களின் பங்குபற்றுதலையும்   உறுதிப்படுத்துதல் வேண்டும்.

ஏனெனில் இதன் முக்கியத்துவமானது இரு கட்சிகளுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, முழு தமிழ், முஸ்லிம் மக்களின் இணைந்த வாழ்வுடனும் அரசியல் உரிமை விகாரத்துடனும் எதிர்கால வாழ்வியலுடனும் தொடர்புபட்டது. கிழக்கு மாகாணம் தான் தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான உறவுக்கும்,முரணுக்குமுரிய பூமியாக உள்ளது. ஆகவே  அரசியல் தலைமைகளிடம் மட்டுமே மக்களின் வாழ்வை ஒப்படைக்காதீர்க

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115752/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.