கருத்துக்களம்: Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - கருத்துக்களம்

Jump to content

  • (6 Pages)
  • +
  • 1
  • 2
  • 3
  • Last »
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்

#1 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 307
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 21 October 2006 - 10:04 AM

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 1

குறுக்குவழிகள் தொடரில் தூயவன் கூறிய கருத்து (வன்பொருள் தொடர்பான உங்களின் பதிவுகளை வரவேற்கின்றோம். அதை புதிய தலைப்பில் தருவது நன்றாக இருக்கும்.) சரியென எனக்கும் படுவதால் இவ்விடயத்தை புதிய தலைப்பில் ஆரம்பிக்கின்றேன்

கம்பியூட்டர் திருத்தும் பயிற்சியில் கடந்த பல மாதங்களாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதனால் பலர் பயனடைவார்கள் என்பதும் குறுக்குவழிகள் தொடருக்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என்பதும் எனது நம்பிக்கை. நான் திருத்துவதில் நிபுணன் அல்ல. சிலவேளைகளில் தவறாக ஏதாவது சொல்லக்கூடும். கோபிக்கவேண்டாம். திருத்திக்கொள்வோம்.

எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் வைக்கவேண்டாம்

பலர் தெரியாமல் விடும் தவறு என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க்கில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் Operating System, Applications, Softwares,Datas என எல்லாவற்றையும் சேமித்து வைப்பதுதான். ஹாட் டிஸ்க் பழுதடையும்போது அல்லது வைரஸ் தொற்றி Rebooting செய்யமுடியாதபோது, Datas ஐ மீட்க கஷ்ட பட்டு அல்லலுற்று பலர் தோல்வி அடைவதை கண்டுள்ளேன். இதற்கு நிவர்த்தி என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க் இருந்தால் இரு பாட்டிஷனாவது செய்யுங்கள், இரு ஹாட் டிஸ்க் இருந்தால் முதலாவதில் Operating System, Applications, Softwares ஐயும் அடுத்ததில்,Datas ஐயும் சேமியுங்கள். ஒரு சிலர் பல நூறு பாட்டுக்களை டவுண்லோட்பண்ணி ஒரே பாட்டிஷனில் சேமித்து பின் எல்லாவற்றையும் ஒரேயடியாக தொலைத்தது எனக்கு தெரியும். O/S மும் applications ம் நிறுவ அதிக பட்சம் 5 GB போதுமானது.. ஆனால் ஒரு DVD Drive வைத்திருப்பவர்களுக்கு மேலதிகமாக 10 GB இடம் சினிமாப்படம் கொப்பி பண்ணவேண்டி ஏற்படின் தேவைப்படும். 15 GB தவிர மிகுதியை அடுத்த பாட்டிஷனுக்கு ஒதுக்கலாம். CD Drive மாத்திரம் வைத்திருப்பவர்களுக்கு 10 GB இடம் முதலாவது பாட்டிஷனுக்கு போதுமானது

இரு ஹாட் டிஸ்க் வைத்திருப்பதானால் முதலாவதை 20 GB ஆகவும் அடுத்ததை (டேட்டாவிற்கு) உங்கள் சேமிப்பைப பொறுத்து 20 லிருந்து 200 GB வரை வைத்துக்கொள்ளலாம். தற்போது 1000 GB ஹாட் டிஸ்க்கும் பாவனைக்கு வந்துள்ளது.

சரி என்னிடம் 40 அல்லது 80 GB ஹாட் டிஸ்க் உள்ளது. அதில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் எல்லாவற்றையும் நிறுவி கடைக்காரர் தந்துவிட்டார்களே! என்ன செய்வது என்று சொல்லப்போகிறீர்களா? சரி கடைக்காரர்கள் அதைத்தான் செய்வார்கள். கூடை கவிழ்ந்து முட்டைகளெல்லாம் ஒரேயடியாக உடைந்தால் அடிக்கடி கடைக்கு ஓடுவீர்கள் அல்லவா! அதனால்தான். இப்படியான சந்தர்ப்பத்தில் இரண்டு வழிகள் தான் உள்ளன. Reformat பண்ணி பின் இரண்டு பாட்டிஸன்களை உண்டாக்குவது அல்லது Partition Magic என்னும் Software ஐ டவுண்லோட் பண்ணி அதன் துணைகொண்டு நிறுவப்பட்டவை யாவும் அப்படியே இருக்க இன்னொரு பாட்டிஷனை உருவாக்குவது. இந்த இரண்டும் செய்ய முடியாவிடின் Datas ஐ அடிக்கடி backup செய்யுங்கள்

இந்த விடயத்தில் கண்டிப்பாக நீங்கள் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது


Software களும் அதற்கு தேவைப்படும் இட அளவுகளும் (அண்ணளவாக)

XP with SP2 = 615 MB
MS Office 2000 = 375 MB
McAFee Anti-Virus 2006 = 105 MB
Spyware = 100 MB
Nero = 75 MB
Adobe Reader = 65 MB
Adobe Photoshop 7.0 = 142 MB
Java VM = 150 MB
__________
1627 MB
0

Advert

#2 User is offline   Vasampu 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 4,501
  • Joined: 16-October 04
  • Gender:Male
  • Location:சுவிஸ்

Posted 21 October 2006 - 10:41 AM

நனறி தேவகுரு உங்கள் அருமையான கருத்துக்களுக்கு. தொடர்ந்து தாருங்கள்.

மேலும் உங்களிடம் ஒரு கேள்வி:

ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே??

நான் Partition Magic 8 பாவித்தே பிரித்து வைத்துள்ளேன்.

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

Posted Image
என்றென்றும் அன்புடன்
வசம்பு
0

#3 User is offline   வியாசன் 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,399
  • Joined: 03-January 05

Posted 21 October 2006 - 11:52 AM

இரண்டாவது Harddisk ஐ பெரும்பாலும் Extern usb ஆக வைத்திருத்தல் பெரிதும் உதவியாக இருக்கும். அவற்றிலிருந்து வேறு கணனிகளுக்கும் வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
எனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் OS வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)
0

#4 User is offline   hari 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 3,200
  • Joined: 26-September 04
  • Location:தமிழீழம்
  • Interests:internet,

Posted 21 October 2006 - 02:13 PM

நன்றி தேவகுரு!
ஹரி

www.mytamilmp3.com www.kelvi.net
0

#5 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 307
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 22 October 2006 - 04:41 PM

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 1 (சந்தேக நிவர்த்தி)

Vasampu வின் கேள்வி : ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே?

பதில்:ஒரு ஹாட்டிஸ்க்கின் தனி பாட்டிஷனில் எல்லாவற்றையும் நிறுவி வைத்திருந்தால் reformat செய்யும்போது அழிந்து விடும் என்பது உண்மைதான் .முக்கியமான Datas இருப்பின் அவற்றை Backup எடுத்துவிட்டு பின் reformat செய்து இரு பாட்டிஷன்களாக பிரிக்கவேண்டும். பின்பு Datas ஐ restore செய்யலாம்

வியாசனின் சந்தேகம்: எனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் O/S வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)

[b]பதில்:
எந்த ஒரு O/S மும் நிறுவப்படும்போது தானாக பாட்டிஷனை உருவாக்காது. ஆனால் XP & Win 2000 ஐ பொறுத்தவரை ஹாட்டிஸ்க்கின் விபரங்களை தந்து, என்ன செய்யவேண்டும் என கேட்டு (எமது வேலையை இலேசாக்குகிறது) தானே அதன்படி செய்யும். ஆனால் Win 98 ல் format & Partioning வேலையை நாம் அதிகம் manual ஆகவே செய்யவேண்டும். ஒரு பாட்டிஷனில் இரண்டு O/S களையும் நிறுவமுடியும் என்பதும் கவனிக்கத்தக்கது (இரண்டு வெவ்வேறு போல்டர்களில்). ஆனால் இது புத்திசாலிதனமானது அல்ல. ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் வசிப்பது போன்று: உரசல்கள் அடிக்கடி வரலாம்.
இரண்டு O/S களை நிறுவும்போது முதலில் வெளிவந்ததை முதலிலும் அடுத்து வந்ததை பின்புமாக நிறுவவேண்டும். உ.ம்: Win 2000 முதலிலும் XP ஐ பின்புமாக நிறுவவேண்டும். அப்போதுதான் கம்பியூட்டர் பூட் பண்ணும்போது எந்த O/S ஆரம்பிப்பது என்று கேட்டு தெரிவு செய்யும்படி இரண்டு O/S ஐயும் பட்டியலிட்டு தரும்.
0

#6 User is offline   சின்னப்பு 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 4,666
  • Joined: 20-November 04
  • Gender:Male
  • Location:kundus afghanistan

Posted 22 October 2006 - 04:59 PM

Vasampu said:

நனறி தேவகுரு உங்கள் அருமையான கருத்துக்களுக்கு. தொடர்ந்து தாருங்கள்.

மேலும் உங்களிடம் ஒரு கேள்வி:

ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே??

நான் Partition Magic 8 பாவித்தே பிரித்து வைத்துள்ளேன்.


நானும் உந்த Partition Magic 8 ஐ பாவித்து பிரித்து வைத்தேன் அதில் சி முக்கிய படங்களைவேறு போட்டு வைத்தேன் ஒரு முறை போர்மற் செய்யும் போது
அது தானாகவே எல்லாவற்றையும் அளித்து விட்டு பின்வரும் படத்தில் உள்ளது போல செய்து விட்டது
மிகவும் முக்கியமான படங்கள் அளிந்து விட்டன...
:cry: :cry: :cry: :cry:
எப்பொழுது நான் முழுவதுமா போர்மட் செய்தாலும் அது தானாக D இல இப்படி வந்து விடும்

அதனால் இப்ப extern hard disk வாங்கி எல்லாத்தையும் பதியிறன்
:evil: :evil: :evil: :evil: :evil:
கள்ளடிப்போர் வாழ்வர் மற்றதெல்லாம் அடிப்போர் குடலழிந்து சாவர்
0

#7 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 307
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 26 October 2006 - 05:55 PM

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 2

பையன் ஒருவன் தனது நோட்புக் கம்பியூட்டரை எமது நிலையத்திற்கு கொண்டுவந்தான். தான் வேலை செய்துகொண்டிருக்கும்போது கம்பியூட்டரின் காட்சி (Display) 90 பாகை வலது புறமாக திரும்பி கிடக்கை நிலையில் (Horizontal) உள்ளது. முயன்று பார்த்தும் தன்னால் சீர்செய்ய முடியவில்லை என்றான்.

கம்பியூட்டரை இயக்கி டெஸ்க்ரொப் ஐ பார்த்தோம். My Computer, My Document, Recycle Pin ஆகிய எல்லாம் வரிசையில் மேலிருந்து கீழ் என்பதற்கு பதில் வலமிருந்து இடமாக கிடந்தன. Task Bar நெடும் குத்தாக இடதுகரை ஓரமாக கிடந்த்து. Start Button இடதுகை மேல்மூலையில் காணப்பட்டது,

சரி இப்போ என்ன வழி? நோட்புக் கணினி என்பதால் Graphic Cards ஏதும் கிடையாது. கிடந்தாலாவது அதன் Properties க்கு போய் இடதுபுறம் rotate பண்ணுவதற்கு ஏதாவது option உண்டாவென பார்க்கலாம். Video வும் இணைந்த Intetgrated Motherboard தான் இக்கணினிகளில் உண்டு. இருந்தாலும் அதன் Display Properties க்கு போய் பார்த்தோம். உதவக்கூடியமாதிரி எதுவும் காணப்படவில்லை. Help Topics இலிருந்தும் ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

Display Turned Sideways என Google லில் அடித்து தேடினோம். விடை உள்ள சில வெப்தளங்களை அது தேடித்தந்தது. அதில் ஒன்றில் விடை கிடைத்தது. அதன்படி CTRL + ALT + UP-ARROW ஆகிய மூன்றையும் ஒன்றுசேர அழுத்தியவுடன் கிடக்கையில் கிடந்த காட்சி நிமிர்ந்தெழுந்து நெடுங்குத்தாக நின்றது, எமது பிரச்சனையும் தீர்ந்தது.

மேலும் சில தகவல்கள்:

CTRL +ALT + UP-Arrow = இடதுபுறமாக 90 பாகை திரும்பும்
CTRL +ALT + Right- Arrow = வலதுபுறமாக 90 பாகை திரும்பும்
CTRL +ALT + Down-Arrow = வலதுபுறமாக 180 பாகை திரும்பும்
CTRL +ALT + LEFT-Arrow = வலதுபுறமாக 270 பாகை திரும்பும்

வீட்டிலே கிடந்த இன்னொரு கணினியில் Trial பார்ப்போமென எண்ணி இந்த Key combination களை அடித்து கிடக்கைகு Display ஐ .வீழ்த்த முயன்றேன். எந்த கீ கம்பினேஷன்களை அடித்தும் எந்த பக்கமும் திரும்பமாட்டேன் என்றது. இந்த கணினியில் Sticky Keys enable பண்ணுபடாமல் இருக்கலாம்.

நோட்புக்கணினியில் Sticky Keys enable பண்ணுபட்டிருக்கலாம். அதனால்தான் பையன் கணினியை பாவிக்கும்போது Sticky Keys களை தெரியாமல தவறுதலாக அடித்துவிட்டிருக்கின்றான். Sticky Keys என்பது CTRL, ALT, SHIFT என்பதாகும்.
0

#8 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,688
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 26 October 2006 - 07:59 PM

தேவகுரு சார் எனக்கு நிண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இதில் எது சரி கணிணி, கணினி,
கணனி
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
0

#9 User is offline   jeya 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 129
  • Joined: 14-August 03
  • Location:உலகின் முதல் மூலையில்

Posted 26 October 2006 - 09:09 PM

தேவகுரு மிகவும் பல நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.
நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம் ????
"" தொலைந்த பொழுது தொலைந்தவையாக
நாளைய பொழுது நமக்காக "" .....
0

#10 User is offline   jeya 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 129
  • Joined: 14-August 03
  • Location:உலகின் முதல் மூலையில்

Posted 26 October 2006 - 09:16 PM

யாரிடமாவது Partition Magic 8 இருந்தால் அறியத்தரமுடியுமா.........அல்லது எங்கு போய் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறுங்களேன்...
"" தொலைந்த பொழுது தொலைந்தவையாக
நாளைய பொழுது நமக்காக "" .....
0

#11 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 307
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 26 October 2006 - 11:49 PM

Jeya அவர்கட்கு!

Partition Resizer என்று ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருளை கீழ்காணும் பிரபல்யமான நம்பிக்கையான தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணலாம். விற்பனையாகும் Partition Magic க்கிற்கு மாற்றீடு. பாவித்த சிலர் நன்று என கூறினார்கள். கீழ்க்காணும் தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணலாம்.

http://www.majorgeek...izer_d4701.html
0

#12 User is offline   Rasikai 

  • இரசிப்பவள்
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 6,047
  • Joined: 22-July 05
  • Location:Canada

Posted 27 October 2006 - 12:36 AM

வணக்கம் தேவகுரு
கனநாட்களுக்குப் பின் களத்தில் கண்டதில் மகழ்ச்சி உங்கள் தகவலுக்கும் நன்றி.
அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடா முயற்சியினால்தான்.

நட்புடன்
இரசிகை

Posted Image
0

#13 User is offline   jeya 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 129
  • Joined: 14-August 03
  • Location:உலகின் முதல் மூலையில்

Posted 27 October 2006 - 09:26 AM

நன்றி தேவகுரு ...(Partition Resizer)
நான் முதலாவதாக கேட்ட கேள்விக்கு பதில் என்னும் தரவில்லை முடிந்தால் முயற்சித்துப் பாருங்களேன்.....
"" தொலைந்த பொழுது தொலைந்தவையாக
நாளைய பொழுது நமக்காக "" .....
0

#14 User is offline   வியாசன் 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,399
  • Joined: 03-January 05

Posted 27 October 2006 - 11:55 AM

தேவகுரு அவர்களே raid பற்றி கொஞ்சம் சொல்லலாமே புதிது புதிதாக Raid ல் வந்தகொண்டிருக்கின்றது. கொஞ்சம் தெரியும் நீங்கள் கணனி திருத்துதல் சம்மந்தப்பட்ட தொழில் புரிவதால் கேட்கிறேன்.
0

#15 User is offline   sagevan 

  • ரசிகன்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 3,275
  • Joined: 06-March 06
  • Gender:Male
  • Location:swiss
  • Interests:reeding and music

Posted 27 October 2006 - 01:26 PM

வணக்கம் தேவகுரு ஜயா. நீண்ட நாட்களின் பின் கன்டதில் மகிழச்சி. உங்கள் தகவலுக்கு நன்றி.
0

#16 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 307
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 27 October 2006 - 01:41 PM

கறுப்பி அவர்கட்கு!

கணிணி அல்லது கணினி என்பதில் எது சரி என்பதில் சந்தேகம் உள்ளது என்கிறீர்கள்.

வெப்பமானி, பாரமானி என்பது சரியென ஏற்றுக்கொண்டால், னி என்ற எழுத்தில் இயந்திரங்களின் பெயர்கள் முடிவது சரி என ஏற்றுக்கொள்ளலாம்.

அப்படி பார்க்கும்பொழுது கணித்தல் வேலையை செய்யும் இயந்திரத்தின் பெயர் கணினி ஆகத்தான் இருக்கவேண்டும்.
கணினி என்பதுதான் சரி என நான் கூறுவேன்
0

#17 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,688
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 27 October 2006 - 08:37 PM

உடன் அபிப்பிராயம் கூறிய தேவகுரு சாருக்கு நன்றி.
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
0

#18 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 307
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 28 October 2006 - 01:11 PM

Jeya அவர்கட்கு!

Quote :(நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம்?)

விடை :-நீங்கள் கேட்ட முதலாவது கேள்விக்கு நான் இன்னமும் பதில் தரவில்லை என ஆதங்கப்பட்டீர்கள். சரி இப்போ பார்ப்போம்.

கணினி முன் உட்கார்ந்து ஒரு செயலை ஆரம்பித்தவுடன், மூளைக்கு தூண்டுதல் திரையில் Dialog Box களை பார்ப்பதனால் கிடைக்கிறது, கணினிக்கு தூர இருக்கும்போது Prompt கிடைப்பதில்லையாததினால் விடை கூறுவது கடினம். அதனால்தான் பலர் உங்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை. கணினியை பொறுத்தவரை அதன் பாகங்களெல்லாம் ஒரு கைப்பந்தாட்டக்குழுவின் அங்கத்தவர்கள் போல. ஒருவர் தவறுவிட்டாலும் அதன் விளைவு முழு செயற்பாட்டையும் பாதிக்கும். உ.ம்: Keyboard ல் ஒரு சிறு பிழை இருந்தாலே Booting இடை நடுவில் ஒரே காட்சியை காட்டியபடி freeze ஆகி நிற்கும். எனவே பிழை எங்குள்ளது என கண்டுபிப்பற்கு, ஒவ்வொரு பாகமாக கழற்றி வேறு நம்பிக்கையான பாகம் போட்டுத்தான் பரீட்சிக்கவேண்டும். இப்படித்தான் பிழை திருத்துபவர்கள் செய்வார்கள்.

நீங்கள் உடனே செய்யவேண்டியது உங்களது Lap Top கணினியின் ஹாட் டிஸ்க்கை கழற்றி இன்னொரு Desk Top PC யில் இணைத்து. உங்கள் ஹாட் டிஸ்க் அந்த Desk Top PC யால் கண்டுகொள்ளப்பட்டால் உங்கள் Data களை மீட்டு ஒரு CD யில் பதிந்துகொள்வதுதான். (உங்கள் ஹாட் டிஸ்கை Desk Top PC உடன் இணைப்பதற்கு விசேஷ சாதனமொன்று உண்டு). அதன் பின்னர் தான் Repair பற்றியோசிக்கவேணும்.
உங்கள் ஹாட் டிஸ்க் Desk Top PC ஆல் கண்டுகொள்ளப்பட்டால் பெரும்பாலும் அதில் பிழை இருக்காது. Datas மீட்கப்பட்டபின் O/S த்தை reinstall பண்ணி பார்க்கவும். Insall பண்ணுப்பட்டால் தப்பினீகள்.

சரிவராத பட்சத்தில் இன்னொரு நல்ல Memory stick ஐ மாற்றி போட்டு பரீட்சியுங்கள். Memory யிலும் பிழையில்லையானல், Motherboard தான் குற்றவாளி. எதற்கும் warranty இருந்தால் அது தந்தவர்களைக்கொண்டு திருத்திவிப்பது சிறந்தது. அல்லது Lap Top நிபுணர் ஒருவரிடம் காட்டிப்பாருங்கள். Desk Top PC திருத்துபவர்கள் எல்லாரும் Lap Top ஐ திருத்தமாட்டார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்,

Desk Top PC யில் பிழை திருத்துவது இலேசு. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தனித்தனி பாகங்கள் உண்டு. Lap Top ல் எல்லா செயற்பாடுகளும் இணைக்கப்பட்ட Integrated Motherboard ஐதான் காணலாம். எனவே செலவு அதிகம்.
0

#19 User is offline   Sabesh 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 911
  • Joined: 25-August 04
  • Gender:Male
  • Location:Canada

Posted 29 October 2006 - 03:19 AM

E.Thevaguru said:

Jeya அவர்கட்கு!

Quote :(நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம்?)

விடை :-நீங்கள் கேட்ட முதலாவது கேள்விக்கு நான் இன்னமும் பதில் தரவில்லை என ஆதங்கப்பட்டீர்கள். சரி இப்போ பார்ப்போம்.

கணினி முன் உட்கார்ந்து ஒரு செயலை ஆரம்பித்தவுடன், மூளைக்கு தூண்டுதல் திரையில் Dialog Box களை பார்ப்பதனால் கிடைக்கிறது, கணினிக்கு தூர இருக்கும்போது Prompt கிடைப்பதில்லையாததினால் விடை கூறுவது கடினம். அதனால்தான் பலர் உங்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை. கணினியை பொறுத்தவரை அதன் பாகங்களெல்லாம் ஒரு கைப்பந்தாட்டக்குழுவின் அங்கத்தவர்கள் போல. ஒருவர் தவறுவிட்டாலும் அதன் விளைவு முழு செயற்பாட்டையும் பாதிக்கும். உ.ம்: Keyboard ல் ஒரு சிறு பிழை இருந்தாலே Booting இடை நடுவில் ஒரே காட்சியை காட்டியபடி freeze ஆகி நிற்கும். எனவே பிழை எங்குள்ளது என கண்டுபிப்பற்கு, ஒவ்வொரு பாகமாக கழற்றி வேறு நம்பிக்கையான பாகம் போட்டுத்தான் பரீட்சிக்கவேண்டும். இப்படித்தான் பிழை திருத்துபவர்கள் செய்வார்கள்.

நீங்கள் உடனே செய்யவேண்டியது உங்களது Lap Top கணினியின் ஹாட் டிஸ்க்கை கழற்றி இன்னொரு Desk Top PC யில் இணைத்து. உங்கள் ஹாட் டிஸ்க் அந்த Desk Top PC யால் கண்டுகொள்ளப்பட்டால் உங்கள் Data களை மீட்டு ஒரு CD யில் பதிந்துகொள்வதுதான். (உங்கள் ஹாட் டிஸ்கை Desk Top PC உடன் இணைப்பதற்கு விசேஷ சாதனமொன்று உண்டு). அதன் பின்னர் தான் Repair பற்றியோசிக்கவேணும்.
உங்கள் ஹாட் டிஸ்க் Desk Top PC ஆல் கண்டுகொள்ளப்பட்டால் பெரும்பாலும் அதில் பிழை இருக்காது. Datas மீட்கப்பட்டபின் O/S த்தை reinstall பண்ணி பார்க்கவும். Insall பண்ணுப்பட்டால் தப்பினீகள்.

சரிவராத பட்சத்தில் இன்னொரு நல்ல Memory stick ஐ மாற்றி போட்டு பரீட்சியுங்கள். Memory யிலும் பிழையில்லையானல், Motherboard தான் குற்றவாளி. எதற்கும் warranty இருந்தால் அது தந்தவர்களைக்கொண்டு திருத்திவிப்பது சிறந்தது. அல்லது Lap Top நிபுணர் ஒருவரிடம் காட்டிப்பாருங்கள். Desk Top PC திருத்துபவர்கள் எல்லாரும் Lap Top ஐ திருத்தமாட்டார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்,

Desk Top PC யில் பிழை திருத்துவது இலேசு. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தனித்தனி பாகங்கள் உண்டு. Lap Top ல் எல்லா செயற்பாடுகளும் இணைக்கப்பட்ட Integrated Motherboard ஐதான் காணலாம். எனவே செலவு அதிகம்.


Ooperating system (OS) தொடக்கம் வந்தால், நீங்கள் safe mode (you have to hit f8 key when the system try to boot - right after the pre boot message) பாவிச்சு உட்போகப் பார்க்கலாம். அப்பிடி போனால் data backup செய்யலாம். அது முடியவில்லையானால், அனேகமாக corrupted OS எண்டுதான் நினைக்கிறேன். OS CD போட்டு OS repair பண்ணிப் பார்க்கலாம். அதுவும் சரிவரவில்லையெண்டால் தேவகுரு சொன்ன மாதிரி desktop PC பயன் படுத்தி data back up செய்திட்டு மீண்டும் OS reinstall பண்ணிப்பாருங்கோ.
Motherboard (MB) பிழையெண்டால் post boot (won't try to launch windows) பண்ணாது, அதனால் MB பிழையாக இருக்க சந்தர்ப்பம் குறைவு.
Hard drive (HD) பழுதொண்டால் boot பண்ண முயற்சிக்கும் போது click சத்தம் வரும் (check if you hear a grinding sound).
அப்படி இல்லாவிடில், HD யும் Memory card யும் கழட்டிப்போட்டு திரும்பப் போட்டுப் பாருங்கோ (As I said, try to reseat the hard drive and memory card, if you have more than one memory card, try one by one).

.
0

#20 User is offline   jeya 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 129
  • Joined: 14-August 03
  • Location:உலகின் முதல் மூலையில்

Posted 30 October 2006 - 11:00 AM

நன்றி தேவகுரு,சபேஸ் ....
சபேஸ் நீங்கள் கூறியது போல ..........f8 key when the system try to boot - right after the pre boot messageசேவ் மொட் அடித்து பார்த்து விட்டேன்... அடுத்தது சிஸ்ரம் சீடி போட்டு திருத்தி பார்க்க போறன்.... என்ர கேள்வி உங்கள் இருவரிடமும் கேட்கிறன் OS repair பண்ணிப் பார்க்கும் போது Hard drive இருக்கும் ஒன்று கூட அழியாதா?? ஏனென்றால் அதில் மிக முக்கிய படங்கள், தரவுகள் உள்ளது...
"" தொலைந்த பொழுது தொலைந்தவையாக
நாளைய பொழுது நமக்காக "" .....
0

Share this topic:


  • (6 Pages)
  • +
  • 1
  • 2
  • 3
  • Last »
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]