Jump to content

மஹிந்தவிடம் காணியுரிமை கேட்க முடியாதவர்கள்களே மக்களிடம் அவருக்காக வாக்கு கேட்கிறார்கள்


Recommended Posts

manno36c5.jpg

 

 

மலைநாட்டில் காணி - வீட்டு உரிமையையும், நுவரேலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபை ஆட்சியுரிமையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் பேரம் பேசி கேட்டு வாங்கி கொடுக்க முடியாதவர்கள்தான், இந்த முறையும் அவருக்காக மலைநாட்டு மக்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள். இதென்ன மலைநாட்டு கூத்து? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடத்திய, மலையக சிந்தனையாளர் எம். வாமதேவனின் "மலையகம்-சமத்துவ அபிவிருத்தியை நோக்கி" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கருத்துரை வழங்கிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, மலையக மண் பெற்றெடுத்துள்ள அறிவுஜீவி வாமதேவன். அவர் ஆய்வாளர். எழுத்தாளர். அத்துடன் சமூக பற்றாளர். இவர்கள் போன்றவர்களால்தான் மலையக எதிர்காலம் பற்றி கொஞ்சமாவது நம்பிக்கை ஒளி தெரிகிறது. அவர் தனது இந்நூலில் "சமர்ப்பணம் - என் அம்மாவுக்கு" என்று குறிப்பட்டுள்ளார்.
 
அவர் தனது அறிவையும், ஆற்றலையும் சமூக உணர்வுடன் தன் தாய்க்கு மட்டுமல்ல, தன் தாய் மண்ணுக்கு, தன் தாய் இனத்துக்கு, தன் தாய் மொழிக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என எனக்கு தோன்றுகிறது. அபிவிருத்தி என்றால் அது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரம் என்ற அனைத்து துறைகளிலும் சமச்சீராக நடைபெற வேண்டும் என்று கூறுகிறார். அதுபோல, பல இனங்கள் வாழும் நாட்டிலே அபிவிருத்தி என்பது எல்லா இனப்பிரிவுகளுக்கும் சமத்துவமாக கிடைக்க வேண்டும் என்றும், அதுதான் சமத்துவ அபிவிருத்தி என்றும் கூறுகிறார். இந்த நாட்டிலே மலையக தமிழருக்கு சமத்துவ அபிவிருத்தி கிடைப்பதில்லை.
 
இந்த நாடு ஒரு தீவு. இந்த தீவுக்குள்ளே இன்னொரு தனித்தீவாக மலையகம் திகழுகிறது. இந்த நாட்டின் ஏனைய உயர் அபிவிருத்திகள் மலையகத்தை அடையாமல், அது தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் ஏழாயிரம் (7,000) முதல் பத்தாயிரம் (10,000) பேருக்கு ஒரு பிரதேச சபை, பிரதேச செயலகம் என்று இருக்க, நுவரேலியாவில் மாத்திரம், அது ஏன் 140, 000 பேருக்கு ஒரு பிரதேச சபை, பிரதேச செயலகம் என்று இருக்கின்றது என்ற கேள்வியை வாமதேவன் எழுப்பியுள்ளார்.
 
அம்பகமுவை, நுவரேலியா ஆகிய இரண்டு நுவரேலியா மாவட்ட பிரதேச சபைகள்தான், பிரதேச செயலகங்கள்தான் இந்தநாட்டிலேயே மிகப்பெரிய பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள். ஒவ்வொன்றிலும் 150,000 பேர் வாழ்கிறார்கள். பொகவந்தலாவையில் இருந்து கினிகத்தேனை வரை, அம்பகமுவை பிரதேச சபை பரந்து விரிந்து இருக்கிறது. அதேபோல், ஹட்டனுக்கு மேலே இருந்து கந்தபொல எல்லை வரை நுவரேலியா பிரதேச சபை பரந்து விரிந்து இருக்கிறது.
 
ஏன் இந்த பாரபட்சம்? இவற்றை பிரித்து ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் ஆறு பிரதேச சபைகளை உருவாக்கி தரும்படி நீண்ட காலமாக மலையகம் கோரி வருகிறது. அதன்மூலம் வாமதேவன் சொல்வது போல பிரதிநிதித்துவ குறைப்பாட்டை நீக்குங்கள் என்கிறோம்.
 
ஆனால், ஒன்றும் நடக்க வில்லை. இதோ, அதோ என்கிறார்கள். வரும், ஆனால் வாராது என்பது போல் அது இதுவரையில் நடைபெறவில்லை. தமிழனுக்கு அங்கே மென்மேலும் பிரதேச சபைகளும், அவற்றில் மந்திரிகளும், அதன்மூலம் ஆட்சியுரிமையும் கிடைக்கக்கூடாது என பேரினவாதம் நினைக்கின்றது. அதுதான் உண்மை.
 
அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் பகுதிகளை சேர்த்து ஒரு கடலோர நிர்வாக அலகு கேட்கிறது. அதுபற்றிய சரி, பிழை எனக்கு தெரியாது. ஆனால், அதையும் பேரினவாதம் மறுக்கிறது.
 
வடக்கு, கிழக்கு மகாணங்களை சேர்த்து தரும்படி அங்கே தமிழர்கள் கேட்கிறார்கள். அதையும் பேரினவாதம் மறுக்கிறது. ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் சேர்த்து கேட்டாலும் இல்லை. மலையகத்தில் இருப்பதை பிரித்து கேட்டாலும் இல்லை. இதுதான் இந்நாட்டில் இன்று தமிழ் பேசும் மக்களின் நிலைமை. வடக்கில், கிழக்கில் தமது நிலங்களை கூட்டிணைத்து தனி நிர்வாக அலகு கோருவதைதானே மறுக்கிறீர்கள்.
 
நாங்கள் இங்கே மலையக தமிழர்களின் மிகப்பெரிய பிரதேச சபைகளை இன்னமும் சிறிய அலகுகளாக பிரித்துத்தானே கேட்கிறோம். அதுவும் இந்த நாட்டிலே மற்ற இடங்களில் 10,000 பேருக்கு ஒன்று என இருக்கின்றனவே. அதைதானே கேட்கிறோம். அதையேன் தர மறுக்கிறீர்கள் என ஆளுவோரிடம் தட்டி கேட்க இங்கே மலையகத்தில் எவருக்கும் திராணியில்லை.
 
அதுபோல் மஹிந்த சிந்தனையிலும், தேர்தல் கால வாக்குறுதிகளிலும், வரவு-செலவு திட்ட உரையிலும் சொல்லப்பட்ட வீட்டு உரிமையையும், தரிசு நில காணி பகிர்ந்து அளிப்பதையும் ஏன் தர மறுக்கிறீர்கள் என ஆளுவோரிடம் தட்டி கேட்கவும் இங்கே மலையகத்தில் எவருக்கும் திராணியில்லை. இவற்றையெல்லாம் தர்க்கரீதியாக எடுத்து கூற அறிவார்ந்த சிந்தனையும் இல்லை. தெரிந்தது எல்லாம் மஹிந்த சிந்தனைதான். அங்கே இந்த காணி, வீட்டு உரிமைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. அதையும் படித்து அறிவதில்லை. இந்த இலட்சணத்தில், ஆளுவோருக்கு மீண்டும், மீண்டும் வாக்கு கோரி மலைநாட்டு மக்களிடம் வந்து வாக்கு கேட்க மட்டும் தெம்பு, திராணி, எல்லாம் இருக்கிறது. இதென்ன கூத்து?
 
அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அங்கேயே இருங்கள். அனுபவியுங்கள். கொஞ்சம் மக்களையும் பாருங்கள். அநீதிகளை சுட்டிகாட்டினால் என்னை பார்த்து அறிக்கை அரசியல் செய்கிறார் என்று குற்றஞ்சாட்டி தப்ப முயல்கிறீர்கள். இது அறிக்கை அரசியல் இல்லை. அறிவு அரசியல். உண்மை அரசியல். எத்துனை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நான் இந்த உண்மைகளை மூடி மறைக்க விடாமல் தடுத்து நின்று நான் எடுத்து கூறுகிறேன் என்பது எனக்குதான் தெரியும். நான் உண்மைகளை கூற வேண்டும் என இந்த நாட்டின் நாலாபுறமும் வாழும் தமிழ் பேசும் மக்கள் விரும்புகிறார்கள்.- என்றார்
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.