Jump to content

எதிரணியின் புதிய ஆட்சியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள்: சஜித்

Recommended Posts

எதிரணியின் புதிய ஆட்சியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள்: சஜித்

sajith_CI.jpg

எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒரு போதும் நிறைவேறப் போவதில்லையென்பதை ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவராக உறுதியளிக்கின்றேன் என சஜித் பிரேமதாஸ எம்.பி. தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான நிதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
 
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. அவ்வாறு வெற்றி பெற்றதன் பின்னர் நாட்டையோ அரசாங்கத்தையோ நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம். 
 
எதிரணி வெற்றி பெற்றவுடன் மீண்டும் சதி செய்து தனிநாட்டை உருவாக்கிக்கொள்ள முடியுமென்ற சர்வதேச புலிகள் கனவு காண்பார்களாயின் அது ஒரு போதும் நிறைவேறாது.
 
அது மட்டுமல்ல எதிரணி ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் அது தலைவர் மற்றும் படையினர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்ற பிரசாரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நடைபெறவிருப்பது தேசிய தேர்தலொன்றே தவிர சர்வதேச தேர்தலொன்றல்ல. அதற்கும் சர்வதேச நீதிமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
 
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெறும் போது நாட்டையோ  அரசை நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ நாம் ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.
 
நாட்டை விற்கும் கூட்டம் நாங்கள் அல்ல எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவதானால் அரச தலைவர்களை படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்ற கனவை  சர்வதேச புலிகள் காணலாம்.
 
நாம் ஒரு போதும் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டோம். அரச மற்றும் தேசிய தலைவர்களை காட்டிக் கொடுக்கமாட்டோம்.
 
எதிரணியின் பிரதான கட்சியான ஐ.தே. கட்சியின் பிரதித்தலைவர் என்ற ரீதியில் இதை நான் உறுதிபட  தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் போடு. சஜித்தா கொக்கா என்றானாம்.

யார் வந்தாலும் ஆப்படிப்போம் என்றால் எப்படி ?

அதுசரி, கூட்டமைப்பு இப்போது என்ன செய்யப்போகிறது ? சர்வதேச விசாரணையுமில்லை, ராணுவத்தையும் தலைவர்களையும் காட்டிக் கொடுக்கவும் மாட்டோம் என்றால் யாரைத்தான் ஆதரிப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரணியின் புதிய ஆட்சியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள்: சஜித்

sajith_CI.jpg

எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒரு போதும் நிறைவேறப் போவதில்லையென்பதை ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவராக உறுதியளிக்கின்றேன் என சஜித் பிரேமதாஸ எம்.பி. தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான நிதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
 
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. அவ்வாறு வெற்றி பெற்றதன் பின்னர் நாட்டையோ அரசாங்கத்தையோ நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம். 
 
எதிரணி வெற்றி பெற்றவுடன் மீண்டும் சதி செய்து தனிநாட்டை உருவாக்கிக்கொள்ள முடியுமென்ற சர்வதேச புலிகள் கனவு காண்பார்களாயின் அது ஒரு போதும் நிறைவேறாது.
 
அது மட்டுமல்ல எதிரணி ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் அது தலைவர் மற்றும் படையினர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்ற பிரசாரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நடைபெறவிருப்பது தேசிய தேர்தலொன்றே தவிர சர்வதேச தேர்தலொன்றல்ல. அதற்கும் சர்வதேச நீதிமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
 
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெறும் போது நாட்டையோ  அரசை நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ நாம் ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.
 
நாட்டை விற்கும் கூட்டம் நாங்கள் அல்ல எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவதானால் அரச தலைவர்களை படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்ற கனவை  சர்வதேச புலிகள் காணலாம்.
 
நாம் ஒரு போதும் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டோம். அரச மற்றும் தேசிய தலைவர்களை காட்டிக் கொடுக்கமாட்டோம்.
 
எதிரணியின் பிரதான கட்சியான ஐ.தே. கட்சியின் பிரதித்தலைவர் என்ற ரீதியில் இதை நான் உறுதிபட  தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

சிங்களவனின் அரசியல் வெற்றியை நிா்ணயிப்பது ஒவ்வாெரு தமிழனின் உயிரும். இதற்கு புறாேக்கா்மாா் வேற. குலத்தைக் கெடுக்கிற காேடாலிக்காம்புகள்.

Link to comment
Share on other sites

உலக வரைபடத்திலிருந்து இசுரவேல் என்ற நாட்டையே நீக்கிவிடுவேன் என சூளுரைத்து அதனுடன் போர்தொடுத்த எகிப்திய அதிபர் நசார் இசுரவேலின் வளர்ச்சியை தன் கண்களாலே பார்க்கநேர்ந்த கதையும் இந்த உலகில்தான் நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனைக் கேட்டால் சொல்லுவார்: முதலில் ஆட்டை அறுப்போம் பிறகு gonad யாருக்கெண்டு தீர்மானிக்கலாம் எண்டு. ஆனால் இங்க கோவணத்தையே உருவிப்போட்டுத் தான் எங்களோட நீங்கள் சேரலாம் எண்ட மாதிரிக் கதை! :lol:

Link to comment
Share on other sites

அவர் சொன்னதில் என்ன பிழை இருக்கு, புலிகளால் பாதிக்கபட்ட ஒரு சிங்களவனாக அவர் பேசுகின்றார் .

Link to comment
Share on other sites

சிங்களவனுக்குப்  பாதிப்பை ஏற்படுத்தும் தமிழன் உடனே புலியாகத் தோற்றம் பெற்றுவிடுகிறான். :o 
 
சிங்களவனால் பாதிப்படையும் தமிழனும் உடனே புலியாகத் தோற்றம் பெற்றுவிடுகிறான். :o  :o
 
இது ஈழத்தமிழன் மட்டுமே பெறுள்ள வரமாகும். :icon_idea:  
Link to comment
Share on other sites

நாங்கள் எப்படித்தான் சிங்களவனால் பாதிக்கப்பட்டாலும் சிங்களவருக்காகவே பேசுவோம். :huh:  :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எப்படித்தான் சிங்களவனால் பாதிக்கப்பட்டாலும் சிங்களவருக்காகவே பேசுவோம். :huh:  :huh:

நாங்கள் கூர்ப்படைஞ்சு விட்டோம்! கொஞ்சம் அதிகமாகவே கூர்ப்படைஞ்சு விட்டோம்! :D

Link to comment
Share on other sites

அவர் சொன்னதில் என்ன பிழை இருக்கு, புலிகளால் பாதிக்கபட்ட ஒரு சிங்களவனாக அவர் பேசுகின்றார் .

புலிகளால் பாதிக்கபட்ட சிங்களவருக்கு வக்காலத்து வாங்கி அவர் சொன்னதில் என்ன தப்பு என்டுங்க. மறுபுறத்தில் சிங்களவரால் பாதிக்கபட்ட தமிழர் ஏதும் தமது கருத்தை எழுதினால் அப்போதும் பாதிக்கபட்ட தமிழரையே  நக்கல் பண்ணுங்க. என்ன பிறவியப்பா நீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னதில் என்ன பிழை இருக்கு, புலிகளால் பாதிக்கபட்ட ஒரு சிங்களவனாக அவர் பேசுகின்றார் .

57 இனக்கலவரத்துக்கும் புலிப்படைதான் காரணமோ???

Link to comment
Share on other sites

சஜித் பிரேமதாச என்ன பேசுவார் ?  

புலிகள் விடுதலை போராளிகள் என்று பேசுவாரோ . :o  இல்லை உதைதான் பேசுவார் . 

இது கூட விளங்காமல் இன்னமும் அதை ஒரு செய்தியாக்கி அதற்கு நாலு விளக்கம் வைத்து 57 ஆம் ஆண்டிற்கு குமாரசாமி அண்ணை போய்விட்டார் .

ஒரு கொஞ்சம் அடுத்த கட்டத்திற்கு நகருங்கள் .நானும் எவ்வளவு காலத்திற்கு உங்களுடன் நின்று  மாரடிப்பது . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2005 இல் ரணிலுக்கு பாடம் புகட்டப்போய் 2009 இல் மகிந்தவிடம்  கெஞ்சக்கெஞ்சப் பாடம் கற்றோம். இப்ப முழு இலங்கைக்குமான தேவை மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே. எதிரணியினரின் அரசாங்கம் வருமானால் நிச்சயம் அது தமிழருக்கெதிரான கடும்போக்கைக் கொண்டிருக்கப் போவதில்லை. சிங்களவர்களின் முப்பதாண்டு கனவை மகிந்த நிறைவேற்றிவிட்டார். எனவே கடும் நிலைப்பாடு சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்க வாய்ப்பு இல்லை. அதற்காக புலிகளை அழித்த மகிந்தவை அவர்கள் சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக்கொடுப்பார்கள் என்று நினைப்பது முட்டாள்த்தனம். அது முழுச் சிங்கள இனத்துக்குமான வெற்றி. ஒவ்வொரு சிங்களவனும் கட்சி பேதமின்றி ஒன்றுபட்டு நின்ற நேரம் அது. இதனையே சஜித் சொல்லியிருக்கிறார்.

மறுபுறத்தில் வடக்கு கிழக்கு வாக்காளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களும் மகிந்த ஆட்சியில் வதைக்கப்பட்டு களைத்துவிட்டனர். புதிய ஆட்சிமாற்றம் ஏதும் நம்பிக்கையைத் தரக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு நிச்சயம் இருக்கும். அவர்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் சர்வதேச விசாரணை அல்ல என்பது நிச்சமானது. இயல்பு வாழ்க்கை அத்தியாவசிய கட்டமைப்புக்களின் உருவாக்கம். பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழினுட்பம் போன்றவையாகவே  இருக்கும்.

தயகத்தில் அல்லாத மக்களின் அத்தியாவசியத் தேவையான சர்வதேச விசாரனை என்பது மகிந்த ஆட்சியில் இருந்தால்தான் நடக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஸ்லோபோடன் மிலோசவிக் மற்றும் ருடோல்ப் ஹெஸ் போன்றோர் பதவி விலகியபின்னரும் மோசமான மனித உரிமை மீறல்காரர் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஆக ஆட்சி மற்றத்துக்கு எல்லாத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். இதை உணர்ந்து கூட்டமைப்பினர். எதிரணி பொது வேட்பாளரை ஆதரிக்கவேண்டும்.

இதனை எதிர்ப்போர் வேண்டுமென்றால் சிவாஜிலிங்கம் போன்றோரை வேட்பாளாராக நிறுத்தியோ அல்லது மீண்டும் மக்களை வாக்களிக்காமல் விடுமாறு கஜேந்திரன்ஸ் முன்னணி மூலம் மக்களைக் கோரியோ தமது அரசியலை முன்னெடுக்கலாம்.

Link to comment
Share on other sites

ஒரு விடயத்தை புரிந்து கொள்ளவேண்டும் , புலிகளுக்கு இவர்கள் ஆதரவு என்று மகிந்த & மற்றும் சிங்களவர்கள் பரப்பி வரும் போது இதனை தவிர வேறு வழியில்லை இப்படித்தான் அவர்கள் சொல்ல வேண்டும்.தலைவனை கிட்ட கூட நெருங்க முடியவில்லை . அதற்குள் இவர்களின் கொட்டம் 

Link to comment
Share on other sites

2005 இல் ரணிலுக்கு பாடம் புகட்டப்போய் 2009 இல் மகிந்தவிடம்  கெஞ்சக்கெஞ்சப் பாடம் கற்றோம். இப்ப முழு இலங்கைக்குமான தேவை மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே. எதிரணியினரின் அரசாங்கம் வருமானால் நிச்சயம் அது தமிழருக்கெதிரான கடும்போக்கைக் கொண்டிருக்கப் போவதில்லை. சிங்களவர்களின் முப்பதாண்டு கனவை மகிந்த நிறைவேற்றிவிட்டார். எனவே கடும் நிலைப்பாடு சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்க வாய்ப்பு இல்லை. அதற்காக புலிகளை அழித்த மகிந்தவை அவர்கள் சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக்கொடுப்பார்கள் என்று நினைப்பது முட்டாள்த்தனம். அது முழுச் சிங்கள இனத்துக்குமான வெற்றி. ஒவ்வொரு சிங்களவனும் கட்சி பேதமின்றி ஒன்றுபட்டு நின்ற நேரம் அது. இதனையே சஜித் சொல்லியிருக்கிறார்.

மறுபுறத்தில் வடக்கு கிழக்கு வாக்காளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களும் மகிந்த ஆட்சியில் வதைக்கப்பட்டு களைத்துவிட்டனர். புதிய ஆட்சிமாற்றம் ஏதும் நம்பிக்கையைத் தரக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு நிச்சயம் இருக்கும். அவர்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் சர்வதேச விசாரணை அல்ல என்பது நிச்சமானது. இயல்பு வாழ்க்கை அத்தியாவசிய கட்டமைப்புக்களின் உருவாக்கம். பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழினுட்பம் போன்றவையாகவே  இருக்கும்.

தயகத்தில் அல்லாத மக்களின் அத்தியாவசியத் தேவையான சர்வதேச விசாரனை என்பது மகிந்த ஆட்சியில் இருந்தால்தான் நடக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஸ்லோபோடன் மிலோசவிக் மற்றும் ருடோல்ப் ஹெஸ் போன்றோர் பதவி விலகியபின்னரும் மோசமான மனித உரிமை மீறல்காரர் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஆக ஆட்சி மற்றத்துக்கு எல்லாத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். இதை உணர்ந்து கூட்டமைப்பினர். எதிரணி பொது வேட்பாளரை ஆதரிக்கவேண்டும்.

இதனை எதிர்ப்போர் வேண்டுமென்றால் சிவாஜிலிங்கம் போன்றோரை வேட்பாளாராக நிறுத்தியோ அல்லது மீண்டும் மக்களை வாக்களிக்காமல் விடுமாறு கஜேந்திரன்ஸ் முன்னணி மூலம் மக்களைக் கோரியோ தமது அரசியலை முன்னெடுக்கலாம்.

வாலி நீங்கள் கூறியது போல் இயல்பு வாழ்க்கை அத்தியாவசிய கட்டமைப்புக்களின் உருவாக்கம். பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழினுட்பம் போன்ற விடயங்கள் மட்டும் தான் மக்களின் எதிர்பார்க்கும் மாற்றம் என்றால் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கவேண்டிய தேவையே இல்லை. உங்களுக்கு தெரியும் மகிந்த ஆட்சியில் நடத்தபட்ட உள்ளுராட்சி தேர்தலிலும் சரி, மாகாண சபை தேர்தலிலும் சரி மகிந்தவின் அமைச்சர் பட்டாளமே வடக்கில் இறக்கபட்டு நீங்கள் கூறிய அபிவிருத்தி ஆசை காட்டப்பட்டது.  இதற்காக பணம் கோடி கோடியாக  வாரி இறைக்கபட்டது. அதையும் மீறி மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்த்து கூட்டமைப்பை பாரிய வெற்றியடை செய்துள்ளார்கள் என்றால் மக்கள் நீங்கள் கூறிய விடயங்களை விடவும் மேலதிகமாக ஒன்றை விரும்புகிறார்கள் என்று தான் அர்த்தம். அது தான் அவர்ளுக்கு இருக்கும் சுதந்திர வேட்கை.இந்த உலகில் வாழும் ஒவ்வொரு ஆறறிவு உள்ள ஒவ்வொரு மனிதனும் அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாகினும் சுதந்திமான வாழ்க்கையே விரும்புவது இயல்பு. அதையே கெளரவ முதலமைச்சர்  திரு விக்கினேஸ்வரனும் இந்தியாவில் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை கிடைக்காத போர்க்குற்ற விசாரணையால் எந்த பிரயோசனமும் இல்லை. மகிந்த என்ற தனி மனிதர் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கவில்லை. சிங்கள பேரினவாத அரசாங்கள் அவை எதுவாகினும் அதையே செய்தன. இதை கூறியதும் கூட்டமைப்புதான். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த மாகாணசபை தேர்தலின் போது அபிவிருத்தியா? சுதந்திர வேட்கையா என்று பிரச்சாரம் செய்து வென்ற கூட்டமைப்பு  கட்சி முக்கிய ஆதரவாளரே  உங்கள் கருத்துக்கு பச்சை போட்டுள்ளார். இதே உங்கள் கருத்தை பாராளுமன்ற தேர்தல் சமயத்தில்  அல்லது மாகாணசபை தேர்தல் சமயத்தில் நீங்கள் கூறியிருந்தால் ........  விளக்குமாறால் உங்களுக்கு கிடைத்திருக்கும் :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னதில் என்ன பிழை இருக்கு, புலிகளால் பாதிக்கபட்ட ஒரு சிங்களவனாக அவர் பேசுகின்றார் .

இதுதான் தமிழனுக்கும் சிங்களவனுக்கும் உள்ள வித்தியாசம். காலங்காலமாய் சிங்களவனாலை பாதிக்கப்பட்டு முடியாத கட்டத்தில் ஆயுதம் தாேன்றியது. அடிமைகளாய் இருப்பதிலும் ஒரு சந்தாேசம் பாருங்காே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரேமதாச என்ன பேசுவார் ?  

புலிகள் விடுதலை போராளிகள் என்று பேசுவாரோ . :o  இல்லை உதைதான் பேசுவார் . 

இது கூட விளங்காமல் இன்னமும் அதை ஒரு செய்தியாக்கி அதற்கு நாலு விளக்கம் வைத்து 57 ஆம் ஆண்டிற்கு குமாரசாமி அண்ணை போய்விட்டார் .

ஒரு கொஞ்சம் அடுத்த கட்டத்திற்கு நகருங்கள் .நானும் எவ்வளவு காலத்திற்கு உங்களுடன் நின்று  மாரடிப்பது . :icon_mrgreen:

தயவு  செய்து

எதிரிக்கு எதிரி  நண்பன் என்ற ரீதியில் 

புலிகள் மீது வசை  பாடுவதை வரவேற்பதாக நினைத்து

தமிழருக்கு தீங்கு செய்வோரை  போற்றுவதைக்கைவிடுங்கள்.... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுங்களா,

உங்களுக்கு எப்படி பிரபாவோ சிங்களவர்களுக்கு மகிந்த அப்படி. இலங்கையில் எந்த அரசியல்வாதியும் போர்விசாரணைக்கு ஒத்துழைப்போம், மகிந்தவை ஹேக் க்கு அனுப்பி வைப்போம் என்று சொல்லிவிட்டு ஓட்டு கேட்கவியலாது. பொன்ஸ் வெள்ளை கொடி விசயத்தை சொல்லப் போய் பாதி வோட்டை இழந்தது போல.

நாளைக்கு மகிந்தவை காட்டிக் கொடுக்கும் போதும் அழுது புரண்டு நடித்த படியே காட்டிக் கொடுப்பார்கள் சஜித்தும் ரணிலும். இதுதானப்பு சாணக்கியம்.

ஆனால் எதிரணி வெண்டால் தமிழ் மக்கள் இப்ப இருப்பதை விட கொஞ்சம் குறைவான அழுத்தங்களில் வாழலாம். ராணுவ பிரசன்னம் குறையலாம், அதி பாதுகாப்பு வலயம் மட்டுப் படலாம், விக்கிக்கு ஏதேனும் பிரயோசனமாய் செய்ய முடியுமாய் இருக்கும்.

இது எதுவும் விளங்காமல் சஜித் பிரேமதாச ஏதோ கூட்டமைப்பு எம் பி எண்ட மாரி பேசுறியள்

Link to comment
Share on other sites

சிங்கள மக்களுக்கு  இனவாதம் பேசும் அரசியல்வாதிகளுக்கு தான் வாக்களிப்பார்கள் என்றால் அரசியல் வாதிகள் இனவாதம் பேசியே ஆக வேண்டும்.அம்மக்களுக்கு இனவாதம் ஊட்டியவர்களும் இந்த அரசியல்வாதிகள் தான்.

Link to comment
Share on other sites

எதிரணியினரின் அரசாங்கம் வருமானால் நிச்சயம் அது தமிழருக்கெதிரான கடும்போக்கைக் கொண்டிருக்கப் போவதில்லை. சிங்களவர்களின் முப்பதாண்டு கனவை மகிந்த நிறைவேற்றிவிட்டார். எனவே கடும் நிலைப்பாடு சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்க வாய்ப்பு இல்லை. அதற்காக புலிகளை அழித்த மகிந்தவை அவர்கள் சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக்கொடுப்பார்கள் என்று நினைப்பது முட்டாள்த்தனம்.

இது தவறு. சஜித் அப்படி சொன்னதுக்கு காரணம் மைத்திரியுடன் வரும் சுதந்திரக்கட்சி வாக்காளர்களை இழக்காமல் இருப்பதற்கே. தமிழ் வாக்காளர்களில் அவர்களின் வெற்றி தங்கி இருக்கவில்லை. மகிந்தா சிறையில் போட்ட பொன்சேகா முதல் பாதிக்கப்பட்ட ரணில் வரை அனைவருமே பழி வாங்கவே விரும்புவார்கள். ஆனால் அவர்கள் பெரிதாக செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. மகிந்தாவை சீனாவுக்கு உல்லாசமாக போக விட்டு தாய்லாந்தில் விமானத்தை ஒரு முறை இறங்க வைப்பதே இதற்கு தேவையானது. மீதியை அமேரிக்கா பார்த்துக்கொள்ளும்.

உண்மையில் அமெரிக்காவின் இலக்கு மஹிந்த அல்ல, அமெரிக்க குடிமகனான அவரின் சகோதரரே.

அமெரிக்கா போர்க் குற்றங்களை முன்னெடுப்பது தமிழரில் உண்டான பரிதாபத்தால் என்று நினைத்து விடாதீர்கள். அமேரிக்கா தனது நாட்டின் வணிக மேலாதிக்க நோக்கத்துக்காகவே இந்த முயற்சியில் இரங்கி உள்ளது. அதில் வெற்றி பெறும்வரை அமெரிக்கா தளராது. தமிழர் என்றும் போல வெறும் பகடை காய்களே.

மறுபுறத்தில் வடக்கு கிழக்கு வாக்காளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களும் மகிந்த ஆட்சியில் வதைக்கப்பட்டு களைத்துவிட்டனர். புதிய ஆட்சிமாற்றம் ஏதும் நம்பிக்கையைத் தரக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு நிச்சயம் இருக்கும். அவர்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் சர்வதேச விசாரணை அல்ல என்பது நிச்சமானது. இயல்பு வாழ்க்கை அத்தியாவசிய கட்டமைப்புக்களின் உருவாக்கம். பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழினுட்பம் போன்றவையாகவே இருக்கும். .

“இருக்கும்” என்று அனுமானமாக சொல்லி இருக்கிறீர்கள். யாழ் போனபோது அங்கே மக்கள் நீதி காணுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பணம் பிரச்சினை இல்லை. அது புலம்பெயர் உறவினர்களிடம் இருந்து தாரளமாக வருகிறது. சிங்களவர்களுக்கே வறுமை, வேலை வாய்ப்பு என்பன முக்கியமான பிரச்சினை. யாழ் மக்கள் கூலி வேலை செய்ய மறுப்பதால் சிங்களவர்களை மக்கள் வேலைக்கு அமர்த்தும் நிலை அங்கே. போர்க் குற்றங்களுக்கான தண்டனையே மக்களின் முக்கிய விருப்பமாக இருக்கிறது. அதையே அவர்கள் இராஜதந்திரிகளிடமும் கூட்டமைப்பிடமும் கேட்கிறார்கள்.

ஆக ஆட்சி மற்றத்துக்கு எல்லாத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். இதை உணர்ந்து கூட்டமைப்பினர். எதிரணி பொது வேட்பாளரை ஆதரிக்கவேண்டும்.

இதுவும் தவறு. சிங்கள மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கிறார்கள். தமிழ் மக்கள் நிரந்தர பாதுகாப்புக்காக ஆட்சியமைப்பு மாற்றத்தை கேட்கிறார்கள். அதை எதிரணி தரவில்லை. இரண்டில் மூன்று பெரும்பான்மையும் நிறைவேற்று அதிகாரமும் கொண்ட ஜனாதிபதியே ஆட்சியமைப்பு மாற்றத்தை தர முடியும். கடைசி கட்டத்தில் ராஜபக்ஷ இதை தருவதை தவிர வேறு வழி இல்லை என்று கண்டால் ஆட்சியமைப்பு மாற்றத்தை போர் குற்றங்களுக்கு மாற்றீடாக தந்து வாக்குகளை கேட்கலாம். அதை இராஜ தந்திரமாக பெற்றுக்கொள்ளும் சாத்தியத்தை கூட்டமைப்பு பேணி வருகிறது. இவ்வாறாகவே சிங்கபூர் மலேசியாவில் இருந்து பிரிந்தது. தென் சூடான் வட சூடானை விட்டு பிரிந்தது. ஈழ மக்களுக்கும் அந்த சாத்தியம் வந்துள்ள நேரம் இது. கூட்டமைப்பு அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.