Jump to content

மைத்திரிபால பொது வேட்பாளராகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிக ரகசியமாக பேணப் பட்ட அரசியல் வியூகத்தின் படி சுதந்திர கட்சியின் மைத்திரிபால பொது வேட்பாளராகிறார்.

 
இதற்கு ஐதேக ஆதரவு அளிக்கிறது. 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சி முறை நீக்குவேன் என்பதே எனது தேர்தல் சுலோகம் என அவர் அறிவித்துள்ளார். 
 
இலங்கை வரலாறில் இரு வேட்பாளரும் சுதந்திரக் கட்சியிணையச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பிரியப் போகின்றனர்.
 
இது ஒரு உற்சாக நிலையினை எதிர்கட்சிகளிடையே உண்டாக்கி உள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கொழும்பில் நடந்த ஒரு சந்திப்பில் தானே பொது வேட்பாளர் என உறுதிப் படுத்தினார் சுதந்திர கட்சி செயளாலர் மைத்திரிபால.

யுஎன்பியின் ஆதரவும் தனக்கு உண்டென கூறும் இவருடன் சந்த்ஹிரிகாவும் நவீன் திசாநாயகவும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: டெயிலி மிரர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யூ.என்.பி. வாக்குகள் + ஸ்ரீ.ல.சு.க. பிரியும் வாக்குகள் + தமிழ் பேசும் மக்கள் வாக்குகள்.
 
தில்லு முள்ளு இல்லாவிடில் மகிந்த வீடு போவார்.  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிக்கலான முடிச்சாக இருக்கும். சரத் பொன்சேகாவைத் தேர்தலின் பின்னர், சிறை வைத்துக் குடியுரிமையை மகிந்த பறித்தார். அதே போன்றதொரு மிரட்டலை நிச்சயம் மகிந்த இப்போது விடுவார். தவிர, மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலின் வேட்பாளர் கடைசி நாளுக்குப் பிற்பாடு, தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கி விட்டால் எதிர்க்கட்சியினர் என்ன செய்வார்கள். அதனால் 2 பேராவது பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் பதிவு செய்து, ஒருவர் ஒதுங்கிக் கொள்ளலாம்...

 

 

நியானி: ஒருமையில் விளித்தவை திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமோர் விடயம் எந்த விதத்தில் தமிழர் மைத்திரிக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியும் 
தமிழரை பற்றி எப்போதுமே பேசியிருக்காத இவரை  எப்படி தமிழர் ஆதரிப்பார்கள்

இவரோடு ஒப்பிடும்போது மஹிந்த அரை குறையாக ஏதோ தமிழ் என்ற ஒன்றையாவது பேசிக்காட்டி ஏமாத்தினார்.

ஆக
மகிந்தவை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்று மட்டும் சிந்தித்து வாக்களித்தால் மட்டுமே இவருக்கு வாக்கு கிடைக்கும் சாத்தியம் அதிகம் 
ஆகவே வழமை போன்று எவன் ஆண்டாலும் தமிழனுக்கு நன்மை கிடைக்கபோவதில்லை

உக்கிரமான எதிரி ,உக்கிரமற்ற எதிரி என்று பார்த்து வாக்களித்து விட்டு நடையை கட்டவேண்டியதுதான்  

 

 

நியானி: ஒருமையில் விளித்தவை திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
maithripala-press-300-news.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து, ஜனாதிபதித் தேர்தலில் தானே பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளார் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன, உள்ளிட்டோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை அறிவித்தார். 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரி ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாகவும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும் தெரிவித்தார்.

   

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்தேன். அமைச்சராக பதவி வகித்த போது இவ்வளவு அழுத்தங்கள் என்றால் நாட்டு மக்கள் எவ்வாறான அழுத்தங்களை எதிர்நோக்குவார்கள் என எனது குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பராவாயில்லை நாட்டு மக்களுக்கு நன்மை செய்யுமாறு மனைவி பிள்ளைகள் கோரியிருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வேன். 17ம்திருத்தச் சட்டத்தை மீளவும் அமுல்படுத்துவேன். நிறைவேற்று அதிகாரத ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் ரத்து செய்வேன்.

நாட்டின் இன்றைய அரசாங்கம் 18வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு பாரிய தவறை செய்துள்ளது. நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை எண்ணி தேசிய மருந்து கொள்கை ஒன்றை கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்தேன்.ஆனால் முடிவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை 100 நாட்களுக்கு ஒழிக்க எனக்கு அதிகாரத்தை வழங்குமாறு மக்களிடம் கோருகிறேன். நாட்டு மக்கள் வாழ்வதற்கு சிறந்த பொருளாதாரம் இல்லை. நான் அங்கம் வகிக்கும் பிரதேச விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். நான் பொது வேட்பாளராக போட்டியிடுவேன். முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சுதந்திரமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சுதந்திரமாக ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் செயற்பட இந்த நாட்டில் சந்தர்ப்பம் இல்லை என்பதை எமது சகோதர ஊடகவியலாளர்களுக்கு தெரியும். ஊடக சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேர்தல் அதிகாரத்திற்கு வரும் எமது அரசாங்கத்தின் கீழ் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என உறுதியளிக்கின்றேன். ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான சமூகத்தை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளேன். 17வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி 18வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும்.

எனது இந்த பயணத்திற்காக உதவிய சகோதர அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரத்ன தேரர், சோபித தேரர் உட்பட அனைவருக்கும் கௌரவமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மறந்து விட முடியாது. எதிர்வரும் தேர்தல் வெற்றிக்காக நாளுக்கு நாள் நாங்கள் அடியெடுத்து வைப்போம். மக்களின் பிரார்த்தனை நிறைவேற அர்ப்பணிப்போம். இந்த சந்தர்ப்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் குறித்து ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் கௌரவமான வாக்குகளில் நான் வெற்றி பெறுவேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த தீர்மானித்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜீ20 குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் ஆதரவளிப்பதாக ஜீ20 குழு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

maithripala-press-21114-seithy%20(1).jpg

 

 

maithripala-press-21114-seithy%20(2).jpg

 

 

maithripala-press-21114-seithy%20(3).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=121201&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வேன் - மைத்திரிபால சிறிசேன

 

குடும்பம் ஒன்று நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நடத்தி வருகின்றது நாட்டில் ஊழல் மோசடிகள், வஞ்சகச் செயல்கள், குற்றச் செயல்கள் பாரியளவில் அதிகரிப்பு:-

news_CI.jpg

100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய உள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீனமான முறையில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்குமுhறு இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் நீதிமன்றத்துறை ஆகியன சுயாதீனமாக பக்கச்சார்பின்றி இயங்க நடவடிக்கை எடுக்கப் போவதாகத்தெரிவித்துள்ளார்.

100 நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய எனக்கு அதிகாரத்தை வழங்குங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.ஷ

புகைப்பிடித்தல் மற்றும் மதுபானத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்திற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் துயரம் மிக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம் ஒன்று நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நடத்தி வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் ஊழல் மோசடிகள், வஞ்சகச் செயல்கள், குற்றச் செயல்கள் பாரியளவில் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நீதியின் ஆதிக்கம் வலுவிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்த வெற்றியின் பின்னர் அரசாங்கம் தவறான பாதையிலேயே பயணம்செய்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2004ம்ஆண்டில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எனவும், 1994ம் ஆண்டிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1974 முதல் 1994ம் ஆண்டு வரையில் கண்ணீருடன் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயாக்க கட்சியை கட்டிக் காத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113736/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Some photos of today's Sinhala, English and Tamil newspapers

10409291_10154836943385640_6884145267762

10473577_10154836943450640_3254371655934

10696369_10154836943485640_5394815102636

1505239_10154836943555640_42185842351453

11576_10154836943610640_4324641151563018

(Facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.