Jump to content

புலிகளுக்கு எதிரான தடையை உடனடியாக கொண்டு வர வேண்டும்: ஐ.தே. க


Recommended Posts

புலிகளுக்கு எதிரான தடையை உடனடியாக கொண்டு வர வேண்டும்: ஐ.தே. க

 
 

parliament_10.jpgஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை உடனடியாக கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி பாராளுமன்றத்தில் விசேட பிரேரனையொன்றை நிறைவேற்றி அதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்புவற்காக பாராளுமன்றத்தில் விசேட அமர்வொன்றை கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே. கட்சி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கையை முன்வைத்தது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸவே விடுதலைப் புலிகள் மீதான தடையை வலியுறுத்தி பிரேரணையொன்றை எதிர்தரப்பும் ஆளுந்தரப்பும் இணைந்து நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் விசேட அமர்வை கூட்டுமாறு வலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பாக சஜித் பிரேமதாஸ எம்.பி. மேலும் சபையில் உரையாற்றுகையில்;

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அங்குள்ள நீதிமன்றம் நீக்கியுள்ளது.

புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தின் தீர்ப்பை முடிவை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

புலிகள் மீதான தடை நீக்கம் இலங்கையின் இறையான்மை மற்றும் சுயாதீனத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

எனவே, பாராளுமன்றத்தில் விசேட அமர்வொன்றை கூட்டி விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி ஆளும் தரப்பும் எதிர்க் கட்சியும் இணைந்து ஏகமனதாக பிரேரணையொன்றை நிறைவேற்றி அதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே. கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். அனைத்து கட்சிகளும் இணைந்து புலிகளுக்கு எதிராக மீண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்க வேண்டுமென்பதை இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாக வலியுறுத்துவோம். 

ஐ.தே. கட்சி இலங்கையின் சுதந்திரம் ஐக்கியம் இறையான்மைக்காக போராடிய கட்சி என்ற வகையில் புலிகள் மீது மீண்டும் தடையை கொண்டு வர வேண்டிய பாரிய பொறுப்பு ஐ.தே. கட்சிக்கு உள்ளது.

வாசுதேவ குறுக்கீடு

சஜித் பிரேமதாஸ இவ்வாறு தனது உரையை தொடர்கையில் குறுக்கீடு செய்த சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சஜித் எம்.பியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஏகாதிபத்திய வாதிகளின் அடிவருடிகளான அவர்களின் காலணிகளை நக்கிய உங்களுக்கு இலங்கையின் சுதந்திரம் இறையாண்மை தொடர்பாக பேசுவதற்கு அருகதையில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆவேசத்துடன் சுட்டிக்காட்டினார்.

இதனை எதிர்த்து சஜித் எம்.பி. மறுபுறத்தில் அமைச்சரை அமருமாறு தெரிவித்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சபாநாயகரின்

பதில்

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் சஜித் பிரேமதாச எம்.பிக்கும் இடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் சபைக்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் குறுக்கிட்ட சபாநாயகர் சமல் ராஜபக் ஷ

இலங்கையின் சுதந்திரம் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் வெற்றி கொள்ளவும் தனி ஒரு கட்சி மற்றும் போராடவில்லை.

அக்காலத்தில் இலங்கையிலிருந்த அனைத்து கட்சிகளும் போராடின எனக் கூறி தர்க்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன்போது, ஐ.தே. கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரோசி சேனாநாயக்க ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

சஜித் பிரேமதாஸவின் புலித்தடை தொடர்பாக பேச முற்பட்ட போது இது ஒரு ஒழுங்குப் பிரச்சினையல்ல என சபாநாயக்கர் தெரிவத்து அனுமதி வழங்க மறுத்தார். இறுதியாக சஜித் பிரேமதாஸவின் பிரேரணை கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை.

http://www.virakesari.lk/articles/2014/10/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த ஆண்டு தான் ஐபிஎல் இல் கூடுதலாக எடுத்த ஓட்டங்களாக இருக்கும்.
    • 261 ர‌ன்ஸ் அடிச்சும் அதை எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடி வெல்லுகின‌ம்   ச‌த்திய‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் முற்றிலும் மாறு ப‌ட்டு இருக்கு   உந்த‌ இஸ்கோர்ர் இமைய‌ம‌லை இஸ்கோர்...........ப‌ஞ்சாப் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰............................................................
    • டீலின் டீடெய்ல்ஸ், என்ன விலை, விமானநிலையம் எப்படி பாவிக்கப்படும் என்ற டீடெயில் எதுவும் வெளியாகவில்லை. இந்தியாவோடு ரஸ்யாவையும் சேர்த்து இழுத்தது, கட்ட கடன் கொடுத்த சீனாவை திருப்தி செய்யவாக இருக்க கூடும்.
    • அது என்ன‌ என்றால் பெரிய‌வ‌ரே யாழில் இருக்கும் வாத்தியார் என‌க்கு த‌மிழை ஒழுங்காய் தான் சொல்லி தந்த‌வ‌ர்  வாத்தியார் த‌மிழை சொல்லி த‌ரும் போது என்ர‌ நினைவெல்லாம் ப‌ழைய‌ காத‌லின்ட‌ நினைவாக‌ இருந்த‌ ப‌டியால் , வாத்தியார் சொல்லித் தந்ததை நினைவில் வைத்திருக்கவில்லை இதைப் பார்த்த வாத்தியார் இனிஎன்னை கண்காணிப்பார் ஆன‌ ப‌டியால் இனி தமிழில் எழுதுவதில் முதிர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது😁..................................... @வாத்தியார்
    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.