Jump to content

எமக்காக நாம்


Recommended Posts

 
யாழ்கள உறவுகளிடம் ,
 
தாய‌க‌ முன்னேற்ற‌த்தை உய‌ரிய‌ நோக்காக‌க் கொண்டு "எமக்காக நாம்" எனும் த‌லைப்பில் திரியொன்றினை திறக்கின்றேன் , ஆத‌ர‌வு தாருங்க‌ள் உற‌வுக‌ளே
 
 
இத்திரியினூடாக‌ தாயகத்திலுள்ள அரசியல் தரப்பினர் , சமூக ஆர்வலர்கள், ந‌ல‌ன் விரும்பிக‌ள், க‌ல்விச்சமூக‌த்தின‌ர் போன்றோரிட‌ம் தாய‌க‌ம் சார்ந்த‌ எம‌து க‌ருத்துக்க‌ள், ஆலோச‌ணைக‌ள் , அனுப‌வ‌ங்க‌ளை ப‌கிர்வோம். எமக்குத் தெரிந்த‌ குறைபாடுக‌ளைச் சுட்டிக்காட்டுவோம்  இத‌ன் மூல‌ம் புல‌த்திற்கும் நில‌த்திற்கும் இடையில் சிற‌ந்த‌ இணைப்பினை ஏற்ப‌டுத்தி தாய‌க‌முன்னேற்ற‌த்திற்காக‌ உழைப்போம்.
 
இத்திரியை திற‌ப்ப‌த‌ற்க்கு என‌க்கு இர‌ண்டு முக்கிய‌ கார‌ண‌ங்க‌ள் தூண்டுகோலாக‌ இருந்த‌ன‌.
 
ஒன்று 
 
புல‌த்தில் நாம் வாழும் நாடுக‌ள் அணைத்தும்  மிக‌ சிற‌ந்த‌ அர‌சிய‌ல் ஜ‌ன‌நாய‌க‌ ப‌ண்புடைய‌வை, அதி வினைத்திற‌ன் கொண்ட‌ நிர்வாக‌க் க‌ட்ட‌மைப்பினை உடைய‌வை. இங்கு நாம் ப‌ல‌ அனுப‌வ‌ங்க‌ளை பெற்றுள்ளோம் , அவ‌ற்றை எழுதுவோம் ப‌ல‌ த‌ட‌வை நினைத்திருப்போம் "இப்ப‌டி ஊரிலும் செய்தால் ந‌ல்லா இருக்கும்" என‌ அப்ப‌டியான‌ விட‌ய‌ங்க‌ளை எழுதுவோம்.
 
இர‌ண்டாவ‌து மிக‌ முக்கிய‌ கார‌ண‌ம்.
 
எம‌து யாழ்க‌ள் உற‌வுக‌ள் , 
இங்கே ப‌ல‌ மிக‌ச்சிற‌ந்த‌ க‌ருத்தாள‌ர்க‌ள் , கல்வியாளர்கள் இருக்கிறார்க‌ள்.
அவ‌ர்க‌ளிட‌ம் மிக‌ அற்புத‌மான‌ சிந்த‌னைக‌ள் உள்ள‌ன‌. அவ‌ற்றை தாய‌க‌த்துட‌ன் ப‌கிர்ந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌து என‌து அவா.
 

 

Link to comment
Share on other sites

வாக்காள‌ர் அட்டையில் எம்மை ப‌திவு செய்யவதன் அவசியம்
 
அண்மையில் நான் ஊரிலுள்ள‌ எனது நண்ப‌ர் ஒருவ‌ருட‌ன் க‌தைத்த‌ போது , அவ‌ர‌து இரு பிள்ளைக‌ளும் (19, 20 வ‌ய‌து) த‌ம்மை இது வ‌ரை வாக்காள‌ர் அட்டையில் ப‌திவு செய்யாம‌ல் இருப்ப‌து க‌ண்டு அதிர்ச்சிய‌டைந்தேன். அவர்களிடம் அதற்கான விழிப்புணர்வு கூட இருக்கவில்லை.,இப்படி எத்தனை பேர் இருக்கிறார்களோ தெரியவில்லை?
 
இனி எமக்கான போராட்ட வழிமுறை ஜனநாயக தேர்தல் அரசியல் தான் என முழங்கும் எமது அரசியல் கட்சிகள் , மக்களிடம் அவர்களை ‌வாக்காள‌ர் அட்டையில் ப‌திவு செய்யவதற்கான‌ விழிப்புண‌ர்வுப் பிர‌சார‌ங்க‌ளை முன்னெடுக்க‌ வேண்டும்.அரசியல் கட்சிகள் தான் என்றில்லை சமூக அக்கறை உள்ள யாவரும் இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்.
 
எமக்காக விழும் ஒவ்வொரு வாக்கும் மிகப் பெறுமதியானது என்பதனை நாம் மறந்து விட முடியாது. 
 
வாக்காளர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் யாழ் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கயையில் மூன்றைக் குறைப்பதற்கு அண்மையில் அரசாங்கம் முயற்சித்ததும் எமக்குத் தெரிந்ததே.
 
எனவே தாயகத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது இதனை ஒரு மிகப்பெரிய விழிபுணர்வு வாரமாகவோ, மாதமாகவோ பிரச்சாரம் செய்து. அணைவரையும் வாக்காள‌ர் அட்டையில் ப‌திவு செய்ய செய்யவதற்கான முயற்சியை அரசியல் கட்சிகள் , சமூக அக்கறை உள்ளவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் CH அண்ணை 

நீங்களே திரியை திறந்து முதல் பதிவையிடுவது செல்லாது  :D  :D  :D 
நான் தான் முதல் பதிவிடுவேன்  :icon_mrgreen: 

முதலில் நாம் தெரிவு செய்யும் வேட்பாளர்கள் தகுதியானவர்கள் தானா என்று ஆராய்ந்து வேட்பாளர்களை நிறுத்துபவர்களும் 
தேர்ந்தெடுப்பவர்களும் செயற்படவேண்டும் (கல்வியறிவு மிக முக்கியம் )

தகுதியற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது சான்று 

https://www.youtube.com/watch?v=KLUfBWMTRBo
 

ஒரு வேளை  இதனை பார்த்து நீங்களும் உங்கள் நாட்டில் இப்படி அமுல் படுத்தி விடாதீர்கள் பிறகு உங்கள் நாடும் எங்களைப்போல் முன்னேறிவிடும் :lol:  
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.