Jump to content

ஓ.எம்.ஆர் சாலை - ஆகாய வீதியில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் சேரிகளும் கிராமங்களுமாய் இருந்த சாலை இன்று பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பலவற்றால்  வரிசையாக அமையப்பெற்று எப்பொழுது சுறுசுறுப்பாய் இருக்கும் ஐ டி ஹாரிடார் என சொல்லப்படும் ஓ.எம்.ஆர் சாலை(Old Mahabalipuram Road - OMR). அதாவது பழைய மகாபலிபுரம் சாலை.

 

சென்னை அடையாறு மத்திய கைலாஷில் ஆரம்பித்து தரமணி, பெருங்குடி, கந்தன் சாவடி, சோளிங்கநல்லூர் சிறுசேரி என நீளும் இந்த சாலையின் இரு புறமும் வாயுர்ந்த கட்டிடங்கள் பளபளக்கும் கண்ணாடிகளல் போர்த்தப்பட்டு நவீன அழகுடன் திகழ்பவை... சென்னையின் மிக அதிகமான போக்குவரத்து கொண்டுள்ள சாலைகளில் இதுவும் ஒன்று..

இச்சாலையில் சென்னை மெட்ரோ வழிதடத்தை அமைக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இச்சாலையை வானிலிருந்து பறந்தவாறு பாத்தால் எப்படி இருக்கும்..?

 

காணொளி இதோ...( நேர்த்தியான ஃபுல் ஹெச்.டி-1080P யிலும் தெரிகிறது இக்காணொளி)

 

 

http://youtu.be/ZQEqf9KX9N8

 

 

ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவசமாய் ஒரு பறவைப் பார்வை... வன்னியன்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவசமாய் ஒரு பறவைப் பார்வை... வன்னியன்...! :)

 

கருத்திற்கு நன்றி, சுவி. எனக்கும் இவ்வுணர்வே ஏற்பட்டது.

விண்ணிலிருந்து படமெடுத்து (Aerial photos & Video) கோர்வையாக தொகுத்து, முக்கிய தொழில் நுட்ப பூங்காக்களையும், இதர முக்கிய இடங்களையும் புள்ளி விவரமாய் எழுதி, எழுத்துக்களை நிறுத்தி மிதக்க விட்டிருப்பது அருமை.

 

சில இடங்களில் அடர்த்தியான மரங்களைப் பார்க்கையில் சென்னையை சுற்றி இவ்வளவு பசுமையா என எண்ணத் தோன்றுகிறது. சோளிங்கநல்லூர் வரும்பொழுது, இடதுபுறத்தில் ஓடும் பக்கிங்காம் கால்வாயில் தண்ணீரின் மேல் பறப்பது அழகோ அழகு.

 

சிறுசேரியில் அமைந்திருக்கும் TCS தொழில்நுட்ப பூங்கா மிக அருமையாக கட்டப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன். அதனின் ஏரியல் வியூவை காண்கையில் அது உண்மையென்றே தோன்றுகிறது.

 

பிரதான சாலை மட்டுமேயல்லாமல் அதிலிருந்து பிரியும் சிறு சாலைகளில் அமைத்திருக்கும் முக்கிய நிறுவனங்களையும் இணைத்திருப்பது நன்று.

சிறுசேரி வரை இருபுறமும் நான்கு வழிசாலையாய் ஓடும் OMR சாலை, படூர், கேளம்பாக்கம், தையூர் போன்ற ஊர்களில் இரு வழிச்சாலையாய் குறுகிவிடுகிறது. இவற்றை அகலப்படுத்தும் திட்டப்பணிகளும் தற்பொழுது நடைபெறுகிறது.

இந்த OMR சாலை, மகாபலிபுர நகரின் தெற்கே சென்று ஈ.சி.ஆர் சாலையுடன் (East Coast Road) இணைகிறது.

30 நிமிடம் தொடர்ச்சியாக ஓடும் இக்காணொளியை 1080P தரத்தில் தரவிறக்கம் செய்து பார்க்கையில் விமானத்தில் சென்று பார்த்துவிட்டு இறங்கிய உணர்வே மேலிட்டது. :icon_idea:

 

Good work & superb presentation..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 5 நிமிடங்கள் பார்த்தேன். சென்னை இவ்வளவு பசுமையாக உள்ளதா என்று ஆச்சரியமாக இருந்தது.
வானுயர்ந்த அழகிய கட்டிடங்களுடன் தமிழ் நகரான சென்னையை பாக்ர்த்த போது எனக்கும் பெருமை ஏற்பட்டது.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.